
நெல்லைத்தமிழன்
வேணுஜி பதில் : எழுதுவது என்பதே நேரத்தை வேறொரு சங்கதியில் செலவிடுவது; ஆகவே கவனம் திசைதிரும்புவது இயல்பு. நகைச்சுவை எழுதும்போது, இது முதலில் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டுமா என்று யோசித்து எழுதுவதால் கண்டிப்பாக கொஞ்சம் மன அழுத்தம் குறையும் என்பது என் அனுபவம். வாசகர்களுக்கு மன அழுத்தம் குறையுமா என்றால், எப்போதோ ‘வாஷிங்டனில் திருமணம்’ வாசித்து வாய்விட்டுச் சிரித்து மனம் லேசான அனுபவத்தில், வாசகர்களுக்கும் குறையலாம் என்றே நினைக்கிறேன்.
கேள்வி 2: இந்த genre ல்தான் கதை எழுதுவது, அதில்தான் பிரபலமாவது என்று எது எழுத்தாளர்களைத் தீர்மானிக்க வைக்கிறது? ஒரு நகைச்சுவை எழுத்தாளரால் சீரியஸ் கதைகள் சமூக வரலாற்றுக் கதைகள் நகைச்சுவையில்லாமல் எழுத முடியுமா?
வேணுஜி பதில் : மிக்க நன்றி – எழுத்தாளர்கள் குறித்த கேள்வியை என்னிடம் கேட்டதற்கு! சேட்டைக்காரன் என்ற பெயரில் வலைப்பதிவில் தலைகுப்புற விழுவதற்கு முன்பு நான் கூகிள் குழுமங்களில் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட், அரசியல், கொஞ்சம் பொருளாதாரம் என்று பெரிய பிஸ்தா மாதிரி வலம்வந்து கொண்டிருந்தேன். நான் வலைப்பதிவுக்கு வந்த காலகட்டம் ஈழப்பிரச்சினையால் பெரும்பாலான பதிவர்கள் தாக்கத்துக்கு ஆளாகியிருந்தார்கள். சமையல் குறிப்பு, ஆன்மீகம், கவிதை என்பதையெல்லாம் விட்டுப்பார்த்தால், நகைச்சுவைக்குத்தான் பற்றாக்குறையாக இருந்தது. ஆகவே, அதையும் ஒரு வழியாக்கி விடலாமென்ற நல்லெண்ணம் காரணமாகத்தான் நகைச்சுவையின் மென்னியைப் பிடித்துத் திருகினேன். ஆனால், கூகிள் குழுமங்களில் நிறைய சீரியஸ் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ‘கருத்தம்மாவும் வெள்ளைச்சாமியும்’ என்று நான் எழுதிய ஒரு தொடர்கதையை வாசகர்கள் ‘ நல்லதங்காள்’ கதைக்கு நிகராகக் கொண்டாடினார்கள்.
வரலாற்றுக்கதை எழுத நிறைய வாசிக்க வேண்டும். பெரும்பாலான பதிவர்களுக்கு என் லட்சணம் தெரியும். புகாரி ஓட்டலுக்கும் புளியோதரைக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவு தொடர்புதான் எனக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும். ஆகையால், அந்த வகை என்னிடமிருந்து தெய்வாதீனமாகத் தப்பித்தது.
சுஜாதா வரலாற்று நாவல் எழுதியதையும் சாண்டில்யன் சமூக நாவல் எழுதியதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். திறமையோடு வாசிப்பு அனுபவமும் பொறுமையும் இருப்பவர்கள் சாதித்திருக்கிறார்கள்.
இன்னொரு கேள்வி 3. நான் சில பல காணொளிகளை (அந்த அந்த நடிகர்கள் சொல்வது) பிற்பாடு கண்டு, இவ்வளவு படித்தவர்களா, இவ்வளவு புத்திசாலிகளா என்று அதிசயித்திருக்கிறேன், சாதாரண நகைச்சுவை நடிகர்களை. (பெஞ்சமின் - வெற்றிக்கொடி கட்டு, குமரிமுத்து...) ஹீரோ என்றால் எல்லாம் தெரிந்தவர்களாகவும், நகைச்சுவை நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, வெறும் காமெடியன் என்று எண்ணுவது போல, சரித்திரக் கதையாசிரியர்கள் எல்லாம் தெரிந்தவர்கள், சமூக நாவல்கள் எழுதுபவர்கள் சிறந்த நாவலாசிரியர்கள் என்ற ஒரு எண்ணம் இருப்பதுபோல, நகைச்சுவை எழுத்தாளர்களைப் பற்றி நல்ல பிம்பம் இருக்கிறதா?
வேணுஜி பதில் : வலைப்பதிவில் நான் இருந்த காலத்தில் தப்பித்தவறி எப்போதாவது சினிமா பார்த்துவிட்டு விமர்சனம் எழுதினால், ‘உனக்கு எதற்கு இந்த வெட்டிவேலை?’ என்று பின்னூட்டத்திலேயே போட்ட சினிமாஜீவிகள் இருந்தார்கள். வெகு சில வலைப்பதிவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நிறைய பேருக்கு ‘இவன் கோமாளிதானே?’ என்ற அலட்சியம் இருந்தது சத்தியம். ஆனால், அந்த பிம்பத்தை ஒரளவு என்னால் உடைக்க முடிந்தது. காரணம், சேட்டைக்காரனுக்கு முந்தைய வேணுகோபாலன் ரொம்ப இல்லாவிட்டாலும் ஓரளவு புத்திசாலித்தனமாக எழுதி வந்தவன் ஆவான்.
கேள்வி 4 : உங்களை impress செய்து, அதுபோல நகைச்சுவைக் கதைகள் அல்
வேணுஜி பதில் : எழுத்தாளர்களில் அமரர் சாவி அவர்களின் ‘வாஷிங்டனில் திருமணம்’ தான் நான் முழுமையாக வாசித்த ஒரே நாவலாக இருக்கும்; ஆகவே அவர் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சித்ராலயா கோபு; அவர் வசனம் எழுதிய படங்களும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை என்ற சுண்டெலியை எழுப்பி பெருச்சாளியாக்கி உலாத்த விட்டது என்றால் மிகையாய் இராது.
கேள்வி 5 : . பொதுவா நகைச்சுவை கதைகள்னாலே இன்னொருவரைக் குறை கூறி அதன் மூலமாக நகைச்சுவையைக் கொண்டுவருவார்கள். எது சிறந்த நகைச்சுவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
வேணுஜி பதில் : இன்னொருவரைக் குறை கூறாமல் எந்த ஒரு படைப்பும் எழுதுவது நடக்காத காரியம். குடும்பக்கதை எழுதினாலும் ஒரு மாமியாரை வில்லியாக்கத்தான் வேண்டும். மர்மக்கதை எழுதினால் எவனோ ஒருவன் கொலை செய்திருக்க வேண்டும். பேய் இல்லையென்றால் பி.டி.சாமி என்ன செய்திருப்பார்? சினிமாவில் கூட கவுண்டமணி செந்திலை எப்போதும் கலாய்த்தும் உதைத்தும் கொண்டிராவிட்டாலோ, வடிவேலு அடிவாங்கா விட்டாலோ யார் சிரித்திருக்கப் போகிறார்கள்? விவேக் காமெடி முழுக்க முழுக்க பிறரை குறை சொல்லுகிற காமெடிதான் – சொல்லப்போனால்! நல்ல நகைச்சுவை என்பது ஒரு சாதி, மதம், இனம் போன்ற மிக நாசூக்கான விஷயங்களைத் தொட்டு சம்பந்தப்பட்டவர்களை முகம் சுளிக்கவோ, ஆத்திரப்படவோ இடமளிக்காமல், சிரித்து அலட்சியம் செய்து போகும்படியாக இருந்தால் போதும்.
.
*******************************
கீதா ரெங்கன்
கேள்வி 1. இந்து கல்லூரில ரொம்ப சேட்டை பண்ணீங்களா வேணு ஜி? அதனால உங்க ஃப்ரென்ட்ஸ் வைச்ச பெயரா!!?
