வியாழன், 28 செப்டம்பர், 2023

இரிடிக் கபூரும் இடிம்பிள் கம்பாடியாவும்...

ஓட்டுநர் சாப்பிடவில்லையே என்று வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தச் சொன்னால் திண்டிவனத்தில் ஆர்ய பவனில் நிறுத்தினார் அருண் - ஓட்டுநர்.  

ஆனால் வினோதம், நாங்கள் கொண்டு போயிருந்த பொடி இட்லியை அவர் சாப்பிட, நாங்கள் கடமைக்கு ஒரு தோசை சாப்பிட்டு கிளம்பினோம்.  ரொம்ப சுமார்.  

பாடம் : பெயரைப் பார்த்து ஏமாறக்கூடாது!

வழியில் தென்பட்ட ஒரு ஹோட்டல்..  'ஹோட்டல் எனக்கு பசிக்கும்ல...'


நான்கரை மணிக்கு ஸ்ரீரங்கம் அடைந்தும்.  நேராக ஹேமா தம்பதியர் இருந்த சத்திரம் சென்று எங்களுக்கு புக் செய்யப்பட்டிருந்த அறையின் சாவியைப் பெற்றுக்கொண்டு வந்து பிரெஷ் ஆகி கிளம்பினோம்.


 எங்களுக்கு சற்று முன்னரே விசேஷத்துக்கு வந்திருந்த எங்கள் நண்பர்கள் (பெண்கள்) குழு ஒன்று  திருவானைக்கா கோவில் சென்றிருப்பதை அறிந்து அவர்களுக்கு அலைபேசினால், 'கூட்டமே இல்லை,  உடனே பார்த்து விட்டு கிளம்பி விட்டோம்.  தஞ்சாவூர் பெரிய கோவில் பார்க்கப் போகிறோம்' என்றனர்.  எனவே நாங்களும் சற்றே தொலைவில் உள்ள திருவானைக்காவை முதலில் முடித்து விடலாம் என்று சென்றோம்.  தஞ்சாவூர் பார்ட்டிக்கு முன்னரே சென்று உதகசாந்தியில் கலந்து கொள்வதாக திட்டம்.  


சீக்கிரம் வந்து விடலாம் என்று பார்த்தால் ஜம்புகேஸ்வரர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க நேரமானது.  சாயங்கால பூஜையோ என்னவோ, நீண்ட நேரம் நிற்க வைத்து விட்டு பிறகு தரிசனம் கிட்டியது.  முன்னால் வந்த எங்கள் குழு கோவில் திறந்ததும் வந்திருக்க வேண்டும்.  மின்விசிறி கூட இல்லாமல் அங்கு வரிசையில் நின்ற அனுபவம் சிரமமானது என்றால், திடீர் திடீரென சிலர் குறுக்கே புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தனர்.  நல்லதொரு மின்விசிறிக்கு அங்கு ஏற்பாடு செய்யலாம். 

குறுகிய இடத்துக்குள் நுழைந்து ஜம்புகேஸ்வரரை தரிசித்து, அங்கு வெளியில் நின்று நம் கையைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளும் ஊழியர் கையில் சிக்காமல் வெளிவந்தோம்.  சுற்றிக்கொண்டு வந்து அன்னை அகிலாண்டஸ்வரியையும் தரிசித்தோம்.  வெளியே அகிலா நின்றிருப்பதைப் பார்த்து செல்லை எடுத்தால், பாகர் புகைப்படம் எடுக்காதே என்று மிரட்ட, செல்லை உள்ளே வைத்து விட்டேன் - நைசாக ஒரு படம் எடுத்தபின்.  


இவர்கள்  ரூல்ஸ் போடுவதை ஜலகண்டேஸ்வரரே ஜம்புகேஸ்வரரே  ரசிக்க மாட்டார், அனுமதிக்க மாட்டார்!

என்னைக் கவர்ந்த பிரம்மாண்ட கோவில்களில் இதுவும் ஒன்று.  மணி இங்கேயே ஏழைத் தாண்ட,  உதகசாந்தி க்கு செல்வதை விட கீதா அக்காவை பார்த்து வந்து விடலாம் என்று கிளம்பினோம்.  அவருக்கு அலைபேசி எங்கள் வருகையையும் தெரியப்படுத்தினோம்.  

ஏற்கெனவே ஒருமுறை சென்ற இடம்தான், ஆனால் ஒன்பது வருடங்களுக்கு முன்!  எனவே கேள்வி கேட்டுக்கொண்டே அக்கா இல்லத்தை அடைந்தோம். மாமாவும் கீதா அக்காவும் வரவேற்றனர்.  அக்காவுக்கு என் சார்பில் ஒரு புத்தகம் பரிசளித்தேன்.  அக்கா பாஸுக்கு வெள்ளியில் ஒரு தட்டு பரிசளித்தார்.


எட்டு வருடங்களுக்கு பிறகு மாமாவையும், அக்காவையும் பார்த்தது, பேசியது சந்தோஷம் தந்தது.  அவர் வீட்டு ஹாலில் நின்று பார்த்தால் ஜன்னல் வழியே ஸ்ரீரங்கம் கோபுரம் தெரிந்தது.  மொட்டை மாடிக்கு மறுபடி சென்று பார்க்க ஆசைதான்.  சென்ற நேரம் அனுமதிக்கவில்லை.  தோழி வீட்டு விசேஷத்துக்கு வந்து விட்டு இப்படி ஊர் சுற்றுவது சரியில்லைதான்.  ஆனால் என்ன செய்வது, இப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற ஊரில், அதுவும் இரட்டை ஊரில், இருந்தால் இப்படிதான்!  அவரும் அதை குறையாக கருதவில்லை என்றே நம்புகிறேன்.

இங்கிருந்து கிளம்பி விழா நடக்குமிடம் சென்று இரவு டின்னர் முடிப்பதாகத்தான் பிளான்.  ஆனால் மணி எட்டை நெருங்கி கொண்டிருந்ததாலும், அக்கா சப்பாத்தி சப்ஜி என்று சொன்னதாலும் கவரப்பட்டு, ஆளுக்கு ஒன்றே ஒன்று சப்பாத்தி ப்ளஸ் சப்ஜி என்று கேட்டுக்கொண்டோம்.

நம் உள்மன  எதிர்பார்ப்புகளுக்கேற்ப வெளியில் நடப்பவை ஒத்துவராது.  சிறுவயதில் கல்கத்தா ரசகுல்லா பற்றி கேள்விப்பட்டபோது அதன் ருசி இப்படிதான் இருக்கும் என்கிற கற்பனை என் மனதில் உருவானது.  ரசகுல்லா பற்றி கேள்விப்பட்டபிறகு அது கை / வாய்க்கு  கிடைக்க நீண்ட காலமானது.  அதுவரை அந்த கற்பனை மனதுள் விரிந்து வளர்ந்து வியாபித்திருந்தது.  ஆனால் ரசகுல்லா கிடைத்தபோது அதன் தோற்றமே நான் கற்பனை செய்தது போலவே இல்லை.  ரசகுல்லா ரசகுல்லாவாகத்தான் இருந்தது.  என் கற்பனையின் எதிர்பார்ப்புதான் வேறாக இருந்திருக்கிறது.

இது போன்ற விஷயங்களில் நம் கற்பனை எப்படி இருந்தது என்பது கடவுளை பற்றி விவரிப்பதை விட சிரமம்.  சிலவற்றை வார்த்தைகளில் கொண்டுவர முடியாது!

அது போலதான் சப்ஜி என்கிற வஸ்து பற்றிய என் கற்பனையும்,  ஏதோ கடலைமாவு அல்லது ஏதோ கிரேவி போல இருக்கும் என்று மனதில் போட்டுக்கொண்டேன்.  எனவே காலிப்ளவர் பொரியல் சப்ஜியாக சப்பாத்திக்கு ஸைட் டிஷ் ஆக அக்கா கொடுத்தபோது ஏமாந்தததில் என் தவறுதான் காரணம்!  நான் நினைத்த மாதிரியும் செய்யலாம் என்றார் அக்கா.  தொட்டுக்கொள்ள எது செய்தாலும் வடநாட்டுகாரர்களைப் பொறுத்தவரை அது சப்ஜிதான் என்றார்.

பிறகு அங்கிருந்து கிளம்பி சத்திரத்துக்கு வந்தோம்.  சத்திரம் என்கிற சொல் பழமையானது.  இப்போதெல்லாம் முன்போல சத்திரங்கள் கிடையாது.  90 % ஹால்கள்தான்!  பழைய பழக்கத்தில் சத்திரம் என்றே சொல்லி பழகி விட்டது சத்திரம் என்பதற்கும் இன்றைய ஹால்களுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்!  ஆனாலும் நமக்கு கல்யாண சத்திரம் என்று சொல்லியே பழகி விட்டது.

நாங்கள் வந்த சமயம்  உதகசாந்தி முடிந்து தம்பதியரே சாப்பிடச் சென்றிருக்க, தஞ்சாவூர் பார்ட்டி இன்னும் வரவில்லை.  சாதாரணமாக  உதகசாந்தியில் குருணை உப்புமாவோ, அல்லது இட்லியோதான் செய்வார்கள்.  இங்கு அருமையான ஒரு டிஃபன் தந்தார்கள்.  

சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பிய உடன்தான் பயணக்களைப்பு தெரிய ஆரம்பித்தது.  ஆயினும் அலுவலக தோழிகள் தஞ்சை சென்றவர்கள் வர, அவர்கள் என்னைவிட பாஸுக்கு அதிக நண்பர்கள் என்பதால் அவர்கள் அரட்டை நள்ளிரவு வரை நீண்டது.  சிறிய அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டு மிக மெதுவாக ஓடும் மின் விசிறி இருக்க, வேலை செய்யாத ஏ சி மெஷின் கடுப்பேற்ற ஒரு வழியாய் தூங்கத்தொடங்கினோம்!  ஓட்டுனருக்கு நான் பிற ஓட்டுனர்கள் தங்குமிடத்தில் இடம் ஏற்பாடு செய்து கொடுக்க அவர் அந்த இடம் பிடிக்காமல், 'இடமும் இல்லை, காற்றும் இல்லை' என்று பஸ்ஸ்டேண்டுக்கு அருகில் ஒரு அறை எடுத்து விட்டதாய் அறிவித்தார்.

===========================================================================================================


நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பி வைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத அனுபவத்தில் ஆழ்ந்து கிறங்கத் தொடங்கிவிட்டது: ‘அம்மம்மா... கேளடி தோழி’ (படம்: கறுப்புப்பணம்). ஒரு சூழலின் இதத்தைத் தமது குரலால் ஒருவர், பாடலைக் கேட்பவருக்கும் கடத்திவிட முடியுமா என்ன!
அதுதான் லூர்து மேரி ராஜேஸ்வரி! அப்படிச் சொன்னால் சட்டென்று தெரியாது, ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால் அடுத்த கணம், தனித்துவமான ஓர் இசைக்குரல் ரசிக உள்ளங்களில் ஒலிக்கத் தொடங்கிவிடும். மேடையில் அவ்வளவு எளிதில் அவர் போலப் பாடுதல் செய்ய முடியாத வித்தியாசமான வளமும் வசீகரமும் நிறைந்த குரல் அவருடையது.
தனியாகவும், இணை குரலாக ஆண் பாடகரோடும், பெண் பாடகரோடும் எல்.ஆர்.ஈஸ்வரி இசைத்த திரைப்பாடல்கள் இரவுக்கானவை, பகலுக்கானவை, காலை புலர்தலுக்கானவை, மாலை கவிதலுக்கானவை, எந்தப் பொழுதுக்குமானவை என்று வேதியியல் வினைகளை நிகழ்த்திக்கொண்டே இருந்த காலம், அறுபதுகளும் எழுபதுகளும்!
குழுப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்த தமது அன்னையோடு பாடல்பதிவுகளுக்குச் சென்று கொண்டிருந்தவர், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு, பாடல்கள் வளர்த்த பயணத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘பாச மல’ரின் 'வாராய் என் தோழி வாராயோ' எனும் அசத்தலான பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார்.
‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்), ‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும் பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில் நெய்யப்பட்டிருக்கும். 'குடி மகனே' (வசந்த மாளிகை) பாடலில் ‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும் சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக உயிர்த்தெழும் குரல் அது.
தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங் கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு சேர்க்கவல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும் ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு ஈர்க்கும் 'இது மாலை நேரத்து மயக்கம்' (தரிசனம்) பாடலில் மோக மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார் ஈஸ்வரி. பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க' பாடலில் ஒரு விதம் என்றால், ‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலில் வேறொரு விதமாக உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை' (ராமன் தேடிய சீதை), ‘நாம் ஒருவரை ஒருவர்' (குமரிக்கோட்டம்) பாடல்களை எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா என்ன? யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட முடியும் அவருக்கு! ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை), ‘பட்டத்து ராணி பார்க்கும்' (சிவந்த மண்) என்று அதிரடி பாடலைக் கொடுக்கவும் முடிந்தது. ‘காதோடு தான் நான் பாடுவேன்' (வெள்ளி விழா) என்ற அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால், ‘அடி என்னடி உலகம்' (அவள் ஒரு தொடர்கதை) என்று உரத்துக் கேட்கவும் சாத்தியமாயிற்று.
பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை பாடல்கள் ( ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’). சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும் ஆம்பளையா' (போலீஸ்காரன் மகள்) பாடலின் சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக் குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் ( ‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள் ( ‘கட்டோடு குழலாட’ - பெரிய இடத்துப் பெண், ‘அடி போடி’ - தாமரை நெஞ்சம், ‘தூது செல்ல’ - பச்சை விளக்கு, ‘உனது மலர்க்கொடியிலே’ - பாத காணிக்கை, ‘மலருக்குத் தென்றல்’ - எங்க வீட்டுப் பிள்ளை, ‘கடவுள் தந்த’ - இருமலர்கள்). இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில. டி. எம். சவுந்திரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி இணை குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.
‘கேட்டுக்கோடி உறுமி மேளம்' (பட்டிக்காடா பட்டணமா), 'சிலர் குடிப்பது போலே' (சங்கே முழங்கு), ‘மின்மினியைக் கண்மணியாய்' (கண்ணன் என் காதலன்), ‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்), ‘அவளுக்கென்ன' (சர்வர் சுந்தரம்) என்ற பாடல் வரிசைக்கும் முடிவில்லை. ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.
பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும் பாடல்களுக்கு ( ‘எல்லோரும் பார்க்க' - அவளுக்கென்று ஒரு மனம் ) உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல் ஈஸ்வரியுடையது. ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை ( ‘இனிமை நிறைந்த’, ‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’, ‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, ) அவரால் இலகுவாக வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய 'பாண்டியன் நானிருக்க...' (தில்லானா மோகனாம்பாள்) என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே ஐக்கியமாகிப் போன ஒன்று.
‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’ (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என ஏ.எல்.ராகவனோடு இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின் வேகம். ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே' (நான் அவனில்லை) காதலின் தாகம். ஒரு சாதாரணப் பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'! பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின் பொழிவில் எல். ஆர். ஈஸ்வரியின் குரல் தனித்தும், இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள், ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு மொழியிலும் இன்றும் கொண்டாடப்படுவது அவரின் குரல்.
ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில் வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில் பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும், செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன. கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப் பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண், இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டிருப்பவை. அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப் படித்த நினைவு.
முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர். இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பது வயதுக்கு! அடுத்து நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே இளையான்குடியைச் சேர்ந்த அந்தோணி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதியின் மூத்த மகளாக சென்னையில் பிறந்தார் ஈஸ்வரி. இவருடைய தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக கலை வாழ்க்கையைத் தொடங்கியவர். எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஈஸ்வரி. இளம் வயதிலேயே தந்தையை இழந்த எல்.ஆர்.ஈஸ்வரி தனது குரலால் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
அறுபதுகளின் தமிழ்ப்படங்களில் ‘இங்கிலீஷ்’ பேசும் ஹீரோயின்களை திமிர் பிடித்தவர்களாக காட்டி கொண்டிருந்த வேளைகளில் ,எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்களில் பரவலாக ஆங்கில வார்த்தைகள் இருக்கும் .அதை அவர் உச்சரிக்கும் விதம் ,தமிழ் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து ஆங்கில வார்த்தைகளை ஸ்டைலிஷாக மென்மையாக பாடும் நேர்த்தி இப்பொழுது கேட்டாலும் மனம் விசில் அடிக்கிறது . அப்பொழுது சக பாடகிகளை இவர் பொறாமை பட வைத்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை . எவ்வளவு திறமை அவருக்குள் தான் ! “முத்து குளிக்க வாரியாளா ” என்று தெற்கத்தி தமிழில் காதலனை அழைக்கும்போதும் சரி , ” எலந்தப்பயம் ” என்று வடசென்னை தமிழில் பாடும்போதும் சரி ,இவ்வளவு variations ஐ வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கொண்டு வர முடிந்ததில்லை . I think she is the most underrated singer in tamil .
எம்ஜியாரோ சிவாஜியோ அவர்களின் முகபாவத்தை மிஞ்சிவிடும் டி எம் எஸின் குரல் ,அவ்வளவு கம்பீரம் .பொதுவாக மற்ற பெண் பாடகிகள் குரல் அதன் வீரியத்தை முன் அடங்கியே இருக்கும் .எல் ஆர் ஈஸ்வரியை தவிர .அவரின் குரல் பல நேரங்களில் டி எம் எஸின் குரலை அழகாய் ஓவர்டேக் செய்து நான்காம் கியரில் போய்விடும்
நன்றி: நாகராஜன்
இணையத்தில் இருந்து எடுத்தது

=======================================================================================================

சுஜாதா தான் ரசித்த கவிதைகளாய் சில கவிதைளைக் குறிப்பிட்டிருக்கிறார்.  அவற்றில் இரண்டு..  இது அடுத்த வாரமும் தொடரக்கூடும்.


கார்டு கவர்களில் 
இந்தி எழுத்தை 
நன்றாக அடித்து 
மசியால் மெழுகி 
அஞ்சல் செய்யும் 
தனித்தமிழ் அன்பர் 
'பாபி' பார்த்ததும் 
இரிடிக் கபூரும் 
இடிம்பிள் கம்பாடியாவும் 
(ரகரமும் டகரமும் மொழி 
முதல் வாரா)
அருமையாய் நடித்தனர் 
என்று இந்தியில் 
எழுதினாராம் - ந. ஜெயபாஸ்கரன் 


பயந்து 
அறைக்குள் ஆட்டம் 
போட்டன துவைத்த துணிகள் 


முட்டி முட்டிப் 
பால் குடிக்கின்றன 
நீலக்குழல் விளக்கில் 
வீட்டில் பூச்சிகள் - பாலகுமாரன்

===================================================================================================== 

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன் 

செய்திகள் 28.09.23

- பணியில் இருக்கும்பொழுது இறந்து போனவரின் வேலைக்கு மனு போட அவருடைய சகோதரிக்கு உரிமை கிடையாது ஏனென்றால் அந்த மனிதரின் குடும்பம் என்பதில் அவருடைய மனைவி, மகன், மகள் இவர்கள்தான் இடம் பெறுவார்களேயொழிய சகோதரி அவருடைய குடும்ப உறுப்பினராக மாட்டார். பெங்களூர் நீதிமன்றம் அறிவிப்பு.

 - செல்போனில் தனியாக ஆபாச படம் பார்ப்பது தனிப்பட்ட ரசனை குற்றமாகாது, கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பு.

- உடுப்பியில் விறகு சேகரிக்க வனப் பகுதிக்குச் சென்றவர் வழி தவறி காணாமல் போய் எட்டு நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அதிசயம்.

