டேராடூன்: உத்தரகண்டில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபானி - முலிங் லா இடையே, 16,000 அடி உயரத்தில், 32 கி.மீ., துாரத்துக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அ ரசு துவங்கி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் முலிங் லா மலைப்பகுதி உள்ளது. பயண பாதை : இது, ந ம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தன்னாட்சி பிராந்தியத்துடன் இணைக்கும் பழங்கால வர்த்தக மற்றும் பயண பாதையாக இருந்தது. இமயமலையில், 16,000 அடி உ யரத்துக்கு மேல் அமைந்துள்ள மலைப்பாதையான இந்த பகுதியை அடைய, தற்போது சாலை வசதி இல்லை. ஆனால், நீலா பானியில் இருந்து மலையேற்றம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. முலிங் லாவை அடைய ஐந்து நாட்கள் ஆகும். இந்நிலையில், நீலபானி - முலிங் லா இடையே, 32 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணியை, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளனர். பொறியியல் ஆலோசனை : நிறுவனங்களிடம், பி.ஆர்.ஓ., ஒப்பந்தம் கோரியுள்ளது. தேர்வாகும் நிறுவனம் மலை, பாறை, மண் வகை ஆகியவை எப்படி உள்ளது என ஆய்வு செய்து, எங்கு சாலை அமைக்கலாம், பனிச் சரிவு தடுப்பு ஆகியவை குறித்து அறிக்கை அளிக்கும். அதன்பின் சாலை பணிகள் துவங்கும். அனைத்து வானிலையிலும் திபெத் எல்லையை அடையும் வகையில் இந்த சாலையை கட்டமைக்க உள்ளனர். சவால் : இதன் மூலம் சீன எல்லையில் அசாதாரண சூழல் நிலவும் போது, நம் படைகளை சில மணிநேரங்களில் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். இது குறித்து பி.ஆர்.ஓ., அதிகாரிகள் கூறுகையில், 'லடாக்கில் சீன படைகளுடன் கடந்த 2020ல் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லைகளில் சாலை, பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை மத்திய அரசு விரைவு படுத்தி வருகிறது. 'அதன் ஒரு பகுதியாக நீலாபானி - முலிங் லா இடையே உயர்மட்ட மலைப்பாதை அமைக்க உள்ளோம். இமயமலையில் சாலை அமைக்கும் இந்த பணி மிக சவாலானதாக இருக்கும்' என்றனர்.
========================================================================================
மிகச்சிறிய பயணம். ஏறியதும் தெரியாது, இறங்கியதும் தெரியாது என்று மூன்று அல்லது நான்கு நிமிடங்களில் மேலே சென்று விடுகிறது. மெல்ல செங்குத்தாக உயரத் தொடங்கி, சட்டென சற்று வேகமாகி, இறங்கும் நேரம் மெதுவாக மறுபடியும் சற்று செங்குத்தாக ஏறி நிலையத்தை அடைகிறது. அங்கு தரிசனம் முடித்து இறங்குவதற்குக் காத்திருந்த மக்கள் பரபரப்படைவதைப் பார்க்க முடிந்தது. எங்கள் டிரைவர் சற்றே திரும்பிப் பார்த்த நிலையில் அமர்ந்திருக்க (வின்ச் அவருக்கு பின்புறமாக ஏறிக் கொண்டிருந்தது) அங்கிருந்த வாலண்டியர்கள் அவரைப்பார்த்து "நேரா திரும்பி உட்காருங்க நேரா திரும்பி உட்காருங்க" என்று திரும்பதிரும்பச் சொல்லவும், கவனிக்காத அவரை "உங்களைத்தான் சொல்றாங்க" என்று நான் சொன்னதும் குழம்பிப்போய் முழுவதுமாக எசகுபிசகாக திரும்பி உட்கார யத்தனித்தவரை திருப்பி நேராக உட்கார வைத்தேன்!
இறங்கி நேராக நடந்து மேலேறி, ஸ்வாமியை தரிசிக்கும் வரிசையில் சேர்ந்தோம். உள்ளூர் வி ஐ பி "மேலே ஏறி விட்டீர்களா? ஏறியதும் சொல்லுங்கள்" என்று வின்ச் ஏறும் முன் சொல்லி இருந்தார். எனவே அங்கிருந்து அவருக்கு போன் செய்தேன். "ஏரியாச்சா? இதோ வருகிறேன்" என்று உடனே போனை கட் செய்தவரை நல்லவேளையாக நம்பாமல் ஸ்வாமியைப் பார்க்க ப்ரொசீட் செய்தோம். பெரிய கியூ இல்லை என்றாலும் மெதுவாக நகர்ந்தது. முதலில் ஸ்ரீ அமிர்தபாலவல்லித் தாயார் தரிசனம். பட்டர்கள் மொபைலில் மூழ்கி இருந்தனர். இருவர் அவர்களுக்குள் பணத்தை எண்ணியவாறு தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தீபம் காட்டி விளக்கம் சொல்வார்கள். அது நடைபெறவில்லை. எவ்வளவு முறை எவ்வளவு பேர்களுக்கு அவர்களும் சொல்வார்கள் இல்லையா? முடித்து தாயாரை வலமாகத்தாண்டி இடதுபுறம் திரும்பி 'யு டர்ன்' போட்டு நரசிம்மமரை தரிசிக்கச் சென்றோம். ஓரளவு தூரத்திலேயே வரிசையைக் கட்டுப்படுத்தி தரிசிக்க வைத்தார்கள். அரை நிமிடத்துக்கும் மேல் தரிசனம் செய்ய முடிந்தது. கொஞ்சம் முயன்றால் ஒரு நிமிடம், ஒன்றரை நிமிடம் தாக்குப் பிடிக்கலாம்.
நரசிம்மரை தரிசித்து திரும்பும்போது அங்கு ஒருவர் நின்று கொண்டு "தரிசனம் நல்லபடி ஆச்சா?" என்று அன்பொழுகக் கேட்டார். ஒருகணம், அவர்தான் அந்த வி ஐ பி ஏற்பாடு செய்த ஆளோ என்று எண்ணினேன். அவர் வலது கை கீழே நீட்டியவண்ணம் இருந்தது. கண்டுகொள்ளாமல் தாண்டி வந்தேன். பின்னால் வந்த பாஸ், "ச்சே.. உங்க கைல காசு இருக்கு.. தட்டிலும் போடமுடியவில்லை. உண்டியலில் போடக்கூடாது என்று சொல்லிட்டீங்க.. அங்க ஒருத்தர் நின்னு கைநீட்டினார்.. ஒன்றும் கொடுக்க முடியலை" என்று குறைப்பாட்டுக் கொண்டார். "அவர் நீ ரோப்காரில் சீக்கிரம் ஏற உதவி பண்ணினாரா, இங்கே கியூவில் நிற்காமல் உள்ளே அழைத்து தரிசனம் செய்ய வைத்தாரா, இல்லை பக்கத்தில் அழைத்துப்போய்தான் தரிசனம் செய்ய வைத்தாரா... என்ன செய்தார், அவருக்கு லஞ்சம் கொடுக்க?" என்று வீ பா க ஸ்டைலில் பொரிந்தேன்!
நகர்ந்து நகர்ந்து வெளியே வந்து பிரசாதம் கொடுக்குமிடம் வந்தோம். மணி ஒன்று. ஒன்றும் சாப்பிடாதது எனக்கு பாதிக்கவில்லை என்றாலும் பாஸ் "பசிக்கிறது, பிரசாதம் வாங்கலாம்" என்றார். நல்லவேளை மறுக்காமல் வாங்கினேன். மடைப்பள்ளி அருகேயே வைத்து ஒரிஜினல் கோவில் தயாரிப்பு. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம். ஒரு மந்தாரை இலையை பகோடா பொட்டலம் போல மடக்கி அதில் நிரப்பிக் கொடுத்தார்கள். என்ன சுவை.. அபார புளியோதரை, பொங்கல், தயிர் சாதம்.. ஒரு பொட்டலம் 20 ரூபாய்.
சரி, இறங்கலாம் என்று வந்தபோது நரசிம்மர் புன்னகைத்தது தெரிந்தது. மிகப்பெரிய கியூவில் கடைசியில் இணைய வேண்டி இருந்தது. எப்படியும் எழுநூறு பேர்களுக்கு மேல் முன்னால் நிற்பார்கள். முந்தி முந்தி குறுக்கே புகுந்து முன்னால் சென்ற சில குடும்பங்கள் வேறு நடுநடுவில். ஏற்கனவே சொன்னபடி ஒருமுறைக்கு 16 பதினாறு பேராக எவ்வளவு ட்ரிப்பில் கீழே போவோம்? டிரைவர் அங்கிருந்த காவலரிடம் "நாங்க வி ஐ பி வழி வந்தோம்" என்று சொல்லி குறுக்கே போக முயன்றது தோல்வியில் முடிந்தது. என்ன செய்வது, எவ்வளவு நேரம் ஆகும் என்று நின்றிருந்தோம். ஏகப்பட்ட ஹேஷ்யங்கள் போய்க் கொண்டிருந்தன. வானரங்கள் இங்குமங்கும் தாவி வேடிக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன. சுதாரிக்காத பக்தர்களிடமிருந்து தண்ணீர் பாட்டிலைக் கவர்ந்து சென்றன.
அப்போது ஒரு சலசலப்பு எழுந்தது. தடிமனான இரண்டு வாலன்டியர்கள் அங்கே தோன்றி,"அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரோப்கார் கிளம்பாது. கீழே வி ஐ பி வழியில் வந்தோம். எங்களை முதலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முப்பது நாற்பது பேர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடிதடியில் வின்ச்சையே நிறுத்தி விட்டோம். இரண்டு மணிக்கு லன்ச் இடைவேளை. அப்புறம் ஒரு மணிநேரம் கழித்து மறுபடி தொடங்கும்" என்றார். கூட்டத்தைக் கரைக்கச் சொன்னாரோ, நிஜமாக சொன்னாரோ.. எங்கள் பொறுமை போனது. என் கூட வந்தவர்கள் படி வழியே இறங்கும் ஆப்ஷனுக்கு ஆதரவு கொடுக்க, என் விருப்பம் ஒற்றை ஆளாய் தோற்றுப் போனது. முழங்கால்களை பிடித்தபடியே அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தோம்.
மனதைத் திடப்படுத்திக் கொண்டு 1300 படிகளில் இறங்கத் தொடங்கினோம். பாஸ் லஞ்சம் கொடுத்து ஒரு மிகச்சிறிய கூஜாவில் மேலேயிருந்து தீர்த்தம் வாங்கி வந்திருந்தார். அதை வால் உம்மாச்சிகளிடமிருந்து காப்பாற்ற போராடியபடியே இறங்கினோம்.
==============================================================================================
சென்ற வாரம் புதன்கிழமை கொடுத்திருந்த இலை படத்துக்கு செல்வாண்ணா ஒரு கவிதை எழுதி அனுப்பி இருந்தார். சென்ற வியாழனிலேயே வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அவர் பாஷையிலே சொல்ல வேண்டும் என்றால் சென்ற வார பதிவு "முரட்டு பதிவா"க இருந்ததால் அப்போது வெளியிடாமல் இந்த வாரம் வெளியிடுகிறேன்!
=================================================================================================
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜ்குமாரை வீரப்பன் கடத்திவைத்திருந்தபோது, தமிழக அரசின் சார்பில் தூதர்களாக வீரப்பனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் ஒருவர், கல்வியாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பிரபா கல்விமணி. இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருடன் பேசினேன்.ராஜ்குமார் மீட்புக் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள். இந்தத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தாமதமான தீர்ப்பானாலும், வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்ற வழக்கறிஞர் பாப்பா மோகனின் வாதம் நிரூபணமாகியிருக்கிறது.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் என்ன பேசினீர்கள்?
