14.12.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 33 தஞ்சை அரண்மனை வளாகம் – தர்பார் ஹால்::நெல்லைத்தமிழன்


 

இதுதான் மராட்டியர்களின் வரலாற்றைப் பார்ப்பதற்கான தகுந்த இடம் என்று எனக்குத் தோன்றுகிறது. தஞ்சையை மராட்டியர்கள், சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான ஏகோஜி கைப்பற்றியது சூழ்ச்சியினால், நம்பிக்கை துரோகத்தினால் என்றுதான் வரலாறு சொல்கிறது

விஜயராகவ நாயக்கர் வெற்றி பெற்றதும், போர்ச்செலவுக்கான பணத்தை ஏகோஜி கேட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயராகவ நாயக்கர் இறந்ததாகவும் சிலர் எழுதியிருந்தாலும், பீஜப்பூர் சுல்தானின் நம்பிக்கைக்குரிய ஏகோஜி, தந்திரத்தால் துரோகம் செய்து விஜயராகவ நாயக்கரை சுல்தானின் தளபதிகள் துணையோடு கொன்று தஞ்சைப் பகுதிக்கு அரசனானார். (கிபி 1675) துரோகம் செய்த ஏகோஜி, தன் கடைசி காலத்தில் மன அமைதியை இழந்து கிபி 1683ல் மரணமடைந்தார். இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி இறந்தார்.

1684ல் ஏகோஜியின் மூத்த மகன் சாஹஜி தஞ்சை அரசராக முடிசூட்டப்பட்டார். தஞ்சை மராட்டிய மன்னர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவர் இவர். சிறந்த கல்விமான். நிறைய புலவர்களை ஆதரித்தவர். இவருடைய காலத்தில் இசை, நாட்டியம் போன்றவை பொற்காலம் கண்டன. 1712ல் இவர் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இயற்கை எய்தினார்சாஹஜிக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் சரபோஜி ஆட்சிக்கு வந்து 16 ஆண்டுகள் அரசாட்சி செய்தார். அதன் பிறகு அவரது தம்பி துளஜா (துக்கோஜி) அரசராக ஆகி சுமார் 7 வருடங்கள் அரசாண்டார். சாஹஜி போலவே துளஜாவும் பன்மொழிப் புலமையும், கலைகளை ஆதரிக்கும் குணமும் கொண்டிருந்தார்.  

அரசர் துக்கோஜி மறைந்த பிறகு மூன்று ஆண்டுகள் தஞ்சையில் குழப்பம் நிலவியது. துக்கோஜியின் மூத்த மகன் இரண்டாம் வெங்கோஜி என்ற பெயரில் ஒரு வருடம் ஆண்டார். அப்போது சந்தா சாஹிப்புடனான கடுமையான போரை நடத்தினார். இரண்டாம் வெங்கோஜி மறைந்ததும் அவரது மனைவியான சுஜான்பாயி அரசாட்சி செய்தார். அவரது தளபதியாக செய்யது/சையது என்பவர் இருந்தார். இதற்கிடையில் முதலாம் சரபோஜியின் முறை தவறிய மகனான காட்டுராஜாஎன்றழைக்கப்பட்டவர், அரியணைக்கு உரிமை கோரினார். இதற்காக பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும், தளபதி செய்யதுவின் உதவியையும் பெற்றுக்கொண்டார். கொஞ்சம் அசந்த நேரத்தில் சுஜான்பாயி ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு காட்டுராஜா’, சாகுஜி என்ற பெயரில் அரசரானார். இவர் நடத்தை மிக மோசமாக இருந்ததால், இவர் உண்மையிலேயே சரபோஜிக்குப் பிறந்தவர்தானா என்று அரசவையில் எல்லோருக்கும் ஐயம் ஏற்பட்டது. பிறகு துக்கோஜியின் ஆசை நாயகிக்குப் பிறந்த (துக்கோஜிக்கு ஆறு மனைவியர் உண்டு. அதில் மராட்டியர் வழக்கப்படி மணந்துகொண்ட அன்னபூர்ணா என்பவரின் மகன் பிரதாபசிம்மன். ஆறாவது மனைவி என்பதால் ஆசைநாயகி என்று குறிப்பிடுகின்றனர்) பிரதாபசிம்மன் என்பவரை தளபதி சையது அரசனாக்கினார்.  

