நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.3.26
பைனரில பதில் சொல்லு
சொல்ல வருவதை எப்படி வரையறை செய்து எழுதுவது என்று தெரியவில்லை. ஒரு கேள்வி கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், வரும் பதில், அதற்கான பதிலாய் இருக்கவேண்டும், அதற்கான நேரடியான பதிலாய் இருக்க வேண்டும். அந்தக் கேள்விக்கு ஒரு பதில் வரும். நாம் கேட்ட கேள்விக்கான பதில் கேட்கப்பட்ட இடத்திலேயே அனாதையாய் நிற்க, வந்த பதில் அதைக் கடந்து எங்கேயோ சென்றிருக்கும். கேள்வியை நாம் மறுபடி கேட்கவேண்டும்.
அவர் கேட்கும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் நான் பதில் சொன்னால் என் அப்பா கோபப்படுவார். 'கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வான். அதற்கு மேல் ஒரு வார்த்தை, விவரம் வராது' என்று கத்துவார். உதாரணமாக "அருணாச்சலம் கிட்ட நான் கொடுத்ததை கொடுத்துட்டியா?" என்று கேட்பார். "ம்ம்ம்" என்றோ, கொடுத்துட்டேன்" என்றோ பதில் சொன்னால்தான் இப்படி கோபப்படுவார்! இன்றைய நாளில் இதுவே கிடைக்காமல் நான் அல்லாடுகிறேன். அவர் கேட்பது"மொட்டையா அவ்வளவுதான் பதிலா? எப்போ போனே? என்ன செஞ்சுக்கிட்டிருந்தார்? அவர் வீட்ல இருந்தாரா? வீட்ல கொடுத்துட்டு வந்துட்டியா? அவர் என்ன சொன்னார்? அங்க எவ்வளவு நேரம் இருந்தே?" இவ்வளவு விவரமாக பதில் சொல்ல வேண்டும் என்பார். அப்படிச் சொன்னால் சாய்ந்து அமர்ந்து ரசித்தும் கேட்பார்!
'அவர் வீட்ல இல்லை, வீட்டில் கொடுத்து அவர் வந்தததும் கொடுக்கச் சொல்லி வந்திருக்கேன்' என்று சொன்னால் நிம்மதி இழந்து விடுவார். "அவர்கள் ஞாபகமாக அவர் வந்ததும் அவரிடம் கொடுப்பார்களா? பத்திரமாக வைத்திருப்பார்களா? வாங்கி எங்கே வச்சாங்கன்னு பார்த்தியா? மேஜை மேலயே வச்சு குழந்தைகள் எடுத்து விளையாட்டுப் போக்குல காணா அடிச்சுட்டா என்ன செய்யறது? என்ன சொல்லி கொடுக்கணும்னு சொல்லிட்டு வந்தியா? அவங்க அதை மறக்காம அவங்க கிட்ட சொல்வார்களா? என்று நிம்மதி இழப்பார். "அவங்க வீட்ல குழைந்தைகளே கிடையாதுப்பா "என்றால் "பக்கத்து வீடுகள்லேருந்து வரலாமில்ல? ரிலேஷன்ஸ் வரலாமில்லே? அது தவிர, என் மற்ற கவலைகளுக்கெல்லாம் என்ன பதில்?" என்பார்.
சமயங்களில் நம் குணத்தை தெரிந்து 'உன் குணத்திற்கேற்ப கேள்வி கேட்கறேன்' என்று அவரே விளக்கமாகச் சொல்லி நம்மை கேள்வி கேட்பார். அதற்கு நிஜமாகவே அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார் என்பதால் ஒற்றை வார்த்தையில்தான் பதில் சொல்ல முடியும்!
