ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 12

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 12

 

ஹொசஹொலாலு கோவிலின் வெளிப்புறச் சிற்பங்கள் இந்த வாரமும் தொடருகின்றன.
இந்த மாடங்களின் உள்ளே தெய்வ உருவச் சிலைகள் இருந்திருக்கவேண்டும் (வெளிப்புற சந்நிதிகள் போன்று). இப்போது ஒன்றும் இல்லை. (அல்லது வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப் பட்டிருக்கலாம்)

இந்திரன்  சசியுடன் அவனது ஐராவதம் யானை மீது. இப்படிப் பயணித்து வரும்போதுதான் துர்வாச மஹரிஷி கொடுத்த மாலையை அலட்சியமாக யானைமீது போடவும், அது அந்த மாலையை எடுத்து வீசியெறிய, துர்வாசரின் சாபத்துக்குக் காரணமாக அமைந்தது அந்த நிகழ்வு. அதைத்தான் இந்தச் சிற்பம் குறிக்கிறதோ?
கையில் உள்ள சாமரம் எவ்வளவு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது பாருங்கள். ஒரு சிற்பத்துக்கும் அதற்கு அடுத்த சிற்பத்திற்கும் கோணம் (angle) மாறும்போது (கோவில் வெளிப்புறச் சுவற்றின் அமைப்பினால்) அடுத்த சிற்பத்தில் ஆயுதங்கள் தொடர்ச்சியாக வேறு கோணத்தில் அமைந்துள்ளன. சிலைகளின் காலின் அமைப்பும், இடத்திற்குத் தகுந்தவாறு கிடைமட்டமாக அமைக்கப்பட்டுள்ளன

பார்வதி தேவியும் நான்கு கரங்களுடன் (என்ன என்ன வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை)


வெளிப்புறச் சிற்பங்கள் இன்னும் தொடரும் என்பது மாத்திரம் எனக்குத் தெரிகிறது. அடுத்த வாரம் பார்க்கலாம்.


(தொடரும்)  

 

78 கருத்துகள்:

 1. அவர் கழுத்தில் உள்ளது படமெடுக்கும் பாம்பா, பாம்படமா?  அது ஒரு அணிகலன் போல காணப்படுவது போல தோன்றுகிறது.  சாமரத்தின் அழகும் அந்த சிற்பத்தின் நேர்த்தியும் நீங்கள் சொன்ன பிறகு இன்னும் ஊன்றி கவனிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எவர் கழுத்தில் ஸ்ரீராம்?

   நீக்கு
  2. வாங்க ஶ்ரீராம். அது படமெடுக்கும் பாம்பு போலத்தான் எனக்குத் தோன்றியது. பாம்படம் காதில் தொங்கும் அணிகலன். அது இவ்வளவு பெரிதாக இருக்காது.

   நீக்கு
 2. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு. சிமிண்டில் என்றால் சரி.. கல்லில் கூட இந்த சாத்தியப்பாடா? வியப்பு எல்லை மீறுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகள். இந்தக் கோவில் சிற்பங்கள் முடிந்த பிறகு நாம் பார்த்திருந்தால் அவை மிகச் சிறப்பாக இருந்திருக்கும். இல்லையா ஜீவி சார்?

   நீக்கு
 3. இந்திரனின் மனைவி இந்திராணி என்பார்கள்.
  சசி என்ன இந்திரன் செல்லமாகக் கூப்பிடும் பெயரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. we come across numerous names. In Puranas and Vedas, the name of Indra's wife is Sachi, she is also known as Indrani, Aindri and Paulomi. She was the daughter of Aura Puloman. 'Sadh' is a very rare name found in Vedas and she is mentioned as wife of Indra

   n the later Hindu texts, including the epics Ramayana and Mahabharata, as well as the Puranas, Indrani is more commonly referred to as Shachi, and is the daughter of Puloman, an asura (demonic figure) son of the sage Kashyapa and his wife Danu. She married Indra and became the queen of the devas (gods).

   நீக்கு
  2. இந்திராணி என்பது பொதுப் பெயர், பிரதம்மந்திரி என்பதுபோல. அது சரி... யுகம் தோறும் இந்திரன் மாறுவான், ஆனால் ஒரே இந்திராணி என்று படித்த நினைவு இருக்கிறது. இதுபற்றித் தெரியுமா?

