எனக்கு வேண்டாம் உங்கள் எட்டரை லட்சம்.....\
=========================================================================================
வல்லவனுக்கு டார்ச்சும் வெளிச்சம்...
======================================================================================================================================================================================================
நான் சிரிச்ச கதை (JKC)
1. மனிதர்கள் கண்ணுக்கு தேவர்கள் ஏன் புலப்படுவதில்லை ?
2. கோயில்களில் வெள்ளிகிழமையன்று இளைய தலைமுறை கூடுவது ஏன்?
3. ஜாதி இரண்டொழிய வேறில்லை. தேவ ஜாதி, மனுஷ ஜாதி.. இவர்களுக்குள் எப்படி விரோதம் உண்டானது.
4. மனுஷர்கள் தேவர்கள் ஆக முடியாது ஏன் ?
5. எருமைப்பால் உபயோகம் எப்படி தொடங்கியது?
Stop stop. இப்படி புதன் கேள்விகளை ஏன் இங்கே கதை சொல்கிறேன் பேர்வழி என்று அடுக்குகிறேன் என்று திகைக்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தான் இன்றைய கதை. அந்த விடை ஒன் லைனில் இன்றைய மொழியில் சொல்வதானால் லவ் ஜிகாத். ஒரு மனுஷ்ய புத்திரன் ஒரு தேவ குமாரியை காதலித்த கதை.
அவசரப்பட்டு கொல்லப்பட்ட கோவலனைப் போல காதலன் சிரச்சேதம் செய்யப்பட, அதன் பின்விளைவுகள் தான் மேற்கூறிய கேள்விகளும் பதிலும்.
நான் பிடிச்ச கதைக்கு ஒரு கதையைப் பிடிக்கலாம் என்று சிறுகதைகள்.காம் இல் நுழைந்தேன். கண்ணில் பட்டது அப்பாதுரை என்ற ஆசிரியர் பெயர். இவர் சிறுகதைகள் தளத்தில் 43 கதைகள் வெளியிட்டுள்ளார் என்று தெரிந்தது. அதில் தைவாதர்சனம் என்ற தலைப்பு ஈர்த்தது. சற்றே நீஈண்ட கதை. 24 பக்கங்கள். கதை ஒரு கதா பிரசங்கமாக அமைய ஒரே சிரிப்பு தான்.
நமக்கு ஆசிரியர் பற்றிய விவரங்களும் வேண்டுமே. கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் ஏகப்பட்ட அப்பாதுரைகள். ஆசிரியர் அப்பாதுரையாக இருவர். ஒருவர் கா. அப்பாதுரை என்ற பன்மொழிப் புலவர் மற்றவர் இக்கதையின் ஆசிரியர். நமக்கு மிகவும் பரிச்சயமானவர்.
இந்தக் கதை 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவருடைய தளத்தில் நான்கு பாகங்களாக வெளி வந்துள்ளது, சுட்டிகள் கீழே
====>பாகம் 1<==== ====>பாகம் 2<==== ====>பாகம் 3<==== ====>பாகம் 4<====
sirukathaigal.com இல் வெளிவந்த முழுக் கதையின் சுட்டியும் தந்துள்ளேன்
முழுக்கதையும் படிக்க இயலாதவர்களுக்குக் கதைச் சுருக்கத்தைக் கீழே தந்துள்ளேன். கதைச் சுருக்கம் எப்போதும் போல ஆசிரியரின் எழுத்துக்களே.
கதைச் சுருக்கமே இரண்டு
பகுதிகளாக வெளியிட வேண்டி இருக்கிறது. ஏன் எனில் இக்கதையின் சிறப்பு, கதை
சொல்லப்படும் விதத்திலும், சொல்லப்படும் மொழியிலும்
தான் உள்ளது. முதல் பகுதி இதோ.
தைவாதர்சனம்
கதையாசிரியர்: அப்பாதுரை
கதைச் சுருக்கம். ½
ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும்,
முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை
ஆரம்பிக்கிறேன்.
கோவில்ல நிக்கக்கூட இடமில்லை. வயசுப் பொண்களும் பையன்களும் கோவிலைச் சுத்தி சுத்தி வரா, அவாளப் பாத்தே நேக்கு ஜன்ம சாபல்யமான மாதிரி ஆயிடுத்துன்னா பாருங்கோ.
பக்கத்துல நின்னுண்டிருந்தவர்ட்ட கேட்டேன்: “இந்த மாதிரி யுவக்கூட்டம் எல்லாம் தெய்வ பக்தியோட இருக்கறதனால தானே, லோகத்துல சன்மார்க்க சித்தம் நெலச்சு நிக்கறது?”
அதுக்கு அவர் சொன்னார்: “நீங்க வேறே, இவாள்ளாம் சாமி கும்பிடவா வந்திருக்கா? பையன்கள்ளாம் பொண்களை சைட் அடிக்க வந்திருக்கா. பொண்களோ சைட் அடிக்கறத அனுபவிக்கறதுக்கு வந்திருக்கா”.
“தைவாதர்சனம்”னேன்.
“என்ன சொல்றேள், எங்க தெய்வ தரிசனம்?”னா மாமி.
