வியாழன், 7 செப்டம்பர், 2023

குறுக்கு வழி பரிகாரங்கள்

 மூன்று மொழிகளிலும் வழிமுறைச் சொல்லி, மந்திரங்கள் சொல்லி இவர் முடித்தபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன. 

ஒவ்வொருவரிடமிருந்தும் 'நூறு ரூபாய் கலெக்ட் செய்து கொண்டார் இவர்.  நான் என் மகன்களுக்கு கொடுத்தனுப்பி விட்டேன்.  உள்ளே பரிகாரம் செய்யுமிடத்தில், அடுத்த வரிசையில் நின்றிருந்த ஒரு இளம்பெண் காசு வாங்க அவர் உறவினரை கன்னடத்தில் தேடினார்.  கிடைக்கவில்லை.  நேரம் சென்று கொண்டிருக்க, நான் அவருக்கு உதவினேன்.  திரும்ப வந்தால் அவர்களுக்கு புண்ணியம், வராவிட்டால் நமக்கு எக்ஸ்டரா புண்ணியம் என்று நினைத்துக் கொண்டேன்.  அப்புறம் அவர்கள் புண்ணியத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள்!  'பெண் எப்படி, கடவுள் கைகாட்டுகிறாரா' என்று மகனைப் பார்த்தேன்.  என் எண்ணம் புரிந்து அவன் கட்டை விரலைக் கவிழ்த்தான்.  அவனும் சுற்றி இருந்த பெண்களை அளவெடுத்துக் கொண்டிருந்தான்.  இப்படிதான் திருவிடந்தையில் ஒன்றை விட்டோம்!

உருக்களை கையில் எடுத்துக் கொண்டு ஈஸ்வரரை தரிசிக்கச் சொல்லிவிட்டு  பரிகாரகர் கிளம்பினார். "ஈஸ்வரரைப் பார்த்த பின் உருவை உண்டியலில் தலைக்கு பின் பக்கமாக போட்டு விடுங்கள்'

மண்டபத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்டு 'உரு'க்களுடன் ஈஸ்வரரை தரிசிக்க ஓடச்சொன்னார்கள்.  தடுப்பை சுற்றித்தாண்டி, திரும்பி ஓடினோம்.  நூறு ரூபாய் டிக்கெட் உண்டு என்றார்கள்.  அனாவசியம் என்றார் எங்கள் ஐநூறு.  இந்த இடத்திலிருந்து பேண்ட்ஸ் சட்டை அணிந்த அதிகாரி போன்ற வேறொருவர் எங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

மைல்கணக்கில் நின்றிருந்த மக்களை இருபுறமும் புறம் / ஓரம் தள்ளி பாதயாத்திரைத் தலைவர் போல கடந்தோம்.  கர்ப்பகிரகம் அருகே சங்கமிக்கும் ஜனவெள்ளத்தில் எங்களைக் கரைத்து, காணாமல் போகாமல் கூடவே வந்தார் ஐநூறின் உதவியாளர்.  நசுங்கி, பிழியபப்ட்டு இன்ச் இஞ்சாக நகர்ந்து அருகே ஈஸ்வரரை தரிசித்தோம்.  

எல்லோரையும் விலக்கி தள்ளி விட்டுக் கொண்டிருந்த ''ஜருகண்டி ஜருகண்டி'" அலுவலர், எங்கள் கூட வந்த அதிகாரியின் கண்களை சந்தித்ததால் பத்து நொடிகள் போனஸ் அருளினார்.  பின்னரும் கடுமை காட்டாமல் மென்மையாக எங்களைக் கையாண்டு வெளியில் அனுப்பினார்! ஈஸ்வரரை தரிசித்து, கையிலிருக்கும் உருவை தலையைச்சுற்றி இடப்பக்கம் மூன்றுமுறை, வலப்பக்கம் மூன்றுமுறை சுற்றி திரும்பிப் பார்க்காமல் உண்டியலில் போடச்சொன்னார்கள்.  போட்டோம்.  போட்டார்கள்!

மறுபடியும் ஜனவெள்ளத்தை குறுக்கு வழியில் கடந்து தாயாரை தரிசித்தோம்.  இந்த இடத்தில் காலில் கட்டை விரலில் இடித்துக் கொண்டு வலி உயிர்போனதை, .குறுக்கு வழியில் வந்ததற்காக தாயாரின் தண்டனை.யாக எண்ணி, தாயாரை வேறு கடுமையான முடிவுகள் எடுக்க விடாமல் ஏமாற்ற முனைந்தேன்!  

அப்புறம் வெளியில் கொண்டு விட்டார். அங்கிருந்த எங்கள் ஐநூறு மறுபடியும் எங்களை 'கைப்பற்றி'க் கொண்டார்.  இவர்கள் இல்லாவிட்டால் அன்று இவ்வளவு எளிதாக தரிசனம் கிடைத்திருக்காது.

நாங்கள் வேறு, வயதான மாமியாரை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாமல், கூடவே அழைத்துச் சென்றிருந்தோம்.  அவரால் இவ்வளவு தூரம் எல்லாம் நடக்க முடியாது என்று காரிலேயே அமர வைத்திருந்தோம்.  அவர் பதட்டமடையும் முன் அவரை சென்று சந்திக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அவர் எங்களை, இல்லை, இல்லை பாஸை கொஞ்ச நேரம் பார்க்கா விட்டால் துடித்துப் போய்விடுவார்!

அவருக்கு காது கேட்காது என்பதால் ட்ரைவர் ஏதாவது பேசினாலும் கேட்காது.  உதவியவருக்கு காசு கொடுத்து வெளியில் வந்தோம்.  அவசரத்துக்கு கழிப்பிடம் செல்லலாம் என்றால் கட்டண கழிப்பிடங்களே படுமோசமாக இருந்தன.  நாங்களாகவே இதையும்  தண்டனைக் கணக்கில் ஏற்றிக்கொண்டு அடக்கம் காத்தோம்!

ஆமாம், இப்படி குறுக்கு வழியில் கடவுளை தரிசனம் செய்வது சரியா என்றால் எனக்கு நானே செய்து கொண்ட சமாதானத்தையே உங்களுக்கும் சொல்கிறேன்.  அறநிலையத்துறை செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள், கயிற்றுத் தடுப்புகள், காசுக் கட்டணங்கள் இவற்றோடு பார்க்கும்போது இது பெரிய தவறில்லை.  தவறில் பெரிசு சிறிசு என்று உண்டா என்றெல்லாம் கேட்கக்கூடாது.  எல்லாம் கடவுளின் சித்தம்.  சொல்பவன் அவனே.  செய்பவனும் அவனே. 

