3.10.25

வெள்ளி வீடியோ : துர்கா லக்ஷ்மி சரஸ்வதி.

 

கல்வியா செல்வமா வீரமா என்ற பாடல் சரஸ்வதி சபதம் படத்தில் நமக்கு எல்லோருக்கும் பரிச்சயமான பாடல். 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியரை வழிபடுவர். இவை துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களின் ஒன்பது வடிவங்களை வழிபடும் காலகட்டமாகும். 

நவராத்திரி முடிந்து ஆயுத பூஜையும் முடிந்து விட்டது. 

இன்று நாம் காண இருப்பது ச ச படத்தில் இடம் பெற்ற கல்வியா செல்வமா வீரமா என்னும்  பாடல். 

முப்பெரும் தேவியர் நாரதர் கலகத்தால் சபதம் போட்டு, , அ தி மு க அணி, தி மு க அணி , த வெ க அணியாக (எது கல்வி, எது செ, எது வீரம் என்றெல்லாம் வம்பு இழுக்காதீங்க!) பிரிந்து சண்டையிட்டு முடிவில் எல்லாமே ஒன்றுதான் என்று முடிந்த படம்! 

படம் : சரஸ்வதி சபதம் 

பாடலை இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 

பாடலைப் பாடியவர் : T  M சௌந்தரராஜன் 

இசை : கே வி மகாதேவன். 
= = = = = = = = =

கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா

ஒன்றில்லாமல்  மற்றொன்று  உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும்  பிரிவாகுமா? 

படித்தவன் கருத்தெல்லாம்  சபையேறுமா
பொருள்  படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா

படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால்  அவனுக் கிணையாகுமா

ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது 
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது

ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? 
 மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது


மூன்று தலைமுறைக்கும் 'நிதி' வேண்டுமா 
('மூன்றாம் தலைமுறை 'நிதி' வேண்டுமா' என்று படிக்கக் கூடாது!) 
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?

தோன்றும் பகை நடுங்கும்  பலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா

கல்வியா செல்வமா  வீரமா?



= = = = = = =

பாபநாசம் சிவன் இயற்றிய அருமையான கீர்த்தனை துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி. 

பாடல் வரிகள் கிடைக்கவில்லை. 

ராகம் : ஆரபி. 



= = = = = = = = = =

(ஆமாம் நெல்லை - இது நிலைய வித்வான் பதிவுதான்! 

= = = = = = = = = = = =

42 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வு அருமை.
    இந்தப்பாடலை மறக்க முடியுமா? காலங்கள் நாட்களுடன் கைக்கோர்த்து ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன.

    /படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? /

    ஆம் நல்ல வரிகள். மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து ஒருவரின் வாழ்வில் இணைந்தால் அவர் எவ்வளவு பாக்கியசாலி. அது நடக்குமா?

    பாடல் காணொளிகளை பிறகு பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பாடல் பகிர்வு மிக அருமை. கண்ணதாசனால் மட்டுமே இத்தகைய த்த்துவப் பாடல்களைக் கொடுக்க முடியும்.

    மூன்றும் ஒருவரிடத்தில் அமையாது. ஆனால் ஒன்றே ஒன்று மாத்திரம் அமைந்திருந்தால் அவனைப் பொருத்த வரையில் வாழ்க்கை ஓடிவிடும்.

    பொதுவா செல்வம் நிறைந்திருப்பவரிடம் மற்ற இருவரும் பணிந்துதான் செல்வர். கல்வி நிறைந்திருப்பவர், செல்வத்தைப் பொருட்படுத்தாமல் கஷ்டமான வாழ்க்கை (நம் பார்வையில்) வாழ்ந்தது உண்டு.

    காணொளி பிறகுதான். என்ன பாடலாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. மீண்டும் வருக.

      நீக்கு
    2. இதென்ன கேள்வி நெல்லை? கல்வியா, செல்வமா, வீரமா என்னும் நாரதராக ஜிவாஜியால் வாயசைக்கப் பட்டு டி எம் எஸ் பாடினது தான். கீழே உள்ளது மஹாராஜபுரம் அவர்களால் பாடப்பட்ட பாபநாசம் சிவன் பாட்டு. இப்போ அதான் கேட்டுட்டு இருக்கேன். மஹாராஜபுரம் நான் மிகவும் ரசிக்கும் பாடகர்

      நீக்கு
    3. ஆம், அவர் சங்கீத மஹாராஜா

      நீக்கு
    4. டி எம் எஸ் = சௌந்தர'ராஜன்'
      சந்தானம் = 'மஹாராஜா' (புரம்)

      நீக்கு
    5. சரஸ்வதி சபதம் என்று காதில் விழுந்ததுமே லட்சுமி சரஸ்வதி பார்வதி மூவரும் நடுத்தெருவில் குழாயடிச் சண்டை போடும் எளிய மக்கள் போல அடித்துக் கொண்டது தான் நினைவுக்கு வருகிறது . எரிச்சலை மூட்டிய படம்..

