5.3.26

பைனரில பதில் சொல்லு

சொல்ல வருவதை எப்படி வரையறை செய்து எழுதுவது என்று தெரியவில்லை.  ஒரு கேள்வி கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், வரும் பதில், அதற்கான பதிலாய் இருக்கவேண்டும், அதற்கான நேரடியான பதிலாய் இருக்க வேண்டும்.  அந்தக் கேள்விக்கு ஒரு பதில் வரும்.  நாம் கேட்ட கேள்விக்கான பதில் கேட்கப்பட்ட இடத்திலேயே  அனாதையாய் நிற்க, வந்த பதில் அதைக் கடந்து எங்கேயோ சென்றிருக்கும்.  கேள்வியை நாம் மறுபடி கேட்கவேண்டும்.  

வர் கேட்கும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் நான் பதில் சொன்னால்  என் அப்பா கோபப்படுவார்.  'கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வான்.  அதற்கு மேல் ஒரு வார்த்தை, விவரம் வராது' என்று கத்துவார். உதாரணமாக "அருணாச்சலம் கிட்ட நான் கொடுத்ததை கொடுத்துட்டியா?" என்று கேட்பார்.  "ம்ம்ம்" என்றோ, கொடுத்துட்டேன்" என்றோ பதில் சொன்னால்தான் இப்படி கோபப்படுவார்!  இன்றைய நாளில் இதுவே கிடைக்காமல் நான் அல்லாடுகிறேன்.  அவர் கேட்பது"மொட்டையா அவ்வளவுதான் பதிலா?  எப்போ போனே?  என்ன செஞ்சுக்கிட்டிருந்தார்? அவர் வீட்ல இருந்தாரா?  வீட்ல கொடுத்துட்டு வந்துட்டியா?  அவர் என்ன சொன்னார்?  அங்க எவ்வளவு நேரம் இருந்தே?"  இவ்வளவு விவரமாக பதில் சொல்ல வேண்டும் என்பார்.  அப்படிச் சொன்னால் சாய்ந்து அமர்ந்து ரசித்தும் கேட்பார்!

'அவர் வீட்ல இல்லை, வீட்டில் கொடுத்து அவர் வந்தததும் கொடுக்கச் சொல்லி வந்திருக்கேன்' என்று சொன்னால் நிம்மதி இழந்து விடுவார். "அவர்கள் ஞாபகமாக அவர் வந்ததும் அவரிடம் கொடுப்பார்களா?  பத்திரமாக வைத்திருப்பார்களா?  வாங்கி எங்கே வச்சாங்கன்னு பார்த்தியா?  மேஜை மேலயே வச்சு குழந்தைகள் எடுத்து விளையாட்டுப் போக்குல காணா அடிச்சுட்டா என்ன செய்யறது?  என்ன சொல்லி கொடுக்கணும்னு சொல்லிட்டு வந்தியா?  அவங்க அதை மறக்காம அவங்க கிட்ட சொல்வார்களா? என்று நிம்மதி இழப்பார்.  "அவங்க வீட்ல குழைந்தைகளே கிடையாதுப்பா "என்றால்  "பக்கத்து வீடுகள்லேருந்து வரலாமில்ல?  ரிலேஷன்ஸ் வரலாமில்லே?  அது தவிர, என் மற்ற கவலைகளுக்கெல்லாம் என்ன பதில்?" என்பார்.

சமயங்களில் நம் குணத்தை தெரிந்து 'உன் குணத்திற்கேற்ப கேள்வி கேட்கறேன்' என்று அவரே விளக்கமாகச் சொல்லி நம்மை கேள்வி கேட்பார்.  அதற்கு நிஜமாகவே அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார் என்பதால் ஒற்றை வார்த்தையில்தான் பதில் சொல்ல முடியும்!

தைப்பற்றி சுகுமாரிடம் பேசியபோது அவர் சொன்னார்...."உனக்காவது அப்போ  சின்ன வயசு...   என் தம்பிக்கு இப்போ 68 வயசாகுது.  அவன் பேத்திக்கு காதுகுத்து..  சனிக்கிழமை ராத்திரியே அங்க போயிடலாமா, காலை டிபன் உண்டா, மதியம் சாப்பாடு உண்டா, யார் யார் வருகிறார்கள், அண்ணன் வந்தால் அவர் பெயரில் ஓதிவிடவேண்டுமே...  இப்படி நிறைய கேள்வி கேட்கிறேன்..  எல்லாவற்றுக்கும் ஒற்றை வார்த்தையில் பட்டுக்காம பதில்..  சொந்தத்தம்பி.." என்று அலுத்துக் கொண்டார்.  அவர் சொன்னதை இன்னும் விவரித்து எழுதலாம்.  ஏற்கனவே நிறைய மேலேயும் கீழேயும் எழுதி இருப்பதால் ஒரு பாராவில் சுருக்கி விட்டேன்!

ப்போ என்னடான்னா கேட்ட கேள்விக்கே பதில் வரமாட்டேன் என்கிறது.  எதையோ பேசுகிறார்கள் - சமயங்களில் சம்பந்தமில்லாமல் கூட!  அல்லது தான் யாருக்கோ சொல்ல நினைக்கும் எதையோ அங்கு சொல்லி சொற்பொழிவாற்றுகிறார் கள்.  சில நேரங்களில் அவர்கள் சொல்லும் அந்த வியாக்கியானங்களுக்குரியவர்கள் அந்த இடத்திலேயே இருக்க மாட்டார்கள்.

நான் பாஸிடம் கூட அதுதான் சொல்வேன்.  கேட்ட கேள்விக்கு மட்டும் முதலில் சொல்ல வேண்டிய பதிலை சுருக்கமாக சொல்லி விடு.  அது போதும்.  இதை நீ பழகினால் வளவளவென்று கதை அடிக்கும் வழக்கத்தைக் கூட மாற்றலாம்" என்பேன்.  ஏனெனில் அதனால் வரும் மன வருத்தங்களும், பிரச்னைகளும் கூட உண்டு.

இரண்டு நாட்களுக்கு முன் மனைவியின் தோழி வீட்டுக்கு வருவதாகச் சொல்லி இருக்கிறார் என்று சொன்னார்.  "நீ கூப்பிட்டாயா?  அவர்களாகவே வருகிறேன் என்று சொன்னார்களா?" - சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளப் போகிறார்கள்.