“தர்சனமில்லே, அதர்சனம். சம்ஸ்க்ருதம். தைவ அதர்சனம்னு பிரிக்கணும். அதர்ஸ்யம்னா கண்ணுக்குத் தெரியாததுன்னு அர்த்தம். இவாள்ளாம் பாக்கறது, கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தை”னு சொன்னேன்.
இதுக்குப் பூர்வீகம் உண்டு, தெரியுமோ?
ஆதி நாள்ல இப்ப மாதிரி இல்லை, ரெண்டே ஜாதி தான். தேவ ஜாதி, மனுஷ ஜாதி.
கதையைக் கேளுங்கோ, தேவ ஜாதியும் மனுஷ ஜாதியும் ஒண்ணா இருந்தா. அப்பல்லாம் தேவாள் கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்தா.
தேவாளும் மனுஷாளும் பழகிண்டாலும் பேசிண்டாலும், பேதம் இருக்கத்தான் செஞ்சுது.
தேவாளுக்கும் மனுஷாளுக்கும் தனித்தனி ஜாகை. ஆனா, கோவில்ல மட்டும் நிஜமாவே க்ருஷ்ணரையும்,
ராமரையும், மணிகண்டனையும், மகேஸ்வரனையும் பாக்கலாம்.
“அப்றம் எப்படி எல்லாம் கல்லா மாறிப் போச்சு?”ன்னு கேக்கறேளா?
வாஸ்தவமான கேள்வி. தேவா மனுஷா சகபாவம், சகஜீவிதம் எல்லாம்… ஒரு நாள் சடால்னு மாறிப் போச்சு.
ஏன் மாறிப் போச்சுன்னா? அதுக்குக் காரணம் இருக்கு. அனுராகம். மதனசந்தேசம். ப்ரேமை. அதாண்ணா லவ்வுங்கறாளே, அதே தான். அழகா காதல்னு சொல்லலாம், லவ்வு ஜிவ்வுன்னு இழுத்துண்டும் சொல்லலாம். அந்தக் கதையத்தான் சொல்லப் போறேன்.
ஒரு நாள் சதஸ்ல தேவாள்ளாம் ஒக்காந்துண்டு இருக்கா. சதஸ் எல்லாம் கோவில்ல தான்.
“அப்பா, நமஸ்காரம்”னு விஷ்ணுவுக்கு ஒரு கும்பிடு போட்டு பேச ஆரம்பிக்கறார் பிரம்மா.
“ஆனா பாருங்கோ, நம்ம மூணு பேர் வேலையை முடிச்சப்புறமும் நிறைய வேலை இருக்கே? நம்ம லோக பரிபாலன ஸ்ட்ரேடஜில ஒண்ண மறந்துட்டோம். செத்துப் போனவாளை யார் கவனிக்கறது? அவாளையெல்லாம் வகை வகையா பிரிச்சு ஸ்வர்க்கம், நரகம், அவாந்த்ரம்னு ஒவ்வொரு இடத்துக்கா அனுப்பிச்சு, தர்ம பரிபாலனம், தண்டகம் கொடுத்து எல்லாம் மேனேஜ் பண்ண ஆளில்லை.”
“தர்மராஜனுக்கு இந்த உத்யோகம் பிடிக்கலே. நோட்டீஸ் குடுத்து யுகமாப்போறது. நரக லோகத்லயும், அவாந்த்ர லோகத்லயும், ஆபீஸ் வச்சுண்டிருக்கணுமே? ஒத்தருக்கும் பிடிக்கலை”னார் பிரம்மா.
“இது வெறும் லேபர் பிராப்ளம்”னுட்டு தொண்டைய கனச்சுண்டார் நீலகண்டர். “இனிமே இது நாலாவது தேவதொழிலா இன்னிலேந்து முக்யத்வம் கொடுத்தாக வேண்டியது. இந்த வேலையைச் செய்யறவருக்கு மும்மூர்த்திகளுக்கு ஈடான பவரும் ரைட்டும் உண்டு. ம்ருத்யூ பத்தின முழு பிராபிட் அன்ட் லாஸ் பொறுப்புண்டு. த்ரிலோக பரிபாலன எக்சகியூடிவ் மேனேஜ்மென்ட்ல அவா ஒத்தர். இப்படி ஒரு வேகன்சி நோட்டீஸ் போடுங்கோ”னு பிரம்மாகிட்டே சொல்றார். “ஆம்பிளை தேவாள்ளாம் அப்ளை பண்ணலாம்”.
தேவராஜ்ய சபைல இப்படி இருக்கறச்சே, மனுஷ்ய ராஜ்யத்துக்கு வருவோம்.
பிரதாபன், பிரதாபன்னு ஒரு ராஜா. மனுஷ்ய ராஜா. அவனோட வீரமும் தீரமும் இந்திரனுக்கு இணையாக்கும். இந்த பிரதாப மகாராஜாவுக்கு ஒரே ஒரு குறை. தானும் ஒரு தேவனா இல்லையேன்னு.