   நீக்கு
  3. இந்திராணி பொதுப் பெயர் அல்ல. தனிப் பெயர் தான்.

   இந்திரனின் ராணிக்கு இந்திராணி என்றே அம்சமாக அமைந்த பெயர்.

   இந்திராணிக்கென்றே தனி வழிபாடு கூட உண்டு.

   இந்தப் பகுதியை வாசிக்கும் மகளிர்
   அந்த விசேஷ வழிபாடு பற்றியும் சொல்லலாம்.

   நீக்கு
  4. 'இந்தி ராணி' என்றால் தெலுங்கில் 'இந்தி வரட்டும்' என்று அர்த்தம்.

   நீக்கு
  5. இந் திராணி என்றால் இந்த திராணி...   இந்த பலம், இந்த தைரியம் என்றும் பொருள் கொள்ளலாம்.

   நீக்கு
  6. இந்தியை அரக்கியாக சித்தரித்துக் கார்ட்டூன் போட்ட தினத்தந்தி நினைவில்!

   நீக்கு
 4. சச்சியா இல்லை சசியா என்ற சந்தேகத்தில் தான் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேச்சி என்று சொல்லாமல் இருந்தால் சரி.. ஆனால் அப்படி அழைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் நம்மவர்கள்!

   நீக்கு
  2. சேச்சி சகோதரத்துவம்
   கொஞ்சும் அழைப்பு!

   நீக்கு
  3. சசி என்றுதான் படித்த நினைவு. ஒருவேளை உச்சரிப்பு சச்சியோ? Ie இரண்டாவது ச

   நீக்கு
 5. இந்திரன் பாவம். இந்திராணிக்குத் தான் எத்தனை பெயர்கள்?
  விஷயம் தெரியாதவர்கள் அத்தனை மாற்றுப் பெயர்களையும் தனித்தனியாகக் கணக்கிட்டு விட்டார்கள் போலும். ஆயிரத்தில் ஒருத்தர் இல்லையம்மா நீங்கள்! ஆயிரம் அழகிகளின் பெயர் கொண்டவர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் வீடுகளிலேயே பாஸுக்கு வீட்டில் வைத்த பெயர், பள்ளியில் சேர்க்கும்போது வைக்கும் பெயர், அவர்கள் வீட்டில் அழைக்கும் பெயர், திருமணத்துக்குப் பின் நாம் சுருக்கி (செல்லமாக !) அழைக்கும் பெயர், பாஸின் தோழிகள் அவரை அழைக்கும் பெயர், பொதுவாக வைக்கப்படும் பட்டப்பெயர் என்று ஏராளமான பெயர்கள்  இருக்கும்போது ....

   நீக்கு
  2. ஜீவி சார்... ராஜாவாக இருப்பது பெருமையா இல்லை ராணியாக இருப்பது பெருமையா? மற்றவர்களும் யோசித்துப் பதிலளிக்கலாம்.

   நீக்கு
  3. ரெண்டுமே இல்லை.   ராஜாவும் வேணாம், ராணியும் வேணாம்...  ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி... கயத்துக்கட்டில்ல படுத்து கவலை இல்லாமல் தூங்கறதுதான் பெருமை!

   நீக்கு
  4. ஸ்ரீராம் ஹைஃபைவ். அதேதான்....நமக்கு அந்த லைஃப் எல்லாம் ஒத்தே வராது. ஜாலியா நிலம் முகர்ந்தமா அப்படியே தூங்கினோமா...அம்புட்டுதான். அதை விட்டுட்டு பக்கத்து நாட்டு அரசன் என்ன செய்யறான் எப்ப போர் தொடுக்கலாம், அந்த இளவரசிய கவரலாம் ...ஹூம்

   ஆத்தோரம் மணலெடுத்து - ஆஹா! ரசித்தேன்....மீக்கும் ஒரு இடம் புக் பண்ணிடுங்க!

