ஊர்ல நாட்டுல வேற யாருமே மாட்டலைன்னா அந்த ஊர்ல இருக்கற அப்பாவியைப் பிடிச்சு அடிப்பாங்களாம்..
அது மாதிரி வேறு எதுவும் சிக்காத நாளில், அல்லது வேறு எதிலாவது சிக்கி நான் சின்னாபின்னமான நாளுக்குப் பின் அன்றொருநாள் துன்புறுத்த இட்லியை தெரிவு செய்தேன்.
"மொத்த மாவுலயும் கலந்துடாதீங்க" - பாஸின் எச்சரிக்கைக்கு குரல் மிரட்டியது.
"எவ்வளவு தேவையோ அவ்வளவு கரண்டி தனியா எடுத்து, அதுலதான் செய்யப்போறேன்" என் பணிவான பதில்.
ஸோ. மாவு கொஞ்சம் தனியா எடுத்துக் கொள்ளப்பட்டது. எத்தனைபேர் என்று எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அத்தனை கரண்டி எடுத்து ஒரு தனிப் பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டேன். மாமியார் இந்த சோதனையில் சிக்க மாட்டார். எப்பவுமே எஸ்கேப். பாஸ் 'பேருக்கு கொஞ்சம் போட்டுப்பேன்' என்று சொன்னாலும், ருசி நன்றாக இருந்தால் தன் பங்கை பிரித்து தரச்சொல்லி வழக்கு போட்டு விடுவார். எனவே ஐந்து பேர் என்றே கணக்கு வைத்து யார் யார் எவ்வளவு இட்லி சாப்பிடுவார்கள் என்று மனக்கணக்கு பார்த்து அவ்வளவு கரண்டி மாவு.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், வரமிளகாய், தக்காளி, இஞ்சி, சில வாழைப்பூ பிள்ளைகள், கொஞ்சம் மாங்காய் (இது ஏன் என்று கேட்காதீர்கள். ஃப்ரிட்ஜில் இருந்தது. கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்), பச்சை மிளகாய், பூண்டு, கொஞ்சம் கறிவேப்பிலை, கொஞ்சம் கொத்து மல்லி எல்லாம் எடுத்து, கொஞ்சமாய் உப்பு சேர்த்து, வாணலியில் இட்டு அரைவாசி வேகும் அளவு புரட்டி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொண்டு, அதை அந்த மாவில் சேர்த்தேன்.
சி & பெ வெங்காயம், பூண்டு, குடை மிளகாய், கொஞ்...சம் மாங்காய், இங்கும் கொஞ்சம் வாழைப்பூ பிள்ளைகள், மெலிதாக நறுக்கிய மூன்று சிறு தேங்காய் பத்தைகள், உருளைக்கிழங்கு பொடியாய், கேரட் பொடியாய், பச்சை மிளகாய், கொத்து மல்லி ஆகியவற்றை பொடியாய் நறுக்கி எடுத்துக் கொண்டு மாவில் சேர்த்தேன். காஷ்மீரி மிளகாய்ப்பொடி இன்னும் வாங்கப் படவில்லை. அது இருந்திருந்தால் அது இரண்டு ஸ்பூன் சேர்த்து சிவப்பாக, கலர்ஃபுல்லாக இருந்திருக்கும்!
தக்காளி, வெங்காயம், துளி புளி, துவரம்பருப்பு, வரமிளகாய், இரண்டு பல் பூண்டு போட்டு வாணலியில் வதக்கி ஆறவைத்து உப்பு போட்டு சட்னி அரைத்து வைத்துக் கொண்டேன். தேங்காய் சட்னமி அரைத்து வைத்தேன். இட்லிக்கென்று ஒரு ஸ்பெஷல் சாம்பார் செய்தேன். அதன் செய்முறை இன்னொரு நாளில் சொல்கிறேன்.
இட்லிக்கு நடுவே அப்படியே வட்டமாய் வைக்க...
மாவில் சேர்க்க...
கலந்த மாவை எடுத்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொண்டு, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி அதில் வார்த்து எடுத்தேன்.
மேலே படத்தில் காட்டியுள்ளபடி அரைக்கரண்டி மாவூற்றி வெங்காயச்சுருளை நடுவில் வைத்து மேலும் அரைக்கரண்டி ஊற்றி, அதே போல இன்னொரு தட்டில் வட்டமாக நறுக்கப்பட்ட குடைமிளகாயை நடுவே வைத்து மேலும் அதன்மேல் மாவு ஊற்றி ஜாக்கிரதையாக இட்லி குக்கரில் வைத்து வார்த்து எடுத்தேன். நேரம் கடந்தும் இன்னும் கொஞ்சம் வேகவேண்டி இருந்ததால், மேலும் சற்று நேரம் வைக்க வேண்டி இருந்தது.
தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கென செய்த சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டோம். நன்றாய் இருந்தது. ஏகப்பட்ட வெங்காயம் செலவு!
பின் யோசனைகள் :
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை அப்படி வட்டமாக கட் செய்து வைத்து இட்லி வார்த்திருக்க வேண்டாம்.
வெறும் இட்லியாகவே இதைச் சாப்பிடலாம் என்றாலும் ஒன்றுக்கு மூன்று "தொட்டுகை" செய்திருக்க வேண்டாம்!! ஒரு காரச்சட்னி மட்டும் செய்திருந்திருக்கலாம். எனக்கு காரம் எதுவும் தெரியா விட்டாலும், பாஸும், மருமகளும் 'உஸ் உஸ்' என்றார்கள்.
அட... வித்தியாசமான வெஜிடபிள் இட்லி. செய்முறை சுலபமாக இருந்துவிடக் கூடாது என்று வட்டமாகத் திருத்திய வெங்காயத்தையும் கேப்சிகமும் உபயோகித்தீர்களா?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... அப்படி இல்லை. அதுதான் என் முதல் கற்பனையாக இருந்தது!தக்காளியை, வெங்காயத்தை வட்டமாக நறுக்கி மாவுக்கு நடுவில் வைத்து வார்த்து எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். செயல்படுத்தும்போது இப்படி எல்லாம் மாறியது! இப்படி வெங்காயம், கேப்ஸிகம் நறுக்காமல் வெஜிடபிள் இட்லி முன்னரும் செய்திருக்கிறேன்.
நீக்குபீட்ரூட் கொஞ்சம் அரைத்துச் சேர்த்தால் நிறம் கிடைக்கும். ஆனால் தித்திக்கும். இம்முறை கைவசம் வீட்டில் பீட்ரூட் இல்லை!
இந்த இட்லிக்கு மிளகாய்பொடியும் தேங்காய் சட்னியும் போதாதோ? ஏற்கனவே இட்லியில் மசாலா ஐட்டங்கள் இருக்கே.
பதிலளிநீக்குசாம்பார், தக்காளிச் சட்னி எல்லாம் அதிகம் எனத் தோன்றியது.
அதை நானே கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேனே, படிக்கவில்லையா?
நீக்குஆர்வக்கோளாறு!
ஹோட்டல் போல சிந்தித்ததால் வந்த ஏற்பாடு! காய்கறிகள் போட்டிருப்பதால் இட்லி கொஞ்சம் தித்திப்பு கொடுக்கும். எனவே வரமிளகாய் கார சட்னி ஓகே.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம். பேத்தி எப்படி இருக்கிறார்?
நீக்குஇப்போது நலமாக உள்ளாள். இன்னமும் கட்டு பிரிக்கப்படவில்லை. பிரித்தவுடன் மருத்துவர் பார்த்து சரியாகி விட்டதென சொல்ல வேண்டுமென இறைவனை வேண்டிக் கொண்டே உள்ளோம். நடுநடுவில் மணிக்கட்டில் வலி எனக் கூறும் போது ஒரு பயம் வருகிறது. வரலக்ஷ்மி விரதம், ஆவணி அவிட்டமென பூஜைகளுடன் நாட்கள் நகர்கின்றன. அனைவரும் நலமாக இருக்க வேண்டும். வேறென்ன வேண்டுவது.!
நீக்குகட்டு பிரிக்கும்போது நல்ல சேதிதான் டாக்டர் சொல்லுவார். கவலைப்படாதீர்கள்
நீக்குசரியாகி விடும். வலி என்று கூறுவது எதுவும் ஆபத்தாகாது. பிரார்த்திப்போம்.
நீக்குதங்கள் இருவரின் ஆறுதலான நல்ல வார்த்தைகளுக்கு நன்றி. நன்றி பிரார்த்திப்போம். 🙏.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவும் வித்தியாசமான முறையில் நன்றாக உள்ளது. காய்கறிகள் இட்லி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சுவையும் நன்றாக இருந்ததற்கு மகிழ்ச்சி. இப்படி சாப்பிட வேண்டுமென என் மனதும் நினைக்கிறது. கூடவே தொட்டுகைகள் எத்தனை வகைகள்..! . எத்தனை வேலைகள்..! உங்களுக்கு நல்ல பொறுமை, (பெயரும் ஸ்ரீராம் அல்லவா? பெயருக்கேற்றபடி..) விதவிதமாக சமையல்களை செய்து அசத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. ஆனால் நளன் சமைப்பார். ஸ்ரீராமர் சமைப்பாரா என்ன! அவருக்குதான் ஒரு ஆல் இன் ஆல் உதவியாளர் கூடவே இருந்தாரே...!
