சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி ஒப்படைப்பு: அரசு பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு குவியுது பாராட்டு
கமுதி: சாயல்குடியில் சாலையில் கிடந்த தங்கச் செயினை போலீஸில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் பாராட்டி கவுரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வீரபாண்டி, சந்தோஷ், மகாராஜன் ஆகியோர் நேற்று( டிச.,08) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் தங்கச்செயினை கண்டெடுத்தனர். அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று பரிசோதனை செய்ததில், அந்த நகை தங்கம் தான் என்றும் அதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் எனவும் தெரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்களும் அந்த தங்க நகையை சாயல்குடி போலீஸ் ஸ்டேசன் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் இந்த செயலைக் கண்டு, அவர்களை பாராட்டிய போலீசார், இன்று காலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பாக 3 மாணவர்களுக்கும் வாழ்த்து ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தனர். அவர்களுக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
============================================================================

புதுடில்லி: ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். இன்று (டிச.,09) டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; செயற்கை நுண்ணறிவு துறையைப்பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன. சத்ய நாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு அந்தப் பதவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
=============================================================================================
பார்லிமென்ட்டில் ஒரு நேரத்தில் ப சிதம்பரம் இதுபற்றி கிண்டல் அடித்தது நினைவுக்கு வருகிறது. அவர் பேச்சுக்கு சுற்றி இருந்தோர் கைதட்டி ஆரவாரித்து சிரித்தனர்!
**********
புதுடில்லி: உலகின் மிகப்பெரிய, விரைவான பணம் செலுத்தும் வழியாக யு.பி.ஐ., முறையை ஐ.எம்.எப்., அமைப்பு அங்கீகரித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஐ.எம்.எப்., அமைப்பு, 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சில்லரை பணம் செலுத்தும் முறை' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு நடத்தியது. உலகின் மற்ற பணம் செலுத்தும் முறைகளைவிட, இந்தியாவின் யு.பி.ஐ., முறை மிகப்பெரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேர்ல்டுவைடு பிரைம் டைம் பார் ரியல் டைம் 2024 (ஏ.சி.ஐ., வேர்ல்டு வைடு) அறிக்கையின்படி, உலக அளவில் ரியல் டைம் பேமென்ட் முறைகளில் 49 சதவீத பங்கை யு.பி.ஐ., பிடித்திருக்கிறது. இந்தியாவில் 12,930 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரேசில், தாய்லாந்து, சீனா, தென்கொரியா நாடுகளின் பரிவர்த்தனைகள், இந்தியாவைவிட மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.
=======================================================================================================================================================
நான் படித்த புத்தகம்
பானுமதி வெங்கடேஸ்வரன் திசை மாறிய பறவைகள்:
ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா
காலச்சக்கரம் நரசிம்மா எழுதியிருக்கும் மர்ம நாவல். காலச்சக்கரம் நரசிம்மா என்றாலே அமானுஷ்யம், மர்மம் எல்லாம் சகஜமே. இந்த நாவலில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு கதையை சொல்லி செல்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது, ஆரம்பமே ஜெட் வேகம். பிரபல கர்நாடக இசைப் பாடகியான சுனந்தா சூரஜ் என்பவருக்கு நள்ளிரவில் பித்துக்குளி என்பவரிடமிருந்து ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனை எடுத்தால் 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடல் ஒலிக்கிறது. மறுநாள் கச்சேரிக்கு செல்லும் பொழுது அவள் கடத்தப்படுகிறாள்.
அதையடுத்து கேசவ் என்னும் கர்நாடக இசைப் பாடகர், கர்நாடக இசை பாடிக்கொண்டிருந்து, பின்னர் திரை இசைக்குத் தாவி விட்ட மால்யதா என்னும் பாடகி, சியாம்(SIAM) என்று அழைக்கப்பட்ட சவுத் இந்தியா அனுராக் அகாடமி ஆஃப் மியூசிக்கின் தலைவர் கிரிதரன் போன்றவர்களும் அடுத்தடுத்து கடத்தப் படுகிறார்கள். இதில் கேசவிற்கும் பித்துக்குளி என்னும் காலர் ஐடியிலிருந்து ஃபோன் வருகிறது. அதே 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடல் ஒலிக்கிறது. மற்ற இருவரும் கூட கடத்தப்படும் முன் 'பிபரே ராம ரசம்..' என்னும் பாடலை கேட்கிறார்கள். யார் அந்த பித்துக்குளி? இந்த நால்வருக்கும் அந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம்? என்பதையெல்லாம் விறு விறு விறுவென்று கொஞ்சம் கூட தொய்வில்லாமல் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்.
சதாசிவ பிரும்மேந்திரரால் இயற்றப்பட்ட பிபரே ராம ரசம் என்னும் பாடல் ஆஹிர் பைரவ் என்னும் ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்த பாடலாம். அந்த கால ஆஹிரி ராகமும், இந்தக் கால பைரவி ராகமும் சேர்ந்ததுதான் ஆஹிர் பைரவ் ராகம். ஆஹிரி ராகம் பாடினால் சோறு கிடைக்காதுஎன்று ஒரு நம்பிக்கை, பைரவி மனதை வருத்தும் ஒரு ராகம். ஆஹிர் பைரவி ராகம் மனதை உருக்கி தற்கொலை எண்ணத்தைக் கூட தூண்டுமாம். இப்படி கேள்விப்படாத ஒரு தகவலை அறிந்து கொள்கிறோம்.
இந்தக் கதையை படிக்கும்பொழுது யாரை குறிப்பிடுகிறார்? இவரையா? அவரையா? என்ற கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியவில்லை. கர்நாடக இசை புனிதமானது, அதை மலினப்படுத்தக் கூடாது என்று கருதுகிறார் என்றும் புரிகிறது.
நல்ல சுகமான கச்சேரியை கேட்ட மாதிரியான அனுபவத்தை தரும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம்! புஸ்தகாவில் கிடைக்கிறது.
திசை மாறிய பறவைகள் விமர்சனம் நன்று. படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஇன்றைய பாசிடிவ் செய்திகள் பாராட்டத்தக்கது. ப.சிதம்பரம், ராகுல் பிரியங்காவின் வயிற்றெரிச்சல்கள் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அகிலேஷ் யாதவ், தாக்ரே போன்றவர்களுமா கூட்டணிக்காக நாட்டின் நலனை விட்டுக்கொடுப்பது என ஆச்சர்யப்படுகிறேன்.