இதைப்பற்றி சுகுமாரிடம் பேசியபோது அவர் சொன்னார்...."உனக்காவது அப்போ சின்ன வயசு... என் தம்பிக்கு இப்போ 68 வயசாகுது. அவன் பேத்திக்கு காதுகுத்து.. சனிக்கிழமை ராத்திரியே அங்க போயிடலாமா, காலை டிபன் உண்டா, மதியம் சாப்பாடு உண்டா, யார் யார் வருகிறார்கள், அண்ணன் வந்தால் அவர் பெயரில் ஓதிவிடவேண்டுமே... இப்படி நிறைய கேள்வி கேட்கிறேன்.. எல்லாவற்றுக்கும் ஒற்றை வார்த்தையில் பட்டுக்காம பதில்.. சொந்தத்தம்பி.." என்று அலுத்துக் கொண்டார். அவர் சொன்னதை இன்னும் விவரித்து எழுதலாம். ஏற்கனவே நிறைய மேலேயும் கீழேயும் எழுதி இருப்பதால் ஒரு பாராவில் சுருக்கி விட்டேன்!
இப்போ என்னடான்னா கேட்ட கேள்விக்கே பதில் வரமாட்டேன் என்கிறது. எதையோ பேசுகிறார்கள் - சமயங்களில் சம்பந்தமில்லாமல் கூட! அல்லது தான் யாருக்கோ சொல்ல நினைக்கும் எதையோ அங்கு சொல்லி சொற்பொழிவாற்றுகிறார் கள். சில நேரங்களில் அவர்கள் சொல்லும் அந்த வியாக்கியானங்களுக்குரியவர்கள் அந்த இடத்திலேயே இருக்க மாட்டார்கள்.
நான் பாஸிடம் கூட அதுதான் சொல்வேன். கேட்ட கேள்விக்கு மட்டும் முதலில் சொல்ல வேண்டிய பதிலை சுருக்கமாக சொல்லி விடு. அது போதும். இதை நீ பழகினால் வளவளவென்று கதை அடிக்கும் வழக்கத்தைக் கூட மாற்றலாம்" என்பேன். ஏனெனில் அதனால் வரும் மன வருத்தங்களும், பிரச்னைகளும் கூட உண்டு.
இரண்டு நாட்களுக்கு முன் மனைவியின் தோழி வீட்டுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார் என்று சொன்னார். "நீ கூப்பிட்டாயா? அவர்களாகவே வருகிறேன் என்று சொன்னார்களா?" - சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளப் போகிறார்கள்.
நியாயமாக நான் கேட்ட கேள்விக்கு 'நான் அழைத்தேன்' என்றோ, 'இல்லை, அவர்களாகவேதான் வருகிறார்கள்' என்றோ பதிலளிக்க இரண்டே வாய்ப்பு. ஆனால் பாஸ் இதற்கு 15 மார்க் கொஸ்டினுக்கு பதில் சொல்வதுபோல என்னமோ சொல்லிக் கொண்டு போனார். அதில் எங்காவது ஒரு வரியில் இதற்கான பதிலும் இருக்கிறதா என்று பார்த்தால், ஊஹூம். அவர் என்ன சொன்னார் என்பது கூட இப்போது நினைவில் இல்லை. அப்படியே தைரியமாக அவரை இடைநிறுத்தி "நீயா, அவங்களா? பைனரிலே பதில் சொல்லு" என்று கேட்டேன். "உங்களுக்குப் புரியாதா.. அவங்களாதான் வர்றாங்க" என்றார் பாஸ், பழியை என்மேல் போட்டு!
1998 ல் இயக்குனர் சசியின் முதல் படமாக வந்தது லிவிங்ஸ்டன், கௌசல்யா நடித்த 'சொல்லாமலே' படம். ஹிந்தியில் இது தழுவப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ராணி முகர்ஜி என்பதை பானு அக்காவுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
அதில் ஒரு வித்தியாசமான பாடல். இசை அமைப்பாளர் பாபி எனும் கென்னடி இந்த ஒரு படத்துக்குதான் இசை அமைத்திருக்கிறார் என்கிறது விக்கி. 1964 ல் பிறந்து 2004 ல் மறைந்து விட்டாராம்.
மெதுவாய் தொடங்கும் பாடல் சரணங்களில் ஒரு படி ஏறி அடுத்தடுத்து உயரம் பெற்று, சரணத்தின் முடிவில் ஒரு உயரத்தை எட்டுகிறது.