நியாயமாக நான் கேட்ட கேள்விக்கு 'நான் அழைத்தேன்' என்றோ, 'இல்லை, அவர்களாகவேதான் வருகிறார்கள்' என்றோ பதிலளிக்க இரண்டே வாய்ப்பு.  ஆனால் பாஸ் இதற்கு 15 மார்க் கொஸ்டினுக்கு பதில்  சொல்வதுபோல என்னமோ சொல்லிக் கொண்டு போனார்.  அதில் எங்காவது ஒரு வரியில் இதற்கான பதிலும் இருக்கிறதா என்று பார்த்தால், ஊஹூம்.  அவர் என்ன சொன்னார் என்பது கூட இப்போது நினைவில் இல்லை. அப்படியே தைரியமாக அவரை இடைநிறுத்தி "நீயா, அவங்களா? பைனரிலே பதில் சொல்லு"  என்று கேட்டேன்.  "உங்களுக்குப் புரியாதா..  அவங்களாதான் வர்றாங்க" என்றார் பாஸ், பழியை என்மேல் போட்டு!

==============================================================================================================

டி ராஜேந்தர் தன் உஷா பத்திரிகையில் மாற்றி யோசித்த ஒரு ஐடியா...  ஓவியர் ஜெயராஜ் எழுதிய கதைக்கு எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஓவியம் வரைந்திருக்கிறார்!


=======================================================================================================

1998 ல் இயக்குனர் சசியின் முதல் படமாக வந்தது லிவிங்ஸ்டன், கௌசல்யா நடித்த 'சொல்லாமலே' படம்.  ஹிந்தியில் இது தழுவப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ராணி முகர்ஜி என்பதை பானு அக்காவுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

அதில் ஒரு வித்தியாசமான பாடல்.  இசை அமைப்பாளர் பாபி எனும் கென்னடி இந்த ஒரு படத்துக்குதான் இசை அமைத்திருக்கிறார் என்கிறது விக்கி.  1964 ல் பிறந்து 2004 ல் மறைந்து விட்டாராம்.

மெதுவாய் தொடங்கும் பாடல் சரணங்களில் ஒரு படி ஏறி அடுத்தடுத்து உயரம் பெற்று, சரணத்தின் முடிவில் ஒரு உயரத்தை எட்டுகிறது.  

பாடல் பல்லவிக்கு, சரணத்துக்கும் இடையில் வரும் இன்டர்கலூட் எனப்படும் இடையிசை எனக்கு அவ்வளவு ஈர்க்கவில்லை.  அதற்கெல்லாம் இளையராஜாதான்,.

தலைவர் குரல்.  இந்தப் பாடலை நான் நேற்றுதான் முதல் முதலாகக் கேட்டேன்.

சிந்தாமணியை வா  

சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே

சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா

விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா!!

பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
எனதுயிரை மறந்துவிட்டேன் உனதுயிரில் கலந்துவிட்டேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா

முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே

சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா"!!


======================================================================================

சொல்லாமலே படம் நன்றாக ஓடியது, பிளாக்பஸ்டர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.  எனக்கு பிடிக்கவில்லை.  கேனத்தனமான இருந்தது என்று சொல்ன்னால் அடிக்க வரமான்டர்கள் என்று நம்புகிறேன்.  பிரபுதேவா நடிப்பதற்கு இருந்து அப்புறம் தயாரிப்பாளர் சொல்லி லிவிங்ஸ்டன் நடித்தாராம்.  பாடல்களை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.  விவரம் இல்லை.

அதே படத்திலிருந்து இன்னொரு பாடல் ஹரிஹரன் - சித்ரா  குரலில்..

ஹரிஹரன்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே   -   
(சொல்லாதே)

ஹரிஹரன்: மெளனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்
சித்ரா : காதல் மொழி வாங்க வந்தாய் நீயும் சொல்ல மாட்டாய்
ஹரிஹரன்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
சித்ரா : மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
ஹரிஹரன்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் சுவாசித்தேன்
சித்ரா : காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இன்று ஏதோ எதோ ஊடல்

(சொல்லாதே)

சித்ரா : காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
ஹரிஹரன்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகுதூரம்
சித்ரா : நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
ஹரிஹரன்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
சித்ரா : சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
ஹரிஹரன்: என்னவோ இது என்னவோ இந்தக் காதல் ஈரத் தீயோ

(சொல்லாதே)



==========================================================================================



எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான கதை எழுதும்போதே, எழுதுபவரை மேலே இழுத்துச் செல்லும். வார்த்தைகள் சரியான இடத்தில் தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்ளும். சப்தம் நிற்கிற தருணமும் குழந்தைகள் நாற்காலிகளில் பொருத்திக்கொள்கிற தருணமும் ஒன்றாகும் ஸ்திதியான இசை நாற்காலி விளையாட்டுப் போல இது. கதையின் தொனி மேலும் மேலும் நுண்மையும் ஆழமும் கூடுவதால், ஒரு வகை அதிர்வு உடம்பில் தோன்றும். கையும் பேனாவும் விக்கித்தும் படபடத்தும் வழுக்கிக்கொண்டு தாளில் பரவும். அதுபோது ஏற்படும் பரவசம் அற்புதம். எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் என்பது இதுதான் என்பது புரிபடும்.

சில துர்பாக்கியமான விபத்துக்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. மிக அதிகமாகவே நேர்ந்திருக்கின்றன. குறித்த தேதி, நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு, அந்த உத்தரவுகள் தரும் தகிப்பில் தயங்கி இருந்து விட்டுக் கடைசி நேரத்தில், மனசில் முழுமையாக எதுவும் திரளாத ஒரு புதிர் வேளையில் எழுதுவது போன்ற கொடுமையான சூழல் எதுவும் இருக்க முடியாது. கதை அந்த நேரத்தில் படுத்தும் பாடு, மிகவும் ஆக்ரோஷமான யுத்தம் போன்றது. வராத என்னை எதற்கடா கட்டி இழுக்கிறாய் என்கிற கோபம் கதைக்கு. நியாயம் தானே? இந்த விஷ வேளையில் கதைகள் உருவாவதில்லை. மாறாக ஒப்பேற்றப்படும். எழுத்தை ஜீவனோபாயமாகவும் ஏற்றுக்கொண்ட மூடத்தனமும், வெகுஜனப் பத்திரிகை அதர்மங்களுக்குள் சிக்கிக்கொண்ட கையாலாகாத்தனமும் கொண்டவனான எனக்கு இம்மாதிரி அனுபவங்கள் பல நூறு.

