ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்


அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 12

நேற்றைய தினம் நவ நரசிம்ஹர்களில் ஏழு கோயில்களின் தரிசனம் முடிந்தது. இன்று பாக்கி இருக்கும் இரண்டு கோவில்களைத் தரிசனம் செய்துவிட்டு அஹோபிலத்தைவிட்டுக் கிளம்பப் போகிறோம்.

சென்ற முறை அஹோபில யாத்திரையில், டிராக்டரில் இந்த இரண்டு கோயில்களுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு டிராக்டரில் (இரண்டு டிராக்டர்கள்) உட்காரும்போது நன்றாகத்தான் இருந்தது. காட்டுப் பாதையில் கரடு முரடான பாதையில் டிராக்டர் குலுங்கிய குலுக்கலில் எல்லா எலும்புகளும் இடம் மாறிவிட்டது போல ஆகிவிட்டது. அதிலும் இரண்டாவது கோயிலுக்குச் செல்லும்போது எப்படா இந்தப் பயணம் முடியும் என்று ஆகிவிட்டது.  அதுவும் தவிர, போட்டுக்கொண்டிருந்த வேஷ்டி செம்மண் புழுதி பட்டு, வீணாகிவிட்டது. இதனை சில வாரங்களுக்கு முன்பு யாத்திரை நடத்துபவரிடம் சொன்னபோது, இப்போதெல்லாம் ஜீப் பிரயாணம்தான், கொஞ்சம் சௌகரியமாக இருக்கும் என்றார். சென்றமுறை தொலைதூரத்தில் இருக்கும் பாவன நரசிம்மர் கோவில், பிறகு பார்கவ நரசிம்மர் கோவில் என்று சென்றிருந்தோம். இந்த முறை, காட்டுக்குள் செல்ல அனுமதிக்கும் நேரம் சிறிது மாறியிருப்பதால், முதலில் பார்கவ நரசிம்மர் கோவில், பிறகு பாவன நரசிம்மர் என்று மாற்றியிருந்தார்கள்.

7 பேர் ஒரு ஜீப்பில். ஒரு ஜீப்பிற்கு 3500 ரூபாய் வாடகை, இரண்டு கோவில்களுக்கும் கூட்டிச்சென்று திரும்ப அஹோபில மட த்திற்குக் கொண்டுவந்து விடுவதற்கு. இது தவிர 100 ரூபாய் டிப்ஸ் ஓட்டுநருக்கு. எங்களை ஒருவருக்கு 300 ரூபாய் கொடுத்தால் போதும், அது தவிர டிப்ஸ் ஒருவருக்கு 20 ரூபாய் என்று சொல்லியிருந்தார்கள். மொத்தம் 7 ஜீப்புகள்.

காட்டுப் பாதையில் 15 நிமிட ஜீப் பிரயாணத்திற்குப் பிறகு பார்கவ நரசிம்மர் கோவில் இருந்த குன்றின் அடிவாரத்திற்கு வந்துசேர்ந்தோம்

அங்கிருந்து 300 மீட்டர்கள் மலைப்பாதையில் நடந்து, கோவில் இருக்கும் சிறிய குன்றின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தோம். பிறகு 150 படிகள் ஏறினால் பார்கவ நரசிம்மர் கோவில் வரும். குன்றின் அடிவாரத்தில் திருக்குளம் (பார்க்கவ தீர்த்தம்) ஒன்று உள்ளது.





பார்கவ நரசிம்ஹருக்கும் ஜ்வாலா நரசிம்ஹருக்கும் இரண்டு வித்தியாசங்கள் உண்டு, இரண்டிலும் மடியில் ஹிரண்யகசிபுவை வைத்துக்கொண்டு சம்ஹாரம் செய்யும் விதத்தில் இருந்தாலும்.  ஒன்று, ஹிரண்யகசிபு, இடம் மாற்றி நரசிம்ஹரின் மடியில் படுத்திருப்பான். இன்னொன்று, இந்த நரசிம்ஹரின் தலைக்குப் பின்னால் இருக்கும் சிலாதோரணத்தில், தசாவதார சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணம், பார்க்கவருக்கு (பரசுராமர்) தசாவதார ஸ்வரூபியாக இந்த நரசிம்ஹர் காட்சி கொடுத்ததால்.