- மல்யுத்த வீரராக இருந்தவர், பொருளாதார நிலை காரணமாக மூட்டைக் தூக்கும் தொழிலாளியாக மாறியுள்ளார். அரசாங்கம், மற்றும் பொது நிறுவனங்கள் கண்டு கொள்ளவில்லை.

- காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக புர்கா மற்றும் பெண்களின் காலணி அணிந்து பெண்கள் கல்லூரியில் நுழைந்த வாலிபர் பிடிபட்டார் - காதல் கிறுக்கன்.

- குஜராத் ஜாம்நகரில் 19 வயதே ஆன முதலாமாண்டு பொறியியல் மாணவர் கர்பா நடன பயிற்சியின் பொழுது மாரடைப்பால் மரணம். ஒரு வாரத்தில் அதே ஊரில் 45 வயதுக்குள், ஆரோக்கியமான மனிதர்களில் ஐந்து பேர்கள் இப்படி திடீரென்று மரணமடைந்திருக்கிறார்களாம். - கவலைக்கிடம்.

- நதிநீர் பிரச்சனைக்காக ஆஜரான வக்கீல்களுக்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கும் கட்டணம் ரூ.123/-கோடி - ஆவ்!

===============================================================================================================

நான் Face Book ல் பகிர்ந்த சுஜாதாவின் எழுத்து ஒன்றை என் பெயர் போடாமலேயே நான் பகிர்ந்த இரண்டே மணி நேரத்தில் எடுத்து தன் பெயரில் பகிர்ந்தார் என் உறவினர் ஒருவர்.  அவரிடம் சண்டையிட்டு என் பெயரைப் பகிரச் செய்தேன்.  ஜவர்லால் எழுதிய சிலவற்றை அலட்சியமாக காபி செய்து சிலர் தான் ஈழுதியது போல அதே முகநூலின் வேறு பக்கத்தில் பகிர்வதையும் பார்த்து ஜாவ் அருளாளிடமும் சொல்லி இருக்கிறேன்.  இதெல்லாம் சகஜம்!

அந்த வகையில் பல நாட்களுக்கு முன் எங்கள் பைண்டிங் கலெக்ஷனிலிருந்து இந்தப் படத்தை Face Book ழும், இங்கு நம் தளத்திலும் பகிர்ந்திருந்தேன்.  இரண்டு நாட்களுக்கு முன் திருநெல்வேலி என்கிற பக்கத்தில் இந்தப் படம்..  நான் கோணலாய் எடுத்து சரியாய் க்ராப் செய்யாமல் எப்படி வெளியிட்டேனோ அது எனக்கு நினைவிருக்கிறது..  JKC ஸாரும் மெஸெஞ்சரில் இதை எனக்கு அனுப்பி இருந்தார்.  அவரும் இதைப்பற்றிச் சொல்லத்தான் அனுப்பினாரோ, வேறு ஏதாவது சொல்ல வந்தாரோ...


=========================================================================================================

இணையத்தில் ரசித்த படம் 


======================================================================================================


பொக்கிஷம் :  






123 கருத்துகள்:

  1. எம்.வி.வி. எங்கே இங்கே வந்தார் என்று பார்த்தேன்.
    புரிந்தது.

    பதிலளிநீக்கு
  2. பொட்டு வைத்த பூமுகம் யாரோ என்று நினைத்தேன். ஒ.. எல்.ஆர்.--க்கு விரிவு இன்று தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்காமல் படம் மட்டும் முதலில் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்!!!   ஹா..  ஹா..  ஹா..

      நீக்கு
  3. திருவானைக்கா கோபுர தரிசனம் பிரமாதம். அழகாக காமராக்குள் தன்னை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. சுஜாதா ரசித்த முதல் கவிதையில்,
    அன்பர், அன்பார் என்று வந்து விட்டாரோ?

    பதிலளிநீக்கு
  5. - நதிநீர் பிரச்சனைக்காக ஆஜரான வக்கீல்களுக்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கும் கட்டணம் ரூ.123/-கோடி ... //

    எப்படியாவது ஜெயிச்சி ஆட்சியப் பிடிச்சிரணும்னு பிரஷாந்த் கிஷோருக்கு இசுடாலின், சபரீசன் குடுத்த துட்டுக்கு முன்னாடி இதெல்லாம் ஜூஜூபிதானே...!

    பதிலளிநீக்கு
  6. சென்ற செவ்வாய் பகுதி
    பின்னூட்டத்தில் 'எனக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை' என்று ஜெ.
    ஸி. ஸார் சொல்லியிருந்த்தார்.
    பின்னே யார்? அங்கு போய் தெளிவிப்பீராக.

    பதிலளிநீக்கு
  7. பயனக் கட்டுரை ஆனதால் புகைப்படங்கள் நிறைய சேர்க்க முடிந்தது. படங்கள் ஓகே. உதக சாந்தி என்றால் என்ன??

    கவிதைகள் ஈர்க்கவில்லை.

    இப்படி ஆகலாம்.

    ஆட்டம் போட்டன
    அறைக்குள் பயந்து
    துவைத்த துணிகள்.

    நீலக்குழல் விளக்கில்
    முட்டி முட்டி
    பால் குடிக்கின்றன
    விட்டில் பூச்சிகள்.

    இந்தக்காலத்தில் மொக்கை கடி ஜோக்ஸ் செலவாகாது. சும்மா ரசிக்கலாம்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /உதக சாந்தி என்றால் என்ன??// வருணனை பூஜிக்க ஒரு குடத்தில் ஆவாஹனம் செய்து (மந்திரபூர்வமாக), நான்கு அல்லது ஐந்து வேதம் கற்றவர்களை வேதம் ஓதச்செய்து (இது சுமார் 1 மணி-1 1/2 மணி நேரம் ஆகலாம்), பிறகு அந்த குடத்தில் உள்ள மந்த்ரபூர்வமான நீரால், யாருக்காக இது செய்யப்பட்டதோ அவருக்கு நீர் வார்ப்பது உதகசாந்தி. திருமணம் நடந்த அன்று மாலை உதகசாந்தி செய்து, குட நீரால் மணப்பெண் தலைவழியாக விடுவார்கள். உபநயனத்தின்போது பையனுக்கும், அறுபதாம் கல்யாணத்தின்போது மணமக்களுக்கும் என்று நினைவு.

      நீக்கு
    2. நான் முதலில் இதை ருத்ர ஏகாதசி என்று எழுதி இருந்தேன்.  ஹேமாவிடம் சொன்னபோது, "நோ..  நீங்கள் எல்லாம்தான் 'ருத்ர ஏகாதசி' செய்யவேண்டும்.  நாங்கள் உதக சாந்தி"  என்றார்.

