டோக்ளா
தேவையான பொருள்கள்:
தயிர் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 1/2 டீ ஸ்பூன்
ஈனோ சால்ட் - 1 1/4 டீ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 1/4 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 அல்லது 3 டீ ஸ்பூன்
சர்கரை தண்ணீர்(Sugar syrup) தயாரிக்க தேவையான அளவு:
சர்க்கரை - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 1 கப்
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கருவேப்பிலை
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, உப்பு, ஈனோ சால்ட் இவைகளை போட்டு நன்றாக கலக்கவும். பிறகு தயிரை மற்ரும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு படத்திற்கு கலந்து கொள்ளவும். கடைசியாக பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
ஒரு பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி அதில் கலந்து வைத்திருக்கும் கடலை மாவு கரைசலை கொட்டி, இட்லி பானை அல்லது குக்கரில் வேக வைக்கவும்.
வேக வைத்த மாவு நன்றாக பொங்கி வரும். ஒரு குச்சியால் குத்திப் பார்த்தால் அதில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று பொருள். உடனே அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தை எடுத்து வெளியே வைத்து, ஆற விடவும். ஆறிய பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, துண்டு போட்டுக் கொண்டு, அதன் மீது கடுகு தாளிக்கவும். பிறகு தேங்காய் துருவலையும் கொத்துமல்லி தழையையும் தூவவும். பிறகு எலுமிச்சை சாறை எல்லாத் துண்டுகளிலும் படுமாறு ஊற்றவும்.
இதற்கிடையில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, அதில் கீறிய பச்சை மிளகாய். கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
இந்த சர்க்கரை கரைசலை துண்டுகள் போட்டிருக்கும் டோக்ளா மீது ஊற்றவும். அப்படி ஊற்றும் பொழுது பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவையும் விழலாம், தப்பில்லை. சுகர் சிரப்பில் சற்று நேரம் ஊறிய பிறகு டோக்ளாவை தனியாகவோ, கொத்தமல்லி சட்னியோடோ சாப்பிடலாம். பிறகு ஒரு மசாலா சாய் அருந்துங்கள்!


சூப்பர் ரெசிப்பி பானுக்கா. நம் வீட்டில் எல்லோருக்குமே ரொம்பப் பிடிக்கும்.
பதிலளிநீக்குநல்லா வந்திருக்கு. படங்கள் சூப்பர்
கீதா
நன்றி கீதா.
நீக்குமுதலில் தெரிந்து கொண்ட போது நானும் ஈனோ சால்ட் போட்டுதான் செய்தேன். அது ஆச்சு பல வருஷங்கள் முன்ன. அதன் பின் அவங்களோட ஒரிஜினல் செய்முறைப்படி....பருப்பை ஊறவைத்து அரைத்து ஃபெர்மன்ட் செய்து (இட்லி போன்று) அப்புறம் இதே செய்முறை ஈனோ போடாமல். நன்றாக வரும்.
பதிலளிநீக்குசில சமயம் ரவை டோக்ளா, (ரவா இட்லி போலதானே!!! ஆனால் தயிர் சேர்க்காமல், அல்லது கடலைமாவோடு ரவையும் சம அளவு கலந்து செய்யலாம்.
ரவை பாம்பே ரவை அல்லாமல் சிரோட்டி ரவை. ஃபைன் ரவை.
கீதா
ரவை டோக்ளா ரவா இட்லி மாதிரியா?
நீக்குஇவங்க குஜராத் பக்கம் போனால் நானே ஆட்டோ அனுப்பச் சொல்லுவேன்
நான் முதல் முறையாக டொக்ளா செய்த பொழுது ஈனோ சால்ட் சேர்க்காமல் செய்து அது கடினமாக இருந்தது. அதனால் ஈனோ சால்ட் சேர்க்காமல் செய்வதில்லை. என் மகள் கூட ஈனோ சால்ட், பேக்கிங் சோடா ரெண்டும் வேண்டுமா என்று கேட்டாள்.
