திங்கள், 4 செப்டம்பர், 2023

"திங்க"க்கிழமை  :  பஜ்ஜி மிளகாய்த் தொக்கு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 பஜ்ஜி மிளகாய்த் தொக்கு 

தேவையான பொருள்கள்:


பஜ்ஜி மிளகாய்    - 6

பச்சை மிளகாய்  - 2

புளி                           - சிறு எலுமிச்சம்பழம் அளவு 

உப்பு                        - 1 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்       -  இரண்டு சிட்டிகை 

தாளிக்க:

நல்லெண்ணெய்   - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு                          - 1/4/ டீ ஸ்பூன்

வெல்லம்(optional) - ஒரு சிறு துண்டு  

செய்முறை:புளியை வெந்நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 

பஜ்ஜி மிளகாயையும், பச்சை8 மிளகாயையும் காம்பு ஆய்ந்து விட்டு பொடியாக அரிந்து  கொள்ளவும். 

ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அரிந்து வைத்திருக்கும் மிளகாயை போட்டு வதக்கி எடுத்துக் கொண்டு, அது ஆறியதும் மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அது காய்ந்ததும் கடுகை போட்டு வெடிக்க விட்டு, புளி கரைசலை சேர்த்து, மஞ்சள் பொடி ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி வாசனை போகும் வரை கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை சேர்த்து கெட்டியாகும்வரை கிளறி இறக்கினால் சுவையான மிளகாய்த்தொக்கு ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு அருமையான சைட்  டிஷ்!

பஜ்ஜி மிளகாயில் காரம் அதிகம் இருக்காது அதற்காகத்தான் பச்சை மிளகாய் சேர்ப்பது. காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டாம். அதே போல வெல்லமும் காரம் அதிகம் தேவையில்லை என்பவர்களுக்காகத் தான். புளிப்பு, இனிப்பு, காரம் மூன்றும் சேர்வது ஒரு தனி சுவை.  நல்லெண்ணையில் தாளிப்பதும் காரத்தை கட்டுப்படுத்தும். 

புளி கரைசல் கெட்டியாக கரைப்பது கஷ்டமாக இருந்தால், பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே எப்போதும் போல தீர்க்க கரைத்து வைத்து விடவும். பதினைந்து நிமிடங்களில் தெளிந்து விடும். மேலாக இருக்கும் தண்ணீரை கொட்டி விட்டால் கெட்டியான புளிச்சாறு கிடைத்து விடும்.


26 கருத்துகள்:

 1. பச்சைமிளகாய் அல்வாவையும் நினைவூட்டியது. சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சை மிளகாய் அல்வாவா..??!! கேள்விப் பட்டதே இல்லையே..? முடிந்தால் பகிருங்கள். கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. செய்முறை விளக்கம் சுலபமாக இருக்கிறது பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுலபம்தான். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நன்றி.

   நீக்கு
 3. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. /// புளிப்பு, இனிப்பு, காரம் மூன்றும் சேர்வது ஒரு தனி சுவை. ///

  ஓராண்டுக்கு மேல் ஆகின்றது இம்மூன்றையும் வீட்டுச் சமையலில் ஒதுக்கி வைத்து!..

  தவிர்க்க முடியாமல் - உறவினர் வீட்டில், உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அவஸ்தைப்படுவது குறுநாவல் மாதிரி..

  ஒவ்வாமைக்காக
  சித்த மருத்துவமும் தொடர்கின்றது..

  ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்ய அபிவிருத்தி சித்தியர்த்தம் பஜே பரமேஸ்வரம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஓராண்டுக்கு மேல் ஆகின்றது இம்மூன்றையும் வீட்டுச் சமையலில் ஒதுக்கி வைத்து!..// இந்த மூன்றும் சுவைகளில் பிரதானமாயிற்றே? இவை இல்லாமல் எப்படி சாப்பிடுகிறீர்கள்? விரைவில் எல்லா சுவைகளையும் சுவைக்க இறைவன் அருளட்டும்.