இந்தக் குறுகிய மூன்று ஆண்டுகளைப் பற்றிப் படிக்கும்போது, அரசன் என்பவன் தகுந்தவனாக இல்லாதிருந்தால், அவனைக் கைப்பாவையாக்கி ஆட்சி புரிய ஏதேனும் அமைச்சரோ இல்லை தளபதியோ முற்படுவான் என்பது தெரிகிறது. பொதுவாக அமைச்சர் என்பவர் அறிவாளியாக இருக்கவேண்டும் என்பதால் வீரம் என்பது முக்கியமான தேவை அல்ல. அதனால் பொதுவாக தளபதிகள்தாம் அரசனைக் கைப்பாவை ஆக்குவதற்கு முயல்வார்கள்அதன்படி தளபதி சையது பிரதாபசிம்மனை மன்னனாக்கினான். (அதற்குத் துணை புரிந்தான்). ஆட்சிக்கு வந்த தும் பிரதாபசிம்மன் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிவந்தது. அவனது ஆட்சிக்கு பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகேப் போன்றவர்களும், ஆங்கிலேயக் கம்பெனியும் ஆபத்தாக வந்தன. கிட்டத்தட்ட 24 வருடங்கள் ஆண்ட பிரதாபசிம்மன் ஆட்சி தஞ்சை மராட்டியர்கள் ஆட்சியில் மிக முக்கியமான காலம்.

பிரதாபசிம்மன் தலையாட்டும் பொம்மையல்ல என்பதை உணர்ந்த தளபதி சையது, ஆர்காடு நவாப் சந்தாசாகிப்புடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டார். இவர்களுடன் காட்டுராஜா என்றழைக்கப்பட்ட சாகுஜியும் சேர்ந்துகொண்டார். அதனால் முதலில் சையதின் மீது கண் வைத்து, அவரைச் சிறைப்பிடித்து கொன்றுவிட்டார் பிரதாபசிம்மன்தஞ்சை அரசுக்கு உறுதுணையாக தானைத்தலைவர் மானோஜி, டபீர் பண்டிதர் போன்றோர் உதவினர். முகலாயர்களின் நெருக்குதல் அதிகமானபோது, மராட்டியத்திலிருந்து பத்தாயிரம் வீரர்கள் உதவிக்கு வந்தனர். முகலாயர்களிடமிருந்து அரசைப் பாதுகாக்க வேண்டி, பிரெஞ்சுக்காரர்களுக்கு காரைக்காலையும், டச்சுக்காரர்களுக்கு நாகப்பட்டினத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலைமை வந்தது. இதற்கிடையில் கிளைவ் போன்றோர் இரண்டாம் போரில் பிரதாபசிம்மனிடமிருந்து தேவிப்பட்டினத்தைக் கைப்பற்றினர். இதுவே கிழக்கிந்தியக் கம்பெனி தென்னாட்டில் அரசுக்கட்டிலில் ஏற வழி வகுத்தது. பிரதாபசிம்மன் இறுதிக்காலத்தில் தஞ்சை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடங்கிவிட்ட து என்று கொள்ளலாம். 1763ல் பிரதாபசிம்மன் மறைந்தார்.

பிரதாபசிம்மன் மகனான இரண்டாம் துளஜா அரசனாகப் பட்டமேற்றார். இவர் காலத்தில் தஞ்சை கடுமையான சூழல்களைச் சந்தித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் சூழ்ச்சியால் நவாப் தஞ்சைக்கு அரசனான தும், துளஜா மூன்று வருடம் சிறையில் இருந்ததும், பிறகு மீண்டும் ஆங்கிலேயர்களின் கோர்ட் அவரை அரசனாக்கியதும் (கிழக்கிந்தியக் கம்பெனி நவாப்புடன் சேர்ந்து செய்த சதி செல்லாது என்று தீர்ப்பு), அதன் பிறகு திப்புசுல்தான் படையெடுத்து பல பகுதிகளைச் சூறையாடியதும், ஆறு மாதங்கள் தஞ்சைக்கு அரசனானதும், பிறகு துளஜா, ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தஞ்சையைக் காக்க முயன்றதும் நடந்தது.   இதனால் இரண்டாம் துளஜா, பெயருக்கு மாத்திரம் மன்னர், படை ஆங்கிலேயப்படை என்றானது.

