Fruit Yogurt
துரை செல்வராஜூ
தயிரும் கனியும்
குவைத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்...
தேவையானவை:-
1) மாம்பழமும் வாழைப்பழமும்
2) திராட்சையும் பப்பாளியும்
3) பேரிக்காயும் ஆப்பிளும் -
இவற்றுள் ஏதாவது ஒரு ஜோடி..
வீட்டில் தயாரிக்கப்பட்ட
தயிர் 300 gr
தேன் 300 gr
பட்டைத் தூள் ஒரு tsp
நெய்யில் வறுக்கப்பட்ட
முந்திரிப் பருப்பு 15
குறிப்பு :-
தயிர் அதிகம் புளிக்காமல் இருப்பது நல்லது..
சர்வோதய சங்கத்தின் தேன் சிறப்பு..
மாம்பழம் எனில் தோல், விதை நீக்கி விட்டு - சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும்
திராட்சை எனில் திராட்சையின் மெல்லிய தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு நறுக்கிக் கொள்ளவும்..
திராட்சையின் விதைகளை விரும்பினால் சிற்றரவையில் அரைத்துக் கொள்ளலாம்..
வாழைப்பழம் பப்பாளி இவற்றை ஒரே அளவில் சமச் சீராக நறுக்கிக் கொள்ளவும்..
பேரிக்காய், ஆப்பிள் எனில் Peeler கொண்டு தோல் நீக்கிக் கொள்ளவும்..
பேரிக்காய், ஆப்பிள் பழத் துண்டுகளைக் கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து - குளிர வைத்துப் பயன்படுத்தவும்..
செய்முறை :-
நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரிப் பருப்புகளை நன்றாக நொறுக்கிக் கொள்ளவும்
தயிரில் நீர் அதிகம் இருந்தால் சுத்தமான மெல்லிய துணி கொண்டு ஓரளவுக்கு வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய தயிரைக் கிண்ணத்தில் ஊற்றி, தேன் கலந்து சிறிது நேரம் சில்லரில் வைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து வேறொரு கண்ணாடிக் கிண்ணம் ஒன்றில் - பழத் துண்டுகள் சிலவற்றை இட்டு அவற்றின் மீது குளிர்ந்திருக்கின்ற தயிர் - தேன் கலவையில் சிறிதளவு ஊற்றவும். தொடர்ந்து மீண்டும் சிறிதளவு பழக்கலவை, பின் தயிர் கலவை எனச் சேர்க்கவும்.
ஒரு கிண்ணத்தில் மூன்று தளங்கள் (அடுக்குகள்) போதும்..
கிண்ணத்தில் நிரப்பப்பட்ட தயிர் பழக் கலவையின் உச்சியை நெய்யில் வறுபட்ட முந்திரித் துகள்களால் அலங்கரித்து சிறு spoon கொண்டு சாப்பிடவும்..
சாப்பிடும் போது புன்னகை அவசியம்...
குழந்தைகள் இருக்கின்ற வீடு எனில் கண்ணாடிக் கிண்ணங்களுக்குப் பதிலாக சிறு சிறு St St கிண்ணங்களைப் பயன்படுத்துவது நல்லது..
இப்படி அடுக்குகளாக தயாரிப்பதில் அலுப்பு எனில் எல்லாவற்றையும் சிற்றரவையில் ஒன்றாகப் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளலாம்..
நாமே தயாரித்த தயிரும் கனியும் - ஆகா!...
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
ஃஃ
இது ஒரு வித்தியாசமான ரெசிப்பி. எனக்கு மிகவும் பிடித்தமானது.
பதிலளிநீக்குதேனின் அளவு மிக அதிகமோ என்று தோன்றியது. ஆனால் சர்க்கரை எதுவும் சேர்க்காத ரெசிப்பி. இதில் முந்திரி தவிர வேறு உலர் பழங்களையும் சேர்க்கலாம்.
இப்போது வெளியில் நடைப்பயிற்சி ஒரு மணி நேரம் சென்று வந்தேன். ரொம்பவே குளிர், ஸ்வெட்டர் போட்டுக்கொண்டிருந்தபோதும்.
பதிலளிநீக்குஇந்தக் குளிரில் இந்த ரெசிப்பியா எனத் தோன்றியது. பெப்ருவரிலதான் திராட்சை, மா சீசன் ஆரம்பம். இப்போ ஆப்பிள் ப்ப்பாளி சீசன். வெளிநாட்டு பேரீட்சையும் கிடைக்குறது. மனைவிக்குச் செய்துகொடுக்கிறேன், இரு நாட்கள் திருப்பதி பயணம் முடிந்ததும்.
தயிர் சேர்ப்பதால், இந்தக் கலவையில் ஐஸ்க்கிரீம் சேர்ப்பது சரிப்படுமா?
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பிடித்த ரெசிப்பி துரை செல்வராஜு சார்.
சுலபமான, சுவையான டெசர்ட்! படங்கள் செர்த்திருக்கலாம். உடனே செய்து பார்த்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதயிரும் கனியும் சுலபமான செய்முறை.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது