புதன், 27 செப்டம்பர், 2023

டிராயர் நழுவிய தருணம் . . .

 

கீதா சாம்பசிவம்: 

1)  ம்ம்ம்ம் என்ன பதில் சொல்லப் போறீங்கனு தெரியலை, இந்தப் பஞ்சாங்கங்கள் வாக்யம்/திருக்கணிதம் என இருவகைகளில் இருப்பது ஏன்?

# கிரக சஞ்சாரம் இப்படித்தான் என்று முன்பே கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருப்பதை அடிப்படையாக வைத்து நாள் நட்சத்திரம் லக்னம் ஆகியவற்றை நிர்ணயித்து வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறின்றி ஒவ்வொன்றையும் ஆண்டுதோறும்  கணக்கிட்டு சொல்வது திருக் கணித பஞ்சாங்கம். எனவே சில மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

2. எதை நாம் மூலப் பஞ்சாங்கமாக வைச்சுக்கணும்? ஏனெனில் இந்த வருஷம் இரண்டு சாமவேத ஆவணி அவிட்டம், இரண்டு பிள்ளையார் சதுர்த்தி! நாங்க வாக்யப் பஞ்சாங்கம் என்பதால் அதைப் பின்பற்றினோம். ஆனால் திருக்கணிதம் தான் சரி என்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

# ஒவ்வொரு குடும்பத்திலும் எது வாடிக்கையோ அதைப் பயன் படுத்துவார்கள். 

3. கிரகங்கள் மாறுவது கூட இரண்டிலும் வேறுபடுவது ஏன்? எது சரியானது?

# ஜோசியம் என்பதே ஒரு ஊகம்.  எனவே (கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு) நமக்குப் பிடித்ததை மேற்கொள்ளலாம். 

4. எங்க பேத்தி அப்புவுக்கு வாக்யப் பஞ்சாங்கப்படி சுவாதி நக்ஷத்திரம்/துலா ராசி. திருக்கணிதப்படி எங்க பெண் ஆன்லைனில் பார்த்தப்போ விசாக நக்ஷத்திரம் துலா ராசி என வந்திருக்கு. இதனால் ஜாதக பலன்களில்/குண நலன்களில் மாற்றம் ஏற்படுமா?

# ஜாதகம், ஜோசியம் பற்றி எதிர் எதிரான கருத்துக்கள் உள்ளன. எது சரி எது சரி இல்லை என்று தீர்மானமாக சொல்ல இயலாது.

நெல்லைத்தமிழன் : 

1. ரப்பர் அரிசி, ரப்பர் கேரட்னுலாம்  நிறைய நியூஸ் வருதே... ரப்பரில் எப்படி இதெல்லாம் செய்து ஒரிஜினல் போல விற்க முடியும்?   

# ரப்பர் போல எதோ ஒரு பொருள் என்று இருக்குமோ என்னவோ ? உதாரணமாக பலாப்பிசின்.

& அதெல்லாம் - சும்மா கட்டுக் கதைகள். பிளாஸ்டிக் அரிசி பற்றி என் அனுபவத்தை, பின்னர் விரிவாக சொல்கிறேன். உண்மையில் ஒரிஜினல் அரிசி, ஒரிஜினல் கேரட் விட பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் கேரட் எல்லாம் செய்தால் அதன் விலை பத்து மடங்கு அதிகம் இருக்கும். 

2.  அப்பாதுரை சார் தளத்தில் உள்ள பல கதைகள் மாதிரி, இன்னொரு ஆங்கிலக் கதையைப் படித்துவிட்டு, தமிழ் சூழலில் எழுதுபவர்களையும்,  இயற்கையாகவே கற்பனையில்  உதித்ததை கதையாக எழுதுபவர்களையும் ஒரே தட்டில் எழுத்தாளர்கள் என்று வைக்க முடியுமா?   

# வேற்று மொழிக் கதையால் ஈர்க்கப்பட்டு, அதே மாதிரி சொந்த மொழியில் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும். காண்டேகர் மராத்தி நாவல்களை கா. ஶ்ரீ.ஶ்ரீ சிறப்பாக தமிழ்ப் படுத்தி இருக்கிறார். இவர்களை ஒரு படி கீழே என்று சொல்ல மனம் வராது. 

3.  உலகமயமாகிவிட்டது,  யாரும் எங்கும் சென்று படிக்கலாம், வேலைபார்க்கலாம் என்ற நிலைமை வந்தாலும், நம் பசங்க நம்முடன் கடைசி காலத்தில் இருக்கணும் என்று நினைப்பது இந்திய மனோபாவம் மட்டும்தானா? இல்லை வேறு நாட்டிலும் இத்தகைய எதிர்பார்ப்புகள் உண்டா?

# வேறு நாட்டு மனோபாவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.  ஆனால் தம் ஆசை மகன் / மகள் தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை இயற்கையானது அல்லவா ?