நீக்குரவை டோக்ளா செய்து பார்க்கிறேன்.
தாளிப்பு பச்சை மிளகாயோடு அது பார்க்கவே அழகா இருக்கு. அதிலேயே சுவை ஏறுகிறது, பானுக்கா.
பதிலளிநீக்குகீதா
ஆமாம், சுகர் சிரப் சுவை கூட்டத்தான் செய்யும்.
நீக்குகுடியரசு தின நல்வாழ்த்துகள் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஇப்பதான் வெங்கட்ஜி தளத்தில், கஷ்மீரில் இனியேனும் அமைதி நிலவ வேண்டும் என்றும் சொல்லிவிட்டு...வடகிழக்குப் பகுதியும் உட்பட என்று இங்கு சேர்த்துக் கொள்கிறேன். நம் நாட்டில் அமைதி நிலவிட வேண்டும் ..
கீதா
டோக்ளா - குஜராத்/ராஜஸ்தான் தாண்டி இப்போது எல்லா இடங்களிலும் எளிமையான இந்த காலை உணவு இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு.
பதிலளிநீக்குசுவையான குறிப்பு. நன்றி.
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட். குடியரசு தின வாழ்த்துகள்!
நீக்குஎனக்கு டோக்ளா ரொம்பப் பிடிக்கும். ஆனால் இந்த கமன் டோக்ளா மென்னைப் பிடிக்கும். அதனால் கைக்கெட்டும் தூரத்தில் தண்ணீர் வைத்திருப்பேன். பஹ்ரைனில் இருந்தபோதுதான் சுவைக்க ஆரம்பித்தேன்
பதிலளிநீக்குஇதைவிட ரவா டோக்ளா ரொம்பப் பிடிக்கும். எனக்கு அதன் பெயர் தெரியாது என்பதால் சவேது டோக்ளா எனக் கேட்பேன். அதன் சுவை சூப்பர்
//இந்த கமன் டோக்ளா மென்னைப் பிடிக்கும்.// சரியானபடி செய்தால் மென்னைப் பிடிக்காமல் சாஃப்டாக வரும். எங்கள் வீட்டில் நன்றாக வந்தது.
நீக்குஇங்கெல்லாம் கமன் டோக்ளா சாஃப்டா இருக்கணும்னு சீனித்தண்ணியை அளவுக்கு அதிகமாக மேல விட்டு நம்ம வெயிட்டை ஏத்துவதால் அவ்வளவு பிடிப்பதில்லை
பதிலளிநீக்கு:))
நீக்குபடத்துல அழகா இருக்கு. நல்லாருக்கு என்பதற்கான படம் போட்டிருப்பதால் நல்லாத்தான் இருந்திருக்கும்
பதிலளிநீக்குகீர சொல்ற மாதிரி சிரோட்டி தேவையில்லை நார்மல் ரவையே போதும்
நன்றி நெல்லை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குடோக்ளா செய்முறை மற்றும் படங்கள் அட்டகாசம். ஆனால் கடலை மாவு தான் பயமுறுத்துகிறது. வாயு தொல்லை. ஆமாம் சீனி ஜீராவில் பச்சை மிளகாய் ஏன்?
பதிலளிநீக்குஒன்றோ இரண்டோ துண்டுகள் மைசூர் பாக் போல சாப்பிடலாம். முழுமையான காலை உணவாகக் கொள்ள முடியாது.
டோக்ளா, தேப்லா, கடி என்று தொடரலாம்.
Jayakumar
முருகா சரணம்
பதிலளிநீக்குஅனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஈனோ சால்ட், பேக்கிங் சோடா
பதிலளிநீக்குஇல்லாமல் செய்ய முடியாதா?
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க மனோ அக்கா.. வணக்கம். குடியரசு தின வாழ்த்துகள். எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சு...
நீக்குநல்லதொரு சுவையான குறிப்பு. படங்களும் அழகு!
பதிலளிநீக்கு