      உதகசாந்தி என்பது நெல்லைத்தமிழன் சொல்லியிருப்பபது போலதான்.

      வைணவர்களைத் தவிர மற்றவர்கள் விசேஷத்துக்கு முதல் நாள் ருத்ர ஏகாதசிதான் செய்வார்கள்.  படோறு முறை யஜுர்வேதத்தில் வரும் ருத்ர மந்திரத்தைச் சொல்லி (அப்போது அந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அனைவரும் பதினோரு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்) ஒரு முறை ஹோமம் செய்வார்கள்.

      வைணவர்களும் கூட ருத்ரம் சொல்லும் வழக்கம் உண்டு.  அது அபகாரியத்தில்.

      இதைத்தவிர ஒரு நடைமுறை உண்டு.  அது நாந்தி.  எந்த விசேஷத்துக்கு முன்னும் புண்யாவாஜனம் செய்து நாந்தி செய்வார்கள்.  அதன்பின்தான் மற்ற அடைமுறைகள்.  நாந்தி என்பது நம் பிதுர்க்கலை அழைத்து ஆசி பெறுவது.  நாந்தி செய்யும் வருடம் திதி கூர் செய்யக் கொடுத்து என்றும் சொல்வார்கள்.  ஏனெனில் பித்ருக்களை வருடத்தில் (அவர்களுக்கு ஒரு நாள்) ஒரு நாள் மட்டும்தான் தொந்தரவு செய்யலாம்.

      நீக்கு
  8. அப்பாடி... ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு 'எங்கள்' பாலகுமாரனைப் பார்த்ததில் திருப்தி.

    அந்த 'எங்களில்' நான் ஒருத்தன் என்றால் இன்னொருத்தர் இன்றைய பதிவிலேயே
    இருக்கிறாராக்கும்!!

    பதிலளிநீக்கு
  9. ஒன்று புரியவில்லை எனக்கு. Face book பகிர்தலில் பகிர்கிறவரின் பெயர் தானே பதியப்படும்? உம்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கப்போனால்
      பாவம், வாணி!
      மெளனமாய் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே!

      நீக்கு
    2. ஒருவர் பகிர்ந்ததை காபி செய்து வேறொருவர் அவர் பெயரில் வெளியிட்டால்...?

      நீக்கு
    3. வாணி யார் என்று தெரிகிறதா?

      நீக்கு
    4. அவர் தான் ஒரிஜனல் சொந்தக்காரர். அவத் போட்டதை நீங்கள் உபயோகித்துக் கொண்ட மாதிரி இன்னொருத்தர் உபயோகித்துக் கொள்கிறார். அதில் என்ன ஆட்சேபணை இருக்கிறது உங்களுக்கு? நீங்களே இப்படி பொறும்பும் போது உங்கள் இருவர் மீதும் வாணிக்கு?.. ஒருத்தர் கூட நன்றி -- வாணி என்று குறிப்பிடவில்லை, பாருங்கள். ஹி..ஹி..

      நீக்கு
    5. புரிகிறது நீங்கள் சொல்ல வருவது..  எனினும் நான் சொன்ன உறவினர் எடுத்துக் போட்டது கூட என் சொந்த எழுத்து கிடையாது சுஜாதா எழுதியதாக நான் பகிர்ந்தது.    இருப்பினும்..  சில விஷயங்களை நீளமாக விளக்க முடிவதில்லை!  

      நீக்கு
  10. செல்போன் -- பலான படம் சம்பந்தப்பட்ட தீர்ப்பில் வைரஸால் பாதிக்கப் பட்டால் அவரவரே பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் -- என்ற வரியையும் சேர்த்துக் கொண்டிருக்கலாமோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  11. L.R. ஈஸ்வரி அவர்களைப் பற்றிய தகவல்களில் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும், மனதில் ஒருமுறை பாடினார்...!

    பதிலளிநீக்கு
  12. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. எல்.ஆர். ஈஸ்வரி ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தின் கானதேவதை. அவருக்குக் கொடுக்கவேண்டிய உயரிய மரியாதையைத் தமிழுலகம் தரவில்லை.

    உலகெங்கும் உன்னதக் கலைஞர்கள் சிலருக்கு, இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய்களின் பெயர்களாக வரும் பாடல் கேட்டிருக்கிறீர்களா?  செல்வமகள் படத்தில் என்று நினைவு.

      நீக்கு
    2. லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லுசி ரோஸி ராணி

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. 'ஹோட்டல் எனக்கு பசிக்கும்ல...//
    எப்படியோ உங்களுக்கு பசித்து அநத ஓட்டலுக்கு போய் விட்டீர்கள் தானே!

    திருவானைக்கா கோவில் படங்கள், கீதா சாம்பசிவம் அவர்கள் சந்திப்பு , ஹேமா அவர்கள் மணிவிழா என்ற விவரங்கள் அருமை.

    எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடுவதை இரண்டு தடவை நேரில் கேட்டு இருக்கிறேன். ஆடி கொண்டே பாடுவார் உற்சகமாய் . ‘அம்மம்மா... கேளடி தோழி பாடல் மிக நன்றாக இருக்கும். ஜெயலலிதா அவர்களுக்கு நிறைய படங்களில் இவர் தான் பாடி இருப்பார்.

    இவருடைய பழைய சினிமா பாடல்கள் , பழைய பக்தி பாடல்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எப்படியோ உங்களுக்கு பசித்து அநத ஓட்டலுக்கு போய் விட்டீர்கள் தானே! //

      நான் அந்த ஹோட்டலில் சாப்பிடவில்லை.  நான் சாப்பிட்டது ஆர்யபவன்.  பதிவின் தொடக்கத்தில் சொல்லி இருக்கிறேன்!

      L R ஈஸ்வரி குரல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
  16. சுஜாதா ரசித்த கவிதைகள் பகிர்வு, நகைச்சுவை பகிர்வு , மற்றும் முகநூலில் நீங்கள் பகிர்ந்த நகைச்சுவை பகிர்வை உங்கள் பெயரை குறிப்பிடாமல் போட்டு கொண்ட்டாரா ? அந்த நகைச்சுவை நன்றாக இருக்கிறது. பாத்திரத்தில் என்ன பெயர் அடிக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டு விட்டது நல்ல நகைச்சுவை. பெயர் வெட்டுபவர் சொல்வது கொஞ்சம் ஓவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கிர்வை உங்கள் பெயரை குறிப்பிடாமல் போட்டு கொண்ட்டாரா ? //

      suggested for you என்று Face Book எனக்கு இந்தப் படத்தைக் காட்டியது. உங்களுக்கு நினைவிருக்கலாம். முன்னர் நம் பொக்கிஷம் பகுதியில் இந்தப் படத்தை நான் ஷேர் செய்திருக்கிறேன். பொது வெளியில் பல கை மாறும்போது யார் எதை எடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க, கேட்க முடியாது. எல்லாம் பொது.

