ஆகாய தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின் - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கரூர் பள்ளி மாணவிகள்
கரூர்: ஆகாய தாமரையிலிருந்து சானிட்டரி நாப்கின் தயாரித்த கரூர் தனியார் பள்ளி மாணவிகள், அதை ஆய்வுக் கட்டுரையாக மண்டல அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கணித அறிவியல் மன்றம், புதுடெல்லி அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய மண்டல அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தேர்வாகும் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகும். இதில் கரூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகளான ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகிய இருவரும் தங்களின் ஆசிரியர் ஜெ.ராஜசேகரன் வழிகாட்டுதலுடன், ஆகாயத் தாமரையிலிருந்து பயனுள்ள பொருட்கள் என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் வெற்றி பெற்று மண்டல அளவில் தேர்வாகி அங்கும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டுரையில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரையில் இருந்து பெண்களுக்கான சானிட்டரி நாப்கின், மட்கக்கூடிய காகிதங்கள், அட்டை பெட்டிகள் தயாரிக்கலாம் என நிரூபித்துள்ளனர். ஆய்வுக் குறித்து மாணவிகள் ஹிவன்ஷிகா, சஞ்சிதா கூறியது: ஆகாயத்தாமரை சுற்றுச்சூழலில் பல எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இதை ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதற்கான தீர்வுகளுக்கு முயற்சி செய்தோம். இந்த தாவரத்தை பயன்படுத்தி பயனுள்ள பொருட்களை உருவாக்கலாம் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினோம். இந்த ஆகாயத்தாமரை தாவரத்தின் தண்டு, மொட்டு போன்ற பகுதியை ஆய்வு செய்தோம். இந்த தாவரம் அதிகளவு நீரை உறிஞ்சக்கூடிய தன்மையுடன் உள்ளது. மேலும், இதை அரைத்து அதை உலர செய்து சானிட்டரி நாப்கின்கள், காகித அட்டை பெட்டி போன்ற மட்கக்கூடிய பொருட்களை உருவாக்கினோம். இதன் உறிஞ்சும் திறன், அமிலத்தன்மையை ஆய்கவத்தில் பரிசோதனை செய்தோம். மேலும், இதில் 30 சதவீத செல்லு லோஸ் என்ற பொருள் இருப்பதால் இதை பேப்பர் போன்ற பொருளாக மாற்றுவது எளிது. இந்த தாவரத்தை பயன்படுத்தி பயனுள்ள பொருட்களை உருவாக்கலாம் என யோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினோம். இந்த ஆகாயத்தாமரை தாவரத்தின் தண்டு, மொட்டு போன்ற பகுதியை ஆய்வு செய்தோம். இந்த தாவரம் அதிகளவு நீரை உறிஞ்சக்கூடிய தன்மையுடன் உள்ளது. மேலும், இதை அரைத்து அதை உலர செய்து சானிட்டரி நாப்கின்கள், காகித அட்டை பெட்டி போன்ற மட்கக்கூடிய பொருட்களை உருவாக்கினோம். இதன் உறிஞ்சும் திறன், அமிலத்தன்மையை ஆய்கவத்தில் பரிசோதனை செய்தோம். மேலும், இதில் 30 சதவீத செல்லு லோஸ் என்ற பொருள் இருப்பதால் இதை பேப்பர் போன்ற பொருளாக மாற்றுவது எளிது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானம், விமான நிலைய ஓடுபாதையில் காலை 9.7 மணிககு பாதுகாப்பாக தரையிறககப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிரக்கப்பட்டது.
