12.9.25

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்... உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்...

ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள்.  உண்மையான பொருள் என்னவோ,  நாம் நமக்குத் தெரிந்த பொருளிலேயே எடுத்துக் கொள்வோம்.  AVM செட்டியார் திரைத் துறையில் பழுத்த அனுபவவாதி என்று அறிவோம்.  ஆனால் அவர் போட்ட கணக்கு தப்புக் கணக்கு ஆனது.  அவர் மகன் சரவணன் எடுத்துச் சொன்னதை தந்தை கேட்கவில்லை.  


அதாவது,

'நானும் ஒரு பெண்' வெற்றியைத் தொடர்ந்து அவர்களையே நாயக நாயகியாய் போடவேண்டும் என்று காக்கும் கரங்கள் படம் எடுக்கப் பட்டபோது AVM பிடிவாதமாயிருந்திருக்கிறார்.   AVM மின் துணைக் கம்பெனியாய் தொடங்கிய 'முருகன் பிரதர்ஸ்' சார்பில் 'காக்கும் கரங்கள்' படம் தொடங்கியபோதுதான் இதெல்லாம்.

முன்னதாக 'சித்ராபௌர்ணமி' என்ற ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்தப் படம் கைவிடப்பட்டதால் ஏமாற்றத்திலிருந்த சிவகுமாருக்கு இது முதல் படமாய் அமைந்தது..  கைவிடப்பட்ட படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு சிவகுமாரை செட்டியாரிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

தவறான நடிக, நடிகை காரணத்தாலேயே படம் தோல்வி அடைந்தது என்று சரவணன் பின்னாளில் குறிப்பிடுகிறார்.

1965 ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தில் எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி சிவகுமார் ரேவதி, நாகேஷ் நடித்திருந்தனர்.  ஒரு பாடலைத்தவிர மற்ற பாடல்களை வாலி எழுதி இருந்தார்.  இன்று பகிரப்படும் இரண்டு பாடல்களும் வாலி எழுதியதுதான்.  கே வி மகாதேவன் இசை.  இந்நிறுவனத்துக்கு கே வி மகாதேவன் இசை அமைப்பது இதுதான் தொடக்கம்.

பாடலை TMS மற்றும் P சுசீலா பாடி இருக்கிறார்கள்.  வாலியின் அற்புத வரிகள்.  திரை இசைத்திலகம் கொடுத்துள்ள இனிமையான இசை.  

காட்சியில் எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி.

TMS  : ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

TMS  : ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

P. சுசீலா  : நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

P. சுசீலா  :நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

TMS  : ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்

P. சுசீலா  : உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற 
மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற 
மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்.

TMS  : ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
பெண் : நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

TMS  :  முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்

P. சுசீலா  : பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்

TMS  : ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
P. சுசீலா  :  நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு


=============================================================================================

அவள் ஒரு தொடர்கதை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரேர் போட்டோ என்று இணையத்தில் இதைப் பார்த்தேன்.  அப்படி என்ன ரேரோ?  இருந்தாலும், ஜோதியில் ஐக்கியமாக அதை எடுத்து, இங்கும் ஷேர் செய்து விட்டேன்!


=============================================================================================


உங்களுக்கு அமோல்பாலேகரை நினைவு இருக்கிறதா?  அல்லது அவரை நீங்கள் அறிவீர்களா?

கோரி தேரா காவும் படா பெயரா,  ஜானே மன் ஜானே மன் போன்ற யேசுதாஸ் பாடல்களைக் கேட்ட ஞாபகம் இருக்குமாயின் இவரையும் ஞாபகம் வரும்.  அந்தக் காட்சியில் நடித்திருப்பவர் இவர்தான். சிட்சோர், ச்சோட்டீ ஸீ பாத், கோல்மால்,போன்ற படங்களின் ஹீரோ.  பெங்காலி.

சினிமா என்பது சுலபமாக சம்பாதிக்கக் கூடிய ஒரு மீடியம் என்று நினைக்கிறோம்.  அங்கும் என்ன சிரமங்களோ இருக்கின்றன, என்னென்ன டெடிகேஷன்ஸ் தேவைப்படுகின்றன என்று தெரிகிறது.

மாற்றுமொழிப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட சிரமங்களை இங்கு சொல்கிறார் அமோல்.  வீடியோவில் அவரைப் பார்த்தபோது அவர் மாதிரியே இல்லை.  நிறைய மாறி இருந்தார்!