பாடல் பல்லவிக்கு, சரணத்துக்கும் இடையில் வரும் இன்டர்கலூட் எனப்படும் இடையிசை எனக்கு அவ்வளவு ஈர்க்கவில்லை. அதற்கெல்லாம் இளையராஜாதான்,.
தலைவர் குரல். இந்தப் பாடலை நான் நேற்றுதான் முதல் முதலாகக் கேட்டேன்.
சிந்தாமணியை வா
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா!!
பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
சொல்லாமலே படம் நன்றாக ஓடியது, பிளாக்பஸ்டர் என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு பிடிக்கவில்லை. கேனத்தனமான இருந்தது என்று சொல்ன்னால் அடிக்க வரமான்டர்கள் என்று நம்புகிறேன். பிரபுதேவா நடிப்பதற்கு இருந்து அப்புறம் தயாரிப்பாளர் சொல்லி லிவிங்ஸ்டன் நடித்தாராம். பாடல்களை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. விவரம் இல்லை.
அதே படத்திலிருந்து இன்னொரு பாடல் ஹரிஹரன் - சித்ரா குரலில்..
ஹரிஹரன்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே தள்ளாதே தள்ளிச் செல்லாதே உன்னை நான் பாட சொல் ஏது உயிர் பேசாதே பேசாதே - (சொல்லாதே)
ஹரிஹரன்: மெளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய் சித்ரா : காதல் மொழி வாங்க வந்தாய் நீயும் சொல்ல மாட்டாய் ஹரிஹரன்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே சித்ரா : மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே ஹரிஹரன்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன் சித்ரா : காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்
(சொல்லாதே)
சித்ரா : காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம் ஹரிஹரன்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம் சித்ரா : நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு ஹரிஹரன்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு சித்ரா : சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே ஹரிஹரன்: என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ
எழுதுகிற வேளையிலேயே, கதை உரியவாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான கதை எழுதும்போதே, எழுதுபவரை மேலே இழுத்துச் செல்லும். வார்த்தைகள் சரியான இடத்தில் தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்ளும். சப்தம் நிற்கிற தருணமும் குழந்தைகள் நாற்காலிகளில் பொருத்திக்கொள்கிற தருணமும் ஒன்றாகும் ஸ்திதியான இசை நாற்காலி விளையாட்டுப் போல இது. கதையின் தொனி மேலும் மேலும் நுண்மையும் ஆழமும் கூடுவதால், ஒரு வகை அதிர்வு உடம்பில் தோன்றும். கையும் பேனாவும் விக்கித்தும் படபடத்தும் வழுக்கிக்கொண்டு தாளில் பரவும். அதுபோது ஏற்படும் பரவசம் அற்புதம். எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் என்பது இதுதான் என்பது புரிபடும்.
சில துர்பாக்கியமான விபத்துக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. மிக அதிகமாகவே நேர்ந்திருக்கின்றன. குறித்த தேதி, நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு, அந்த உத்தரவுகள் தரும் தகிப்பில் தயங்கி இருந்து விட்டுக் கடைசி நேரத்தில், மனசில் முழுமையாக எதுவும் திரளாத ஒரு புதிர் வேளையில் எழுதுவது போன்ற கொடுமையான சூழல் எதுவும் இருக்க முடியாது. கதை அந்த நேரத்தில் படுத்தும் பாடு, மிகவும் ஆக்ரோஷமான யுத்தம் போன்றது. வராத என்னை எதற்கடா கட்டி இழுக்கிறாய் என்கிற கோபம் கதைக்கு. நியாயம் தானே? இந்த விஷ வேளையில் கதைகள் உருவாவதில்லை. மாறாக ஒப்பேற்றப்படும். எழுத்தை ஜீவனோபாயமாகவும் ஏற்றுக்கொண்ட மூடத்தனமும், வெகுஜனப் பத்திரிகை அதர்மங்களுக்குள் சிக்கிக்கொண்ட கையாலாகாத்தனமும் கொண்டவனான எனக்கு இம்மாதிரி அனுபவங்கள் பல நூறு.
ஆனாலும் நான் சந்தோஷப்படக் காரணங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலுக்குள்ளும் நினைத்து மகிழ்ச்சியடைய, சில கதைகள் நான் எழுதியிருக்கிறேன்.