இதுதொடர்பாக கொச்சி சரவதேச விமான நிலையம் வெளியிட நசுவலின்படி, ஐஎஸஸ் 39R விமானத்தின் உலது பகை பிரதான தரையிறங்கும் காததின டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கொளசிகளுந் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து அனைந்து மீட்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 9.7 மணிகள் விமானம் பாதுகாப்பாகரையிறக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே விமான நிலைய நெறிமுறைகளின்படி போதுமான அணைத்து அவசரகால சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,விமானத்தின் வலது! பக்கத்தில் உள்ள இரண்டு டயர்களும் வெடித்திருந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக திறுத்தப்பட்டபிறகு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பு நடவடிககையாகவே விமானம் திருப்பி விடப்பட்டநாகக கூறினார். ஜெட்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கிடந்த ஏதேனும் ஒரு வெளிப்பொருள் காரணமாகவே டயரில் இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. "விமானம் கொச்சியில் பாதுகாப்பாக நரையிறங்கியது. மேலும் விமானம் தரையிறககப்பட்ட போது அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன"என்று தெரிவித்தார். கோழிககோடு கரிப்பூர் விமான நிலையம் அவசரகால சூழ்நிலைகளின்போது செயலபடுவதற்கு வாயானது அந்த விமான நிலையம் ஒரு மேசடிஓடுபாதையைக் கொண்டது. குறைந்த ஓடுபாதை நீமை மற்றும் இரு முனைகளிலும் செங்குத்தான சரிவுகளைக் கொண்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண நிலைகளில் விமாணம் தரையிறக்கங்களின்போது பாதுகாப்பு வரம்புகள் மிகவும் சவாலானது. இதுபோன்ற சூழ்நிலைகளில் விமானிகள் பொதுவாக கொச்சி போன்ற நீண்ட ஓடுபாதைகள் மற்றும் சிறந்த அவசரகால கையாளுதல் நிறனகளைக் கொண்ட அருகிலுள்ள விமான நிலையங்களைத் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தரையிறங்கியதைத் தொடர்த்து, விமான நிறுவனம் அடுத்தாட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் வரை பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். மாற்றுப் பயணத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் தாமதம் நீடித்தால், பயணிகள் சாலை மார்க்கமாக கோழிக்கோடு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா வாபிரஸ் தெரிவித்திருந்த நிலையில், பயணிகளில் கோழிக்கோட்டுககு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டார். கொச்சியில் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கொர்ரி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது
பகிர்பவர் JKC
மூன்று குறுங்கதைகள்
எழுதியவர்
மனோகர் மைசூரு
sirukathaigal.com இல் இருந்து எடுக்கப்பட்டது.
1. ஆசை பேராசை
கதையாசிரியர்: மனோகர் மைசூரு
பரமன் வீட்டுக்கு போகும் வழியில் காந்தி சர்க்கிளில் அந்த கூட்ஸ்
ஆட்டோவில் தக்காளி விற்பதைப் பார்த்தார். போர்டில் கிலோ 10 என்று
கிறுக்கி எழுதியிருக்க ஆச்சரியப்பட்டார். ரெண்டு நாள் முன்பு தான் கிலோ 50 என்று வாங்கியிருந்தார். வீட்டுப்
பக்கத்தில் கடையில் எப்போதும் கொஞ்சம் அஞ்சோ பத்தோ அதிகம் இருக்கும். ஆனால், இவ்வளவு வித்தியாசம் அவர் இதுவரையிலும் பார்த்ததில்லை. எல்லா இடத்திலும் விலை குறைஞ்சிருக்காலாம்
என்று நினைத்தார்.
வண்டியில் இருந்த தக்காளிகளை
நோட்டமிட்டார். சின்ன சைஸ். பொதுவாக, இந்த சைஸ் அவர் வாங்குவதில்லை. இருந்தாலும் நல்ல கலரில் ஒரே சைஸில் நன்றாகவே இருந்தன. அழுகி கெட்டுப் போனவையாக பெரும்பாலும் இல்லை.
சரி, இப்போதைக்கு 1 கிலோ
வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவாறே தக்காளிகளைப் பொறுக்கிக்
கொண்டார். ஒரு சிலர்
ரெண்டு மூணு கிலோ எல்லாம் வாங்கினார்கள். மேலும் அதிகமாக வாங்க ஆலோசனை கேட்க பரமன் தன் மனைவிக்குப் போன் செய்தார்.
ஆனால், வழக்கம் போல் அவள் லைனில் கிடைக்கவில்லை. வேண்டிய போது கிடைக்காமல் இருப்பது தான் இந்த போனின் வேலை போலும், மனதில் திட்டினார். வீட்டிற்கு வந்தப் பின் தன் பர்சேஸ் சாகசத்தை
விவரித்தார்.
‘நீங்களும் 2-3 கிலோ வாங்கியிருக்கலாமே. இங்கே நம்ம மாமூல் கடையில இன்னிக்கும் 40 ரூபா. எல்லாத்திக்கும் என்கிட்டே எதுக்கு கேக்கணும்’.