ஆனாலும் சிறிய அளவில் இன்னொரு தண்டனையும் எங்களுக்கு அங்கு கிடைத்ததோ என்று சந்தேகம் எனக்கு உண்டு.  அதாவது...

எங்கள் டிரைவர், அவர் பெயர் குட்டி "பரிகாரம் (25 நிமிஷத்துல முடிச்சுடுவாங்க சார்) தரிசனம் (ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரை மணி நேரம்..  கூட்டத்தைப் பொறுத்து) முடிந்து நீங்கள் அதோ அந்தப் பக்கமாய் வெளியே வருவீர்கள்.  நான் ஒன்றரை மணி நேரம் கழித்து அங்கே காத்திருக்கிறேன்" என்று சொல்லி இருந்தார்.

செல்போன் உள்ளே அனுமதி இல்லை என்பதால் வண்டியிலேயே எங்கள் செல்களை வைத்து விட்டு வந்திருந்தோம்.

மேலும், உள்ளே கோவிலுக்குள் எங்களை சுருக்கு வழியில் அழைத்துச் சென்றவர், அங்கிருந்த ஒரு (நேர்மையான) பெண்மணியின் அதட்டலுக்கு தயங்கி Exit வழிக்குச் செல்ல முடியாமல் மறுபடி எங்களை கலெக்ட் செய்த இடத்துக்கே கொண்டு வந்து விட்டு விட்டார்.  அதாவது உள்ளே நுழையும் இடம்.  இதுவும் தெய்வம் செய்த ஏற்பாடோ என்னவோ...  'அலைங்கடா...'

சொல்லப்பட்ட நேரத்துக்கு முன்னாலேயே நாங்கள் வெளியே வருவோம் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.  நல்ல கூட்டம் என்பதை அவரும் உணர்ந்திருந்தார்.  வண்டி நிறுத்த பக்கத்தில் இடம் இல்லாமல் எங்கோ ஆற்றங்கரை அருகே நிறுத்தியிருந்தாராம்.

எங்கள் தேடல் அத்தியாயம் தொடங்கியது.  ஒரு முட்டாள்தனம், வண்டியின் பெயரோ, பதிவு எண்ணோ எங்களுக்கு தெரியாது, நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. சுற்றிச்சுற்றி வந்து தேடுகிறோம்.  ஊ..ஹூம். அவர் சொன்ன எக்சிட் கதவு பக்கமும் சென்று இரண்டு முறை தேடினேன்.  கால்வலி நடக்க முடியாமல் அதிகமாகிக் கொண்டிருந்தது.  எல்லோருமே தளர்வாகிப் போனோம்.

முதலிலேயே எனக்கு ஒரு எண்ணம் தோன்றி இருந்தது.  கோவிலில் அலுவலக அறிவிப்புகள் வெளிவீதி வரை தெளிவாகக் கேட்டன.  சொல்லப்போனால், கோவிலுக்குள்ளே கேட்பதைக் காட்டிலும் வெளியே தெரிவாக புரிந்து கொள்ளும் அளவு காதில் விழுந்தது.  அவர்களிடம் சொல்லலாம் என்பது என் ஐடியா.

மகன்கள் கொஞ்சம் இரு என்று சொல்லி ஆளுக்கொரு திசையில் கிளம்பிச் சென்றார்கள், எங்களை அங்கேயே நிறுத்தி!  

கிடைக்கவில்லை.  

நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லி கோவிலுக்குள் மறுபடி பிரவேசித்தேன்.  ஐநூறு ரூபாய் நண்பர் கண்ணில் படுகிறாரா என்று பார்த்தேன்.  அவர் வேறொரு கஸ்டமருடன் காணாமல் போயிருக்க வேண்டும்.  ஆளைக்காணோம்.  நானே உள்ளே செல்ல எத்தனிக்கையில் திரும்பிப் பார்த்தால் மற்ற மூவரும் என்னோடேயே நான் சொல்வதை காதில் வாங்காமல் உள்ளே வந்து விட்டிருந்தனர்.  சத்தம் போட்டு அவர்களை அட்லீஸ்ட் அங்கேயேயேயாவது இருக்கச் சொல்லி சொல்லி விட்டு உள்நுழைந்து மைக் அறிவிப்பாளர் இருக்குமிடம் சென்றேன்.  அது கோவிலிலிருந்து வெளியே அனுப்பப்படும் இடம்.  அப்படியே குறுக்கே போனால் தரிசனம் எளிது என்பதால் அங்கு கட்டுக்காவல் ஜாஸ்தி.  சொல்லி விட்டு உள்ளே சென்று அறிவிப்பாளரிடம் அறிவிக்கச் சொன்னேன்.

நான் எழுதிக் காட்டியதை படிக்க மறுத்தார்.  'தமிழ் சதுக ராது..  பேரு  ஊரு சொப்பன்டி' என்றார்.

அவர் தெலுங்கு உச்சரிப்பில் சொல்வார் என்பதால் ஊர் பெயர், நபர் பெயர் தெளிவாக உச்சரிக்கக் கேட்டுக்கொண்டேன்.  ஒருமுறை சொல்லி இரண்டாவது முறை சற்று நேரம் கொடுத்து சொல்லக் சொன்னால் 'மாட்டேன்' என்றார்.  'மறுபடி அரைமணி கழித்துதான் சொல்வேன்' என்றார்.  பழகிப்போன செயலாய் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை வெளியே எடுக்கும் சமயம் பழகிய குரல் கேட்டது.  நிமிர்ந்து பார்த்தால் எங்கள் டிரைவர் என்னை விசாரித்துக் கொண்டிருக்க, உடனே அவரெதிரே ஆஜரானேன்.

அவர் வெளியே வரும் கேட்டில்தான் நின்றிருக்கிறார்.  நான் வண்டியுடன் ரோடில் அவரைத் தேடி இருக்கிறேன்.  அவர் வண்டியை தொலைவில் நிறுத்தி, அவர் மட்டும் வந்து கதவுக்குள் நுழைந்து ஓரமாக நின்றிருந்திருக்கிறார்.

எதற்கும் இருக்கட்டும் என்று வண்டியில் வைத்திருந்த என் அலைபேசியை கையில் கொண்டு வந்திருந்தார்.

என்னிடம் அதைக் கொடுத்து மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு அந்தப் பக்கமாக வரச்சொல்லி விட்டு இவர் வண்டியை எடுக்க இந்த பக்கமாக விரைய, நான் காத்திருந்தவர்களைத் தேடி நடந்தேன்.  'நாடகம் இன்னும் முடியவில்லை, இன்னும் ஒரு சிறு காட்சி பாக்கி இருக்கிறது' என்று தாயார் சொன்னது என் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

சென்று பார்த்தால் இளையவனைக் காணோம்.  என்ன என்றால் ஐநூறு ருபாய் நண்பர் வந்தாராம், நிலைமையைக் கேட்டு அவரும் மைக் அறிவிப்பாளரிடம் சொல்ல இவனை அழைத்துச் சென்றிருக்கிறாராம்.  நான் அதற்குதான் சென்றிருக்கிறேன் என்று நான் அவர்களிடம் சொன்னதை அவர்கள் கேட்கவில்லையாம், அவர்களுக்கு தெரியாதாம்!  என் மூலம் வந்த மைக் அறிவிப்பையும் அவர்கள் கேட்கவில்லையாம்!