   கீதா

   நீக்கு
  5. //கயத்துக்கட்டில்ல படுத்து கவலை இல்லாமல் தூங்கறதுதான் பெருமை!// - நல்லாத்தான் இருக்கும், வீட்டில் பெரியவர்களையும், குழந்தைகளையும் மனைவி பார்த்துக்கொண்டு, சமையல் வேலையையும் செய்து, மாமியாரையும் சமாளித்து, தூங்கிவிட்டு ஹாயாக வரும் நமக்கும் சிஷ்ருஷை (இதுக்கு தமிழ்ல என்ன வார்த்தை? உதவியா) செய்து.... ஆமாம்.... அந்த கேடகரி மனைவிகள் இந்த ஜெனெரேஷனில் தென்படறாங்களா? ஹா ஹா ஹா

   நீக்கு
  6. //அதை விட்டுட்டு பக்கத்து நாட்டு அரசன் என்ன செய்யறான் எப்ப போர் தொடுக்கலாம், அந்த இளவரசிய கவரலாம்// - கீதா ரங்கன்.. நமக்கு வெளில இருந்து பார்ப்பதற்கு, பாருடா இந்த அம்பானி பையனை...எவ்வளவு ஜாலியா இருக்கான், கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறான், என்று தோன்றும்.... ஆனால் அவங்க லைஃப் சுலபமானதல்ல. அவங்களுக்கும் நாம் face பண்ணும் அவமானம், மன உளைச்சல், வேலைப்பளு என்று எல்லாமே இருக்கும், ஹெல்த் பிரச்சனைகளோடு

   நீக்கு
 6. வழக்கம் போல தங்களது புகைப்படங்கள் அழகாக இருக்கிறது.

  ஆனாலும் ஒரே படங்களை பார்ப்பது போன்ற உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி. எனக்குக் கிடைத்த அவகாசம் குறைவு. இதில் ஒரு சில சிற்பங்களைத் தேடிக்கொண்டிருந்தேன் (கடலை வாசுகி எனும் பாம்பை மத்தாக்க் கோண்டு கடைந்து, குன்றைக் குடையாக எடுக்கும் கண்ணன் சிற்பம் போன்று சில), அதனால் ஒவ்வொரு சிற்பத்தையும் தனித் தனியாகப் படமெடுக்க இயலவில்லை. அதனால் தொகுப்பைப் படங்களாக இருக்கும்போது, வேறொரு கோணம் என்றாலும் ஏற்கனவே பார்த்த எண்ணம் வருவது இயல்பு.

   நீக்கு
 7. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரும் நலமுடன் இருக்கட்டும்.

   துரை செல்வராஜு சார்... உங்கள் இன்றைய பதிவு அருமை.

   நீக்கு
 8. படங்கள் எல்லாம் அட்டகாசம் நெல்லை, அதிலும் அந்த மாடம் படங்கள் ரொம்ப ஈர்க்கின்றன. ரொம்ப நல்லாருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கடைசி க்ளோசப் வாவ்!!! ரொம்ப அழகு..

  இதுல கூட பார்த்தீங்கனா இடப்புறம் இருக்கும் படத்தில் கால் ஒன்று னேராக மற்றொன்று ஒரு ஆங்கிளில் கிடைமட்டத்தில்...ஆனா இடம் இருக்கு அந்தக் கல்லில் ஆனா அவங்க அப்படித்தான் செதுக்கறாங்க ஏன்னா அப்படி காலை வைக்கறப்ப ஒரு பரதநாட்டிய போஸ் இடை கொஞ்சம் வளைந்து ஒயிலாக....அப்படித்தான் எனக்குத் தோன்றும் ஒவ்வொரு சிற்பமும் பார்க்கறப்ப.