‘நான் உனக்கு போன் செஞ்சேன்.
ஆனா நீ எடுக்கலே. நான் ஜாஸ்தி வாங்கினா நீ எதாவது சொல்லுவே. சரி,
நாளைக்கு அந்தப் பக்கம் தானே வரேன். கூட ரெண்டு கிலோ வாங்கறேன்’.
அடுத்த நாள் அந்த வழியாக மாலையில்
வரும் போது பார்த்தால், அதே வண்டி இருந்தது.
ஆனால், போர்டில் 1 கிலோ 30, 2 கிலோ 50 ரூபா. ‘அடடா, நேத்தே
வாங்கியிருக்கணும். மிஸ்
பண்ணிட்டோம்.’ என்று நினைத்தவாறே
அந்த ஆளிடம் கேட்டார். ‘என்னங்க,
நேத்து 10 ரூபா. இன்னிக்கு கப்பென்னு ஏத்திபுட்டீங்க?.’
‘நான் என்ன பண்றது, நீங்க நேத்தே வாங்கிருக்கணும். நான் என்ன பண்ண முடியும்?'
‘சரி , இன்னும் கம்மி ஆகுமா?"
‘அத எப்படி சொல்ல முடியும்.
சீசன் இந்த மாதிரி இருக்கு. சொல்லறதக்கு ஒன்னுமில்ல’.
சரி, நாளைக்குப் பார்த்துக்
கொள்ளலாம். எப்படியும் நேத்து
வாங்கிய தக்காளி இன்னும் 2-3 நாளுக்கு
வருமில்ல’ என்றவாறே வாங்காமல்
கிளம்பி விட்டார்.
நடந்ததை அறிந்த வீட்டில் மனைவி
காரசாரமாகப் போட்டார்.
‘உங்களுக்கு ஒன்னும் தெரியல.
குறைஞ்சது ஒரு கிலோ வாங்கியிருக்கலாம். வெல இன்னும் ஜாஸ்தி ஆகும். கம்மி ஆகாதுன்னு பக்கத்து வீட்டு அம்மா
சொன்னாங்க’.
பரமன் தினமும் வரும் வழியில்
தக்காளி விலை நிலவரம் பார்த்து வந்தார். குறையவே இல்லை. கிலோ 50க்கு வந்து விட்டது. அடடா,
30 இருந்தப்போ வாங்கியிருக்கலாம் என்று
மனசு அல்லாடியது. சரி இதான்
நிரந்தர விலை போலும் என்று 1 கிலோ
வாங்கினார்.
அடுத்த வந்த 2 நாட்களில் நல்ல புயல் மழை பெய்ய
ஆரம்பிக்க, தக்காளி பயிர்கள்
வீணாகி வரத்து குறைந்து சந்தையில் டபாலென்று
விலை கிலோ 100க்கு வந்து
விட்டது.
பரமன் ‘அடடா, 50க்கு வித்தப்போ ஒரு
2 கிலோவாவது வாங்கிப்
போட்டிருக்கலாமே‘ என்று லாப நஷ்ட கணக்கைப் பார்க்க ஆரம்பித்தார்.
இதெல்லாம் மனிதனின் ஆசையா இல்ல
பேராசையா? எந்த அளவுகோளில் வரும்
இத்தகைய மனப்பான்மை?.
தகவல் அறிவோம் – புதிய தக்காளி தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 அன்று, புதிய தக்காளி தினம். தக்காளி ஒரு பழம், காய்கறி அல்ல, பலர் நம்புவது போல்.
2. வாழ்க KYC
கதையாசிரியர்: மனோகர் மைசூரு
பரமனுக்கு இந்த KYC மேல் பயங்கர எரிச்சல், வெறுப்பு. எந்த நிறுவனத்தின் வாசலை மிதித்தாலும் KYC என்கிற பூதம் பற்றிக் கேட்டு விடுகிறார்கள். மயானத்தில் தான் KYC கேட்பதில்லை போலும். போதாக்குறைக்கு யாராரோ போலி SMS அனுப்பி உங்க KYC புதுப்பிக்கணும் என்று மிரட்டல் பணம் பறிப்பு வேற. எது பொய், எது உண்மையான SMS என்று திண்டாட வேண்டியிருக்கிறது. போன வாரம் நிஜமாக KYC கேட்டு வந்த வங்கி SMS யைப் போலியாக இருக்குமோ என்ற அனுமானத்தில் பரமன் சீரியஸா எடுத்துக் கொள்ளவில்லை. அன்று காலை வங்கி கணக்கு முடக்கப்பட்டப் பிறகு தான் புத்தி வந்தது. நாளை முதல் காரியம் வங்கிற்குப் போக வேண்டும் என்று இருந்தார்.