கடவுளே...  ஒருவர் இந்தப் பக்கமாக என்றால் மற்றவர் இன்னொரு பக்கமாக அலையும் விளையாட்டு தொடர்கிறதே...  'சொல்லி விட்டுதானே சென்றேன்..  நானும் அதற்குதானே சென்றேன்' என்று நான் கத்த, பெரியவனும் பாஸும் நான் அப்படிச் சொல்லிச் செல்லவே இல்லை என்று சாதித்தார்கள்.

நல்லவேளையாக இப்போது என் செல் என் கையிலிருக்க, ஐநூறு ரூபாய் நண்பர் நம்பருக்கு கால் செய்தேன்.  அதே சமயம் அவர்களே எதிரே வந்து கொண்டிருந்தார்கள்.  அறிவிக்குமிடத்தில் நானும் டிரைவரும் சேர்ந்து விட்டோம் என்று சொல்லி அனுப்பினார்களாம்.

மணி காலை பதினொன்று.

இப்படியாகத்தானே கல்யாண பரிகாரமும், அதற்கு கையாண்ட குறுக்கு வழிக்கான பரிகாரத்தையும் செய்து நாங்கள் ஊர் திரும்பினோம்!

காலை ஒரு காஃபி மட்டும் சாப்பிட்டிருந்தோம்.  எங்காவது சாப்பிடலாம், காளஹஸ்தியில் நல்ல ஹோட்டல் இருந்தால் நிறுத்துங்கள் என்று சொன்னோம்.  அங்கு சொல்லும்படி பெரிய ஹோட்டலே கிடையாது என்று சொல்லி, திரும்பும் வழியில் பார்க்கலாம் என்று வந்தால், வழியில் ஒரு ஊரில் நிறுத்தி அவர் நினைத்திருந்த ஹோட்டலில் விசாரித்தால் ஒன்றும் ரெடியாக இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

கடைசியில் மறுபடி அதே அடையார் ஆனந் பவன் - சிறுவாபுரி சென்றுவந்தபோது சாப்பிட்ட அதே A2B ஹோட்டலிலேயே சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

பரிகாரத்துக்கு பலன் வரும் வழியிலேயே கூட கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.  ஏற்கெனவே வேண்டாம் என்று சொல்லி சென்றிருந்த ஒரு பெண் வீட்டார், மற்றும் இருவர் என்று உடனடியாக தொடர்பு கொண்டனர்.
===================================================================================================

சுஜாதா பற்றி... 