இந்தப் பிரதாபனுக்கு, பிரதாபகுமாரன் பிரதாபகுமாரன்னு ஒரு புத்ரன். யுவராஜன். அவனுக்கு இருபது வயசாறது.கோவில்ல போன பிரதாபகுமாரன், ஒவ்வொரு பிராகாரமா சுத்திண்டிருக்கான். பர்ணசாலை, யாகசாலையெல்லாம் தாண்டி ந்ருத்யசாலைல சப்தம் கேக்கறது. ஜல், ஜல்னு சலங்கை சத்தம். யாரோ ஆடறா மாதிரி தோணறது அவனுக்கு. மொள்ள நுழைஞ்சு பாக்கறான். அங்க ஒரு தேவ பொண்ணு தன்ன மறந்து நாட்யமாடிண்டிருக்கா.
இடுப்பில செருகிண்டிருந்த கச்சையும், தாவணியும் விழுந்தது தெரியாம, இவனைப் பாத்துட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறா. ஒண்ணும் பேச்சே காணோம்.
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இலனு தாடிக்காரப் பொலவர் சொல்லலியோ?
எத்தனை நாழி இப்படி நின்னுண்டிருந்தாளோ, அவாளுக்கே தெரியாது. சட்டுனு முழிச்சுக்கறா ரெண்டு பேரும். பிரதாபகுமாரன் சிம்ம நடை நடந்து, அவ கிட்டே ரொம்பப் பக்கத்துல போய் நின்னு, அவளோட மேலணியை எடுத்துக் குடுக்கறான். அவ வெக்கத்தோட வாங்கி இடுப்பையும் மாரையும் போத்திக்கறா.
பிரதாப ராஜா நின்னுண்டிருக்கார். அவ அந்தண்டை போனதும், ராஜா கேக்கறார்: “நான் இங்கயே நின்னுண்டிருக்கேன். ரெண்டு பேரும் என்னைக் கவனிக்கலையா?”. ராஜகுமாரன் வெக்கப்படறான்.
“குமரா, அவ தேவகுலம். நாம மனுஷகுலம். சேராது கண்ணா. மறந்துடு. வா, போலாம்”னு சத்தமா, கர்டனுக்குப் பின்னாடி இருந்தவ காதுல விழும்படி சொல்லிட்டு புத்திரனை இழுத்துண்டு போறார்.அவ கண் கலங்கியிருக்கு. அவனைத் துளைக்கறது. ‘நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?’னு பாடறாப்ல மாதிரி இருக்கு.
அப்பா அவளை மறந்துடுன்னார். பையனோ அவளைத் தவிர, மிச்ச எல்லாத்தையும் மறந்துட்டான். சாப்பாடில்லே, தூக்கமில்லே. ‘நின்னா, நடந்தா,மூச்சு விட்டா அவதான் அவனுக்குத் தெரியறா.அவ என்னடான்னா, அவனை விட பரமமா உருகிண்டிருக்கா அவனையே நினைச்சுண்டு இருக்கா.
அத்யந்த ப்ரேமை இருக்கு பாருங்கோ. விசித்ரமானது. இழந்துட்டா அப்புறம் வராது.இது ப்ரேமை, இது உயிரைச் செதுக்குற காதல்னு உணர்ந்து உடனே அதைத் தேடிப் போய்ப் பிடிச்சு உசிருக்குள்ள சேத்துடணும்.
அவனோட அந்தப்புறத்துல வந்து நிக்கறா. அங்க வந்தவ, அவனோட பரிதாப நிலைமையப் பாக்கறா. அங்கே அவனைத் தவிர வேற யாருமில்லையா.. டக்குனு அவன் கண் முன்னாடி தெரியறா.அதிர்ந்து போன பிரதாபகுமாரன், அவளைப் பாத்ததும் பிரசன்ன குமாரனாயிடறான். ஓடிப் போய் கட்டிக்கறான். எப்படி இருக்கேனு கேக்கறான். ‘இளைய கன்னியின் இடை மெலிந்ததோ’னு பாடறான்.
“இத்தனை நெருக்கமாயிட்டோம், உன் பேர் கூடத் தெரிஞ்சுக்கலையே, உன் பேர் என்ன?”னு
கேக்கறான்.
“உனக்கு எப்படி கூப்பிடணுமோ அப்படி கூப்பிடேன்?”னு கொஞ்சறா.
“உன்னைப் பார்த்துண்டே இருக்கணும் போலருக்கு”னுட்டு, “அதனால உன்னை ப்ரியதர்சனின்னு கூப்பிடறேன்”ங்கறான்.
“ப்ரியதர்சனி, எனக்கும் பிடிச்சிருக்கு”ங்கறா அவ.
அவ சொல்றா: “இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கோவிலுக்கு வராப்ல வா. நீ என்னைப் பாக்கணும்னா இனிமே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்னிக்கும் சாயரட்சைல கோவில் நிருத்யசாலைக்குப் பின்னால இருக்கற சிற்பக் கூடத்துக்கு யாருக்கும் தெரியாம வா, நாம் சேந்து இருக்கலாம்”.