1787ல் இரண்டாம் துளஜா மறைந்ததும், பிரதாபசிம்மனின் மற்றொரு மகனான அமரசிம்மன் அரசனானதும், இரண்டாம் துளஜாவின் சுவீகாரபுத்திரன் என்று சொல்லப்பட்ட இரண்டாம் சரபோஜி, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மானிய பாதிரியார் ஸ்வார்ட்ஸின் உதவியுடன் 1798ல் தஞ்சைக்கு அரசனானார்இதற்கு உதவி செய்தது, அமரசிம்மனின் ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வுஇரண்டாம் துளஜா ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, தஞ்சை நகரம் மாத்திரம் இரண்டாம் துளஜாவுக்கும், மீதி சோழ மண்டலம் முழுமையும் ஆங்கிலேயர்களுக்குமானது. அதற்கு ஈடாக ஒரு லக்ஷம் வராகனும், வருட வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியும் தஞ்சை அரசருக்கு என்று ஒப்பந்தமானது. இவரது காலத்தில்தான் (இரண்டாம் சரபோஜி) தஞ்சை அரண்மனை விரிவுபெற்றது, நிறைய கட்டிடங்கள் வந்தன, சரசுவதி மஹால் நூலகம் விரிவுபடுத்தப்பட்டது. 1832ல் இவர் மறைந்தார். இவருடைய மகன் இரண்டாம் சிவாஜி என்ற பெயரில்  1832ல் அரசாட்சிக்கு வந்து 23 வருடங்கள் தஞ்சை நகர அரசராக இருந்தார். இவருக்கு வாரிசு இல்லாததால், ஆங்கிலேயச் சட்டப்படி தஞ்சை மராத்திய அரசு முடிவுக்கு வந்து தஞ்சை, சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயர் வசம் வந்தது

 

தஞ்சை மராத்திய அரசின் கடைசி அரசர் இரண்டாம் சிவாஜி (1832-1855)

A statue of a person and a child

AI-generated content may be incorrect.

இரண்டாம் சரபோஜி மன்னர் கும்பகோணம் சக்ரபாணி கோயிலுக்கு நிறைய பணிகள் செய்துள்ளார். அவருடைய திருவுருவம் (பக்கத்தில் இருப்பது அவரது மகளா இல்லை மனைவியா என்பது தெரியவில்லை) சக்ரபாணி கோயில் முன் மண்டபத்தில் (கர்பக்ரஹம் முன்பு உள்ள மண்டபம்) இருக்கிறது. கீழே உள்ளவை சக்ரபாணி கோயிலின் தோற்றம்.

A large stone building with a dome and a stone structure

AI-generated content may be incorrect.

கும்பகோணம் சக்ரபாணி கோயில். 

A group of statues in a temple

AI-generated content may be incorrect.

கும்பகோணம் சக்ரபாணி கோயில் உட்புறம். இங்கும் சார்ங்கபாணி கோயிலில் இருப்பதுபோன்றே கர்பக்ரஹத்துக்கு மூலவரைச் சேவிக்கச் செல்ல இரு வாயில்கள் உண்டு. ஆறு மாதம் ஒரு வாசலும், அடுத்த ஆறு மாதம் இன்னொரு வாசலும் திறப்பார்கள். (இதனைப் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது சூரியனின் பாதையை ஒட்டி நடக்கும் மரபு. தட்சிணாயனம், உத்தராயணம் என்று குறிப்பிடுவர். இது போன்று இரண்டு வாசல்கள் உள்ள கோயில்கள் சில உண்டு. திருவெள்ளறை புண்டரீகாட்சர் கோயில், கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் என்ற இரண்டு வைணவ திவ்யதேசங்கள் சட் என்று என் மனதில் தோன்றுகின்றன)

தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). தஞ்சை அரசர்களின் (மராத்திய, அனேகமாக அதற்கு முந்தைய நாயக்க மன்னர்களும் இங்குதான் இருந்திருக்க வேண்டும்) அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் ஹால் என்று சொல்லப்படும் அரசவையின் படங்களைத்தான் இந்த வாரம் நாம் காணப்போகிறோம்.