பழங்குடி மக்கள் தொடர்பில் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?
எங்கே நிறைவேற்றினார்கள்? தூதுவர்களாகச் சென்ற எங்களுக்கே சம்மன் அனுப்பி சாட்சிகளாக்கினார்கள். இவ்வளவுக்கும் தூதுவர்களாகச் செல்பவர்களுக்கு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் சம்மன் அனுப்ப மாட்டோம் என்று இரண்டு மாநில உள்துறைச் செயலர்களும் முன்பு கூறியிருந்தார்கள். அதையே மீறினார்கள். எங்களுக்கே இந்தக் கதி என்றால், குரலற்ற பழங்குடி மக்கள் நிலைமையை யோசியுங்கள்.
வீரப்பனை நீங்கள் பார்த்த நாட்களில் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்தது?
எனக்கு ஒரு விஷயத்தில் அவர் மீது மதிப்பு இருந்தது. அது என்னவென்றால், கடத்திச் சென்றிருந்தாலும், ராஜ்குமாரை மிகவும் கண்ணியமாக நடத்தினார் வீரப்பன். ராஜ்குமாரை விடுவிக்கும்போது புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார் வீரப்பன். இருவரும் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர். இங்கே படித்து, பயிற்சி பெற்று போலீஸ் வேலைக்குச் செல்பவர்கள் காவலில் வைக்கப்படுபவர்களை எத்தனை மோசமாக நடத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது அது மரியாதையைத் தந்தது.
தமிழக அரசுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
அப்பாவி மலைவாழ் மக்கள் மீது போலீஸார் நடத்திய அட்டூழியங்கள் சொல்லவே முடியாத அளவுக்குக் கொடுமையானவை. பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கான உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கொடுமையிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அந்த எளிய மக்கள் சிந்திய கண்ணீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!
- சந்தனார் - செப்.29 2018 இந்து தமிழ்திசை --











.jpg)






















அனைவருக்கும்புத்தாண்டு
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்...
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
நீக்கு//ராஜ்குமாரை விடுவிக்கும்போது புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார் வீரப்பன். இருவரும் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டனர்.// LOL
பதிலளிநீக்குஇன்னும் வெவ்வேறு அனுபவங்கள் படித்தால் இன்னும் அகலமாக புன்னகைக்கலாம்.
நீக்கு//வந்திருக்கும் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிக்க பிரணவ் எடுக்கும் முயற்சிகள் கதை.// ஓஹோ! இப்ப நம்ம வசதிக்கு, பேய் ஆன்மா ஆகிடுச்சோ? பலே பலே ;-) ;-)
பதிலளிநீக்குபேயிடம் அச்சமில்லை; பிணத்திடமும் அச்சமில்லை. ஆனால், இரண்டும் சேர்ந்து கொள்ளும்போதுதான் (மனிதன்), சில பல வேளைகளில் அச்சமுண்டு, அச்சமுண்டு !
நீக்குஅந்தக் கதையில் ஆவி, பேய் என்று எப்போதும்போல் பயமுறுத்தாமல் வித்யாசமாகக் காட்டிட்டியிருந்ததன் பாதிப்பை;உ என்னை அப்படி எழுத வைத்திருக்கிறது!
நீக்குதிவாமா - கருத்துக்கு டிட்டோ!!!
நீக்குகீதா
முருகா சரணம்..
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
வாங்க கோமதி அக்கா.. வணக்கம். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
எங்கள் ப்ளாக் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்கு__/\__
நீக்குபுது வருடத்தில் நரசிம்மர் கோயில் புளியோதரை பிரசாதம் கிடைத்தது
பதிலளிநீக்குநன்றி. பிறகு வருகிறேன்.
ஆமாம். முன்னாடியே கிடைத்தாலும் வைத்திருந்து "இன்று சாப்பிடும்படி" அமைந்தது விசேஷம்!
நீக்குகடவுளே! ஒரு வாரத்துக்கும் மேலா வைச்சிருந்தீங்க!
நீக்குநிஜமா கேக்கறீங்களா? வேடிக்கைக்குதான் கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்!
நீக்குநிஜமாத்தான் கேட்டேன். உண்மையாவே ஒரு வாரமும் சர்க்கரைப் பொங்கல் கூடக் கெட்டுப் போகாமல் இருந்ததா என்ன? ஆச்சரியத்தில் மயங்கி விழுந்துடுவேன் போலிருக்கு.
நீக்குஅட? இது எனக்குத் தோணவே இல்லையே! குளிர்சாதனப் பெட்டியில் வைச்சிருந்து இன்ன்க்கு எடுத்துச் சுடப் பண்ணிச் சாப்பிட்டீங்களா? நானெல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்கள் வைப்பதில்லை என்பதால் இது தோணலை. ஆனால் இங்கே நேர்மாறாகச் சாதத்திலிருந்து எல்லாமும் வைப்பாங்க. என்ன ஒண்ணுன்னா எனக்காக வேண்டித் தனியா ஒரு தட்டில் மட்டும் வைச்சுக்கறாங்க. பால், தயிர், மோர் அருகே, காய்கள் அருகே வைப்பதில்லை. :)
நீக்குஅப்படி இல்லை கீதா அக்கா.. நான் எப்போதோ தொடங்கிய சோளிங்கர் பயணத்தொடரில் நரசிம்மர் தரிசனமும், புளியோதரைப் படமும் சரியாக இன்று வந்தது - வரும்படி அமையாதது - தற்செயல் என்றாலும் இறைவன் செயல் என்று புல்லரித்துப் போனேன்!
நீக்கு//தளிர் எனத்
பதிலளிநீக்குதழைத்தால்
எத்தனையோ
இசைப்பாட்டு
பழுத்ததொரு
இலைக்கு
போற்றியே திருப்பாட்டு!//
Hear, hear, செல்வாண்ணா! இளவேனிலில் இளந்தளிர்கள் அழகு என்றால் இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் அழகு. முதுமை அதன் அழகுக்காகவே, இருப்புக்காகவே போற்றப்படவேண்டும், கொண்டாடப்படவேண்டும்! முதுமையில் இளமை farce is pathetic. Happy 2026 and cheers!!