வேணுஜி பதில் : சேட்டையெல்லாம் கிடையாது. எனது கல்லூரி நாட்களின்போது கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத ஒரு கொந்தளிப்பை சந்தித்ததால், தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை வேறாக ஆகி விட்டது. மற்றபடி நாலு முழ வேட்டி, ரப்பர் செருப்புடன் கல்லூரிக்குப் போகிற அம்மாஞ்சிகளுக்குக் கிடைக்கிற பிற பட்டங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றேன்.
கேள்வி 2. நீங்க வீட்டுல எலியா புலியா? (நகைச்சுவையில் பெண்களை (மனைவிகளை) கலாய்க்கறவங்க வீட்டில ரொம்ப பயப்படுவாங்கான்னு கேட்டிருக்கேன் ஆதான்!!)
வேணுஜி பதில் : கண்டிப்பாக கிட்டாமணி, பாலாமணி கதையில் வருகிற மாதிரி இல்லை. அடிப்படையில் நான் ஒரு ஆணாதிக்கவாதியாக இருந்ததுண்டு. பரஸ்பரப் புரிதல்தான் சம்சாரமும் சாப்பாடும் சுவையாக இருக்க உதவும் என்பதைக் கண்டுபிடிக்க பத்து வருஷம் ஆனது. வாழ்க்கையில் உருப்படியாக ஏதாவது சாதித்ததுண்டு என்றால் கணவன் – மனைவி உறவில் எப்போது சிக்ஸர் அடிப்பது, எப்போது டிஃபென்ஸ் ஆடுவது என்ற கலையை ஓரளவு கற்றதே ஆகும்.
கேள்வி3. கல்லூரியில் நீங்க செய்த புகழ்பெற்ற சேட்டை?
வேணுஜி பதில் : ‘வானவில்’ என்று நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில், எங்களது கல்லூரி முதல்வர் உயர்திரு. எல்.சி.தாணு அவர்களைக் கார்ட்டூனாக வரைந்ததுதான்.
கேள்வி 4. உங்க எழுத்திற்கு ஆதர்ச எழுத்தாளர்?
வேணுஜி பதில் : அப்படி யாருமில்லை. அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்ததால், மாமிகள், பாட்டிகள், தாத்தாக்களின் குசும்பைக் கேட்டுக் கேட்டு நாடி, நரம்பு, தசை, ரத்தம் எல்லாம் இப்படியாகி விட்டது.
கேள்வி 5 : வேணு ஜி, நீங்கள் எழுதத் தொடங்கியது எப்
வேணுஜி பதில் : எழுதத்தொடங்கியது கல்லூரி காலத்திலேயே! ‘வானவில்’ என்று ஒரு கையெழுத்துப் பத்திரிகை; பிறகு தஞ்சையிலிருந்து வந்த இன்னொரு நண்பர் நடத்திய ‘விசிறி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை. என்னை கவனிக்கத் தொடங்கியது ‘அன்புடன்’, ‘பண்புடன்’ கூகிள் குழுமங்கள்தான். 2003 முதல் நிறைய எழுதினேன். சினிமா, கிரிக்கெட், பொருளாதாரம் மற்றும் சில சிறுகதைகள்கூட! ஆனால், சினிமாப் பாடல்களின் மெட்டுக்களில் நான் எழுதிய நக்கல் பாடல்கள்தான் என்னை குழுமங்களில் பிரபலமாக்கின.
கேள்வி 6 : பத்திரிகையில் உங்கள் எழுத்து வ
வேணுஜி பதில் : ஆம்! நான் எழுதிய சில நக்கல் பாடல்கள் ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகின. நகைச்சுவைக் கதைகள் சில அருமைத் தம்பி பாலகணேஷ் புண்ணியத்தில் ‘பாக்யா’ பத்திரிகையில் வெளியாகின. பாக்யாவிலேயே பணிபுரிந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது எழுத வேண்டுமென்று திரு.கே.பாக்யராஜ் அன்புக்கட்டளையிடுவார். அப்புறம், ஒரு கட்டத்தில் பாக்யாவில் நான் கேலிச்சித்திரங்கள் கூட வரைந்திருக்கிறேனாக்கும்.
கேள்வி 7 : ப்ளாக் காமெடி பிடிக்குமா?
வேணுஜி பதில் : மிகவும் பிடிக்கும். சிவாஜி – பானுமதி நடித்த ‘அறிவாளி’ படம் கூட அவ்வகையைச் சேர்ந்ததுதான். தற்போது அந்த வகையில் நெல்சன் கலக்குகிறார். பிடித்திருக்கிறது.
கேள்வி 8 : படங்களில், உருவ கேலி செய்து காமெடி செய்
வேணுஜி பதில் : எல்லாமே ஆரம்பம் முதலே இருந்து வருவதுதான். நாகேஷ் நடித்த பல படங்களில் அப்படியும் இப்படியுமான காமெடிகள் இருந்ததுண்டு. சுருளிராஜன் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். தேங்காய் சீனிவாசன், வெ.ஆ.மூர்த்தி பற்றிச் சொல்லவே வேண்டாம். வெகுஜன ரசனை குறித்து விசனப்படுவது தவிர்த்து வேறொன்றும் சொல்வதற்கில்லை.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கீதா சாம்பவசிவம் :
வேணுஜி பதில் : உருவக்கேலி ஏற்க முடியாததுதான். உதாரணத்துக்கு, ஒரு படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலு தங்கையைப் போட்டி போட்டுக் கொண்டு பெண்பார்க்கப்போய், அந்தப் பெண் குரூபியாக இருப்பதும், இன்னொரு படத்தில் ஸ்ரீதேவி படத்தைக் காட்டி கறுப்பான ஒரு பெண்ணைக் கவுண்டமணிக்குத் திருமணம் செய்து வைப்பதும் அப்பட்டமான நிறவெறி! ஆனால், ஏ.வி.எம் மாதிரி பாரம்பரியம் மிக்க ஒரு நிறுவனம் தயாரிக்கும் படத்திலே, ரஜினி மாதிரி ஒரு நடிகர் இருந்தும், கதாநாயகன் கறுப்பு என்று கதாநாயகி சொல்வதையெல்லாம் அனுமதிக்கிறார்கள் என்றால், சென்சார் விதிகளில் நகைச்சுவை குறித்து சரிவர விதிமுறைகள் இல்லையென்றுதான் பொருள். ஹிந்திப்படங்களில் தமிழர்கள் என்றாலே குடுமி வைத்துக்கொண்டு, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்துகொண்டு, விபூதி பூசிக்கொண்டு வருவது, நம் தமிழ்ப்படங்களில் மலையாளிகளை, ஆண் என்றால் கொண்டையோடும், பெண்கள் என்றால் முண்டோடும் வரவழைத்து கிச்சுக்கிச்சு மூட்டுவதும்கூட ஒரு விதமான இனவெறிதான். இந்த மாதிரி காமெடியை நாகேஷ்கூட சில படங்களில் பண்ணியிருக்கிறார். என்னைப் பொறுத்தமட்டில் இவை மட்டுமல்ல; ஒரு படத்தில் ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வருவதும், ஆறாவதாக இன்னொருவன் வந்து கூட்டிக்கொண்டு போவதும்கூட அப்பட்டமான மட்டமான நகைச்சுவைதான். பெண்ணியப்போராளிகள் எங்கு போனார்கள் என்பது புரியவில்லை. ஆனால், இந்த OTT யுகத்தில் எல்லாக் கண்றாவிகளையும் டிராயிங் ரூமில் குப்பை மாதிரி கொட்ட ஆரம்பித்த நிலையில், அடிப்படையிலேயே வக்ரம் பெருகியிருப்பதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அது காமெடியிலும் பிரதிபலிக்கிறது. போகிற போக்கில் ‘கலி முத்திருச்சு’ என்று பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஆகக்கூடியது எதுவும் இராதோ என்ற பயம் இல்லாமல் இல்லை.
