ஜெயவிஜயா என்று சகோதரர்கள் பாடிய சில பக்திப் பாடல்கள் சிலவற்றை
இளவயதில் வானொலியில் கேட்டிருக்கிறேன். குறிப்பாக "திருமதுரை தென்மதுரை சிறந்து நிற்கும் தேன்மதுரை.. சிறந்து விளங்கும் மீனாட்சி... அருள்வழங்கும் அவள் ஆட்சி" என்னும் பாடல். அதைப் பகிரலாம் என்று தேடினால் நீண்ட நாட்களாய் தேடியும் கிடைக்கவில்லை.சமீபத்தில் அவர்கள் பாடிய இன்னொரு பாடல் நினைவுக்கு வந்து தேடியபோது உடனே கிடைத்தது. மலையாளத்தில் இருக்கிறது. அப்போது ரேடியோவில் கேட்டபோதும் மலையாளத்தில்தான் வந்ததா, இல்லை தமிழில் இருந்ததா என்று நினைவில்லை. ஆனால் இவர்கள் குரலில்தான் கேட்டிருக்கிறேன்.
வரிகள் இல்லாமல் பாடல் மட்டும் பகிர்கிறேன். ஜெயவிஜயா குரல் உங்களுக்கும் பரிச்சயமாய் இருக்கலாம்.
================================================================================
MGR படங்களுக்குதான் இளையராஜா இசை அமைத்ததில்லை. சிவாஜி நடித்த சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் . தீபம், தியாகம், பட்டாக்கத்தி பைரவன், ரிஷி மூலம், நல்லதொரு குடும்பம்...
எல்லாப் படங்களிலுமே நல்ல சில பாடல்கள் கிடைக்கிறது.
இன்று 1980 ல் வெளியான 'ரிஷிமூலம்' படத்திலிருந்து ஒரு பாடல். இசையைக் கேட்கும்போதே இளையராஜா என்று உணரவைக்கும் பாடல்.
டி எம் எஸ் குரலில் கண்ணதாசன் பாடல்.
கேரளாவின் கள்ளிக்கோட்டையில் படமாக்கப்பட்ட பாடலாம். எங்கு படமாக்கினார்கள் என்று எல்லாம் யார் கேட்டார்கள்!
மகேந்திரனின் .கதை. மேடைநாடகமாக நடிக்கப்பட்டிருந்தது திரைப்படமானபோது மகேந்திரனே வசனம் எழுதினார். இவர்தான் 'முள்ளும் மலரும்' படத்துக்கு சிவாஜியைவிட சிவாஜிராவ் பொருத்தமானவர் என்று தீர்மானித்தவர்! தங்கப்பதக்கம் கூட மகேந்திரன் கதைதான்.
இயக்கம் S P முத்துராமன். சிவாஜியுடனான அவரின் மூன்றாவது படமாம் இது.
சிவாஜி, கே ஆர் விஜயா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம்.
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
ஐம்பதிலும் ஆசை வரும்
என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே
என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே
வீடு வரும் போது ஓடி வரும் மாது
நினைவில் இன்னும் நிற்கின்றாள்
ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள்
அன்பு மிக்க தாயாகின்றாள் (ஐம்பதிலும்)
சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா
சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா
தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும்
தனியே நினைத்தாள் துடிக்கின்றாள்
காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது
கணவனுக்கே உயிராகின்றாள்.. (ஐம்பதிலும்)
தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே
தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே
பெற்றெடுத்த பிள்ளை
கற்றுக் கொண்ட தொல்லை
இடையில் இருக்கும் தடையாகும்
செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான்
என்னிடத்தில் தவறில்லையே.
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
முதற்பாடல் மிக இனிமையாக இருக்கிறது. இதன் தமிழ் வெர்ஷன் கேட்டிருக்கிறேன் என்ற சந்தேகம் வருகிறது.
பதிலளிநீக்குஆம். எனக்கும் கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை.
நீக்குஇரண்டாவது பாடலைக் கேட்டிருக்கிறேன், படமும் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதிரையிசை சகாப்தம் என்பது குறிப்பிட்ட வருடங்கள்தாம். பிறகு நம் மனம் வேறு ஒரு இசைக்குத் தாவிவிடுகிறது, அல்லது ரசிக்கும் மனோபாவம் மாறிவிடுகிறது, இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேர்வதுபோல
உண்மை. இப்போதும் சில பாடல்கள் வந்து மனதில் அமரும். ஆனால் ரொம்ப ரேர்.
நீக்கு,,,,இவர்தான் 'முள்ளும் மலரும்' படத்துக்கு சிவாஜியைவிட சிவாஜிராவ் பொருத்தமானவர் என்று தீர்மானித்தவர்! //
பதிலளிநீக்குஅதனாலதான் ஞாபத்துல அடிக்கடி வர்றாரு மகேந்திரன்.
மகேந்திரன் என்றால் உடனே நினைவுக்கு வருவது உதிரிப்பூக்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும் மலரும்.
நீக்கு*ஞாபகத்துல
பதிலளிநீக்குOK
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை செல்வராஜூ அண்ணா.. வணக்கம்.
நீக்குகவனம் தேவை. ஐம்பதுகளில் உள்ள நீங்களும் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாட ஆரம்பித்து விட்டீர்கள். அது ஆனியன் ரவா தோசை என்று மட்டும் ஆகட்டும். ஒரு பாஸ் + ஒரு சூப்பர் பாஸ் கூடவே இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குJayakumar
ஜாக்கிரதையாகவே இருக்கிறேன். இன்னும் இரண்டரை வருடங்களில் ஐம்பது தொடங்குகிறது.