முதலில், சுஜாதா வறுமையில் வாடினாரா என்பது பற்றி. இப்படி எழுதுபவர்களில் கணிசமானவர்கள் வெறும் கணிநிரல் எழுத்தர்கள். அவர்கள் ஒரு பகற்கனவில் ஆசைப்படக்கூடிய உச்சகட்ட பதவி ஒன்றில் இருந்தவர் சுஜாதா. இந்திய மின்னணு நிறுவனம் [BEL]-ல் இயக்குநர் அளவில் பதவி வகித்தவர். ஓர் இந்தியர் அரசுசார் துறையில் அடையக்கூடிய உச்சகட்ட பதவி, உச்சகட்ட ஊதியம். அந்தப்பதவியிலேயே வறுமைதான் என்றால் பிரணாப் முகர்ஜியின் பதவிதான் வறுமைக்கு அப்பாற்பட்டது.
அப்பதவியில் இருந்தபடியே சுஜாதா வாரம் ஒன்றுக்கு ஏழு தொடர்கதைகள் எழுதினார், மனைவி பேரில். தனக்கு வார இதழ்கள் பெரும் பணம் தந்திருக்கிறார்கள் என அவர் குறைந்தது பத்து இடங்களிலாவது எழுத்தில் சொல்லியிருக்கிறார்
அவரது ஆரம்பகட்டத்திலேயே அவர் கதைகள் சினிமாவாக ஆரம்பித்துவிட்டன. இது எப்படி இருக்கு, ப்ரியா எல்லாமே உரிய பணம் கொடுத்து வாங்கப்பட்ட கதைகள். கொடுக்கப்பட்ட பணம் என்ன என்று சுஜாதாவே சொல்லியிருக்கிறார். அன்று ஒரு நல்ல கார் வாங்கும் அளவுக்குப் பணம். அதன்பின் சினிமாவுக்கு வந்தார். தமிழ் சினிமாவில் மிக அதிகமாகப் பணம் வாங்கிய வசனகர்த்தா அவர்தான். ஏனென்றால் அவர் எழுதியவை பெரும்பாலும் நட்சத்திரப்படங்கள்.
அவர் எழுதிய எந்தப்படத்திலும் அவருடைய தனித்திறன் வெளிப்பட இடமிருக்கவில்லை. அவை இயக்குநர்படங்கள் என்பது ஓர் உண்மை. ஆனால் அவருடைய பெயர் அவற்றின் வணிகமதிப்புக்கு உதவியது என்பது முக்கியமானது. ஆகவே அவருக்குப் பணம் அளிக்காமலிருக்க முடியாது
கண்டிப்பாக ரஜினிகாந்தோ கமலஹாசனோ வாங்கும் பணம் அல்ல அது. ஆனால் அது குறைவான பணமும் அல்ல. இப்படிச்சொல்கிறேன். அவர் உயரதிகாரியாக ஒருவருடம் முழுக்க ஈட்டிய ஊதியத்தைவிட அதிகமாக ஒரு படத்திற்கு வாங்கிக்கொண்டிருந்தார். வருடம் மூன்று படம் செய்தார், கடைசிநாள்வரை. அவருக்கு என்ன அளிக்கப்பட்டது என்று எனக்குத்தெரியும். சொல்லப்போனால் நான் என்ன வாங்கவேண்டுமென்று அவர் எனக்கு அறிவுரையும் சொன்னார்.
சுஜாதா பணத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல. நின்றுபோன படங்களுக்கான ஊதியத்தைக்கூட அவர் பலமுறை கேட்டு வாங்கிக்கொண்டது எனக்குத்தெரியும். என்னிடம் அப்படித்தான் செய்யவேண்டும் என சொன்னார். நான் அப்படி எவரிடமும் கேட்பதில்லை. ஆனால் இன்றுவரை சினிமாவில் எனக்கு வராதபணம் என ஏதுமில்லை. வரவேண்டிய பணத்தை நான் நினைவுகொள்வதே இல்லை. படநிறுவனமே என்னைக்கூப்பிட்டு பணம் கொடுப்பதே வழக்கம்.
எனக்கும் சினிமாவில் நான் நிறைவடையும் அளவுக்கு ஊதியம் இருக்கிறது. கண்டிப்பாக அது நட்சத்திரங்கள் பெறும் பணம் அல்ல. ஆனால் அது ஏதேனும் துறையில் மாதச்சம்பளம் வாங்குபவர்கள் சற்று பொறாமைகொள்ளும் ஊதியம்தான். அத்தனையும் வெள்ளைப்பணம்தான். வருடம்தோறும் டிடிஎஸ் கட்டி மீட்டுக்கொள்கிறேன்.
சுஜாதா ஓய்வுக்குப்பின் மூன்று நிறுவனங்களில் உச்சகட்ட பதவி வகித்தார். குமுதத்தில். பின்னர் மின்னம்பலம் இணைய நிறுவனத்தில். பின்னர் ஒரு திரைநிறுவனத்தில். மூன்றிலுமே பெரும் சம்பளம் வாங்கினார். கூடவே சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டிருந்தார்.
சுஜாதாவின் மருத்துவச்செலவுக்கு உதவ மணி ரத்னமும் கமலஹாசனும் முன்வந்திருக்கலாம். ஏனென்றால் இன்றுகூட அவர்கள் அவரைப்பற்றி மிக நெகிழ்ச்சியுடன் மதிப்புடன் நினைவுகூர்கிறார்கள். அவரைப்பற்றி பேசாமல் ஓர் உரையாடல் இதுவரை நிகழ்ந்ததில்லை. அவர் அவர்களுக்கு தொழில்கூட்டாளி மட்டும் அல்ல. குடும்ப நண்பர், அந்தரங்கமான விஷயங்களில்கூட வழிகாட்டி. குறிப்பாக கமல் சுஜாதாமேல் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் நம் சூழலில் மிக அபூர்வமானவை.
சுஜாதா எதையும் கோட்டைவிட்டவர் அல்ல. நன்றாக பணம் ஈட்டினார். முறையாக வருமானவரி கட்டியாகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதை மற்றவர்களுக்கும் வலியுறுத்தினார். அவருக்கிருந்த உடல்நிலைக்குறைவு அவரது தோரணையைச் சற்று குறைக்கும் என்பதனால் அதைப்பற்றிய பேச்சையே தவிர்த்தவர் அவர். ஒரு சம்பிரதாயமான நலம் விசாரிப்பையே விரும்பாதவராக இருந்தார்.
சுஜாதா எங்கும், எவர்முன்னாலும் ஒருபடியேனும் கீழிறங்கியவர் அல்ல. மரியாதையை எங்கும் எதிர்பார்க்கும் பழைய பாணி மனிதர் அவர். அது அவருக்கு எங்கும் கிடைத்தது. நானே ஒரு மூத்த மாமாவிடம் கொள்ளும் விலக்கம் , மரியாதையுடன் மட்டுமே அவரிடம் பேசுவது வழக்கம். அதாவது அவர் பேசுவார், நான் கேட்டுக்கொண்டிருப்பேன்
சினிமாவில் வழக்கமாக உள்ள எதன்வழியாகவும் அவர் தன்மதிப்பை குறைத்துக்கொள்ளவில்லை. நான் சுஜாதாவிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான அம்சம் இது. அவர் வாழ்ந்த வரை திரையுலகிலும் ஒரு பிதாமகனுக்கான இடம் அவருக்கிருந்தது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் பெருமதிப்புடன் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.
சுஜாதாவின் இரு மகன்களும் மிகவசதியான பதவிகளில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு அவர் வறுமையில் இறந்தார், மனைவி நிராதரவாக இருக்கிறார்கள் என்றால் அவரது மகன்களிடம்தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம் வரும். அந்த அம்மாள் ஒன்றும் புரியாமல் பேசுகிறார்கள். அவர்களை எனக்கு ஓரளவு தெரியும். அவர்களால் அவர்களின் சொற்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என ஊகிக்கமுடியல்லை
அவர்களை பேசவிட்டு அந்தச் சொற்களைக்கொண்டு சுஜாதாவின் ஆளுமையை கீழிறக்க ஊடகவியலாளர் முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. சுஜாதா எதையாவது மனமார வெறுத்தார் என்றால் அவரை பரிவுடன் பிறர் பார்ப்பதைத்தான். அது அந்தக்கால மனிதர்களின் இயல்பு. மதிப்புடன் மட்டுமே பார்க்கப்பட விரும்பியவர்கள் அவர்கள்.
அந்த மதிப்பை நாம் அவருக்கு அளிக்கவேண்டும். அவரை விமர்சிக்கலாம், அவர் அதைப் புரிந்துகொண்டவர்தான். கிண்டல் செய்யலாம், அவருக்கு அது உண்மையில் மிகவும் பிடிக்கும். அனுதாபப் படவேண்டாம். அவரது புகழிருப்புக்கு அது இழிவு.
ஜெயமோகன்

நன்றி  R கந்தசாமி ஸார்.  Face Book.
===========================================================================================

கல்யாண டாஸ்க்...

உன்னிடம் பொய் சொன்னதில்லை 
உண்மையில் எதையும் வென்றதில்லை 
உண்மையும் நான் சொல்லவில்லை 
உண்மையில் நான் ஒன்றுமேயில்லை 
உன்னில் நான் என்று சொன்னால் போதும் 
கண்ணில் வந்து கண்ணீர் மோதும் 
எதிர்பார்ப்பு ஏதும் இருந்ததில்லை 
ஏமாற்றம்தான்  எப்போதும் தொல்லை 
பிடித்திருந்தால் உம் என்று சொல்லு 
இல்லையென்றால் தள்ளி நில்லு 
அடுத்த இடம் நான் செல்லவேண்டும் 
அங்கிருப்பவளிடம் என் காதலை சொல்லவேண்டும் 

======================================================================================================

பார்த்ததில் ரசித்தது...


=======================================================================================================


"ஏம்மா..  நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்....  கொஞ்சம் லேப்டாப்பை மூடி வச்சுட்டு நடிக்க வாம்மா...   ஷாட் ரெடியாகி ரொம்ப  நேரமா காத்திருக்கோம்!"



=================================================================================================

பொக்கிஷம்  : -

இந்த ஜோக் மாதிரியும் 


இதுவும் வேதனையைத் தருகிறதா?!