========================================================
தமிழில் கேள்வி பதில்கள் தொடங்கியது...
தமிழ்ப் பத்திரிகைத்துறையில் முதன் முதலில் கேள்வி பதில்கள் தொடங்கியது குண்டூசி பத்திரிகையில். குண்டூசி பத்திரிகையும் இரண்டு காலம் உண்டு என்று நினைக்கிறேன். முதல் குண்டூசி கோபாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்டது. அதில் கர்னாடக இசைப்பாடகர் V V சடகோபன் அவர்களும் சிலகாலம் பணிபுரிந்தார். குண்டூசி பதில்கள் என்றால் குத்தலாக இருக்குமோ என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கும் கோபாலன் சுவாரஸ்யமாகவும் சாமர்தியமாகவும் பதில் அளித்திருந்தார். இதுபற்றி நான் 2020 ல் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.


இன்றைய சேட்டைக்காரன் பதில்கள் ரசிக்கும்படியோடும் தகவல்களோடும் இருந்தன.
பதிலளிநீக்குகேள்வி பதில் பகுதி தொடர்ந்து பல வாரங்களுக்கு வந்து, குண்டூசி அல்லது சோ போன்ற ஒருவரால் ரசிக்கும்படி பதில் அளிக்க முடிந்தால் அதுவே ஒருவரது தனித்திறமை என்றாகும்.
வாங்க நெல்லை... அரசு பதில்களுக்கு கேள்வி பதில் பகுதியில் தனி இடம் உண்டு இல்லையா?
நீக்குநான் ஒருவரே கேள்விகளுக்குப் பதில் சொல்வதைச் சொன்னேன். அரசு பதில்கள் வெகு சுவாரசியம் ஆனால் மூன்று பேர்களுடைய உழைப்பு அது
நீக்குஇப்போது புரிகிறது.
நீக்குசேட்டைக்காரன், எங்கள் பகுதியின் இந்துக் கல்லூரியோ என நினைத்தேன். கீதா ரங்கன் குறிப்பிட்டிருப்பதாலும் வேணுஜியின் தொடர்புடைய பதிலாலும், இது நாரோயில் இந்துக் கல்லூரி எனப் புரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குநாரோயிலின் கிறித்துவக் கல்லூரிக்கும் இந்துக் கல்லூரிக்கும் (மாணவர்கள் இடையேயும்) போட்டி பொறாமை இருந்தது தெரியும்.
புகழ்பெற்ற இரண்டு கல்லூரிகளிடையே இலக்கியம், ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட சில விஷயங்களில் போட்டி பொறாமை நிலவுவது ஆரோக்யமான, சுவாரஸ்யமான காட்சி.
நீக்குஶ்ரீராம் இரண்டு வாரங்களாக வித்தியாசமாகச் செய்திருக்கிறார். பாராட்டுகள். அப்படியே செவ்வாய்க்கும் கதை கேட்டுவிட்டீர்களா?
பதிலளிநீக்குஏற்கனவே செவ்வாய்க்கு அவர் கதை கொடுத்திருக்கிறார்!
நீக்கு//கூகிள் குழுமங்களில் நிறைய சீரியஸ் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ‘கருத்தம்மாவும் வெள்ளைச்சாமியும்’ என்று நான் எழுதிய ஒரு தொடர்கதையை// இந்த மாதிரி எபி வாசகர்கள் படிக்காத கதையாக இருந்தால் பகிரலாமே
நீக்குகேட்டுப் பார்க்கிறேன். முதலில் இப்போதைய தொடர்கதை முடிவுக்கு வரட்டும். ஸ்கை இன்னும் எவ்வளவு எபிசோடுகள் வைத்திருக்கிறாரோ... அப்புறம் ஒரு சிறுகதை வெயிட்டிங்கில் இருக்கு...
நீக்குவாஷிங்டனில் திருமணம் நாவலுக்கு முன்பே, நான் தேவன் அவர்களின் நாவலால் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே மிகவும் ஈர்க்கப்பட்டளன் (துப்பறியும் சாம்பு). கல்கியின் நாவல்களை ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, ஆர்வத்துடன் படம் பார்த்து, படித்த நினைவு உண்டு. ஆயனர் நாகந்ந்தி போன்றோரின் ஓவியங்களும் மனதில் நின்றுவிட்டன.
பதிலளிநீக்குஅப்போதைய வரலாற்றுக் கதைகளின் வெற்றிக்கு அழகிய, ப்ரமாணடமான ஓவியங்களும் துணை நின்றன. மணியம், லதா, வினு போன்றோர் ஓவியங்களும் குறிப்பிடத்தக்கது.
நீக்குகல்கி விகடனில் எழுதிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எஸ்.வி.வி துமிலன் நாடோடி போன்ற நகைச்சுவை ஜாம்பவான்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.
நீக்குஆச்சரியமாக நட்சத்திர இசை விமர்சகர் சுப்புடு கூட பலசமயம் அசத்துவார்.
நீக்குகல்கி மறைந்த சமயம், அவர் 30 களில் எழுதிய சில நகைச்சுவைக் கட்டுரைகளை விகடன் வாசன் மறுபடி பிரசுரித்தார். அது என்னிடம் இருக்கிறது. பேப்பர் தொட்டாலே இற்று நுணுங்கி பொடியாகி விடுகிறது.
நீக்குஎழுத்தாளர் தேவன் அவர்கள் சமூக நாவல்கள், அவற்றிலும் துப்பறியும் நாவல்கள், தீவிரமான கதைக்களம் என
நீக்குஎழுதி இருக்கார். லக்ஷ்மி கடாக்ஷம் அப்படியான ஒரு நாவல் தான். மிஸ்டர் வேதாந்தமும் கூட. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டுமே தூர்தர்ஷனில் தொடராகவும் வந்தது. சாம்புவைக் கூட எடுத்தார்கள் காத்தாடியை சாம்புவாகப் போட்டு. அவ்வளவு பிரபலம் ஆகவே இல்லை.
காத்தாடி சாம்புவாக நடித்தது போலவே ஒய் ஜி மகேந்திராவும் சாம்புவாக நடித்திருந்தார் என்று ஞாபகம்.
நீக்குஎஸ்.வி.வியின் உல்லாச வேளையும், சிவராமன் தொடரும் பைன்டிங் இருந்தது. காலப் போக்கில் காணாமல் போனவற்றில் அவையும் ஒன்று. வத்சலானு ஒரு தொடர் கூட வந்த நினைவு.
நீக்குஉல்லாச வேளை என்னிடம் இருக்குன்னு நினைக்கறேன்.
நீக்குஇன்றைய பதிவும் போன வார பதிவு போல மிகவும் நன்றாக சுவாரசியமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி கேஜிஜி.
நீக்குஅச்சச்சோ இவர் இங்கேயா இருக்கிறார்:))) இது தெரியாமல் பேசிட்டேனே:)) படிச்சதும் கீழ்க் கொமெண்ட்டை எல்லாம் கிழிச்சிடுங்கோ ஸ்ரீராம்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஉ:))
நீக்குஹா.. ஹா.. ஹா... பச்சப்புள்ள என்னை... என்னை உற்சாகப்படுத்தி விட்டு ஓடி விட்டார். நெம்ப பிஸியாக கீறார்.
நீக்குசேட்டைக்காரன் கேள்வி பதில் பதிவிற்கு பெருமை. பூசாரி அதிரா டிரேடு மார்க் ஆயிற்றே, பெர்மிஷன் வாங்கினீர்களா?
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. நீங்கள் பார்த்த இடத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.
நீக்குஆனாலும் அதிரா எப்பவுமே ஸ்பெஷல்தான்.
நான் இப்ப்போ என் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில் ஆழ்நிலைத்தியானத்தில் அமர்ந்திருக்கிறேன்:))) ஹா ஹா ஹா
நீக்குதியானம் எப்போ கலையும்?
நீக்குஹா ஹா ஹா:))
நீக்குபுதிர்ச்சிரிப்பா, தெய்வீகச் சிரிப்பா?