ஆனாலும் நான் சந்தோஷப்படக் காரணங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலுக்குள்ளும் நினைத்து மகிழ்ச்சியடைய, சில கதைகள் நான் எழுதியிருக்கிறேன்.

காலம், மிகக் கறாரான தராசைக் கையில் வைத்துக்கொண்டு கண்குத்திப் பாம்பாகச் சதா பரிசீலனை செய்து கொண்டேயிருக்கிறது. "சார்.... அந்தக் கதையை எழுதும்போது டிபன் ரெடியாகவில்லை. பசியில்தான் எழுதினேன், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்' என்றோ, ‘என்ன நடந்துச்சின்னா, நான் அந்தக் கதையை எழுதினபோது எனக்கு சரியான கேஸ் டிரபிள், கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருக்கும், பார்த்துகிடுங்கோ' என்றோ நானோ, அல்லது வேறு எந்த எழுத்தாளருமோ எந்தச் சலுகையையும் காலத்திடம் எதிர்பார்க்க முடியாது. கால வெள்ளம், அரைகுறைப் பிண்டங்களுக்கு இரக்கம் காட்டுவது இல்லை. 

ஒரு முறை, ந.பிச்சமூர்த்தியைச் சாலியமங்கலத்தில் சந்தித்தபோது, நானும் பிரகாஷும் செல்லப்பாவைக் குறித்து, அவர் எழுதுவது கவிதைகள் தானா என்று தீவிரமாகக் கேட்டோம். 

வெண்மையும் மஞ்சளும் கலந்த தாடியை நீவிவிட்டுக் கொண்டு. சற்று நேரம் கழித்து, "செல்லப்பா கவிதையும் எழுத முயற்சிக்கிறான். எழுதட்டுமே. முயற்சி தப்பில்லையே, எல்லா முயற்சியும் முழுசாகணும்கிற கட்டாயம் இல்லையே" என்று அவருக்கே உரிய ஞானத்துடன் ந.பி. சொன்னது நினைவுக்கு வருகிறது. 


ந.பி.சொன்ன அந்த முயற்சிக் கதைகள் அல்லது படைப்புகள், இலக்கியத்தைக் குறிவைத்து தோற்றவைகளுக்குத்தான் பொருந்துமே தவிர. அவசரத்துக்கு எழுதியவைகளுக்குப் பொருந்தாது. காலம், கண்டிப்பு மட்டும் அல்ல. கருணையும் கொண்ட ஜீவி. அது நோக்கத்தையும் பரிசீலிக்கும்.

சில நல்ல விஷயங்கள் எனக்குள் இருந்து, தம்மை அவை நல்ல கதைகளாக எழுதிக் கொண்டிருக்கின்றன. உருவாகி இருக்கின்றன. என் மகிழ்ச்சி அதன் பொருட்டுத்தான்.  அவைகளில் சில தீவிர வாசகர்கள் புறங்கையால் ஒதுக்கும் மோசமான பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கவனிப்புக்குள்ளாகாமல் போகும்போது நான் வருந்தியிருக்கிறேன். என் கதைகள் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கும் வாசகர் முன்,  எனக்கு விதிர்விதிர்ப்பு * ஏற்படுகிறது. நான் விரும்பி நேசிக்கும் அந்தக் கதைகளை அவர் வாசித்திருக்க வேண்டுமே எனும் தவிப்புக்கு நான் ஆளாகிறேன். என் நேசிப்புக் கதையை பட்டியல் போட்டு அவருக்கு தரவும் இயலாதே,  மற்றும் அதை நீங்கள் வாசித்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் ஜனநாயகம் அல்லவே!

'சித்தன் போக்கு' சிறுகதை தொகுப்பில் பிரபஞ்சன் முன்னுரை காலச்சுவடு பதிப்பகம்.

- சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரபஞ்சன் தன் 16 வயதிலேயே தனது கதைகளை பிரசுரத்தில் கண்டவர்.  1961 முதலே அவர் கதைகள் சிறு இதழ்களிலும், 1965 முதல் கணையாழி, தீபம்  என்று பெரிய இதழ்களிலும் பிரசுரமாகத் தொடங்கின. - 

=======================================================================================

பார்ப்பவர்கள் 
மனதுக்குத் தக்க படி 
பொருள்தந்து கொண்டிருக்கின்றன 
ஓவியங்களும் சிற்பங்களும் 

பாலூட்டும் தாய் 
பார்வைகளைப் பொறுத்து 
கல்லாகிறாள், பெண்ணாகிறாள் 
தாயாகிறாள்.

பார்க்கும்போதெல்லாம் 
பல்வேறு அர்த்தங்கள் 
தருகிறது 
அந்த ஓவியம்
எதை நினைத்து 
வரைந்தானோ ஓவியன் 
என் எண்ணம் 
அவன் அறியப் போவதில்லை
வரைவது என் பாடு 
வார்த்தைகள் உன் பாடு 
என்று 
விட்டு விட்டான் போலும்

=============================================================================================

`ஜீவ விழியை உயர்த்து / சூழ்வின் இருள் என்ன செய்யும்? / அமுதத்தை நம்பு ஒளியை நாடு’ என்னும் அவரின் கவிதை வரிகளை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற காத்திரமான பல கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் ந. பிச்சமூர்த்தி.

ந. பிச்சமூர்த்திக்கு நான்கு மகள்கள். தற்போது அவர்களில் இருவர் காலமாகிவிட்ட நிலையில் மற்ற இருவர் சென்னையில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவரான மீனாட்சி பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.