  பரதமும் சிற்பமும் நிறைய மேச் ஆகும் நெல்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா ரங்கன். பரதநாட்டியம் தெரிந்த பெண்கள் போஸ் கொடுத்து அதனை வரைந்துகொண்டு, அதைவைத்துச் செதுக்குவார்கள் என்று நினைக்கிறேன். எத்தனை முகம் தெரியாத கலைஞர்கள் இதற்காக உழைத்தார்களோ

   நீக்கு
 10. பரதமும் கொஞ்சம் கற்றுக் கொண்டதுண்டு அத்தைகளுடன் இருந்தப்ப.... தொடரும் வாய்ப்பு இல்லை....ஆனால் எனக்கே தெரிந்தது அது எனக்குச் சரிவராது என்று....நான் அழகும் கிடையாது. அதாவது பரதநாட்டியத்திற்குத் தேவையான அந்த ஒயில், gracefulness முக Bபாவங்கள், அழகியல் பெண்மைத்தனம் எனக்குச் சுத்தமாகக் கிடையாது!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆனால் ரசிக்கும் மனம் நிறைய உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பரதமும் கொஞ்சம் கற்றுக் கொண்டதுண்டு// நினைக்கவே களேபரமா இருக்கே கீதா ரங்கன் (ஹா ஹா ஹா). இப்போல்லாம் பரத நாட்டியம் ஆடணும்னா, மேடையிலிருந்து கொஞ்சம் துள்ளிக் குதிப்பாங்க, அப்போ மேடை அதிரணும்... அப்படி இருக்கணும் உடல்வாகு (ஹாஹா).

   /ரதநாட்டியத்திற்குத் தேவையான அந்த ஒயில், gracefulness முக Bபாவங்கள், அழகியல் பெண்மைத்தனம் எனக்குச் சுத்தமாகக் கிடையாது// - எல்லாமே அததற்கு உரிய காலத்தில் மாத்திரம்தான் இருக்கும். இப்போ இல்லையேன்னு நினைப்பதே தவறு. அதுவும்தவிர, எல்லாமே எல்லாரிடத்திலும் இருந்தால் அதில் என்ன பெருமை இருக்கும்?

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. ஹொசஹொலாலு கோவிலின் வெளிப்புறச் சிற்பங்கள் அனைத்தும் மிக அருமை. ஒவ்வொன்றையும் தன் தனியாக பெரிது செய்துப்பார்த்தேன், மிகவும் அருமை.

  நர்த்தனமாடும் பார்வதி, கோவர்த்தனகிரிதாரி, நரசிம்மர் , ஆதிமூலமே !என்று அழைத்த போது கருடன் மேல் பறந்து வந்த லக்ஷ்மி நராயாணர் சிற்பம் எல்லாம் அழகு.

  ஐராவதம் யானை துதிகையில் மலர் மாலை இந்திரன் மனைவியுடன் உள்ள சிற்பம் அழகு.

  நாங்களும் வாரம் வாரம் கோவிலை வலம் வருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குமே அந்தச் சிற்பங்கள் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் அப்படிப்பட்ட ஐந்து கோவில்கள் கர்நாடகத்தில் இருக்கின்றன. சென்று பார்த்து இங்கு படங்கள் பகிர்ந்துகொள்வேன்.

   நீங்கள் எப்போதுமே வாராவாரம் கோவிலை வலம் வருவீர்களே.. சாருடன் எத்தனை கோவில்களுக்குச் சென்று பதிவுகள் போட்டிருக்கிறீர்கள்.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 13. சுற்றிலும் போட்டிருக்கும் டிசைன் கூட இப்ப கோலத்தில் போடுவதுண்டு...எளிது. ஆனா கல்லில் எப்படிச் செதுக்கியிருக்காங்க. நான் அப்படி கல்லில் செதுக்கியதை முதன் முதலில் எங்கள் ஊர் கோயிலில் (கோயிலில் இப்படியான ரொம்ப சிற்பங்கள் இல்லை) கூர்ந்து நோக்கும் ஒரு ஸ்டேஜ் வந்தப்ப அட கோலத்துல போடுவது போல இருக்கிற்தே என்று...ஆனால் என்னை அறியாமல் அப்படிப் பார்த்தவை என் மனதில் பதிந்திருக்கிறது அதில் இருந்துதான் கோலத்தில் வந்திருக்குமோ என்றும் நினைத்ததுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலத்தில் முப்பட்டைப் பரிமாணம் கொண்டுவருவது கடினம். ஆனால் கற்களில் அப்படிக் கொண்டுவந்திருக்கிறார்கள். கீழ் வரிசையில் யானைச் சிலைகளைப் பார்த்தால் அவைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முப்பரிமாணச் சிலையாகச் செதுக்கியிருப்பார்கள், இரு பரிமாணமாகச் செதுக்கவில்லை.