சென்றமுறை வந்தபோது, கோயில் பாலாலயத்தில் இருந்ததால், மூலவரைச் சேவிக்க முடியவில்லை. இந்த முறை தரிசனம் செய்ததுடன் தீர்த்தம் சடாரியும் கிடைத்தது.

தரிசனம் முடிந்ததும் படிகளில் இறங்கி, ஜீப் இருந்த இடத்தை அடைந்தோம். அங்கிருந்து 9 மணிக்குப் புறப்பட்டு பார்கவ நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தோம். 

இந்தக் காட்டுப் பாதையில் சில கிமீ தூரம் சென்றதும் தார்ச்சாலை வருகிறது. அட..சாலை நன்றாக இருக்கிறதே என்று சென்றமுறை நினைத்தேன். சிறிது நேரத்திலேயே காட்டுப்பாதை ஆரம்பித்தது. அதற்கு அப்புறம் 14 கிமீக்கு மேல் காட்டுப் பாதைதான்.


செல்லும் வழியில் இருபுறமும் இருக்கும் மரங்களிலிருந்து சில கிளைகள் ஜீப்பின் கண்ணாடியை மறைக்கும் அளவு வந்திருந்தன.  இரண்டுபுறங்களிலும் நிறைய மரங்கள், செம்மண்ணில். நீரோடைகள் வரும்போது இரு புறமும் ஏதேனும் விலங்குகள் இருக்கின்றதா என்று என் கண்கள் தேடின. பகலில், அதுவும் ஜீப் வரும் பாதையில்/சப்தத்தில் அவை வராதாம்.

செம்மண்ணின் துகள்கள் ஜீப்பினுள்ளும் வந்தன. ரொம்ப கடினமான பயணம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் கொஞ்சம் அசௌகரியமாக ரொம்ப தூரம் பயணிப்பதுபோலத் தோன்றியது.

எப்படா கோயிலை அடைவோம் என்று நினைக்கும் நேரத்தில், 16 கிமீ காட்டுப் பாதையைக் கடந்து கோவில் இருக்கும் பகுதிக்கு வருகிறோம்.

அங்கு கோயில் எப்படி இருந்தது, வேறு என்ன இடத்திற்குப் போனோம் என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போமா?


57 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ஓம் நரசிம்ம..
    ஜெய் நரசிம்ம
    ஜெய் ஜெய் நரசிம்ம!..

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே

    அருமையான எழுத்துடன் இன்றைய பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. பார்கவ, பாவன நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் படங்கள் விபரங்கள் பற்றி அறிந்து கொண்டேன். பார்கவ நரசிம்மர் தரிசனம் பெற்று கொண்டேன்.

    செல்லும் வழிகள் அந்த கரடுமுரடான பாதைகள் எவ்வளவு கடினமாக உள்ளது. ஆனால், தகுந்த துணைகளுடனும், இறைவனை பார்த்து விடும் ஆவலிலும் சிரமம் பார்க்காமல் ஏறி விடலாம் என்றுதான் மனதுக்குள் தோன்றுகிறது.

    படங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளது. படிக்கட்டுகளின் படம் பார்க்கும் போது இதுபோலவே சௌகரியம் ஆங்காங்கே இருந்தால் நல்லதென்று தோன்றுகிறது. சற்றே வயதானவர்களுக்கு தொடர்ந்து ஏறும் போது முழங்கால் வலி வராமல் இருக்க வேண்டும்.

    நீங்கள் தரும் விபரங்களிலும், படங்களின் மூலமாகவும் இந்த யாத்திரை பயணத்தில் சிறப்பாக இறைவன் தரிசனம் எங்களுக்கு கிடைத்து வருகிறது. சென்ற வார தங்களது பதிவை நான் இன்னமும் படிக்கவில்லை. அச்சமயம் மூன்று நாட்களாக நாங்களும் வெளியூர் பயணத்தில் இருந்தமையால், பதிவை படிக்க இயலாமல் போய் விட்டது. இப்போது அதையும் படிக்கிறேன்.

    இனி இந்தக் கோவிலுக்கு யாத்திரீகர்களாக செல்பவர்களுக்கு தங்கள் பதிவு ஒரு வழி காட்டியாக அமையும். நல்லதொரு கோவில் வழிபாட்டிற்கும், இறைவன் தரிசனத்திற்கும் எங்களையும் உடனழைத்து செல்லும் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இதை எழுதி அனுப்பியபிறகு மூன்று யாத்திரைகள் போய்விட்டு வந்துவிட்டேன். குருவாயூர், காசி கயா, மேல்கோட்டை வைரமுடி. இந்தமாதம் எதுவும் செல்லவில்லை

      நீக்கு
  5. தகவல்கள் சொல்லிய விதம் அருமையாக உள்ளது.