அன்று இரவு தன் டூ-வீலரில் வீட்டை நோக்கி
போகும் போது நடுவில் இரண்டு பேர் ‘ஹலோ, ஹலோ என்று பலமாக
கூப்பிட்டார்கள். வண்டியை பிரேக்
போட்டு நிறுத்தி ‘என்னப்பா’
என்றார் பரமன். அதற்குள் பக்கத்தில் வந்த ஒருவன் கத்தியைக்
காட்டி மிரட்டினான். ‘கூட வா,
பக்கத்தில் ATM-ல் 20000 பணம் எடுத்துக் கொடு. இல்ல,
கொஞ்சம் இரத்தம் கொடுக்க வேண்டி வரும்’.
‘ஹலோ, என் அக்கௌன்ட் KYC புதுப்பிக்கல.
அதனால என் அக்கௌன்ட் ஆப்பரேட்
பண்ணமுடியாது. UPI மூலமும்
ஒன்னும் பண்ண முடியாது’ என்றேன்.
வங்கி கணக்கு ப்ளாக் செய்யப்பட்டதாக வந்த
ஒரிஜினல் SMS கூட காண்பித்தேன்.
அவர்களுக்கு இந்த KYC எல்லாம் தெரியுமா என்று புரியவில்லை. அதற்குள் யாரோ ஒரு சிலர் அருகில் வருவதாக
தென்படவே பரமன் பாக்கெட்டில் பெட்ரோலுக்கு இருந்த 200 ரூபாயைப் பறித்துக்கொண்டுப் பறந்து விட்டார்கள்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று
என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். ஒரு சிறு இரத்த சேதாரம் இல்லை.
‘KYC ! நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று முதல் முறையாக அதை வாழ்த்தினார் .
கதை சம்பந்தமாக தகவல் :
Know Your
Customer (KYC) 1970ல் அமெரிக்காவில்
உயிர் பெற்றது. இது
சந்தேகத்திற்குரிய நிதி செயல்பாடுகளை கண்டறிய ஆரம்பிக்கப் பட்டது. இந்தியாவில் KYCயை RBI 2004ல்
அறிமுகப்படுத்தியது. அது இப்போது
நம்மில் இணைபிரியாத ஒரு உறுப்பாக மாறி விட்டது. KYC என்பது இரண்டு பகுதி கொண்டது. ஒன்று உங்கள் அடையாள சான்று (PROOF OF
IDENTITY -POI). இன்னொன்று உங்கள்
விலாசச்சான்று (PROOF ADDRESS –
3. திருடனுக்கு வேலை
கதையாசிரியர்: மனோகர் மைசூரு
பரமன் அந்த வெளியூர் பஸ் நிலையத்தில் அப்படியும் இப்படியும் உலாவிக்
கொண்டிருந்தான். இறங்கும் பயனியர்களை
உன்னிப்பாக அலசிப் பார்ப்பான். யாரை
பிடித்தால் தேறும் என்று கணக்கு போடுவான். பசையுள்ள ஆசாமியாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்வான்.
டீசண்டாக வெளியே வரும் ஒருத்தரைப் பிடிப்பான். ‘ஹலோ, ரூம் வேணுமா. நல்ல டீசண்டா ரூம் சார்.’.
அப்படியேப் பேசிக்கொண்டு வெளியே வருவான். கொஞ்சம் வெளிச்சம் குறைவானப் பகுதிக்கு வந்தப் பின் டக்-கென்று தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை
அவன் கையில் வைப்பான். ‘அலட்டி
கொள்ளாமல் அங்கே ATM பக்கம்
போலாம் . 20000 எடுத்துக் கொடு.
காயப்படமா போய்ல்லாம்‘.
பெரும்பாலான பயணியர் கேட்டத் தொகையை சத்தம் போடாமல் கொடுத்து
விடுவார்கள். ஒரு சிலர் பார்கெய்ன்
செய்வார்கள். பரமனின் டார்கெட்
குறைந்தது 5000. ஒரு சில சமயம்
சிலர் கெஞ்சினால், அவர்களை விட்டு
விடுவான்.