அமோல் பாலேக்கர் ஒரு மலையாள படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லும்போது,  முன்னதாக தான் கன்னடப் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பேசி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  அது எப்படி மலையாள பட அனுபவத்துக்கு உதவியது என்று சொல்கிறார்.  கன்னடபடத்துக்கு நடிக்கச் சென்றபோது, உதவி டைரக்டர் வசனங்களை பேசிக்காட்ட, இவரும் பதிலுக்கு பேசி ரிகர்சல் பார்க்க, இவர் பேசிய கன்னடத்தை கேட்ட அந்த உதவி டைரக்டர் 'கன்னடம் ரொம்ப நல்லா பேசறார்' என்று டைரக்டர் சத்யு விடம் சொல்ல, டப்பிங்கும் வேறு ஆள் தேவை இல்லை என இவரையே பேசச் சொல்லலாம் என்று முடிவானதில் இவருக்கும் பெருமை, மகிழ்ச்சியாம்.  

ஆனால், 

மறுநாள் அவுட் டோர் ஷூட்டிங்கில் அரைமணிநேரத்தில் முடிக்க வேண்டிய மேஜிக் ஹவரில், அவரவர் அவரவர் பொசிஷனில் அமர வைக்கப் பட்டபோதும் இவரும் ஓரிடத்தில் அமரவைக்கப் பட்டபோதுதான் இவருக்கு திடீரென 'அந்த' நினைவு வந்ததாம்.  

தெரியாத பாஷை.  நாம் மனப்பாடம் செய்து விட்டோம்.  நமக்கு எதிரே பேசப்போவது அனந்த்.  (அனந்த்நாக்கைச் சொல்கிறார் என்பது என் யூகம்) .  அவர் என்ன பேசுவார் என்றே தெரியாது.  எப்போது, எப்படி, எதற்கு நாம் பேச வேண்டும், பதிலளிக்க வேண்டும் என்று தெரியாதே என்று நினைத்திருக்கிறார்.  என்ன உணர்ச்சி, எப்படி ரீயாக்ட் செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டுமல்லவா?  எனவே உடனே அவர்  டைரக்டரை அழைத்துக் கேட்டால், அவர் அவர் வேலையின் டென்ஷனில், பரபரப்பில் "நான் சொன்னபடி செய்யுங்கள்"  என்று  சொல்லி பரபரப்பாக இருந்திருக்கிறார்.  

இவர் அனந்தை அழைத்து, அவர் போர்ஷனை பேசச் சொல்லிக் கேட்டாலும் புரியவில்லை.  எனவே கொஞ்சம் யோசித்தவர் ஒரு டெக்னிக்கை FOLLOW செய்ய முடிவு செய்திருக்கிறார்.  

இவர் கிராம கேரக்டர் என்பதால் காதில் ஒரு பீடி சொருகி இருந்தார்களாம்.  அதை எடுத்து வாயில் வைத்து கடித்தபடியே மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டே ஏதோ டயலாக் டெலிவரி செய்து சமாளிதிருக்கிறார்... 

இங்கே ஒரு திருப்புமுனை,.  அந்த ஸ்டைலையே அந்த கேரக்டருக்கு ஏற்றி பாத்திரத்தின் தன்மையையே மாற்றி எழுதினார்களாம்.  எனினும் ஒவ்வொரு முறையும் இப்படி சமாளிக்க முடியாதே என்கிறார்.  அந்த அனுபவத்தில் அவர் பாலு மஹேந்திராவிடம் முன்கூட்டியே எல்லாம் கலந்து பேசி மலையாளத்தில் நடிக்க, அந்த படம் சில்வர் ஜூபிலியாம்.
​=============================================================================================================================

இதுவும் அதே படத்திலிருந்துதான் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை!  இந்தப் பாடலில் ஒரு கவனிக்கபப்ட்ட வேண்டிய வித்யாசம் உண்டு.  இதில் TMS பல்லவி மட்டுமே பாடுவார்.  பாடல்களில் எத்தனை வகை பாருங்கள்.  

இந்தப் பாடல் எனக்கு இன்னொரு பாடலையும் நினைவு படுத்தும்.  

பேசும்தெய்வம் படத்தில் இடம்பெறும் 'சின்னக் கண்ணனே பேசும் தெய்வமே' பாடல் நினைவுக்கு வரும்!

பாடலின் கீழே இருக்கும் பின்னூட்டங்களிலிருந்து...