    படங்கள் வழக்கம் போல அழகு

    பதிலளிநீக்கு
  6. /// காட்டுக்கு நடுவில் கரடு முரடான பாதையில் குலுங்கிடும் டிராக்டர் பயணத்தில் -///

    நினைக்கவே பிரமிப்பாக இருக்கின்றது..

    நரசிம்மர் தான் பயணத்தை நடத்துகின்றார்.. நாம் பதுமைகளே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நாம் ஒரு காலடிதான் அவனை நோக்கி வைக்கமுடியும்.

      நீக்கு
  7. //அந்த வெள்ளைக் குதிரை..//

    இதுவாவது சிக்கியதே!..

    பதிலளிநீக்கு
  8. இந்தக் கோயில்களுக்கு கைங்கர்யம் செய்யும் பட்டாச்சார்யர்கள் நித்தியமும் இப்படித் தான் செல்ல வேண்டுமா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவங்களுக்கு இது தினப்படி கைங்கர்யம். இது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் நான் செய்த தவறை இரவு எழுதறேன்

      நீக்கு
  9. லைட் ரீடிங் வாசகர்களைக் கருத்தில் கொண்டு
    யாத்திரை கட்டுரையை மிகப் பிரமாதமாக உருவாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கோ படத்தொகுப்பும் அவற்றிற்கான விவரமான அடிக் குறிப்புகளும் அந்தப் பிரதேசத்தின் இயற்கை சூழ் நிலை நேர்த்தியையும் மேலதிகத் தகவல்களையும் சொல்வதாக அமைந்திருந்தன.
    நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார்..தேடல்தான் மேலதிகத் தகவல்களைக் கொடுத்தன

      நீக்கு
  11. 30 ஆண்டுகளுக்கு முன்பான திருக்குளப் படத்தை எப்படி இங்கு சேர்த்தீர்கள் என்றறிய ஆவல் ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. செஞ்சு என்ற பழங்குடியினர் பற்றி மேலும் அறிய ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் இப்போதும் அந்தக் காடுகளில் வசிக்கிறார்கள். அடுத்தவாரம் என்ன எழுதியிருக்கேன் என் நினைவில் இல்லை

      நீக்கு
  13. நான்கு மொழி வழிகாட்டிப் பலகையில் தமிழும் இடம் பெற்றிருந்தது
    மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. சன்னதி வெளிப்புறத் தோற்றத்தையும் நரசிம்ஹர் திரு உருவையும் தரிசித்து வணங்கிக் கொண்டேன். மிக்க சந்தோஷமும் நன்றியும் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். ஒரு தடவைதான் எழுதப் போகிறோம் என்பதால் அதிக விளக்கம்

      நீக்கு
  15. பார்வதி மீனவ குடும்பத்தில் பிறந்த மாதிரி பார்க்கவியும் இங்கே வனவாசியாகப் பிறந்தாளாமே!..

    வனம் அதிர நடந்த நரசிம்மர் செஞ்சு லக்ஷ்மியை மணந்து கொண்டதாகவும் அதன் அடிப்படையில் வருடத்துக்கு ஒருநாள் வனவாசிகள் அவர்களது வழக்கப்படி வழிபாடு செய்வதாகவும் முன்பே கேட்டிருக்கின்றேன்..

    அதன் தாத்பர்யத்தைச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சார். அடுத்த வாரம் அது. இப்போதும் அவர்கள் குல வழக்கப்படி பலி படையலோடு அவர்கள் வருடத்தில் சில நாட்கள் கொண்டாடுவார்கள்

      நீக்கு
    2. ஒருநாள் என்று தான் நினைத்திருந்தேன்.. வருடத்தில் சில் நாட்கள்...

      நல்லது.. நல்லது..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நரசிம்மர் அனைவருக்கும் அருள் புரிவாராக!..

      நீக்கு
    3. என்னோட மேட்டூர்ல வேலை பார்த்தவர் (பிராமின்), குலதெய்வம் கோயிலுக்குப் போனபோது ஆடு பலி கொடுத்தார்கள் என்று சொன்னபோதே எனக்கு ஒருமாதிரி இருந்தது. அதற்குப் பழக்கம் இல்லாதவர்களுக்கு அசூயை இருக்கும்.