அவன் சரிங்கறான். சந்தோஷமா அவனைக் கட்டிக்கறா. பட்டுனு காணாமப் போயிடறா. சாயந்திரம் அவா ரெண்டு பேரும் அபிசாரகமா சிற்பக் கூடத்துல மீட் பண்றா. சந்தோஷமா இருந்துட்டு, மறு நாள் அவா அவா இடத்துக்குப் போயிடறா.
தேவராஜ்ய நோட்டீஸ் போர்ட்ல வேகன்சி என்ன போட்டிருக்கா, என்னென்ன உபாதிதம், க்வாலிவிகேஷன், போட்டிருக்கானு பாக்க தேவாள்ளாம் ஓடினப்போ, ஒரு மனுஷ்யனும் அவா பின்னாடி ஓடினான்னு சொன்னேனில்லையா அவன் அதெல்லாம் படிச்சுட்டு, நேரா பிரதாப ராஜனண்டை போய் சேவிதம் பண்ணிட்டு, “மகராஜா, மகாபிரபு, தேவசபைல என்ன நடந்ததுன்னு தெரியலை, ஆனா நாலாவது மூர்த்தி ஒருத்தரத் தேடி விளம்பரம் பண்ணியிருக்கா”னு சப்ஜாடா விவரம் சொன்னான்.
பிரதாப ராஜாவுக்கு இது நல்ல சான்சு, ஆனா எப்படி தேவனாறதுனு தெரியலையேன்னு வருத்தமா இருக்கு. ம்ருத்யுன்னாலே மனுஷ்ய ஜாதிக்குத் தான். தேவாள்ளாம் அமரத்வம் கொண்டவாளாச்சே, அவாளுக்கு எப்படி ம்ருத்யுவ மேனேஜ் பண்ணத் தெரியும், மானுட ஜன்மமாயிருந்ததாலே தனக்கத்தனை தெரியும், தானில்லையோ இந்த வேலைக்கு உசிதம்னு நினைக்கறார்.
ஒவ்வோரு தேவாளாப் பாத்து அட்ஜஸ்ட் பண்ண நெனச்சு எதுவுமே நடக்கலே. அப்ளை பண்ண கடைசி நாளோ நெருங்கிண்டு இருக்கு. இந்த வேலையை எப்படியும் வாங்கியே தீரணும்னு வைராக்கியமா இருக்கார். அப்படித்தான் இருக்கணும் தெரியுமோ? ஒரு லட்சியம்னு ஒரு கோல்னு இருந்தா அதை அடைஞ்சே தீரணும்னு செயல்ல இறங்கணும். சும்மா ஆசைப்பட்டா போறாது.
இத்தனை நாளா நேரடியா ருஜ்யுத்வமா முயற்சி பண்ணி எதுவுமே நடக்கலே. இனிமே, இன்டைரக்ட் அப்ரோச்ம்பா பாருங்கோ,
தேவாள் மட்டுந்தான் அப்ளை பண்ணமுடியுங்கறது பெரிய சிக்கல். இதை மீற ஏதாவது அடாவடி பண்ணினாத்தான் உண்டுனு தீர்மானமாத் தெரியறது பிரதாப ராஜாவுக்கு. அடாவடிச் சக்ரவர்த்தி யாருன்னு யோசிக்கறார். கிங் ஆஃப் தில்லுமுல்லுனா ஒருத்தர் தான் இருக்க முடியும். மகாவிஷ்ணுவைப் பார்க்கிலும் அழிச்சாட்டியக்காரர் உண்டோ?
வெள்ளிக்கிழமை. சாயந்தரம் வெளக்கேத்தி வச்ச எல்லார் ஆத்துக்கும் மகாலக்ஷ்மி ஃப்லையிங் விசிட் அடிப்பார்னு தெரியும். அப்புறம் விஷ்ணுவோட சேந்து கோவில்ல இருப்பார்னும் தெரியும். இன்னிக்கு மகாலக்ஷ்மி மூலமா விஷ்ணுவை மடக்கிட வேண்டியதுனுட்டு சேவகாளைக் கூப்பிட்டு உசந்த குங்குமமா நாலு கிலோ பார்சல் பண்ணச் சொல்றார்.
இங்க இப்படி இருக்கச்சே, தேவ ஜாகைலயும் ஒரு அமர்க்களம் நடக்கறது. நம்ம ஹீரோயினோட அப்பா தேவருக்குக் கோபம் பொத்துண்டு வர்றது. சேடிப் பொண்ணு பிரதாபகுமாரனைப் பத்தி எல்லாம் சொல்லிடறா. “இன்னிக்கு வெள்ளிக்கிழமை, இன்னிக்குப் போனேள்னா கையும் களவுமா பிடிச்சுடலாம்”னு சொல்லிடறா. ஒடனே அந்த தேவ தகப்பனாரும் கிளம்பறார்.
கோவிலுக்கு வந்த பிரதாப ராஜா மகாலக்ஷ்மிக்காக வெயிட் பண்றார். இன்னொரு ஆசாமி ஒளிஞ்சுண்டிருக்கறதைப் பாக்கறார். யாருன்னு பாத்தா, நம்ம ஹீரோயினோட அப்பா. “என்னய்யா, உன் பையன் அடிக்கற கூத்து!”னுட்டு எரைச்சல் போடறார், தேவப்பொண்ணோட தேவத்தோப்பனார்.