நினைத்த நேரத்தில் நிறைய எழுதுவார். இப்போது கண்களும் விரல்களும் கொஞ்சம் சண்டி செய்கின்றன அவருக்கு. கூடவே இணையமும்!
நீக்குதிருவாழி அவர்களுக்கு நன்றி
நீக்குஉங்கள் ஷோலிங்கர் பயண விபரம் நல்லா இருந்தது. எதற்கும் knee cap எடுத்துச் சென்றிருந்திருக்கலாமே.
பதிலளிநீக்குஇணையத்திலிருந்தாவது நரசிம்மர் படத்தை, வருட ஆரம்ப நாள் என்பதால் எடுத்துப் போட்டிருந்திருக்கலாம்.
வாங்க நெல்லை.. இப்போது படம் இணைத்து விட்டேன். Knee cap க்கு வேலை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் சமீப காலங்களில் உபயோகிப்பதும் இல்லை. அதை உபயோகிப்பது சரி, தவறு என்று இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. மருத்துவர் கூடாது என்கிறார். பிஸியோ தப்பில்லை என்கிறார். சும்மாவே பால்மாறுவேன்!!!
நீக்குபடங்களை இணைத்தது சூப்பர்
நீக்குKnee cap எப்போதும் always உபயோகிக்கக் கூடாது. அவசரத்துக்கு அபூர்வமாக உபயோகிப்பது ஓகே
__/\__
நீக்குஅதிகாரத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் காலைக் கழுவ பூட்சை நக்கத் தயங்கமாட்டார்கள். அந்த நிதர்சனத்தின் வெறுப்பில் எளியவர்களை ஏறி மிதிப்பார்கள்.
பதிலளிநீக்குவீரப்பன் செயலால் துரோகிகள் வெறும்பயல்கள் பத்திரிகையாளர் என்ற போர்வையில் கோடிகளைச் சம்பாதித்தனர். இப்போ கழகத்தின் காலில் விழுந்துகிடக்கின்றனர்
இப்போதைய கழகத்துக்கும் வீரப்பனுக்கு சம்பந்தமில்லை. ஆனால் விஜயகுமார் முதலில் கலைஞருக்குதான் செய்தி சொன்னார், பின்னர்தான் முதல்வருக்கு சொன்னார் என்று படித்த நினைவு. வீரப்பன் இப்போது அந்த ஏரியா மக்களால் கடவுளாக கும்பிடப்படுகிறார். நினைவு நாளன்று செம கூட்டம் கூடுகிறது.
நீக்குஸ்ரீராம், ஜெ கே அண்ணா சொன்னது போல வீரப்பன் நல்லவனா கெட்டவனான்னு நல்லவன் கெட்டவன்...அப்படித்தான் தோன்றியது,
நீக்குவீரப்பனைப் பற்றி வெளியில் வராத செய்திகளும் இருக்கலாம் ஊடகங்கள் பொதுவாக யாரைத் தூக்கி வைச்சுக்கும் ...அந்த லோக்கல் மக்களுக்கு நன்மைகள் குறிப்பாகப் பாதுகாப்பு கிடைத்திருக்கலாம்..இல்லை ஏதோ ஒன்று.
நமக்கு எது உண்மை எது பொய்னு எப்படித் தெரியும் என்றும் யோசிக்க வைக்கிறது. ஊடங்களே கூட எது உண்மை சொல்லியது எது பொய் சொல்லியதுன்னு..
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்...தீர விசாரிப்பதே மெய்னு சொல்லப்படுவதுண்டு ஆனால் தீர விசாரிப்பதும் கூட இப்ப நம்பமுடியலையே
கீதா
உண்மை உணர்ந்தவர்களுக்குதானே தெரியும்? அவர்கள் என்ன வகை சிரமத்தில் இருந்தார்களோ.. என்ன சொன்னாலும், எதிர்ப்பவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றதையும், யானைகளை கொடூரமாக கொன்றதையும் மன்னிக்க முடியுமா என்ன... மறக்கத்தான் முடியுமா?
நீக்குவீரப்பன் நல்லவன் என்று எழுதுகிறவர்களைப் பார்த்தால் சிரிப்புதான். கொள்ளைக்காரன் கொலைகாரனுக்கு வக்காலத்தா?
பதிலளிநீக்குநடிகர் ராஜ்குமார் அவர்கள் நல்லவர். அதனால் பிரச்சனை மிக மோசமாகவில்லை
'பயணம்' என்றொரு படத்தில் திரை நாயகனின் சாகசத்துக்கும் நிஜ வாழ்வின் அனுபவத்துக்கும் எவ்வளவு வித்யாசம் என்று விமான கடத்தல் சம்பவம் ஒன்றினுள் உரித்துக் காட்டி இருப்பர்கள். அதுபோல அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், வீரப்பனைப் பகைத்துக் கொள்ளாமல் நிதானமாக நடந்து கொண்டார். காட்டுக்குச் சென்று அவருடன் பேசிய அனுபவங்களை நிருபர் ஒருவர் எழுதிய அனுபவங்களில் ராஜ்குமார் பேசிய ஒரு பகுதியை எடுத்து வைத்திருந்தேன். டிராஃப்ட் வெள்ளத்தில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
நீக்குபழுத்த இலைக்கு மிகச் சிறப்பாக இலை என்பதை வைத்து துரை செல்வராஜு சார் எழுதியிருக்கிறார்
பதிலளிநீக்குகவிதையும் வார்த்தை விளையாட்டும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது
ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை திறமைகள். வியக்கிறேன்
வெளிப்பட வாய்பளித்த எபியை எண்ணி மகிழ்கிறேன்
நெல்லை அவர்களுக்கு நன்றி
நீக்குஇலையைப் பற்ற்ய ஓர் அருமையான தத்துவார்த்தமான பார்வை. சிறப்பு!