...இந்த ஜோக் மாதிரியும் ஏராளமான  விதங்களில் வந்த நேரம் அது.


தன்மானத்தின் விலை இரண்டு ரூபாய்!


76 கருத்துகள்:

  1. பரிகாரம் சுமுகமாக நடப்பதற்கே ஒரு பரிகாரம் பண்ணவேண்டும் போல் உள்ளதே.

    நல்ல செய்தி கிடைத்துவிட்டதா? விரைவில் வாத்திய ஒலி உங்கள் வீட்டில் கேட்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. வாய்ப்பு வந்தது என்றுதான் சொன்னேன். கிடைத்தது என்று சொல்லவில்லை!

      நீக்கு
    2. எதிர்பார்க்காதபோது செட் ஆகும். நமக்கு அதுவரை பட்ட கஷ்டங்கள், மன உளைச்சல்கள் மறந்துபோகும். பிறகு இரண்டு தரப்புமே அதை மறந்து, என்னை காரைக்குடியில் கேட்டாஹ, பொன்னமராவதியில் கேட்டாஹ.... என,ற பேச்சை ஆரம்பிக்கும், சிறிது காலம் கழித்து. இறைவன் போட்டு வைக்கும் முடிச்சு என்பது உண்மைதான் என நமக்குப் புரியும்.

      நீக்கு
  2. கழுதை ஜோக் வெவ்வேறு வடிவங்களில் வந்துவிட்டது. இன்றைய ஜோக்குகள் சுமார் ரகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  குமுத ஜோக்குகள் அப்படிதான்.  ஜோக்ஸுக்கு விகடன்தான்.  பொழுதுபோக்கில் தொடர்கதைகளுக்கும் இன்னபிற விஷயங்களுக்கும்தான் குமுதம்!

      நீக்கு
    2. கல்கியில் சாமாவின் நகைச்சுவைத் துணூக்குகள் ரசிக்கலாம்.

      நீக்கு
  3. பிடித்திருந்தால் உம் சொல்லு... இல்லையென்றால் தள்ளி நில்லு.... இந்த அவஸ்தையை இரு வீட்டார் பார்வையிலும் சமீபங்களில் கண்டவன் நான்

    பதிலளிநீக்கு
  4. சுஜாதா... வறுமை.... இதெல்லாம் உடான்ஸ். அவர் மனைவி இயல்பாக உரைத்ததை ஆராயவேண்டாம். எல்லா மனைவிகளுக்கும் கணவனைப் பற்றிய மதிப்பீடு ஆஹா ஓஹோ என இருக்காது. கணவன் பொசிஷனில் அவர்கள் இருந்ததில்லை அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா வறுமை என்று யார் கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை.  சுஜாதாவை அறிந்தவர்கள் அதைத் துளிக்கூட நம்ப மாட்டார்கள்!  சுஜாதா மனைவி (வினோதமாக இல்லை?!!)  பாவம்.

      நீக்கு
    2. எல்லா மனைவிகளுக்கும் கணவனைப் பற்றிய மதிப்பீடு ஆஹா ஓஹோ என இருக்காது. கணவன் பொசிஷனில் அவர்கள் இருந்ததில்லை அல்லவா?//

      நெல்லை அவங்க கணவன் பொசிஷனில் இருந்து பார்ப்பது என்பதை விட இது கணவன் மனைவிக்கானவை வீட்டிற்குள் இல்லையா? ஒரு மனைவியாக அவங்களுக்கு சில இருந்திருக்கலாம் அதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியாது. அதை அவங்க யதார்த்தமாகத்தான் சொல்லிருக்காங்க சில துல ஆனா அதை நாம புரிந்துகொள்வோம். அதை வைத்து ஓ சுஜாதா அப்படித்தான்னு சொல்ல மாட்டோம் ஏன்னா இது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் மீடியா அப்படி இல்லை காசு பார்க்க விழைபவை தலைப்பை அசிங்கமா போட்டு வெளியிடுவாங்க. எழுத்தைப் பற்றி எழுத்தாளர் பற்றி அறியாதவங்க நிறையப் பேர் இல்லைனா வம்புக்கு அலைபவர்கள் ....எனவே அவங்க கவனமா இருக்கணும்னு எனக்குத் தோன்றும்.

      கீதா

      நீக்கு
    3. சுஜாதா மனைவி (வினோதமாக இல்லை?!!) பாவம்.//

      ஆமாம் கீழ கருத்து போடும் போது...தோன்றியது.

      கீதா

      நீக்கு
    4. இதே ஜெயமோகன் சித்தப்பாவை சாவி பத்திரிகை அலுவலகத்தில் டீ எடுத்து வந்து கொடுக்கும் பையராகவும், எழுத்தாளர் இந்துமதிக்குக் கார் ஓட்டியாக இருந்ததாகவும், சித்தி அப்பளம் இட்டுக் கொடுத்து அதைச் சித்தப்பா வீடுவீடாகக் கொண்டு போட்டதாகவும் ஓட்டு வீட்டில் குடி இருந்ததாகவும் சொல்லி இருந்தார். சின்ன வயதில் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டதாயும் சொல்லி இருந்தார். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    5. அவரவர்கள் ப்ராபல்யம் தேடிக்கொள்ள பிறர் பெயரை உபயோகிக்கிறார்கள் போல...  இப்போது கூட இளவரசர் கிளப்பி இருக்கும் கான்ட்ராவர்சியினால் வரும் எதிர்மறை விமர்சனங்களை அவர் தனது புகழக் கணக்கில் சேர்த்துக் கொள்வார்...

      நீக்கு
  5. எப்படியானாலும் காரியம் நல்லபடியாக முடிந்தால் நல்லது தானே. எல்லாக் கோயில்களிலும் 'குறுக்கு வழியில்' சம்பாதிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். கீசா மேடம் பூரியில் ஜெகந்நாதரை தரிசித்த அனுபவம் போன்றதே தங்களுடைய அனுபவம்.

    உண்மையைச் சொல்கிறேன். நமது நாட்டில் IAS காரர்களால் அவர்களை விட மேற்கொண்டு சம்பளம் யாரும் வாங்கிவிடக்கூடாது என்ற முனைப்பில் விஞ்ஞானிகளுக்கும் பேராசரியர்களுக்கும் மிகக் குறைவான ஊதியமே கிடைக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். இதைப்பற்றி நிறைய எழுதலாம். சுஜாதா அவர்கள் பெற்ற சம்பளமும் அவ்வாறு தான்.

    கவிதை பற்றி

    காதல் என்ன கத்திரிக்காயா?
    கடைக்கு கடை பார்த்து
    இது சொத்தை இது முத்தல்
    என்று ஒதுக்கிவிட்டு கடைசியில்
    முருங்கைக்காயை வாங்க.