      நீக்கு
  16. இன்று மாலை தஞ்சை திவ்ய தேசத்தில் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி வீதியுலா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் சேலையூர் அஹோபில மடத்தில் லக்ஷ்மி நரசிம்மரைச் சேவித்துட்டு பிறகு மடத்தின் ஜீயரைச் சேவித்து அட்சதை வாங்கிக்கொண்டு பெங்களூர் நோக்கிச் செல்கிறோம்.

      நீக்கு
  17. காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரம் - என்று அப்பர் ஸ்வாமிகள் குறிக்கின்ற கண்ணப்ப நாயனார் நினைவுக்கு வருகின்றார்...

    அவரவர் வழிபாடு அவரவர்க்கு!..

    அருள் ஒன்றே உடையராகி அணைக்கின்ற ஐயன் போற்றி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிபாட்டை எப்படிச் செய்கின்றார்கள் என்பதைவிட மனத்தின் பக்தியுணர்வைத்தான் இறைவன் பார்ப்பான்.எல்லாம் அவன் படைப்புகளே

      நீக்கு
    2. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. அஹோபில யாத்திரை பற்றிய விவரங்களும், படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
    இப்போது நிறைய வசதிகள் வந்து இருக்கிறது, அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் காட்டுப் பாதையில் நடந்து போய் தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    பாதையின் படங்களும், படிகளின் படங்களும் நரசிம்மரை காணவேண்டும் என்ற மன உறுதியுடன் செல்லும் அடியவர்களை வணங்க சொல்கிறது.
    பழைய , புதிய பயண வாகனங்கள் படங்கள், பழைய புதிய திருக்குளபடங்கள் என்று அனைத்தும் அருமை.

    //சிலாதோரணத்தில், தசாவதார சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணம், பார்க்கவருக்கு (பரசுராமர்) தசாவதார ஸ்வரூபியாக இந்த நரசிம்ஹர் காட்சி கொடுத்ததால்.//

    நல்ல விவரமாக சொன்னதால் சிற்பத்தை பார்க்க முடிந்தது.ஹிரண்யகசிபு தலையும், ஒரு கையும் தொங்குவது போல இருக்கும் இந்த படத்தில் தலை நன்றாக மடியில் வைத்து இருப்பது போல இருக்கிறது.

    நரசிம்மர் தரிசனம் செய்து கொண்டேன், நன்றி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை எழுதும்போது நானும் நிறையத் தெரிந்துகொண்டேன்.

      சென்றமுறைக்கும் இந்தமுறைக்கும் வித்யாசம் இருக்கிறது. ரொம்ப மாடர்னா ஆகும்போது புனிதம் குறைகிறது எனவும் தோன்றும்

      நீக்கு
  20. நாங்க முதலிலே போனதே பாவன, பார்கவ நரசிம்மர்களைப் பார்க்கத்தான். ஜீப்பில் தான் அழைத்துச் சென்றார்கள். ஒரு ஜீப்பில் 4 பேர்கள் ஓட்டுநரும் சேர்த்து. பணம் எவ்வளவு என்பது நினைவில் இல்லை. முதலில் வெள்ளைப் புழுதியாக வந்தது. அதோடு சுற்றிவரக் காடு என்பதால் ஜீப் செல்லும் வழியில் காட்டுமரக்கிளைகள் ஜீப்பை உரசிக்கொண்டே இருந்தன. செஞ்சு வம்சத்தினரில் ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தார். நாங்கள் போன சமயம் திருவிழா என்பதால் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்தெல்லாம் இந்தச் செஞ்சு குடும்பத்தினர் சாரி, சாரியாக வந்தனர். அங்கே மாமிசமும் படையலில் உண்டு என்பதால் ஆடு, கோழிகளும் வந்திருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீசா மேடம். நலமா? நீங்க சொன்னமாதிரிதான் இப்போவும் இருக்கு. நாங்க ஜீப்லபோனபோதும் மரக் கிளைகள் உரசின

