திங்கள், 18 மார்ச், 2024

"திங்க"க்கிழமை  :   ஷாஹி பனீர்   -  பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

ஷாஹி பனீர்


தேவையான பொருள்கள்:


பெரிய வெங்காயம்   -  2

தக்காளி                          -  6

பனீர்                                - 200கிராம்

பூண்டு.                            - 6 பல்          

முந்திரி.                          - 7 அல்லது 8

பாதாம்.                           - 6

பட்டை.                             - ஒரு துண்டு

லவங்கம்.                        - 3 அல்லது 4

பிரிஞ்சி இலை - 1

பால் ஆடை(மலாய்)      - 2 டேபிள் ஸ்பூன்

வெல்லம்  - சிறு துண்டு, அல்லது வெல்லச் சக்கரை - 1 டேபிள் ஸ்பூன்

காரப்பொடி - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் பொடி  - 1/4  டீ ஸ்பூன்

தாளிக்க:

சீரகம் -1/2 டீ ஸ்பூன்

சோம்பு - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:


வெங்காயம், தக்காளி இரண்டையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பனீரை முக்கோணம், அல்லது சதுர துண்டுகளாக நறுக்கி, வென்னீரில் போட்டு வைக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும். அதிலேயே முந்திரி, பாதாம், பட்டை, லவங்கம்,  இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வதக்கிய இந்த பொருள்கள் ஆறியதும், மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.


வெங்காயம், தக்காளி வதக்கிய வாணலியை கழுவி விட்டு, அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகம், சோம்பு சேர்த்து வெடிக்க விடவும். வெடித்ததும், பிரிஞ்சி இலை மற்றும் அரைத்து வைத்திருக்கும் தக்காளி, வெங்காய விழுதை போட்டு, அதில் மஞ்சள் பொடி, காரப்பொடி, உப்பு போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். 

பிறகு வெந்நீரில் போட்டு வைத்துள்ள பனீர் துண்டுகளை போட்டு வெல்லம் அல்லது வெல்ல சக்கரை போட்டு இன்னுமொரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தி விடலாம். வெல்லம் சேர்ப்பது புளிப்பு, உரைப்பு எல்லாவற்றையும் சமன் செய்யும். 


கடைசியாக மலாயை ஊற்றி அலங்கரிக்கவும். இந்த ஷாஹி பனீர் சப்பாத்தி, பரோட்டா, ஜீரா ரைஸ் போன்றவைகளுக்கு தோதான சைட் டிஷ்!

இதை செய்தது என் மருமகள் ஷைலஜா. நான் புகைப்படம் எடுத்து உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

27 கருத்துகள்:

  1. ஆ! நானே லேட்டுன்னு பார்த்தா இங்க யாருமே காணலை. ஷாஹி பனீர் ஆறிப் போயிடுச்சே!!!!

    ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் இந்த நிலையை நீங்கள் கவனிக்க வேண்டும்.

    எங்க தளத்துக்கெல்லாம் ஆள் வரதில்லைனா அது உலகமறிந்த விஷயம்.

    ஆனால் எபியில் அப்படி இருந்ததில்லை. வாசகர்கள் எல்லாரும் பிசியோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நான் இன்று எழுந்ததே தாமதம். தினமும் தண்ணீர் வரும் போதே பார்த்துப்பார்த்து வேலைகள் செய்வதால், உடல் அசதி. அதுவும் இன்று நான் எழுந்த உதயாதி ஆறரை மணிக்கு எந்த பைப்பிலும் தண்ணீர் அஸ்தமானமாகி விடும். அதனால் அவசரமாக தண்ணீரை நோக்கிப் பயணமாகி விட்டேன். இல்லையென்றால் ஒரு வணக்கமாவது வைத்து விட்டுத்தான் எழுந்து போவேன். இதோ இப்போதுதான் காலை வேலைகளை நிறுத்தி விட்டு வந்து கொண்டேயிருக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆ! கமலாக்கா நோ பிரச்சனை. நான் அது பொதுவாகவே சொன்னது. சமீப காலங்களில் எபியைக் குறித்து.