   நீக்கு
  2. தங்களது பிரார்த்தனைக்கு
   நன்றியம்மா..

   நீக்கு
  3. எந்தப் பிறவியிலோ எவருடைய உணவையோ நான் கெடுத்திருக்கின்றேன்..

   அதனால் தான் இப்போது இப்படி!..

   சிவ சிவ..

   நீக்கு
  4. வீட்டுச் சமையலில் அரை உப்பு மட்டுமே!..

   நீக்கு
  5. எனக்கும் வயித்தில் எப்போதும் தொந்திரவு தான். ஆயுர்வேதத்தில் ஒரு மாத்திரை காப்சூல் கொடுத்திருக்காங்க. அதைச் சாப்பிடும் முன்னால் போட்டுக் கொண்டு சாப்பிட்டால் தொந்திரவு இல்லை.

   நீக்கு
 5. அக்கா சூப்பர் ரெசிப்பி. காரம் கம்மியாதான் இருக்கும் நீங்க சொல்லிருப்பது போல். பஜ்ஜி மிளகாய் நல்ல சுவையாக இருக்கும் இதற்கு. மற்ற மிளகாயை விட. பஜ்ஜி மிளகாய்க்குத் தனி மணம்.

  கூடவே டிப்ஸ் சூப்பர்.

  ஆமாம் தோசை இட்லிக்கும் நல்ல கோம்போ. கூடவே ப்ரெட் சப்பாத்திக்கும்.

  ஃப்ரைட் ரைஸில் பஜ்ஜி மிளகாய் நீளமாக வெட்டி சேர்த்தால் அது தனி மணம் சுவை கொடுக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. என் சம்பந்தி(பெண்ணின் மாமியார்) செய்வார். அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டது.

   நீக்கு
 6. அதென்னமோ தெரியலை, ஒரு வாரமாக சுரதா வேலை செய்யலை! :(கலப்பையோ சரியாக உழவு செய்வதில்லை. :(

  பதிலளிநீக்கு
 7. பஜ்ஜி மிளகாய் இங்கே காரமோ காரம். பஜ்ஜியே போடமுடியாமல் வேலை செய்யும் பெண்ணீடம் கேட்டுக் கொண்டு கொடுத்தேன். சாதாரணப் பச்சை மிளகாயில் அடிக்கடி தொக்கு போடுவேன். பஜ்ஜி மிளகாயில் போட்டது இல்லை. அதோடு இந்த மாதிரிப் புளீ கரைத்துக் கொதிக்க வைச்சுப் பண்ணவும் இல்லை. ஒரு தரம் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பாருங்கள். பஜ்ஜி மிளகாய் இங்கே காரமோ காரம்.// கலப்பாக இருக்குமோ? வெளிநாடுகளில் கிடைக்கும் ஆலபினோ என்னும் மிளகாயில் காரம் இருக்காது. ஒரு முறை என் மகள் பிசாவில் அதைச் சேர்த்திருந்தாள். என் பேத்திக்கு கிடைத்த பிசாவில் இருந்த ஆலபினோ ஒரே காரம். அவள் ஹா ஹா என்று தவிக்க, நடிக்கிறாளோ என்று வாங்கி டேஸ்ட் பார்த்தேன். நிஜமாகவே காரம்தான். இப்படியும் சில சமயங்களில் நடக்கும் போல.

   நீக்கு
  2. வெண்மை நிற பஜ்ஜி மிளகாய் தான் இங்கே கிடைக்கும். கடையில் கூட பஜ்ஜி வாங்குவதே இல்லை. காரம் அவ்வளவு தூக்கல்.

   நீக்கு
 8. பஜ்ஜி மிளகாய்த் தொக்கு செய்முறை , மற்றும் படங்கள் அருமை.
  நான் சதா பச்சை மிளகாயில் செய்து இருக்கிறேன்.
  பஜ்ஜி மிளகாயில் செய்தது இல்லை, செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. கருத்துக்கு நன்றி.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. இன்றைக்கு என்னுடைய சமையல் குறிப்பு என்பது மறந்து விட்டது. வந்து கருத்து கூறியவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!