``எங்கள் அப்பா வாழ்ந்த காலத்தில் அவர் ஏதோ கதைகள், கவிதைகள் எழுதுகிறார் என்றுதான் புரிந்துவைத்திருந்தோமே தவிர அவர் ஒரு காலத்தின் மகத்தான கலைஞன் என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொண்டோம். அப்பாவைக் காண வீட்டிற்கு தமிழ் நவீன இலக்கியவாதிகள் பெரும்பாலும் அனைவரும் வந்துபோயிருக்கிறார்கள். அவர் படைப்புகளைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பு மிகவும் அற்புதமானது. இன்றைய இளம் தலைமுறையினரிடமும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்னும் எங்கள் ஆசை தற்போது நனவாகிக்கொண்டுவருகிறது. தற்போது அவரின் கவிதைகள் பள்ளிக்கல்வியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புதுக்கவிதையில் கால்பதிக்க விரும்புகிறவர்கள் எப்படி பாரதியை வாசிக்காமல் முன்னகர முடியாதோ அதேபோல ந. பிச்சமூர்த்தியை வாசிக்காமலும் கடந்துவிட முடியாது. தமிழ்க் கவிதை உள்ளவரை நினைவுகூரப்பட வேண்டியவர் அவர் என்பதில் எங்களுக்குப் பெருமையே. ” என்றார் மீனாட்சி பால சுப்பிரமணியன்.


- ஆனந்த விகடன் - ந. பிச்சமூர்த்தியின் பிறந்தநாள் பதிவு 


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இளையராஜாவுக்கு ஒரு வக்காலத்து...


ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் , சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து கொண்டார்.

கேட்டபோதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் ஃபோட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார். ஆனால் அப்படி இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது, ஒரு சில பத்திரிகைக்காரர்கள்தான்.
1989 இல் வெளிவந்த ஒரு பத்திரிகைப் பேட்டியில் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள். வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள்.
இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:
"நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?"
இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா.
"இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.
கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.
இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது.
ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது.
ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது.
அவ்வளவு ஏன் ?
நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது. கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது."இதுதான் இளையராஜா சொன்ன பதில்.
ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு கொடுத்த தலைப்பு "நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்றுதான்."
"ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது. ஒலியன்றி வேறல்ல இசை.”
இப்படி வெளிவந்திருந்தது அந்த பேட்டி.
கொதித்துப் போனார்கள் கர்நாடக சங்கீத வித்வான்கள். எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன. ஆவேசமான அர்ச்சனைகள், அடுக்கடுக்காய் பிரச்சினைகள். இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.
அப்போதுதான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார். இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை. இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார். இசை அமைப்பது மட்டும் கலை அல்ல. சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலைதான். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்.

யானை - பேஸ்புக்

========================================================================================== 


ஜோக்ஸ்..  சிரிப்பு வராவிட்டாலும் சிரிங்க ப்ளீஸ்...













100 கருத்துகள்:

  1. ஒரு ஜோக் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்காக இரு முறையா பதிவிடுவீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. எனக்குப் பொறுமை கிடையாது. அதனால் இந்தப் படத்தின், சீரியலின் கதை என்ன என்று கேட்கும்போதே, அதிகபட்சம் மூணு வரிகளில்னு சொல்லுவேன்.

    ஆனால் பொதுவா நாம கஷ்டப்பட்டு ஒரு செயலைச் செய்துமுடித்தால், என்ன அந்த வேலை முடிந்ததா என்று கேட்டால் விலாவாரியாக கதை சொல்ல ஆரம்பிப்போம். சட்னு சொல்லு என்றால் கோபம் வரும், எவ்வளவு கஷ்டப்பட்டு, புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறேன் என்று விளக்கும் சந்தர்ப்பம் போகிறதே என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் சரிதான். ஆனால் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டாமா?

      நீக்கு
    2. சகோதரர் நெல்லைத்தமிழரின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். செய்யும் செயலைப்பற்றி உடனுக்குடன் சொல்லா விட்டால், அந்த நேரங்களும் நம்மை கடந்து போய் விடுமில்லையா? நல்ல கருத்துக்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
  3. ந பிச்சமூர்த்தியைப் பற்றி விலாவாரியா எழுதிட்டு அவர் கவிதைகள் ஓரிரண்டைப் போடாமல் விட்டுவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது முன்னாலேயே போட்டிருக்கிறேனே என்று இப்போது விட்டு விட்டேன்!

      நீக்கு
  4. லிவிங்ஸ்டன் நல்ல நேரம், சொல்லாமலே சூப்பர் ஹிட். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகன். கொஞ்சம் கடுப்படித்தாலும்்சொல்லாமலே... நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  5. சாதனையாளர்கள், பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை.

    பத்திரிகையாளர்களும் பலவித எஜமானர்களின் அடிமைகள். அதனால் அவங்களை நம்பி எதையும் பேசக்கூடாது. அறம் இல்லாதவர்கள் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு வியாபாரம் முக்கியம்.  தர்மம் நியாயம் எல்லாம் அப்புறம்!  எத்தனைபேர் சோ மாதிரி பத்திரிகை நடத்த முடியும்?

      டிக் டிக் டிக் படத்தில் வில்லன் ஓபராய் அடிக்கடி சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது!

      "எல்லா தர்மங்களும், எல்லா நியாயங்களும் எனக்குத் தெரியும்.." கள்ளச் சிரிப்பு தொடரும்!

      நீக்கு
  6. தாய் கவிதை அருமை.

    கலைப் படைப்பு எதுவானாலும் பார்ப்பவர்கள் கோணத்தில் அர்த்தம், புரிதல் வேறுபடும்.

    பதிலளிநீக்கு
  7. 'பைனரில்.பதில் சொல்லு' பகுதியில் வந்திருக்கும் விஷயங்கள், புதன் கிழமை வகுப்புக்கு பலருக்கான பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ..  வம்புல மாட்டி விடறீங்களே...  வாங்க ஜீவி ஸார்...   இது அது அல்ல....  இது வேற...

      நீக்கு
  8. பிரபஞ்சனை விட்டால் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலியா? செல்லப்பா குறித்து ந.பிச்சமூர்த்தியிடம் கேட்டார்களாம். அதுவும் செல்லப்பா எழுவது கவிதைகள் தானா? -- என்று. கேள்வியே இவர்கள் விருப்பும் பதிலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அசட்டுக் கேள்வி. அதற்கு ந.பி.யின் அழகான பதில் அவர் மன மேன்மைக்கு எடுத்துக்காட்டு.

    அடுத்த பாராவிலேயே மோசமான பத்திரிகைகள் என்று இவர் கணித்திருக்கும் பத்திரிகைகளுக்கு இவரது 'நல்ல' கதைகளை ஏன் கொடுக்கிறார் என்று விளங்காத ஒரு விவரிப்பு. கொடுமையப்பா!