      நீக்கு
  21. படங்களும் அருமை. ஆனாலும் இந்த வைணவக் கோயில்களில் ஓர வஞ்சனை நிறைய இருக்கும்போல! :D பாருங்க, உங்களுக்குப் பழைய படங்களை எல்லாம் தேடி எடுத்துக் கொடுத்துப் போடச் சொல்லி உதவி செய்திருக்காங்க. நாங்க கோயிலுக்குள்ளே படங்களே எடுக்க முடியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதுக்கு முன்னாலயும் எழுதியிருக்கேன். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மண்டபச் சிற்பங்கள் நல்லாருக்கும்.போட்டோ எடுக்க அனுமதி கேட்டால் லெட்டர் கொடு என்றெல்லாம் கட்டையைப் போடுவாங்க.சிலசமயம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க. நம்ம நேரத்தைப் பொறுத்தது ஆனால் சிலையைத் திருடப்போவதுபோல முகத்தை வச்சுக்கிட்டு கேமராவைத் தூக்கினால் யாருமே அனுமதிக்க மாட்டாங்க.

      நீக்கு
  22. அஹோபிலம் யாத்திரை ஒரு அரிய அனுபவம். நான் ப்லாக் தொடங்கி, எழுதிய முதல் கட்டுரை, அஹோபிலம் பயணக் கட்டுரைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன். ரொம்ப நாளைக்கு (வருடத்துக்கு?) அப்புறம் இங்கு உங்களைப் பார்க்கிறேன். எனக்கு அரிய யாத்திரை என்றால், பஞ்சத்வாரகா, முக்திநாத் போன்றவை நினைவுக்கு வருகின்றன. உங்கள் பயணக்கட்டுரையின் சுட்டியும் கொடுத்திருக்கலாம்.

      நீக்கு
  23. நெல்லை நாங்க அப்பவே ஜீப் பயணம்தான். ஆனா அதிலும் செம புழுதி....உடம்பு முழுவதும் அப்பி தலையிலிருந்து கால் வரை...உடை முழுவதும். திரும்பி வரப்ப மாறுவேஷம் போட்டாப்ல...

    நல்ல குளியல் போட்டோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்முறை டிராக்டர் பயணம் ரொம்ப கடினம். ஜீப் பிரயாணம் பரவாயில்லை. ஆனாலும் செம்மண் புழுதி, ஓரமா உட்கார்ந்தால்

      நீக்கு
  24. நாங்க போனப்ப இந்த மாதிரி படிக்கட்டுகள் இல்லை. இப்ப நிறைய மாறியிருக்கு!! குளம் உட்பட. அப்ப இடப்பக்கம் இருப்பது போல சும்மா ஒரு குட்டை போல இருந்தது. நான் கோயில் குளம் என்றே நினைக்கலை ஏதோ தண்ணி தேங்கியிருக்கிறது என்றே நினைத்தேன்.

    ஜீப்பில் கடைசில யாரு நீங்களா? நான் அந்த இடத்தில்தான் உட்கார்ந்து போனென்..பின்ன காட்டை பார்த்துட்டே வர வேண்டாமா? ஹூம் ஒரு புலி கூட வரலை!

    சும்மா போர்ட்....இங்கெல்லாம் புலி எதுவும் கிடையாது! ஒர் எச்சரிக்கை போர்ட் அவ்வளவுதான்...

    படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ இடங்கள் பரவாயில்லை. இன்னும் சீர்படுத்த பணம் தேவையா இருக்கும்.

      பெங்களூர் அருகே ச்யவனதுர்கா சென்றபோதும் காட்டுவழியில் கரடி, சிறுத்தை, யானை போர்டுகளுக்குக் குறைச்சலில்லை. நாங்கள் பார்த்ததென்னவோ ஒரு கீரியைத்தான்.

      நீக்கு
    2. இப்போ இடங்கள் பரவாயில்லை. இன்னும் சீர்படுத்த பணம் தேவையா இருக்கும்.

      பெங்களூர் அருகே ச்யவனதுர்கா சென்றபோதும் காட்டுவழியில் கரடி, சிறுத்தை, யானை போர்டுகளுக்குக் குறைச்சலில்லை. நாங்கள் பார்த்ததென்னவோ ஒரு கீரியைத்தான்.

      நீக்கு
  25. புலியைத்தான் பார்க்க முடியலை. ..சரி இதையாச்சும் மக்களுக்குக் காட்டிருவோம்னு குதிரைப் படத்தைப் போட்டு...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலி வந்துட்டாலும்.... இருந்தாலும் ஜீப்பில் நடுவில் உட்கார்ந்திருந்தேன். புலிக்கு அவ்வளவு பசிக்காது இல்லையா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!