நீக்குஜெய விஜயா அவர்களது பாடல்கள் 70/80 களில் இசைத் தட்டுகள்!..
பதிலளிநீக்குஇப்போது அப்படியல்ல...
இப்போது எப்படி கிடைக்கும்? இசைத்தட்டுகளே யாரும் வாங்குவதில்லை!
நீக்குஜெய விஜயா அவர்களது பாடல் சிறப்பு.. மகிழ்ச்சி..
பதிலளிநீக்குமகிழ்ச்சி, நன்றி.
நீக்குஇன்றைய இரண்டாவது பாடலை விரும்பிக் கேட்டதில்லை..
பதிலளிநீக்குகேட்பதில்லை..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஜெய விஜயா அவர்கள் பாடல்களை கேட்டு இருக்கிறேன். ஐயப்ப பூஜை சமயம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கோவில்களில் வைப்பார்கள்.
பதிலளிநீக்குவானொலியிலும் காலை பக்தி பாடல் நிகழ்ச்சியில் கேட்டு இருக்கிறேன்.
அடுத்த பாடல் கேட்டு இருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்த பின் மகிழ்ச்சியில் பாடும் பாடல்.
நான் பகிர நினைக்கும் ஜெயவிஜயா பாடல் கிடைக்கவில்லை. அதுபோலவே வீரமணி பாடிய "கற்பூர ஒளிதனிலே கந்தா உன் காட்சி கண்டேன்.." பாடலும் கிடைக்கவில்லை.
நீக்குமுதல் பாடல் மலையாளத்தில் முதன் முறையாக கேட்கிறேன் சிறப்பான, வேகமான உச்சரிப்பு.
பதிலளிநீக்குதமிழில் கேட்ட ஞாபகம் வருகிறது.
ரிஷிமூலம் பலமுறை கேட்டு ரசித்ததே...
ஆனால் தமிழில் பகிர கிடைக்கவில்லை. நன்றி ஜி.
நீக்குஜெயவிஜயா என்று தெரியாது ஸ்ரீராம். ஆனால் கேட்டிருக்கிறேன். ஊர்லதான் ஐயப்ப சீசன் வந்தா பாட்டும் இருமுடி கட்டலும் நடக்குமே. ஐயப்ப பூஜை என்று. இப்படித் துள்ளல் பாடல்கள் போடுவாங்க அதில் இதுவும் கேட்டிருக்கிறேம். தமிழிலும் கேட்டிருக்கிறேன். திருவனந்தபுரத்தில் இருந்தப்ப அங்கும் ஐயப்ப சீசன் அமர்க்களப்படும். அப்போ மலையாள வெர்ஷன் இந்தப்பாட்டு கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநம்மையும் ஆட வைக்கும் ரிதம்.
கீதா
எங்க ஊரும் கிட்டத்தட்ட மலையாள ஊர்தானே. நிறைய பக்திப்பாடல்கள் மலையாளப் பாடல்கள் கேட்டதுண்டு.
நீக்குகீதா
ஐயப்ப சீசன் வந்தால் ஏகப்பட்ட பாடல்கள் காதில் விழும் கீதா. சில மட்டுமே மனதில் நிற்கும்!
நீக்குரிஷி மூலம் படம் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எப்போ எப்படி என்று நினைவில்லை. இந்தப் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஆனா ஸ்ரீராம் இது இளையராஜா இசை என்று இவ்வளவு நாள் தெரியவில்லை. டக்கென்று என்னால் சொல்ல இயலவில்லை. இப்ப நீங்க சொன்னதும் ஓ என்று கேட்டப்ப தெரிகிறது. முன்னர் கேட்டிருந்தாலும் அதிகம் கவனித்ததில்லை என்பது தெரிகிறது எனக்கு இப்ப.
இளையராஜாவின் ஆரம்பக்காலங்கள் இல்லையா?
கீதா
கீதா
ஆம். ஆரம்பகால இளையராஜா. இளையராஜா என்று நன்றாகத்தெரியும்.
நீக்குஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடலை எப்போதுமே ரசித்ததில்லை..
பதிலளிநீக்குஅப்படியா? நான் எப்போதுமே ரசிப்பேன்!
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஆம்!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஐம்பதிலும் மட்டுமல்ல, சாகும் வரை ஆசை வரும்! ஆனால் அது உடல் ஆசை அன்று, உயிரும் உயிரும் ஒன்றிணைந்து எஞ்சியிருக்கும் வாழ்நாளை இறையருளை நோக்கிச் செலுத்தும் பற்றுகள் எல்லாம் நீங்கிய ஆசை!
பதிலளிநீக்குஇராய் செல்லப்பா சார் பின்னூட்டத்தில் பிழை இருக்கிறது. அவர் எழுதும் பின்னூட்டம், 'சென்னையிலிருந்து, லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து' என்றெல்லாம் முடியணும். இப்போ எங்கிருக்கிறார் என்ற தகவல் கருத்தில் மிஸ்ஸிங்.
நீக்குநன்றாகச் சொன்னீர்கள் ஸார்.
நீக்குஹா...ஹா.. ஹா.. நெல்லை அவர் உலகம் சுற்றும் வாலிபன்!
நீக்குஇரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குமுதலாவது இப்பொழுதுதான் கேட்கிறேன். இனிமை.
நன்றி மாதேவி.
நீக்கு