காலம், மிகக் கறாரான தராசைக் கையில் வைத்துக்கொண்டு கண்குத்திப் பாம்பாகச் சதா பரிசீலனை செய்துகொண்டேயிருக்கிறது. "சார்.... அந்தக் கதையை எழுதும்போது டிபன் ரெடியாகவில்லை. பசியில்தான் எழுதினேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்' என்றோ, ‘என்ன நடந்துச்சின்னா, நான் அந்தக் கதையை எழுதினபோது எனக்கு சரியான கேஸ் டிரபிள், கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருக்கும், பார்த்துகிடுங்கோ' என்றோ நானோ, அல்லது வேறு எந்த எழுத்தாளருமோ எந்தச் சலுகையையும் காலத்திடம் எதிர்பார்க்க முடியாது. கால வெள்ளம், அரைகுறைப் பிண்டங்களுக்கு இரக்கம் காட்டுவது இல்லை.
ஒரு முறை, ந.பிச்சமூர்த்தியைச் சாலியமங்கலத்தில் சந்தித்தபோது, நானும் பிரகாஷும் செல்லப்பாவைக் குறித்து, அவர் எழுதுவது கவிதைகள் தானா என்று தீவிரமாகக் கேட்டோம்.
வெண்மையும் மஞ்சளும் கலந்த தாடியை நீவிவிட்டுக் கொண்டு. சற்று நேரம் கழித்து, "செல்லப்பா கவிதையும் எழுத முயற்சிக்கிறான். எழுதட்டுமே. முயற்சி தப்பில்லையே, எல்லா முயற்சியும் முழுசாகணும்கிற கட்டாயம் இல்லையே" என்று அவருக்கே உரிய ஞானத்துடன் ந.பி. சொன்னது நினைவுக்கு வருகிறது.
ந.பி.சொன்ன அந்த முயற்சிக் கதைகள் அல்லது படைப்புகள், இலக்கியத்தைக் குறிவைத்து தோற்றவைகளுக்குத்தான் பொருந்துமே தவிர. அவசரத்துக்கு எழுதியவைகளுக்குப் பொருந்தாது. காலம், கண்டிப்பு மட்டும் அல்ல. கருணையும் கொண்ட ஜீவி. அது நோக்கத்தையும் பரிசீலிக்கும்.
சில நல்ல விஷயங்கள் எனக்குள் இருந்து, தம்மை அவை நல்ல கதைகளாக எழுதிக் கொண்டிருக்கின்றன. உருவாகி இருக்கின்றன. என் மகிழ்ச்சி அதன் பொருட்டுத்தான். அவைகளில் சில தீவிர வாசகர்கள் புறங்கையால் ஒதுக்கும் மோசமான பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கவனிப்புக்குள்ளாகாமல் போகும்போது நான் வருந்தியிருக்கிறேன். என் கதைகள் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கும் வாசகர் முன், எனக்கு விதிர்விதிர்ப்பு * ஏற்படுகிறது. நான் விரும்பி நேசிக்கும் அந்தக் கதைகளை அவர் வாசித்திருக்க வேண்டுமே எனும் தவிப்புக்கு நான் ஆளாகிறேன். என் நேசிப்புக் கதையை பட்டியல் போட்டு அவருக்கு தரவும் இயலாதே, மற்றும் அதை நீங்கள் வாசித்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் ஜனநாயகம் அல்லவே!
'சித்தன் போக்கு' சிறுகதை தொகுப்பில் பிரபஞ்சன் முன்னுரை - காலச்சுவடு பதிப்பகம்.
- சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரபஞ்சன் தன் 16 வயதிலேயே தனது கதைகளை பிரசுரத்தில் கண்டவர். 1961 முதலே அவர் கதைகள் சிறு இதழ்களிலும், 1965 முதல் கணையாழி, தீபம் என்று பெரிய இதழ்களிலும் பிரசுரமாகத் தொடங்கின. -
`ஜீவா விழியை உயர்த்து / சூழ்வின் இருள் என்ன செய்யும்? / அமுதத்தை நம்பு ஒளியை நாடு’ என்னும் அவரின் கவிதை வரிகளை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற காத்திரமான பல கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் ந. பிச்சமூர்த்தி.
