22.8.25

பம்ச்சிக்கும் க்கும் சிக்கும்  பம்ச்சிக்கும் க்கும் சிக்கும் 

 



உஷா உதுப் பாடிய இரண்டு தமிழ்ப் பாடல்கள்.  நிறைய பாடி இருக்கிறார்.  சட்டென என் மனதில் நின்ற இரண்டு பாடல்கள் இன்று பகிர்வாக..

தமிழ்ப் படங்களில் இடம்பெற்று, நான் ரசித்த இரண்டு உஷா உதுப் பாடல்கள்.

A P நாகராஜன் இயக்கத்தில் 1975 ல் வெளிவந்த படம் மேல் நாட்டு மருமகள்.  சிவகுமாரும் கமலும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கும் படம்.  

அண்ணன் தமிழ்க் கலாச்சாரத்தை விரும்பும் மேல் நாட்டுப் பெண்ணை விரும்பி மணம் புரிய, தம்பி மேல் நாட்டு கலாச்சாரத்தை விரும்பும் தமிழ்ப்பெண்ணை  விரும்பி மணக்கிறான்.  கடைசியில் கமலும் ஜெயசுதாவும் திருந்துவதாக கதை.  

குன்னக்குடி வைத்யநாதன் இசையில் நெல்லை அருள்மணி, உளுந்தூர்பேட்டை ஷண்முகம், திருச்சி பரதன் ஆகியோர் பாடல்கள் எழுதி இருந்தனர்.  இந்தப் பாடல் நெல்லை அருள்மணி எழுதியதாம்.

இன்றைய முதல் உஷா உதுப் பாடல் இந்தப் படத்திலிருந்துதான் பகிரப்படுகிறது.

மேடையில் உஷா உதுப்பே தோன்றி பாடுவதாக பாடல்.  ஆங்கில வரிகள் கொண்டது.  நெல்லை அருள்மணி எழுதி இருக்கும் பாடல்.


Love is beautiful for all mankind
Living for love is reason and rhyme
Theres so much for us to do
Why dont you smile and sing along too

Life is a flower love is a treasure
Youth its glamour where is the pleasure
Life is a flower love is a treasure
youth its glamour where is the pleasure

Come along hand in hand
Sing along with me
Life is merry and bright as you can see
Dont you know its a waiting for u
All the world and its laughter too
Come along sing with me you and you

Ladies and gentlemen
I am here to sing for you tonight
And all I  want u to do is
Shed your inhibitions and clap with me ok
One two three four

Come along sing with me sing with me
Sing with me
Life is merry and bright as u can see

Dont you know its a waiting for u
All the world and its laughter too
Come along sing with me you and you

Life is a flower love is a treasure
Youth its glamour where is the pleasure



=====================================================================================

மியூசிக் டைரக்டரின் மகளாக இருந்தாலும், 'எல்லா இடத்திலும் உனக்கான திறமையை மட்டுமே சொல்லி உன்னை அடையாளப் படுத்திக்க'னு அப்பா சொல்வார். 

சின்ன வயசுல நிறைய மேடைக் கச்சேரிகளில் பாடிப் பாடியே எனக்கான அடையாளத்தை தக்கவெச்சுகிட்டேன். 

தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தாலும், எனக்குப் பெரிய ஆர்வமில்லை. 
காலேஜ் படிக்கிறப்போ, மணிசர்மா சார்கூட கொஞ்ச காலம் வொர்க் பண்ணினேன். 

அடுத்தடுத்து தேவிஶ்ரீ பிரசாத், கீரவாணி உள்ளிட்ட முன்னணி தெலுங்கு இசையமைப்பாளர்களுக்கு முந்நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடினேன். 

தமிழில் 'நரசிம்மா' படத்தில் பாடின 'லா லா நந்தலா' பாட்டு பெரிய பிரேக் கொடுத்துச்சு.''

கடவுள் தந்த அழகிய வாழ்வு', 'காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே', 'பெண்ணே நீயும் பெண்ணா', 'ஒரு சின்ன வெண்ணிலா போலே', 'மதுரை ஜில்லா மச்சம்தாண்டா', 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு', 'டார்லிங் டம்பக்கு', 'ஓயா ஓயா' என நிறைய சொல்லலாம். 
தமிழ், தெலுங்கு என இதுவரைக்கும் ஆயிரத்து ஐநூறுப் பாடல்களைப் பாடியிருக்கேன்."

கல்யாண வாழ்க்கை கொஞ்ச காலத்திலேயே விவாகரத்தில் முடிஞ்சது. 
அப்போ மனசு உடைஞ்சு அழுகையே கதின்னு இருந்ததால், என்னைப் பலரும் மறந்துட்டாங்க. 
பாடல் வாய்ப்புகள் இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போ நடந்த, ஒரு மலையாள சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். 
அதில் ஜெயிச்சு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசா வாங்கினேன். 
அது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு

அந்தக் கஷ்டமான வாழ்க்கைப் போராட்டத்தில் தற்கொலை முயற்சிக்குப் போயிருக்கேன். 
இந்த அழகிய வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டதும் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.