    உண்மையோ பொய்யோ
    இருப்பதில் சிறந்ததை
    தேர்ந்தெடுப்பதே தீரம்.

    ஜோக்குகள் அந்தக் காலம். நல்ல கடி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு கீதா அக்காவிடம் அதைத்தான் சொல்லி இருந்தேன்!  எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு என்று!

      இதைப்போல இருக்கும் தரகர்கள் பற்றி அப்புறம் இன்னும் எழுதுவேன்.  இன்னும் சில கோவில்களும் சென்று வந்தேனே...!!!

      சுஜாதா குறைவாகத்தான் சம்பளம் பெற்றிருப்பார் என்று சொல்ல வருகிறீர்களா?  ஆனாலும் வறுமையில் வாடும் அளவு இல்லை, இல்லையா?

      காதலோ, கல்யாணமோ...  நம்மை எங்கே தேர்ந்தெடுக்க விடுகிறார்கள்!  அவர்கள் நிராகரித்து விடும்போது?!

      குமுதம் ஜோக்ஸிடம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்!

      நீக்கு
    2. விஞ்ஞானிகளுக்கும் பேராசரியர்களுக்கும் மிகக் குறைவான ஊதியமே//

      ஆமாம் ஜெ கே அண்ணா. ஆராய்ச்சிகளுக்கு நம்மூரில் ஒதுக்குவதும் மிக மிகச் சொற்பம் அதனாலேயே பல நல்ல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாமல் Proposal அளவில் முடிவடைந்துவிடுகின்றன. அதனாலேயே பல வெளியில் தெரியாமல் வராமல் அமுங்கிவிடுகின்றன. அனுபவங்கள் உண்டு.

      கீதா

      நீக்கு
    3. புரிகிறது.  இவர்கள் திறமைக்கு மதிப்பு கொடுப்பதே இல்லை போலும்.

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. பரிகார பூஜை என்பது (போன ஜென்மத்தில்) கருங்கல்லை முழுங்கி விட்டு
    (இந்த ஜென்மத்தில்) இஞ்சி கஷாயம் குடிப்பது என்பதாகும்...

    பதிலளிநீக்கு
  8. பரிகார பூஜை செய்வதையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை..  அந்த வகையில் புதிய பாவங்கள் செய்யாமலிருக்கிறார்கள்!

      நீக்கு
  9. அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை மறந்து விட்டனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்து விட்டாலும் அனுபவிக்க வேண்டிதான் இருக்கிறது!

      நீக்கு
  10. நானும் 35 வருடங்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு சித்திக்க வேண்டுமென வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிகாரத்தைப் பற்றிய உங்கள் கருத்து சரிதான். இருந்தாலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, யாரேனும் நம்மிடம், அனுமார் சன்னிதியை தினமும் பதினாறு முறை என்று ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்துவந்தால், பிரச்சனைகள் தீரும் என்று சொன்னால், செய்வதில்லையா? அதற்காக, இமயமலையை ஒரு சுற்று சுற்றிவா என்றால், த்த்துவம் பேசி, அதனைச் செய்யமாட்டோம். பரிகாரங்களே மன ஆறுதலுக்கும் நம்பிக்கைக்கும்தான்.

      நீக்கு
    2. நெல்லையின் கருத்துதான் எனக்கும்.

      நீக்கு
  11. 'பெண் எப்படி, கடவுள் கைகாட்டுகிறாரா' என்று மகனைப் பார்த்தேன். என் எண்ணம் புரிந்து அவன் கட்டை விரலைக் கவிழ்த்தான். அவனும் சுற்றி இருந்த பெண்களை அளவெடுத்துக் கொண்டிருந்தான். //

    ஹாஹாஹாஹா!!!!! ரசித்தேன் ஸ்ரீராம். சூப்பர் அப்பா பிள்ளை! மீண்டும் வாசித்து சீன் போட்டு யோசிச்சு ரசித்துச் சிரித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய கீதா..  நப்பாசை!  கடவுள்தான் உதவி செய்யச் சொல்லி கைக்காட்டுகிறாரோ என்கிற ஓவர்தாட்!

      நீக்கு
  12. விரைவில் பலன் கிட்டும் மங்கலம் உண்டாகட்டும்.

    நகைச்சுவைகள் நன்று.

    பதிலளிநீக்கு
  13. நூறு ரூபாய் டிக்கெட் உண்டு என்றார்கள். அனாவசியம் என்றார் எங்கள் ஐநூறு. //

    ஓ அவங்களுக்குள்ளயும் இப்படியா!!!! ஒரே கூட்டம் இல்லை போல...கருத்து வேறுபாடு இருக்குமோ!! ஹாஹாஹா

    இந்த இடத்திலிருந்து பேண்ட்ஸ் சட்டை அணிந்த அதிகாரி போன்ற வேறொருவர் எங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.//

    ஹே அப்பா எத்தனை பேர்!!!!!!

    //நசுங்கி, பிழியபப்ட்டு இன்ச் இஞ்சாக நகர்ந்து அருகே ஈஸ்வரரை தரிசித்தோம். //

    புரிகிறது. எனக்கு முடியாத காரியம், ஸ்ரீராம். இப்படிக் கூட்டத்தில் தரிசனம். உங்களுக்கும் இது பரிகாரம் என்பதினால் வேறு வழியில்லை இல்லையா?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஓ அவங்களுக்குள்ளயும் இப்படியா!!!! //

      ஓரளவு இந்நிலையில் கொஞ்சம் நியாயத்தை அனுசரிக்கிறார்கள்!

      //இப்படிக் கூட்டத்தில் தரிசனம். உங்களுக்கும் இது பரிகாரம் என்பதினால் வேறு வழியில்லை இல்லையா?!//

      பின்னே?  இப்படி கூட்டம் என்றால் நான் எங்கே போகப்போகிறேன்!

      நீக்கு
  14. மறுபடியும் ஜனவெள்ளத்தை குறுக்கு வழியில் கடந்து தாயாரை தரிசித்தோம். இந்த இடத்தில் காலில் கட்டை விரலில் இடித்துக் கொண்டு வலி உயிர்போனதை, .குறுக்கு வழியில் வந்ததற்காக தாயாரின் தண்டனை.யாக எண்ணி, தாயாரை வேறு கடுமையான முடிவுகள் எடுக்க விடாமல் ஏமாற்ற முனைந்தேன்! //

    ஹாஹாஆ என்ன குறுக்கு வழி ஸ்ரீராம்? நீங்க பரிகாரம்னு போனப்பதானே...அவங்களுக்குத் தெரியாதா என்ன...நல்லபடியா பாத்துக்குவாங்க!

