ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 11

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 11

 

ஹொசஹொலாலு கோவிலின் வெளிப்புறச் சிற்பங்களிலேயே இன்னும் இருக்கிறோம். எனக்கு கால அவகாசம் மிகக் குறைவாக இருந்தது. 2-3 மணிநேரம் எனக்கு இருந்திருந்தால், ஒவ்வொரு சிற்பத்தையும் ஊன்றிக் கவனித்து அதன் சிறப்பையும், பல கோணங்களில் அந்தச் சிற்பத்தைப் புகைப்படம் எடுப்பதையும் செய்திருப்பேன். எந்த வரிசையில் ஒவ்வொரு சிற்பமும் அமைந்திருக்கிறது, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையா? இல்லை எந்த இட த்தில் cut ஆகிறது? (அதாவது அது வரைதான் ஒரு சிற்பி செதுக்கியிருப்பார். அதற்கு அடுத்த slab இன்னொருவருடையதாக இருந்திருக்க க் கூடும் என்றெல்லாம் அவதானித்து அதற்கு ஏற்றவாறு புகைப்படம் எடுத்திருக்கலாம். இருக்கும் மிகக் குறைந்த அவகாசத்தில் இது சாத்தியப்படாது என்பதால், வேக வேகமாக புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தினேன்.  வெளிப்புறச் சுவர்களின் சிற்பங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.







எனக்கு என்னவோ ஒவ்வொரு கல்லிலும் சிற்பங்கள் செதுக்கி அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக நேர்த்தியாக அடுக்கியுள்ளதுபோலத் தெரிந்தது. எப்படி இவற்றைச் செதுக்கினார்கள், எங்கே அமர்ந்து செதுக்கியிருப்பார்கள், அவர்களுக்கான வாழ்வாதாரம் மாதக் கூலியா என்றெல்லாம் யோசிக்கிறேன்.








அடிப்பகுதி வரை சிற்பங்கள். எப்படிச் செதுக்கி எப்படி அடுக்கி வைத்தார்களோ. அடுத்த படத்தில் உள்ளதுபோல மாடங்கள் ஒவ்வொரு மூலையிலும் (3?) இருக்கின்றன. அவைகளில் பொதுவாக சிலா உருவங்கள் இருக்கவேண்டும் (சிறிய சந்நிதி போல). ஆனால் அவைகள் வெறுமையாக இருக்கின்றன. அங்கிருந்த சிற்பங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது.




இன்னொன்று நான் கவனித்தது, சிற்பங்கள் நின்ற, அமர்ந்த மற்றும் ஆடும் நிலையில் இருந்தாலும், அதற்கான width ரொம்ப அதிகமில்லை. அதனால் சிற்பங்களின் கால் பாதம் கிடைமட்டமாக (horizondal) அமைக்கப்பட்டுள்ளது. நீங்களே கவனித்துப் பாருங்கள்.

 





நிறைய படங்கள் இந்தப் பதிவை அலங்கரித்துவிட்டன. உண்மையில், ஒவ்வொரு பத்தையும் கூர்ந்து கவனிக்கும்போது, அதன் அலங்காரங்களும் சிற்பங்கள் என்ன சொல்லவருகின்றன என்பதும் பிடிபட ஆரம்பிக்கிறதுஅடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்) 
 

34 கருத்துகள்:

  1. படங்கள் வழக்கம் போல பிரமிக்க வைக்கிறது.

    நீங்கள் சொல்வதுபோல் தனிக்கற்களாகத்தான் இருக்க முடியும்.

    இப்போதைய செங்கல் போல (பெரியதாக) செதுக்கி இருக்கலாம் காரணம் பிழையானால் தூக்கி போட்டு விட்டு அடுத்த கல்லை எடுப்பார்கள் இதுதான் சிற்பிகளின் வழக்கம்..