    மொத்தத்தில் ஒரே ஒரு ஆறுதல். முக நூலில் 'அவர்' பதிவை அப்படியே எடுத்துப் போடாதது ஒன்று தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...   இப்போதுதான் பிரபஞ்சன் பற்றி இரண்டாவது துளி.  அதற்குள் அலுப்பா?  இது முகநூலிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல.  'அவர்' யாரென்றும் புரிகிறது!

      நீக்கு
  9. இந்த வாரம் ஒரு கவிதை ஓவியத்தையல்லவா தீட்டியிருக்கிறீர்கள்?..
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ///பார்ப்பவர்கள்
    மனதுக்குத் தக்கபடி ///

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. டி.ராஜேந்தர் எந்த வருடம் மாத்தி யோசித்தார்? ஏனென்றால் ஜெயராஜ் கதை எழுத, அதற்கு சுஜாதா படம் வரைந்திருக்கிறார். பத்திரிகை குமுதமா?சாவியா? நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எனக்கு நினைவில்லை. இது உஷா பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு. தேதி குறித்துக் கொள்ளவில்லை! வாங்க பானு அக்கா.

      நீக்கு
  13. திரு. கோபுலு அவர்களது நகைச்சுவை
    சித்திரங்கள் பழைய நாட்களை
    நினைவுக்குக் கொண்டு வருகின்றன...

    பதிலளிநீக்கு
  14. இன்று எனக்கு ஏற்றாற்போல் தெளிவான கட்டமைப்பு...

    பைனரிலே பதில் சொல்லு...

    சிறப்பு....
    இன்றைய பசங்களிடம் விரிவான விடைகள் என்பதே இல்லை...

    இப்போதெல்லாம் பெரும்பாலும் மௌனமாகவே இருந்து விடுகின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்.  ஏனென்றால் நான் பேசுவதைக் கேட்க அவர்களுக்கு நேரமில்லை!  அடுத்தடுத்த விஷயங்கள் வந்து விடும்!

      நீக்கு
  15. குறைவாகப் பேசுவது பல விஷயங்களில் சௌகர்யம். ஆனால் சில சமயங்களில் இப்படித்தான் நீட்டி முழக்கி பேசுவது வழக்கமாக இருக்கிறது - பலருக்கும். சொன்னால் கோபம் வந்துவிடும்! :)

    மற்றவையும் நன்று. இளையராஜா பேட்டி - வேதனை. பிரபலமாக இருப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு - இதுவும் ஒன்று.

    ஜோக்ஸ் - ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறைவாக பேசுவது, குறைவாக பேசினாலும் நிறைவாக பேசுவது.. மாற்றுக்கருத்து உண்டுதான். வாங்க வெங்கட். வணக்கமும், நன்றியும்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி சற்று எனக்கும்மானது என்றுதான் நினைக்கறேன்." எங்கள் வீட்டிலும், முதலில் பதில் சொல்லு..! அப்புறம் கதை அடிக்கலாம்" என்பார்கள். அப்புறம் கேள்வி கேட்டவர் நழுவி விடுவார்களே என்ற எண்ணம் நமக்கு. காற்றுள்ள போதுதானே தூற்றிக் கொள்ள முடியும்.:))

    /முதலில் சொல்ல வேண்டிய பதிலை சுருக்கமாக சொல்லி விடு. அது போதும். இதை நீ பழகினால் வளவளவென்று கதை அடிக்கும் வழக்கத்தைக் கூட மாற்றலாம்" என்பேன். ஏனெனில் அதனால் வரும் மன வருத்தங்களும், பிரச்னைகளும் கூட உண்டு./

    இதுவும் உண்மைதான். பேச்சுக்கள் மாறி, மாறி விவாதங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இடம் தந்து விடும். உங்கள் அறிவுரைக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. நான் குறைவாக பேசுபவன் என்று பெயரெடுத்தவர் என்பதால் எனக்கு சாதகமாக எழுதி இருக்கிறேன்!

      நீக்கு
  17. சொல்லாமலே ஊமையாக நடித்து, காதலை சம்பாதித்ததால், கடைசி வரை ஊமையாகவே இருக்க முடிவு செய்து நாக்கை அறுத்துக் கொள்வான்(ர்) இல்லையா? பாடல்கள் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  இரண்டு பாடல்கள் இங்கே கொடுத்திருக்கிறேன்.. கேளுங்கள்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதை நன்றாக உள்ளது. ஓவியத்தைப்பற்றி, அதை வரையும் ஓவியரின் மனதில் எழும் எண்ணங்களை நம்மால் உணர முடியாது. பார்வைகளின் கோணங்கள் பலவிதம்.

    /எதை நினைத்து
    வரைந்தானோ ஓவியன்
    என் எண்ணம்
    அவன் அறியப் போவதில்லை
    வரைவது என் பாடு
    வார்த்தைகள் உன் பாடு
    என்று
    விட்டு விட்டான் போலும். /

    அருமையான ஆழமான வரிகள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழமான வரிகள் என்றா சொல்கிறீர்கள்? நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  19. ந.பிச்சமூர்த்தி பற்றிய தகவல்களும், கவிதைகளும் சிறப்பு.
    பிரபஞ்சனின் கட்டுரையில் கடமைக்காக எழுத வேண்டிய கஷ்டத்தை அழகாக சொல்லியிருக்கிறார். ஏன் ஜீ.வி. சாருக்கு அவரைப் பிடிக்காதாம்?
    ஜோக்குகள் பரவாயில்லை. புத்தகங்களை சுமந்து செல்லும் வேலைக்காரி துணுக்கில் என்ன நகைச்சுவை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ மற்ற ஜோக்குகளில் ஏதோ நகைச்சுவை இருக்கிறது என்று சொல்கிறீர்கள்!  நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்று அத்தனை பகுதிகளும், "சொல்லாமலே" தான் போலும். இந்தப்படம் தொ. காட்சியில் பார்த்திருக்கிறேன். பாடல்கள் நினைவில்லை. கேட்டால் நினைவுக்குள் வரும். பிறகு கேட்கிறேன். ஆனாலும் இன்று அத்தனை பகிர்வுகளையும் "சொல்லாமலே சொல்லி" பதிவை உங்கள் பாணியில் நிறைவாக்கி விட்டீர்கள். இந்த திறமைக்கு உங்களுக்கு எப்போதும் போல் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களை சொல்லாமல் இருக்க இயலவில்லை. எனவே மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  வார்த்தைகளை வைத்து விளையாட்டு தொடங்கி விட்டீர்களே...   நன்றி கமலாக்கா.