- இந்த பாடல் சென்னையில் இப்போது பார்க் ஸ்டேஷன் என்ற இடத்தில்1850 ஆம் ஆண்டு காலகட்டததில் 116 ஏக்கரில் 26 குளங்களுடன் ஆங்கிலேயர் ஒருவரால் நிறுவப்பட்ட மிகப்பெரிய அழகான பசுமையான பார்க் தான் இந்த பாடல் இடம் பெற்ற இடம்

- இந்த பாடல் காட்சியில் வரும் மிருககாட்சி சாலை படகு இருக்கும் குளம் எதுவுமே இப்போது இல்லை. இந்த குளத்தின் பெயர் அல்லி குளம் அதனை சுற்றியுள்ள பூங்கா இது அனைத்தும் இன்று சென்னை சென்ட்ரலில் உள்ள அல்லி குளம் வணிக வளாகம் அதில் சென்னை பெருநகர நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. மிருககாட்சி சாலை வண்டலூருக்கு மாற்றப்பட்டது..

- The zoo in the song is the first zoo in Chennai near Ribbon Building opened by British(Edward Green Balfour). before Vandalur zoo.

P. சுசீலா    : அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்…

P. சுசீலா    : அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

TMS   அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

P. சுசீலா    : பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்..
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்..

TMS   அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

P. சுசீலா    : நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ
நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ

TMS   அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்….!

TMS, P. சுசீலா    : அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்….! : 

43 கருத்துகள்:

  1. இன்றைய பதிவு சுமார் முக்கால் மணி நேரம் தாமதமாக வெளியாகியது ஏனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..

      ஷெட்யூல் டைம் ஐந்து என்பதை குறிக்க மறந்த குற்றம்தான்! அப்படியே விட்டிருந்தால் காலை பதினொன்று 25 க்கு வெளியாகி இருக்கும்!!

      நீக்கு
  2. வாலியின் இந்த இரண்டு பாடல்களும் எனக்குப் பிடித்தவை.

    அதிலும் ஞாயிறு என்பது கண்ணாக... வாலியின் வரிகள் மிகவும் ரசிக்கத்தகுந்தவை. திரைப்படத்திற்கு முக்கியமாக எல்லாத் தரப்பினராலும் புரிந்துகொள்ளும்படி எளிமையாகவும் பாடல் இருக்கணும், கவிஞருக்கு என்ற தனித் திறமையும் தெரியணும். வாலி மிகுந்த திறமைசாலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகமில்லாமல்.  நல்ல பல சந்தங்களுக்கு சொந்தக்காரர்.

      நீக்கு
  3. அமோல் பாலேகர் பகுதி, சின்னி ஜெயந்த் மனோபாலா சம்பந்தப்பட்ட கன்னடப் பட அனுபவத்தை சின்னி ஜெயந்த் சொல்லியிருந்ததை நினைவுபடுத்தியது.

    அது சரி.. முந்தைய பிறவியில் நடக்காத காதல் அடுத்த பிறவியில் நடந்துவிடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே?  நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அடுத்த பிறவி எடுக்கிறோம் என்று சில வியாழன்களுக்கு முன் பதிவிட்டிருந்தேனே...   மறந்து விட்டதா?!!  கல்யாண் குமார் தேவிகா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை பாருங்கள்!!

      நீக்கு
    2. முந்தின பிறவியில் ஒரு காதல் என்றால் பரவாயில்லை. பலரைக் காதலித்திருந்தால்?

      நீக்கு
    3. உண்மையான காதல் ஜெயிக்கும் என்று சொல்லலாமா?  ஏழேழு பிறவியிலும் தொடரும்ம் பந்தம் என்றெல்லாம் உட்டாலக்கடி செய்வதில்லையா?!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. என் மகன் சிறுவனாக இருந்தபொழுது ஒரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பான காக்கும் கரங்கள் படம் பார்த்துவிட்டு, "அம்மா யாரும்மா இந்த நடிகர்? அந்தக் காலத்தில் இவ்வளவு naturalஆக நடித்திருக்கிறார்!" என்று SSR நடிப்பை வியந்தான். நானும் SSR ன் நடிப்பை காக்கும் கரங்கள், கை கொடுத்த தெய்வம், தெய்வப் பிறவி, குமுதம் போன்ற படங்களில் ரசித்திருக்கிறேன். நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்கள் இரண்டுமே இனிமையானவை. அதிலும் ஞாயிறு என்பது கண்ணாக பாடல் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்னவோ SSR பிடிக்காது.  அவரை ஏன் லட்சிய நடிகர் என்று அழைத்தார்களோ என்று தோன்றும்!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே அருமையான பாடல்கள். அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். அமோல் பாலேக்கர் நல்ல நடிகர். அவர் நடித்த பல படங்கள் முன்பு தொலைக்காட்சியில் (அப்போது சனிக்கிழமைதோறும் மாலை ஹிந்தி படங்கள் ஒளிப்பரப்புவார்கள்.) பார்த்துள்ளேன். படத்தின் பெயர்கள் மறந்து விட்டது.