“எல்லாம் உம்ம பொண்ணோட வேலை, என் பையன் பரம சாதுவாக்கும்”ங்கறார் பிரதாப ராஜா.
“பரம சாது பண்ற வேலையை பாரும்”ங்கறார் தேவ தோப்பனார். ரெண்டு பேரும் உள்ளே பாக்கறா.
அங்கே பிரதாப குமாரன் ப்ரியதர்சனியோட வஸ்த்ரத்தையெல்லாம் அச்சிதம் பண்ணிண்டிருக்கான். அவஸ்த்ரமா, பிறந்த மேனியா, இருந்தாலும் ப்ரியதர்சனி அவனோட கை படற போதெல்லாம் வெக்கத்துல சொக்கிப் போறா. ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’னு அவன் பாடறான். அவ முனகல்லே ம்யூசிக் போடறா. சித்த நாழிலே ரெண்டு பேரும், அப்ர்யம்னு சொல்வா, அதாவது காத்தை மட்டும் உடுத்திண்டு இருக்கறதுக்கு பேரு அப்ர்யம், அப்படி இருக்கா. பிரதாபகுமாரன் மடில, அவ கந்தர்வ வீணையா மாறிடறா.
தேவ தோப்பனாருக்கோ ஆத்திரம் வந்து அவா ரெண்டு பேர் முன்னாலயும் கோபாவேசத்தோடு பிரசன்னமானார். “எம்பொண்ணையா இப்படிக் கலைக்கறே பாதகா!”னுட்டு, என்ன பண்றோம்னு தெரியாம பிரதாபகுமாரனை தலையைச் சீவிக் கொன்னுட்டார்.
தேவ தோப்பனார் வாஸ்தவமாவே கொலை பண்ணிட்டார். ப்ரியதர்சனிக்குப் பொத்துண்டு வராதோ? பிரதாபகுமாரனைப் பாக்கறா ப்ரியதர்சனி.. தாங்க முடியாத அதிர்ச்சில, “அப்பா, என்ன காரியம் பண்ணிட்டேள்!”னு கதறித் துடிக்கறா ப்ரியதர்சனி.
தேவ தோப்பனாருக்கு இப்பத்தான் மண்டைல அறைஞ்ச மாதிரி, தான் பண்ணின தப்பு தெரிஞ்சு போறது.
என்ன பண்றதுன்னு பாக்கறார். மனுஷா மேலே பழி போடறார். “பிரதாபா.. என்னை என்ன கார்யம் பண்ண வச்சுட்டே பார்.. இந்தப் பாவம் உன்னை சும்மா விடாது”ங்கறார்.
பிரதாப ராஜா இன்னும் “குமரா குமரா”னு அலறிண்டிருக்கார்
தேவ தோப்பனாரே காருண்யமே இல்லாம, “போறும். எழுந்து வா. இவன் மனுஷ்யன், நாம தேவ குலம். என் பேச்சைக் கேக்காம நீ இவனோட எப்படி சேந்திருக்கலாம்? ஜாதி வித்யாசம் கிடையாதா? நம்ம அந்தஸ்து என்ன, இவன் உனக்கு தகுதி கெடயாது. அதுவும், என் கண் முன்னாலயே இப்படிக் கொஞ்சி விளையாடறேளே, உங்களுக்கு வெக்கமா இல்லை?”னு பொண்ணைக் கத்தறார்.
பிரதாப ராஜா கீழே விழுந்து கெடக்கற சீமந்தபுத்ரனைப் பாத்துக் கதறி அழறார். “அக்கிரமம்.. அக்கிரமம்..”னுட்டு தலைலயும் மார்லயும் அடிச்சுக்கறார். பட்டாபிஷேகம் பண்ணி மகராஜாவா இருக்க வேண்டியவன் இப்படி பார்ட் பார்டா கழண்டிருக்கானேனு அவர் மனசு துடிக்கறது. “நீயே சொல்லும்மா.. ஆத்மார்த்த காதலைத் தவிர இவன் செஞ்ச பாவம் என்னனு சொல்லுமா.. இதுக்காகவா இவனை சீரும் சிறப்புமா வளர்த்தேன்..”னு பாசமலர் சிவாஜிகணேசன் மாதிரி அழறார். “கொலையப் பண்ணிட்டு காணாமப் போறதுதான் தேவ நியமமா! கேப்பாரில்லையா?”னு விடாமப் புலம்பறார்.
