இன்றைய தனிப்பாடல் TMS பாடிய 'அருளே மானிட வடிவாகி' எனும் பாடல். இது ஒரு செட் பாடல். இதனுடன் இன்னொரு பாடலும் உண்டு. "ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்" பாடல்.
ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி
கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன் கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி
வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில்லாதவன் அனந்த ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில்லாதவன் அனந்த ராமன்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம்
ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராமன் எத்தனை ராமனடி.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்... வாங்க,,,
நீக்குஸ்ரீராமஜெயம்
பதிலளிநீக்குஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
.................
இரண்டு பாடல்களும் மனத்திற்கு நெருக்கமானது. அருமை.
ஸ்ரீராமஜெயம்
நீக்குஎன் பக்கத்தில் நேற்று சற்றுத் தூக்கலாக நிகழ்ந்திருந்த ட்ராஃபிக்கை ஆச்சர்யமாகக் கவனித்தேன் சற்றுமுன். ஒரு எண்ட்ரி ‘ஜெகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே..’ என்றது! அட நாமும் புண்யராமனைப்பற்றி ஒருகாலத்தில் எழுதியிருக்கிறோமா?அதையும் ஒருவர் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறாரா.. அது ராமனைப் பற்றியதா, ராமனை எழுதிய மருதகாசிபற்றியதா என்று நினைத்தவாறே எபி-க்குள் நுழைந்தால் இங்கே.. ‘ராமன் எத்தனை ராமனடி!’
பதிலளிநீக்குஇந்த ராமன் யாரையும் விட்றாப்பல இல்லை.. Boss of the Universe..!
ராமா... ராமா... சரியாகி சொன்னீங்க..
நீக்குமுதல் பாடலைக் கேட்ட நினைவே இல்லை.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் பலமுறை கேட்ட நல்ல பாடல். அயோத்யாஜி கோவில் ப்ராணப் ப்ரதிஷ்டை நேரத்தில் சிறந்த பகிர்வு.
முதல் பாடல் கேட்டிருக்கிறீர்கள்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்__/\__ __/\__
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா வாங்க..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இன்று கேட்டு மகிழ்ந்தேன்.
இரண்டாவது பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன். இந்தப் படம் கூட தொலைக்காட்சியில் பார்த்ததாக நினைக்கிறேன். அருமையான பாடல்.
ஸ்ரீ ராமரின் பாதம் பற்றி அவர் அருள் பெறுவோம். இரண்டு பக்தி பாடல்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. முதல் பாடல் கேட்டிருக்கிறீர்கள்!
நீக்குஸ்ரீராமர் பாடல்கள் இரண்டும் அருமையானவை. கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராமர் பாதம் பணிவோம்.
நன்றி மாதேவி.
நீக்குராமன் எத்தனை ராமனடி பாடல், எங்கள் வீட்டில் மிகவும் சிலாகிக்கப்பட்ட பாடல். காலம் சென்ற என்னுடைய அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல். ஏன் என்றால், அண்ணனுடைய நண்பர்கள் குழாமில் - ஜெயராமன், ரகுராமன், கல்யாண ராமன், சுந்தர ராமன், ராஜா ராமன், பக்கத்து வீட்டு ராமன் எல்லோரும் உண்டு!!
பதிலளிநீக்குபோதும் போதாதற்கு யக்ஞராமன், ஸ்ரீராமன்....என்று எழுத ஆரம்பித்தால் பட்டியல் நீளுகிறதே..... ஹ ஹா ஹா
நீக்கு:))
நீக்குKGG சார் -- இப்படித் தான் எங்கள் குடும்பத்திலும்...
நீக்குஎன் மாமனார் பெயர் சீதாராமன். மாமியார் சீதாலெஷ்மி. அவர்களது இளைய மகன், ஜெயராமன்.
மாமனாரின் மூத்த மாப்பிள்ளை கோதண்டராமன்,
நடு மாப்பிளை சங்கர ராமன். கடைசி மாப்பிள்ளை நான், வெங்கட்ராமன். என் அத்திம்பேர் பெயர் ஜெயராமன்.
அடடா.. வீடே ராம ராம என்றிருக்கையில் நாடென் செய்யும் !
நீக்கு:)))
நீக்குஇரண்டு பாடல்களும் மிக அருமையான பாடல்.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன், பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.
சிறு வயதில் சின்மயா மிஷன் பாலவிஹாரில் சின்ன பிக்னிக் டூரில் குறுந்தமலை முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அங்கு அனுமன் கோவிலும் மலைமேல் இருக்கும் அங்கு சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். அனந்தராமன் என்பவர் எல்லா குழந்தைகளையும் பாட சொன்னார், ஒரு பெண் மிக அருமையாக "இராமன் எத்தனை ராமனடி" பாடினாள், கடைசியில் முடிவில்லாதவன் அனந்தராமன் பாடிய போது மிகவும் மகிழ்ந்து போனார் என் பேர் , என்பேர் என்று குழந்தை போல குதுகலித்தார் அந்த இளமைகால நினைவுகள் மனதை விட்டு அலகாது.
கோவையில் ஜிபி(GP) தியேட்டர் காந்திபுரத்தில் ஆரம்பித்தார்கள் முதல் முதலாக அதில் போட்ட படம் "லட்சுமி கல்யாணம்"
என் அப்பாவுக்கு பிடித்த பாட்டு.
ஆஹா... சின்னப்பிள்ளை போல சந்தோஷப பட்டிருக்கிறார். என் பெயரும் வருகிறது அதில்! இந்தப் படத்தில் இன்னொரு அருமையான பாடல் 'யாராக மனிதன் அங்கே..' நன்றி கோமதி அக்கா.
நீக்குஇரண்டு பாடல்களும் சிறப்பானவை ஜி
பதிலளிநீக்குபலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்
நன்றி ஜி.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரொம்ப அருமையான பாடல்கள். முதல் பாடல் ஊரில் கோயிலில் போடும் இசைத்தட்டில்!!
பதிலளிநீக்குபலமுறை ரசித்த பாடல்கள்!
கீதா
நன்றி கீதா.
நீக்குமுதல் பாடல் கேட்டதாக நினைவில்லை. இரண்டாம் பாடல் பல முறை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குபாடல்கள் பற்றிய குறிப்பு நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு