புதன், 13 செப்டம்பர், 2023

முத்தையன் செய்தது சரியா?

 

சென்ற வாரமும் யாரும் எங்களை கேள்விகள் கேட்கவில்லை. 

சென்ற வாரம் நாங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு சரியான விடைகள் : 

1) மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (  பதில் யாரும் சொல்லவில்லை) 

2) காசி யாத்திரை (  கில்லர்ஜி - முதல் விடை)

3) நீலாவுக்கு நெறஞ்ச மனசு (பதில் யாரும் சொல்லவில்லை) 

4) நெஞ்சத்தைக் கிள்ளாதே ( நெல்லைத்தமிழன் - முதல் விடை) 

5) மனம் ஒரு குரங்கு (கில்லர்ஜி - முதல் விடை )

= = = = = =

எங்கள்(?) கேள்விகள். 

சென்ற வாரம் போலவே சில கேள்விகள் : ( மேலும் சினிமா பெயர்கள்) 

1) பாக்கு மெல்லுவது போர் 

2) திங்காதே 

3) கால் வலித்தால் கட்டு 

4) இதுக்குத்தான் ரோஸ் 

5) வானிலை அடங்கு 

(இந்த புதிர்களை எழுதி அனுப்பிய வாசகருக்கு நன்றி. அவர் இன்னும் பதில்கள் அனுப்பவில்லை.) 

= = = = = =

KGG பக்கம் : 

நஞ்சநாடு ஸ்கூலில் படித்த காலத்தில், நாங்கள் இருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து பள்ளிக்கூடம் இருக்கும் ஊருக்கு pick-up வேனில் சென்று வருவோம். அந்த வேனில் உட்காரும் பகுதியில் நீள வாக்கில் இரண்டு பக்கமும் இருக்கைகள் இருக்கும். இடது பக்க இருக்கையில் ஆண்களும், வலது பக்க இருக்கையில் பெண்களும் அமர்ந்து பயணிப்போம். 

பையன்கள் : கௌதமன், வெங்கடாசலம், ஜோசப், சேகர், முத்தையன், லோகநாதன். 

பெண்கள் : பிரேமா, லதா, சரோஜா ( மூவரும் சகோதரிகள்) தங்கமணி, தேவி, விஜயலக்ஷ்மி. 

பள்ளிக்கூடம், பேருந்து நிறுத்தத்திலிருந்து ( ரோடிலிருந்து) கீழே ஐம்பது அல்லது அறுபது படிக்கட்டுகள் இறங்கிச் செல்லவேண்டும். 

படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் இடத்தில் வலது பக்கம் ஒரு ஷெட் இருக்கும். அந்த ஷெட்டில் நாங்கள் கொண்டு வருகின்ற காலை ஆகாரத்தை சாப்பிட்டுவிட்டு மதியம் உண்ணவேண்டிய உணவு இருக்கும் டிஃபன் பாக்ஸ்களை வைத்துப் பூட்டிவிட்டு செல்வோம். 

பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த முதல் வாரத்தில் ஒருநாள் காலை அந்த ஷெட்டில் நாங்கள் எல்லோரும் அமர்ந்து அவரவர்கள் கொண்டு வந்த காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, பள்ளிக்கூடத்திற்கு பஸ் மூலம் வந்து இறங்கிய படுகு பையன்கள் குழாம், ஷெட் கதவு வழியே எட்டிப் பார்த்து - அங்கே இருந்த  பையன்கள், பெண்கள்  எல்லோரையும் ஒரு நோட்டம் விட்டனர். அவர்கள் என்னையும், விஜயலஷ்மியையும் பார்த்துவிட்டு, " டேய் - நம்ம ஸ்கூலுக்கு சரோஜாதேவியும் அவங்க தம்பியும் வந்திருக்காங்கடா " என்று கூவினார்கள். உடனே அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்த எல்லா பையன்களும் ஓடி வந்து எங்கள் இருவரையும் தரிசித்துச் சென்றனர். விஜயலக்ஷ்மிக்கு ஒரே பெருமை. எல்லோரிடமும் படுகு பையன்கள் தன்னை சரோஜாதேவி என்று கூறினார்கள் என்று பல நாட்கள் சொல்லிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். 

(# டவுட்டு : சரோஜாதேவிக்கு தம்பி உண்டா? கூகிள் செய்து பார்த்தால், அவருக்கு கௌதம் ஹர்ஷா  என்ற மகன் உண்டு என்று ஒரு தளத்திலும், கௌதம் அவருடைய பேரன் என்று விக்கிப்பீடியா தளத்திலும் காணப்படுகிறது!! அம்பேல் !!) 