      அக்கா ப்ளீஸ் நீங்க இதுக்கெல்லாம் மன்னிப்பு எதுவும் சொல்லவே வேண்டாம். கீழயும் சொல்லியிருக்கீங்க. எதுக்கு!!!

      தண்ணி பிடிக்காம இங்க வந்துட்டு அப்புறம் வீட்டுல யாரு தண்ணி பிடிப்பாங்க சொல்லுங்க. முதல்ல குடும்பம் வீட்டுக் கடமைகள் அப்புறம் தான் இங்க. இதெல்லாம் எப்பவும் இங்கதான் இருக்கும்.

      யாரும் தப்பாவும் நினைக்க மாட்டாங்க கமலாக்கா.

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      "வாசகர்கள் எல்லாரும் பிசியோ?" என்ற தங்கள் கேள்விக்கு என் விளக்கத்தை பதிலாக தந்திருந்தேன். அவ்வளவுதான்..! ஆனாலும் இன்று எபி 9 மணிவரை காத்தாட இருந்தது ஒரு ஆச்சரியமான விஷயந்தான்..!

      உங்கள் பகுதியில் வீட்டில் போர்வெல் தண்ணீர் நிலவரங்கள் எப்படி உள்ளது? இல்லை டேங்கர் லாரிகள்தானா? இங்கு இன்னமும் பழையபடிக்கு பிரச்சனைகள் ஏதும் இல்லாமலிருந்தது போல இருக்க இயலவில்லை. வரும், வராததுவாக தினமும் தண்ணீர் பிரச்சினைகள்தான். "இந்த நிலை என்று மாறுமோ?" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
      நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. இங்குள்ள தண்ணீர்ப் பிரச்சனை குறித்து பதிவு எழுதத் தொடங்கினேன். இருக்கு ....முடிக்கலை

      நாங்க இருக்கும் வீட்டில் மூன்று குடும்பங்கள்தான். இது வரை டாங்கர் தேவைப்படலை. போர்வெல், காவிரி இரண்டும் இப்போது வரை... சிக்கனமாகச் செலவழிக்கிறோம் நம் வீட்டில் எப்பவுமே...நாங்கள் வீடு மாறும் போது இரண்டும் இருக்கும் வீடாகத்தான் பார்க்கிறோம். கமலாக்கா

      கீதா

      நீக்கு
  2. பானுக்கா சூப்பர் செய்முறை. ஷைலஜாவுக்கு வாழ்த்துகள்! ரொம்ப நல்லா செஞ்சுருக்காங்க. பார்க்கவே க்ரீமியாக, உணவகங்களில் தருவது போல இருக்கு. பாராட்டுகளைச் சொல்லிடுங்க.

    அக்கா அந்த மலாய்/க்ரீம் சேர்த்த படத்தைக் கடைசில போட்டிருக்கலாமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நான் முதன் முதல்ல (ஊரில் இருந்த வரை மனதில் தோன்றுவதை வைத்து வட இந்திய வகைகள் சும்மானாலும் பெரியவங்க இல்லாதப்ப எங்களுக்காகச் செய்ததுண்டு) திருமணம் ஆன பிறகு வட இந்திய உணவுகள் நிறைய செய்யத் தொடங்கினேன். அப்ப முதலில் இதைக் கற்றுக் கொண்ட போது செய்முறை இதுதான் ஆனா பனீரைப் உதிர்த்துப் போட்டு பண்ணுவதாக இருந்தது அந்த செய் முறை. அப்புறம் எல்லாம் பல இடங்களில் சாப்பிட்டு இப்படித் துண்டு துண்டாகப் போட்டுதான் செய்கிறேன்.

    முகலாய் ஸ்டைல் தான் இது முகலாய் ஷாஹி பனீரில் தக்காளி இல்லாமல் அது வெள்ளை கிரேவியாக...தயிர், மற்றும் melon விதைக்ள் முந்திரி எல்லாம் அரைத்து விட்டுச் செய்யும் முறை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொகல் ஸ்டைலில் ஒரு முறை முயற்சி செய்ய வேண்டும்.