      நீக்கு
  17. பதில்கள்
    1. அந்தக் கால சத்திரங்களுக்கு ஒரு தனித்த வடிவம் உண்டு.

      நீக்கு
  18. கானக்குயில் ஈஸ்வரி அவர்களைப் பற்றிய செய்தி அருமை..

    இவரது பாடல்கள் ரசனையானவை..

    வ. மா.. படத்தில் பாடிய சில பாடல்களால் மிகுந்த வருத்தம் ஏற்பட்டது..

    பதிலளிநீக்கு
  19. இந்த மாதிரி வேறொரு தொகுப்பை ஏற்கனவே படித்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  20. கட்டோடு குழலாட ஆட.. - பெரிய இடத்துப் பெண் படப் பாடலும்,

    தூது செல்ல ஒரு.. - பச்சை விளக்கு படப் பாடலும் இலக்கியத் தரமானவை..

    பதிலளிநீக்கு
  21. பிறந்த இடம்
    தேடி நடந்த தென்றலே.. - கேட்டிருக்கின்றீர்களா!..

    பதிலளிநீக்கு
  22. எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பற்றிய பகுதியை ரசித்துப் படித்தேன். ஒவ்வொரு பாடலும் மனதுக்குள் ஓடியது (ஒரு சில பாடல்கள் தவிர... அவை என்ன பாடல் என்று நினைவுக்கு வரவில்லை). அவருடைய திறமை பாராட்டத் தக்கது.

    அவரது பேட்டி ரொம்பவே அனிமேஷன் மாதிரி இருக்கும். இயற்கையாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈஸ்வரி பாடினால் கேட்கலாம்.  சுகம்.  பேச வேண்டாம்.  இளையராஜா இசை அமைத்தால் கேட்கலாம்.  பேச வேண்டாம்!  SPB பாடினாலும், பேசினாலும் கேட்கலாம்.

      நீக்கு
    2. //SPB பாடினாலும், பேசினாலும் கேட்கலாம்.// - அதற்குக் காரணம் பணிவு, நியாயமாகப் பேசுவது. திரையில், கமல் நடித்தால் பார்க்கலாம். பேச வேண்டாம். ரஜினி நடித்தாலும் பேசினாலும் பார்க்கலாம்/கேட்கலாம். ஹா ஹா

      நீக்கு
    3. ரஜினி நடித்தது மூன்றோ நான்கோ படங்கள்தான் என்று சொன்னால் அடிக்க வர மாட்டீர்களே...?!

      நீக்கு
  23. 'மடப்பள்ளி' ரெஸ்டாரெண்டின் பிராஞ்ச் உறையூரில் இருக்கிறது. அதுதான் மிகவும் சூப்பர். மற்றபடி ஸ்ரீரங்கத்தில் உணவுக்கு நல்ல இடம் எதுவுமே இல்லை. ஸ்ரீரங்கத்தில் உள்ள மடப்பள்ளியும் வெகு சுமார், சுத்தம் குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பிக்கையில் மடப்பள்ளீ ரொம்பவே அருமையாக இருந்தது. இப்போ மோசம்.

      நீக்கு
    2. நான் பார்த்ததில்லை. கண்ணில் பட்டால் முயற்சித்திருந்திருக்கலாம். ஆனால் நேரமும் இலை!

      நீக்கு
  24. Camel, for what it is worth - ஹா ஹா.... இதனைப் போட்டவருக்கு ஒட்டகத்தின் மதிப்பு கல்ஃபில் எவ்வளவு என்று தெரியவில்லை போலிருக்கிறது. இன்னொரு காரில் மீது மோதினால், ரிப்பேர் சார்ஜ் மாத்திரம்தான் (ஆள் யாரும் அவுட் ஆகவில்லை என்றால்). சௌதியில் ஒட்டகத்தின் மீது மோதினால், காரக்கிரஹம்தான். மற்ற இடங்களிலும் ஒட்டகத்தின் மதிப்பு மிக மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  25. திருவானைக்கா போனீங்களே... அங்கேயே பார்த்தசாரதி ஹோட்டலில் ஏதேனும் சாப்பிட்டிருக்கலாமே (அப்படியே போட்டோக்களும் எடுத்திருந்தீங்கன்னா இன்னொரு வியாழன் தேத்தியிருக்கலாம் ஹா ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  26. //இரிடிக் கபூரும் இடிம்பிள் கம்பாடியாவும் // ரிஷி என்பதற்கு தமிழில் இருடி அல்லது இரிடி என்பது சரிதான். இருடீகேசன் என்று ரிஷிகேசன் என்ற வார்த்தைக்குத் தமிழில் உள்ளது. கபாடியாவை, லம்பாடி மாதிரி கம்பாடியா என்று ஆக்கிவிட்டீர்களே. இதுல, அவ படத்தை வேற போட்டிருந்தீங்கன்னா அவ்ளோதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என்று ஆக்கிவிட்டீர்களே. //

      நானில்லை. சுஜாதா எடுத்துக் காட்டி இருக்கும் கவிஞர் சொல்லி இருக்கிறார்!

      நீக்கு
  27. திருச்சி சந்திப்பு மகிழ்ச்சி
    "எனக்கு பசிக்கும்லா" அட என் கண்ணில் படவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாண்டிச் செல்லும்போது சட்டென கண்ணில் பட்டு வேகமாய் க்ளிக்கியது!

      நீக்கு
  28. எனக்குப் பசிக்கும்லா எங்க கண்ணீலும் பட்டதில்லை. பொதுவாக நாங்க ஹைவேயில் ஓட்டல்கள் போவதில்லை. போனால் அடையார் ஆனந்த பவன் மட்டும். சென்ற வாரம் போனப்போவும் அங்கே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அந்த ஹோட்டலில் சாப்பிடவில்லை. நாங்கள் சாபபிட்டது ஆர்யபவன். அடையார் ஆனந்தபவன் அலுத்து விட்டது!

      நீக்கு
  29. அது தட்டு இல்லை. அக்ஷதைக் கிண்ணம் அல்லது மதுபர்க்கம், அர்க்யம் ஊத்துவதற்கானது. வரலக்ஷ்மி நோம்பிற்கு வைச்சுக்கலாம்னு கொடுத்தேன். ஆனால் இந்த வருஷம் நோம்பு இல்லை போலவே!:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகச் சொல்லவேண்டி அப்படிச் சொன்னேன்! ஹிஹிஹி...

      நீக்கு
  30. எல்லார் ஈஸ்வரி குறீத்த தகவல்கள் அருமை. அவர் கச்சேரி மதுரையில் நேரில் கேட்டிருக்கேன். கொஞ்சம் அகம்பாவமாகத் தெரிவார்.