ஒருநாள் காலை முதல் பயங்கர மழை பெய்துகொண்டிருந்தது. ரெயின் கோட் அணிந்து, எல்லோரும் குளிரில் நடுங்கியபடியே வேன் ஷெட் வந்து சேர்ந்தோம். வேன் ஓட்டுநர் வருவதற்கு லேட் ஆகிவிட்டது. அவர் வந்தபிறகு ,நாங்கள் இவ்வளவு கனத்த மழை பெய்து வருவதால், ஒருவேளை பள்ளிக்கூடம் லீவு விட்டிருப்பார்கள்  என்ற நப்பாசையுடன், அரை மனதாக  வேனில் பயணம் செய்து பள்ளிக்கூடத்தை லேட் ஆக சென்று அடைந்தோம். 

மேலேயிருந்து பார்த்தால், பள்ளிக்கூடம் லீவு விட்டதாக தெரியவில்லை. நாம் வந்தது லேட். இந்த மழையில் நனைந்தவாறு படிகள் இறங்கி செல்வதா அல்லது வேன் வரவில்லை என்று சொல்லி எல்லோரும் திரும்பி வந்துவிடலாமா என்று நாங்கள் எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது முத்தையன்  கிடு கிடுவென இறங்கி விடு விடுவென வகுப்புக்குச் சென்றுவிட்டார். ( அவர் பையன்களில் சீனியர் ) அவர் அப்படிச் செய்ததால், நாங்கள் இனிமேல் வேன் வரவில்லை என்று பொய் சொல்ல இயலாது என்ற நிலை! எல்லோரும் முத்தையனை மனதுக்குள் சபித்தபடி அவரவர் வகுப்புகளுக்குப் போகவேண்டியதாயிற்று. 

முத்தையன் செய்தது சரியா? 

= = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

குற்றம் பார்க்கின்

அம்மாவுக்கு எதேனும் பழமொழியையோ பழம்பாடல்களையோ மேற்கோள் காட்டாமல் பேச வராது. 

நன்னூல், ஏலாதி, நாலடியார் போன்ற நூல்களிலிருந்து வரிகளை சந்தர்ப்பத்துக்கு தக்கவிதம் சேர்த்துச் சொல்வாள். ஔவையாரின் பாடல்களிலிருந்தும்

வரிகளை அறிவுரைப் போலச் சொல்லுவாள்.

பள்ளி நாட்களில் ஒரு சொந்தக்காரரின்  வீட்டுக்கு என்னிடம் பட்சணம் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் இல்லத்துக்குப் போனபோது , அவர்களின் பாராமுகம் என்னை வருத்தியது. 

‘இனிமேல் என்னை அங்கு அனுப்பாதேம்மா!’ என்று அம்மாவிடம் குமுறினேன்.

என் ரோஷத்தை அம்மா ரசிக்கவே செய்தாள். என் தன்மானத்துக்கு ஒத்தடம் தருவதுபோல் ஔவையைக் கூட்டி வந்தாள்.

‘மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று

மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு 

கூடுதல் கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநா

கோடாமை கோடி பெறும்’

என்று அம்மா முடித்தாள்.  

என் கோபத்தை மறந்தேன்.

கையோடு அந்த வரிகளை மீண்டும் சொல்லச்சொல்லி எழுதிக் கொண்டேன். 

இதையெல்லாம் அப்பா மௌனமாய் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்பாவின் அருகே வந்து “ஏன் நைனா சிரிக்கிறே?”என வினவினேன்.

“உங்க அம்மா நாளைக்கே அவுங்க வீட்டுக்குத் திரும்ப போகச்சொன்னா என்ன பண்ணுவே?”

“அம்மா மதியாதார்… பாட்டுச் சொன்னதை இப்ப நீ கேட்டே தானே நைனா?“

"அப்போது வேறே சொல்லி உன்னை ஊக்கப்படுத்தி உங்கம்மா அனுப்புவா “

“அப்படி என்ன அம்மா வேறே சொல்லிவிடப் போறா?”

“குற்றம் பார்க்கின் சுற்றமில்லைடா" என்பாள்.

அம்மாவிடம் இதுபற்றி மேலும் பேசலாம் என சமையலறைக்குள் போனேன். 

‘தாமரை பூத்த தடாகமடி’ பாட்டை சன்னமாகப் பாடியபடி அம்மா வாழைக்காயை அருவாமணையில் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா வேணும்?”என ஏறிட்டுப் பார்த்துக் கேட்டாள்.

