பானுமதி வெங்கடேஸ்வரன்:
எதிர்காலத்தில்? செல்ஃபோனையே டி.வி. ரிமோட்டாக பயன்படுத்த முடியும் and vice versa என்னும் அளவிற்கு டெக்னாலஜி உயருமா?
* எப்போதிலிருந்தோ செல்ஃபோனையே டிவி ரிமோட் ஆகவும், மற்றும் அலெக்ஸாவை ப்ளூடூத்தில் இணைத்த பிறகு வெளியில் இருந்து கூட வீட்டில் இருக்கும் மின்சார சாதனங்களை கட்டுப்படுத்தும் ரிமோட்டாகவும் பயன்படுத்த முடிகிறதே...
# Vice versa என்று சொன்னால் சில சமயம் " Send to phone " என்று TV யில் வருவதையும் பார்க்கிறோம்.
சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெற்றிக்கண் உண்டு என்று படித்திருக்கிறோம். ஒளவையார் எழுதியிருக்கும் விநாயகர் அகவலில் "மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்" என்று வருகிறதே, நெற்றிக்கண் உடைய விநாயகர் எந்த கோவிலிலாவது இருக்கிறாரா?
# இல்லாமலா இருப்பார் ? எங்கே என்றுதான் தெரியவில்லை!
ஒருவரை ஹிப்னாடிச தூக்கத்தில் ஆழ்த்துவதன் மூலம் அவருடைய முந்தைய பிறவிகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்களே?உங்களுடைய பூர்வீக ஜன்மத்தை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டா?
# ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது ?
" மகனே நீ போன பிறவியில் கூவம் நதிப் பன்றியாக நன்கு பணியாற்றினாய் " என்பது போல ஏதாவது வருமென்ற பயமும் இருக்கிறது..
*எங்கு என்று தேடிக்கொண்டு போவது? ஸ்டவ் ரிப்பர், குடை ரிப்பேர் வருவது போல தெருவில் கூவிக் கொண்டு வந்தால் அழைத்துப் பார்க்க வசதி! இல்லையா, மரத்தடி ஜோசியர் மாதிரியாவது மலிந்திருக்க வேண்டும். அதுவும் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும்!
அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை?
# பொள்ளாச்சி மகாலிங்கம் அல்லது TV சுந்தரம் ஐயங்கார்.
*இன்னொருத்தராக பிறப்பதைவிட, நாமாகவே பிறந்தால் நலம்! இதற்கு கூட சுஜாதா ஏதோ சொல்லி இருந்தார்.
நெல்லைத்தமிழன்:
சமையல் சாம்ராஜ்யத்தில் நல்ல வெற்றி பெற ஆரம்பித்தவுடன் இரண்டாவது மூன்றாவது திருமணம் என திசை மாறுவதன் காரணம் என்ன?அரசியலிலும் அப்படித்தான்.
# சமையல் சாம்ராஜ்யம் பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை . அதில் வெற்றி பெற்றவர் யார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. எனவே இந்தக் கேள்விக்கு என்னால் பதில் கூற இயலவில்லை !
ஒருவேளை உணவகங்கள் நடத்துபவர் பற்றி நீங்கள் கேட்டிருக்க கூடும் என்று தோன்றுகிறது. பிரமாதமான வெற்றி எந்தத் துறையில் பெற்றவராக இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் கேளிக்கை என்பதனை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கி விடுகிறார்கள். கவர்ச்சி வலையில் சிக்கிக் கொள்வது மிக எளிதானது. மேன்மேலும் கவர்ச்சி வலையில் சிக்கிக் கொண்டே போகும் அவர்கள் குற்றங்கள் இழைக்கக் கூடத் தயங்குவது கிடையாது. அபரிமிதமான பண பலம் அவர்களுக்கு இந்த தைரியத்தைக் கொடுத்து விடுகிறது.
*சமையல் ராஜ்ஜியத்தில் வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்திருந்தார்களா என்ன!
