12.10.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 27 :: நெல்லைத்தமிழன்.

 

தஞ்சை பெருவுடையார் கோயில்

சென்றவாரத்தில் இடம் இல்லாததால் எழுதவில்லை. இப்போது நாம் நாயக்கர் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபிறகு இராஜராஜன் தன் மகனுக்கு அரசாளும் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடைசி இரண்டு ஆண்டுகள் அரசியல் தொடர்பின்றி கோயில், குளம் என்று தன் மனைவியுடன் காலத்தைக் கழித்தான். அவன் பெரும்பாலும் பழையாறை அரண்மனையில்தான் இருந்தான். அவனுடைய காலத்திற்குப் பிறகு இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊரையே நிர்மாணித்து, அங்கிருந்த அரசமாளிகையில் தங்கி, கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகரமாக ஆக்கிவிட்டான். அவனைத் தொடர்ந்து வந்த அரசர்களும் அப்படியே ஒழுகினர். அதனால் தஞ்சை தன் பெருமை குன்றியது.  இராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மகன்கள் ஒருவர் பின் ஒருவராக அரசாண்டு, கடைசியில் சோழ மன்னருக்கு வாரிசு இல்லாமல், தாய் வழி பெயரனான குலோத்துங்கச் சோழன் சாளுக்கிய சோழ வம்சத்தை ஆரம்பித்ததை ஏற்கனவே பார்த்தோம். அவனுக்குப் பின் பலர் அரசாண்டு, கிபி 1279ல், மூன்றாம் இராஜேந்திர சோழன் ஆட்சியுடன் சோழர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது (பாண்டிய மன்னன் போரிட்டு வெற்றிபெற்றான்)  

பாண்டியமன்னன் மாறவர்மன் குலசேகரன் மறைந்த பிறகு, அவனது மகன்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் இருவருக்கும் யார் அரசாள்வது என்ற போட்டி வந்தது.  அந்தச் சமயத்தில் தில்லியை ஆண்டுகொண்டிருந்தவன் அலாவுதீன் கில்ஜி. அவனுடைய படைத்தளபதி மாலிக் காஃபூர், தென்னிந்தியாவின் மீது படையெடுத்து ஹொய்சாளர்களை முதலில் வென்றான். ஹொய்சாள அரசன் வல்லாளன் தோல்வியை ஒப்புக்கொண்டு, தில்லிக்குத் திறை செலுத்த ஒத்துக்கொண்டான். அங்கு பார்த்த செல்வத்தை எண்ணி, இன்னும் தெற்குப் பகுதியிலும் படையெடுக்கலாம் என்று ஹொய்சாளர்களின் ஊரான துவாரகா சமுத்திரத்தில் பனிரண்டு நாட்கள் இன்னும் படைவீரர்கள் வருவதற்காகக் காத்திருந்தான். 

இதற்கிடையில் சுந்தரபாண்டியன் மாலிக் காஃபூரைச் சந்தித்து, வாரிசுச் சண்டையில் தனக்கு உதவ வருமாறு கேட்டான் என்று சில வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். சிலர், இல்லை இல்லை மாலிக்காபூரே படையெடுத்துவந்தான் என்கின்றனர்.  எது எப்படியோ.. பாண்டியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மலபார் முஸ்லீம் ஆட்சி பாண்டிய தேசத்தில் சில வருடங்கள் இருந்தன என்கிறார்கள்.  மாலிக் காஃபூர் படையெடுத்தது 1311 வாக்கில். அதன் பிறகு நடந்தது, தமிழக வரலாற்றில் மோசமான பக்கங்கள். பல கோயில்கள் அழிக்கப்பட்டன, கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன, கோயிலைக் காக்க நினைத்தவர்கள் அழிக்கப்பட்டனர், பலர் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டனர். இந்தச் சரித்திரம் சம்பந்தமாக நாம் இப்போது படித்தாலும் நமக்கு வேதனையும் கோபமும் இயலாமையும் எழும். அதனாலென்ன, நாம் இவற்றினால் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையும் தெரியும்.