    கூலி ஹா.. ஹா..
    தங்களது பெயரை அல்லது சமூகத்தை வரலாற்றில் நிறுத்துவதே தங்களது தலையாய கடமையாக நினைத்து வாழ்ந்தவர்கள் பழங்கால சிற்பிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி..... நீங்கள் சொல்வதில் லாஜிக் இருக்கிறது. ஆனால் சில கோவில்களில் 40 அடி உயர ஒரே கல்லில் அமைந்த தூணில் சிற்பங்கள் பார்த்திருக்கிறேன்.

      தாஜ்மஹலில் குரான் வாசகங்களை callingraphyயில் எழுதிய அமானத் கான் (அப்துல் ஹக்), தன் பெயரைப் பொறித்துக்கொள்ள அனுமதி வாங்கியிருந்தான். அவன் பாரசீகத்தைச் சேர்ந்தவன்.

      நீக்கு
  2. படங்கள் அழகாக ஷார்ப்பாக உள்ளன. கற்களை அடுக்கிவிட்டு சிற்பங்களை செதுக்கினார்கள் என்றே தோன்றுகிறது காரணம் கற்கள் ஒரே அளவில் இல்லை. ஒரே அளவில் இருந்தால் தான் சிற்பங்கள் செதுக்கியபின் அடுக்க முடியும். கற்கள் வேறு வேறு நீளத்தில் இருந்தாலும் அடக்கியபின் சிற்பங்களை இணைந்து செதுக்கமுடியும்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  3. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. கலைப் பொக்கிஷம்..

    படங்கள் அருமை..

    கைத்தலப் பேசியில் உருட்டி உருட்டிப் பார்ப்பது சிரமமாக உள்ளது..

    பிறகு வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. ஞாயிறென்றால் கோவில் சிற்ப தரிசனம் என்று ஆக்கிவிட்டீர்கள்! கண்ணுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு ஒரு இதம்.

    இந்தச் சிற்பிகள் ஒவ்வொருவரும் ஒரு பாரத கலாச்சார ரத்னா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். சிற்பிகளின் திறமை மிகவும் மெச்சத்தகுந்தது (மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளே, சுந்தரேசுவரர் சன்னிதி முன் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் ஆஹா ஓஹோ)

      நீக்கு
  6. கலைப்பொக்கிஷத்தின் தொடர்ச்சி! ஹையோ செமையா இருக்கு நெல்லை அத்தனை படங்களும். ரசித்துப்பார்க்கிறேன்.

    இப்படியே சில கார்விங்க்ஸ் இறைவன் திரு உருவங்கள் ப்ளாஸ்டிக்கில் செதுக்கப்பட்டு ஃப்ரேம் போட்டு பரிசுப் பொருள் வாங்கும் கடைகளில் பார்க்கலாம் இல்லைனா ஃப்ரேம் போடாம...எனக்கு அப்படி யாரோ கொடுத்தாங்க அது கல்லும் இல்லை ப்ளாஸ்டிக்கும் இல்லை ஆனால் லைட் வெயிட்டாக இருந்தது இண்டு இடுக்குகளில் தூசி அப்பியது அப்புறம் சிலந்தி புகுந்து கொண்டது. ஷோகேஸில் வைத்திருந்தேன் சென்னையில் கரப்பும் முட்டை போடத் தொடங்கியது...முதலில் பராமரிக்க முடிந்தது அதன் பின் என்னால் பராமரிக்க முடியலை. மூட்டை வேறு தூக்குவதானது.

    பொதுவாகவே நான் நெருங்கியவர்களிடம் சொல்வது கிஃப்ட் எதுவும் கொடுக்காதீங்க எந்த வகையானாலும் ... ப்ளீஸ் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வது வழக்கம். இன்று இது நினைவுக்கு வந்தது போன முறை பார்த்தப்ப நினைவுக்கு வந்து சொல்ல விட்டுப் போச்சு இப்படியான வகை பரிசுப் பொருள் பற்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா)

      /திரு உருவங்கள் ப்ளாஸ்டிக்கில் செதுக்கப்பட்டு ஃப்ரேம் போட்டு // - நிறைய அழகிய ஆனால் பராமரிக்க முடியாத, தேவையில்லாத பொருட்கள் பரிசுப்பொருள்களாக வருவது தவிர்க்க முடியாதது