ந. பிச்சமூர்த்திக்கு நான்கு மகள்கள். தற்போது அவர்களில் இருவர் காலமாகிவிட்ட நிலையில் மற்ற இருவர் சென்னையில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவரான மீனாட்சி பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.
``எங்கள் அப்பா வாழ்ந்த காலத்தில் அவர் ஏதோ கதைகள், கவிதைகள் எழுதுகிறார் என்றுதான் புரிந்துவைத்திருந்தோமே தவிர அவர் ஒரு காலத்தின் மகத்தான கலைஞன் என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டோம். அப்பாவைக் காண வீட்டிற்கு தமிழ் நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலும் அனைவரும் வந்துபோயிருக்கிறார்கள். அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்னும் எங்கள் ஆசை தற்போது நனவாகிக்கொண்டுவருகிறது. தற்போது அவரின் கவிதைகள் பள்ளிக்கல்வியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புதுக்கவிதையில் கால்பதிக்க விரும்புகிறவர்கள் எப்படி பாரதியை வாசிக்காமல் முன்னகர முடியாதோ அதேபோல ந. பிச்சமூர்த்தியை வாசிக்காமலும் கடந்துவிட முடியாது. தமிழ்க் கவிதை உள்ளவரை நினைவுகூரப்பட வேண்டியவர் அவர் என்பதில் எங்களுக்குப் பெருமையே. ” என்றார் மீனாட்சி பால சுப்பிரமணியன்.
- ஆனந்த விகடன் - ந. பிச்சமூர்த்தியின் பிறந்தநாள் பதிவு
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் , சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து கொண்டார்.
கேட்டபோதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் ஃபோட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார். ஆனால் அப்படி இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது, ஒரு சில பத்திரிகைக்காரர்கள்தான்.
1989 இல் வெளிவந்த ஒரு பத்திரிகைப் பேட்டியில் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள். வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள்.
இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:
"நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?"
இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா.
"இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.
கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.
இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது.
ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது.
ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது.
அவ்வளவு ஏன் ?
நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது. கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது."இதுதான் இளையராஜா சொன்ன பதில்.
ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு கொடுத்த தலைப்பு "நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்றுதான்."
"ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது. ஒலியன்றி வேறல்ல இசை.”
இப்படி வெளிவந்திருந்தது அந்த பேட்டி.
கொதித்துப் போனார்கள் கர்நாடக சங்கீத வித்வான்கள். எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன. ஆவேசமான அர்ச்சனைகள், அடுக்கடுக்காய் பிரச்சினைகள். இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.
அப்போதுதான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார். இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை. இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார். இசை அமைப்பது மட்டும் கலை அல்ல. சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலைதான். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்.
எனக்குப் பொறுமை கிடையாது. அதனால் இந்தப் படத்தின், சீரியலின் கதை என்ன என்று கேட்கும்போதே, அதிகபட்சம் மூணு வரிகளில்னு சொல்லுவேன்.
ஆனால் பொதுவா நாம கஷ்டப்பட்டு ஒரு செயலைச் செய்துமுடித்தால், என்ன அந்த வேலை முடிந்ததா என்று கேட்டால் விலாவாரியாக கதை சொல்ல ஆரம்பிப்போம். சட்னு சொல்லு என்றால் கோபம் வரும், எவ்வளவு கஷ்டப்பட்டு, புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறேன் என்று விளக்கும் சந்தர்ப்பம் போகிறதே என்று.
சகோதரர் நெல்லைத்தமிழரின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். செய்யும் செயலைப்பற்றி உடனுக்குடன் சொல்லா விட்டால், அந்த நேரங்களும் நம்மை கடந்து போய் விடுமில்லையா? நல்ல கருத்துக்கு நன்றி சகோதரரே.
