தேவையான பொருள்கள்:
வேர்கடலை - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெங்காயம்(பெரியது) - 1
தக்காளி - 1
வற்றல் மிளகாய் - 4 அல்லது 5
பூண்டு(optional) - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - 2 அல்லது 2 1/4 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு மிளகாய் வற்றல்.
செய்முறை:
ஓரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலையை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதோடு மிளகாய் வற்றல், புளி இவைகளையும் சேர்த்து வறுத்துக் கொண்டு தனியே வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சி இவைகளை சேர்த்து வதக்கிக் கொண்டு, இவைகளோடு தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்திருக்கும் கடலை, மிளகாய் வற்றல், புளி இவைகளையும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, கலக்கவும். அல்லது மிக்ஸியில் அரைக்கும் பொழுதே உப்பை சேர்த்து விடலாம்.
அரைத்த விழுதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவைகளை தாளித்தால் சுவையான கடலை சட்னி ரெடி. பொங்கல், உப்புமா, தோசை இவைகளுக்கு நல்ல சைட் டிஷ்!
வேர்கடலை சட்னி செய்முறை நன்று. பூண்டு சேர்க்காமல் நாங்களும் இப்படிச் செய்வோம்.
பதிலளிநீக்குதேங்காய் விலை அதிகமாகும்போது பலரும் இந்தச் சட்னி அல்லது பொட்டுக்கடலைச் சட்னிக்கு மாறிவிடுவார்கள்.
நன்றி
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநல்ல செய்முறை..
பதிலளிநீக்குயாரும் இதனை -
திரும்பவும் அரைத்து வைக்காமல் இருக்க வேண்டும்...
இதோ சமீபத்தில் நான் செய்த சிலவற்றை தி பதிவாக அனுப்பப்போகிறேன். அவை இங்கேயே மற்றவர்கள் எழுதி வெளிவந்திருக்கலாம் அல்லது மற்றவர்கள் தளத்திலும் வந்திருக்கலாம். அதுக்காக நான், கேசரியில் கடுகு உ பருப்பு தாளித்துவிடவும், மைசூர்பாக்கில் அலங்காரத்துக்கு, மேலே வறுத்த முந்திரியை ஒட்டிவிடுங்கள் என்று எழுதினால் நீங்களே சண்டைக்கு வரமாட்டீங்களா துரை செல்வராஜு சார்.
நீக்குஆமாம் இங்கு செவ்வாய்க்கு எப்போது கதை எழுதப்போகிறீர்கள்? ஏஐ துணையுன் நல்ல படங்கள் போடுவார்களே
நன்றி துரை சார். //யாரும் இதனை -
நீக்குதிரும்பவும் அரைத்து வைக்காமல் இருக்க வேண்டும்...// ஹா ஹாஹா! அப்படி செய்துவிட்டு இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி விடுவார்கள். பரிசு கூட கிடைக்கும்.
@நெல்லை: துரை சார் சமீபத்தில் நான் பறி கொடுத்த கதைத் திருட்டுப் பற்றி குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே துரை சார்?
நீக்குநல்லாருக்கு பானுக்கா. செய்முறை . நம் வீட்டிலும் இது செய்வதுண்டு. பூண்டு சேர்த்தும், சேர்க்காமலும்....
பதிலளிநீக்குபொட்டுக்கடலைக்குப் பதில் நிலக்கடலை சேர்த்துச் செய்வதுண்டு
கீதா
இது நிலக்கடலை சட்னிதான் கீதா. மாற்றி எழுதி விட்டீர்களோ?
நீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு,
பதிலளிநீக்குஇறையருளால் கண் சற்றே நலம் பெற்ற பிறகு எழுதுவேன்
விரைவில் நலம் பெறும் துரை செல்வராஜு சார். என்னுடைய பிரார்த்தனைகள்
நீக்குவேர்கடலை சட்னி நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநாங்களும் வேர்கடலை பயன்படுத்தி சமையல்கள் செய்வோம்.
நன்றி மாதேவி.
நீக்குவேர்க்கடலையைப்புளிக்காய்ச்சல், சாம்பார் சாதம், மற்றப் பிசைந்த சாத வகைகள், அவல் உப்புமா, ஜவ்வரிசி உப்புமா ஆகியவற்றில் சேர்ப்பேன். சட்னி மட்டும் அரைச்சால் நம்மவர்க்குக் கோபம் வந்துடும் என்பதால் அரைச்சதே இல்லை. அதோடு எந்தச்சட்னி அரைச்சாலும் பூண்டே சேர்ப்பதில்லை.