இந்தச் சமயத்தில் அலாவுதீன் கில்ஜி பற்றி மிகச் சுருக்கமாகப் பார்க்கலாம். அரசன் ஜலாலுதீன் கில்ஜி, இரக்கமுள்ள அதீத உணர்ச்சிவசப்படும் அரசன். தன் சகோதரனின் மகனான அலாவுதீனை அவனுடைய தந்தை இறந்ததால் வளர்க்கிறார். அவனுக்கு பதவி மட்டுமல்ல, தன் மகளையும் மணம் செய்துகொடுக்கிறான். அலாவுதீனும் ஒரு போரில் வெற்றிபெற்று (மால்வா பகுதி 1292) அதில் கிடைத்த செல்வத்தை சுல்தானின் காலடியில் கொட்டுகிறார். ஜலாலுதீனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் அவனுடைய மனைவி முல்லிக் ஜஹானோ அலாவுதீன் ஆபத்தானவன் என்று உணர்கிறாள். அதற்கேற்றவாறு அலாவுதீனுக்கும் அவன் மனைவிக்கும் சிறுசிறு பிரச்சனைகள்..இதை விவரித்தால் நீண்டுவிடும். 

பிறகு அலாவுதீன் தெற்கு நோக்கிப் படையெடுத்து தேவகிரி நாட்டை வென்று மிக அதிகமான செல்வங்களைக் கொள்ளையடித்து தில்லியை நோக்கி வருகிறான். ஜலாலுதீன் அரசவையில் அமைச்சர்கள் அரசரை எச்சரிக்கிறார்கள். அனுமதி இல்லாமல் படையெடுத்து வென்று செல்வங்களுடன் வருவது மிக ஆபத்தான அறிகுறி என்று சொல்லியும், ஜலாலுதீன் அலாவுதீனை வரவேற்க தனித்துச் செல்கிறான்.  தன் மனைவியின் எச்சரிக்கையை மீறி நிராயுதபாணியாக அலாவுதீனைச் சந்திக்க வருகிறான்.  தன்னை எடுத்து வளர்த்த, நம்பிக்கையோடு தன்னைத் தனியாகப் பார்க்கவந்த அரசன் ஜலாலுதீனை தன்னுடைய தளபதிகள் உதவியோடு கொன்றுவிட்டு அரசனானான் அலாவுதீன் கில்ஜி. இவன் செய்த துரோகத்திற்கும் பலன் கிடைத்தது.  இவனிடம் அலியாக வந்து இவனுடைய நம்பிக்கையைப் பெற்ற மாலிக் காஃபூர் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தபோதும், (தென்னிந்தியாவைக் கொள்ளையடித்து) கடைசியில் தன் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்த அலாவுதீன் கில்ஜிக்கு வலுக்கட்டாயமாக விஷத்தைக் கொடுத்துக் கொலை செய்தான்… சரி… நாம் தரமுள்ள இந்திய அதிலும் தமிழக மன்னர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, நமக்கெதற்கு கொடூர முஸ்லீம்களின் வரலாறு?