      நீக்கு
  4. நான் 6:30 க்கு வந்து பார்த்துட்டு போயிட்டேன். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. பனீர், கிரீம் வாங்க ரொம்ப தூரம் போகணும். கொழுப்பு அதிகம் என்றும் சேர்க்க பயம்.

    சப்பாத்தி, நாணுக்கு எங்களை போன்ற அசைவர்களுக்கு பல துணைக் கறிகள் உள்ளன. இது இல்லாமல் காளான் கறியும் செய்யப்படும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு பானுக்கா.

    பனீரை வெந்நீரில் போடணுமா? பொதுவாக பனீரை எண்ணையில் வதக்கினால் அல்லது பொரித்தால் வெந்நீரில் போடுவது உண்டு மென்மையா இருக்கணும்னு...

    ஒரு வேளை ஃப்ரிட்ஜ்ஜில் தானே வைக்கறாங்க பல கடைகளிலும் நாமும் வீட்டில் வைப்பதால் அதை வெந்நீரில் போட்டு வைக்கச் சொல்லியிருக்காங்களோ?

    நெருங்கிய உறவினர் வீட்டில் தில்லியில் பனீர் அவங்க நம்மள மாதிரி பாக்கெட்ல வாங்கறது இல்லை பஞ்சாபி க்டையில் ஃப்ரெஷ்ஷாக பெரிய பெரிய கட்டிகளாக இருப்பதிலிருந்து நமக்குத் தேவையான அளவு வெட்டி வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் கூட நான் பாரீஸ் கார்னரில் அப்படி வாங்கியிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனீரை வென்னீரில் போடுவதால் அதிலிருக்கும் கொழுப்பு கரைந்து விடும் என்கிறார்கள்.

      நீக்கு
  6. அருமையான குறிப்பு! மருமகளுக்கு என் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய திங்களுக்கான சமையல் பதிவு மிக அமர்க்களமாக இருக்கிறது. செய்முறை குறிப்புக்கள், படங்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளது.

    நானும் தக்காளி வெங்காயம் வைத்து இந்த மாதிரி, சப்பாத்தி பூரிக்கு செய்துள்ளேன். (கூடவே நான்கு உருளையையும் வைத்து.பூரி மசாலா மாதிரி. ) ஆனால், இந்த மாதிரி பக்குவத்தில் செய்ததில்லை. பக்குவமும் படங்களும் வெகுவாக ஈர்க்கிறது. அருமையான செய்முறை. தங்கள் மருமகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை கூறுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    இன்று என் நேரமின்மை காரணமாக தாமதமாக எ.பி க்கு வந்தமைக்கு மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸியான நேரத்திலும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  8. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

    பதிலளிநீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. இன்று காலையில் திரு ஐயாறு அந்தணக்குறிச்சியில் ஸ்ரீ நந்தியம் பெருமான் ஜனன வைபவ தரிசனம்.

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  11. ஷாஹி பனீர்.. மிகவும் பிடித்தமான ஒன்று..

    ஆறு விதமாக செய்ய இயலும்...
    செய்திருக்கின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. சிறந்த குறிப்பு..
    அளவான பனீர் உடலுக்கு நல்லது..

    பதிலளிநீக்கு
  13. தற்போது இரசாயனங்கள் கொண்டு பனீர் தயாரிக்கப்படுகின்றது..

    பதிலளிநீக்கு
  14. பனீர் வைத்துச் செய்யும் வகைகள் எல்லாமே பிடிக்கும். செய்முறை மிக நன்று. உங்கள் மருமகளுக்கு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. வடக்கில் பனீர் உணவுகள் அதிகம். ஷாஹி பனீர் அடிக்கடி சுவைப்பது தான். பனீர் தரம் குறைந்து கொண்டே வருகிறது என்பதும், அதிக வெய்யில் நாட்களில் கிடைக்கும் பனீர் அவ்வளவு நல்லதல்ல என்பதும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. ஷாஹி பனீர் செய்முறையும் , படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!