என் எண்ணப்படி மூன்று-ஐந்து கோடி ரூபாய் இருந்தால் வாழ்க்கையை மேல்தட்டு வகுப்பினர் நன்றாகக் கழித்துவிடலாம். அப்புறம் ஏன் ஐம்பது கோடி, ஐநூறு கோடி ஐயாயிரம் கோடி என்றெல்லாம் ஆட்டயப் போடுகிறார்கள்? ஐரோப்பாவில் திருமணத்தை வைத்துக்கொள்ளவேண்டும் காசு கொடுத்து விருந்தினர்களைக் கூப்பிட்டு கலந்துகொள்ள வைக்கணும் என்றெல்லாம் ஏன் மனிதன் சிந்திக்கிறான்?
# செல்வாக்கு இருந்தால் நீதியின் காவலர்களே கூட உங்களுக்கு அடிபணிந்து நீங்கள் இட்ட பணி ஏதுவானாலும் (அது ஒரு கொலை ஆனாலும் கூட ) செய்யத் தயங்குவதில்லை என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறது அல்லவா ?
*போதும் என்று சொல்லக் கூடியது, சொல்ல வைப்பது வயிற்றுக்கான உணவு மட்டுமே இல்லையா?! "கேளு பாப்பா ஆசையின் கதையை.. ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை.. பணத்தில் ஆசை பதவியில் ஆசை.. பருவ நாடகம் காதலில் ஆசை.."
நேற்றைய நடிகைகளைக் கைவிட்டு இன்றைய நடிகைகள் பின் செல்வதுபோல, நேற்றைய கிரிக்கெட் சாதனையாளர்களை மறந்து இன்றைய கிரிக்கெட் சாதனையாளர்களை ஆராதிப்பதுபோல ஏன் எழுத்தாளர்களுக்கு நடப்பதில்லை? இன்றைக்கும் திஜர குபரா புபி ராகிர என்றெல்லாம் பஜனை பாடிக்கொண்டிருக்கிறார்களே அதன் காரணம் என்ன?
# நீங்கள் உதாரணமாக குறிப்பிட்டு இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் மட்டுமே காலம் கடந்து நிற்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஒரு பழமோ ஒரு மருந்தோ அதன் காலாவதி தேதியை த் தாண்டி சரியாக இயலாது. ஆனால் அடிப்படை மனித உணர்வை தொடக்கூடிய உயர்ந்த இலக்கியம் என்பது காலம் கடந்து நிற்கும் தன்மை வாய்ந்தது அல்லவா ?
எழுத்தாளர் சாரு நிவேதிதா, தன்னைச் சந்தித்துப் பேச வேண்டுமானால் ஒரு லட்ச ரூபாய் தரணும், தன்னுடைய எழுத்துக்களை இணையத்தில் படிப்பவர்கள் மாதச் சந்தா அனுப்பணும் என்றெல்லாம் சொல்வதை கிண்டல் செய்பவர்கள், பணம் பெற்றுக்கொண்டு அம்பானி வீட்டுத் திருமணங்களுக்கும் நெப்போலியன் வீட்டுத் திருமணத்துக்கும் செல்பவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லையே. எளியவன் எழுத்தாளன் என்றால் இவர்களுக்கு இளக்காரமா?
# பல கிண்டல் பதிவுகள் பொறாமையால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவையாக இருப்பதுண்டு. நான் சாரு நிவேதிதா எழுதிய எதையும் படித்ததில்லை. (குமுதத்தில் ஏதோ ஒரு கதை படித்ததாக ஒரு லேசான நினைவு இருக்கிறது).
பேட்டி எடுக்க லட்ச ரூபாய் கொடுக்கத் தயாராக யாரும் இருந்தால் அவர் கேட்டுப் பெறுவதில் தவறு ஏதுமில்லை தான். நமக்கு இந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லையே என்று எண்ணுபவர்கள் கிண்டல் தான் செய்வார்கள். அது இயல்பு அல்லவா ? அவர்கள் வேறு எதையும் முயற்சிப்பது விபரீத விளைவுகளைத் தரக்கூடும்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் வட இந்தியர்கள், ஆபத்தை நோக்கித் தமிழ்நாடு, அகதியாகும் தமிழர்கள் என்றெல்லாம் பலர் கூற ஆரம்பித்திருக்கிறார்களே... இவங்க வேலை செய்யத் தயாராக இருந்தால் வட இந்தியர்கள் ஏன் தமிழகம் பக்கம் எட்டிப்பார்க்கப் போறாங்க? தொழில்கள் நடத்துபவர்களில் பலர், தமிழர்கள் வேலைக்கு ஒழுங்காக வருவதில்லை, வந்தாலும் வேலை பார்ப்பதில்லை, சரக்கடித்து வேலைக்கு மட்டம் போடுகிறார்கள் ஆனால் வட இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் ஒழுங்காக வேலைக்கு வருகிறார்கள், எங்கள் தொழில் பாதிப்படைவதில்லை என்கிறார்களே... உங்கள் கருத்து என்ன?