பிரபஞ்சனை விட்டால் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலியா? செல்லப்பா குறித்து ந.பிச்சமூர்த்தியிடம் கேட்டார்களாம். அதுவும் செல்லப்பா எழுவது கவிதைகள் தானா? -- என்று. கேள்வியே இவர்கள் விருப்பும் பதிலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அசட்டுக் கேள்வி. அதற்கு ந.பி.யின் அழகான பதில் அவர் மன மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
அடுத்த பாராவிலேயே மோசமான பத்திரிகைகள் என்று இவர் கணித்திருக்கும் பத்திரிகைகளுக்கு இவரது 'நல்ல' கதைகளை ஏன் கொடுக்கிறார் என்று விளங்காத ஒரு விவரிப்பு. கொடுமையப்பா!
மொத்தத்தில் ஒரே ஒரு ஆறுதல். முக நூலில் 'அவர்' பதிவை அப்படியே எடுத்துப் போடாதது ஒன்று தான்!
குறைவாகப் பேசுவது பல விஷயங்களில் சௌகர்யம். ஆனால் சில சமயங்களில் இப்படித்தான் நீட்டி முழக்கி பேசுவது வழக்கமாக இருக்கிறது - பலருக்கும். சொன்னால் கோபம் வந்துவிடும்! :)
மற்றவையும் நன்று. இளையராஜா பேட்டி - வேதனை. பிரபலமாக இருப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு - இதுவும் ஒன்று.
ஒரு ஜோக் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்காக இரு முறையா பதிவிடுவீர்கள்?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... ஸாரி... கவனிக்கவில்லை.
நீக்குமாற்றியுள்ளேன்.
நீக்குஎனக்குப் பொறுமை கிடையாது. அதனால் இந்தப் படத்தின், சீரியலின் கதை என்ன என்று கேட்கும்போதே, அதிகபட்சம் மூணு வரிகளில்னு சொல்லுவேன்.
பதிலளிநீக்குஆனால் பொதுவா நாம கஷ்டப்பட்டு ஒரு செயலைச் செய்துமுடித்தால், என்ன அந்த வேலை முடிந்ததா என்று கேட்டால் விலாவாரியாக கதை சொல்ல ஆரம்பிப்போம். சட்னு சொல்லு என்றால் கோபம் வரும், எவ்வளவு கஷ்டப்பட்டு, புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறேன் என்று விளக்கும் சந்தர்ப்பம் போகிறதே என்று.
எல்லாம் சரிதான். ஆனால் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டாமா?
நீக்குசகோதரர் நெல்லைத்தமிழரின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். செய்யும் செயலைப்பற்றி உடனுக்குடன் சொல்லா விட்டால், அந்த நேரங்களும் நம்மை கடந்து போய் விடுமில்லையா? நல்ல கருத்துக்கு நன்றி சகோதரரே.
நீக்குந பிச்சமூர்த்தியைப் பற்றி விலாவாரியா எழுதிட்டு அவர் கவிதைகள் ஓரிரண்டைப் போடாமல் விட்டுவிட்டீர்களே
பதிலளிநீக்குஅது முன்னாலேயே போட்டிருக்கிறேனே என்று இப்போது விட்டு விட்டேன்!
நீக்குலிவிங்ஸ்டன் நல்ல நேரம், சொல்லாமலே சூப்பர் ஹிட். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகன். கொஞ்சம் கடுப்படித்தாலும்்சொல்லாமலே... நல்ல படம்.
பதிலளிநீக்குஎனக்கு பார்க்கும் பொறுமை
நீக்கு... இல்லாமல் இருந்தது.
நீக்குசாதனையாளர்கள், பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை.
பதிலளிநீக்குபத்திரிகையாளர்களும் பலவித எஜமானர்களின் அடிமைகள். அதனால் அவங்களை நம்பி எதையும் பேசக்கூடாது. அறம் இல்லாதவர்கள் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர்.
அவர்களுக்கு வியாபாரம் முக்கியம். தர்மம் நியாயம் எல்லாம் அப்புறம்! எத்தனைபேர் சோ மாதிரி பத்திரிகை நடத்த முடியும்?
நீக்குடிக் டிக் டிக் படத்தில் வில்லன் ஓபராய் அடிக்கடி சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது!
"எல்லா தர்மங்களும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்.." கள்ளச் சிரிப்பு தொடரும்!