   நீக்கு
 14. ஷாரதா சிற்பம், விட்டல் சிற்பங்கள், வேணுகோபாலன் பாருங்க பரத நாட்டிய போஸ். விட்டல் கால்கள் நேராக....

  கீழ நரசிம்மர் போல! யோகா...

  வியப்பு மாடங்களின் கீழ்ப்புறம் சிறிய மடிப்புகளாக படி அமைப்புகள் போல வருவது.

  சில படங்கள் ஒரு ரோஸ் கலர் வருகிறதே...சிற்பங்களில் அப்படி சூரிய ஒளி பட்டு வருதா இல்லை சூரிய ஒளி மொபைல் கேமரா வேலையா...

  அனைத்தும் ரசித்தேன் நெல்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்களின் நிறத்திலும் சிறிது வித்தியாசத்தைப் பார்த்தேன். சூரிய ஒளியும் அந்த வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காண்பிக்கிறது.

   ஒவ்வொரு சிற்பத்தின் பாதங்களும் வித்தியாசம். ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 15. கடைசி படத்தில் பார்வதியின் கையில் ருத்ராட்சம், தாமரை மொட்டு, அப்புறம் பின் பக்கம் இரு புறமும் தேவியின் அது என்ன சொல்வோம் பெயர் தெரியலை....சங்கு சக்கரம் போன்ற தேவிக்கானவை என்று நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஆமாம் கீழே யானைகளும், அந்தச் சிறிய சன்னிதி போல இருப்பதும் சொல்ல வந்தேன் உங்க வரியும் பார்த்துவிட்டேன். அழகில் வியப்பு!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. நெல்லை, கழுத்தில் பாம்பு - இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அது பின்னிய கூந்தல் கருநிற நாகம்....பெண்மையின் இலக்கணம்
  அவளது தேகம், தலையில் சும்மாடு, கையில் கூடை என்று ஒரு அரசவைப் பெண் அல்லது தேவ லோகத்துப் பெண் இந்திர லோலத்து சக்கரவாகம்....

  கவிஞரின் வரிகள் நினைவுக்கு வந்தன. ஊடவே அப்பாதுரை ஜியின் கதையும் நினைவுக்கு வந்தது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. நெல்லை அது கழுத்தில் இருக்கும் பாம்பு அல்ல. பின்னிய கூந்தல்
  கருநிற நாகம்.....பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்...
  தலையில் சும்மாடு, கையில் கூடை என்று அரசவைப் பெண் அல்லது இந்திரலோகத்து பணிப்பெண் ஆனால் இந்திரலோகத்து சக்கரவாகம்!

  கவிஞரின் வரிகள் உடனே நினைவுக்கு வந்தன இதைப் பார்த்ததும். கூடவே அப்பாதுரை ஜியின் கதையும் நினைவுக்கு வந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையில் அந்தக்காலத்து ஹேன்ட்பாகா இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!! ஆனா கூர்ந்து பார்க்கறப்ப தலையில் சும்மாடு இல்லை ஐந்து தலை பாம்பு தலையில்வாலைச் சுருட்டிக் கொண்டு மீதத்தை கீழ தொங்க விட்டிருப்பது போல் இருக்கு ஆனா வால்லயும் படம் எடுக்கறாப்ல இருக்கே!!! ஹாஹாஹா அப்ப ரெண்டு பாம்பு அதை அடைக்கற கூடைதான் இடக்கையில் தொங்குதோ??!! ஆனா எதுக்கு இடது கைய பாம்பு மேல கூடைய பிடிக்கறா மாதிரி வைச்சுக்கணும்? பாப்பா அழுவாத வெயிலா இருக்கா? இந்தா இப்ப மண்டபத்துக்குள்ளாற போயிறலாம்னு தட்டிக் கொடுக்கறாங்களோ??

   கீதா

   நீக்கு
  2. /பின்னிய கூந்தல் கருநிற நாகம்.....பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்..// - இதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்க கேட்டாங்கன்னா..... என்ன வியர்டா எழுதியிருக்காங்க என்று முகத்தைச் சுளிப்பார்கள். ஹா ஹா ஹா

   நீக்கு
  3. தேவியின் ஆறு கரங்களையும் இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப அழகாக இருக்கு இல்லையா?