நீக்கு///ரீராம்.17/9/25 3:25 PM
நீக்குபுதிர்ச்சிரிப்பா, தெய்வீகச் சிரிப்பா?//
ஹா ஹா ஹா மீண்டும் சிரிப்பு வந்திட்டுது:))
சேட்டை ஜி யின் பதில்கள் ரொம்ப சுவை. சுவாரசியம், ரசனையாக இருக்கின்றன. கூடவே தகவல்களும்.
பதிலளிநீக்குஎங்கள் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆனால் நான் அங்கு முதுகலைக்குச் சேரும் போது அவர் அங்கு இருந்திருக்கவில்லை என்று தெரியுது
கீதா
அவர் எழுத்தில் சுவாரஸ்யத்துக்குக் கேட்கவும் வேண்டுமா கீதா? வாங்க...
நீக்குவித்தியாசமான புதன். சூப்பர், ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகூடவே குண்டூசி, துக்ளக் எல்லாம் கலக்கல். விரிவாக வாசித்துவிட்டு வருகிறேன்
கீதா
நன்றி கீதா.. இன்னும் சில எடுத்து வைத்து இணைக்க மறந்து விட்டேன் என்று காலையில் தெரிந்தது!
நீக்குநல்லவேளை என்கிறீர்களா?!!
ஒரே நேரத்தில் வாசிப்பதும் இப்ப கொஞ்சம் சிரமம். பிஸி இன்னும் அடுத்த 2 வாரங்களுக்கு. ஸோ அடுத்த பதிவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
நீக்குகீதா
அடுத்த வாரம் கே ஜி ஜி வாரம்!
நீக்கு:(((
நீக்குபூனாச்சு படங்கள் சூப்பர் போங்க!!!!!
பதிலளிநீக்குகீதா
இந்தப் படங்களை நான் அடிக்கடி உபயோகிப்பேன். வெவ்வேறு வசனங்களுக்கு வசதியான படங்கள்! என்ன ஆக்ஷன் கொடுக்குது பாருங்க...
நீக்குஆமா முன்ன இதுல சோஃபால உட்கார்ந்திருப்பது வரலையே இப்பதான் கை காலைத் தூக்கியதைப் பார்க்கிறேன், ஸ்ரீராம்,
நீக்குகீதா
அது கீத்ஸ்.. கெள அண்ணன் பெயரைக் கேட்டதும் தான் அப்பூடிக் குறும்பு பண்ணுறார்...:)
நீக்கு:-))
நீக்குகர்னாடக இசைப்பாடகர் V V சடகோபன் எங்கள் மாமி வழி உறவு என்று சொல்லிக் கேட்டது ண்டு. வீரவநல்லூர்.
பதிலளிநீக்குகுண்டூசி குத்தும், குதறாது. தாள்களை ஒன்று சேர்த்து வைக்கும் நல்ல செயலைத்தான் செய்யும். குத்தல் என்று சொல்வதைவிட கிண்டல் என்று சொல்லலாம்.//
நல்ல விளக்கம்.
கீதா
ஆம். ரசனை.
நீக்குஇந்தக் கேள்விபதிகளில் கடைசியில் இடப்பக்கம் இருக்கும் நகைச்சுவைதான் பொக்கிஷத்தில் வந்தது போல...
பதிலளிநீக்குகீதா
சரியாகக் கண்டுபிடித்தீர்கள்!
நீக்குகேள்வி பிறந்தது அன்று, சூப்பர் பாட்டு! இப்பவும் கேட்டேன். ரசித்தேன்., ஸ்ரீராம். பொருத்தமா பாட்டும் போட்டு பதிவு நல்லாருக்கு.
பதிலளிநீக்குகுண்டூசின்னதும் நினைவுக்கு வந்த ஃபேஸ்புக் போஸ்ட் நல்ல செய்தி கருத்தைச் சொல்கிறது.
அதைப் பாத்ததும் என் மாமா நினைவு வந்தது. வீட்டில் சின்ன பேப்பர் வெத்துப் பேப்பரை குப்பையில் போடக் கூடாது என்று அதில் கணக்குப் போட்டுப் பார்க்க எங்களிடம் பின் குத்தி வைக்கச் சொல்லுவார்.
கூடியவரை பேப்பர் பயன்படுத்தாமல் சிலேட்டில் தன போடச் சொல்லுவார்.
அப்படி, இது அதுக்குப் பயன்படும் அது வேற எதுக்காச்சும் பயன்படும் என்று நான் சில பொருட்களைச் சேகரித்து வைப்பதுண்டு. பயன்பட்டதும் உண்டு. சில இப்ப தூரப்போட்டேன், வீட்டில் இடமில்லை.
மகனுக்கும் கூட பல நோட்களில் உபயோகிக்காமல் இருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்துத் தைத்துக் கொடுத்ததுண்டு வீட்டில் கணக்குப் போட, தமிழில் ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைத்துப் பயிற்சி செய்ய என்று.
கீதா
நான் கூட சிறு வயதில் கேலண்டர் பேப்பர் எல்லாம் சேர்த்து தைத்து ஒரு பக்கம் நோட்டாக உபயோகித்திருக்கிறேன். கேலண்டர் எழுத்துகளை கட் செய்து ஒட்டி வார்த்தைகள் தயாரிப்பதும் உண்டு!
நீக்குநான் குட்டிக் கதைகள், கவிதைகள் இவை எல்லாம் வெட்டி ஒட்டிச் சேர்த்து வைப்பேன், இப்பவும் கொஞ்சம் பழையவை வச்சிருக்கிறேன்.
நீக்குபூலாந்தேவிக் கதை தொடராக வெளிவந்தது வீரகேசரிப் பேப்பரில் என நினைக்கிறேன், வெட்டி ஒட்டிப் புத்தகமாக வைத்திருந்தேன், ஆனா அது நம் நாட்டுப் பிரச்சனையில் மிஸ் ஆகிவிட்டது:((
என்னிடம் உள்ள கலெக்ஷனை வெளியிட்டால் இந்த ஆயுள் போறாது!!!!! ஒரு பதிவுக்கு பத்து ஐட்டம் என்று வைத்துக் கொண்டால்...
நீக்குஆஆஆ ஹா ஹா ஹா. அது என்னமோ தெரியவில்லை, இந்த இண்டநெட் காலம் வந்தபின், இந்த எலிபோல சேர்க்கும் பழக்கம் எல்லாம் நம் தலைமுறையுடன் முடிந்துவிட்டது, எனக்கு இப்பகூட, கலர்ப்பேப்பர், பேனா பென்சில், இப்படிச் சேர்க்க ஆசை, கைவேலை செய்யலாம் என இப்படிப் பொருட்கள் ஒரு தொகை சேர்த்திருக்கிறேன், ஆனா செய்வதில்லை.
நீக்குஇப்போதைய தலைமுறையினர் எதையும் சேர்ப்பதில்லையே, ஒரு போட்டோ கூட பிரிண்ட் பண்ணுவதில்லையே இப்போதெல்லாம்...
நான் கூட புத்தகங்கள்தான் சேர்த்து வைத்திருக்கிறேன். அதுதான் ஹாபி போல.. மெப்புக்கு வாங்குவது போல.. பாதி படிக்கவில்லை. எழுதி எழுதி கிழித்துக் கொண்டிருக்கிறேன்!
நீக்குசேட்டைக்காரன் என்பவர் எப்பவும் நகைச்சுவையாகத்தானே பேசுவார்... ஆனா அந்த சிவப்பு கலர் ரீ சேர்ட் போட்டுக்கொண்டு கிண்டர்கார்டின் போக ரெடியாகியிருப்பவர்[ஹையோ என்னை ஆராவது காப்பாத்துங்கோ மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஉ:)]..அவர் கேள்விகளை சீரியசாகக் கேட்டதனால் பதிலும் சீரியசாகிப் போச்சோ:)))... சரி சரி இன்னும் படிச்சு முடிக்கவில்லைப் போஸ்ட்:))
பதிலளிநீக்குவாங்க அதிரா..., சேட்டைக்காரர் பதிவுகள் படித்திருக்கிறீர்களா? அவர் நகைச்சுவையை தெளிப்பதற்கு போதுமான பிளாட் கேள்விகளில் கிடைக்கவில்லை போல..