இதை எழுதும்போது, சம்பந்தமில்லாமல் (அதாவது கொஞ்சம் மனது ரிலாக்சேஷனுக்கு) கிரிக்கெட் வீரர் அஸ்வின் அளித்த பேட்டி ஒன்றைக் கண்டது நினைவுக்கு வருகிறது. பேட்டி எடுத்தவர் கேட்கிறார், கிரிக்கெட்டில், தென் இந்தியா புறக்கணிக்கப்படுகிறது, வடவர்கள், அதிலும் மும்பையைச் சேர்ந்தவர்கள் கோலோச்சுகிறார்களோ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அஸ்வின் மிக அருமையாக அந்தக் கேள்வியை எதிர்கொண்டார். அவர் சொன்னதன் சுருக்கம், ஆங்கிலேயர்கள் ஒரு பகுதியை ஆள, பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். இந்தியர்களை ஜாதி என்பதன் மூலம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளும்படிச் செய்துவிட்டு, அவர்கள் தங்களை ஆளும் ஆங்கிலேயன் செய்வதையே கவனிக்காது (கொள்ளையடித்ததையோ, அடிமைப்படுத்தியதையோ மதமாற்றம் செய்ததையோ) செய்துவிட்டனர்.  எளிதாக ஆட்சி அதிகாரத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டுமானால், மக்களுக்கிடையே அச்சத்தையும், அவர்களுக்குள்ளேயே பிரச்சனையையும், பிளவையும் தோன்றவைக்கவேண்டும்.  சரி … நாம் வரலாற்றுக்குத் திரும்புவோம்.

தமிழகத்தில் முஸ்லீம் ஆட்சி பெருவாரியாக இல்லை என்றாலும் இங்கிருந்த கோயில் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. சோழ நாடு போசளர்களால், திருச்சியைத் தலைநகரமாக க் கொண்டு ஆளப்பட்டது. 

1500ல் விஜயநகரப் பேரரசு  தமிழகப் படையெடுப்புக்குப் பிறகு கோயில்கள் பொலிவுபெற ஆரம்பித்தன.  அதனால் சரித்திரம் சொல்லும் செய்தி என்னவென்றால், தஞ்சை தன் பொலிவை சுமார் 300 ஆண்டுகள் இழந்திருந்தது, அதற்குமுன் 150 ஆண்டுகளாக தஞ்சை பெரியகோயிலின் முக்கியத்துவம் குறைந்திருந்தது, தஞ்சை தலைநகராகவும் இல்லை. அதற்கு அடிகோலியவன் இராஜேந்திர சோழன் என்று சொன்னால் மிகையாகாது. (அது எப்படி என்றால் அவன், தன் தந்தையின் காலத்துக்குப் பிறகு தனக்கென ஒரு தலைநகரத்தையும் கோயிலையும் அமைத்துக்கொண்டான். பிறகு புதிய தலைநகரம்தானே பொலிவுறும்? பழைய நகரம் தன் சிறப்பை இழக்கும் அல்லவா? இராஜேந்திர சோழனில் ஆரம்பித்து சாளுக்கிய சோழர்கள் முடிவு வரை தஞ்சை மீண்டும் தலைநகரமாக ஆகவில்லை. எல்லோரும் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகரமாகக் கொண்டுவிட்டனர். அரசாங்க அலுவல்களை பழையாறை நந்திபுரம் போன்ற இடங்களில் இருந்த அரண்மனைகளிலும் நட த்தினர். 

நாயக்கர் வரலாறு இன்னும் ஆரம்பமாகவில்லையா? சரி நாம் தஞ்சை பெரியகோயிலின் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் காணலாம்.

இராசராசன் நுழைவாயிலைத் தாண்டியதும் கண்ணில் படும் சிற்பத்தொகுதிகள். 

நல்ல கோணத்தில் படம் எடுத்திருக்கிறேன் அல்லவா? தஞ்சை பெருவுடையார் கோயில் முழுவதும் இதில் தெரிகிறதா?









கல்வெட்டின் எழுத்து நேர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோன்ற அழகிய நேர்த்தியாக வெட்டப்பட்ட கல்வெட்டுகளை நான் வேறு எந்தக் கோயிலிலும் பார்த்ததில்லை என்று சொன்னால் அது உண்மை.  (யோசிக்கும்போது திருப்பதி கர்பக்ரஹத்தின் வெளிப்பக்கத்தில், அதாவது நாம் விமான ஸ்ரீநிவாசனைச் சேவிப்போமே அந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு சட் என்று வாசிக்கும்படி இருந்தது. ‘புளியோதரை’ என்று எழுதியிருப்பதை என் பையனிடம் வாசித்துக் காட்டினேன். (உடனே உங்களுக்கு ஸ்ரீராம், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் நினைவு வந்தால் நான் பொறுப்பில்லை)