“இந்த ‘தாமரைப்பூத்த’ பாட்டு வரிகளை அப்புறமா எனக்குச் சொல்லும்மா. எழுதிக்கிறேன்” என்றேன்.

அப்பா பிழைத்துப் போகட்டும்!

வால்:

நான் தான் எழுதினேன்.  நானே தான்.  நித்தியானந்தா மேல் சத்தியம் போடவா?

சரி, மண்டபம்னே வச்சுக்குவோம். யார் எழுதிக் கொடுத்திருப்பாங்க? 

துப்பு தரவா? ராகத்தின் பெயரையொட்டிய பலவண்ணப் பதிவர் எழுதியது. என்ன ராகம்னு கேட்டா இரண்டாவது க்ளூ. தமிழில் இவர் பெயர் தழுவிய  ராகத்தை முல்லைப்பண் என்பார்கள். 

வௌவால்:

ஆரம்பத்துல ஏலாதின்றார் பாருங்க.. ஏதோ வாசனை சமாசாரம்னு நினைச்சேன்.  அது பதினெண்கீழ் கணக்குனு சங்க இலக்கிய நூலாம். அம்புட்டும் வெண்பாவாம். 

இதையெல்லாம் நான் கேள்விப்பட்டது கூட இல்லே.. இலக்கியத்துலயே கணக்கா? ஜூட். நான் ஏன் இந்த மாதிரியெல்லாம்  எழுதறேன்?

= = = = = =

80 கருத்துகள்:

  1. நீலாவுக்கு நிறைஞ்ச மனசா?? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா பட்டா சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலாவுக்கு குறைஞ்ச வயசுன்னா ஒத்துப்பீங்களா?!  (கொஞ்ச வயசுன்னு சொல்ல வந்தேன் ஆனால் கொஞ்சவுல வேற அர்த்தம் வந்துடும்!)

      நீக்கு
  2. பதில்கள்
    1. மற்றவற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, முதலில் சினிமா படத்தலைப்புக்குப் பிறர் எழுதுவதற்குள் எழுதுவோம்னு நினைத்து சட்னு பதிவு செய்தேன். சில வினாடிகள் ஆயிருந்தாலும்.....

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆமாம்! சூப்பர் ஹிட் படம்! பிரபல நடிகர் யாரும் நடிக்காத படம்!

      நீக்கு
    2. ராஜசேகர் நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா ஜோடி (தெலுகு டப்)

      நீக்கு
  4. தெலுங்கைத் தாய் மொழியாக்க் கொண்டிருந்தால் நைனா என்றா உபயோகிப்பர்? பிற்காலத்தில் முடிந்த அளவு அம்மாவுக்குத் திருப்பிச் செய்ய இயன்றதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை 'அவரிடம்'ன்னா கேட்கணும்?!  ஆனா நலலாவே பார்த்துக்க முடிஞ்சது அந்த டி எம் .எஸ் ரசிகரால...

      நீக்கு
    2. நெல்லைக்கு ஒரு பலே
      ஸ்ரீராமுக்கு ஒரு பலே

      நீக்கு
  5. பக்ருதீன் அல அஹமது இறந்தபோது பாதியில் பள்ளி விடுமுறை விட்டதும் (தாளவாடியில் நான் படித்துக்கொண்டிருந்தபோது) அப்படிப்பட்ட லீவு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒன்றோ இரண்டோ முத்தையா இருப்பார்கள்.
    குரோம்பேட்டை அரசினர் பள்ளியில் ஜெயலலிதா என்று ஒரு மாணவி படித்தார். (கொள்ளை அழகு. எனக்கு ரொம்ம்ம்ம்ப சீனியர்) நியூ காலனியில் தொர்சானி பங்களா என்ற பழங்கால வீட்டில் நிழலான செயல்கள் நடக்கும். எங்கள் ஆறாம் வகுப்பு கீத்துக் கொட்டகை அந்த பங்களாவுக்கு ரொம்ப பக்கம். எங்கள் வகுப்பைத் தாண்டி கதவு ஜன்னல் வைத்த கட்டிடத்தில் பத்தாம் பதினொன்றாம் வகுப்புகள். (அப்போதெல்லாம் எஸ்எஸ்எல்சி என்பார்கள்). ஒரு நாள் நான், மணி, இரண்டு பெண்கள் சீக்கிரமே வகுப்புக்கு வந்து பார்த்தால் தரையில் ஒரு சிறிய பணப்பை. ஆயிரம் ரூபாயாவது இருக்கும். நிச்சயம் தொர்சானி பங்களா சமாசாரம் - யாரோ ஏதோ கசமுசாவில் அவசரமாக பணத்தை விட்டுப் போயிருக்கிறார்கள். எல்லோரும் சமமாக பங்கிட்டு கொள்வது என்று பயத்திலும் அவசரத்திலும் முடிவெடுத்தோம். அந்த சமயம் பார்த்து வந்த ஜெயலலிதா நேரே தன் கட்டிட வகுப்புக்குள் போக வேண்டியது தானே? எங்களையெல்லாம் "இதெல்லாம் தப்பு" என்ற கோபப்பார்வையில் அடக்கி பணப்பையை எடுத்துக் கொண்டு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போய்விடடார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றிலிருந்து ஜெயலலிதா என்றாலே வெறுப்பு வந்துவிட்டதா!