நீக்குஇல்லை ஸ்ரீராம் அவர் பற்றி எதுவும் தெரியாது, ஆனா பெயரே ஒரு நகைச்சுவையாக இருக்கு, அதே நேரம் நீங்க அப்பப்ப இங்கின ஏதாவது அவர்பற்றிச் சொல்லியதால கொஞ்சம் தெரியும்...
நீக்குஆனா அவரும் இவ்ளோ சீரியசாகப் பதில் சொல்லிட்டுப் போயிடுவார் என எதிர்பார்க்கவில்லை கர்ர்ர்:)) இன்று போஸ்ட் நகைச்சுவையில் களை கட்டியிருக்கும் எண்டெண்டோ என் யோகாக் கிளாஸுக்கும் போகாமல் இங்கு வந்தேன்:)))
இப்போதான் புரியுது... கேள்விகளில்தான் தங்கியிருக்கோ ஒருவரின் சீரியசும், கோபமும், நகைச்சுவையும் அனைத்தும்...
எனக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தான் அதிரா.. ஆனால் அவரும் சற்றே உடல்நிலைஸ் சரியில்லாமல் இருக்கிறார். இலலாவிட்டால் இன்னும் கலக்கி இருப்பார்.
நீக்கு// நகைச்சுவையில் களை கட்டியிருக்கும் எண்டெண்டோ என் யோகாக் கிளாஸுக்கும் போகாமல் இங்கு வந்தேன்:))) //
மட்ட மதியானத்தில் யோகா க்க்ளாஸா? எண்டே குருவாயூரப்பா...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காலை 9.30 க்கு... நீங்கள் உங்கட நேரத்தை நினைச்சு எழுதலாமோ.. எண்டே அர்த்தநாரீஸ்வரரப்பா....... ஹா ஹா ஹா
நீக்குஇரண்டரை மணி நேர வித்தியாசம்தானே? இப்போ மதியம் பனிரெண்டாகி இருக்காதா... அட, அப்படியே இருந்தாலும் காலை ஒன்பதரை மணிக்கு யோகாவா.. அதெல்லாம் காலை பள்ளி எழுந்தவுடன் செய்ய வேண்டாமோ... என்னமோ போங்க.. காலம் கெட்டு கிடக்கு!
நீக்குஇல்ல ஸ்ரீராம் இப்போ 4.30 மணிநேர வித்தியாசம், வருகிற மாதம் நேரம் மாத்துவினம் அப்போ 5.30 மணி நேரம் வித்தியாசமாகிடும். இப்போ இங்கு நேரம் 10.10.
நீக்குஇங்கு பொதுவா ஜிம் திறப்பதே 7 மணிக்குத்தான், ஆகவும் ஏழியாக வைத்தால் மக்கள் வரமாட்டினம், அதுவும் இப்போ குளிர் ஆரம்பமாகுது, அதனால காலையில் இருக்கு குளிர் எழும்பவே விருப்பம் வராது.
நம்ப மாட்டீங்க, இங்கு பின்னேரம் 6,7 மணிக்கு நடக்கும் யோகாக் கி?லாஸ்தான் ஹவுஸ் புல்லாக இருக்கும்... எனக்கும் நம் நாட்டு ஜீன்ஸ்தானே உடம்பில ஓடுது, அதனால துவக்கு காட்டி மிரட்டினாலும் 11 , 12 க்கு மேல் எந்தக் கிளாசுக்கும் போக மாட்டேன்..
ஒவ்வொரு நாளும் 9.30 க்குத்தான் சனிக்கிழமை மட்டும் 9 மணிக்கு.
அடடா.. நல்ல ஊர். வெய்யில் தெரியாது போல.. அங்கு ரூ வேலை வாங்கி கொடுங்களேன்.. வருகிறேன்.
நீக்குஹா ஹா ஹா இனி 4,5 மாதங்கள் இருட்டாகவே இருக்கப்போகுது:) அத்தோடு குளிரும்...
நீக்குவேலை வாங்கி கொடுங்கள் என்றால் சாக்கு சொல்லி பயமுறுத்துகிறீர்களே....
நீக்கு//எண்டெண்டோ என் யோகாக் கிளாஸுக்கும் போகாமல் இங்கு வந்தேன்// யோகா கிளாஸை கட் அடித்ததற்கு ஒரு சாக்கு. அது சரி.. யோகா கிளாஸில் என்ன என்ன செய்வீர்கள்? இங்க லேடீஸ் யோகா என்ற பெயரில், (அதன் ஒரு பகுதியாக) ஹாஹாஹா என்று ஒரு சில நிமிடங்கள் சிரிக்கிறார்கள், பாட்டுப் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள் (ஸும்பாவாம்). நான் யோகா செய்த படங்களையும் இங்கு பகிர்கிறேன்.
நீக்கு///
நீக்குஸ்ரீராம்.17/9/25 3:24 PM
வேலை வாங்கி கொடுங்கள் என்றால் சாக்கு சொல்லி பயமுறுத்துகிறீர்களே....//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யோகாக்கிளாசே போகமாட்டேன் வீட்டிலதான் இருப்பேன் என அடம்பிடிக்கிறார் இதில.. இந்தக்குளிரில இருட்டில வேலை செய்யப்போகிறாராம் ஹா ஹா ஹா:))
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன்!
நீக்கு//நெல்லைத் தமிழன்17/9/25 3:27 PM///
நீக்குஆஆஆஆஆஆ இவர் எப்போ மதுரா வால திரும்பினார்:)))..
அது நெல்லைத்தமிழன், இதுபற்றி பெரிய போஸ்ட் போடலாம்... லாஃபிங் யோகா எனச் சொல்கின்றனர் அது இன்னும் இங்கெல்லாம் வரவில்லை என நினைக்கிறேன்.., இந்தியாலதான் இருக்கு.
நான் ஒன்லைன் கிளாஸ் யோகாவும் அப்பப்ப செய்வேன்.. போத்தா என நினைக்கிறேன் ஒரு ஹிந்திக்கார தம்பி சொல்லித்தருவார் நன்றாக.
அவர் இடைக்கிடை 7, 21 நாட்கள் ஃபிறீ கிளாஸ் நடத்துவார், ஜொயின் பண்ணியிருக்கிறேன் மெசேஜ் வரும்... தொடர்ந்து அட்டன் பண்ணினால் சேர்டிபிகேட் கிடைக்கும்... இதுவரை 2 எடுத்திட்டேன்... முழுமையாக கிளாஸ் போகோணும். அதில் இந்த சிரிப்பு யோகாவும் ஒரு பகுதி:))).. வீட்டில சிரிப்பேன் டெய்சி பயப்பிடுமளவுக்கு ஹா ஹா ஹா.
மற்றும்படி, ஸூம்பா போகிறேன், எக்ஸசைஸ் கிளாஸ் எனப் போகிறேன், லைன் டான்ஸிங் எனப் போகிறேன்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஸ்கொட்லாண்டில் இதுக்கு இதே பெயர்தான். யோகா எனில் நம் நாட்டு சூரிய, சந்திர... இப்படி யோகாதான்.
இதைவிட யோகா தைச்சி எனவும் உண்டு, இதே யோகாவை கொஞ்சம் ஸ்பீட்டாக செய்வினம், கெதியாக் களைத்திடுவோம்.
ஆனா இங்கு லிஃப்ட் லீன் எனவும் ஒரு கிளாஸ் உண்டு, கொஞ்சம் உடம்பை முறிக்கும் எக்ஸஸைஸ்.. இதுக்கும் இடைக்கிடை போகிறேன்.