கோவிலை நோக்கி நாம் நின்றால் நம் வலப்புறப்பக்கம் ஒரு நுழைவாயில் உண்டு. அதுதான் இராஜராஜ சோழன் நுழைவாயில். அதற்கான படி ஏறுவதற்கு முன்பு, சண்டிகேசுவரர் கோயில் (சிறிய கோயில்) முன்பு உள்ள கல்வெட்டில் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி பொறிக்கப்பட்டிருக்கிறது.  ராஜராஜனின் மெய்கீர்த்தி (அப்படீன்னாக்க, அந்த அரசனின் பட்டங்கள், சாதித்தவைகளை உள்ளடக்கியது. அதிலிருந்து அவனுடைய வாழ்க்கைச் சுருக்கம் தெரியும். இந்த மெய்கீர்த்திகளை வைத்துத்தான் இந்த அரசன் இந்த இந்தப் போரில் இந்த இந்த வெற்றிகளைப் பெற்றான், இவன் இந்த அரசன் என்பதையெல்லாம் அறுதியிடுகிறார்கள்). ராஜராஜனின் மெய்கீர்த்தி,

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும் தனக்கே உருமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ் தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்ட தன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு”


நான் கொஞ்சம் முயற்சித்து கல்வெட்டு எழுத்துக்களைப் படித்து எழுதியது (சில தவறுகள் இருக்கலாம்)

நீங்கள் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குச் செல்லும்போது இந்தக் கல்வெட்டைப் பார்க்க மறக்காதீர்கள். ராஜராஜ சோழன் காலத்தையது. அவன் தன் முதிர்ந்த பிராயத்தில் இந்தக் கல்வெட்டைத் தடவிப் பெருமிதப்பட்டிருக்கலாம்.  இல்லை, தினம் தினம் கோயிலுக்குச் செல்லும்போது பெருமிதத்துடன் ஒரு பார்வை பார்த்திருந்திருக்கலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தது தெரியுமா? என்று அப்போதிருந்த சிறப்புகளை துவாரபாலகர்கள் நம்மிடம் கூறுவார்களா?


மன்னன் இராஜராஜன் வருவான் என்று காத்திருக்கவில்லை.

இதுதான் இராஜராஜன் கோயிலுக்குள் நுழையும் வடக்குப் பகுதி வாயில். இந்த வரலாறுகளை நான் படித்த பிறகு திரும்ப ஒரு முறை தஞ்சைப் பெரிய கோயில் சென்று நான் பார்க்காத முக்கிய சிற்பங்களையும் நுணுக்கங்களையும், இந்த வாசல் மற்ற வாசல்களைவிட என்ன சிறப்புப் பெற்றுள்ளது என்பதையும் காணவேண்டும். (இது பற்றியும் இங்குள்ள பகுதிகளில் எழுதுகிறேன்)

வடமேற்குப் பகுதியில் இருக்கும் இந்த வாசல் வழியாகத்தான் கோயில் வளாகத்துக்குள் இராஜராஜன் நுழைவான் என்று வரலாற்றிஞர்கள் கருதுகின்றனர். இது சேரர் பாணியில் மரத்தால் அமைந்த நுழைவாயில். அவனுடைய காலத்தில் பொன்னால் அலங்காரமாக வேயப்பட்டிருந்திருக்கவேண்டும். இந்தப் பகுதியில்தான் ராஜராஜன் மெய்க்காப்பாளர்கள் இருந்தார்களாம்.

நான் இராஜராஜனைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று புன்முறுவலோடு சொல்கிறாரோ துவாரபாலக்ர?