    பதிலளிநீக்கு
  31. நியூஸ் ரூமில் பானுமதி எழுதிய முதல் செய்தி எங்க வீட்டிலும் நடந்தது என் கடைசி மைத்துனன் இறந்தப்புறமாக அவருடைய பென்ஷனை என் கடைசி நாத்தனார் விண்ணப்பித்தார். கொஞ்சம் தகராறூக்குப் பின்னர் consolidated payment with yearly20,000 or something கொடுக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இதுதானே அரசு நடைமுறை... இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது!

      நீக்கு
    2. தம்பி பென்ஷன் அக்காவுக்குப் போவது தான். :)

      நீக்கு
  32. உங்கள் பெயரை விட்டுட்டுப் போட்டுக் கொண்டவரை ஒரு பிடி பிடித்திருக்கலாம். சுஜாதாவின் தேர்வு இந்த வாரம் சுமார் ரகம். ஜோக்குகள் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இந்தப் படத்தை நான் வெளியிட்டு மூன்று நான்கு வருடங்கள் இருந்திருக்கும். பிளாக்கில் மற்றும் Face Book ல்.. சுற்றும் சுற்றில் யார் எங்கிருந்து எடுத்தார்களோ! யாருக்குத் தெரியும்!

      நீக்கு
  33. ஹோட்டல் "எனக்குப் ப்சிக்கும்ல..." கில்லர்ஜி இப்ப வித்தியாசமான பெயர் ஹோட்டல்கள் போட்டிருந்தாரே இதையும் சேர்த்துக்குவார் அடுத்து.
    வாயார வாழ்த்தி வயிறார சாப்பிடறபடி இருந்தா நல்லாருக்கும்...

    "உங்க சாப்பாடு எங்களுக்குப் பிடிக்கணும்ல" ந்னு சொல்லிடுங்க, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  34. இவர்கள் ரூல்ஸ் போடுவதை ஜலகண்டேஸ்வரரே ரசிக்க மாட்டார், அனுமதிக்க மாட்டார்!//

    அதே...

    கீதா அக்காவை சந்தித்தது மகிழ்வான விஷயம். சப்ஜி என்பது வட இந்தியாவில் அப்படித்தான் சொல்லுவாங்க பொதுவாவே, அப்ஜி கடை...சப்ஜி வாலா...இப்படி..

    இதுக்குத்தான் ஓப்பன் மைண்ட் முக்கியம்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜம்புகேஸ்வரரேன்னு மாத்திட்டேன். ஓபன் மைண்டா? ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    2. ஆமாம் ல...முதல்ல அப்பறம் ஜம்புன்னு வருது..

      ஆனா திருஆனைக்கா எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் தானே எனக்கு இந்தப் பெயர்தான் நினைவில் எப்பவும். ஒருமுறை போயிருக்கேன்...ரொம்பவும் பிடித்த கோயில். மிகப் பெரிய பழமையான கோயில்.

      கீதா

      நீக்கு
    3. வேலூரில் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர். எல்லாம் தப்புத்தப்பாய்ச் சொல்லிட்டிருக்காங்க. :(

      நீக்கு
  35. எல் ஆர் ஈஸ்வரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. சுஜாதா தேர்ந்தெடுத்த கவிதைகள் - ஹிந்தி - புரியலை...மற்ற இரண்டும் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. குஜராத் ஜாம்நகரில் 19 வயதே ஆன முதலாமாண்டு பொறியியல் மாணவர் கர்பா நடன பயிற்சியின் பொழுது மாரடைப்பால் மரணம். ஒரு வாரத்தில் அதே ஊரில் 45 வயதுக்குள், ஆரோக்கியமான மனிதர்களில் ஐந்து பேர்கள் இப்படி திடீரென்று மரணமடைந்திருக்கிறார்களாம். - கவலைக்கிடம்.//

    அதே...கவலை

    - நதிநீர் பிரச்சனைக்காக ஆஜரான வக்கீல்களுக்கு கர்நாடக அரசு கொடுத்திருக்கும் கட்டணம் ரூ.123/-கோடி - ஆவ்!//

    ஆ!! இன்கம் டாக்ஸ் துறை கண்காணிக்குமா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 கோடி ஊழலுக்காக, 150 கோடி செலவழித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிக்கிட்டிருக்காங்க, இன்னும் ஜாமீன் கிடைத்தபாடில்லை என்றெல்லாம் நான் படிக்கிறேன்.

      நீக்கு
    2. அதானே....நானும் யோசிப்பதுண்டு. இது கூட ஒரு டெக்னிக்கோன்னு...கேஸுக்க்கான செலவுக்குப் பயந்தே யாரும் கேஸ் போடமாட்டாங்களே!!! தப்பிச்சிரலாமே!!!

      கீதா

      நீக்கு
    3. பார்த்தாலே மக்களுக்குப் புரியும் சில விஷயங்களைக் கூட நீதிமன்றங்கள் சாட்சி கேட்டு இழுத்தடிக்கின்றன. ஜனநாயகம்.

      நீக்கு
  38. நான் Face Book ல் பகிர்ந்த சுஜாதாவின் எழுத்து ஒன்றை என் பெயர் போடாமலேயே நான் பகிர்ந்த இரண்டே மணி நேரத்தில் எடுத்து தன் பெயரில் பகிர்ந்தார் என் உறவினர் ஒருவர். //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இதெல்லாம் அநியாயம்.

    எங்கள் தளத்திலிருந்து நான் எழுதிய கதை ஒன்றை எடுத்து முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தாங்க. நான் முகநூலில் இல்லை. ஆனால் பொங்கல் பற்றியோ அது சம்பந்தமாகவோ ஏதோ தேடிய போது கூகுள் காட்டியது. ஆ! என்று அப்புறம் உங்களிடமும் சொல்லி என் கதையின் தேதியும் உங்களுக்குச் சொல்லி. நீங்களும் அங்கு சொல்லி அதை எடுக்க வைச்சீங்க.

    இப்போது அனு பிரேம் அவங்களோட பல வீடியோஸ் கூட இத்தனைக்கும் அவங்க வாட்டர் மார்க் போட்டிருக்காங்க அப்படியும் பகிரப்படுகிறது கர்ட்டசி சொல்லாமலேயேன்னு அவங்க சொன்னாங்க.

    இணையத்தில் பதிவுகள் திருட்டு ரொம்ப சகஜம் போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த உறவினரிடம் போட்ட போடில் அவர் என் பெயரை அதில் இணைத்து விட்டார்.