தாய் கவிதை அருமை.
பதிலளிநீக்குகலைப் படைப்பு எதுவானாலும் பார்ப்பவர்கள் கோணத்தில் அர்த்தம், புரிதல் வேறுபடும்.
உண்மை. ஒருவகையில் சாதகமான கருத்து!!
நீக்கு'பைனரில்.பதில் சொல்லு' பகுதியில் வந்திருக்கும் விஷயங்கள், புதன் கிழமை வகுப்புக்கு பலருக்கான பாடம்.
பதிலளிநீக்குஐயோ.. வம்புல மாட்டி விடறீங்களே... வாங்க ஜீவி ஸார்... இது அது அல்ல.... இது வேற...
நீக்குபிரபஞ்சனை விட்டால் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலியா? செல்லப்பா குறித்து ந.பிச்சமூர்த்தியிடம் கேட்டார்களாம். அதுவும் செல்லப்பா எழுவது கவிதைகள் தானா? -- என்று. கேள்வியே இவர்கள் விருப்பும் பதிலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அசட்டுக் கேள்வி. அதற்கு ந.பி.யின் அழகான பதில் அவர் மன மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குஅடுத்த பாராவிலேயே மோசமான பத்திரிகைகள் என்று இவர் கணித்திருக்கும் பத்திரிகைகளுக்கு இவரது 'நல்ல' கதைகளை ஏன் கொடுக்கிறார் என்று விளங்காத ஒரு விவரிப்பு. கொடுமையப்பா!
மொத்தத்தில் ஒரே ஒரு ஆறுதல். முக நூலில் 'அவர்' பதிவை அப்படியே எடுத்துப் போடாதது ஒன்று தான்!
ஹா.. ஹா... இப்போதுதான் பிரபஞ்சன் பற்றி இரண்டாவது துளி. அதற்குள் அலுப்பா? இது முகநூலிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. 'அவர்' யாரென்றும் புரிகிறது!
நீக்குஇந்த வாரம் ஒரு கவிதை ஓவியத்தையல்லவா தீட்டியிருக்கிறீர்கள்?..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ஆஹா.. நன்றி ஜீவி ஸார்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்கு///பார்ப்பவர்கள்
பதிலளிநீக்குமனதுக்குத் தக்கபடி ///
கவிதை அருமை...
நன்றி செல்வாண்ணா
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குடி.ராஜேந்தர் எந்த வருடம் மாத்தி யோசித்தார்? ஏனென்றால் ஜெயராஜ் கதை எழுத, அதற்கு சுஜாதா படம் வரைந்திருக்கிறார். பத்திரிகை குமுதமா?சாவியா? நினைவில்லை.
பதிலளிநீக்குஅது எனக்கு நினைவில்லை. இது உஷா பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு. தேதி குறித்துக் கொள்ளவில்லை! வாங்க பானு அக்கா.
நீக்குதிரு. கோபுலு அவர்களது நகைச்சுவை
பதிலளிநீக்குசித்திரங்கள் பழைய நாட்களை
நினைவுக்குக் கொண்டு வருகின்றன...
ரசித்ததற்கு நன்றி செல்வாண்ணா.
நீக்குஇன்று எனக்கு ஏற்றாற்போல் தெளிவான கட்டமைப்பு...
பதிலளிநீக்குபைனரிலே பதில் சொல்லு...
சிறப்பு....
இன்றைய பசங்களிடம் விரிவான விடைகள் என்பதே இல்லை...
இப்போதெல்லாம் பெரும்பாலும் மௌனமாகவே இருந்து விடுகின்றேன்...
குறைவாகப் பேசுவது பல விஷயங்களில் சௌகர்யம். ஆனால் சில சமயங்களில் இப்படித்தான் நீட்டி முழக்கி பேசுவது வழக்கமாக இருக்கிறது - பலருக்கும். சொன்னால் கோபம் வந்துவிடும்! :)
பதிலளிநீக்குமற்றவையும் நன்று. இளையராஜா பேட்டி - வேதனை. பிரபலமாக இருப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு - இதுவும் ஒன்று.
ஜோக்ஸ் - ரசித்தேன்.