ஆனியன் அடை
(J K)
வேண்டிய உபகரணங்கள் : கிரைண்டர் அல்லது மிக்ஸி, பழகிய தோசைக்கல்
வேண்டிய பொருட்கள்: இட்லி அரிசி,
கடலைப் பருப்பு அல்லது
பட்டாணிப் பருப்பு என்று சொல்லப்படும் வடை பருப்பு. (அரிசி பருப்பு விகிதம் இங்கு எடுத்துக்கொண்டது
2: 1 ) வெங்காயம், வற்றல் மிளகாய், உப்பு, மணத்திற்கு சீரகம்
வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசியைத் தனியாக, பருப்பைத் தனியாக முதல்
நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பருப்பில் கண்ணுக்குத்
தெரியாத பூச்சிகள் இருக்கலாம். ஊறும் பொது வெளியே வந்து விடும். தனியாக ஊறவைத்தால்
எளிதில் கழுவி எடுக்கலாம்.
அரிசி பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி மிளகாய் மற்றும் உப்புடன் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். (படங்கள் கீழே)
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வார்த்து இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
(அடைக்கு வாய் மூக்கு கண் இருப்பதைப்பாருங்கள். பாஸின் கைவண்ணம். )
இதற்குத் தொட்டுக்கொள்ள இங்கு சர்க்கரை என்ற பெயரில் கிடைக்கும் கருப்பு வெல்லமும், முந்தைய நாள் பொங்கலுக்கு செய்த கொஸ்துவும் வைத்து சாப்பிட்டேன். இந்தக் கருப்பு வெல்லம் (கருப்பட்டி அல்ல) தான் அடைப் பிரதமன், உன்னி அப்பம், அரவணை போன்றவைக்கு உப்யோகிக்கப்படுவது.
இந்த அடையில் என்ன புதுமை என்கிறீர்களா? ஒன்னும் இல்லாததற்கு ஒரு அடை. (கார அடையான்
நோன்பிற்கும் இந்த அடைக்கும் சம்பந்தம்
இல்லை)
பிற்சேர்க்கை.
அடைக்கு மாவு அரைத்தால் அடை உடனே சுடவேண்டும். மாவை ஒருமணி நேரம் இரண்டு மணி நேரம் வைத்திருப்பதோ புளிக்க வைப்பதோ கூடாது. சுடப்போகும் முன் அரைத்தால் போதும்.
அருமையாக இருக்கிறது அடை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஆனியன் அடை நன்று. வெங்காயம் சேர்த்த அடைக்கும் வெல்லம் நன்றாக இருக்குமா?
பதிலளிநீக்குஇருக்கும். நெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். ஆனால் நம்ம பக்குவமே வேறே மாதிரி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேசக் குறமகள்
பதிலளிநீக்குநினைவோன் வருக..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவனை
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வணக்கம் ஜெயகுமார் சந்திரசேகர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கப் பதிவில் அடை படங்களுடன் செய்முறை விளக்கமும் நன்றாக உள்ளது. அரிசி, பருப்பு தனிதனியாக ஊற வைத்து செய்தாலே அடை ருசியாக அமையும். அடையின் ருசி தாங்கள் பகிர்ந்த படங்களில் தெரிகிறது.
நான் கடலைப்பருப்புடன், கொஞ்சம் து. ப , உ. பாவும் சேர்த்து செய்வேன். தேங்காய் பூவும் வீட்டில் இருந்தால் துருவி சேர்ப்பேன். ஆனால் வெங்காய வாசனைக்கு முன் இதுவெல்லாம் கரைந்து சோர்ந்து விடும். ( ஆனால், இப்போது வரும் வெங்காயத்தில் அதன் இயற்கையான மணம் இல்லையென்பது வேறு விஷயம்.)
தாங்கள் கண் மூக்கு வாயுடன் பகிர்ந்த படம் அருமை. தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள். "இப்படி அழகாக இருக்கும் என்னையா சாப்பிடப் போகிறீர்கள் " என பரிதாபமாக கேட்பது போல் தோன்றுகிறது:)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி
நீக்குJayakumar
தேங்காய் போட்ட அடையைத் தனியாகச் செய்வோம். அதுக்குப் பச்சரிசி போட்டுக்கலாம். பருப்புக்களோடு மிளகு, ஜீரகம் சேர்த்து அரைத்துத் தேங்காயைக் கீறிப் பல்லுப் பல்லாக நறுக்கிச் சேர்த்துத் தே.எ.யில் அடை வார்ப்போம். கார்த்திகைக்கு இந்த அடைதான் உப்பு/வெல்லம் இரண்டுக்கும். வெல்ல அடைக்கு அரிசி/பருப்புக்களோடு வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்துத் தேங்காய்ப் பல்லைக் கீறிப் போட்டு நெய்யோடு சேர்த்து வார்ப்போம்.