      நீக்கு
    2. /கிஃப்ட் எதுவும் கொடுக்காதீங்க எந்த வகையானாலும் // - உண்மைதான். தேவையில்லாத பொருட்கள் எல்லாமே அடைசல்தான். கொடுப்பவர்களுக்கும் வீண் செலவு (திருமணத்தில் கிஃப்ட், ரிட்டர்ன் கிஃப்ட் இந்த வகைதான் ஹா ஹா)

      நீக்கு
    3. பொக்கே வையும் நான் தேவையில்லாதது என்றே நினைப்பேன்.

      நீக்கு
  7. சிற்பங்களைச் செதுக்கி விட்டு - அதாவது அவங்களுக்குக் கிடைத்த அளவுப்படி அலல்து வெட்டி எடுத்துக் கொண்டு அடுக்கிருக்கலாம்னு சில பாருங்க இடையில் கேப் தெரிகிறது அப்படியானவை அடுக்கப்பட்டிருக்கலாம். கீழே இருப்பவை ஷேப் வெட்டி அடுக்கிவிட்டு செதுக்கியிருக்கலாம் அதனால் அதன் மேலே அடுக்கும் போது அளவு வித்தியாசப்பட்டு கேப் இருக்கும் என்று தோன்றுகிறது.

    அப்படிச் செதுக்கிவிட்டு அடுக்கினால் மூலைகள் அதாவது வி ஷேப்பில் மூலை இருக்கே அந்த இடங்களை எப்படிச் சேர்த்திருப்பாங்க அந்த இடங்களில் கேப் இல்லை எனவே கல்லை அப்படி வைத்து செதுக்கியிருப்பாங்க கீழே உள்ளவற்றை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ முழுமையான கோவில் சிறிது சிதைந்த நிலையில் ஒழுங்காக அடுக்கியிருப்பது போலவே தோன்றும்.

      இதனை மொத்தமாகச் செய்திருப்பார்கள், அல்லது வரிசை வரிசையாகச் செதுக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. சிற்பங்களைச் செதுக்கி விட்டு - அதாவது அவங்களுக்குக் கிடைத்த அளவுப்படி அலல்து வெட்டி எடுத்துக் கொண்டு அடுக்கிருக்கலாம்னு சில பாருங்க இடையில் கேப் தெரிகிறது அப்படியானவை அடுக்கப்பட்டிருக்கலாம். கீழே இருப்பவை ஷேப் வெட்டி அடுக்கிவிட்டு செதுக்கியிருக்கலாம் அதனால் அதன் மேலே அடுக்கும் போது அளவு வித்தியாசப்பட்டு கேப் இருக்கும் என்று தோன்றுகிறது.