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

கலப்புத் திருமணங்கள் அதிகரித்தால் ஜாதி ஒழிந்து விடுமா?

# ஒரு கலப்புத் திருமணம் நடந்தால், குறைந்த பட்சம் அந்த இரண்டு குடும்பத்துக்குக் கிடையில் ஜாதி குறித்த துவேஷ உணர்வுகள் குறையலாம் அல்லவா ? அந்த அடிப்படையில் கலப்பு மணங்கள் வரவேற்கத் தக்கவைதான்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பொழுது ஏன் இறங்குமுகமாக(count down) எண்ணுகிறார்கள்?

# " இன்னும் எவ்வளவு நேரத்தில் கிளம்ப வேண்டும் ? " என்றுதானே கவனிக்க வேண்டும்?

ஸ்டண்ட் நடிகர்களும், மெல்லிசை பாடகர்களும் தலைமுடியை விதம் விதமாக வைத்துக் கொள்வதற்கு என்ன காரணம்?

# ஸ்டண்ட் நடிகர்கள் ரவுடி லுக் தரவேண்டும். மெல்லிசை பாடகர்கள் "வித்தியாசமாக" இருக்க வேண்டும். எனவே தலைமுடியில் விருப்பப்படும் உருவம் எளிதில் கொண்டு வர முடிகிறது.

& எல்லாம் நம் நினைவில் இடம்பிடிக்கத்தான்! 

பெண்கள் சந்தித்துக் கொள்ளும் பொழுது "புடவை நன்றாக இருக்கிறது", நெக்லெஸ் ரொம்ப அழகா இருக்கு, எங்கே வாங்கினீர்கள்?" என்றெல்லாம் விசாரிப்பது போல ஆண்கள் செய்வதுண்டா?

# " புது சட்டையா " என்று கேட்பது நினைவில் இருக்கிறது. ஆனாலும் பெண்கள் அளவு இந்த மாதிரி விசாரிப்புகளில்  முனைப்பு கிடையாது. அழகுணர்ச்சி பெண்களின் தனி உரிமை.

& எது புதுசு, எது பழசு, போன வருடம் வாங்கியவை என்ன நிறம், என்ன விலை, பார்ட்டிக்கு வந்த பெண்மணிகள் என்ன நிற உடைகள், என்ன நகைகள் போட்டிருந்தனர் என்பது எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்வதில் பெண்களை மிஞ்சுவதற்கு ஆண்களால் முடியாது. எதுவும் நினைவில் இருப்பது இல்லை என்பதால், எதையும் 'புதுசா?' என்று விஜாரிப்பதும் இல்லை! 

= = = = = =

KGG பக்கம் : 

நான் படித்தது ஆறாம் வகுப்பு A பிரிவு (National High School, Nagapattinam) Rhymes சொல்வதற்கு ஆண்டு விழாவுக்காக ஆறாம் வகுப்பு A, B & C பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நான்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். 

பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு ரைம் சொல்லிக் கொடுத்திருந்தனர். 

A பிரிவிற்கு, 

Pussy cat, pussy cat, where have you been?
I've been to London to visit/look at/see the Queen.
Pussy cat, pussy cat, what did you do there?
I frightened a little mouse under her chair. 
( இந்த நான்கு வரிகளையுமே இரண்டு முறை சொல்லவேண்டும்) 

B பிரிவிற்கு 

Hickory dickory dock.
The mouse ran up the clock.
The clock struck one,
The mouse ran down,
Hickory dickory dock.

Hickory dickory dock.
The mouse ran up the clock.
The clock struck two,
The mouse ran down,
Hickory dickory dock.

C பிரிவிற்கு 

Ten green bottles sitting on the wall,

Ten green bottles sitting on the wall,

And if one green bottle should accidentally fall,

There'll be nine green bottles sitting on the wall.

இப்படி ஆரம்பித்து, countdown ஒன்று வரை போகும். 

டிராயரை எப்பொழுதும் இடது கையால் பிடித்து வைததிருக்கும் எனக்கு வந்த சோதனை இதுதான்: 

எல்லோரும் ஒரே நேரத்தில் கோரஸ் பாடவேண்டும் என்பதால், ரைம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், தாளக்கட்டோடு பாடவேண்டும் என்றார். நால்வரையும், இடது கையை விரித்து நிமிர்த்து வைத்து, இடது கை உள்ளங்கையில் வலது கை ஆட்காட்டி விரல் + நடு விரலால் ஒரு வினாடிக்கு இரண்டு தட்டுகள் தட்டியபடி  பாடவேண்டும் என்றார். 

தாளம் போட இடது கையை கொஞ்சம் நகர்த்தினால் கூட டிராயர் நழுவி கீழே விழுந்துவிடும் நிலை. பயிற்சி வகுப்புகளில் இடது முழங்கையால் டிராயரை அமுக்கி வைத்துக்கொண்டு, வலது கை விரல்களால், தாளம் போட்டு பாடி சமாளித்தேன். 