தஞ்சை அரண்மனை நுழைவாயில்ரொம்ப பெரிய வளாகம்.

A map of a city

AI-generated content may be incorrect.

 

Thanjavur Maratha Palace Thanjavur Maratha Palace thanjavur stock pictures, royalty-free photos & images

நான் எங்கு இருந்தாலும், என் தலைவன் சிவனைப் பார்த்துத்தான் இருப்பேன். இவங்க என்னடான்னா வெட்ட வெளியில் என்னை உட்கார வைத்துவிட்டார்கள்.

Old Maratha Palace in Thanjavur, Tamil Nadu, India Old Maratha Palace in Thanjavur, Tamil Nadu, India. One of the tourist destinations of historical importance in Thanjavur. thanjavur stock pictures, royalty-free photos & images

ஆளரவமற்ற மைதானமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இங்கு ஏகப்பட்ட படைவீரர்கள், குதிரையிலும் நடந்தும் காவல் காத்துக்கொண்டிருந்ததைப் பல நூற்றாண்டுகளாகப் பார்த்திருக்கிறோம். இப்போதான் சப்தம் இல்லாமல் கொஞ்சம் அமைதியாக இந்த இடம் இருக்கிறது என்று அந்தக் கட்டிடங்கள் சொல்கின்றனவோ?

A building with a sign in the middle

AI-generated content may be incorrect.

நூல்கள் ஏட்டுச் சுவடிகள் போன்றவற்றைச் சேகரிக்கவேண்டும் என்று சரபோஜி மன்னருடைய எண்ணத்தால் ஏற்பட்ட நூலகம் இது

A building with a sign and a gate

AI-generated content may be incorrect.

காலத்தால் பழைய தோற்றம் தருகிற அரண்மனை.

Thanjavur Maratha Palace Thanjavur Maratha Palace thanjavur stock pictures, royalty-free photos & images

A statue of a bull on the ground

AI-generated content may be incorrect.

நான் எங்கிருந்து வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

A colorful ornate building with columns and a red pole

AI-generated content may be incorrect.

 

Colorful paintings on ceiling wall of Darbar Hall of the Thanjavur Maratha palace, Thanjavur, Tamil Nadu, India Colorful paintings on ceiling wall of Darbar Hall of the Thanjavur Maratha palace, Thanjavur, Tamil Nadu. Known as residence of the Bhonsle family which ruled the Tanjore region from 1674 to 1855 thanjavur stock pictures, royalty-free photos & images

மண்டபத்தில் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே மராத்தியர் காலத்தைச் சேர்ந்தவை.

A colorful ornate building with columns

AI-generated content may be incorrect.

 

A ornate building with columns and pillars

AI-generated content may be incorrect.

 

A colorful ornate building with columns

AI-generated content may be incorrect.

 

Colorful paintings on ceiling wall of Darbar Hall of the Thanjavur Maratha palace, Thanjavur, Tamil Nadu, India Colorful paintings on ceiling wall of Darbar Hall of the Thanjavur Maratha palace, Thanjavur, Tamil Nadu. Known as residence of the Bhonsle family which ruled the Tanjore region from 1674 to 1855 thanjavur stock pictures, royalty-free photos & images

மாட த்தின் விதானம் எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது.

A colorful ceiling with a circular design

AI-generated content may be incorrect.

 

A colorful decorated building with many carvings

AI-generated content may be incorrect.

 

A ornate building with many carvings

AI-generated content may be incorrect.

 தர்பார் ஹாலில் பார்க்கவேண்டியவை இன்னும் இருக்கின்றன. அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

 

29 கருத்துகள்:

  1. நம்பினால் நம்புங்கள் முடிஞ்சு போச்சா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். மூன்று வாரங்கள் போதாதா?