நீக்குபொதுவாக ஆயகலைகள் அறுபத்திநான்கும் கற்று தேர்ந்தவர்கள்தானே அன்றைய அரசர்கள். கடமையின் பொருட்டு பதிநான்கு வருட வனவாசத்தில் காய்கறி, பழங்களுடன் தம் வாழ்க்கை நெறியை கடைப்பிடித்தார் ஸ்ரீ ராமர் அல்லவா.? கூடவே அவருடன் அந்த உதவியாளரும். இல்லையெனில் மாளிகையில் தாம் கற்ற திறமைகளை பறைசாற்றியிருப்பார்கள்.
நீக்குஓ... நீங்க அப்படிக்கா வர்றீங்களா?!! அப்படி வேணும்னா சொல்லலாம்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு"காய்ட்லி" இட்லி என்ற தலைப்பை "காஸ்ட்லி "இட்லி என்றுதான் படித்தேன். இறுதியில் நீங்களும் "ஏகப்பட்ட வெங்காயம் செலவு" என எழுதியிருக்கிறீர்கள். ஹா ஹா. ஆனால் ருசி நன்றாக இருந்திருக்கும். வீட்டிலும் உங்களின் இந்த செய்முறைக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருக்குமே ..! எங்களது பாராட்டுகளும்.
வித்தியாசங்களுடன் எதையும் செய்யும் போது பொருட்செலவு, மட்டுமின்றி நம் நேரங்களும் செலவாகும்.
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி." என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நீங்கள் ஆண்டியை அரசனாக்கி இருக்கிறீர்கள். "அரசனுக்கு மெய்க்காப்பாளர்கள் வேறு நிறைய பேர் சுற்றிலும்." அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெங்காயம் ஏன் அதிக செலவு என்றால் இட்லியில் நறுக்கிப் போட, அரைக்க, சாம்பாருக்கு, சட்னிக்கு என்று சகலத்திலும் வெங்காயம். அதனால்தான்.
நீக்குஅதென்ன, இட்லியை அஙஜ்ஹடி என்று சொல்லி விட்டீர்கள்... அது எப்பவுமே ராஜா ஆச்சே!!!
/அது எப்பவுமே ராஜா ஆச்சே!!!/
நீக்குஅது நமக்கு.. நம்மைப் போன்ற இட்லி பிரியர்களுக்கு. இங்கு வீட்டில் என்னைத் தவிர இட்லி மற்றவர்களுக்கு ஆண்டி. ஒரு நாள் வித்தியாசமாக இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இட்லி மிளகாய் பொடி வைத்து மட்டுந்தான்..! மறுநாட்கள் அந்த மாவு தோசையாக வடிவெடுத்து விடும்.
உங்களைப்போல இந்த காய்கறிகளை கலந்து ஒருநாள் செய்ய வேண்டும். சாப்பிடுகிறார்களோ என்னவோ..! செய்து பார்க்க வேண்டும்.
பிடிக்காது, சாப்பிடமாட்டேன் என்று சொல்பவர்கள் எல்லாம் இட்லிதான் வேண்டும் இட்லி போதும் என்று சொல்லும் நேரமும் வரும். மற்ற ருசிகள் அலுத்து விடும். இட்லி யுனிவர்சல் அக்ஸெப்ட்டார் மாதிரி. எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து ருசியை மாற்றி சாப்பிடக்கூடிய ஆபத்தில்லாத பண்டம்!
நீக்குஇந்த மாதிரி செய்வதை குழிப்பணியாரம் என்று சட்டியில் நேரடியாக வேக வைத்து செய்வார்கள். நீங்கள் ஆவியில் வேகவைத்து இட்லி ஆக்கி விட்டீர்கள். அதுதான் வித்யாசமா?
பதிலளிநீக்குசெய்ததே அதகளம் என்றால் செய்து முடித்தபின் அடுக்களை என்ன விதத்தில் இருந்திருக்கும்? அதை சுத்தம் செய்யவே அரை மணி நேரம் ஆகியிருக்கும்
என்னவோ நீங்கள் அடுக்களையில் புகுந்தால் இம்சை அறுசுவை சாப்பாடு ராமன் ஆகி எங்களையும் இம்சைப் படுத்துகிறீர்கள். வாழ்க உங்களது அடுக்களை ஆராய்ச்சி.
Jayakumar
வாங்க JKC சார்... இன்னிக்கி வரமாட்டீங்கன்னே நினைச்சேன்!