# என் கருத்தும் அதுவேதான். அது தவறாக இருந்தால் மகிழ்ச்சிதான். பெரும்பான்மை தமிழ்நாட்டுப் பணியாளர்கள் எப்படியான வர்கள் என்பது குறித்த நேரடியான தகவல் நம்மிடம் இல்லை. காதில் விழுந்த வரை பொறுப்புணர்வு, வேலையில் ஈடுபாடு-சாமர்த்தியம் எல்லாமே அதிகமில்லை என்ற உணர்வு வருகிறது.
ஆண்களைப் போல, பெண்கள் விழுந்து விழுந்து (அதாவது படிப்பை விட்டுவிட்டு காதலே கதியாக) காதலில் ஈடுபடுகிறார்களா? எனக்கென்னவோ உலகத்தில் ஆணினம்தான் பெண்ணுக்காக ஏங்குகிறது என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கறீங்க? (அல்லது வாசகிகள் வாசகர்கள்)
# காதல் விளக்கங்கள் சொல்வது ஆணினம்தான் முனைப்புக் காட்டுகிறது என்றுதான். இதெல்லாம் ஹார்மோன்கள் படுத்தும் பாடு. கடவுள் செய்த நியமம்.
*ஆனா பாருங்க.. கள்ளக் காதலனுக்காக கட்டிய கணவனைக் கொலை செய்யும் பெண்கள் அதிகமாயிட்டே வர்றாங்க...!
ஜெயகுமார் சந்திரசேகரன் சமீபத்தில், கலைப்பொருட்களை வாங்குவதால் அவைகளைத் தயாரிக்கும் ஏழைகள் பலனடைவார்கள் என்று கருத்து கூறியிருந்தார். எளிய மக்களை ஆதரிக்கவேண்டும் என்பதற்காக தெருக்கூத்து, கிராமீய நாடகம் போன்றவற்றை (அவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பும்) மக்கள் தொலைக்காட்சியில் பார்க்க முயற்சித்திருக்கிறீர்களா?
# கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம் எல்லாம் எனக்கு ரசிக்கத் தெரியவில்லை. தெருக்கூத்து கூட பெரும்பாலும் தரமாக இருப்பதில்லை. எனக்கு இவற்றில் ஆர்வம் இல்லை.
கே. சக்ரபாணி சென்னை 28.
ஒரு திரைப்பட பாடலை நாம் ஆடியோவாக கேட்டு பரவசமடைவது. பாடல்வரிகளுக்காகவா இசையமைப்புக்காகவா அல்லது அதில் நடித்த நடிகைகளை மனதில் கொண்டா?
# ஒரு பாடலை எடுத்துக் கொண்டால், ஒவ்வொருவர் ஒரு அம்சத்தை ரசிக்கக் கூடும். ஆக, எல்லாம் ரசிக்கப்படும்.
பேச்சு வழக்கில் நகை நட்டு என்கிறோமே - நட்டு என்பது எதைக்குறிக்கிறது?
# நகை (ஆபரணம்) நோட்டு (பணம்) நோட்டு நட்டு ஆனது முதலெழுத்துத் திரிதல் விகாரம்.
= = = = = = = = = =
படமும் பதமும்
1) பானுமதி வெங்கடேஸ்வரன்:
2) நெல்லைத்தமிழன்:
ஆனந்தபவன் மாளிகை இதுதான்.