      நீக்கு
  2. நெல்லை, மராத்தி அரசர்கள் இங்கு வந்து தமிழ் கற்றார்களோ? தமிழ் நிலத்தில் எப்படி மொழி தெரியாமல் அரசாண்டார்கள் என்று எனக்குத் தோன்றும்.

    சிறந்த கல்விமான். நிறைய புலவர்களை ஆதரித்தவர். இவருடைய காலத்தில் இசை, நாட்டியம் போன்றவை பொற்காலம் கண்டன. //

    அப்படி என்றால் நம் மொழியும் கற்றிருப்பார்கள்னு தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசர்களுக்கு மண்ணின் மொழியைக் கற்றுத்தந்திருப்பார்கள். அதுவும் தவிர அரசரனுக்கு கலைகளில் ஆர்வம் இருந்தால் அவைகளை வளர்ப்பதில் நேரம் செலவழிந்திருக்கும்.

      நீக்கு
  3. படங்கள் அருமை நெல்லை! ஓவியங்கள் சற்றும் மங்காமல் இருக்கின்றனவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார். இப்போ இன்னும் அந்த இடத்தைச் சீர்படுத்துகிறார்கள்.

      காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் பல கோயில்களில் இத்தகைய ஓவியங்கள் அழிந்துபட்டிருக்கின்றன. ஓவியர் மணியம் வரைந்ததுபோல மிக அழகிய பெண்ணின் முகத்தை கைலாசநாதர் கோயிலில் பார்த்தேன் (ஓவியமாக. மற்றப் பகுதிகள் அழிந்துவிட்டன)

      நீக்கு
  4. /தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). /
    டிக்ஷனரி கொடுக்கும் அர்த்தம் கீழே!
    தாவு2 பெ. [வ.வ.] 1: (ஒருவருடைய) பலம்; சக்தி; strength; energy. வேலையை முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. இது எந்த மொழியிலிருந்து வந்திருக்கும்?

      நீக்கு
  5. சரபோஜி மன்னர் பெயர் மட்டும் ஆங்காங்கே தென்பட்டு பரிச்சயமான பெயர்!

    சந்தா சாஹிப்பு// இதுவும் பரிச்சயமான பெயர். ஆனால் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியலை.

    ‘காட்டுராஜா’ // அட அழகான பெயராக இருக்கிறதே!!! நாட்டு ராஜா இல்லைன்றதால காட்டில் காட்டை ஆண்டு இருந்தாரோ?!! முறைதவறிய என்றும் இருக்கிறதே.

    எல்லா ஜி க்களும் குழப்புகிறார்கள்! ஹாஹஹாஹா

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா ஜி க்களும் குழப்புகிறார்கள்! //அதனால்தான் இங்கே யாரோ ஒருவர் உங்களை கீதாஜி என்று அட்ரஸ் பண்ணினார்போலும் ;-)

      நீக்கு
    2. சிரித்துவிட்டேன்!!! வாங்க திவாமா அண்ணா! பார்த்து ரெண்டு மூணு நாளாச்சோ? அந்த யாரோ ஒருவர் அது நீங்கதான்னு எல்லாருக்கும் தெரியுமே!!!!

      ஆ! அப்ப நான் குழப்பவாதியா!!!!! ...என்ன குழப்பமோ?! சபையைக் கூட்டி ஆலோசனை நடத்தணும்......ஹாஹாஹா

      ஏன்னா இங்க யாரும் என்னை 'ஜி' போடமாட்டாங்களே. நான் ரொம்பச் சின்னப் பொண்ணு!

      கீதா

      நீக்கு
    3. எந்த மன்னர் நிறைய செயல்களைச் செய்திருக்கிறாரோ, அவரது பெயர் எல்லோருக்கும் பரிச்சயமாகத்தான் இருக்கும். அரசனுக்கு ராஜகுடும்பம் அல்லாத ஆசைநாயகிகள் இருந்து அவர்களுக்குக் குழந்தை பிறந்தால், பொதுவாக அழித்துவிடுவதுதான் வழக்கம்.