ஒருநாள், மேற்பார்வை பார்க்க வந்த ஆசிரியர், "கையை ஏன் இடுப்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தாளம் போடுகிறாய்? மத்த பசங்களைப் போல மார்புக்கு நேரே வைத்துக்கொண்டு தாளம் போடு" என்று சொல்லி, என் கைகள் இரண்டையும் பிடித்து மேலே தூக்கினார். 

அவ்வளவுதான். 'எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்' என்பது போல அடுத்த நொடி, என் டிராயர் நழுவிக் கீழே விழுந்துவிட்டது! 

அந்த ஆசிரியரே அவசரமாக என்னுடைய டிராயரை திரும்ப மேலே ஏற்றிவிட்டு, ' ஓஹோ? இதுதான் சமாச்சாரமா" என்று கேட்டார். " ஆமாம்" என்றேன். 

பிறகு அவர் எங்களிடம், " ஆண்டு விழா அன்றைக்கு நீங்கள் எல்லோருமே வெள்ளை டிராயர், வெள்ளை சட்டை அணிந்து வரவேண்டும். ( என்னிடம் மட்டும்) வெள்ளை டிராயர் எல்லா பட்டன்களும் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்" என்றார். 

வீட்டிற்கு வந்தவுடன், எங்கள் வீட்டின் 'பொக்கிஷப் பெட்டி'யைத் திறந்தேன். அது ஒரு பெரிய கள்ளிப்பெட்டி. அதில்தான், எங்கள் பரம்பரையினர் அணிந்த பழைய, சிறிதாகிப் போன, சாயம் போன, உடைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். அதில் இருந்த உடைகள் எல்லாவற்றையும் கவிழ்த்துப் போட்டு, ஒன்றரை டஜன் டிராயர்களை ஆராய்ந்ததில், இரண்டு வெள்ளை டிராயர்கள் கிடைத்தன. 

ஒன்றில் பின் பக்கம் 'போஸ்ட் பாக்ஸ்' கிழிசல். அநேகமாக சிறிய அண்ணனின் டிராயராக இருக்கும். அதை விடுத்து மற்றதைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், இது கொஞ்சம் ஓவர். சைஸ். பெரிய அண்ணனின் டிராயர் என்று நினைக்கிறேன். 

இந்த டிராயரை எடுத்து, அதற்கு X வடிவில், மேலே நாடா வைத்துத் தைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தோம். 

வீட்டில் இருந்த எல்லா பையன்களுக்கும் அந்த வருடம் தீபாவளிக்கு அதிர்ஷ்ட வசமாக வெள்ளை சட்டைதான். ( அப்பா ஜெ மு சாமி ஜவுளிக் கடையில் ஆடிட்டர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு புதுக் கணக்குத் துவங்குவதற்கு முன்பு OS என்ற அடைமொழியுடன் - அதாவது old stock - சில துணி வகைகள், கடை சிப்பந்திகளுக்கு இலவசமாக அல்லது சலுகை விலையில் வழங்கப்படும். அப்படி வந்த OS அந்த வருடம் வெள்ளை சட்டைத் துணி!) 

(நழுவி விழாத)  வெள்ளை டிராயர் தயார், வெள்ளை சட்டை தயார். 

ஆனால் .. ஆண்டு விழாவில் .. மேலும் ஒரு திடுக்கிடும் திருப்பம் .. அது என்ன? 

( தொடரும்) 

= = = = = = 

அப்பாதுரை (அனுப்பிய மோகன்ஜி ) பக்கம் : 

நவராத்ரி வேட்டை

(சித்திரம்: அன்பு நண்பன் தேவா)

“அகிலாண்டம் மாமி! இன்னிக்கி என்ன சுண்டல்?”

“உள்ளே வா மோகி! கொண்டக்கடலை சுண்டல் தான்!”

“அய்யே! இன்னிக்கும் கொண்டக்கடலையா? நீங்களே கொட்டிக்கோங்க!”

“ அடக் கடங்காரா ! நாளைக்கு கமகமன்னு மல்லாட்ட உண்டை பண்ணப் போறேன். இப்போ வந்து கட்டபொம்மு வசனம் பேசிட்டுப் போ மோகி!”

“கொண்டைக் கடலைக்கெல்லாம் கட்டபொம்மன் கேக்குதா? புதுப் பாளையத்துலேயிருந்து உங்க அக்கா பொண்ணு எப்போ வருவா?”

“ ஞாயித்துக்கிழமை தான் அவாளெல்லாம் வருவா. அவளோட உனக்கென்ன சிநேகம் படவா?! அவளும் மோகி மோகிங்கறா? அஞ்சாம் கிளாஸ்லயே ஆரம்பிச்சிட்டியா  ரவிச்சந்த்ரன் காஞ்சனா மாதிரி? ருக்மணி மாமிகிட்ட சொல்றேன்”

‘சொன்னா சொல்லிக்கோ.