நீக்குஅடை அருமை...
பதிலளிநீக்குசாதாரணமாக அடைன்னா புழுங்கலரிசி(மாமியார் வீட்டில் போட மாட்டாங்க. அதோடு ஊறவும் வைக்க மாட்டாங்க. அரிசி+பருப்பைச் சேர்த்தே ஊற வைத்து ஒரு மணி நேரத்துக்குள்ளே அரைச்சுடுவாங்க. கரண்டியால் எடுத்து ஊற்றுவது ஆரம்ப காலங்களில் சிரமமாக இருந்தது. உதிரும். பின்னர் பழகி விட்டது என்றாலும் வார்த்த உடனே சாப்பிட்டுடணும். ஆறினால் தொண்டையை அடைக்கும்.) நான் பண்ணுவது புழுங்கலரிசி 250 எனில் 150 அல்லது 200 பச்சரிசி, ஒரு கிண்ணம் து.பருப்பு(அடை முறுகலாகவும், நிறமாகவும் வரும்.) முக்கால் கிண்ணம் கடலைப்பருப்பு, அரைக்கிண்ணம் அல்லது இரண்டு மேஜைக்கரண்டி உ.பருப்பு. சேர்ப்பேன். மிளகாயைப் பெருங்காயத்தோடு நீரில் தனியாக ஊற வைச்சுடுவேன். ஊற வைச்ச மிளகாயும் அடைக்கு நிறம் கொடுக்கும். என் தம்பி மனைவி உளுத்தம்பருப்புச் சேர்க்காமல் அடை பண்ணுவாள்.
பதிலளிநீக்குஇந்த முறையில் அடை தட்டும்போது வெங்காயம், வாழைப்பூ, பறங்கிக்கொட்டை, முட்டைக்கோஸ், கீரை வகைகள் வெந்தய./முருங்கைக்கீரை உள்படச் சேர்த்துத் தட்டலாம். அடை மொறுமொறுவெனவும் இருக்கும். சுவையும் கூடும்.
நீக்குபாசிப்பருப்பு உட்பட அனைத்துப்பருப்புக்களோடும் புழுங்கலரிசி, பச்சரிசி சமமாகக் கலந்து உப்புக்காரத்தோடு தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கொண்டு நன்கு நைசாக அரைத்தும் வார்க்கலாம். இதை நாங்க அடைதோசை என்போம். மெலிதாகவும் ஓரங்களிலும் நடுவிலும் முறுகலாகவும் வரும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅடை செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது. கடலைப்பருப்பு மட்டும் போட்டு செய்து இருக்கிறீர்கள். வெண்ணெய், வெல்லம், தேங்காய் சட்னி செய்து சாப்பிடுவோம் எங்கள் வீட்டில்.
பதிலளிநீக்குகடலைப் பருப்பு போன்று வடைபருப்பு அல்லது பட்டாணிப் பருப்பு என்று இங்கு கிடைக்கும் பருப்பு. விலை கடலைப்பருப்பைக் காட்டிலும் குறைவு.
பதிலளிநீக்குhttps://www.thaithingal.in/product/vadai-paruppu/
Jayakumar
சில சமயங்களில் மளிகைக்கடைகளில் கடலைப்பருப்பைக் கொடுக்காமல் இந்தப் பட்டாணிப்பருப்பைக் கொடுத்து ஏமாற்றுவது உண்டு. நாகர்கோயில்/கன்யாகுமரி மாவட்டத்தில் ரசவடை இந்தப் பட்டாணிப்பருப்பில் தான் பண்ணிப் பார்த்திருக்கேன். இப்போல்லாம் எப்படிஞு தெரியலை. இதிலேயே பொட்டுக்கடலை மாதிரியும் வந்திருக்கு. நாம் தான் பார்த்து வாங்கணும். பெரும்பாலோர்க்கு இது பற்றித் தெரிவதில்லை.
நீக்குஜெ கே அண்ணா அடை சூப்பர். படங்களோடுன் நல்லா சொல்லியிருக்கீங்க
நீக்குநம் வீட்டில் ஊரில் (நாகர்கோவில், திருவனந்தபுரம்) இருந்தவரை பருப்பு வடை, அடைக்கு எல்லாம் பட்டாணிப்பருப்பு(வடைப்பருப்பு) பயன்படுத்துவதுண்டு. அதில்ல் தான் செய்வதுண்டு. செம சுவை மற்றும் நல்ல கரகரன்னு வரும்.
கீதா
என் கருத்து வந்ததோ?
நீக்குகீதா
அடை நன்றாக இருக்கிறது. படங்களும் நன்று.
பதிலளிநீக்கு