பீயம் பெசரட்டு
(JKC)
பீயம் பெசரட்டு - தெரியாத தெலுகு, தெரிந்த காலை உணவு - அரிசி -பாசிப்பயறு தோசை.
படத்தைப் பாருங்கள்.
பெசரட்டு ஆந்திர ஸ்பெஷல். தோசை பலவிதம். அதே போல் பெசரட்டும் பலவிதம். சாதாரணமாக பச்சைப்பயறு மட்டுமே அரைத்து வார்ப்பது. மெத்தென்று இருக்கும். மொரமொரப்பு வேண்டுமென்றால் அரிசி மாவும் வேண்டும். இங்கு இன்று விளம்புவது அரிசி பயறு பெசரட்டு.
தேவையான பொருட்கள்.
பச்சரிசி ஊறவைத்தது.
பச்சை பயறு ஊறவைத்தது.
பொருட்களின் விகிதம் எப்படியானாலும் சரி. உப்பை மட்டும் பார்த்து அளந்து சேருங்கள்.
பச்சைப்பயறு ஸ்டாக் இல்லை. ஆனால் சாலடுக்கு முளை கட்டிய பயறு பிரிட்ஜ்ல் இருந்தது. அதை எடுத்துக்கொண்டேன்.
பெசரட்டும் அடை போன்று தான். சுடுவதற்கு சற்று முன் அரைத்தால் போதும் மாவு புளிக்கக்கூடாது.
அரிசி பயறு அரைத்தெடுத்த மாவு படம்.
தோசைக்கல்லில் வார்த்து
முதல் பெசரட்டு (மெது, கல் காயவில்லை)
கல் காய்ந்தபின் இரண்டாம் பெசரட்டு முறுகலாக
முறுக வந்ததைக் காட்ட பிரமிட் வடிவத்தில் பெசரட்டு தரப்படுகிறது.
தொட்டுக்கொள்ள நிலக்கடலை-வேர்க்கடலை-மல்லாட்டை சட்னி. கார சட்னி.
சாதாரணமாக பெசரட்டு மேல் நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறப்படும்.
பிள்ளைகள், பெரியோர்களுக்கு ஏற்ற எளிதில் செரிக்கும் சத்தான உணவு.
பொருள், வடிவம், செய்முறை விளக்கம் : JKC.
செய்து காட்டியவர் மனைவியார் (பாஸ்)
நல்லா வந்திருக்கு பெசரட். (ஆந்திர அடை). பொதுவா அடைக்கு தொட்டுக்க மி.பொடி ந.எண்ணெய் அல்லது எங்க அம்மாவின் விருப்பமான ப.மிளகாய், உப்பு பெருங்காயம் நைசா அரைத்தது பிடிக்கும். பெசரட்டுக்கும் அது நல்லா இருக்கும். சமீபத்தில் புளிமிளகாயும் பிடிக்குது.
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி
நீக்குநல்லாருக்கு ஜெ கே அண்ணா.
பதிலளிநீக்குநம்ம வீட்டிலும் அடிக்கடி செய்வதுண்டு. அரிசிக்குப் பதிலாகச் சிறுதானியம் ஏதாச்சும் போட்டு. அதுவும் குறைவாகப் போட்டு பயறுதான் கூடுதலாக இருக்கும்.
கீதா
பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குபெசரட்டில் ஆமாம் வெங்காயம் தூவப்படும். பொதுவாக உள்ளே உப்புமாவைப் பரப்பி வைத்துக் கொடுப்பதும் உண்டு.
பதிலளிநீக்குகீதா
நல்லவேளை மோர் சாதத்தை இல்லையே
நீக்குMLA Pesarat with Samba Gothumai Rava uppuma very famous
நீக்குபெயர்தான் கொஞ்சம்.....
பதிலளிநீக்கு:))
பெசரட்டு தான் சொல்லணும். வேறே எப்படி?
நீக்குஆந்திர உணவுகளில் பெசரட்டு, பூதரகுலு, கோங்குரா, ஆவக்காய், வாங்கி பாத், கராச்சி பிஸ்கட் பிடிக்கும்.
பதிலளிநீக்குJayakumar
நான் பெசரட்டுக்கு அரைக்கையிலேயே பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம் பெருங்காயம் சேர்த்து அரைத்து அதிலேயே வெங்காயத்தையும் போட்டு ஒரு சுத்துச் சுத்திட்டு மாவில் போட்டுக்கலந்து தோசையாக வார்த்துடுவேன்.
பதிலளிநீக்குஇப்போதான் பழைய கீ சா மேடத்தை காண்கிறேன். கருத்துரைக்கு நன்றி. ஒன்றோ இரண்டோ பழைய சமையல் குறிப்புகளை திங்கக் கிழமை பதிவுக்கு அனுப்பலாம். முயற்சி செய்யுங்கள்.
நீக்குJayakumar
Thank You. _/\_
நீக்குபெசரட் நன்றாக வந்துள்ளது.
பதிலளிநீக்குபெசரட் நன்றாக இருக்கிறது. நானும் செய்வேன், ஆனால் முளை கட்டிய பச்சை பயிறில் செய்தது இல்லை. இது அதிக சத்தான பெசரட்.
பதிலளிநீக்குசெய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆந்திரா பெசரட் நன்றாக உள்ளது. நாங்களும் இந்த பீயம் இல்லாமல் பெசரட் செய்வதில்லை. அரிசியுடன் பயிறு சேர்த்து, உப்பு, ப. மி பெருங்காயம் சேர்த்து ஆட்டுரலில் அரைத்து செய்வோம். நல்லதோர் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்