சொம்பெடுத்து மாட்டிக்கோ.

ஜெயிலுக்குள்ள பூந்துக்கோ.

செருப்படி வாங்கிக்கோ’

என்ற என் எதிர்வினை கேட்பதற்குமுன் மாமி உள்ளே போய்விட்டாள்.

“மோகி! இங்க தான் இருக்கியா? வீட்டுக்கு வா! உன்னோட ‘ரவுடி ரமேஷ்’ டிராமா இன்னைக்குப் போடலாம்னியே? மறந்துட்டியா? நம்ம ஜமா ஆறுபேர் அப்படியே ரெடியா இருக்கா! வா!”என்றபடி வந்தாள் என் சிநேகிதி சந்திரா.

“போ சந்திரா! பத்து நிமிஷத்துல வரேன்” வீட்டுக்குப் போய் ரமேஷ் கதாபாத்திரத்துக்கான ‘பென்ஹர்’ மஞ்சள் பனியன் ,கருப்பு பேண்ட் மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

‘ரௌடி ரமேஷ்’ நாடகத்தின் எழுத்து, இயக்கம், கதாநாயகன் எல்லாம் நான் தான். ஒரு ஓபனிங் சாங் கூட எழுதி டியூன் போட்டிருந்தேன். கிச்சா அதை அழகாகப்  பிராக்டீஸ்  செய்து பாடக் கத்துகிட்டான். 

‘உலகமடா! இது உலகமடா!

தீயவர்களின் வாழ்விடம்!

திருடர்களின் இருப்பிடம்! 

மலரைப்போல பூத்திருந்த

எங்கள் வாழ்விலே....

புகுந்து விட்ட மடையனடா! அவன் மடையனடா....’

பாட்டை எழுதும்போது கடைசி இரண்டுவரியை சந்திராதான் சேர்த்தாள். கிச்சாவுக்கு அது பிடிக்கவில்லை. எனக்கும்தான். ஆனால் அவை சந்திராவோட வரிகள். அவளை மனசு கஷ்டப்பட வைக்க விரும்பவில்லை. 

சந்திராவை விட்டால் சரஸ்வதி வேடம் போட யாரிருக்கா? என் முந்தைய நாடகம் “சரஸ்வதி பண்ணிய கொழுக்கட்டை”. 

நல்லா நினைவிருக்கு. ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு அதை எழுதினேன்.  சரஸ்வதி தேவி செய்த கொழுக்கட்டையைப் பற்றிய ஏதோ கதை. நாடகத்தில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்லாம் கூட இருந்தது. 

சந்திராதான் மெயின் ரோல். நான் பிரம்ம தேவன். அட்டையில் நாலு மண்டை வெட்டத்தான் கஷ்டப் பட்டேன். 

இரண்டு மாதங்களுக்குமுன் அந்த நாடகத்தைப் போடும்போது வரைந்த அட்டை நசுங்கி கிழிந்து விட்டது. இன்னொன்றை தயார்செய்யும் வரை இருக்கட்டும் என்று புதிதாக எழுதிய நாடகந்தான் ‘ரௌடி ரமேஷ்’

சந்திரா வீட்டுக்குப் போனேன். நாடகம் போட்டோம். சந்திராவோட பாட்டி எல்லோருக்கும் ஒரு தொன்னை கொடுத்தாள். 

அதிலேயும் கொண்டைக்கடலை சுண்டல். அதில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு தேங்காய்ப் பல்லை மட்டும் வாயில் போட்டுக் கொண்டேன்.

“எப்படி இருக்கு சுண்டல் மோகி?”

“நல்லாருக்கு பாட்டி”

“நான்தான்டா தேங்காவை குட்டிகுட்டியா வெட்டிக் குடுத்தேன். இல்லயா பாட்டி?”என்றாள் சந்திரா.

“ஆமாண்டி ராஜாத்தி!” என்று அவளை அணைத்துக் கொண்டாள் அவள் பாட்டி.

“வரோம் பாட்டி”

“டிராமா நல்லாத் தான் இருக்கு. ஆனா அந்தப் பாட்டு வேணாண்டா. நல்ல நாளும் அதுவுமா தீயவர், திருடர்னு ... “ என்றபடி பாட்டி உள்ளே போனாள்.

சந்திரா இடைமறித்தாள். “ஆமாண்டா.. புதுசா பாட்டு எழுது. ஆனா நான் எழுதின அந்த கடைசி இரண்டு வரியை மட்டும் வச்சிக்கோ.”

“சரிடி....” நானும் கிச்சாவும் மட்டும் கிளம்பினோம். 