புதினம் என்னெண்டால், இவை அனைத்தையும் யோகா எனும் பெயரில சொல்கின்றனர் கனடாவில் சில செண்டர்களில். அண்ணி, அண்ணன் மகள் அங்கு போகின்றனர் அது ஹொட் யோகா எனச் சொல்லி இதுக்கெல்லாம்.
நான் இதுவரை ஹொட் யோகா போனதில்லை. அப்போ எனக்கும் ரிக்கெட் எடுங்கோ வருகிறேன் என்றேன், முதல் நாளே இந்த லிவ்ட் லீன் ஹொட் யோகாவை... யோகா எனச் சொல்லிக் கூட்டிப் போச்சினம்... ஹையோ வைரவா கொக்குவில் நஞ்சவனப்பதி முருகா... என் கண்ணில கூட தண்ணி எல்லாம் வத்தி கண்ணு தெரியல்ல தலை சுத்துது, மயக்கம் வந்து கிளாஸை விட்டு வெளியே போயிட்டேன், அன்று நான் மட்டுமல்ல பலரும் வெளியே வந்திட்டினம் ஏனெனில் வெளியிலும் வெயில் வெக்கை அதிகம் அதிலும் ஓவர் ஹொட் டாக்கியமையால், எனக்கும் புதிசெல்லோ... என்னால முடியேல்லை பயந்திட்டேன்..
அண்ணாவின் மகள் ஓடிப்போய்க் காரை வாசலுக்கு கொண்டு வந்து ஏறி வீட்டுக்கு வந்து ஒருவாரம் நடக்க முடியாமல் ஹா ஹா ஹா ஆனா இத்தனைக்கும் காரணம் யோகா எனச் சொல்லி இந்த பாஸ்ட் எக்ஸசைஸ் கிளாசுக்கு அதுவும் எனக்கு பிரயாணக் களைப்பு வேறு அதிலும் முதல் தடவை ஹொட் றூமில... ஐயா சாமி முடியேல்லை , ஆனா இடையில விடக்கூடாதென, ஹொட் யோகா[ஒரியினல் யோகா] கிளாஸுக்குப் போனேன் அது ஓகேயா இருந்துது.
இன்னொன்று இங்கு ஸ்கொட்லாந்து எப்பவும் குளிரும் குளிர்மையும் என்பதால என் தோல் பழகிப்போச்சு, என்னால வெக்கை தாங்கவே முடியாது, ஏசி இல்லை எனில் துடிப்பேன்.
நீக்குஅதனால ஹொட் யோகா எல்லாம் கொஞ்சம் கஸ்டம்.
இன்னொன்று சொல்லோணும், இங்கு நம்பவே முடியாது, யோகா ரீச்சர்[ரீச்சர் என்றதும்தான் அங்கு நீங்க சிமியோன் ரீச்சர் பற்றிக் கேட்டது நினைவு வருது, அவ எப்பவோ காலமாகிட்டார்] நமஸ்தே என்பினம், ஓம் சாந்தி என்பினம், கிளாஸ் முழுக்க மெல்லிய ஓம்ம்ம்ம்ம்ம் மந்திரம் ஒலிக்கும்... சிலசமயம் நான் ஸ்கொட்லாந்தில்தான் இருக்கிறேனா என நினைப்பேன் ஹா ஹா ஹா...
///ஸ்ரீராம்.17/9/25 5:03 PM
நீக்குவேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரன்!//
ஹா ஹா ஹா வெள்ளைக்காரர் ஒரு நாளைக்கு 8 மணிக்கு மேல முறிய மாட்டினம், சனி ஞாயிறு வேலைக்குப் போக மாட்டினம் அவைக்கு காசை விட எஞோய் பண்ணுவதுதான் முக்கியம்.... வாழ்வது ஒருமுறை அதை நன்கு சந்தோசமாக வாழோணும் என நினைப்பது சரிதானே:)))
//இன்னும் என்ன பார்க்கறீங்க.... முடிச்சாச்சு இந்த வார புதன் கிழமை...//
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படி ஒரு சான்ஸ் எப்பவும் கிடைக்காதெல்லோ... சேட்டைக்காரரை வச்சு சேட்டை பண்ணியிருப்பாங்க என நினைச்சே வந்தேன்...
நான் கொஞ்சம் குழம்பிட்டேன் ஸ்ரீராம்... இவர்தானே முகம் காட்டாமல் முன்பும் சேட்டையாக கெள அண்ணனோடு சேர்ந்து பேசுவார், அவர் எனத்தான் நினைச்சேன்.. தப்பெனில் மனிச்சுக்கொள்ளுங்கோ:))...
எல்லோரும் ரொம்ம்ம்ம்ம்ம்ப அடக்கொடுக்கமாக சீரியசாகக் கிளவிகள் சே..சே. டங்கு ஸ்லிப்பாகுதே கேள்விகள் கேட்டு, அவரின் நகைச்சுவை உணர்வை எங்கும் பார்க்க முடியாதபடி பண்ணிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
இல்லை அதிரா.. நீங்கள் யாரையோ எண்ணி கன்ஃபியூஸ் ஆகி இருக்கிறீர்கள். இவர் சேட்டைக்காரன் என்றே தளம் வைத்திருந்தார். உவமை மன்னர். நகைச்சுவையாக எழுதுவார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நகைச்சுவையை மறந்து விட்டார்!! இவர் கதை ஒன்று சமீப சனிக்கிழமையில் ஜேகோ பகிர்ந்திருந்ததை மேலே இந்தப் பதிவிலேயே சுட்டி கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
நீக்கு//எல்லோரும் ரொம்ம்ம்ம்ம்ம்ப அடக்கொடுக்கமாக சீரியசாகக் கிளவிகள் சே..சே. டங்கு ஸ்லிப்பாகுதே கேள்விகள் கேட்டு, அவரின் நகைச்சுவை உணர்வை எங்கும் பார்க்க முடியாதபடி பண்ணிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) //
Same Feeling.
ஸ்ரீராம் சில பதிவுகளில் ஒருவர் பதில் சொன்னார் என கெள அண்ணன் எழுதுவார், நகைச்சுவையாக பதில் சொல்லுவார்... அவர் யார்?
நீக்குதெரியவிலையே... நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உதாரணம் எடுத்துக் காட்டினால் கண்டுபிடிக்கலாம்!
நீக்குபடாபட்டி.. இப்படி ஆராவது இருக்கினமோ? இதுக்குத்தான் என் செக் இங்கிருக்கோணும், அவ எனில் என் கொமெண்ட்ஸ் ஐ வைத்துக் கண்டுபிடிச்சுச் சொல்லிடுவா ஹா ஹா ஹா...
நீக்குஅப்பா... பட்டாபட்டி... மிக பழைய பதிவர். சில வருடங்களுக்கு முன்னரே அவர் மறைந்து விட்டார்.
நீக்குஓ அவர் நகைச்சுவையாகப் பதில்கள் சொல்லுவாரோ? முகம் காட்டாமல் ஒருவர் இங்கு பதில் சொல்லுவார், எதுக்கும் அஞ்சுவிடம் விசாரிக்கிறேன்.
நீக்குபதில் சொல்வதெல்லாம் இல்லை. அவர் பதிவுகள் நகைச்சுவையாக இருக்கும்.
நீக்குஅதிரா குறிப்பிடுவது குரோம்பேட்டை குறும்பன் என்று நினைக்கிறேன்.
நீக்கு//கௌதமன் 17/9/25 4:25 PM
நீக்குஅதிரா குறிப்பிடுவது குரோம்பேட்டை குறும்பன் என்று நினைக்கிறேன்.//
ஹா ஹா ஹா அடிக்கிற வெயில்லையும் கண்டுபிடிச்சிட்டார் கெள அண்ணன் அவரேதான்:)))
இப்போதான் சந்தேகம் வருது.... இது யாரோ இப்பெயரில் விளையாடுகினமோ:)))
அட, குரோம்பேட்டை குறும்பனா? முதலிலேயே சரியாய் கேட்டிருக்கக் கூடாது?!!