பரமனுக்கு ஒரு பாலிசி உண்டு. அதாவது போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து. பேராசை
கிடையாது. தன்னிடம் காசு தீரும்
சமயம் தான் அடுத்த டார்கெட் ஆரம்பிப்பான். அப்புறம் இன்னொரு விஷயம்: பரமன்
யாரையும் கத்தியால் கீற மாட்டான். மிரட்டுவானே
தவிர யார் மேலும் கத்தி வைத்ததாக சரித்திரம் இல்லை.
ஒரு மாதம் வரையில்தான் ஒரு ஊரில் இப்படி. அடுத்த மாதம் தன்னோட ஜாகையை வேறு ஊருக்கு மாற்றி விடுவான்.
அவனிடம் டார்கெட் செய்யப்பட்ட ஆசாமிகள் பொதுவாக போலீசிடம் புகார்
கொடுப்பதில்லை. அதற்கான காரணம்: தொகை சிறியது. சம்பவம் ராத்திரியில் நடப்பது. அடுத்த நாள் தங்கள் வேலை கெட்டு விடக் கூடும். பாதிக்கப்பட்ட ஆசாமிகள் வேற்று ஊர் நபர்களாக
இருப்பதால் கேஸுக்காக திரும்ப இந்த ஊருக்கு வந்து அலைய வேண்டியிருக்கும் என்ற பயம்.
பரமனின் வீட்டைப் பொறுத்த வரை அவன் ஒரு சேல்ஸ்மேன். வீட்டிற்கும் சுமாராக பணம் கொடுப்பான். நிறைய கொடுத்தால் அவர்களுக்கு தன் மகன் தப்பான வழியில் போவதாக நினைத்து
விடுவார்கள் என்று பரமன் அந்த மாதிரி திட்டம் போட்டான்.
இப்படி வாழ்க்கை சௌகரியமாகக் கொண்டுயிருந்தது.
அன்று ஒரு நாள் தன் டார்கெட்டைப் பிடித்து 20000 லபக்கென்றுப் போட்டுக் கொண்ட பின் , டீ சாப்பிடக் கிளம்பினான். திடிரென்று
ஒரு ஆளின் கை பலமாக பரமன் தோளில் வலிமையாக விழுந்தது. தன்னைப் பிடிப்பவன் தனக்கு வல்லவனுக்கு வல்லவனா
இருக்கணும் என்று பரமன் நினைத்தான்.
திரும்பிப் பார்க்க திடகாத்திரமான ஒரு நடுத்தர ஆள் தென்பட்டார்.
‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’.
‘எனக்கு எதுவும் பேச விருப்பமில்லை’.
‘அப்போ போலீஸ் கஸ்டடி தான். எப்படி சவுகரியம்?
அப்போது தான் எதிரில் நிற்பது சாதாரமான ஆள் கிடையாது என்பதை
உணர்ந்தான் பரமன்.
‘என்ன வேணும்? என் லூட்டியில் 20 பர்சன்ட்
குடுக்கிறேன் ‘
‘எனக்கு உன் பணம் வேணாம். நான் CID டிபார்ட்மென்ட். நீ இப்பப்
பண்ற வேலையை நிறுத்திட்டு எனக்காக வேலை செய்யணும். நீ ரொம்ப கிளவரா ஜனங்களை எடை போடுறே. அந்த திறமையை எங்களுக்காக யூஸ் பண்ணனும். கஞ்சா, போதை, தங்கம் இந்த மாதிரி கடத்தற ஆளுங்களைக் காட்டிக்
கொடுக்கனும். ஒவ்வொரு மாசமும் ஒரு
மாவட்டம். ரெகுலர் சேலரி போல
உனக்குப் பணம் கொடுக்கப்படும். ஓகேயா?’
தனக்கு சாய்ஸ் கொடுக்கப்படுவதாகப் படவில்லை பரமனுக்கு. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக வெறுமனே தலையை ஆட்டினான். கட்டாயமாக நல்வழிக்கு திருப்பப்பட்டான் பரமன்.
பின்னுரை.
https://www.linkedin.com/in/manohar-mysore-srinivas-7b053ba8/
ஆசிரியர் பற்றிய விவரங்களைத் தேடியபோது கிடைத்த லிங்க். கதையாசிரியர் இவர் தானா என்பது உறுதி இல்லை.