    வயதானவர் நம்முடன் இருக்கறப்ப நீங்கள் சொல்லியிருப்பதுதான்... நாம நிறைய யோசித்து செயல்பட வேண்டும்.

    ஓ மை!!! எப்படி எல்லாம் அலைஞ்சுருக்கீங்க அன்று...அயற்சியாகியிருக்கும். நீங்க ஒரு புறம் தேட நண்பரோ அருகிலேயே இருந்திருக்க....அவரும் நீங்கள் வருவதைக் கவனிக்கலை போலும்....
    இனி இப்படிப் போகும் முன் உங்கள் நண்பர் ஓட்டுநரிடம் சொல்லி வைச்சிருங்க ஒரு பொது இடம்...அவர் வந்து நிற்கவோ அலல்து வண்டியுடன் நிற்கவோ....சொல்லிக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம டயர்ட்.. அதனாலேயே சுருட்டப்பள்ளி போல பிற இடங்கள் செல்லாமல் திரும்பினோம்!

      நீக்கு
  15. ஸ்ரீராம் குடும்பப் பாட்டு ஒன்று இனி பாடிடுங்க...ஒட்டுநருக்கும் சொல்லிக் கொடுத்து வைங்க அவரும் குடும்ப நண்பர்தானே பிரச்சனையே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    எல்லோருமே ஏதோ ஓர் அயற்சி, பதற்றத்தில் இருந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவை, நீங்க சொல்லிட்டுப் போனது சரியாக ரீச் ஆகவில்லை. நெட்வொர்க் ப்ராப்ளம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரத்தில் அப்படி அலைய வேண்டும் என்கிற விதி இருக்கிறதே...   நீ மறுபடி கோவிலுக்குள் வந்து செல்ல வேண்டும் என்பது இறைவனாரின் கட்டளையோ என்னவோ...  அந்தத் தாமதத்தால் என்ன கெடுதல் தவிர்க்கப்பட்டதோ...  நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு..  நல்ல வழி தந்தான் எங்களுக்கு!

      நீக்கு
  16. பரிகார நெட்வொர்க்கும் இன்னும் முழுதாக ரீச் ஆகலை போல இல்லையா? சீக்கிரம் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளவை எல்லாம் உள்ளே வந்துவிடும் ....கனெக்ட் ஆகிடும் ஸ்ரீராம்....அதுவரை இப்படி மனம் தத்தளிக்கும்தான்.

    உங்கள் அனுபவங்களைச் சொன்ன விதம் நல்லாருக்கு. இது பலருக்கும் பயனுடையதாகவும் இருக்கலாம்...குறிப்பா வண்டிய வெளிய நிற்க வைச்சு அப்புறம் தேடுவது...பரிகாரம் செய்பவர்களுக்கு இந்தப் பரிகார அனுபவம் குறிப்புகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ போங்க..   எப்போ நினைச்சது அல்லது விரும்புவது நடக்குமோ..!

      நீக்கு
  17. சுஜாதா பற்றிய ஜெ மோ - //அவர்களை பேசவிட்டு அந்தச் சொற்களைக்கொண்டு சுஜாதாவின் ஆளுமையை கீழிறக்க ஊடகவியலாளர் முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.//

    எனக்கும் இது தோன்றுகிறது. ஏன்னா நம்ம ஊடகங்கள் அப்படியானவை...எதிர்மறையை ஊக்குவிப்பவை அதை வெளியிட்டு காசு பார்க்க டி ஆர்பி ரேட்டை எகிற வைப்பவை.

    அவர் மனைவியிடம் சில கேள்விகளை முன் வைக்கிறாங்க பேட்டி எடுப்பவர்கள். அதாவது உங்களை உங்கள் கணவர் எப்படி ட்ரீட் செய்ய்வார் எப்படி இருப்பார் வீட்டில் இப்படிப் பட்ட அனாவசியக் கேள்விகள்.

    ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் உள்ளவை வேறு. அதை வைத்து ஒரு சமூகம் எழுத்தாளரை எடை போடக் கூடாது. எழுத்துலகில் அந்த எழுத்தை மட்டும் பார்த்து சுஜாதாவை ஒரு எழுத்தாளராகப் பார்த்து விமர்சித்தால் நல்லது. ஊடகங்கள் - சுஜாதா என்றில்லை பல புகழ்பெற்றவர்களின் வீட்டு விஷ்யங்களில் உள் நுழைந்து பேசுவது என்பது ஆரோக்கியமான எழுத்து, ஊடகம் அல்ல. அந்தப் புகழ் பெற்றவர்களும், அல்லது மற்றவர்களும் தங்கள் வீட்டுக் கதைகளை ஊரறிய பேசுவது என்பது நாகரீகம் அல்ல,

    எல்லா குடும்பங்களிலுமே கணவன் மனைவி என்றால் கருத்து வேறுபாடுகள் என்று இருக்கலாம்தான். அதை இந்த ஊடகங்கள் காசு பார்க்கப் பார்க்கின்றன.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா - மனைவி கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.

      கீதா

      நீக்கு
    2. ஊடகங்கள் பரபரப்புக்கு அலைபவை.  அதனால் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கச்செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இதில் பலிகடா திருமதி சுஜாதா போன்றோர்.

      நீக்கு
  18. கவிதை யதார்த்தத்தைச் சொல்கிறதோ! கடைசி வரி ? யோசிக்க வைக்கிறதே ஸ்ரீராம்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல்.. காதல்... காதல்...
      காதல் போயின்....

      இன்னொரு காதல்!

      நீக்கு
  19. படம் சூப்பர்...அக்குழந்தையின் எக்ஸ்ப்ரஷன் very cute.

    "ஏம்மா.. நெட்ஃப்ளிக்ஸ் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.... கொஞ்சம் லேப்டாப்பை மூடி வச்சுட்டு நடிக்க வாம்மா... ஷாட் ரெடியாகி ரொம்ப நேரமா காத்திருக்கோம்!"//

    ஹாஹாஹா ரசித்தேன். மாயாபஜார் படமோ?

    அதில் இப்படி மாயக் கண்ணாடி காட்டுவாங்களே...எனக்கு இப்பவும் தோன்றும் இப்போதைய வீடியோ கால், போன்றவை எல்லாம் அப்ப பேசிருக்காங்களேன்னு..

    கீதா

    பதிலளிநீக்கு
  20. முதல் ஜோக், நர்ஸரி ஸ்கூல் ஜோக் - புன்சிரிக்க வைத்தன மற்றவை ம்ம்ம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ பொக்கிஷம் என்று நானும் வெளியிட்டு விட்டேன்.  சில சமயங்களில் ஆறு வறண்டு இருக்கும்!