    அப்படிச் செதுக்கிவிட்டு அடுக்கினால் மூலைகள் அதாவது வி ஷேப்பில் மூலை இருக்கே அந்த இடங்களை எப்படிச் சேர்த்திருப்பாங்க அந்த இடங்களில் கேப் இல்லை எனவே கல்லை அப்படி வைத்து செதுக்கியிருப்பாங்க கீழே உள்ளவற்றை...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் கால்கள் கிடைமட்டமாக அதுவும் அமர்ந்திருக்கும் நிலையிலும் சரி சண்டை போடும் போதும் கூட...ஆனா நிற்கும் சில உருவங்களில் ஒரு கால் நேராகவும் மற்ற கால் கொஞ்சம் கிடைமட்டமாகவும் இருக்கு பாருங்க, அதுவும் பாத்தீங்கனா நேராக இருப்பதில் இடம் இருந்திருக்கும் மற்றொருகாலுக்கு இடம் இருந்திருக்காது அதான் சைட்ல ஆக்கிருக்காங்க. இது பல சிற்பங்களிலும் பார்க்கலாம். நானும் அப்படி பார்க்கறப்ப உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களையும் கிடை மட்டமாக வைத்து அமர்ந்து பார்த்ததுண்டு. ஆ! கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் தொடைஜாயின்ட்...ஆனால் பரதநாட்டியம் கற்றுக் கொண்டவர்களுக்கு எளிதாக வரும். இருகால்களையும் எதிர் எதிர் திசையில் கிடைமட்டமாக ஆனா சிற்பங்கள் ல பெரும்பாலும் ஒரு கால் மடிந்தும் ஒன்று மட்டும் கீழே பாதம் கிடைமட்டமாக...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நீங்க கவனிச்சிருப்பீங்க, நிற்கும் உருவங்களின் ஒரு கால் ஒரு ஆங்கிளில் கிடைமட்டமாக இருக்கற சிலைகள் இடுப்பு பாருங்க ஒய்யாரமாகக் கொஞ்சம் உட்பக்கம் வளைந்து...அந்த மாதிரி நிற்கும் சிலைகள் எலலம் பாருங்க அப்படி இடுப்பு ஒரு சிறு வளைவுடன் அதை எப்படிச் சொல்ல என்று தெரியலை...பரதநாட்டிய போஸ்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் செதுக்கியிருப்பது அழகியல் பாருங்க....தனி கவர்ச்சி...பெண் உருவமும் சரி ஆண் உருவமும் சரி..

      கீதா

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள் கீதா ரங்கன். அவை பரதநாட்டிய போஸ்கள்தான். நல்லா அப்சர்வ் செய்து செதுக்கியிருக்காங்க.

      ஆண், பெண் இரண்டு உருவங்களுமே அழகியலாக இருந்தன

      நீக்கு
    3. இந்தத் தடவை வடுவூர் இராமர் சஹஸ்ரகலசாபிஷேகத்திற்குச் சென்றிருந்தேன். வெகு நெருக்கத்தில் ரொம்ப நேரம் இராமர் திருமஞ்சனத்தின்போது அருகில் இருந்தேன். இடுப்பு வளைவு, தொப்பூழ் போன்றவை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள். படங்கள் பின்னொரு சமயம் பகிர்கிறேன்

      நீக்கு
  11. சிற்பங்கள் நாள் முழுவதுமே பார்த்துக் கொண்டு இருக்கலாம் அவ்வளவு கலை நுணுக்கம் . நேரில் பார்த்தால் அப்பாடா....

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ஆகா..
    அந்த மகிஷாசுரமர்த்தினி...

    ஆவேசத்திற்குள்ளும் அன்பும் கருணையும்!..

    அற்புதம்.. அற்புதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ஒரு சில வாரங்களில் கோவிலின் உள் இருக்கும் மஹிஷாசுரமர்த்தினி சிற்பம் பகிர்கிறேன். அது இன்னும் அருமை

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. வெளிப்புறச் சிற்பங்கள் எல்லாம் அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது. மிகவும் நிதனாமாக பார்த்தால் பல புராண கதைகளை அறிந்து கொள்ளலாம்.
    கலை நுணக்கத்துடன் ரசித்து ரசித்து செய்து இருக்கிறார்கள் சிற்பிகள்.
    //அவர்களுக்கான வாழ்வாதாரம் மாதக் கூலியா என்றெல்லாம் யோசிக்கிறேன்.//

    நல்ல யோசிப்பு.

    காலத்தை வென்று அவர்களை நினைத்து கொண்டு இருப்பது போல
    செய்து இருக்கும் சிற்பிகள், கலைஞர்களுக்கு பாராட்டு இருந்தாலே போதும் கூலி பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள். நல்ல மரியாதை செய்து இருப்பார்கள், பொன், பொருள் கொடுத்து பாராட்டி இருப்பார்கள் மன்னர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டு இருந்தாலே போதும். இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் இல்லையா? வாழ்வாதாரத்துக்கு ஒரு குறைவும் அவர்களுக்கு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  15. கருத்துகள் காணாமல் போகிறது. மீட்டுக்கொண்டு வரவும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!