      நீக்கு
    2. ஜெயலலிதான்னா என்ன சும்மாவா!
      தொர்சானி பங்களா நிழல்லே மறைஞ்சு ஓடுன ஆளு பேருகூட ஏதோ நிதின்னு முடியும்ல....

      நீக்கு
    3. அப்பாதுரை குறிப்பிட்டுள்ள தொர்சானி பங்களா நியூகாலனி பக்கம் என்றால் அது altaf house என்று பெயரிடப்பட்ட பங்களா என்று நினைக்கிறேன். அது க்ரோம் லெதர் கம்பெனி பக்கத்து பங்களா என்றால், என் வீடு இருக்கின்ற நாகப்பா நகரின் ஒன்றாம் நம்பர் வீடு என்று நினைக்கிறேன். அதில் இன்றும் ஆங்கிலோ இந்திய குடும்பம்தான் உள்ளது என்று ஞாபகம். சுதந்திரத்திற்கு முன் க்ரோம் லெதர் கம்பெனி அதிபர் வசித்த வீடு.

      நீக்கு
    4. அப்பாத்துரை சாரின் பழைய பதிவுகளையும் படித்துக்கொண்டிருப்பதால் இந்த சந்தேகம். கொள்ளை அழகு, பிரமாதமாக இருக்கிறார், என்று இவர் மனதில் தோன்றாத நாரீமணிகளை இவர் சந்தித்திருக்கிறாரா?

      நீக்கு
    5. :-) சில பெண்களை பார்த்ததுமே பயந்திருக்கிறேன். சிடு சிடு என்று இருப்பார்கள் காரணமேயில்லாமல்.

      நீக்கு
    6. //அன்றிலிருந்து ஜெயலலிதா என்றாலே வெறுப்பு வந்துவிட்டதா!

      ஜெயலலிதா ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போகிறாப்ல போய் பணப்பையை அபேஸ் பண்ணிக்கிட்டாடா என்று மணியும் நாகஜோதியும் தீர்மானமாக நம்பி நாள் முழுதும் நிறைய திட்டினார்கள். ஹெட்மாஸ்டர் கிட்டே போய் கேட்கவா முடியும்? நான் ஜெ அப்படியெல்லாம் இல்லை என்று வக்காலத்து வாங்கினேன். பத்து வயது.. சென்னைக்கு புதுசு.. தமிழ் வேறே தகராறு.. நான் ரொம்ப சாது அந்த நாட்களில்.

      நீக்கு
    7. altaf house ஆக இருக்கலாம். அந்த தெருவில் போகவே கொஞ்சம் பயமாக இருக்கும்.

      நீக்கு
    8. //அன்றிலிருந்து ஜெயலலிதா என்றாலே வெறுப்பு வந்துவிட்டதா!

      ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போறாப்ல போயி பையை தானே எடுத்துக்கிட்டாடா என்று மணியும் நாகஜோதியும் நாள் முழுதும் ஜெயலலிதாவை திட்டினார்கள், ஹெட்மாஸ்டர் கிட்டே போய் கேட்கவா முடியும்? நான் ஜெயலலிதா அப்படி செய்திருக்க மாட்டாங்கன்னு மரியாதையா மறுத்தேன். பத்து வயது.. சென்னைக்கு புதுசு.. தமிழ் வேறே தகராறு.. அந்த வருடம் நான் பரம சாது.

      நீக்கு
    9. ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போறாப்ல போயி பையை தானே எடுத்துக்கிட்டாடா என்று மணியும் நாகஜோதியும் நாள் முழுதும் ஜெயலலிதாவை திட்டினார்கள், ஹெட்மாஸ்டர் கிட்டே போய் கேட்கவா முடியும்? நான் ஜெயலலிதா அப்படி செய்திருக்க மாட்டாங்கன்னு மரியாதையா மறுத்தேன். பத்து வயது.. சென்னைக்கு புதுசு.. தமிழ் வேறே தகராறு.. அந்த வருடம் நான் பரம சாது.