ப்ரியதர்சனிக்கு அசாத்ய கோபம் வர்றது. கொஞ்சம் கூட யோசிக்காம, சாபம் குடுக்கறா. “உருத்தெரியலேனு கிண்டலா பண்றேள்? நேருக்கு நேர் நின்னு பேச தைர்யமில்லாத தேவகூட்டம் இந்த க்ஷணத்துலேந்து கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போகட்டும். உங்க கண் முன்னாடி இப்படி நடந்ததுன்னு தானே கோபம்? இனிமே மனுஷ்யாளும், மனுஷ்யாள் சம்பந்தப்பட்ட எதுவுமே, தேவாள் கண்ணுக்குத் தெரியாம போகட்டும். ஒண்ணா இருந்தாத்தானே மனுஷ்ய ஜாதி, தேவ ஜாதின்னு பேதம் பேசறேள்? இனிமே மனுஷாள் இருக்கற லோகத்துல உங்களுக்கு இடம் இல்லாமப் போகட்டும். ஆத்மார்த்தமான நேசமும் காதலும் பக்தியும் தேவாள் மேலே இருக்கணும், ஆனா தேவாளோட கலந்து இருக்க மட்டும் மனுஷாளுக்கு பாத்யதை கிடையாதுன்னு சொல்றேளே? இனிமே ஜீவராசிகள் யார் கண்ணுக்கும் தெரியாம தேவாள்ளாம் மறஞ்சு போகட்டும்”னு சீரியல் சாபம் குடுத்துடறா. சாபம் குடுத்துண்டே பிரதாபர் கொண்டு வந்திருந்த நாலு கிலோ குங்குமத்தை கோவத்துல அங்கயும் இங்கயும் வாரி இறைக்கறா ஆக்ரோஷமா. அப்புறம் குலுங்கி அழறா. மகா ஆக்ரோஷமான காட்சியைப் பாத்துட்டு பிரதாப ராஜாவே பையனை மறந்துட்டு பயந்து நடுங்க ஆரம்பிச்சார்.
கரண்ட் போனதும் லைட் அணையற மாதிரி பொட்டு பொட்டுனு தேவாள்ளாம் காணாம போயிண்டிருக்கா. சிவசபை, பிரம்ம கூட்டம், விஷ்ணு பரிவாரம் எல்லாம் ஒத்தொத்தரா அஞ்ஞாத பெவிலியனுக்குப் போயிண்டிருக்கா.
சாபம் தனக்கும் பலிக்கும்னு தெரியாம கொடுத்தாளோன்னோ நம்ம ஹீரோயின் ப்ரியதர்சனி? கொஞ்ச நாழில அவளும் காணாமப் போயிட்டா.
நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பிரசங்கத்துல சொல்றேன்.
தொடரும்.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்.. வாங்க..
நீக்குசிறப்பான தேர்வு.
பதிலளிநீக்குநமது. மூன்றாம் சுழி அப்பாதுரை ஸார் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.
இயல்பான நகைச்சுவையாய் இருக்கும். அதான் அதன் சிறப்பு. பலதடவைகள் பீறிட்ட சிரிப்பில் சிக்கி அவஸ்தை பட்டிருக்கிறேன். நினைத்து நினைத்து சிரிக்கற சிரிப்பும் சேர்ந்து கொள்ளும். "என்ன இப்படி உங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறீர்கள்? சொல்லிட்டுத் தான் சிரிங்களேன்.." என்று என் வீட்டில் கூட கேட்டிருக்கிறார்கள்.
அந்த 'மூன்றாம் சுழி' காலம், இப்போது நினைத்தால் கூட பெருமிதமாக இருக்கிறது.
வணக்கம். வருகைக்கு நன்றி. சுட்டிகளில் சென்று முழுக்கதையையும் வாசிக்கக் கோருகிறேன். நான் abridged version தான் இங்கு தந்திருக்கிறேன்.
நீக்குJayakumar
நான் ஏற்கனவே வாசித்து ரசித்த கதை தான் இது ஸார்.
நீக்குஇப்போ வாசிக்கும் பொழுது கொஞ்சம் மெச்சூர்டு ஸ்டேஜில் அணுகுகிற மாதிரி இருக்கு. அப்பாதுரையின் நகைச்சுவை புதுமைப்பித்தன் ரகம்.
நீக்குஎந்த ஜானரிலும் கலக்கும் திறன்மிகு எழுத்தாளர். என்ன, ... செவ்வாய்க்குதான் கதை தர மாட்டேன் என்கிறார்.
நீக்குநான் இன்றுதான் அந்தக் கதையை வாசித்தேன், பின்னூட்டங்கள் உட்பட. அது ஒரு நிலாக்காலம் என்று மனதில் தோன்றியது. நான் 2012ல் இணையத்துக்கு வரவில்லை
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாங்க துரை அண்ணா.. வணக்கம்.
நீக்குஅட்டுக் கதைகளுக்கோ, இல்லை அன்றே முடியும் கதைகளுக்கோ சுட்டி கொடுக்கலாம். இந்த மாதிரி, படிக்க ரசனையாக இருக்கும் கதைக்குச் சுட்டி கொடுக்கலாமோ?
பதிலளிநீக்குமுழுக் கதையும் வாசித்து ரசித்தேன். அப்பாதுரை ரொம்ப நல்லா எழுதியிருக்கார். பாராட்டுகள்.
இரண்டாம் பாகம் வெளியிடவேண்டிய தேவை இல்லை, எல்லாத்தையும் படிச்சுட்டேன் என்கிறீர்களா!
நீக்குஆமாம். இன்றைக்கு ஜெயகுமார் சாரின் தயவால், என் காலை வேலைகள் எல்லாமே பாதிக்கப்பட்டன. அப்பாதுரையின் முழு கதையையும் படித்தேன், நடைப்பயிற்சிக்குப் போக 1/2 மணி தாமதம், யோகா வகுப்பு கட்.
