வெள்ளி, 14 ஏப்ரல், 2023

வெள்ளி வீடியோ : பொன்மணி வண்ணன் சொன்னது கீதை பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை

நட்புகள் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.  உங்கள் வாழ்த்துகளுக்கும் (அட்வான்ஸ்) நன்றி. 

இன்றைய தனிப்பாடல் சற்றே நீளமானது. கே. சோமு இயற்றி இசை அமைத்து கே வீரமணி-ராதா பாடிய பாடல்.  தமிழ் மாதங்கள் அனைத்தையும் பற்றி பாடும் பாடல்.  சுமார் பதினோரு நிமிடங்கள் வரும் பாடல் என்பதால் வானொலி நிலையத்தார் எப்போதாவதுதான் இதை ஒலிபரப்புவார்கள்.   

ஆனால் சிறப்பான பாடல்.  நீங்களும் கேட்டிருப்பீர்கள்.  கேட்காதவர்கள் கேட்டு விட்டு சொல்லுங்கள்.

நாங்கள் இதை வீரமணி ராதா கேஸட் ஒன்று வாங்கி அதில் கேட்டு மகிழ்வோம்.  அதில் ஒரு பக்கம் இந்தப் பாடலும் இன்னொரு பக்கம் 'உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்ட லக்ஷ்மி' எனும் பாடல்.  அது இன்னொரு வாரம் பகிர்கிறேன்.  

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி..
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி..
எங்கள் சாரதி.. பார்த்த சாரதி..
பார்த்த சாரதி.. பார்த்த சாரதி..

தேரோடும் வீதியாம் திருவல்லிக் கேணியிலே
ஈராறு மாதங்களும் இன்பமான திருவிழா..

சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு
பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா..
கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன்
அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்...

வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும்
மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா..

ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு
ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா..
ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே
ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா..

சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா
ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா..
பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து
நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா..

ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு
ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு
உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு
உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா..

வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே
மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்
அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு
அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள்
புரட்டாசித் திருநாள் புரட்டாசித் திருநாள்..

கைத்தல சேவையாம் ஐப்பசித் திங்களில்
இத்தரை மீதில் எங்கும் காணாத சேவையாம்
வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை
பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள்..

கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும்
ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி
சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த
சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா..

மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம்
பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம்..
காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில்
நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம்..

வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த
மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ
மங்கலத் திருவிழா மஞ்சள் நீராட்டு விழா
எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா..

காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன்
தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன்
தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று
சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு
தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா..

கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை
மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா..
வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல்
ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா
அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு
தெப்போற்சவத் திருவிழா..

நம் இராமருக்கு வரதராஜரருக்கு
பார்த்த சாரதிக்கு நரசிம்மனுக்கு
ஸ்ரீமன்னாதருக்கு தெப்போற்சவத் திருவிழா..

மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு
பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா
திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே
சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா..

பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி..
பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி..
எங்கள் சாரதி.. பார்த்த சாரதி..
பார்த்த சாரதி.. பார்த்த சாரதி..


சுப்ரபாதம் - 1979 ல் வெளியான திரைப்படம். கே ஷங்கர் இயக்கத்தில் முத்துராமன், ஜெய்கணேஷ், லதா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் பக்திபடம்.

கண்ணதாசன் பாடல்கள். இசை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்.

கேஜே யேசுதாஸ்-வாணி ஜெயராம் குரலில் இனிமையான பாடல். தமிழ்ப் புத்தாண்டுக்கு இரண்டு கிருஷ்ணன் பாடல்கள் இன்று!

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா

பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)

ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா

கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்
(கண்ணனை நினைத்தால்)

45 கருத்துகள்:

  1. முதல் பாடல் வானொலியில் கேட்டு இருக்கிறேன் ஜி.

    இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல் வரிசையில் வைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரவுக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இறைவன் அனைவருக்கும் நல்லதை தர பிரார்த்தித்து கொள்கிறேன்.

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.


      வாங்க கமலா அக்கா.. வணக்கம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். முதல் கருத,தை ப்ரார்த்தனையோடு எழுதும் கமலா ஹரிஹரன் மேடம் உட்பட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லலத் தமிழர் சகோதரரே.

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.