வைதேகி காத்திருந்தாள் (ரேவதியின் அப்பா)', 'சிந்து பைரவி',' நீ வருவாய் என' எனப் பல படங்களில் அப்பா நடிச்சிருக்கிறார். 
'தாயே நீயே துணை', 'சர்வம் சக்தி மயம்' என சில படங்களில் அப்பாவும் நானும் சேர்ந்து நடிச்சிருக்கோம். 

இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராவும், நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் பாடியும் இருக்கார். 

'தியாகச் சாலை', 'தேன் சிட்டுக்கள்' எனப் பல படங்களுக்கு இசையமைப்பாளரா வொர்க் பண்ணியிருக்காரு. 

மியூசிக் ஃபீல்டுல இருந்தவங்களுக்கு அப்பாவை நல்லாத் தெரியும். 
ஹார்டு வொர்க் பண்ணினதாலும் உடல்நலப் பாதிப்பினாலும் அவருக்கு பார்வைத்திறன் போயிடுச்சு

2004-ம் வருஷம் சில மாசத்துக்கு சென்னையில் இருக்கும் காது கேளாதோர் கல்லூரியில் டீச்சராக வொர்க் பண்ணினேன். 
அந்த அனுபவம் என் கவலைகளை போக்கி, மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்துச்சு.

குடும்பத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நினைச்சேன். 
அதுக்காக இசைத் துறையில் வேகமா உழைச்சுகிட்டு இருக்கேன். இதுக்கிடையே பெங்களூருல இருக்கும் ஒரு காது கேளாதோர் பள்ளியில் மூணு மாசம் தங்கிப் படிச்சேன். 
அந்தப் படிப்புக்கான முதல் லெவல்ல பாஸாகிட்டேன். 
இன்னும் ரெண்டு லெவல் இருக்கு. அதையும் முடிச்சு, முழுமையான ஆசிரியையாக என் அடுத்த பயணத்தை தொடர்வேன்" என்கிறார் புன்னகையுடன்.

"கடவுள் தந்த அழகிய வாழ்வு. உலகம் முழுதும் அவனது வீடு. கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு" என தன் மெல்லியக் குரலால் கல்பனா பாடும்போது, நம்மை நெகிழ வைக்கிறார்  T.S.ராகவேந்தர் ஐயாவின் மகள் கல்பனா..

============================================================================================

1976 ல் வெளியான படம் மதனமாளிகை.  சிவகுமாருடன் ஹிந்தி நடிகை அல்கா நடித்திருந்தார்.  கே விஜயன் இயக்கத்தில் எம் பி ஸ்ரீநிவாசன் இசை.  உதவி வி எஸ் நரசிம்மன்!

இந்தப் படத்தில் உஷா உதுப் பாடிய ஒரு பாடல் அடுத்து..  

பாடலை எழுதி இசையமைத்தவர் எம் பி ஸ்ரீனிவாசன்.

இந்தப் பாடல் அப்துல் ஹமீது பாஷையில் சொல்வதென்றால் பொப்பிசை பாடல்!  இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு என் நண்பன் வெங்கடேஷ் நினைவுக்கு .வருவான்.  எங்கள் பரபரப்பான விளையாட்டின் நடுவே க்ளோசப்பில் முகத்துக்கு அருகே வந்து 'மல்லிகைப்பூ " என்று கொஞ்சிப் பாடி கடுப்பேற்றுவான்.  

அப்போது கடுப்பு வரும்.  இப்போது புன்னகைதான் வருகிறது.

mango tree...

Pap papapapaaa. Pap papapapaaa Pa 

Under a mango tree 
on the banks of the cauvery 
moon beams peeping thru 
you gave me a garland of sweets

malligai poo malligai poo malligai poo malligai poo

tender shoots of a golden tree 
reach out to the sun 
to replace u in my life 
there is none (there is none) pappa pappapapa pappapa рарара

mango tree's in blossom 
the mango tree's in fruit 
under the mango tree for you 
I wait with your garland of sweets

malligai poo malligai poo

Under a mango tree 
on the banks of the cauvery 
moon beams peeping thru 
you gave me a garland of sweets

malligai poo malligai poo parapadeea deeda tutututuuu

come on papapapp paрарара

mango tree's in blossom 
the mango tree's in fruit 
under the mango tree for you 
I wait with your garland of sweets

malligai poo malligai poo

4 கருத்துகள்:

  1. இன்று இரண்டு ஆங்கிலப் பாடல்களா? பிறகு கேட்டுப் பார்த்து நினைவுக்கு வருதான்னு பார்க்கணும்.

    உஷா உதுப் மிகத் திறமைசாலி. அவங்க காணொளிகள் இன்டெரெஸ்டிங் ஆக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நீங்கள் ஏற்கனவே கேட்ட பாடல்களாகத்தானே இருக்கும்!

      நீக்கு
  2. பாடகி கல்பனா.... பற்றிய தொகுப்பு நல்லா இருக்கு. ஆக மொத்தம் எந்த நிலைக்குப் போனாலும் முழுவதும் சந்தோஷமாக வாழ்பவர்கள் மிக்க் குறைவுதான் போலிருக்கு. உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்துப் பார்ப்பவர்களும் அரிதுதான் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேர உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!