= = = = =
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கோயிலில், இரவு நேரம் நடை அடைப்பதற்கு முன்பாக, ஆண்டாள் ரங்கமன்னாருக்கு ஒரு ஆரத்தி காண்பிப்பார்கள். அதனை கோவிலில் நுழைந்தவுடன் இருக்கும் மண்டபத்திலிருந்துதான் காணமுடியும். வெகு தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளியாக அது தெரியும். அதை தரிசிக்க நிறையபேர் காத்திருப்பார்கள். அந்த ஆரத்தி முடிந்ததும் உடனே கோயில் நடை சார்த்தப்படும். அந்த ஆரத்தியின்போது சமர்ப்பிக்கப்படும் அரவணை பிரசாதம் மேலே உள்ள படம். எல்லாம் நல்ல பெரிய அளவில் இருக்கும். (எனக்கும் சீர் பட்சணங்களின் மீது அதீத ஆசை. பலப்பல வருடங்களுக்கு முன்பு, சீர் மைசூர்பாக் என்றாலே அரை அடி அளவு இருக்கும். சீர் அதிரசம் கைகொள்ளாத அளவு இருக்கும். ஆனால் இப்போல்லாம் அந்த அளவைப் பார்க்கமுடிவதில்லை. பார்த்தாலும், நம் கைக்கு எட்டுவதில்லை. எனக்குள்ள இந்த ஆசையைத் தெரிந்துகொண்டுதானோ என்னவோ, கீதா ரங்கன் அக்கா, அவர் மகன் திருமணத்தை வெகு தூரத்தில் தில்லியில் நடத்திவிட்டார்)
KGG பக்கம்:
முதலில் சென்ற வாரம் குறிப்பிட்ட anurodh படத்தை பற்றி கூறுகிறேன் அந்தப் படத்தில் வினோத் மெகரா ஒரு கவிஞர். ஆனால் உடல்நலம் சரியில்லாதவர், அவர் இயற்றிய பாடல்களை ராஜேஷ் கன்னா மேடைகளில் பாடுகிறார்.
வினோத் மெகராவைப் பார்க்கும்போது எப்படி இந்த மாதிரி நோயாளி கரெக்டருக்குப் பொருத்தமாக ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் அப்படி இப்படி ஆராய்ந்து பார்த்ததில் அந்த வினோத் மெகரா என்னும் நடிகர் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஐந்தில் பிறந்து 1990 இறந்துவிட்டார் என்று தெரிந்து கொண்டேன்.
Mehra was close to Rekha in the mid-70s. Indeed, they were widely believed to have been married, but in a 2004 television interview with Simi Garewal, Rekha denied having ever been married to him, and referred to him affectionately as a well-wisher (but in Rekha's unofficial biography The Untold Story by Yasser Usman, it is mentioned that Mehra, Rekha's rumoured husband, took her to his house in Bombay, after getting married in Calcutta, and Vinod's mother pushed the actress away when the latter tried to touch her feet)."[6] Mehra's first marriage to Meena Broca was arranged by his mother. The marriage was reportedly not consummated as Vinod suffered a heart attack shortly after the marriage. After he recovered, he eloped with his frequent leading lady of the time, Bindiya Goswami. Meena was left with no choice but to file for a divorce. Mehra's marriage with Goswami unraveled quickly and she soon divorced him to marry director J. P. Dutta.[7] In 1988, Mehra married Kiran, the daughter of a Kenya-based transport businessman. The marriage lasted until Vinod's death in 1990 and the couple had two children: a daughter named Soniya (born in 1988) and a son named Rohan (born in 1991, after his death). Mehra died of a heart attack on 30 October 1990.[8] He was only 45 years years old.
1945 - 1990 - 45 வயதுக்குள் 4 மனைவிகள் !! heart attack வராமல் என்ன செய்யும்!
அடுத்து நான் பார்த்த (இந்தி) சினிமா ராஜேஷ் கன்னா நடித்த கத்தி பதங். வழக்கமான கதை அமைப்பு பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்த படம்.
என்னைப் போன்ற ஆஷா பரேக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். மற்றபடி இந்திப் பட ஃபார்முலா கதை முற்றிலும் பொருந்திய படம். ஆனாலும் ரசித்தேன்.
சொல்ல வந்த முக்கியமான படம் : ஹேமமாலினி நடித்த ட்ரீம் கேர்ள் படம்.