நீக்கு///முதலிலேயே சரியாய் கேட்டிருக்கக் கூடாது?!!
நீக்குபதிலளி/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//அடுத்த வாரம் KGG வந்துடுவாரா? நார்மல்சி திரும்பிடுமா?//
பதிலளிநீக்குஏன் கெள அண்ணன் பெயரைக் கேட்டதும் பூஸார் காலைத்தூக்கியபடியே யோசிக்கிறார் ஹ ஹா ஹா மருவாதை போலும்... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்..
ஸ்ரீராம் இது உங்க வீட்டுச் செல்லமோ? சொல்லிக்கொடுத்தேபழக்கிவிட்டுப் படமெடுத்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
கெள அண்ணன் பெயரைச் சொன்னதும் எழும்பி நிக்கச் சொல்லிப் பழக்குங்கோ:)))
அதிரா.. இவரை நினைவில்லையா? அகாலத்தில் மறைந்த அன்புச்செல்லம். பழைய வீட்டில் இவரின் அன்பு மற்றும் சோகக்கதையை ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன்!
நீக்குஓ நினைவிருக்கு ஸ்ரீராம், அவரா இவர், அதுதான் யோசித்தேன் நீங்கள் புது வீட்டில் எந்தச் செல்லமும் வளர்ப்பதாகச் சொன்ன நினைவில்லையே என, இருப்பினும் எப்போதாவது வரும் எனக்கு தெரியாமல் இருக்கலாம் நீங்கள் இப்போ வளர்ப்பது என நினைச்சேன்.
நீக்குஇப்போது எதையும் வளர்க்கவில்லை அதிரா.. என் சோம்பேறித்தனத்தைதான் வளர்க்கிறேன்!
நீக்குசே சே அது நல்லமில்லை ஸ்ரீராம், அண்ணியையும் கூட்டிக்கொண்டு எங்காவது யோகா கிளாஸ் இல் ஜொயின் பண்ணுங்கோ.. அது அனைத்துக்கும் நல்லது.. 24 மணி நேரத்தில் ஒரு மணித்தியாலமாவது நமக்காக செலவழிப்போம்...
நீக்குஉங்களுக்காக சரி என்று சொல்லலாம். என் இயல்புக்கு சரிவராது! நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!
நீக்குஅது உண்மைதான் ஸ்ரீராம், அவரவர் இடத்திலிருந்துதான் யோசிக்க வேணும், ஆனாலும் ஏதாவது பண்ணுங்கோ, இப்போ தொடக்கம் அமைதியாக புத்தகமும் கொம்பியூட்டருமாக இருந்தால்.. பின்னாளில்தான் பிரச்சனைகள் வரும்... ஏதாவது செய்யுங்கோ..
நீக்குஇதுக்காகத்தான் இங்குள்ளோர் நாய்ப்பிள்ளைகள் வளர்க்கின்றனர், என்ன மழை குளிர் இருட்டானாலும் வோக் கூட்டிப்போகோணும் அது நமக்கும் நல்லதென.
ஒன்று சொல்லோணும் ஸ்ரீராம்... அஞ்சு கொஞ்சக்காலமாக சோகமாக இருக்கிறா:(((. திடீரென நினைவு வந்துது...
செல்லங்கள் வளர்ப்பது ஸ்ட்ரெஸ் ரிலீவிங் என்பதிலிருந்து இப்போது இங்கு ஸ்ட்ரெஸ் கிரியேட்டராக இருக்கிறது.
நீக்குஎதுவும் செய்யாமலேயே நான் கடந்த ஐந்து மாதத்தில் நான்கு கிலோ வெயிட் குறைந்திருக்கிறேன்!
அஞ்சு சோகமா? ஏன்?
ஓ உணவுக்கட்டுப்பாடோ? உணவுக் கட்டுப்பாடெனில், ஆரம் கொஞ்சம் வெயிட் இறங்கும், பின்பு மிஞ்சியிருக்கும் கொழுப்பு கரையாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதைக் கரைக்க நிறையப் பாடுபடோணும்:))))
நீக்குஇங்கு சொல்லலாமோ இல்லையோ தெரியாது , இருப்பினும் சொல்லுறேன், அஞ்சுட செல்லப் பிள்ளை ஜெஸி[பூஸ்] தவறிட்டா:((... இப்போ 4,5 மாதங்களாகிறது, பிள்ளைபோல வளர்க்கிறோம், பின்பு அவர்களின் மறைவை மனம் ஏற்றுக் கொள்ளாதுதானே...
நீக்குசாதத்தையே சுத்தமாக தவிர்த்தேன். இப்போது கொஞ்சமாவது தினசரி சாதம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று அக்கறையுள்ளவர்கள் சொல்லி இருப்பதால் சிறு கப் அரிசி சாதம். அதுவும் எங்களுக்கு புழுங்கலரிசி சாப்பிட்டு வழக்கமில்லை. பச்சரிசிதான்!
நீக்குயானை ஆமை போன்ற பெரிய விலங்குகள் போலல்லாமல் நாய் பூனை போன்ற செல்லங்களுக்கு இறைவன் குறைந்த ஆயுளே கொடுத்திருக்கிறான். செல்லமாக கூட வளர்ந்தது மறைந்தால் வருத்தமாகத்தான் இருக்கும். அஞ்சு சோகத்திலிருந்து சீக்கிரம் தேறி வரட்டும்.
நீக்குஓ சிவப்புப்பச்சை அரிசி எனில் உடம்புக்கும் நல்லது சுவையாகவும் இருக்கும்.
நீக்குஆனா உண்மையில் இந்த காபோஹைரேட் ஐட்டங்களை மட்டும் தவிர்த்தாலே, வயிறு உப்புசம் இல்லை, உடம்பில வீக்கம் இல்லை... ஏன் ரயேட் கூட வராது, உடம்பு இலேசானதுபோல இருக்கும்.
சின்ன வயசிலிருந்தே தீத்தி தீத்திப் பழக்கப்படுத்தி விட்டிட்டினம் நமக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
மிலெட், கவுனி அரிசி என்று எந்த ஆரோக்ய விஷயங்களும் எனக்கு பிடிப்பதில்லை என்பது என் கொழுப்பு! நாக்கு நாலு முழம்! நல்லா சாப்பிட்டு அனுபவிச்சுதான் போவோமே என்னும் மனநிலை!
நீக்குஅதிரா, பூஸ் தவறிட்டா என்று கேட்டு வருத்தம் தான். உங்கள்காலை சுற்றி வந்த வீட்டில் வளையவந்த அன்பு ஜீவன் மறைந்தது மனதை விட்டு அகலாது. வீடு வெறிச் என்று இருக்கும்.
நீக்குகோமதி அக்கா தாமதமாக வந்தாலும் அனைத்தையும் படிச்சிருக்கிறீங்க, அது அஞ்சு வீட்டுச் செல்லப்பூஸ் கோமதி அக்கா. இப்போ பிள்ளைகள் நம்முடன் நேரம் செலவழிப்பது குறைவு, நம் செல்லப் பிராணிகள்தானே அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கினம் 😅
நீக்கு//ம்ம்ம்.. இன்னும் 7 நாள் இருக்கு...//
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ அப்போ கெள அண்ணன் லோங் ஹொலிடேயில் இருக்கிறார் போலும்... இப்போ ஒரு இடத்தை ஒம்பேது கோணத்தில படமெடுத்து வந்து ஒம்பேதூஊஊஊஊ கிழமையை ஓட்டப்போகிறார் படம் படமாப் போட்டூஊஊஊஊ.. ஹா ஹா ஹா.. ஆள் இல்லாத நேரம் பார்த்து இப்படி பயப்பூடாமல் மல்லுக்கட்டிடலாம், பார்த்தால் அடிச்சுக் கலைப்பார் ஹா ஹா ஹா சொல்லிடாதையுங்கோ ஸ்ரீராம்:)))
இதோ.. சென்னையில்தான் இருக்கிறார். பெங்களுருவில் ரொம்ப குளிர்கிறது என்று சென்னை வெயிலில் வறுபட வந்திருக்கிறார். இந்த வாரம் பெங்களூர் திரும்புகிறார்.