நீக்குசுத்தம் செய்ய அரைமணியா? என்கிட்டே ஒரு பழக்கம் என்ன தெரியுமா? உதாரணத்துக்கு புளி கரைத்து ஊற்றுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கையோடு அப்பப்ப பாத்திரத்தைக் கழுவித் தேய்த்து விடுவேன். போலவே அவ்வப்போது மேடையை சுத்தம் செய்து கொண்டே இருப்பேன்.
அவ்வப்போது அடுக்களை ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருப்பேன். சிறிய சோதனைகளை இங்கு நான் வெளியிடுவதில்லை! அதெல்லாம் 'அதான் எனக்குத் தெரியுமே' டைப்!
ஜெ கே அண்ணா உங்க கருத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன்.
நீக்குஸ்ரீராம், ஜெ கே அண்ணா கீழ என் கருத்துகளையும் பார்த்தால் - இதுங்க வித்தியாசம்ன்ற பேர்ல என்னென்னவோ பண்ணித் தொலைக்குதுங்க....உங்களுக்கு மட்டும் வைச்சுக்கோங்க என் பக்கம் ப்ளேட்டைத் தள்ளிடாதீங்க ....ஆளை விடுங்கடா சாமின்னு!!!!!
கீதா
உங்களுக்கு நிறைய பொறுமை ஆசை எல்லாம் இருக்கிறது ஜமாயுங்கள். ஆனால் எங்கள் வீட்டில் இட்லி தனியாக செய்தால் தான் பிடிக்கும் இப்படி எல்லாம் காய்கறி கலவைகள் சேர்த்தால் பிடிக்காது. ஒரு முறை நான் செய்தேன் அது போணியாகவில்லை.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... போணியாகவில்லையா? அதில் என்ன குறை என்று கண்டுபிடித்து வேறு மாதிரி செய்து பார்க்கலாம்!
நீக்குகலக்கறீங்க ஸ்ரீராம். வித்தியாசமாக முயற்சி செய்து. நல்லாருக்கு. சூப்பர்னும் சொல்லிடறேன்!!!
பதிலளிநீக்குசூப்பர் சூப்பர்!!! இப்படிச் செய்ய நமக்குப் பொறுமை வேண்டும், சாப்பிடக் காத்திருப்பவர்களுக்கு அதைவிடப் பொறுமை வேண்டும்.
நானும் முன்னர் அடிக்கடி இப்படி வித்தியாசமாகச் செய்ததுண்டு இப்பதான் ரொம்பக் குறைஞ்சுருச்சு.
கீதா
ஸ்ரீராம் உங்ககிட்ட தெரிந்து கொண்ட டிஃபன் சாம்பார் சூப்பர். நான் செய்து சொன்னேனே!!!!
பதிலளிநீக்குஇப்படியான இட்லியில் முன்னர் பச்சை, ஆரஞ்சு, வெள்ளைன்னு நம்ம தேசியக் கொடி வர்ணத்தில் செய்ததுண்டு. ஒன்று அரைத்துவிட்டு. மற்றொன்று காய்களை அப்படியே கட் செய்து காரட், குடைமிளகாய் கொத்தமல்லி....அப்புறம் வெறும் மாவு இப்படி ஊற்றி. எல்லாம் நம்ம பையன் விரும்பிச் சாப்பிடுவான் நம்ம வீட்டு நெருங்கிய வட்டமும்...
கீதா
இன்னும் வரேன்....வியாழன் வரை பிசி ....
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம், இப்படிச் சேர்த்துச் செய்ததில்லை. அதாவது காய்களை வதக்கி அரைத்துக் கலந்தும் அப்புறம் காய்களைநறுக்கிப் போட்டுக் கலந்தும்....
பதிலளிநீக்குதனித்தனியாகச் செய்திருக்கிறேன். அரைத்துக் கலந்து தனியாக, காய்கள் கலந்து தனியாக.
வாழைப்பூ இட்லி தனியாக. என்று...
பீட்ரூட் போட்டும் செய்திருக்கிறேன். எல்லாவற்றிலும் வெங்காயமும் சேர்த்துவிடுவேன் !!!!!!
கீதா
மசாலா இட்லின்னு உ கி மசாலாவை, இட்லித் தட்டில் ஒரு கரண்டி மாவு ஊற்றி , மசாலா வைத்து அதன் மேல் கொஞ்சம் மாவு ஊற்றி.. காய்களையும் இப்படிச் செய்ததுண்டு. நம்ம வீட்டில் எல்லாரும் சோதனை எலிகளாக இருக்கப் பயந்தது இல்லை என்பதால்!!!!!!
பதிலளிநீக்குகீதா