நீக்குநிகோ சோப் விளம்பரம்.. ஆமாம் இந்த சோப்புகளினால் என்ன பயன்? உபயோகிப்பவர்களுக்கு. விற்பவர்களுக்கல்ல
பதிலளிநீக்குஸ்கின்னுக்கு நல்லது அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லி விற்று விடுகிறார்கள். ஆனால் நான் இப்படி ஒரு சோப்பை கேள்விப்பட்ட ஞாபகம் கூட இல்லை.
நீக்குநீகோ சோப் நான் சின்ன வயசில் இருந்தே நிறையப் பயன்படுத்தி இருக்கேன். கசக்கும். தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு நல்லது. எனக்கு அடிக்கடி தோலில் அரிப்பு, சிவப்பாக மாறுவது, புண்ணாவது என இருந்ததால் இதைத் தான் வெகு காலம் தேய்த்துக் குளிச்சிருக்கேன். விளம்பரங்களும் அந்தக்கால வாராந்தரிகளில் பார்த்திருக்கேன். மருந்துக்கடைகளில் மட்டுமே கிடைக்கும். இப்போவும் இருக்குனு நினைக்கிறேன். இப்போவும் தோலுக்கான சோப் ஒன்று "கேட்டோ" என்பது தான் தேய்ச்சுக்கிறேன்.
நீக்குநீக்கோ தான் இப்போது நீம் என்று பெயர் மாறி இருக்கிறதோ...
நீக்கு"நீம்" வேறே! "நீக்கோ" வேறே. நீம் சோப் முழுக்க முழுக்க வேப்பிலை. நீக்கோ சில/பல ரசாயனங்கள் உள்ளது. இரண்டும் முற்றிலும் வேறு.
நீக்குஓஹோ... இந்த நீக்கோ ஒரு மாதிரி சல்ஃபர் வாசனை அடிக்குமோ..
நீக்குஓடிடி பட அறிமுகம் நன்று. பிரணவ் மோகன்லால் படம் பார்க்கணும். அடுத்த படம் எப்படி இருந்தது?
பதிலளிநீக்குஇரண்டுமே தற்கொலை கொலைப் படங்களா?
முதல் படத்தைவிட இரண்டாவது படம் சுமார்! ரிவால்வர் ரீட்டா என்றொரு படம் பார்க்கத்தொடங்கி பொறுமை இல்லாமல் நிறுத்தி விட்டேன். புதுப்பப்படம். கீர்த்தி சுரேஷ்!
நீக்குபிரணவ் மோகன்லால், மோகன்லாலின் மகனா? கேள்விப்படவே இல்லை. த்ரில்லர் படம் என்பதால் பார்க்கவும் ஆவலாக இருக்கு. அதோடு ஜியோ ஹாட் ஸ்டாரும் இலவச இணைப்பாகக் கிடைச்சிருக்கு. பார்க்க வாய்ப்பிருந்தால் பார்க்கணும். என்ன ஒண்ணு! மனசு பொருந்தணும்!
நீக்குஆம். மோகன்லால் மகனேதான். நம்பிப் பார்க்கலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், நம் நட்பு குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். புது வருடம் அனைவருக்கும் பல நன்மைகளை தர வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குகமலா ஹரிஹரன் மேடத்திற்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடத்திலிருந்து எப்போதுமுள்ள அடை, உப்புமா, தோசை இட்லி என்றில்லாமல் புதிய ரெசிப்பிகளாகச் செய்யும் வாய்ப்பு கிட்டட்டும்
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
நீக்குஉங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினரும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புது வருடத்தில் அனைவருக்கும் அனைத்தும் நல்லவையாக நடந்தி இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தங்களது யோசனைப்படி பழைய ரெசிபிகளை விடுத்து புது வகையான ரெசிகளை செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் இன்று பாருங்கள்..! காலை காஃபிக்கு பாலை அடுப்பில் வைத்ததுமே கேஸ் தீர்ந்து விட்டதென காட்டியது. வேறு மாற்றி பாலை சுடவைத்து, குடிக்க மனது அலுத்துக் கொண்டது. (முதல் நாளே முதல் துவக்கத்திலேயே இப்படியா என..) புது ரெசிபிகளை என்னிடமிருந்து அடுப்பும் எதிர்பார்க்கிறது போலுமென உங்கள் கருத்தைப் படித்ததும் நினைத்துக் கொண்டேன். ஹா ஹா ஹா. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிலிண்டரே எதுக்கு எப்போப் பாத்தாலும் கஷ்டப்படறீங்க? என்னைச் சாக்கிட்டாவது இன்று முழுவதும் வெளீல சாப்பிட்டு எஞ்சாய் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கு. வாய்ப்பை நழுவ விட்டுட்டீங்களே
நீக்குஆஹா.. சிலிண்டருக்கு இப்படியான நல்லெண்ணமா ? இதை நான் யோசிக்கவேயில்லை. காலை எழுந்தவுடனேயே இப்படியாகி விட்டதே என்ற வருத்தந்தான் முதலில்வந்தது. தங்களின் பாஸிட்டிவான சிந்தனைக்கு நன்றி.
நீக்குமேலும், வீட்டில் மகன்கள் நாளை, மறுநாள் இரண்டு நாட்களும் வெளியில் எங்காவது போகலாமென பேசிக் கொண்டுள்ளனர். அப்போது கண்டிப்பாக வெளி உணவுதான்..! ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக நாங்கள் இதில் கலப்போமாவெனவும் தெரியவில்லை. ஆண்டவன் சித்தம். எதுவோ அதுதானே நடைபெறும். நன்றி.