முதலிலேயே என்ன, எங்கே எழுதுவது என்று முடிவு செய்துகொண்டு அதற்குரிய கற்களில் செதுக்கியிருக்கிறார்கள். பிறகு அனைத்தையும் இணைத்திருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட மன்னன் சோழ நாட்டை ஆண்டிருந்திருக்கிறான். அவன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் மற்றும் சோழ வரலாற்றைப் படித்துக்கொண்டிருக்கும்போது, Barbarians என்று கூறத்தக்க முஸ்லீம் மன்னனின் (அலாவுதீன் கில்ஜி, பிறகு மாலிக் காஃபூர்) வரலாற்றைத் தொட்ட து மனதைக் கனக்க வைத்துவிட்டது. 

நாயக்கர் வரலாற்றை அடுத்த பகுதியிலாவது ஆரம்பிக்க முடியுமா பார்ப்போம்.

(தொடரும்) 

46 கருத்துகள்:

  1. நெல்லை படங்கள் எல்லாம் சூப்பர்.

    //நல்ல கோணத்தில் படம் எடுத்திருக்கிறேன் அல்லவா? தஞ்சை பெருவுடையார் கோயில் முழுவதும் இதில் தெரிகிறதா?//

    நல்ல கோணம் முழு கோயிலும் தெரிவது.

    இதோடு இதற்கு அடுத்த படம் (அந்தச் சிலை சூப்பர்) இதற்கும் அடுத்த படங்களில் இடப்பக்கம் நல்ல கோணம். அடுத்தாப்ல

    //மன்னன் இராஜராஜன் வருவான் என்று காத்திருக்கவில்லை.//

    நீங்க உட்கார்ந்திருக்கும் இப்படமும் இதற்கு அடுத்தாப்ல உள்ள படமும் ரொம்ப அழகாக இருக்கின்றன. எடுத்த கோணமும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. படங்களை இன்று மீண்டும் பார்த்தபோது, அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த நினைவுகள் மீண்டும் அலைமோதின

      நீக்கு
    2. அதுக்காகத்தானே படங்கள் எடுத்து வைச்சுக்கறோம். நமக்கு அது பல நல்ல நினைவுகளைத் தரும்.

      கீதா

      நீக்கு
    3. படங்கள் துன்ப நினைவுகளையும், அப்போது பட்ட கஷ்டங்களையும், பலவித நினைவுகளையும் தோற்றுவிக்கும். எனக்கு புகைப்படங்கள் பலவிதங்களிலும் உதவியிருக்கின்றன.

      நீக்கு
  2. வடமேற்குப் பகுதியில் இருக்கும் இந்த வாசல் வழியாகத்தான் கோயில் வளாகத்துக்குள் இராஜராஜன் நுழைவான்//

    இந்தப் படமும் ரொம்ப அழகாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில், அரசன் நுழையும் பகுதி என்று பலருக்கு அனுமதி இருந்திருக்காது. அந்த வாயிலில் அமர்ந்து படம் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததே

      நீக்கு
    2. நெல்லை வி ஐ பி நுழையும் பகுதி என்று இருந்தது இல்லையோ? ஏதோ ஓரிரு கோயில்களில்இருந்ததாக நினைவு. அதாவது சுதந்திர இந்தியாவில். இப்பவும் இருக்கிறதா என்று தெரியலை.

      கீதா

      நீக்கு
    3. சில பல கோயில்களில் நேரடியாக கருவறை வரை செல்லும் சுருக்குப் பாதைகள் உண்டு. நம்ம மாதிரி ஆட்களுக்குத்மான் நெடிய பாதை

      நீக்கு
  3. நெல்லை, கல்வெட்டு எழுத்துகள் உள்ள படங்களைக் கொஞ்சம் பெரிது படுத்திப் பார்த்தால் வாசிக்கப் புரிகிறது ஓரளவு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய கோயிலின் கல்வெட்டை முயற்சி செய்தால் ஓரளவு படித்துவிடலாம்.