      நீக்கு
  21. 'கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வான். அதற்கு மேல் ஒரு வார்த்தை, விவரம் வராது' என்று கத்துவார். //

    ஹாஹாஹா அப்பாக்கு மணி ரத்தினம் ஸ்டைல் பிடிக்கலை போல! ஆச்சரியம் என்னவென்றால் பொதுவாக அம்மாக்கள்தான் கேட்பாங்க, அதாவட்து பெண்களுக்கு விலாவாரியாகச்சொல்ல வேண்டும் என்று. அப்பாக்கள் ஆண்கள் அப்படிக் கேட்பது குறைவு.

    இங்கு அப்பா எக்ஸப்ஷன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரோருத்தர் ஒரு மாதிரி இல்லையா?  ஆனா இந்த விஷயத்துல என் அப்பாவும், அவர் மாமனாரும் ஒரே மாதிரி!!   வாங்க கீதா..

      நீக்கு
  22. பதில்கள்
    1. மேலே உங்க பெயர் சொல்லிவிட்டேன் எனவே கருத்து தொடர்கிறது

      //'அவர் வீட்ல இல்லை, வீட்டில் கொடுத்து அவர் வந்தததும் கொடுக்கச் சொல்லி வந்திருக்கேன்' என்று சொன்னால் நிம்மதி இழந்து விடுவார். //

      நான் பெரும்பாலும் ரொம்பக் கேள்வி கேட்பவர்களிடம் (அறிவுக்கேள்விகள் அல்ல!!!) அல்லது மனம் சஞ்சலப்படுபவர்களிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது வழக்கம்.

      நானும் இதில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.

      ஒரு சிலரிடம் மட்டும் அதுவும் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. சில சமயம் விரிவாகச் சொல்வதுண்டு தேவைப்பட்டால்.

      சிலரிடம் கேள்விகள் கேட்க மாட்டேன்!!!!!!

      அதுவும் என் உறவுகளில் ஒருவருக்கு OCD பிரச்சனை உண்டு. பேசியதையே திரும்பத் திரும்பப் பேசுவார்.

      கீதா

      நீக்கு
    2. இடம் பொருள் ஏவல்... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி மாறுபடும்!

      நீக்கு
  23. அவன் பேத்திக்கு காதுகுத்து.. சனிக்கிழமை ராத்திரியே அங்க போயிடலாமா, காலை டிபன் உண்டா, மதியம் சாப்பாடு உண்டா, யார் யார் வருகிறார்கள், அண்ணன் வந்தால் அவர் பெயரில் ஓதிவிடவேண்டுமே... இப்படி நிறைய கேள்வி கேட்கிறேன்..//

    அவர் பாவம்...அவருக்கு அப்படிப் பழக்கமாகியுள்ளது இப்போது மாற்றிக் கொள்ள முடியாது நம் வீட்டிலும் சில பெரியவர்கள் உண்டு.

    என்னைப் பொருத்தவரை இத்தனைக் கேள்விகள் அவசியமில்லையோ என்று தோன்றும்.

    நிகழ்வுகளுக்குச் செல்லும் போது இதெல்லாம் பற்றி யோசிப்பது இல்லை என்பதாலோ என்னவோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரால் தன்னிச்சையாக நகர முடியாது.  சர்ஜரி செய்து கொண்டவர்.  இன்னொருவர் உதவி வேண்டும்.  காலை டிபனுக்கு, மதிய சாப்பாடும், night டிபனுக்கு வெளியில் சொல்லி வாங்குகிறார்கள்.  அதுதான்!

      நீக்கு
    2. ஓ ஓகே ஓகே புரிந்து கொண்டேன். பாவம்.

      அப்படினா தம்பி கொஞ்சம் பொறுப்புடன் பதில் சொல்லியிருக்கலாம். அவங்க பேத்திக்குத்தானே காதுகுத்து அப்ப சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம். ஆனால் முரளி - அவர் தம்பி - எப்பவுமே அப்படிதான்! எம் குமரன் மாதிரி!

      நீக்கு
  24. ஒற்றை வார்த்தையில் பட்டுக்காம பதில்//

    பட்டுக்காம என்பதல்ல. ஆனால் இப்படித்தான் அர்த்தம் கொள்ளப்படும். வார்த்தைகளை ரேஷனாக்கும் போது...
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப்பொறுத்தவரை கேள்வி கேட்பவரைப்பொறுத்து தக்கபடி பதில் சொல்ல பழகி இருக்கிறேன்!  நாம் பேசுவதை கேட்காதவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன்?!

      நீக்கு
    2. அதே! அதே! நானும் கேள்வி கேட்பவரைப் பொருத்து பேசுவது கூடுதலா இல்லையான்னு

      கீதா

      நீக்கு
  25. வெ ஆ மூ காணொளி சிரித்துவிட்டேன். இப்படியானவங்க எங்க வீட்டுல உண்டு. கேள்வி கேட்கத் தொடங்கினாலே நான் மெதுவாக நகர்ந்துவிடுவேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி...  அதை ஒருவர் பார்த்திருக்கிறார்...  இதுவரை எதுவும் அதுபற்றி பிரஸ்தாபம் இல்லையே என்று பார்த்தேன்.

      நீக்கு
  26. வளவளவென்று கதை அடிக்கும் வழக்கத்தைக் கூட மாற்றலாம்" என்பேன். ஏனெனில் அதனால் வரும் மன வருத்தங்களும், பிரச்னைகளும் கூட உண்டு.//

    டிட்டோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   அதுக்கே சமயங்களில் எனக்கு பிரச்னை வரும் !

      நீக்கு
  27. "நீயா, அவங்களா? பைனரிலே பதில் சொல்லு" என்று கேட்டேன். "உங்களுக்குப் புரியாதா.. அவங்களாதான் வர்றாங்க" என்றார் பாஸ், பழியை என்மேல் போட்டு!//

    சிரித்துவிட்டேன்.