(முதல் நாளே முதல் துவக்கத்திலேயே இப்படியா என..)//
நீக்குஅக்கா, இது யதேச்சையாக நடப்பது. அதையும் இதையும் முடிச்சுப் போட்டா!!! ஹிஹிஹி
நெல்லை காஸ்சிலிண்டர் தீர்ந்து போனா வெளிய சாப்பிடலாம் தான் ஆனா ரெண்டு சிலிண்டரும் தீர்ந்தாதானே. இல்லைனா இன்னொரு சிலிண்டர் இருக்கப்ப எதுக்குன்னுதான் மனசுக்கு தோணும். வீட்டில் இருப்பவங்களூம் அதுக்கு ரெடியா இருக்கணுமே நாம மட்டும்னா ஓகே...
கீதா
எனக்கு கூடத்தான் வருடத்தின் முதல் நாளே விருப்பம் மறுக்கப்பட்டது. வாணலி தோசை கேட்டதற்கு மாவு காலியாகி விடும் என்று பாஸ் மறுத்து விட்டார். நான் கோபித்துக் கொண்டேனா என்ன! இல்லை கோபிக்கத்தான் முடியுமா?
நீக்குஅவ்வளவு அன்பு என்று சொல்ல வருகிறேன்..
ஓ! புத்தாண்டு வருட மாற்றத்துடன் தொடக்கமா!!!!
பதிலளிநீக்குகீதா
சும்மா.. சின்ன மாற்றம் முதலில்.. போகப்போக பார்க்கலாம். வாங்க கீதா.. புத்தாண்டுக்கு புதிய ஐடி! கலக்கறீங்க...
நீக்குகீதார்.. அட புது ஐடி
நீக்குஹாஹாஹா ஆமா என் ஒரிஜினல் கீதா ஐடி வைச்சு இங்கு, கோமதிக்கா, கில்லர்ஜி தளங்களில் போட முடியாது. வெங்கட்ஜி தளம் பானுக்கா தளம் போன்றவற்றில் பெயரில்லா என்று வரும் கீழே என் பெயரைக் கொடுப்பேன்...
நீக்குஅப்ப மத்தவங்க போடற கமென்ட்ஸ் நம்ம ஐடிக்கு வராது. துளசி ஐடிக்குப் போகும் அது அவருடைய பெர்சனல் ஐடியும் கூட பாக்ஸ் ரொம்பி வழியும் ஏற்கனவே எனவே நான் இதைச் சொல்லிட்டிருந்த போது ஸ்ரீராம் சொன்னார் இப்படிச் செய்து பாருங்கன்னு ....செய்தேன்...வந்தேன்.
ஏற்கனவே என் பெர்சனல் ஐடி தவிர இன்னும் இரு ஐடி இருக்கு ...அந்த ரெண்டும் ஃபோட்டோஸ் போட்டு வைக்க....அப்படி மொத்தம் இப்ப 4 ஆகிடுச்சு. பெர்சனல் ஐடி, இந்த ஐடி இரண்டையும் கூகுள் ஃபோட்டோஸ் சிங் பண்ணாம...
கீதா
"கீதார்.. ..." ஹா.. ஹா.. ஹா... மரியாதை பன்மை!
நீக்குபாசிட்டிவ் செய்தி மிக நல்ல விஷயம்!
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.
நீக்குவிஞ்ச்சுக்கு லஞ்ச்
பதிலளிநீக்குரசனை... சொல்லழகு..
நன்றி செல்வாண்ணா.
நீக்குபொக்கிஷம் பகுதி அருமை
பதிலளிநீக்குநன்றி செல்வாண்ணா. இந்த வாரம் படிக்க முடிகிறது அல்லவா?
நீக்குசாமா, உமாபதியின் நகைச்சுவைகள் இந்த வாரம் படிக்க முடிஞ்சது. பரவாயில்லை ரகம். அதிலும் எல்லாமும் தீபாவளி நகைச்சுவைத் துணுக்குகள். ஓகே!
நீக்குஆமாம் கீதாக்கா.. படிக்க முடிஞ்சிருக்கும். சிரிப்பு வந்ததா என்று கேட்க மாட்டேனே...
நீக்குஅரட்டை கதம்பம் வழக்கம் போல....
பதிலளிநீக்கு(முழுதாகப் படிக்கவில்லை)
ஓகே... ஓகே... புரிந்தது.
நீக்குபகிர்வு நன்று.
பதிலளிநீக்குமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..... நல்லதே நடக்கட்டும்.....
நன்றி வெங்கட்.
நீக்குஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
படிப்பதற்கு இலகு தான்...
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்...
ஆஹா.. நன்றி.
நீக்குபட்டர்கள் மொபைலில் மூழ்கி இருந்தனர். //
பதிலளிநீக்குஹாஹாஹா இது இப்போது எங்கும் பெரும்பாலும்!!
இங்குள்ள ஆஞ்சு கோவிலில், பூஜை செய்பவர்கள் மொபைல் சகிதமாக....யாரேனும் வந்தால் அவர்கள் பைசா போடுபவகர்களா இருந்தால் (அவங்களுக்குத் தெரியும் யார் போடுவாங்க இல்லைன்னு) எழுந்து சென்று தீப ஆரத்தி காட்டி தீர்த்தம் கொடுத்து.....
நான் போடும் வழக்கம் இல்லாததால் செய்ய மாட்டாங்க. எனக்கு அது முக்கியமும் இல்லை.
ஸோ நகர்ந்துவிடுவேன்
கீதா
ஏற்கனவே பணம் புழங்குவதால் இங்கு பணம் போட்டாலும் மதிப்பதில்லை.
நீக்குஇருவர் அவர்களுக்குள் பணத்தை எண்ணியவாறு தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர். //
பதிலளிநீக்குஹாஹாஹா....எனக்குப் பிடிக்காத ஒன்று.
கீதா
உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் ஒண்....ணும் பண்ண முடியாதாக்கும்!
நீக்குஅதேதான் ஸ்ரீராம்...ஒன்னும் பண்ண முடியாது!!
நீக்குகீதா
///இருவர் அவர்களுக்குள் பணத்தை எண்ணியவாறு தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்...///
பதிலளிநீக்குவாக்குவாதம் எதற்காக என்று
போட்டிருக்கலாம்...
பேசுவது கேட்காத தூரம்.