      வாங்க நெல்லை... வணக்கம்.

      நீக்கு
    3. நெல்லை, போளி மேக்கிங்கா?!!!! தேங்காய்ப்பூரணமா, கடலைப்பருப்பு பூரணமா?

      கீதா

      நீக்கு
    4. எங்க கீதா ரங்கன்(க்கா) அனுப்பும்போது எனக்கு என்ன கவலை

      நீக்கு
    5. சும்மா கதை விடக் கூடாதாக்கும்!!! அனுப்பி ஊசிப் போய் வந்தா ஓகேவா...

      60 வயசாகிடுச்சுல்ல ஜாக் பண்ணி வாங்க!!! 10 ஆயிரம் ஸ்டெப்ச் ஹார்ட் ஸ்டெப்ஸ் எல்லாம் கவர் ஆகிடும்!! போளி சாப்பிடற கலோரிஸ் கரைஞ்சுரும்!!

      பின் குறிப்பு: போளி செய்யலை! போரடிச்சுப் போச்சு.

      கீதா

      நீக்கு
  4. முதல் பாடல் கேட்டிருக்கிறேன். பல திருவிழாக்கள் பற்றி வருவதால் மனதில் நின்றதில்லை. ஆனால் திருவல்லிக்கேணியில் எந்த மாத்த்தில் என்ன என்ன திருவிழா என்பது பாடலை வைத்து நினைவில் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இந்த இரு பாடல்களும் வெகு பிரபலம் அப்போது.

      நீக்கு
  5. இரண்டாவது பாடல் பலமுறை கேட்டதுண்டு. ரசித்திருக்கிறேன்.

    வல்லிம்மாவின் சமீபத்தைய பதிவில் சிவாஜி படப் பாடலை, கண்ணதாசன் எப்படி அர்த்தமுள்ளதாக எழுதியிருக்கிறார் எனப் பகிர்ந்திருந்தார். அது டிரான்சிஷன் காலம். எம்எஸ்எஸ் இசை பழசு, இளையராஜா இசை புதியது என மனதில் பட்ட காலம். அதனால் அந்த இசையை அப்போ ரசிக்கமுடியாமல் போனது. அதுபோல இந்தப் பாடலும் மிகச் சிறப்பு என நினைத்து மீண்டும் மீண்டும் ரசிக்க இயலும் எனத் தோன்றவில்லை.

    கற்பகம், கர்ணன்..... பா வரிசைப் படங்கள் என பெரிய லிஸ்டுக்கு இந்த விதி பொருந்தாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது.  வல்லிம்மாவின் கம்பராமாயணப்பாடலோடு ஒப்பிட்டு நல்லவர்க்கெல்லாம் பாடலை சொல்லி இருந்தது சிறப்பாக இருந்தது.  இந்தப் பாடல் மறுபடி மறுபடி கேட்க முடியாது எனினும் கேட்கும்போதெல்லாம் அதன் இனிமையை, யேசுதாஸ், வாணி ஜெயராம் குரலின் இனிமையையும் ரசிக்கலாம்.

      நீக்கு
  6. இரண்டாவது பாடலின் பின்னணிக் காட்சிகள் ஹொய்சாளர் காலக் கோவில் எனத் தோன்றுகிறது. இதைப்போன்ற சிறிய அளவிலான கோவிலைத் தரிசனம் செய்தது, அதன் சிற்பங்களைப் பார்த்துப் பிரமித்தது, வைரமுடி யாத்திரை தொடரில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த இடத்தைக் காண வேண்டும் என்கிற ஆசை உண்டு!

      நீக்கு
    2. நெல்லை அது ஹளபேடு என்று நினைக்கிறேன். எனக்கு ரொம்ப வருடங்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசை உண்டு. இப்ப இங்கு இருந்தும் ...போக வாய்ப்பே வரலை...யுட்யூப் காணொளிகளில் பார்த்து பிரம்பித்துப் போயிருக்கிறேன்.ஹொய்சாள சிற்பங்கள்...

      //இதைப்போன்ற சிறிய அளவிலான கோவிலைத் தரிசனம் செய்தது, அதன் சிற்பங்களைப் பார்த்துப் பிரமித்தது, வைரமுடி யாத்திரை தொடரில் வரும்.//

      சூப்பர்!