      நீக்கு
  39. நகைச்சுவைத் துணுக்கு நீங்க பகிர்ந்தது நல்லா நினைவிருக்கு....அதுவும் இப்படியா..!!! ஆ!!! இனி எல்லாத்துக்கும் பூட்டு போட வேண்டியதுதானோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  40. ஒட்டகம்! படம் ரசனையான படம். ஹாஹாஹா நானும் சவாரிக்கு ரெடின்னு பார்க்கிங்க்ல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒட்டகச்சவாரி சுகம் என்ற நினைப்பு போல. சவாரி செய்திருக்கீங்களா? ரொம்பவே கஷ்டமானது. நான் சில பல முறை சவாரி செய்திருக்கிறேன். காரிலேயே 4 மணி நேரத்துக்கு மேல் என்றால் கொஞ்சம் கஷ்டம்.

      நீக்கு
    2. கற்பனை செய்து பார்க்க முடிகிறது! சூரியன் பாடல் நினைவுக்கு வருகிறது.."தூங்கு மூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே.."  பாடலின் சரணம்.

      நீக்கு
  41. குழாய் ரிப்பேர் - சென்னை மழை வெள்ளம் நினைவுக்கு வருது.

    மற்ற துணுக்குகள் ஓகே..

    கீதா

    பதிலளிநீக்கு
  42. வியாழனில் இதை ச் சொல்ல ஸாரிசொல்லிக்கறேன் ஸ்ரீராம். இங்க இப்பவே வந்திருமே அதான்....

    மனோ அக்காவின் பால் வாழைக்காய் ரெசிப்பி பார்த்தேன். என் அம்மா, அத்தை இருவரும் வாழைக்காய் பால் கறி என்று செய்வாங்க. அதில் ஒரு மசாலா பொடி சேர்ப்பாங்க. அது என்னன்னு தெரிந்து கொள்ளாமல் விட்டுட்டேன். மனோ அக்காவின் குறிப்பையும் குறித்துக் கொண்டேன்.

    அது போல துரை அண்ணாவின் தேங்காய்ப்பால் தட்டை சூப்பர் - மகனுக்கு அனுப்பிய லிஸ்டில் இதுவும் செய்து அனுப்பினேன். தேங்காய்பால் முறுக்கும். இப்ப இல்ல....போன முறை. உங்கள் குறிப்பு போலதான். அருமையா சொல்லிருக்கீங்க அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பில்லை. ஆனால் மனோ அக்கா இதைப் பார்க்கணுமே!

      நீக்கு
    2. நான் படித்து விட்டேன்..

      தேங்காய்ப் பால் தட்டை கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  43. செல்லப்பா ஸாரின் கதையும் சுவாரசியமாகத் தொடர்கிறது. லெட்டரைச் சுற்றி கதை!!

    புதன் இன்னும் வாசிக்கலை!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுப்போன பதிவுகள் எலலவற்றுக்கும் இங்கேயே கமெண்ட் இட்டால் சம்பந்தப் பட்டவர்கள் பார்க்கவ வேண்டுமே!

      நீக்கு
    2. ஓ அப்படி ஒன்று இருக்கோ? அந்தப் பதிவு என்றால் அவ்னகளுக்கும் போகுமோ...
      ஓ நோட்டட்

      கீதா

      நீக்கு
    3. அவங்களுக்கும் என்று வாசிக்கவும்...,ம்ம்ம் வாட்சப்பில் என்றால் எடிட் னு வரும் திருத்தி போட்டுடலாம் இங்கயும் ப்ளாகர் அப்படிக் கொண்டு வந்தா நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
    4. இந்த தெக்கினிக்கைப் பார்த்துட்டு இனி, தில்லையகத்து பதிவுகளுக்கும் இங்கேயே பின்னூட்டம் போட்டுடப்போறாங்க. பார்த்து

      நீக்கு
  44. ஒரு கருத்து ஒளிந்து கொண்டுவிட்டதுஏ திங்க பதிவுகளுக்கான கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  45. @ ஸ்ரீராம்..

    / வ. மா.. படத்தில் பாடிய சில பாடல் //

    ???

    !!! :))

    வசந்த மாளிகை..

    பதிலளிநீக்கு
  46. //சுற்றிக்கொண்டு வந்து அன்னை அகிலாண்டஸ்வரியையும் தரிசித்தோம். // தவறாக செய்திருக்கிறீர்கள். முதலில் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து விட்டு, பிரகாரத்தை வலம் வந்தால் ஜம்புகேஸ்வரர் ஸன்னிதிக்கு கொண்டு விடும்.
    கோவிலுக்குள் நுழைந்து, கொடி மரத்திலிருந்து இடது பக்கமாக சென்றால் பாலதண்டாயுதபாணியை தரிசித்து, அதை ஒட்டி இருக்கும் மேடையில் இருக்கும் சனி பகவானை தரிசித்து, கீழே இறங்கி நடந்தால் அகிலாண்டேஸ்வரி சன்னதியை அடையலாம், அதற்கு முன் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும்விநாயகரை வணங்கி, பின்னர் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வேண்டும்.
    நேற்று, ஜம்புகேஸ்வரரை ஜலகண்டேஸ்வரர் என்று குறிப்பிடிருந்தீர்கள். இன்று திருத்தி விட்டீர்கள். குட்!.

    பதிலளிநீக்கு
  47. //குறுகிய இடத்துக்குள் நுழைந்து ஜம்புகேஸ்வரரை தரிசித்து, அங்கு வெளியில் நின்று நம் கையைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளும் ஊழியர் கையில் சிக்காமல் வெளிவந்தோம். சுற்றிக்கொண்டு வந்து அன்னை அகிலாண்டஸ்வரியையும் தரிசித்தோம். // தவறாக செய்திருக்கிறீர்கள். முதலில் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து விட்டுதான், ஜம்புகேஸ்வரரை(ஜலகண்டேஸ்வரர் அல்ல) தரிசனம் செய்ய வேண்டும்.
    கோவிலில் நுழைந்ததும், கொடிமரத்திலிருந்து இடது பக்கம் சென்றால்,பாலதண்டாயுதபாணி சன்னதி. அவரை வணங்கி, அதை ஒட்டி இருக்கும் மேடையில் இருக்கும் சனி பகவானை வணங்கி, கீழே இறங்கி நடந்தால், அகிலாண்டேஸ்வரி வரும்.அங்கு நுழைந்ததும், கொடி மரத்திற்கு அருகில் இருக்கும் மஹாகணபதியை வணங்கி, பின்னரே அகிலாண்டேஸ்வரியை வணங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்வார் இல்லை!  நாங்களும் நீண்ட தூரம் நடந்து உள்ளே சென்று சரசரவென நுழைந்து அங்கு நின்ற வரிசையில் சங்கமித்து விட்டோம்!  சனிபகவான் பார்த்தேனா என்று கூட நினைவில்லை!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!