      நீக்கு
    4. எனக்குத் தெரிந்து கீதா ரங்கனை, கீதாஜி என அழைப்பவர் தில்லி வெங்கட் நாகராஜ்.

      நீக்கு
  6. அரசன் என்பவன் தகுந்தவனாக இல்லாதிருந்தால், அவனைக் கைப்பாவையாக்கி ஆட்சி புரிய ஏதேனும் அமைச்சரோ இல்லை தளபதியோ முற்படுவான் என்பது தெரிகிறது.//

    இது இப்போதைய காலத்துக்கும் பொருந்தும்.

    'தளபதி' என்ற சொல்லைப் பார்த்ததும் என்னென்னவோ வருது!!!! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட விஷயம் இது. விஜயகாந்தின் சாயலில் நடிக்கவந்த சரவணனுக்குத்தான் முதலில் இளைய தளபதி பட்டம் சேலத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்தின் கவர்ச்சியால் மற்றவர்களும் அதனை எடுத்தாண்டுகொண்டார்கள்.

      நீக்கு
  7. காலை வணக்கம், வாத்யாரே!
    படங்கள், விளக்கங்கள், வரலாறு எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சிய அபாரம்!

    BTW, தாவு என்பது இந்த இடத்தில் Strength. தாவு தீர்ந்து விட்டது- Got fatigued, tired

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க ஶ்ரீநிவாசன் சார் மிக்க நன்றி. ஒவ்வொரு அரச குலத்தின் வரலாறும் ரசனையாகத்தான் இருக்கு, இவங்களும் சாதாரணவர்களே என்ற எண்ணமும் வருகிறது. உறவைப் பயன்படுத்த மனைவியைத் தூதனுப்புவதும் நடந்திருக்கிறது..

      அனுமன், கடலைத் தாவுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது என எண்ணியிருப்பாரோ

      நீக்கு
    3. அனுமன் தூய தமிழ் பேசியிருந்தால் அப்படி சொல்லியிருக்கக்கூடும் :-) தாவு- வலிமை (என்ற பொருளில்; தொல்காப்பியம் சொல்லதிகாரம் 344 வது வரி, apparently).

      //இவங்களும் சாதாரணவர்களே என்ற எண்ணமும் வருகிறது.// வாத்யாரே, எல்லா காலத்திலும், அரசன் என்பவன் ஊரிலேயே அல்லது நாட்டிலேயே ஆகப்பெரிய ரௌடி! எவ்வளவு பூசி மெழுகினாலும், உண்மை இதுதான். அதனால்தான், ஒரு அரசன் கொஞ்சம் டீசெண்டாக இருந்துவிட்டால், ஆஹா ஓஹோ பொற்காலம் என்றெல்லாம் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்; அரசனில்லாமல் தலைக்குத்தலை ரவுடித்தனம் செய்வதை அ'ராஜ'கம் என்று வடமொழியில் சொல்கிறார்கள்.

      நீக்கு
    4. அட! ஹைஃபைவ்! மீக்கும் இந்தக் கருத்து உண்டு. இதை இப்போதையதற்கும் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. காலத்தின் அடிப்படையில் செயல்பாடுகள்தான் மாறுபடுகின்றன ஆனால் அடிப்படை என்னவோ அதேதான்.

      கீதா

      நீக்கு
  8. பொதுவாக அமைச்சர் என்பவர் அறிவாளியாக இருக்கவேண்டும்//

    நெல்லை, சிரித்துவிட்டேன் இப்போதைய நிலை மனதில் வந்ததும்!

    ஆட்சிக்கு வந்த தும் பிரதாபசிம்மன் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிவந்தது. அவனது ஆட்சிக்கு பிரெஞ்சுக்காரர்களும், சந்தாசாகேப் போன்றவர்களும், ஆங்கிலேயக் கம்பெனியும் ஆபத்தாக வந்தன. //

    இப்போது இந்த சாந்தாசாகேப்பின் பங்கு வாசித்தது நினைவுக்கு வந்துவிட்டது. அது உங்களின் அடுத்த வரியில் வந்துவிட்டது

    //பிரதாபசிம்மன் தலையாட்டும் பொம்மையல்ல என்பதை உணர்ந்த தளபதி சையது, ஆர்காடு நவாப் சந்தாசாகிப்புடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டார்.//

    கீதா






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசனுக்கு ஆலோசனைகள் அளிக்கவேண்டும் என்பதால் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருக்கவேண்டும், அந்தக் காலத்தில். இப்போ, கலெக்‌ஷன் ஏஜெண்டுகளின் காலம்.