படம் வந்த காலத்தில் விமர்சனங்கள் படித்த ஞாபகம் இருக்கிறது இது ஹேமமாலினியின் அம்மா தன் மகளை பலப்பல விதமான ஆடைகளில் பல வேடங்களில் காட்டுவதற்காக எடுத்த படம் என்று சொல்லிருந்தார்கள்.
சரிதான் அந்தக் காலத்தில் தியேட்டர்களில் பார்க்காமல் விட்டுவிட்ட கனவு கன்னியை இன்றாவது பார்க்கலாம் என்று படத்தைப் பார்த்தேன்.
முன்காலத்தில் (1968) இந்தியில் பிரம்மச்சாரி என்று ஒரு படம் வந்தது.
அந்தப் படத்தின் கதையை அப்படியே காப்பி செய்து உல்ட்டா செய்த படம் இந்தக் கனவுக் கன்னி .
பிரம்மச்சாரி படத்தில் டம்மி கபூர் - சாரி - ஷம்மி கபூர் செய்த ரோலை உல்டா செய்து ட்ரீம் கேர்ள் படத்தில் ஹேமமாலினி நடித்துள்ளார்.
ஆனால் ஹீரோ தர்மேந்திரா நல்ல வேளையாக ஹேமாவின் அனாதை ஆஸ்ரமத்தில் வந்து சேராமல் வேறு எங்கோ இருக்கிறார்.
ட்ரீம் கேர்ள் படத்தின் க்ளைமேக்ஸ் இருக்குதே அதுதான் படத்தின் கடைசி 30 நிமிடங்கள். அதுவரை இந்தி, தமிழ், ஆங்கிலப் படங்களில் வந்த எல்லா க்ளைமாக்ஸ் காட்சிகளையும் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டுக் குலுக்கி கொடுத்துவிட்டார்கள்! கதாநாயகனும் வில்லனும் நீரில், நிலத்தில், ஆகாயத்தில், நெருப்பில், காற்றில் என்று பஞ்ச பூதங்களிலும் சண்டை போடுகிறார்கள்!
துப்பாக்கி, கராத்தே, கத்திச் சண்டை, கத்தாமல் சண்டை எல்லாம் போடுகிறார்கள்.
நமக்கு எல்லாம் அலுத்துப் போனபின் படம் முடிகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், 1968ல் வந்த பிரம்மச்சாரி இந்திப் படத்தை தமிழில் 1970ல் ' எங்க மாமா ' என்று எடுத்தார்கள். சிவாஜி & ஜெயலலிதா நடித்த வெற்றிப் படம்.
1977ல் வெளி வந்த ட்ரீம் கேர்ள் படத்தை பிறகு தமிழில் எடுத்திருந்தால் ' எங்க மாமி' என்று பெயர் வைத்திருப்பார்களோ!
இப்போ அதே படத்தை ஹேமா நடித்து எடுத்தால் ... ' எங்க பாட்டி'
= = = = = = = = = =
திரிநேத்ர விநாயகர் தகவலுக்கு நன்றி. புகைப்படம் இணைத்திருக்கலாம். மற்ற பதில்கள் சுவாரஸ்யம்! ஆனந்த பவ்ன் வீடு புகைப்படம் அருமை!
பதிலளிநீக்கு//" மகனே நீ போன பிறவியில் கூவம் நதிப் பன்றியாக நன்கு பணியாற்றினாய் " என்பது போல ஏதாவது வருமென்ற பயமும் இருக்கிறது..// ஹாஹா..சிரித்து முடியல என்பார் தி.கீதா. எனக்கும்தான்.
பதிலளிநீக்குகந்தா சரணம்
பதிலளிநீக்குகடம்பா சரணம்
எதிர்காலத்தில்? செல்ஃபோனையே டி.வி. ரிமோட்டாக பயன்படுத்த முடியும் and vice versa என்னும் அளவிற்கு டெக்னாலஜி உயருமா?
பதிலளிநீக்குநான் பல வருடங்களுக்கு முன்னரே ஸ்மார்ட், flat டிவி எல்லாம் இல்லாத போது redmi போனில் mi ரிமோட் ஆப் மூலம் விளையாடியிருக்கிறேன்.