   நீக்கு
 19. கருத்துரைகள் ரொம்பவே காணாமல் போகுது

  பதிலளிநீக்கு
 20. தற்போது கும்பகோணம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் சமஸ்தானத்தில்!..

  பிறகு வருகின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் நல்ல நேரம்....நிறைய கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது துரை செல்வராஜு சார்... நான் இன்னும் இந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை (காரணம், திவ்யதேச மற்றும் மிகப் பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்)

   நீக்கு
 21. படங்களின் நேர்த்தி கண்ணைக் கவருகிறது. அதே போல் படங்களுக்கான விளக்கமும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இராய செல்லப்பா சார்.... சிலரின் பெயரைப் படித்தாலே நமக்கு அவர்கள் எழுதின பதிவுகள் மனதில் தோன்றும். சென்னையில்தானே இருக்கிறீர்கள்?

   நீக்கு
 22. ஆஆ சனி ஞாயிறு எனில் நேரம் கிடைப்பது குதிரைப் பாலாகவே இருக்கே:) ஹா ஹா ஹா..

  போன கிழமையும் இப்பூடித்தான் திங்கள் வருவோம் என நினைச்சு அப்படியே திறந்தே பார்க்காமல் விட்டு விட்டேன்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு முதலில் ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்கள் தொட்டிலை ஆட்டியபோது கண்ணன் தூங்கிக்கொண்டிருந்தாரா இல்லை தூங்கப்பண்ணுவதற்காக தொட்டிலை ஆட்டினீர்களா? (உங்கள் யூ டியூபில் எனக்கு ரொம்பப் பிடித்தது சமீபத்தில் போட்டிருந்த மதுரா/கோகுலம் விஜயம்தான். ஏனோ அதில் நீங்கள் கோவர்த்தன கிரி பகுதியைச் சேர்க்கவில்லை. சென்றிருந்திருக்கமாட்டீர்கள்)

   நீக்கு
  2. ஓ மதுரா வீடியோத்தான் பிடித்ததா? அப்போ என் காசி, திரிவேணி சங்கம், கஜூராவோ வீடியோக்களைப் போட்டால் என்னா ஜொள்ளுவீங்களோ தெரியல்லியே ஹா ஹா ஹா.

   உண்மையில மதுரா வந்தடைந்தபோது மிகவும் களைச்சுப்போனோம், அதனால வீடியோ எடுக்கும் மூட்டில் நான் இருக்கவில்லை, சும்மா ப்ஓனால்போகுது என எடுத்ததால் அதிகம் எடுக்கவில்லை, அதிலும், நாங்கள் ஹைட் பிடிப்பதால ஒரு பிரச்சனை என்னவெனில், அவர்கள் முன்பே சொல்லி விடுகின்றனர், படம் எடுத்தால் தங்கட வேலைக்கு ஆபத்து, அதனால கமெராவை வைத்துவிட்டு வாங்கோ என, இதனாலேயே சில இடங்களில் ஒளிச்சுக்கூட எடுக்க முடியவில்லை ஹா ஹா ஹா..

   கிருஸ்ணர் பிறந்த ஜெயில் பார்க்கப் போனபோது, அந்த ஹைட் சொன்னார், ஸ்மாட் வோச் கூட கழட்டி வச்சிட்டு வாங்கோ என...

   இல்லை மதுராவில் வேறு எங்கும் போகவில்லை, இந்த கிருஸ்ணர் வளர்ந்த இடம், பிறந்த ஜெயில் இரண்டுமே பார்த்துவிட்டு வந்தோம்.... காசியில் இருந்து தாஜ்மகால்[2ம் தடவையாக] போய் அங்கு ஒரு நைட் தங்கிப்போட்டு, அடுத்த நாள் மதுரா வந்தமையால் எல்லோருக்கும் களைப்போ களைப்பு

   அதனால சுற்றிப்பார்க்க முடியவில்லை. இனிமேல் போனால் மிகுதியைப் பார்த்து வீடியோ எடுத்து வருவேந்தானே:) ஹா ஹா ஹா...