    இன்றைய பாடல்களின் படம் சம்பந்தபட்ட தகவல்களையும் அறிந்து கொண்டேன். எஸ். எஸ் ஆர். அவர்களின் தமிழ் உச்சரிப்பு ஆழமானவை. விஜயகுமாரி அவர்களின் நடிப்பும், உச்சரிப்பும் அவருக்குப் போட்டியாக நன்றாக இருக்கும். இருவரும் இப்படங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்களோ ? முக்கால்வாசி இருவரும் ஜோடியாகத்தான் அனேக படங்களில் நடிப்பார்கள். செய்திகளுக்கும், பாடல்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லி தண்டு பாடலின் ஆரம்ப இசையில் விஜயகுமாரி நடிப்பை கவனித்தீர்களா?

      நீக்கு
  7. அருமையான பாடல், ஸ்ரீராம் ரொம்ப ரொம்ப ரசித்த பாடல்., மெட்டும் வரிகளும் அத்தனை அருமை. வாலியின் திறமை பல பாடல்களில் பளிச்சிடும். குத்துப்பாடலும் எழுதுவார்...அதாவது க்காலத்துக்கு ஏற்பவும் எழுதக் கூடிய திறமை! அவரிடம் கேட்பதற்கு ஏற்ப எழுதும் திறமை!

    அழகான அர்த்தமுள்ள நயம், லயம் சந்தம் எல்லாம் பொருந்தும்படி எழுதும் திறமைக்கிடையில், வேறு வகைஎ ழுதுவது கஷ்டம் என்று தோன்றும். அத்திறமையும் அவரிடம் உண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரிகளும் அருமை.  டியூனும் இனிமை.  இப்போதெல்லாம் ராகம் கண்டு பிடிப்பதை விட்டு விட்டீர்களா கீதா?

      நீக்கு
  8. ஸ்ரீராம், அதெல்லாம் சும்மா 'ரேர்' என்று சொல்லி மக்களைக் கவர இழுக்க....

    சுஜாதா தானே அது? பாலச்சந்தர் சொல்லிக் கொடுக்கிறார் போலும் அந்த ஆண் நடிகர் யார், ஸ்ரீராம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நடிகர் விஜயகுமார்.  ரேர் என்று அவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் படப்பிடிப்பில் இப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் பத்திரிகையில், அல்லது வெளியில் வராது.

      நீக்கு
  9. அமோல்பாலேகரைத் தெரியும், கோரி தேரா காவும் படா பெயரா பாடலும் ரொம்ப ஃபேமஸ் தாஸேட்டன் பாடியது. ரசித்த பாடல். அப்போது அடிக்கடி முணுமுணுத்த பாடல்!

    ஆனால் மற்ற விஷயங்கள் நஹி! லேது. அறியில்லா, கொத்தில்லா.

    அவரது அனுபவங்கள் சுவாரசியம். மொழி மாறி நடிக்கும் போது இந்த சிரமங்கள் கண்டிப்பாக வரும்.

    நான் இப்ப ஹிந்தி பேசுவது போல!!! பேசவேண்டியவற்றை நான் எனக்குத் தெரிந்த் ஹிந்தியில் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டு விடுவேன் ஆனால் எதிரில் இருப்பவர் ஃப்ளோல பேசுவதுக்கு நான் பதில் சொல்ல வேண்டுமே!!!!!ஹிஹிஹிஹி அங்கு சமாளிக்கணும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒன்றும் கஷ்டப்படாமல் அவர்கள் காசு பார்க்கவில்லை என்று சொன்னாலும்...

      இப்போது நடிகர்கள் வாங்கும் சம்பளம் மிக அதிகம்தான்.

      நீக்கு
  10. 1850 ஆம் ஆண்டு காலகட்டததில் 116 ஏக்கரில் 26 குளங்களுடன் ஆங்கிலேயர் ஒருவரால் நிறுவப்பட்ட மிகப்பெரிய அழகான பசுமையான பார்க் தான்//

    பாருங்க பார்க் ஸ்டேஷன் பெயர்க்காணரன்ம் தெரிய வருகிறது வரலாறும். சென்னை எத்தனை அழகாக இருந்திருக்கு இல்லையா? அதைக் கற்பனையில் பார்த்துக் கொண்டேன்.