இக்கதைகள் ஒரு சிறு சம்பவத்தையும் “அப்புறம் என்ன ஆச்சு
தெரியுமா” என்ற ரீதியில்
குறுங்கதையாக்க முடியும் என்பதை எடுத்துக்
காட்டுகின்றன.
முதல் கதையில் தக்காளி விலை ஏற்ற இறக்கங்களை பற்றியது. தக்காளி மட்டுமா? தங்கம்,
ஷேர் என்று பலவும். வேண்டுமோ வேண்டாமோ விலை குறைவு அல்லது இலவசம் என்று எந்த
பொருளையும் அவசியம், அவசியம்
இல்லை, என்று பார்க்காமல்
வாங்கும் பேராசை பலருக்கும் உண்டு அல்லவா? இந்த உண்மை உரைக்கிறது. மனைவி
சொல்லே மந்திரம் என்ற கூடுதல் போனஸ் கதையில் உள்ளது.
இரண்டாவது கதை KYC என்ற கண்காணிப்பைப்
பற்றியது. ஆனால் இது போன்ற சனியன்கள்
மக்களை மாக்களாக்கி கூடுதல் கட்டுப்பாட்டில் வைக்க மக்களரசு முயல்கிறது என்பது
எனது எண்ணம். யாதொரு அடையாளமும்
இல்லாமால் குடிமகன் என்று உலவி வந்தவர்களின் பசிப்பிணி போக்க முதலில் ரேஷன் கார்டு
என்ற ஒன்றை புகுத்தினர். அது போல்
வோட்டுரிமை உடையவர் என EPIC என்ற
வோட்டர் கார்டு கொடுத்தனர். பின்னர்
குடிமகன்களின் பிறப்பு சான்றிதழ், ஆதார்
கார்டு என விரிவடைந்தது. அடுத்து
தற்போது NRC என்ற ஒன்று
எட்டிப்பார்க்கிறது. ஒவ்வொன்றையும்
பெறுவதற்கு எவ்வளவு பாடு படவேண்டி இருக்கிறது, இதில் ஒன்றை வாங்க மற்றது வேண்டும், அந்த மற்றதை வாங்க முதலில் கூறிய ஒன்று வேண்டும். இப்படி பல சிக்கல்கள்.
//மயானத்தில் தான் KYC கேட்பதில்லை போலும்.//
மயானத்தில் உடல் தகனத்திற்கு ஆதார் கேட்கிறார்கள்.
மூன்றாவது கதை informer என்ற கழுகுகளை
தேர்ந்தெடுக்கும் முறை தான். திருடனைப்
பிடிக்க திருடனை ஏவும் முறை.
கதைகள் மொக்கை என்று தோன்றலாம். ஆனாலும் உண்மைச் சம்பவங்கள் போன்று உள்ளன. சும்மா ஒரு ஒப்புக்கு சப்பாணியாக அவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன்.


இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று. ஆகாயத்தாமரை நீர்நிலைகளைப் பாழ்படுத்துவது கண்டு, இதுக்கு என்னதான் தீர்வு என்ற எண்ணம் வரும்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... வாழ்த்துவோம்.
நீக்குமூன்று கதைகளின் தீம் நன்று.
பதிலளிநீக்குஜெயகுமார் சார் சொல்லியிருப்பதுபோல எத்தனை எத்தனை அடையாளங்கள் நமக்கு வேண்டியிருக்கிறது. படுத்தறாங்க.
:))
நீக்குநல்வரவு. தற்போது நான் "நான்" தான் என்று எல்லா இடத்திலும் நிரூபிக்க வேண்டியிருக்கிறதே! சுஜாதா இந்த மாதிரி ஒவ்வொரு மனிதனும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கதைகள் பல எழுதியிருக்கிறார். அதிலும் "ஜில்லு" தனி.
நீக்குJayakumar
மொக்கை என்று இல்லை. கதைக்கு கதையுமாச்சு.. அட்வைஸுக்கு அட்வைஸுமாச்சு! எளிய வகையில் சில தகவல்கள் அறியலாம்! சில ஆசிரியர்கள் இப்படி உதாரணத்தோடு பாடம் நடத்துவார்கள்.. அப்படி!
பதிலளிநீக்கு