   நீக்கு
  3. //சும்மா ப்ஓனால்போகுது என எடுத்ததால் அதிகம் எடுக்கவில்லை, // மதுரா கோவில் போகும் வழியைத் தவிர, கோவிலுக்குள் கேமரா, செல்ஃபோன் கொண்டுபோகத் தடை. அதனால் உள்ளே படங்கள் எடுக்க இயலாது. அதிலும், கோவிலை ஒட்டி மசூதி வேறு. அதனால் கடுமையான போலீஸ் கண்காணிப்பு.

   மதுரா கோவிலில், ஜெயில் போல வைத்திருப்பார்கள். அங்கு செல்வதே உணர்ச்சிகரமானது. இறைவன் அருளால், அந்தக் கோவிலின் உள்ளே (அதாவது கிருஷ்ணன் சன்னிதி இருக்கும் அந்த ஜெயில் அறை போன்ற இடத்தில்) அரை மணி நேரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   நீக்கு
  4. உண்மையில் கிருஷ்ணர் பிறந்த இடம், அந்த இடத்திலிருந்து 200 அடி தூரத்திலாம். ஆனால் அந்த இடத்தை முஸ்லீம் ஒருவர் வைத்திருக்கிறார். Archiology surveyக்கு அனுமதிக்கவில்லையாம்.

   மதுரா கோவிலில், ஒரு ஸ்டாலில், மினரல் வாட்டர் 10 ரூபாய் என்று விற்பார்கள் (மற்ற இடங்களில் 20 ரூ).

   நீக்கு
 23. சிற்பங்கள் சிலைகள் அனைத்தும் எனக்கு கஜராவோ வைத்தான் நினைவு படுத்துகின்றன, அங்கும் இப்படி அதிகம் நெட் போல தான் பார்ப்பதற்கு சிற்ப வேலைகள் இருந்துது.

  அனைத்தும் பயங்கர அழகு, படத்தில் பார்ப்பதை விட, நேரே சென்றால் பார்த்து முடியாது என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா..நேரே சென்றால் பார்த்து முடியாது.

   கஜுரஹோ சிற்பங்கள் கொஞ்சம் ஏடாகூடம் அல்லவா?

   நீக்கு
  2. இவருக்காகவே கஜீராவோ வீடியோக்களை அப்லோட் பண்ணிடோணும் விரைவில் ஹா ஹா ஹா..

   நீக்கு
 24. இந்த வைரவர், வளமையானவராக இல்லாமல் ஆடை அணிகலன்களோடு பணக்காரராக ஜொலிக்கிறாரே....:)...

  ஊரில் இம்முறை, பல வருடங்களின் பின்.. எங்கள் சின்ன வயதில் கும்பிட்ட வைரவைப் போய்ப் பார்த்தோமே... அந்த நாள் ஞாபகம் அலை மோதியது, மிகவும் கஸ்டமாக இருந்தது..

  ஆனா இப்போ கொஞ்சம் குட்டிக் கோயிலாக மாறி இருக்கிறார், முன்பு ஒரு குளியல் அறைக்குள் இருப்பதைப்போல இருந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப்பற்றிக் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதிரா. நான் பலப் பல வருடங்களுக்குப் பிறகு (30+ வருடங்கள்) நான் வளர்ந்த ஊருக்குச் சென்றால், அங்கு தெரிந்தவர்கள் யாருமே இல்லை. எங்கள் தெருவே புதியவர்கள் இருக்கும் வீடுகளாக இருந்தது. அதைவிடக் கொடுமை, பக்கத்தில் தாமிரவருணி நதிக்குப் போய்ப் பார்த்தால், மணலைக் காணோம், நதியில் செடிகள் மண்டிக்கிடந்தன. ரொம்பவே மனதுக்கு கஷ்டமாகப் போய்விட்டது. ஏதோ புதிய ஊரைப் பார்ப்பதுபோல இருந்தது. ஆனால் கோவில் ரொம்ப சுத்தமாக இருந்தது. முன்பெல்லாம் (நான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது) மாலையில் 6 மணிக்கு 20-30 பேர் கோவிலுக்குச் செல்வோம். இப்போ 1-2 பேர்தான் இருக்கிறார்கள்.