நீக்குஒருவேளை உலக அமைதிக்காக இருக்குமோ!...
பதிலளிநீக்குஅவர் பெயர் உலகம் என்கிறீர்களா? லோகநாதன்?
நீக்குபாஸின் கேள்வியும், உங்க பதிலிற்கும் கைதட்டினேன்!!!
பதிலளிநீக்குபணம் கொடுத்து தரிசனம் செய்வது எனக்கு உடன்பாடு கிடையாது.
புளியோதரை நன்றாக இருக்கும் அங்கு
கீதா
நானும் இப்படி நினைத்ததுண்டு. நம் சௌகரியத்துக்காக அப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எப்படித் தவறாகும்? கோயில் பணியாளர்கள செலவுக்கு உபயோகம் அல்லவா? எவ்வளவு பேருக்கு சம்பளம் கொடுக்கணும்
நீக்குமூன்றுமே நன்றாய் இருந்தது. பணம் கொடுப்பது பிடிக்காதுதான் என்றாலும் நானும் சில தவறுகள் செய்திருக்கிறேன்.. வேறு வழியின்றி..
நீக்குநெல்லை, நீங்க சொல்வது சரிதான்....ஆனால் இல்லாதவங்க?
நீக்குகூடவே திருப்பதில உண்டியல்லயே ஏகப்பட்டது விழுதே.
கீதா
அது என் தனிப்பட்ட கருத்து நெல்லை. யாரையும் குறை சொல்ல மாட்டேன்.
நீக்குஇங்கு நான் சொன்னதில் இன்னொன்றும் உண்டு. கோவிலுக்கு டிக்கெட் என்பது தனி. அல்லாமல் அங்கு வேலை செய்வோருக்குக் கொடுப்பது, கொடுக்க வேண்டிய சூழல் பத்தியும்....
கீதா
//பணம் கொடுத்து தரிசனம் செய்வது எனக்கு உடன்பாடு கிடையாது.// //நம் சௌகரியத்துக்காக அப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எப்படித் தவறாகும்?// your red is not my red. பணம் கொடுத்துப் பார்க்கும்போது அவர் முதலாளித்துவ (capitalist) கடவுள். தர்ம தரிசனத்தில் பார்க்கும்போது அவர் பொதுவுடைமைக் (communist) கடவுள்.
நீக்குநல்ல ஜமாளிப்பாய் இருக்கே TVM....
நீக்குஉண்மை இதுதானே. ரொம்பல்லாம் கவலைப்பட வேண்டாம். கோவில் சமாச்சாரம்லாம் சின்ன வயசுக்கு ஓகே.
நீக்குSwami vivekananda Chicago lectures: A Hindu scripture says, “External worship, material worship is the lowest stage; struggling to rise high, mental prayer is the next stage, but the highest stage is when the Lord has been realized.” (maha nirvana tantra)
ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. வீரப்பன் நல்லவனா? கெட்டவனா? என்றால் நல்ல கெட்டவன் என்று பதில் கிடைக்கிறது. சிரிப்பு வெடிகள் சுமார். நீக்கோ சோப்பு நான் உபயோகித்திருக்கிறேன். சோப்பை மெட்டல் பாக்ஸில் வைக்கக்கூடாது என்று கவரில் இருக்கும்.
பதிலளிநீக்குபுகையிலைக்கு பெண் படம் விளம்பரமாக!
Jayakumar
பதிவு நீளமாயிருக்க வேண்டாம் என்று கொஞ்சம் குறைத்தால் குறைத்த பாகத்தில் சுவைபாகம் போய்விடுகிறதோ என்னவோ.. நீளமான பதிவையே பார்த்துப் பழகிய கண்களுக்கு பதிவு சட்டென முடிந்தால் லேசாய் ஒரு ஏமாற்றம் வருமோ... நன்றி ஜெயக்குமார் ஸார்...
நீக்குஇறந்கும் போது கூட்டம்....சரி, ஸ்ரீராம், அப்ப வி ஐ பி சிபாரிசு எல்லாம் செல்லுபடியாகலையோ?
பதிலளிநீக்குகீதா
யாகலை!
நீக்குநரசிம்மரின் புன்னகையின் அர்த்தம் புரிந்தது அடுத்தடுத்த வரிகளில்!!! அந்தப் புன்னகையின் பின்புறம் என்ன இருந்திருக்கும்னு எனக்கும் ஹேஷ்யங்கள்!!
பதிலளிநீக்குகீதா
"ஆனால் உனக்கு தரிசனம் செய்ய அனுமதி கொடுத்தேன் பார்... கொஞ்சம் முன்னேறி இருக்கிறாய்..." என்பதுதான் அர்த்தமோ...
நீக்குபாஸ் லஞ்சம் கொடுத்து ஒரு மிகச்சிறிய கூஜாவில் மேலேயிருந்து தீர்த்தம் வாங்கி வந்திருந்தார். அதை வால் உம்மாச்சிகளிடமிருந்து காப்பாற்ற... //
பதிலளிநீக்குஹாஹாஹா சிரித்துவிட்டேன்!
எங்க வீட்டுல ஒரு தூரத்துச் சொந்தம் அவர் வாலாழ்வார் என்பார். எல்லாத்துக்கும் ஆழ்வார் என்று சேர்த்துக் கொள்வார். பெண் என்றால் நாச்சியார்!!!
கீதா
தும்பிக்கை ஆழ்வார் போல...
நீக்குபடங்கள் சூப்பர். அந்த மரம் படம் அழகு
பதிலளிநீக்குகோவில் இருக்கும் மலைக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த ஒற்றை மலை ஏதோ முனிவர் கோவிலைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலத் தோன்றியது...
கீதா
கண் பார்க்கும் காட்சிகள்; மனம் வரையும் ஓவியங்கள்!
நீக்குதுரை அண்ணாவின் கவிதை நன்று. கொஞ்சம் புரியாமல் அப்புறம் புரிந்தது.
பதிலளிநீக்குபுரிந்ததிலையா இலை?
இலை!