    பெண்ணிற்கும் ஆணிற்கும் உள்ள வித்தியாசம் (மூளை கெமிஸ்ட்ரியால்)

    communication என்பது மிகப் பெரிய கலை. நம் எனர்ஜிசைய சேவ் செய்யும் கலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல கெமிஸ்ட்ரி வேறயா?  நான் கேட்டதற்கு அதுல பதிலே இல்லையே...

      நீக்கு
    2. அதுதாங்க சொன்னேன். பொதுவாகப் பெண்கள் பேசுவது கூடுதல் சிலப்போ அர்த்தமே இல்லாமல் கூட!

      ஆண்கள் பெரும்பாலும் (நோட் இட் எல்லோரும் அல்ல) to the point தான் பேசுவாங்க.

      கீதா

      நீக்கு
    3. அடடே.. அப்படியா?

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய முதல் பகிர்வில் வெ. ஆ மூர்த்தி நகைச்சுவையை ரசித்தேன். முன்பே கேட்டு ரசித்திருக்கிறேன் என்பதும் நினைவில் வந்தது என்றாலும், இப்போதும் ரசிக்கும்படி இருந்தது. (இதுவும் சொல்லாமலே படத்தில் வரும் நகைச்சுவையோ..? அந்தப் படத்தைப் பார்த்து ஆண்டுகள் பல கடந்து விட்டதால், மறந்து விட்டது. (பாடல்களுந்தான்) .

    இதில் முதல் பாடல் பாட்டும், இசையும் கவரும்படி இருந்தது. பாபி கென்னடி என்ற இவர் இசையமைத்திருப்பதே சில படங்கள்தான் போலும். ஆனாலும் இவரின் நிறைய ரசிகர்களை கூகுளிட்டு பார்த்து வந்தேன். ஒவ்வொருவரின் வாழ்வையும் ஒவ்வொரு மாதிரி இறைவன் அமைத்திருக்கிறார். இன்றைய வெள்ளிபாடல்கள் (அடாடா..! இன்னமும் படங்களின் பாடல் என்றாலே மனதில் வெள்ளி உதயமாகிறதே ..!மன்னிக்கவும்:))) ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கமலா அக்கா..  சும்மா கேள்விகளுக்கு தகுந்த மாதிரி ஒரு ஜோக் கிடைத்ததே என்று இதை அங்கே பகிர்ந்தேன்.  அது என்ன படம் என்று நினைவில்லை.  வெள்ளியை நீங்கள் மறக்க மாட்டேன் என்கிறீர்களே...!

      நீக்கு
  29. ஓவியர் கதை எழுத கதை எழுதுபவர் ஓவியம். ஆண்டாள் பிரியதர்ஷினி அவங்க வரைந்த படம் ஓகே.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. சாதாரணமாய்ச் சொல்லுவதற்கே பிரச்னைகள். அதிலும் எனக்கெல்லாம் ஒருத்தரோடு ஒருத்தர் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் வரும். சில உறவுகள், நட்புகளைத் தொடர முடியாமல் போகும். அப்போ அவங்க தப்பாய்த் தான் நினைச்சுக்கறாங்க. என்ன செய்ய முடியும்? ஸ்ரீராமின் பாஸைப் போல் அனைவரையும் சரிக்கட்டிக் கொண்டு போகத் தெரியணும். தெரிஞ்சுக்கணும்.

    ஆமாம், ஜேகேசி எங்கே? நேத்திக்கே இல்லைனு நினைக்கிறேன். இன்னிக்கு வந்திருக்காரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா என்னாலும் எல்லோரையும் தொடர்பில் வைத்துக் கொள்வது ரொம்ப சிரமமாக இருக்கிறது. சிக்கல்களும் வரும். வேண்டாத அவஸ்தைகளும் தொல்லைகளும் வரும்,. அதனாலேயே ரொம்ப எண்ணித்தான் சிலருடன் தொடர்பில்

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...உண்மையிலேயே பாஸ் அதுல கில்லாடி.  ரெண்டு பக்க உறவுகளுடன் மட்டுமல்ல, நட்புகளுடனும் நல்ல உறவைப் பேணிக் காப்பதில் பிஸ்தா...  அல்லது பிஸ்த்தி!

      நீக்கு
  31. பாட்டு இப்போதான் கேட்கிறேன்.

    இன்டெர் லூட் எங்கேயோ போகிறதே, ஸ்ரீராம் என்னவோ பயமுறுத்தும் இசை போல...

    தலைவர் காப்பாற்றுகிறார் பாடலை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அதைதான் நானும் சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  32. சொல்லாதே படம் பார்த்ததில்லை, ஸ்ரீராம்.

    சொல்லாதே பாடல் கேட்ட மெட்டு போல இருக்கிறது எந்தப் பாடல் போன்று.....இன்டெர்லூட் வேறொரு பாடலில் இப்படித்தான் வரும் ....

    இரு பாடல்களுமே இப்போதுதான் கேட்கிறேன் நல்லாருக்கு,

    கீதா

    பதிலளிநீக்கு
  33. எழுதுவது பற்றி பிரபஞ்சன் அவர்கள் சொல்லியிருக்கும் உணர்வுகளை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

    நா பிச்சைமூர்த்தியவர்களின் பதில் நல்ல பதில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  34. இளையராஜாவின் இந்தப் பேட்டியும் அதைப் படிச்சுட்டு வித்வான்களின் கோபமும் ஏற்கெனவே படிச்சேன் எதிலோ. உண்மை வாழ்க்கையிலும் இப்படிச் சொன்ன அர்த்தம் வேறே அது திரித்துப் புரிந்து கொள்ளப்பட்டது வேறேனு பல சமயங்களில் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கேன். :(

    ந.பிச்சமூர்த்தியின் சி.சு.செல்லப்பா பற்றிய கருத்து அருமை. சிசு. செல்லப்பா பற்றி அவருடைய நெருங்கிய சீடரான (வடக்கு வாசல்) பெண்ணேஸ்வரன் எழுதி இருக்கார். நாங்க மின் தமிழில் இருந்தப்போ பெண்ணேஸ்வரன் செல்லப்பாவைப் பற்றி நிறையச் சொல்லுவார் புத்தகங்களை விற்க முடியாமல் செல்லப்பாவின் சின்ன வீட்டில் போட்டு வைத்திருந்ததைப் பற்றிச் சொல்லும்போது அடி வயிறு கலங்கும். சி.சு.செல்லப்பாவும் மணிக்கொடி கால எழுத்தாளர். அவருடைய சுதந்திர தாகம் புத்தகம் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. ஹூஸ்டன் சென்றப்போ 2004 ஆம் ஆண்டில் அந்தப் புத்தகத்தை ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து வாங்கிப் படித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப்பா மேட்டர் நாம் முன்னரே சில வருடங்களுக்கு முன் பேசி இருக்கிறோம், இல்லையா கீதா அக்கா?  நினைவிருக்கிறதா?