கிச்சா புலம்பிக் கொண்டே வந்தான். “வேஸ்ட் மோகி ! சந்திராவோட பாட்டியானால் ஒரு தொன்னை சுண்டல் கொடுத்துட்டு, அதை மாத்து இதை மாத்துன்னு... இந்தப் பாட்டை மூணுநாள் கஷ்டப்பட்டு பாடி இப்பதான் எனக்கு வசமாயிருக்கு.. அவளோட வரியை மட்டும் வச்சுக்கணுமாம். “

“விடுடா கிச்சா! அடுத்த டிராமாவை அந்தப் பாட்டியைக் கிண்டல் பண்ணி எழுதலாமா?”

“கரெக்ட்டுடா! செய்யலாம். “ கிச்சா குஷியாகி விட்டான்.

எனக்கு கொண்டைக்கடலை சுண்டல் பிடிக்காது. கிச்சாவுக்கு சந்திராவைப் பிடிக்காது.

= = = = =


73 கருத்துகள்:

 1. நேற்று இன்று நாளை என்பது போன்று mission அடிப்படையில் ராக்கெட் ஏவப்படுகிறது. ராக்கெட் ஏவுதற்கு முன், ஏவுதல், ஏவப்பட்டபின் என்ற காலத்திட்டங்களின் அடிப்படையில் சோதனைகள், செயல்கள் தீர்மானிக்கப்பட்டு அதைச் செயாலாக்குவதற்கு count down பயன் படுகிறது. பூஜ்யம் என்ற இலக்கை அடைந்த பின்பும் (ராக்கெட் ஏவுதல) count up தொடரும்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. "உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் அது இல்லை" என்பது போன்று கேள்விகள் உண்டு என்றால் நிறைய உண்டு, இல்லை என்றால் ஒன்றும் இல்லை என்றாகி விடுகிறது. ஆகவே கிடைக்கும் எல்லா கேள்விகளையும் சேகரித்து வாரத்திற்கு இத்தனை என்று பதில் அளிக்கலாம் என்பது ஒரு யோசனை. எப்படி?

  பதிலளிநீக்கு
 4. அந்தப் பக்கம் பக்கத்து பெஞ்ச் பத்மா!..

  பதிலளிநீக்கு
 5. //அப்பாதுரை சார் தளத்தில் உள்ள பல கதைகள் மாதிரி, இன்னொரு ஆங்கிலக் கதையைப் படித்துவிட்டு, தமிழ் சூழலில் எழுதுபவர்களையும், இயற்கையாகவே கற்பனையில் உதித்ததை கதையாக எழுதுபவர்களையும் ஒரே தட்டில் எழுத்தாளர்கள் என்று வைக்க முடியுமா?

  ஆ!!

  (சுஜாதாவை பத்தி என்ன நினைக்கிறீங்க?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமரர் சுசாதா கூறியிருக்கிறார் : “ஒவ்வொருவர் எழுத்திலும் உண்மையும் கற்பனையும் கலந்தே இருக்கும். இது உண்மை? எது கற்பனை என்று பிரித்து அறியாத வகையில் எழுதுபவரே சிறந்த படைப்பாளி”.

   இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

   நீக்கு
  2. இன்ஸ்பிரேஷனில் சுஜாதா பலவற்றை எழுதியிருக்கலாம். ஆனால் அப்பாதுரை சார், நிறைய கதைகளை (அவர் தளத்தில் படித்ததுதான்) ஆங்கிலத்திலிருந்து தமிழில், கொஞ்சம் நேட்டிவிட்டியோடு எழுதியிருக்கிறார். அதில் தவறில்லை. என் கேள்வி, இயற்கையாக கற்பனையில் எழுதும் எழுத்தாளர்களும், இன்ஸ்பிரேஷனில் எழுதும் எழுத்தாளர்களும் ஒரே தட்டில் வைக்கப்பட முடியுமா என்பது.

   அதாவது, அட்லி, விஜய் போன்ற டைரக்டர்களும், ஏபி நாகராஜன், பிஆர் பந்துலு போன்றவர்களும் ஒரே மாதிரி எடைபோட இயலுமா? முன்னவர்கள் பல படங்களின் காட்சிகளைக் கொண்டு புதிய படம் எடுப்பவர்கள் ஹி ஹி

   நீக்கு
  3. //அமரர் சுசாதா கூறியிருக்கிறார் :// பெயரை தமிழ்ப் "படுத்த" வேண்டாமே. நாம் சுடாலின் என்று எழுதுவதில்லை அல்லவா? அது அவமரியாதை என்று நினைக்கிறோம் அல்லவா?

   நீக்கு
  4. சுசாதா இன்ஸபிரேஷனில் எழுதினாரா? அது உங்க அபிப்பிராயமா factஆ?