   நீக்கு
  2. இதை எழுதும்போதே, நான் 6,7,8ம் வகுப்பு படித்த ஊருக்கு (மலை கிராமம்) ஓரிரு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தது நினைவுக்கு வருகிறது. நான் (மனைவியுடன்) போயிருந்தபோது கோவிட் நேரம் என்பதால் பள்ளியில் யாருமே இல்லை. அதனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அதைவிட, நான் வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் உள்ளவர்கள், எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்கள். என் வீட்டை என்றேன். எவ்வளவு வருடத்துக்கு முன்னால் இங்கு இருந்தீர்கள் என்று கேட்டதற்கு, 40 வருடங்களுக்கு முன்னால் என்று சொன்னேன்...... ஹா ஹா ஹா. (ஒரு ஞாயிறு பதிவில் இது வரும்)

   நீக்கு
  3. சின்ன வயதில் வாழ்ந்த ஊர், நண்பர்/நண்பிகளைப் பிறகு பார்த்தால் நம்மால் சீரணிக்கவே முடியாது என்பது என் எண்ணம். ஏமாற்றமாக இருக்கும், வாழ்வில் ஏற்றதாழ்வு மற்றும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதால்.

   நீக்கு
  4. ஏஞ்சலினை, வேலைப்பளுவிற்கு மத்தியில் எங்கள் பிளாக்குக்கு எப்போதாவது வந்துபோகச் சொல்லுங்கள் அதிரா.

   நீக்கு
  5. ஆ நெ தமிழன், நீங்கள் எழுதியிருப்பதைப் பார்க்க அப்படியே என் கதைபோலவே இருக்கே... 20 வருடங்களாகிவிட்டது நான் போய், இப்போ போய், சின்ன வயசில படிச்ச பிரைமறி ஸ்கூல் போனோம், ஸ்கூல் கொஞ்சம் அப்படியேதான் இருந்தது ஆனா சுற்றுச் சூழல் எல்லாம் மாறி, நிறைய வீடுகள் கடைகள் வந்துவிட்டது, பக்கத்தில ஒரு குட்டி அம்மன் கோயில் இருந்தது அது இப்போ பெரிய கோபுரத்தோடு மிளிருது.

   ஒரு தாமரைக்குளம் இருந்தது, இப்போ அது மண் மேடாகி அடையாளமே தெரியவில்லை, படித்த பிள்ளைகள் பெயர் சொல்லிக் கேட்டபோது கடை ஒன்றில்... அதில் சிலர் நாட்டுப்பிரச்சனையின் போது இல்லாமல் போய் விட்டதும் தெரிஞ்சது,.

   எங்கட அப்பா , அப்போ பலருக்கு வேலை எடுத்துக் கொடுத்தவர் தன் கொம்பனியில், ஒரு கடையில் கற்பூரம் வாங்கினோம், அப்போ கடைக்காரர் சொன்னார்... ........ ஐயாவின் பிள்ளைகளா அவர்தானே எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் என... இப்படி எல்லாம் கேட்க பழைய நினைவுகள் வந்து கஸ்டமாக இருந்தது. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

   எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கு ஆனா காலம் எங்கேயோ ஓடிவிட்டது...

   நீக்கு
  6. அஞ்சுவுக்கு வேலைப்பழு எல்லாம் இல்லை ஹா ஹா ஹா, அது உண்மையில் ரச்சூஊ விட்டுப் போனால் மனம் வருவதில்லை இதுதான் உண்மை... பார்ப்போம் நான் போஸ்ட் போட்டுத்தான் கூட்டி வரோணும்:))

   நீக்கு
  7. நீங்க சொல்ற ரச்சூஊ - சமையலிலா (அதுக்கு எப்போதுமே ஏஞ்சலினுக்கு டச்சூ கிடையாதே) இல்லை தமிழ் தட்டச்சு செய்வதிலா? இல்லை லேப்டாப்பைத் திறந்து தமிழ் பிளாக்குகளை எழுத்துக்கூட்டிப் படிப்பதிலா?

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!