      நீக்கு
  4. அப்ப 'கை' 'சை' 'ரை' எல்லாம் ரெண்டு வளைஞ்ச கொம்பு போட்டு க, ச, ர போடுவாங்க போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் எழுத்துக்களிலும் கல்வெட்டிற்கான மாற்றங்கள் இருந்தன என்றே எனக்குத் தோன்றியது.

      நீக்கு
    2. வெட்டுவதற்கு எளிதாக இருந்திருக்குமோ அதனால் இப்படி எழுத்துகள் இருந்திருக்கும்

      மு என்பது ழு போன்று கொஞ்சம் தெரிகிறது

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்... ரொம்ப அழகாக சில எழுத்துகளை, ழ, ண, லு, ஐ போன்று எழுத முடியாது

      நீக்கு
  5. இன்றைக்கு பிரியாணி தின்று விட்டு ரோஸ் மில்க் வாங்கிக் குடிக்கின்றது தமிழ்ச் சமுதாயம்...

    மொகலாயப் படையெடுப்பினால் ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். ஒரு சமைதாயத்தைச் சீரழிக்க, அவர்களின் வரலாறு மறைக்கப்படவேண்டும், அவர்களுக்குள் பிளவு உண்டாக்கப்படவேண்டும், சிந்திக்கவிடாமல் போதையில் ஆழ்த்த வேண்டும்.

      நீக்கு
  6. வரலாற்றுச் செய்திகள் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்குக் மூலஸ்தானத்தின் வடக்கு வாசல் வழியாக மக்களை வெளியே அனுப்புகின்றனர்.. (தெற்குப் பக்கமாகவும் தான்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு முறை அப்படி தரிசனத்துக்காக வரிசையில் நின்றபோது, இராஜராஜன் மற்றும் அவர் மனைவியின் உலோகச் சிற்பங்களை காவலர்கள் பாதுகாப்புடன் மண்டபத்தில் வைத்திருந்ததைப் பார்த்தேன்.

      நீக்கு
  8. ​படங்கள் நேர்த்தி சிறப்பு. கோணங்களும் அதுபோன்று சிறப்பாக உள்ளன.
    வரலாறு சுருக்கம் நன்று.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. பெரியகோவில் முழுப்படம் நல்ல கோணத்தில் எடுத்துள்ளீர்கள் நன்றாக உள்ளது.

    வரலாறு, கல்வெட்டுகள் கண்டோம்.
    இராஜராஜன் துவாரகா பாலர்கள் கல்வெட்டுகள் பேசினால்:) நீண்ட சரித்திரங்கள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். சிற்பங்கள் கோயில்கள் ஏன் பல நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள் பேச ஆரம்பித்தால் நடந்த வரலாற்றை நாம் சரியாக அறியமுடியும் அல்லவா?

      நீக்கு
  10. /// சிந்திக்கவிடாமல் போதையில் ஆழ்த்த வேண்டும்.... //.

    இது... இதுவே தான்...
    உணவுக்கு அடிமைகளாக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியாணி என்பதே, தண்ணியடிப்பவர்களின் உணவாகிவிட்டது. போதை கலாச்சாரமும் பெருகிவிட்டது. அப்புறம் என்ன?

      நீக்கு
  11. /// 1311 வாக்கில் அதன் பிறகு தென்னக வரலாற்றில் நடந்தவை மோசமான பக்கங்கள்...///

    தீபாவளி வேறு வருகின்றது..

    தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தையும் கன்னடத்தில் வேறொரு நகரையும்
    நினைவு கொள்வீர்களாக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் பன்னீராயிரம் வைணவர்கள் திருவரங்கத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கால அரசியலுக்காக ஒரு ஆள், கொலை செய்யப்படவில்லை, முடியை வெட்டிவிட்டார்கள் என்று கதை அளந்துகொண்டிருக்கிறார். அப்படி இருக்கிறது பலருக்கு தேசப் பற்று. திருநாராயணபுரத்தில் திப்புசுல்தான் காலக் கொலைகள்.