   நீக்கு
  5. வியாசர் வால்மீகி சேக்குபியர் மட்டுமே எழுத்தாளர்கள் :-)

   நீக்கு
  6. எழுத்தில் ஒரு ஆளுமையைக் காண்பித்தால் எழுத்தாளர் எனலாம். ஆளுமை ஆளுக்கு ஆள் வேறுபடும் :-)
   எழுத்தின் ஆளுமை அநேகமாக படிப்பவர் மனதில் உருவாகும் தாக்கத்திலிருந்து அளவிடப்படுகிறது என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு புதுமைப்பித்தன் ஒரு எழுத்தாளர் என்கிற என் தராசில் சுஜாதாவுக்கு இடம் கம்மி. (ஒரு காலத்தில் சுசா என் தராசில் நிரம்பி வழிந்தவர்). ஜெமோவுக்கு நேற்று இன்று நாளை என்றைக்குமே இடமே இல்லை (ஜீவி சார் கவனிக்க), ஆனால் சுசாவைப் போல் ஜெமோ போல் எழுத்தாளர் கிடையவே கிடையாது என்ற பரவலான கருத்தும் ஏற்கப்பட வேண்டியதே. காரணம், வாசிப்பவர் கருத்தில் எழுத்தின் ஆளுமை உணரப்படுவதால்.

   (சுவாரசிய உரையாடல் வாய்ப்புக்கு நன்றி நெல்லை)

   நீக்கு
  7. ஆஹா! ஜெ.மோ. பத்தி உங்க கருத்துக்கு நான் ஜிங் சக்க ஜிங் சக்க ஜிங்! @அப்பாதுரை!

   நீக்கு
  8. //எழுத்தில் ஒரு ஆளுமையைக் காண்பித்தால்// - இது ஒரு நல்ல பாயிண்ட். உங்க எழுத்து ஈர்க்கும்படியான, எழுத்து. நீங்க வெறும்ன தமிழ்ப்படுத்தி (நேட்டிவிட்டியாக) மாத்திரம் எழுதவில்லை, அதில் உங்க knowledgeஐயும் காண்பிக்கிறீங்க. படிக்கறவங்க மனதிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்து.

   நமக்குப் பிடித்த எழுத்தாளர் என்பது ஆளைப் பொறுத்தது அல்லவா? (படிக்கும் ஆளைப்). Schindler's list போன்ற படங்களெல்லாம் எனக்கு ரசிப்பதில்லை, நான் ஜுராஸிக் பார்க்....ஜெயிலர் போன்ற படங்களின் ரசிகன். ஜெமோ நல்லா அறிவுஜீவித்தனமாக எழுதறார், ஆனால் எழுதறார் எழுதறார்..... பத்து சாண்டில்யன் அளவு எழுதறார். அப்போ கொஞ்சம் நீர்த்துப் போகுதோன்னு எனக்குத் தோணுது. சுஜாதாவின் எழுத்து 'வயதைப் பொறுத்தது'. (படிக்கறவங்களுக்கு பதின்ம).

   நீக்கு
  9. எனக்குத் தோன்றும் கருத்து: சிறந்த எழுத்தாளர் யார் என்று கேட்டால், யார் எழுதியதைப் படிக்கும்போது நம்மால் அதை சுலபமாக picturise செய்ய முடிகிறதோ, அவரே சிறந்த எழுத்தாளர்.

   நீக்கு
  10. //சுஜாதாவின் எழுத்து 'வயதைப் பொறுத்தது'. (படிக்கறவங்களுக்கு பதின்ம).
   absolutely agree. இதை நானும் சொல்ல நினைத்து மறந்து போனேன். சுசா டிஸ்னி எழுத்தாளர் என்று .

   நீக்கு
 6. உளவியல் சாத்திரப்படி அதிக எண்ணிக்கையிலிருந்து தொடங்கி கீழிறங்குவது ஒரு தீர்வான நிலைக்கு வருவதை துரிதப்படுத்துகிறது. ராக்கெட் கிளம்புவது ஒரு தீர்வான நிலை என்பதால் இருக்கலாம். இதே போல் புது வருட துவக்கம் ஒரு உதாரணம்.

  பதிலளிநீக்கு
 7. இந்தப் பக்கம் இந்திரா...

  இல்லீங்க ..

  அது சந்திரா!..

  பதிலளிநீக்கு
 8. சொந்தமும் சுற்றமும் உடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லா நாடு எல்லா கலாச்சாரங்களிலும் உண்டு என்றே தோன்றுகிறது. செயல்பாடு வேறுபடலாம். வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு அருகிலேயே வீடு பார்த்து குடும்பத்துடன் இருப்பது சாதாரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நான் பார்த்தவரை அம்பேரிக்கா, தென் அமெரிக்க நாடுகளீல் கூட்டுக் குடும்பம் இருக்கு.

   நீக்கு
 9. இன்றைய பதிவுக்கான தலைப்பு அந்த நாள் பலான மலையாள பட போஸ்டர்களை நினைவுபடுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 10. இந்திய (சனாதனனு சொன்னா அடிக்க வருவங்களோ?) பஞ்சாங்கம் மூவாயிரம் வருடங்களாக புழக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேற்கத்திய farmers almanac இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடக்கம் அரேபியாவில் என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியப் பஞ்சாங்கம்னே சொல்லலாம். சநாதனப் பஞ்சாங்கம் என்றேல்லாம் இல்லை.