    இப்படிப் பல பெயர்களுக்கான காரணங்கள் இப்ப இல்லை பெயர்மட்டுமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையின் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே வருகின்றன.

      நீக்கு
  11. இந்த பாடல் காட்சியில் வரும் மிருககாட்சி சாலை படகு இருக்கும் குளம் எதுவுமே இப்போது இல்லை. இந்த குளத்தின் பெயர் அல்லி குளம் அதனை சுற்றியுள்ள பூங்கா இது அனைத்தும் //

    இதை மனதில் கொண்டே வீடியோவைப் பார்க்கவே ண்டும் நிதானமாக. பழசை அழகை பார்ப்பது என்றால் சுகம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி பழைய படங்களை, பாடல்களை பார்க்கும்போது அந்தக் கால சென்னையைப் பார்க்கலாம்.

      நீக்கு
  12. ​அமோல் பலேக்கர் நடித்த முதல் படம் ரஜனி கந்தாவை விட்டு விட்டீர்களே. தேசிய சிறந்த படம் உட்பட நிறைய அவார்டுகள் வாங்கிய படம். பாடல்கள் அருமையாக இருக்கும். சலீல் சவுதரி இசை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இரண்டே பாடல்கள்.  நல்ல படம்.

      நீக்கு
  13. பாடல்கள் இரண்டுமே சிறப்பான, இனிமையான பாடல்கள் தான்! அடிக்கடி ரசிக்கும் பாடல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா..  பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. முருகா...  வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  15. இன்றைய பாடல்கள் இரண்டுமே இனிமையான பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  16. முன்னொரு பிறவி
    எடுத்திருந்தேன்
    உன்னிடம் மனதை
    கொடுத்திருந்தேன்...

    பின்னொரு பிறவி
    எடுத்து வந்தேன்
    பேசிய படியே
    கொடுக்க வந்தேன்...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரியைத் தொடர்ந்து ஒரு நொடி அமைதி.  அப்புறம் ஒரு சின்ன டிங் சத்தம்.  தொடர்ந்து 'ஞாயிறு என்பது...

      நீக்கு
  17. இரண்டாவது பாடலும் இனிமையான பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இரண்டாவது பாடலில் குழந்தையை வைத்து படம் எடுப்பதில் உள்ள சிரமம் தெரிகிறது. அப்பா தோளில் இருக்கும் குழந்தைக்கு புலி யானை எல்லாம் காட்டுகிறார்கள், அப்புறம் குழந்தையைத் தனியாக கையை நீட்டிக் காட்டுவது போல் சில ஷாட்ஸ் எடுத்து ஒட்டியிருக்கிறார்கள் எடிட்டிங்கில் என்று தெரிகிறது. அப்போது இவ்வளவு எடுத்ததே பெரிய விஷயம்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​விக்கியில் இயக்குனர் குழந்தையை நடக்க வைக்க பட்ட சிரமத்தை சொல்லி இருக்கிறார். பாடல் ஆரம்பிக்கும்போது ஒரு தாளத்துடன் ஆரம்பிக்கும். அப்போது விஜயகுமாரின் ஆக்ஷன் கவனித்தீர்களா?

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. பகிர்ந்த இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
    முதல் மிகவும் பிடிக்கும்.

    //அமோல்பாலேகரை நினைவு இருக்கிறதா? அல்லது அவரை நீங்கள் அறிவீர்களா?//

    அவரை நினைவு இருக்கிறது. அவர் நடித்த படங்கள் , பாடல்கள் எல்லாம் கேட்டு இருக்கிறேன்.

    ரேர் போட்டோ பாலசந்தர் வசனம் சொல்லி கொடுக்கும் படம் "அவள் ஒரு தொடர்கதை படம் " மேக்கப் முடியவில்லை போலும் சுஜாதாவிற்கு.
    விஜயகுமார் கவனிக்கிறார் சுஜாதா பேசுவதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேக்கப் போடும்போது கேபி சுஜாதாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார்,

      நீக்கு
  21. இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன். படம் பார்த்ததில்லை.

    அமோல் பலேக்கர் பற்றி இப்பொழுதுதான் அறிந்தேன்.

    அவள் ஒரு தொடர்கதை படம் பார்த்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!