பதிலளிநீக்குஇந்த செய்முறை மாப்பிள்ளையிடம் கற்றது. அவர் புட்டபர்த்தியில் படித்தபொழுது ஹாஸ்டல் மெஸ்ஸில் செய்வார்களாம். அவருக்கும் பூண்டு பிடிக்காது, அதனால் பூண்டு வாசனை வராமல் கொஞ்சமாக சேர்ப்பேன். நன்றி.
நீக்குஎனக்கும் வேர்க்கடலை 'சட்னி' பிடிக்காது. அதைத் தவிர்த்து, வேர்க்கடலை எந்த ரூபத்தில் இருந்தாலும் பிடிக்கும்.
நீக்குநான் முன்பு இதை மதிக்காமல் இருந்தேன். சமீப காலங்களில் தேங்காய், தக்காளி, வெங்காய சட்னிகள் அலுத்து விட்ட நிலையில் மாறுதலாக இந்த சட்னி ரொம்பப் பிடித்துப்போய் இருக்கிறது.
நீக்குஇங்கே மருமகள் சட்னி அரைச்சால் வறுத்த பருப்புக்களையும் சேர்த்து நைஸாக அரைச்சு விடுகிறார். ஆகவே சட்னி காரமே இருக்காது. வெறும் பருப்பு அரையலாகவே இருக்கும். பருப்பெல்லாம் நான் வைக்க மாட்டேன். வைச்சால் கடுகு, உபருப்புக் கொஞ்சமாக வறுத்து அரைத்து எடுக்கையில் கடைசியில் போட்டு ஒரு சுத்துச் சுத்திட்டு எடுத்துடுவேன். நம்ம நாக்கெல்லாம் நாலு கூட இல்லை எட்டு முழமாச்சே! இஃகி, இஃகி, இஃகி.
பதிலளிநீக்குஆஹா! நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்மார்க் கீதா அக்கா பாணி பதிலை பார்ப்பதில் மகிழ்ச்சி!
நீக்குஆம்! எனக்கும் மகிழ்ச்சி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்!
நீக்குவேர்க்கடலை சட்னி செய்முறை குறிப்பும் படங்களும் நன்றாக இருக்கிறது. நானும் செய்வேன் இந்த சட்னி
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா!
நீக்குசாதாரணமா கடலை சட்னியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்க்க மாட்டார்கள். காய்ந்த மிளகாய் வைக்க மாட்டார்கள். பதிலாக பச்சை மிளகாய் வைப்பார்கள்.
பதிலளிநீக்குகடலை சட்னியின் பூர்வீகம் அன்றைய ஹோட்டல்கள். தேங்காய் சட்னியின் அளவு கூட்ட கடலைப்பிண்ணாக்கு சேர்த்து அரைப்பார்கள்.
Jayakumar
நன்றி ஜே.கே.சி. சார். நீங்கள் சொல்வது கேரளா பாணி கடலை சட்னியா? இது ஆந்திரா பாணி.
நீக்குகடலை சட்னியில் கடலை புண்ணாக்கு? ஹாஹாஹா. தேங்காய் சட்டியில் தேங்காய் புண்ணாக்கு வைப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
சிறு வயதில் எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டி வருவார்கள். கூடவே ஒரு சாக்கில் கம்மென்ற வாசனையோடு தேங்காய் புண்ணாக்கும் வரும். அதை சாப்பிட்டிருக்கிறோம்.
*தேங்காய் சட்டியில் - தேங்காய் சட்னியில்
நீக்குசிறு வயதில் நானும் தே புண்ணாக்கு இரசித்துச் சாப்பிட்டது உண்டு - எங்கள் கிராமத்தில்!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவாக தங்களது செய்முறையான வேர்க்கடலை சட்னி மிக அருமையாக உள்ளது. நானும் தேங்காய் சட்னி செய்யும் போது பொட்டுக்கடலைக்கு பதிலாக வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்வேன். ஆனால், வெங்காயம் பூண்டு இதனுடன் சேர்த்ததில்லை. இதேப் போன்று ஒரு முறை செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா.
பதிலளிநீக்கு