      நீக்கு
    2. இப்போத் தான் திப்புவுக்கு மணிமண்டபம் எல்லாம் கட்டிக் கொண்டாட்டம் செய்யறாங்களே! :(

      நீக்கு
  12. மேலே உள்ளவை சங்கேதக் கருத்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு நடக்கும்போதுதான் அதன் பாதிப்பு நமக்கும் நம்ம சந்ததிகளுக்கும் தெரியும். பிறருக்கு நடக்கும்போது அதன் வலி தெரியாது துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  13. இதனால் அப்பகுதியில் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுவதில்லை என்கின்றனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தீபாவளி அவர்களுக்கு ஒரு கருப்பு தினம். இன்னொரு தகவலும் சமீபத்தில் படித்தேன். வெள்ளையர்கள், சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவோ இல்லை தங்களின் ஆசைக்காகவோ, ஒரு சமூகத்தில் பெண்கள் மேற்சீலை அணியக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். இந்த மாதிரி காரணங்களுக்காகவே, நம்பூதிரிகள், தங்கள் வீட்டுப் பெண்கள் வெளியிலேயே வரக்கூடாது என்று தடை விதித்திருந்தனர். அதனால் அந்தப் பெண்களை அந்தர்ஜனம் என்றே அழைப்பர்.

      நீக்கு
  14. கங்கை கொண்ட சோழபுர கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு தஞ்சையில் பாதுகாப்பு அற்றுப் போனதற்கு ராஜேந்திர சோழன் தான் காரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதனை நுட்பமாக ஆராயவேண்டும். தந்தை, உலகப் புகழ் பெறும், யாரும் செய்திராத பெரிய கோபுரம் கொண்ட மிகப் பெரிய கோயிலை கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறார். ஆனால் அதனை விட்டுவிட்டு, தான் ஆட்சிக்கு வந்த பத்து வருடங்களுக்குள்ளாகவே ஏன் இன்னொரு கோயிலை அமைக்கவேண்டும்? ஏதேனும் சாபம் காரணமாகவா? எந்தக் காரணத்துக்காக தஞ்சையை விட்டு அகலவேண்டும்? கும்பகோணம் அருகிலுள்ள பழையாறை, நந்திபுர விண்ணகரம் போன்றவற்றில் சிறிய மாளிகையில் அரசுக்குரிய பணிகளை நடத்திவந்தவன், ஏன் தஞ்சையைக் கண்டுகொள்ளவில்லை? ஒரு நாவலுக்குரிய காரணங்கள் இருக்கும்.

      காலச்சகரம் நரசிம்மா, இதனைப் பற்றி ஆராய்ந்து, யோசனை செய்து ஒரு நாவல் எழுதுவாரா?

      நீக்கு
  15. தாயாதிச் சண்டையில் பாண்டியர்கல் காட்டிக் கொடுத்ததாகவே சொல்கின்றனர். எது எப்படியோ பாரம்பரியம் அழியப் பாண்டியர்கள் முக்கியக் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே நம் சண்டையில் இன்னொரு, வேறு இனத்தவனை உள்ளே கொண்டுவந்தால், சொத்திற்கு ஆபத்து. இப்படித்தான் தஞ்சை நாயக்க மன்னர், இன்னொருவனை நம்பி மோசம் போய் ஆட்சியையே மராத்தியர்களிடம் இழக்க வேண்டி வந்தது.

      இருந்தாலும், மீனாட்சி அவர்கள், பாண்டியர்களைக் குறை சொல்லலாமா?