நீக்குநான் நேரத்துக்கு ஆயுர்வேத மருந்து சாப்பிடுவதை மறந்தேன்!
நீக்குபடிக்காத பழைய பதிவுகளே இப்படிப்பட்ட அழகிய எழுத்துக்களைக் கொண்டிருக்கும்போது, எதற்காக, புதிய பதிவுகள் இவர்கள் (அப்பாதுரை, தில்லி வெங்கட், ஜீவி போன்று) எழுதவில்லையே எனக் கவலைப்படணும்?
பதிலளிநீக்குஎதற்கு என்றால் காலத்தின் அனுபவ மாற்றம் இவர்களின் எழுத்துக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காகத் தான். அந்த மாற்றம் எழுதியவருக்கேத் தெரிவது தான்
நீக்குஅனுபவ ஞானம்.
உன்னிப்பாக கவனித்தால் நல்ல எழுத்தாளர்கள் அவரவர் எழுத்தில் அந்தந்த கால 'அவர்களை'ப் பிரதிபலித்திருப்பது புரியும்.
கேள்வியை நான் ஆதரிக்கவில்லை. பதிலை வழிமொழிகிறேன். பழசு இருக்கும்... எப்போதும் புதுசும் ரசனைதான்.
நீக்குஅப்புறம் ஏன் அனுபவ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள்? அப்பாத்துரை சாரோ இல்லை ஜீவி சாரோ முன்பு போல் எழுதிப் பார்த்திருக்கிறோமா? (தொடர்ந்து எழுதி). சலிப்பு வந்துவிடுகிறதோ? இல்லை எழுதி எழுதி என்னத்தைக் கண்டோம் என்று நினைத்துவிடுகிறார்களா? - புதன் கேள்வி
நீக்கு//அப்புறம் ஏன் அனுபவ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள்? //
நீக்குஒரு சலிப்பு வந்து விடுகிறதோ... நெல்லை.. உங்களிடமிருந்து சில கதைகள், சில திங்க படைப்புகளை எதிர்பார்க்கிறேன்!
உன்னிப்பாக கவனித்தால் (நல்ல எழுத்தாளர்கள்) அவரவர் எழுத்தில் அந்தந்த கால 'அவர்களை'ப் பிரதிபலித்திருப்பது புரியும்.//
நீக்குமிகவும் சரியே ஜீவி அண்ணா. என் எழுத்திலேயே - நல்ல எழுத்தாளர் என்ற இரு வார்த்தைகளைத் தவிர்த்து - நான் கல்லூரி சமயத்தில் எழுதியதற்கும் அதன் பின் நிறைய கேப் ஆனால் அவ்வப்போது எழுத முயற்சித்து ஆனால் எல்லாம் பாதியிலேயே இப்ப மட்டும் என்ன அப்படித்தான் - ப்ளாகில் தொடங்கியதற்கும் நிறைய மாற்றம் தெரிகிறது. பழையதை வாசிக்கறப்ப இப்ப உள்ள மெச்சூரிட்டிக்கும், என் பார்வைக்கும், இப்போதைய சிந்தனைக்கும் - இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு.
கீதா
ஒரு சலிப்பு வந்து விடுகிறதோ...//
நீக்குஸ்ரீராம் சலிப்பும் வரலாம்....ஆனால் சலிப்பு என்பதை விட நமக்கு அமையும், மாறும் சூழல்களும், மன ஓட்டங்களும், பொறுப்புகள் கூடும் போது அதுவும் காரணம். நேரம் வேறு வேலைகளுக்கு என்று ஆகிவிடும் போது எழுதும் போது சில மிஸ் ஆகத்தான் செய்கிறது. என் தனிப்பட்ட அனுபவத்தில் சொல்வது.
கீதா
பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே நல்ல செய்திகள். கொஞ்சம் முடியாத முதியவர்களுக்கு இப்படித் தனியாகப் பந்தி போடுவது நல்ல விஷயம்.
பதிலளிநீக்குகீதா
ஆட்டோல 8 பேரா!!!!!!!!!!!!!!ஆஆஆஆஆஆ! அதான் வெயிட் தாங்காம கவுந்துருக்கும்னு தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
2012 ல ப்ளாக் தொடங்கலையே 13 லதான் அப்புறம் தான் அப்பாதுரை ஜி யின் பதிவுகள் அப்புறம் லேட்டாகத்தான் தொடங்கினேன். அந்தப் பல்கொட்டிப் பேயை மறக்க முடியுமா!!
பதிலளிநீக்குஅதனால் இதை மிஸ் செய்திருந்திருக்கிறேன். இப்ப ஜெ கே அண்ணாவின் மூலம்.....வாசித்து விட்டேன் எல்லா பாகங்களுமே. சிரித்து முடியலை. ரசித்து வாசித்தேன்.
அப்பாதுரை ஜி யின் எழுத்தைச் சொல்ல வேண்டுமா? எல்லா வகையிலும் எழுதும் திறன் பெற்றவர். அவரது எழுத்தை ரசித்து வாசிப்பவள்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
2012 ல ப்ளாக் தொடங்கலையே 13 லதான் அப்புறம் தான் அப்பாதுரை ஜி யின் பதிவுகள் அப்புறம் லேட்டாகத்தான் தொடங்கினேன். அந்தப் பல்கொட்டிப் பேயை மறக்க முடியுமா!!