எனக்கு கிரிக்கெட் பார்க்க வேண்டும். பாஸ்சுக்கு மெகா சீரியல் பார்க்க வேண்டும். ரிமோட்டை கொடுக்காமல் கையில் வைத்திருப்பார். நான் நைசாக போன் மூலம் சேனல் மாற்றிவிடுவேன். சில நாட்களில் இதை அவர் கண்டுபிடிக்க அன்றிலிருந்து போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒருவரை ஹிப்னாடிச தூக்கத்தில் ஆழ்த்துவதன் மூலம் அவருடைய முந்தைய பிறவிகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்களே?உங்களுடைய பூர்வீக ஜன்மத்தை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டா?
தூக்கம் எல்லாம் வேண்டாம் வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடர்கள் பணத்தை பிடுங்கிக்கொண்டு சொல்வதுதான்.
எளிய மக்களை ஆதரிக்கவேண்டும் என்பதற்காக தெருக்கூத்து, கிராமீய நாடகம் போன்றவற்றை (அவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பும்) மக்கள் தொலைக்காட்சியில் பார்க்க முயற்சித்திருக்கிறீர்களா?
தற்போது உள்ள தெருக்கூத்து மிகவும் மாறுபட்ட ஒன்று. மக்கள் தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் வெட்டவெளியில் பாயில் உறங்கிக்கொண்டே இரவு முழுதும் தெருக்கூத்து பார்த்திருக்கிறேன். நான் படிச்ச கதை தெருக்கூத்து கலைஞன் ஏழுமலையை மறக்கமுடியுமா. (ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை)
Jayakumar
பூர்வ வா இல்லை பூர்வீகவா என்பதையே ஒரு கேள்வியாக்கிவிடலாம் போலிருக்கே.
பதிலளிநீக்குஉங்க பூர்வீகம் என்ன? நான் நெல்லையைச் சேர்ந்தவன். என் பெற்றோர்.... பூர்வ ஜென்மத்துல என்னவாக இருந்தருப்பீர்கள்? உங்களைக் காணும்போதெல்லாம் கடுப்பாவதால் உங்களுக்கு எதிரியாக இருந்திருப்பேன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
நீக்குநகை நட்டு... இதில் நட்டு என்பது திருகாணியைக் குறிக்கிறது. பாம்படம், காதணி போன்ற பல நகைகளுக்கு திருகாணி உண்டே.
பதிலளிநீக்குதிரைப்படப் பாடல் நம்மால் ரசிக்கப்படுவதற்கு, அந்தப் பாடல் அனைவராலும் ரசிக்கப்படுவதன் முக்கிய காரணமாக இருக்கும் (குழம்பாதீர்கள். உலகின் நிலையில்லாமையைக் குறிப்பது என்பதால் இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் பாடல், மனதுக்கு உத்வேகம் தரும் கருத்துகள் கொண்டதால் மயக்கமா கலக்கமா பாடலும், இசையின் தாக்கத்தினால் கொஞ்சம் நெருப்பு, தந்தன தந்தன தாளம் வரும் போன்ற பாடல்களும், பக்தி உணர்வை ஏற்படுத்துவதால் ஓம் சிவோகம், செல்லாத்தா, ஜனனி ஐனநி போன்ற பாடல்களும் ரசிக்கப்படுகின்றன. அதே நாரம் நமக்கு தனிப்பட்ட முறையில் தாக்கம் உண்டாக்கும் பாடலையும் நம்மால் மறக்க இயலாது. என் நண்பன் வேறு சமூகப் பெண்ணிடம் தன் காதலை, அவர்கள் வீட்டில் வைத்துத் தெரிவித்தபோது, தூரத்தில் தென்பாண்டிச் சீமையிலே பாடல் ஒலித்துக்கொண்டிருந்ததால், அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்த நினைவு நெஞ்சை நிறைக்கும் என்பான்.
பதிலளிநீக்குபொள்ளாச்சி மெஆலிங்கம், டி வி சுந்தரம் ஐயங்காராக ன் பிறக்க ஆசைப்படுகிறீர்கள் எனவும் எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்கு