      நீக்கு
    6. இந்தக் காட்சிகள் எல்லாம் ஒரு விதத்தில் பெண்களை அவமானம் செய்வதாக அமைந்தவை. பெண் எனில் எல்லாவற்றிலும் தான் தான் உயர்த்தி எனச் சொல்வாள், மற்றவர் திறமையை ஏற்க மாட்டாள் என்னும் கருத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள் ஜனரஞ்சகம் என்னும் பெயரில்.

      நீக்கு
  4. படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா

    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    பலம் படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா//

    பொருள் பொதிந்த வரிகள்! உண்மை

    கீதா

    பதிலளிநீக்கு
  5. முதல் பாடல் அருமையான வரிகளுடனான பாடல். கண்ணதாசன் - சும்மாவா...அவர் இப்படியான பொருள் பொதிந்த தத்துவம் அடங்கிய பாடல்கள் நிறைய!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். முன்பு பாடியதுண்டு. இப்ப நஹின். தொண்டை அவுட்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நான், ஆண்கள் பாடிய ஆல்பமிலிருந்துதான் கற்றுக் கொள்வேன். ஏகலைவி நான்!!!!!!ஒரு சில பாடல்கள் மட்டுமே பெண்கள் பாடியதிலிருந்து.

      ஆண்கள் பாடியதிலிருந்துகற்றுக் கொள்ள அவங்க ஸ்ருதி யும் நம்ம ஸ்ருதியும் வேறுபடும் என்பதால் அவங்க ஸ்ருதிக்கு நிகராக பெண்களின் ஸ்ருதிக்கு என்னால் எடுக்க முடியாது என்பதால் எனக்கு வரும் ஸ்ருதிக்கு - 5.5 அல்லது 5 கட்டைக்கு மாற்றிப் பாடும் போது கொஞ்சம் கடினமாக இருந்தது.

      இப்பலாம் விட்டுப் போச்சு. கற்றுக் கொண்டதையே பாட முடிவதில்லை

      கீதா


      நீக்கு
    2. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    3. இந்த, கட்டை, சுருதி, இவையெல்லாம் எனக்குப் புரிவதில்லை. ஆனாலும் முன்பு எனக்கு கரல் வளம் இருந்தது. இப்போது ஸ்தாயியெல்லாம் தடுமாறும் வராது. ஆமாம் ஸ்தாயிக்கு தமிழ் என்ன?

      நீக்கு
  7. // படித்தவன் படைத்தவன் யாராயினும்
    பணம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? //

    சிறப்பு...
    கவியரசர் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் தலைமுறைக்கும்
    நிதி வேண்டுமா
    நீதி வேண்டுமா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதிதான் வேண்டும்!

      நீக்கு
    2. நீதி வேண்டும்னா பெர்மன்ன்டா ஜெயில்ல களிதான் திங்கணும். அவங்களுக்கு எப்போதும் நிதி வேண்டும்.

      நீக்கு
  9. மகாராஜபுரத்தின் இசை மிக அருமை. நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது

    பதிலளிநீக்கு
  10. எனக்குச் சில நேரங்களில், வியாழன் பதிவைத் தேற்றுவதற்காக ஶ்ரீராம் லீவு போடுகிறாரோ என்று தோன்றும். அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு புக்கர் சென்றுவிட்டு இரண்டு மூன்று ஞாயிறு பதிவுகள் அளவுக்குக்கூடப் படமெடுக்கவில்லையே? பாஸ் மற்றும் அண்ணன் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரே பதில் அளிப்பார் என்று நினைக்கிறேன். புக்கர் ??? அது என்ன?

      நீக்கு
    2. முக்கியமான வேலை ஏதேனும் வந்திருக்கும். தவிர்க்க முடியாமல் போயிருப்பார். அதனால் என்ன நெல்லை? புக்கர் என்றால் ஹரிஹர புக்கர்களின் சாம்ராஜ்யம் பற்றிச் சொல்றீங்களோ?

      நீக்கு
    3. கீசா மேடம் சரியான பாயின்டைப் பிடிச்சுட்டாங்க. ஹரிஹர்தான்

      நீக்கு
  11. கண்ணதாசனின் முதலாவது பாடல் செளந்தரராஜன் குரலில் சிறுவயதில் இருந்தே கேட்டபாடல். எங்கள் அண்ணா அப்பொழுது "மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது" என்ற வரிகளைத்தான் பாடல் கேட்ட போது கூறுவார்.

    இரண்டாவது பாடல் படிக்கும் காலத்தில் எமது சங்கீத ஆசிரியர் பாடிக் காட்டிய பாடல்.

    இரண்டும் அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  12. இரு நல்ல பாடல்களுடன் இந்த வார வெள்ளிக்கிழமை இனிமையாக நிறைவடைந்திருக்கிறது. கேஜிஜி அவர்களின் தேர்வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. பாடல் பகிர்வு இரண்டும் நல்ல தேர்வு.
    அருமையான பாடல் . கண்ணதாசன் வரிகள் எல்லாம் அருமை.
    //பாபநாசம் சிவன் இயற்றிய அருமையான கீர்த்தனை துர்கா, லக்ஷ்மி சரஸ்வதி. //

    ஆமாம், அருமையான கீர்த்தனை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!