   நீக்கு
 11. ஜாதி குறித்த துவேஷ உணர்வுகள் குறையலாம்.. - என்றாலும் கொயந்தை அப்பன் ஜாதியில் தானே பிறக்கின்றது..

  ஜாதி நஹி ன்னுட்டா என்னென்னவெல்லாம் நடக்குமோ!?...

  பதிலளிநீக்கு
 12. ஐபேடிலிருந்து காலையில் கருத்திட முடியவில்லை.

  கலப்புத் திருமணங்கள் என்பதே பம்மாத்து வேலைதான். (ஆடும் மனுஷனும் கல்யாணம் செய்துகொள்வதுதான் கலப்புத் திருமணம். மனுசங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது சாதிமறுப்பு திருமணம் என்பது பெரியாரின் கருத்து. ஆடுக்குப் பதில் மாடுன்னு சொல்லியிருக்கலாம்)

  பதிலளிநீக்கு
 13. சாதி மறுப்பு திருமணங்கள் என்பதே விதிவிலக்குகளாகத்தான் நடக்கின்றன. பெரும்பாலும் காதல் திருமணங்கள்தாம்.

  காதல் பைத்தியம் தெளிந்ததும், கணவனின் ஜாதியோ இல்லை தன்னுடைய ஜாதியோ, எது உசந்ததோ (சமூகத்தின் கண்ணோட்டத்தில்) அதில் துணை தேடுவாங்க, இல்லைனா கணவனின் ஜாதில. தன்னுடைய பசங்களும் காதல் திருமணம் செய்துகொள்ளலாம்னு வெளில சொல்றவங்க, இந்த தங்கள் ஜாதி அல்லது அதைவிட உசந்த ஜாதில துணை தேடினால் ஏற்றுக்குவாங்க. இல்லைனா தகராறு பண்ணுவாங்க. இதில் விதிவிலக்குகள் உண்டு.

  சாதி மறுப்பு திருமணம் என்பதே ஒரு பம்மாத்து வேலைதான். இதில் சாதி/மதம் ஒழிகிறதா என்ன?

  பதிலளிநீக்கு
 14. வாக்கிய பஞ்சாங்கம் தமிழ் வருட cycle ஒட்டி வருவது. திரிகணித பஞ்சாங்கம் வருடத்துக்கு 365 நாட்கள் என்பதைக் கொண்டு கணிக்கப்படுவது. Traditional josyarகள் வாக்கியப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொள்வாங்க. கணிணி துணை கொண்டு பலன்கள் சொல்பவர்கள் திரிகணித பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொள்வாங்க, கணிணி மென்பொருட்கள் திரிகணித முறைப்படி வருவதால்

  பதிலளிநீக்கு
 15. //ஜோசியம் என்பதே ஒரு ஊகம். // - சாருக்கு சரியான ஜோசியர் கிடைக்கலை போலிருக்கு. ஏமாற்றங்கள் பதிலில் தெரியுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் இதுல எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அதாவது கீதா சாம்பசிவம் மேடம் வந்து, இதற்கு, 'நான் அந்த ஜோசியரை கன்சல்ட் செய்தேன்..அப்படியே நடக்கப் போவதைப் பிட்டுப் பிட்டு வைத்தார், அப்போது வேறொரு ஜோசியர் இன்னொரு ஊரில் அப்படியே அருமையா ஜோசியம் சொன்னார்' என்றெல்லாம் எழுதுவார். நானும் உடனே ஆர்வமாக அவரைத் தொடர்பு கொண்டு, அந்த ஜோசியர்கள் நம்பர் தரமுடியுமா என்று கேட்டால், அடடா.. நான் எழுதினது 1970ல் நடந்ததை, அப்போதே அந்த ஜோசியர்களுக்கு 98,103 வயது இருக்கும் என்பார். ஹா ஹா ஹா

   நீக்கு
  2. அவருடைய கல்யாணத்தைப் பற்றித்தான் கீதா கல்யாணமே வைபோகமே என்ற நூலில் ஜோசியர் கூறியதாய் கூறுவார். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறீர்களா?
   Jayakumar

   நீக்கு
  3. ஆமாம் ஜேகே சார். அதைத் தான் சொல்றார். நிஜம்மாவே அந்த ஜோசியருக்கு அப்போவே 70/80 வயசு இருக்கும். அவரே தனக்குப் பார்த்துக் கொண்டதில் தான் புத்ர சோகத்தை அனுபவிச்சுட்டு விபத்தில் சாவேன் எனச் சொல்லி இருந்தார். அப்படியே நடந்தது. :(74/75) ஆம் ஆண்டில் இது நடந்தது,