பதிலளிநீக்குஅதனால் இதை மிஸ் செய்திருந்திருக்கிறேன். இப்ப ஜெ கே அண்ணாவின் மூலம்.....வாசித்து விட்டேன் எல்லா பாகங்களுமே. சிரித்து முடியலை. ரசித்து வாசித்தேன்.
அப்பாதுரை ஜி யின் எழுத்தைச் சொல்ல வேண்டுமா? எல்லா வகையிலும் எழுதும் திறன் பெற்றவர். அவரது எழுத்தை ரசித்து வாசிப்பவள்.
மிக்க நன்றி ஜெ கே அண்ணா
கீதா
நானும் சிலது இந்த வகையில் எழுதியிருக்கிறேன்!! ஆனால் சின்ன சின்னதாக....கல்லூரி சமயத்திலும், இண்டஸ் லேடீஸ் தளத்தில் சும்மா சில மாதங்கள் இருந்தப்பவும் எழுதியதுண்டு. அப்பதான் மனோ அக்கா அறிமுகமானாங்க. அங்கு ஆங்கிலத்தில் நான் எழுதியதை அப்புறம் தமிழ்ல எங்க வலைத்தளத்திலும் போட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நினைவில்லை.
பதிலளிநீக்குஅப்பாதுரை ஜி கலக்கல்! நிறைய விஷயம் தெரிந்தவர் என்பதால் அருமையாக நகைச்சுவையாக எழுதிவிட்டார். நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும் என்பதால் ரசித்து வாசித்து சிரித்துவிட்டேன்.
கீதா
அப்பாதுரை ஜி யின் உபன்யாசத்துல சரியான நேரத்துல பாட்டு சீன் கூட வைச்சிருக்கார் பாருங்க!!!!
பதிலளிநீக்குநிறைய சமஸ்க்ருத வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை ஆனால் அந்தந்த இடங்களில் அவற்றின் அர்த்தம் அதுதான் என்று யூகித்துக் கொண்டேன்.
கீதா
Excellent. கதை. சீரான Flow...
பதிலளிநீக்குசரி, அதான் முடிஞ்சிருச்சே கத. மிச்ச கத, மிச்சாத கதல்லாம் எங்க வந்தது இங்க !
பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஆஸ்பத்திரிக்கு(சுகாதார மையத்திற்கு) ஜெனரேட்டர் வாங்கி கொடுக்கலாம்.
ஆந்திர அரசு சுகாதார மையத்திற்கு ஜெனரேட்டர் வாங்கி கொடுக்கலாம். அடிக்கடி மின் தடை ஏற்படுவதால்.
பதிலளிநீக்குஅப்பாதுரை சார் பழைய பதிவுகளை போய் பார்த்தேன் என் பின்னூட்டம் இல்லை. இந்த கதையை படிக்கவில்லை நான் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஇப்போது படித்தேன். கதை நன்றாக இருக்கிறது. உபன்யாசம் செய்வது போல கதை சொன்னது நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன் கதையை.
இந்த கதையை படித்து சிரித்து பின் பகிர்ந்து இருக்கிறார் சந்திர சேகரன் சார். கதை தலைப்பை பார்த்து விட்டேன்.
வந்தவர்களுக்கும் கருத்துக் கூறியவர்களுக்கும் நன்றி. எல்லாப் புகழும் அப்பாதுரை அவர்களையே சாரும். இந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சியையும் அவருக்கு அனுப்பி அனுமதி கோரினேன். பதில் இல்லை. ஆயினும் பிரசுரம் ஆகியது.
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்கள் "வயது வந்தோருக்கு மட்டும்"" என்று அவர் தளத்தில் எச்சரிக்கை கொடுத்திருந்தார். எங்கள் பிளாகுக்கு வ்ருபவர்கள் எல்லோரும் வயது போயவர்கள் என்பது தெளிவு ஆதலால் இங்கு இன்று எச்சரிக்கை கொடுக்கவில்லை.
களத்தில் குதித்தவர்கள் சிலரே ஆயினும் கலந்துரையாடல் சிறப்பாக கதையை ஒட்டியே அமைந்ததில் மகிழ்ச்சி. நன்றி வணக்கம்.
Jayakumar
கதையை தேர்வு செய்து பதிவிட்டதற்கு நன்றி சார்.
நீக்குநான் ரசித்து எழுதியவற்றுள் ஒன்று.
// இந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சியையும் அவருக்கு அனுப்பி அனுமதி கோரினேன். பதில் இல்லை
நீக்குஅடடா.. மன்னிச்சிருங்க சார்.
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குசெய்திகள் அருமை...
பதிலளிநீக்குநேற்று சபையில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
பதிலளிநீக்கு//கதைச் சுருக்கமே இரண்டு பகுதிகளாக வெளியிட வேண்டி இருக்கிறது.
பதிலளிநீக்குஹிஹி..