      கீதா

      நீக்கு
    3. மைசூர் போகும் வழியில் ஆற்றின் மணலில் இருக்கும் கோயில் - தலக்காடு போக வேண்டும் என்று எனக்கு ஆசை, இது அதிக தூரமும் இல்லை. இன்னும் போக முடியவில்லை.

      இதுதான் நீங்க சொல்லிருக்கீங்களோ? சிற்பங்கள் பிரமாதமா இருக்கும்...மைசூர் போறதுல கொஞ்சம் டிவியேட் ஆகி இடப்பக்கம் போணும் இங்கிருந்து போறப்ப..மண்டியா தாண்டி...

      கீதா

      கீதா

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வு இரண்டுமே நன்றாக உள்ளது. சித்திரை திருநாளில் கண்ணன் பற்றிய இரு பாடல்களும் தெய்வீகமானதாக இருக்கிறது. இன்றைய இரு பாடல்களையும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன்.

    வீரமணி, ராதா பாடிய "உலகெங்கும் ஆட்சி செய்யும்" அஷ்ட லக்ஷ்மி பாடல் எனக்கு பாடி, பாடி மனப்பாடம்.மிகவும் பிடித்த பாடலும். வீட்டில் நவராத்திரி கொலுவுக்கு தினமும் பாடியிருக்கிறேன். இதையும் நீங்கள் ஒர் நாள் பகிர்வதற்கு மிக்க மகிழ்ச்சி. இன்றைய பகிர்வுக்கும் நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்களும் உங்களுக்கு மனப்பாடம் என்பது மகிழ்ச்சி கமலா அக்கா. பாஸுக்கும் அப்படிதான். நன்றி.

      நீக்கு
    2. சினிமா பக்தி பாடல்களெல்லாம் சுளுவா மனப்பாடமா ஆயிடும்போது ஏன் சப்ஜெக்ட்லாம் அப்படி மனப்பாடமா ஆகறதில்லை? - புதன் கேள்வி

      நீக்கு
    3. சப்ஜெக்டையும் சினிமா பாட்டு பக்திப் பாட்டு போல சொல்லிக் கொடுத்தா மனப்பாடம் ஆகிடும்!!!

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், வணக்கங்கள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  9. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
    கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
    இன்று இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. காக்க காக்க
    கனகவேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியினில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவனை
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      ​​வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.

      நீக்கு
  12. 1970 களில் இந்தப் பாடல்..
    வானொலியில் கேட்டிருக்கின்றேன்..
    சிறப்பான பாடல்..

    முருகன் மீதும் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் வீரமணி..

    அழியாப் புகழ் பெற்ற மாணிக்க வீணை பாடலும் இந்த் கால கட்டத்தில் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணிக்க வீணை பாடல் பி சுசீலா பாடலா?

      நீக்கு
    2. ஆமாம்..
      சுசீலா அம்மா பாடிய பாடலும் 1970 களில் வெளியானது தான்

      நீக்கு
  13. இன்றைய பாடல்கள் தேர்வு சிறப்பு..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. இரு பாடல்களுமே ;அருமையான பாடல்கள். பல முறை கேட்டதுண்டு ரசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் இங்கு எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு, விஷு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சுப்ரபாதம்னு ஒரு படமா? இப்பத்தான் தெரியுது...ஆனால் பாடல் மட்டும் வானொலியில் கேட்டிருக்கிறேன்.....(கேட்டிருக்கிறேன்னு சொல்றதெல்லாம் அப்ப கேட்டது ஊரில் இருந்தப்ப...அதுவும் கள்ளத்தனமாய்!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஆ! சுப்ரபாதம் பக்திப் படமா இருந்தும் எங்க வீட்டுல கூட்டிட்டே போகலை பாருங்க...ஏமாத்திட்டாங்க! (நாரோயில்ல வந்துச்சா?!! தெரியலையே....)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊர்ல பக்திப்படம்லாம் பார்க்கிற மாதிரி இருக்குமா? அதிலயும் சீன்களை நுழைச்சுடறாங்களே

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லை பிட் போடுறதெல்லாம் பாத்துதான் எங்க மாமா கூட்டிட்டுப் போவார் எல்லா வாண்டுசையும். அதுவும் எங்க மாமா பிராபல்யம்...தியேட்டர்காரன் பிட் போட முடியாதாக்கும்!!

      கீதா

      நீக்கு
  18. இரண்டு பாடல்களுமே அரூமையானவை. வெள்ளி பாடல்பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!