      நீக்கு
    2. நான் மதுரை என்பதால் சொல்றீங்க. என்ன இருந்தாலும் பாண்டியர்கள் மிகவும் முற்காலத்தவர். சேர, சோழ, பல்லவர்களை விடவும் அவர்கள் மஹாபாரத, ராமாயணக் காலத்திலேயே இருந்தவர்கள். அப்போதைய பாண்டிய நாடு பிற்காலத்தில் இல்லைனாலும் குலத்தைக் காப்பாற்றி இருக்கணும் இல்லையோ? இலங்கையோடு உறவாடி ரத்தின கிரீடத்தையும், மாலையையும், செங்கோலையும் அங்கே கொண்டு போய் ரகசியமா வைச்சாங்க. அதுவே ஏற்க முடியலை. அது போதாதுனு பிற்காலப் பாண்டியர் காலத்தில் கரையோர மீனவர்களைப் போர்ச்சுகீசியர்களோடு சேர்ந்து மதம் மாற வைச்சதும் பாண்டியர்களால் தான். இதைப் பற்றி விரிவாக மின் தமிழில் ஒரு புத்தகம் டிஜிடலைஸ் பண்ணி, நானும் தட்டச்சி இருக்கேன். படிக்கப் படிக்க மனம் வேதனையால் வயிறு எரியும். மீனவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததால் அவங்க அப்படியே கரையோரம் உள்ளவர்கள் அத்தனைபேரும் வேறு மதம் மாறினாங்க. பனிமய மாதா எல்லாம் அப்போ வந்தது தான். மின் தமிழில் மரபு விக்கியில் இது இருக்கு. நான் எழுதிய பல கட்டுரைகள் அங்கே கிடைக்கும். இப்போ உள்ளேயே நுழைய முடியவில்லை. பலமுறை கேட்டும் இப்போ இருக்கிறவங்க அதைக் கண்டுக்கறதே இல்லை.

      நீக்கு
  16. படங்கள் எல்லாம் மிகவும் நன்றாகத் தெளிவாகப் பொறுமையுடன் எடுத்திருக்கீங்க. நீங்க உட்கார்ந்திருக்கும் கோணத்தில் படம் நன்றாகவே வந்திருக்கு. கல்வெட்டுக்களும் எழுத்துத் தெரிகின்றன.
    இந்த மாலிக்காஃபூர் காலத்தில் தானே அரங்கனைத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள்? எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரை விரிவாக திருவரங்கன் உலாவில் எழுதி இருக்கார். கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. துக்ளக்கின் (அவர் அரசராவதற்கு முன்பு தளபதியாக இருந்தார்) வேலை அது. நம்பெருமாள் மாத்திரமல்ல, பல கோயில்களின் உற்சவர்களும் பதுக்கப்பட்டன, வேறு இடங்களில் பூமியில் புதைக்கப்பட்டன. அந்தக் கதைகளைக் கேட்டால் நமக்கு மிகுந்த வருத்தம் வருவது உறுதி. பாரதி சொல்வார் அல்லவா? கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த விடுதலைப் பயிர் என்று. அதுபோல பெரும் இழப்புகளின் மூலம் நம் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டது.

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. வரலாறும் , படங்களும் அருமை. என் மடி கணினி பழுது அடைந்து உள்ளது , அதனால் பின்னூட்டம் கொடுப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
    1000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது தெரியுமா? என்று அப்போதிருந்த சிறப்புகளை துவாரபாலகர்கள் சொன்னால் பல கதைகள் , பல உண்மைகள் தெரியவரும் .

    பதிலளிநீக்கு
  19. மன்னன் இராஜராஜன் வருவான் என்று காத்திருக்கவில்லை ஆனால் இப்படி காலத்தை வென்று நிற்கும் கோயிலை கட்டிய இராஜராஜனை வியந்து அவரை பற்றி சிந்தித்து கொண்டு அமர்ந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  20. //நான் இராஜராஜனைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று புன்முறுவலோடு சொல்கிறாரோ துவாரபாலக்ர?//
    அந்த முகத்தில் அதுதான் பெருமித புன்முறுவல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!