புரியாத இலையா?
இலை
புரிந்தது இலை!
கீதா
நன்றி சகோ
நீக்குவீரப்பன் - சந்தனார் எழுதிய விஷயஙகள் யோசிக்க வைக்கும் விஷயங்கள். வீரப்பனை அரசியல்வாதிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்லலாமோ?
பதிலளிநீக்குகீதா
இவரும் அவர்களை! பலவான் யாரென்று தெரிந்திருக்கும்!
நீக்குபிரணவ் மோகன்லால் படத்தின் கதை ஓரளவு புரிகிறது.
பதிலளிநீக்குரெண்டாவது படம் த்ரில்லரோ?
இப்படி மட்டும்தான் என்னால் கேட்க முடியும் ஹாஹாஹா
கீதா
கேட்டுப் "பார்க்கிறீர்கள்"!
நீக்குவிளம்பரத்துக்கான கோபுலு படம் என்ன ஒரு அழகியல் ரொம்ப ரசித்தேன்...
பதிலளிநீக்குஅந்த வரிகளில் 'புத்தாண்டு' என்று இருந்திருந்தால் இன்று பொருத்தமாக இருந்திருக்கும்!
கீதா
சேர்த்திருக்கலாமோ... என்னைச் சொன்னேன்!
நீக்கும்ஹூம் சோப் கேள்விப்பட்டதில்லை. எனக்கென்ன அம்புட்டு வயசாகிடுச்சா என்ன!!!!
பதிலளிநீக்குபுகையிலை விளம்பரத்துக்கு அது கே ஆர் வி யா??
கீதா
// எனக்கென்ன அம்புட்டு வயசாகிடுச்சா என்ன!!!! //
நீக்குகடந்த வாரங்களின் கமெண்ட் ஒன்றின் பாதிப்பு!!?
நன்கொடை வரி!!! ஹாஹாஹ்ஹ நல்ல சிந்தித்திருக்கிறார் சாமா!!!
பதிலளிநீக்குஅந்த மாடு ஜோக் புரியலையே
கீதா
அப்போது வரிவிதிப்பில் சிறந்து விளங்கியதில் சக்கரவர்த்தி யார் தெரியுமா?
நீக்குஅவர் கறக்கும் மாடே போலி, பொம்மை என்று நான் நினைத்தேன்.
நீக்குநரகாசுரன் ஜோக் புன்சிரிக்க வைத்தது. பட்சணமும்...
பதிலளிநீக்குஒரு காலத்தில் தலைதீபாவளி மாப்பிள்ளை ஜோக்ஸ் பிரபலம்..
இப்ப யதார்த்தம் எப்படியோ?
மாப்பிளை பல்லைத் தட்டி கைக்குப் போட்டுக்கிட்டார் போல!!
கடைசி ஜோக் - புன்சிரிப்பு.
புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்
கீதா
__/\__
நீக்குதுரை செல்வராஜு கவிதைக்கு
பதிலளிநீக்குஈடு இணை இல்லை.
நன்றி...
நீக்குஅப்படி எதையும் பெரிதாக எழுதி விட வில்லை ஜி
ஈடு இணை இலை...!
நீக்குஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் - 2026 - கில்லர்ஜி
பதிலளிநீக்குவாங்க ஜி. வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடத்தில் உங்கள் எண்ணங்கள், ஆசைகள் யாவும் நிறைவேறட்டும்.
நீக்குPositive செய்தி இந்த வாரத்திலிருந்து இங்கு இடம் பெறுமா? நல்லது.
பதிலளிநீக்குநல்ல செய்திதான்.
நரசிம்மமரை தரிசிக்கச் செய்து விட்டீர்கள் ஆண்டின் தொடக்கத்தில்.
நல்லபடியாக ஆரோக்கியமாக வைக்க வேண்டும். மன தைரியத்தை தர வேண்டும் நரசிம்மர் .
ரோப்கார் அனுபவங்களை நன்றாக சொன்னீர்கள்.
வின்ச் நிறுத்தப்பட்டதால் கீழே இறங்கி வர வேன்டியது ஆகி விட்டதா?
கால் பலத்தை கொடுத்து இறங்க வைத்தார் என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்.
வாங்க கோமதி அக்கா... அப்படியே என் கால்களை குணப்படுத்தி விடுவார் என்றும் குழந்தை மாதிரி யோசித்தேன்!
நீக்குபடி இறங்கும் போது பார்த்த காட்சிகள் எல்லாம் படங்கள் நன்றாக இருக்கிரது. இப்படி வயதான அம்மாவுக்கு சுத்தம் செய்யும் வேலை செய்பவருக்கு காசு கொடுக்கலாம். கொடுத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குமன்னிச்சுக்கோங்க அக்கா... மற்ற இடங்களில் ஓகே. பார்க்குமிடம் எல்லாம் பார்ப்பவர்கள் எல்லாம் கைநீட்டினால் கஷ்டமாக இருக்கிறது.
நீக்குநாமோ கோவிலின் உள்ளே இறைஞ்சுகிறோம். இவர்கள் வெளியே!
இலைக்கு
பதிலளிநீக்குபோற்றியே திருப்பாட்டு!...//
சகோ துரைசெல்வராஜூ அவர்களின் இலைக்கு போற்றி திருப்பாட்டு அருமை.
(Y)
நீக்குபொக்கிஷபகிர்வுகள் அருமை. கோபுலு அவர்களின் கைவண்னம் அருமை.
பதிலளிநீக்குநியூட்றின் சாக்லேட் டப்பா இரண்டு அம்மாவிடமிருந்தது அம்மா அதில் நூல் கண்டுகள் உஷா தையல் மிஷின் பாபின்கள் போட்டு வைத்து இருப்பார்கள்.
சிரிப்பு வெடிகள் அருமை
அதே போல பிரிட்டானியா பிஸ்கட் டின். நல்ல நினைவுகள். பிஸ்கட் என்பதை என் மகன் சிறுவயதில் பிக்கட்டு என்பான்!
நீக்கு