நீக்குஓ இப்போ அங்கு வெய்யிலோ? யாப்பாணத்தில் நல்ல மழை கொட்டுகிறதாமே.. மழைக்கு செட்டி அட்டைகல் வருகின்றன என அம்மா போன் பண்ணும்போதெல்லாம் திட்டுறா.. அட்டையைத்தான் ஹா ஹா ஹா.. அம்மா ஊரிலதான் நிற்கிறா...
நீக்குசென்னையில் எப்போதுதான் வெய்யில் இல்லை? வெப்பம் இல்லை? செம்ம அடைப்பா இருக்கு இப்போ கூட.
நீக்குஇன்றைய கேள்விகளுக்கான பதில்களை அசத்தலாக தந்துள்ளார் சேட்டைக்காரன். ரசித்து படித்தோம். தகவல்கள் பலவும் அறிந்தோம்.
பதிலளிநீக்குசேட்டைக்காரன் ப்ளாக் விரும்பிப் படித்ததுண்டு. நகைச்சுவைக்கு குறைவிருக்காது.
தொடரட்டும் அவர்கள் பணி. பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.
வாங்க மாதேவி... நன்றி.
நீக்குஅதிரா சேட்டைக்காரன் பக்கம் சென்று படித்ததில்லையாம்.
இல்ல ஸ்ரீராம், வைரவர் மேல் ஆணையாகப் போனதில்லை. என் கரெக்ட்டர் தான் உங்களுக்குத்தெரியுமே, என் பக்கம் வருவோரிடம் மட்டுமே போவேன், போஸ்ட் படித்தால் என் கொமெண்ட் இருக்கும், ஒட்டி எல்லாம் படிக்க மாட்டேன், ஆனால் யாராவது எங்காவது லிங் குடுத்துப் படிக்கச் சொன்னால் படிப்பதுண்டு.
நீக்குஆனா இவர் பக்கம் போனதில்லை, நேரமும் மனமும் ஊக்கம் தரும்போது போய்ப் பார்க்கிறேன்.
ஆனா ஆரம்பகாலம் இவர் என் பக்கம் வந்திருப்பாரோ.. நினைவில்லை எனக்கு.
நீக்குஅவர் பிளாக் பக்கம் அப்புறம் எடுத்துத் தருகிறேன். பாருங்கள். இதற்கு எதற்கு ஆணை எல்லாம் அதிரா... முருகன் வருத்தப்படுவார்!
நீக்கு///முருகன் வருத்தப்படுவார்!//
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
பூஸாரின் படம் பார்த்ததும் ஜம் பண்ணிட்டேன், இப்போ கீதாவின் கொமெண்ட் பார்த்துத்தான் போய்ப் பாட்டுக் கேட்டேன்.. அக்காலத்துப் பாட்டுக்கள் நெஞ்சில் நிறைந்தவை.., எப்பவும் ரேடியோக்கள் ஒலிக்கும், வசனங்கள் ஒவ்வொன்றும் ஆழமாக மனதில பதியும்.
பதிலளிநீக்குஇப்போ கன்னாபின்னா என படமும் பாட்டுக்களும் வந்ததனால ஒன்றும் மனதில் நிற்பதில்லை.
ஆனா நான் இப்பவும் போன் இல் ரேடியோக் கேட்பேன்.. சமைக்கும் நேரம் கார்டினிங் நேரம், தனியே இருக்கும் நேரங்களில் ரேடியோத்தான் கேட்பேன்.
இந்தப் பாடலில் நாகேஷின் துணை நடிப்பும் பிரமாதமாக இருக்கும். பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை அடக்கி வாசித்திருப்பார்கள். வரிகளும் கவிஞர் சூபபரா எழுதி இருப்பார்.
நீக்குஅப்போ ஆச்சிரமத்தில் சிரமதானப் பணிகள் என்னை அழைக்கின்றன, மீ போயிட்டு வாறேன்:)).. அடுத்த புதன் கெள அண்ணனின் பதில்களோ?..
பதிலளிநீக்குநான் ஒரு தடவை சில கேள்விகள் புதன் போஸ்ட்டில் கேட்டிருந்தேன் அதை அவர் கவனிக்கவில்லைப்போலும்.. அது சில மாதங்கள் முன்பு.
பின்பு வந்து இங்கு சில கேள்விகள் இருக்கு கேட்கிறேன். இப்படித்தான் நினைப்பேன் பின்பு விட்டுவிடுவதும் உண்டு.
கௌ அண்ணன் பதில்கள் அல்ல. கேள்விகள் கேட்கப்பட்டதும் ஆசிரியர்கள் மூவரும் (!) பதில் அளிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பெரும்பாலும் இருவர் மட்டும் பெரும்பாலும் பதில் சொல்வார்கள்! இப்போதும் அப்படிதான். உங்கள் கேள்விகள் இருந்தால் பதிவிலேயே கேட்கலாம்.
நீக்கு//அப்போ ஆச்சிரமத்தில் சிரமதானப் பணிகள் என்னை அழைக்கின்றன, மீ போயிட்டு வாறேன்:)).. அடுத்த புதன் கெள அண்ணனின் பதில்களோ?.. //
நன்றி மீண்டும் மீண்டும் வருக!
ஆஆஆஆஆஆஅ இது தொண்ணூத்தீஈஈஈஈஈஈஈஈ ஆறூஊஊஊஊ:)))
நீக்குஆஆஆஆ மீதேன் 101 ஊஊஊஊஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா:))
பதிலளிநீக்குஇந்த வார புதன் பதிவும் அருமை . கேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குசேட்டைக்கார்ர் பதில்கள் நன்றாக இருந்தது. முன்பு என் பதிவுகளை வலைச்சரத்திரல் பகிர்ந்நு இருக்கிறார், தொடர் பதிவுகளை எழுதிய அவரும் அந்த பதிவை எழுதி இருக்கிறார், என் தொடர் பதிவை பாராட்டி இருக்கிறார்.
அவர் சொல்வது போல நகைச்சுவை கதைகள் மன இறுக்கத்தை போக்கும் வாய் விட்டு சிரிக்கும் போது மனம் லேசாகும்
அதிரா, பூஸ் தவறிட்டா என்று கேட்டு வருத்தம் தான். உங்கள்காலை சுற்றி வந்த வீட்டில் வளையவந்த அன்பு ஜீவன் மறைந்தது மனதை விட்டு அகலாது. வீடு வெறிச் என்று இருக்கும்.
பதிலளிநீக்குஅது அஞ்சு வீட்டுச் செல்லம் கோ அ …
நீக்குஓ அப்படியா ! மன்னிக்கவும் அதிரா, அஞ்சுக்கு கஷ்டமாக இருக்கும்.
நீக்குமாமா மருமகனிடம் கொடுத்த பொறுப்பை நல்ல படியாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமாமாவும் வந்து பாராட்டி விட்டு போய் விட்டார்.
பாடல் பகிர்வு பதிவுக்கு பொருத்தம். நல்ல பாடல்
பதிலளிநீக்குமீண்டும் பின்னூட்டங்கள் நிறைய வந்து இருப்பது மகிழ்ச்சி. அதிரா வரவு களை கட்டி இருக்கிறது .
கோமதி அக்கா என் வால் சத்தம் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே😆 என் கால் சத்தம் கேட்டாலே எல்லோரும் ஓடிடுவினம், இன்று ஶ்ரீராம் மட்டும், அது ஜே கே ஐயாரெசிப்பி படி கம்பு இட்லி சாப்பிட்டமையால தைரியமாகப் பேசினாரா… மீயும் பேசினேன் ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா😻
நீக்குபூனையின் படமும் அது கேட்கும் கேள்விகளும் அருமை.
பதிலளிநீக்குஅதன் அங்க அசைவுகளும், அதன் சிந்தனை பார்வையும் உங்கள் வரிகளுக்கு பொருத்தம்.