      நீக்கு
  9. அதற்குப் பின்னான வரலாறு நினைவுக்கு வரத் தொடங்கியது, நெல்லை. ஹப்பா கொஞ்சம் பரவால்லைனு தோன்றியது. உங்கள் வரிகளும் தொடர்ந்ததா....

    இவரது காலத்தில்தான் (இரண்டாம் சரபோஜி) தஞ்சை அரண்மனை விரிவுபெற்றது, நிறைய கட்டிடங்கள் வந்தன, சரசுவதி மஹால் நூலகம் விரிவுபடுத்தப்பட்டது.//

    இதுவும் ஓரளவு நினைவில்..

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சாஹூஜி பெயரைப் பார்த்ததும் சாம்பார் னு பெயர் வந்த கதை நினைவுக்கு வருது. பாருங்க எப்பவும் 'திங்க' தான் மனசுல!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தஞ்சை மராட்டிய மன்னர்கள்
    வரலாறு அருமை..

    நலம் வாழ்க

    பதிலளிநீக்கு
  12. //பொதுவாக அமைச்சர்
    என்பவர் அறிவாளியாக
    இருக்கவேண்டும்///

    ம்....

    இன்றைக்கு!?

    பதிலளிநீக்கு
  13. சக்கரபாணி கோவிலின் முன் உள்ள அந்த வட்ட வடிவ மண்டபம் அழகு சேர்க்கிறது.

    தஞ்சை மராட்டிய அரசர்களின் வரலாற்றைப் படித்து அதை மிகச் சுருக்கமாக எழுதுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது (அப்படீன்னாக்க?). //

    சுருக்கமா நீங்க எழுதினதை வாசிக்கவே குயப்பமா கீது.....உங்களுக்கு எழுத ரொம்பவே எனர்ஜி தேவைப்பட்டிருக்கும், நெல்லை. Kudos!

    //நான் எங்கு இருந்தாலும், என் தலைவன் சிவனைப் பார்த்துத்தான் இருப்பேன். இவங்க என்னடான்னா வெட்ட வெளியில் என்னை உட்கார வைத்துவிட்டார்கள்.//

    நெல்லை, அங்க மட்டுமில்லை இங்கயும் கூட ஆங்காங்கே பார்க்க முடிகிறது தனியாக. இங்கே நம்ம ஏரியாவில் முன்னாடி கோவில் இருந்திருக்கும் போல நந்தியாண்டவரை மட்டும் நடைபாதையிலிருந்து எடுக்காமல் ரோட்டில் வண்டிகள் ஒதுங்கும் இடத்தில் விட்டு வைச்சிருக்காங்க. ஒரு கடையின் முன்னர். நம்ம பார்த்து நடக்கலைனா மோதிக் கொள்ளும் வாய்ப்பு.

    அதே போல பல இடங்களில் பார்க்க முடிகிறது.

    இப்படிச் சொல்லலாம், தலைவன் ஏரியாங்கோ...அதுக்கு அத்தாட்சியா நான்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அந்தக் கட்டிடங்கள் நிறைய வரலாற்று நினைவுகளைத் தாங்கி நிற்கின்றன. அவற்றைப் பார்க்கும் போதே சிலவற்ற உணரமுடியும். அந்தப் பழமை தான் என்ன அழகு இல்லையா?

    அரண்மனையின் அழகு, தர்பார் ஹாலின் கலைவடிவம், ஓவியங்கள், விதானம் எல்லாம் மனதைக் கவர்கின்றன.

    எப்பவோ பார்த்தது....நெல்லை, உடனே கணக்குப் போடாதீங்க!!!!!

    படங்கள் எல்லாம் சூப்பர், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!