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. கவிதையும் ஜோக்குகளூம் சுமார் ரகம். விஞ்ஞானிகள் எல்லோருமே மத்திய அரசு ஊழியர்கள் தானே! அவங்களூக்கு எப்படிச் சம்பளம் கம்மியாய் இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கம்மி என்று இல்லை..  அவர்களுக்கு தகுதியானதை விட குறைவாய் இருக்கும். 

      நீக்கு
  23. //'பெண் எப்படி, கடவுள் கைகாட்டுகிறாரா' என்று மகனைப் பார்த்தேன். என் எண்ணம் புரிந்து அவன் கட்டை விரலைக் கவிழ்த்தான். அவனும் சுற்றி இருந்த பெண்களை அளவெடுத்துக் கொண்டிருந்தான். இப்படிதான் திருவிடந்தையில் ஒன்றை விட்டோம்!//

    பரிகாரம் செய்ய வந்த பெண்கள் பொருத்தமாக இருக்கா என்று பார்த்தீர்களா! அப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?


    பரிகாரம் செய்து வந்த அனுபவங்களை கேட்கும் போது "இவ்வளவு கஷ்டப்பட்டு பரிகாரம் செய்து இருக்கிறார்கள், நல்ல இடம் அமைய அருள்புரி இறைவா! " என்று வேண்டிக் கொண்டேன்.

    //பரிகாரத்துக்கு பலன் வரும் வழியிலேயே கூட கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே வேண்டாம் என்று சொல்லி சென்றிருந்த ஒரு பெண் வீட்டார், மற்றும் இருவர் என்று உடனடியாக தொடர்பு கொண்டனர்.//

    விரைவில் நல்லது நடக்கட்டும் இறைவன் அருளால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பரிகாரம் செய்து வந்த அனுபவங்களை கேட்கும் போது "இவ்வளவு கஷ்டப்பட்டு பரிகாரம் செய்து இருக்கிறார்கள், நல்ல இடம் அமைய அருள்புரி இறைவா! " என்று வேண்டிக் கொண்டேன். //

      நெகிழ்ந்தேன். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  24. பார்த்ததில் ரசித்தது, உங்கள் கவிதை, நகைச்சுவை பகிர்வு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. //குறுக்குவழிப் பரிகாரங்கள்//
    வெளிப்படையாக ஒள்வுமறைவின்றி எழுதுறீங்கள்... எண்ணம்போல நல்லதே நடக்கும்.

    பெண் வீட்டாரும் இப்போஸ்ட்டையும் கொமெண்ட்ஸ் ஐயும் படிச்சுக்கொண்டிருக்கினமோ என்னமோ ஹாஹாஹா... படிச்சால்.. பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்குதோ இல்லையோ.. மாமாவை நிட்சயம் பிடிக்கும் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா.. இன்னும் சில அனுபவங்கள் இருக்கிறது... பின்னர் வரும்!

      நீக்கு
  26. உங்கள் எழுத்தில் இரு இடங்களில் எனக்கு அப்படியே ஒத்துப்போனது இரு விசயங்கள்...

    //நசுங்கி, பிழியபப்ட்டு இன்ச் இஞ்சாக நகர்ந்து அருகே ஈஸ்வரரை தரிசித்தோம். //

    ஹா ஹா ஹா இதேதான் காசி விஸ்வநாதரைத் தரிசித்தபோது ஏற்பட்ட அதே உணர்வு... என் வாழ்நாளில் அப்படி இடிபட்டதில்லை.. ஓ மை கடவுளே....

    //நாங்கள் வேறு, வயதான மாமியாரை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாமல், கூடவே அழைத்துச் சென்றிருந்தோம். //

    அம்மாவுக்கு காட்டவே இம்முறை அம்மாவையும் அழைத்துச் சென்றோம், எல்லா இடமும் வீல் செயார் ஒழுங்கு பண்ணிக் கூட்டிப்போனோம், அம்மா நல்லாவே நடப்பா இருப்பினும் தூரம் எனில் களைச்சிடுவா என்பதால, அந்த நெரிசலில் இடிபட்டு விஸ்வநாதரைத் தரிசித்து வெளியே வந்திட்டா.. உண்மையில் அந்த இடிபாட்டின்போது நான் நினைத்தேன், கடவுளே தெரியாமல் கூட்டி வந்திட்டோம், இந்த நெரிசலில் அம்மாவுக்கு ஏதும் ஆகிடுமோ என... ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  எனக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி அதிரா..   பஸ்ஸில் பிழியும் கூட்டம் என்றால் ஏறமாட்டேன்.  மின்வண்டியில் வழியும் கூட்டம் என்றாலும் ஏறமாட்டேன்!

      நீக்கு
  27. ஹா ஹா ஹா கல்யாண ராஸ்க் கற்பனை அழகு.. அதைப் பார்க்கையில் எனக்கு முன்பு படிச்ச ஒர்ன்று நினைவுக்கு வருது..

    "அன்பே
    இந்தக் காதல் கடிதத்தை
    உனக்காக எழுதுகிறேன்,
    உனக்கு என்னைப் பிடிக்கவில்லை எனில்,
    கிழிச்சுப்போட்டிடாமல்
    உன் தங்கையிடம் கொடுத்துவிடு"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... நானும் படித்திருக்கிறேன். சொல்ல வந்த கருத்தை கப்பென்று பிடித்தீர்கள்!

      நீக்கு
  28. ஹா ஹா ஹா படிக்க வைக்கவில்லை.. அதை எப்பவோ நானும் படிச்சிருக்கிறேன்..

    ஜோக்ஸ் அனைத்தும் சிரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் ஜோக்ஸ் ரசிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்! நன்றி அதிரா.

      நீக்கு
  29. என்னோட மீதிக் கருத்துரைகள் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவுதான் வந்ததது.  ஸ்பாமில் கூட எதுவும் இல்லை அக்கா.

      நீக்கு
  30. இந்தப் பரிகார காவியமும் அதில் ஜனங்களுக்கு இருக்கும் தீரா நம்பிக்கையும்.. அம்மம்மா சொல்லிமுடியாது. பாடல்பெற்ற தலங்களை இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள்.. பரிகார தலங்கள்தான் சாதாரணர்களை ஆட்டிப்படைக்கின்றன. என்ன செய்வது, எதைச் சொன்னாலும் சாந்தப்படாத மனதைத்தானே இறைவன் மனிதனோடு கூடவே கட்டி அனுப்பியுள்ளான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்பெற்ற தலங்களே பரிகார ஸ்தலங்களாகவும் மாறுகிறது.  எபப்டியோ கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது!

      நீக்கு
  31. அலைபேசி காலத்தில் அது கையில் இல்லாமல் எவ்வளவு அல்லாட வேண்டியிருக்கிறது? பரிகார பலனாக இறையருள் விரைவில் கூடி வரட்டுமாக!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!