      நீக்கு
  7. முத்தையன் படிப்பில் என்னை மாதிரி போல.... விடுமுறை எடுக்காத ரகம்.

    பதிலளிநீக்கு
  8. துரை,

    'நைனா'வா? ஒரு 'திடுக்'.

    ரொம்ப வருஷம் தாண்டி
    'தாமரை பூத்த தடாகமடி'யை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். இந்தப் பாடலில் தண்டபாணி தேசிகர் விளையாடுவார்.
    காருகுறிச்சி நாதஸ்வரத்திலோ தேனாய் ஒழுகும்.
    நினைவுகள் அழிவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. ..அம்மாவுக்கு எதேனும் பழமொழியையோ பழம்பாடல்களையோ மேற்கோள் காட்டாமல் பேச வராது. //

    இப்படியெல்லாம் அம்மா கிடைப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பாலகுமாரன் அவர் அம்மாவைப் பற்றி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வந்தது. பலர் வீடுகளில் அம்மா என்றொரு ஜென்மம் இல்லாவிட்டால் பலர் வீட்டை விட்டு ஓடியிருப்பார்களோ?

      நீக்கு
    2. சரியே. மகன் தாய்க்காற்றும் உதவி ஏதும் உண்டோ?

      நீக்கு
  10. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராமும் நெல்லையும் கண்டுபிடிச்சாப்ல தெரியுது.
    மண்டபத்துக்காரர் யார்னு குறிப்பிட்டு யாராவது சொல்றாங்களானு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  12. படக் கேள்விகளும் அதற்கான கருத்துக்களும் கண்டோம். நமக்கு படக் கேள்விகள் கேட்டால் ?? பாஸ் எடுப்பதே கஷ்டம். :)

    பதிலளிநீக்கு
  13. படக் கேள்விகளும் அதற்கான கருத்துக்களும் கண்டோம். நமக்கு படக் கேள்விகள் கேட்டால் ?? பாஸ் எடுப்பதே கஷ்டம். :)

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பதிவு சிறப்பு என்பதற்கு அழகாக வெளியாகி இருக்கும் கருத்துரைகளே சாட்சி..

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை ஐயா அவர்களது பகுதி சிறப்பு..

    பதிலளிநீக்கு
  16. யாருட்டயும் சொல்றாதீங்கண்ணோவ்!..

    முத்தையன் செஞ்சது தப்புத் தானுங்கோ!..

    பதிலளிநீக்கு
  17. இன்றைய் பதிவு மிக அருமை.
    முத்தையன் அவர்கள் எடுத்த முடிவு விடுமுறை எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றம்.

    'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை ''என் அம்மாவும் அடிக்கடி சொல்லும் வார்த்தை. //கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

    கூடுதல் கோடி பெறும்//
    இதையும் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் உடன் பிறந்தோர் என்று சொல்வார்கள்.

    உறவுகள் செய்யும் சில பாரபட்சங்களை அம்மாவிடம் சொன்னால் அம்மா சொல்லும் வார்த்தை. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை.

    பதிலளிநீக்கு
  18. மண்டபத்துக்காரர் மோகன்ஜி. வானவில் மனிதர். (http://vanavilmanithan.blogspot.com/)
    சரியாக யூகித்தவர்களுக்கு ஒரு சபாஷ்.
    சேர்க்க அனுமதித்த (எங்கள் அண்ணன், வருங்கால முதல்வர், தானைத் தலைவர், சனாதன சிற்பி!) மோகன்ஜிக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு வாசகத்துடன் காத்திருந்தேன் கமெண்ட் போட..

      மைக் இல்லாமலே பாட்டு கேட்கும் "காதலெனும் பொன்வீதியில்..."

      நீக்கு
  19. சரோஜாதேவியோட தம்பி யாருனு அடுத்து யாராவது கண்டுபிடித்து சொன்னா நல்ல இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) சரோஜாதேவியின் பேத்தி என் வீட்டில் கேர் டேக்கராக பணிபுரிகிறார்.

      நீக்கு
  20. முகநூலில் மோகன் ஜி எழுதி இருப்பதைப் பல முறைகள் படிச்சேன், ஆகவே யூகம் செய்வது பிரச்னையாக இல்லை, ஆனால் அதுக்குள்ளே எல்லோரும் சொல்லிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  21. மாணவர்களைப் பொறுத்தவரை முத்தையன் செய்தது தப்பாய் இருக்கலாம். ஆனால் அவர் செய்தது மிகச் சரியானது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!