   நீக்கு
  4. நாங்க ஊட்டியில் இருந்தப்போ மாமா புஞ்சைப் புளீயம்பட்டியில் ஒரு ஜோதிடரைப் பார்க்க அழைத்துச் சென்றார். அவர் மாமாவுக்கு ரயில் சிநேகம். பெரிய பெரிய அரசியல் வி(யா)திகள்< மந்திரிகளூக்கு ஜோசியம் பார்ப்பாராம். எனக்குப் பார்த்ததில் 50 வயதுக்கு மேல் அதிகமா எழுத்துத் தொழிலில் இருப்பீங்க. பக்தி, ஆன்மிகத்தில் ஈடுபடுவீங்க. ஆன்மிக குருவைச் சந்திப்பீங்கனு எல்லாம் சொன்னார். இஃகி,இஃகி, இஃகினு சிரிச்சுட்டு வந்தால் 2,3 வருடங்களீல் கணீனி கத்துண்டு, 2004 ஆம் வருஷத்தில் இருந்து ஆரம்பிச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக இன்னிக்கு வரை தொடர்கிறது.

   நீக்கு
  5. நெல்லையை எனக்குக் குறந்த பட்சமாக பத்து வருஷங்களூக்குள் தான் தெரியும். எனக்குக்கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்த்த அந்த ஜோசியரோ அப்போவே எங்க அப்பாவை விடப் பெரியவர். அவர் எப்படி நெல்லை கேட்கும்போது உயிருடன் இருந்து ஜோசியம் பார்த்துச் சொல்லுவார்? இந்த லாஜிக் எனக்குப் பிடிபட்டதே இல்லை.

   நீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. K g g பக்கம் சுவாரசியம்.
  நவராத்திரி வேட்டை ...ஹா...

  பதிலளிநீக்கு
 18. மோகன் ஜி பதிவில் எழுதினப்போவும் படிச்சேன். முகநூலிலும். இங்கேயும் ஒரு தரம் அவர் அக்கா நவராத்திரிச் சுண்டல் பண்ணீனதை எழுதி இருந்தார். கண்ணீரே வந்துடுத்து. :(

  பதிலளிநீக்கு
 19. ஜோசியம் பொய்யெனச் சொல்பவர்கள் அவங்களூக்கு நம்பும்படியா ஏதேனும் வந்தால் ஒத்துப்பாங்க. ஆனால் இது ஒரு கணக்கு. வட மாநிலங்களீல் பாடமாக வைச்சிருக்காங்க. எனக்கு என் அலுவலகத் தோழி சொன்னது பலவும் பலிச்சது. ஆனால் யாரிடமும் நானாகப் போய்க் கேட்டதில்லை. இப்போவும் நெல்லை சொன்ன ஜோசியர் (போன் நம்பர் வாங்கினவர்) அவராகத் தான் எனக்குச் சொன்னார். நாங்க போனது வேறே விஷயத்துக்கு. ஆனால் அவர் எனக்கும் சொன்னார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோசியம், அந்த அறிவியல் உண்மை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால் அதை interpret பண்ணறவங்க தவறு பண்ணிடறாங்க. எனக்குப் பல ஜோசியங்கள் பலித்திருக்கின்றன, பரிகாரங்கள் பலித்ததில்லை.

   நீக்கு
 20. கேள்விகளும், பதில்களும் அருமை.

  KGG சார் பக்கம் பள்ளி பருவ நினைவுகள் சுவாரசியம். . அடுத்த திருப்பம் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
  அப்பாதுரை சார் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் மோகன்ஜி அவர்களின்
  நவராத்ரி வேட்டை முன்பே படித்து இருக்கிறேன். மீண்டும் படிக்க சுவாரசியம். தேவா அவர்களின் படமும் அருமை.

  பதிலளிநீக்கு
 21. தேவாவின் சித்திரத்தை ஒரு தடவைக்கு இரண்டு தடவை, மூன்று தடவை எனப் பார்க்கலாம். பாட்டி பாடுவதும், மாமாக்கள் கேஷுவலாகப் பேசிக்கொண்டு பக்கத்துப் பெஞ்சில் உட்கார்ந்திருப்பதும்.. ஆஹா..!

  பதிலளிநீக்கு
 22. நாம் வருந்தி வருந்தி உழைச்சு ஒருத்தருக்குப் பலவிதங்களீலும் உதவிகள் செய்தாலும் அவங்க நம்மிடம் எதிரியாகவே இருப்பதன் காரணம் என்ன?
  நெருங்கிய உறவைக் கூட character assasination பண்ணீப் பெயரைக் கெடுப்பது ஏன்? திடீரெனத் தன்னைப் பத்தி இப்படி எல்லாம் பேச்சு நடந்திருக்கு எனத் தெரியும்போது அந்த அப்பாவிகள் மனம் படும் பாடு அவங்களூக்குப் புரியுமா? இதுக்கு உளவியல் ரீதியாகக் காரணம் உண்டா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!