      நீக்கு
  35. "சொல்லாமலே" படம் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு. பாட்டெல்லாம் நினைவில் இல்லை. அத்திம்பேரிடம் ஃபிடில் வாசிக்கும் குழந்தைகளை ரசித்தேன். மற்றவை ஓகே ரகம். சிலது படிக்க முடியலை. பெரிசாக்கினாலும் சரியா வரலை. உங்கள் கவிதைகளில் "தாய்" அருமையாக இருக்கிறாள். "தாய்க் கண்காட்சியைச் சொல்லலைனு புரிஞ்சுட்டு இருப்பீங்கனு நினைக்கிறேன்.

    ஆண்டாள் பிரியதர்சினி ஓவியம் வரைவார் என்பது தெரியும். ஆனால் இந்த விஷயம் தெரியாது. அவர் அறிமுகம் ஆன ஆரம்ப காலத்தில் ரொம்பப்பிடித்தவராக இருந்தார். ஆனால் ஒரு சில பேட்டிகளில் பார்த்துட்டுப் பின்னர் அவரைத் தவிர்த்து விட்டேன். இப்போல்லாம் அவரைப் பற்றி மறந்தே விட்டது.

    பதிலளிநீக்கு
  36. வெண்ணிற ஆடை மூர்த்தியின் காணொளி பார்க்கலை. மூர்த்தியின் நடிப்பும், நகைச்சுவையும் எனக்கு ரசிக்க முடிவதில்லை. ஆனால் ஜோசியம் பார்ப்பதில் மிகவும் வல்லவர் எனக் கேள்விப் பட்டிருக்கேன். பெரிய வேலையில் இருந்திருக்கார்னும் சொல்லுவாங்க. எதிலேனு நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காணொளி நீங்கள் நம்பிப் பார்க்கலாம். நல்லா இருக்கும்! அதுவும் கொஞ்சம்... கொஞ்சூண்டு..... நான் எழுதி இருக்கும் பதிவுக்கு கிட்ட வரும்!

      நீக்கு
  37. நா பிச்சமூர்த்தி அவருடைய கவிதை தத்துவமான து ஒன்று இங்கு பகிர்ந்திருந்தீங்க ஸ்ரீராம். நினைவிருக்கு

    பிரபஞ்சன் பற்றிய பகுதி, நா பிச்சமூர்த்தி அவர்கள் பகுதி சுவாரசியயமான பகுதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  முன்னர் ந பி கவிதைகள் சில பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
  38. தலைப்பு பத்தி சொல்லியது வரலை பாருங்க..

    பைனரியில் பதில் சொல்லு!!! நல்லாருக்கு ரசித்தேன் ஸ்ரீராம். தலைப்பு பார்த்ததுமே புரிஞ்சு போச்!

    நல்ல காலம் பதிலை இதுல சொல்லணும் - ஆம் என்றால் 1 இல்லை என்றால் 0 என்று....சொல்லாமல்....அப்படியான கேள்விகள் கேட்டு.!! இக்கருத்தை மேலே முதலில் சொல்ல நினைத்த கருத்தில் சேர்த்திருக்கவில்லை. காரணம் இதை நான் ஒன்றில் பயன்படுத்தியிருக்கிறேன். ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை ஸ்பெஷலா சொன்னதுக்கு நன்றி கீதா...  அர்த்தம் சரியா சொல்லி இருக்கீங்க..   அதே சமயம் இது நான் எங்கிருந்து எடுத்தேன்னும் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு!

      நீக்கு
  39. கவிதைகள் ரொம்ப சூப்பர், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரைவது என் பாடு
      வார்த்தைகள் உன் பாடு
      என்று
      விட்டு விட்டான் போலும்//

      பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்துதானே....அதையும் சொல்லியிருக்கீங்க கவிதைகளில்.கதைகளைக் கூட இவ்வகையில் புனையலாம்! ...புரிந்து கொள்ளுதலும் சரி முடிவும் சரி.

      கீதா

      நீக்கு
  40. நா பிச்சமூர்த்தி அவரின் கவிதை வரி? வரி தத்துவம்....அது கவிதையா?

    அவரது பெண் சொல்லியிருப்பட்து போல் முன்னெல்லாம் பலருக்கும் தங்கள் அம்மாவோ அப்பாவோ இப்படி எழுதுவது எல்லாம் பெரிதாகத் தெரிந்திருக்காமல் பின்னர் தாமதமாகத்தான் அதன் சிறப்பு புரிகிறது.

    இப்போதும் கூட சில வீடுகளில் அப்படித்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  41. இளையராஜா - சொல்லியிருக்கும் பதிலில் எந்தவிதத் தவறும் இல்லை ஆனா பாருங்க மீடியா என்ன மோசமாக இருக்கு. இப்பவும் அதேதானே...பத்திரிகை தர்மம் என்பதெல்லாம் யாரும் பின்பற்றவே மாட்டாங்க போல. மனசாட்சி வேண்டாம் இப்படிச் சிண்டு முடிதல் பாருங்க. கேவலமாக இருக்கிறது. இப்பவும் தானே. அவங்களுக்கு அதுல என்ன சந்தோஷம் கிடைக்கிறது? பைசா? கேவலம்.

    இளையராஜா எடுத்த முடிவு நல்ல முடிவு. பேட்டி கொடுக்கலைனா உடனே கர்வம் பிடிச்சவன்னும் பந்தாமும் இந்த மீடியா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தியாளர்கள் பரபரப்புக்காகவிபியும், அவங்க பத்திரிகை விற்பனைக்காகவும் அடுத்தவர் மனம் நோகும் என்றோ, பெயர் கெடுவதையோ பார்ப்பதில்லை.

      நீக்கு
  42. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  43. கண்ணாடி ஜோக் சிரிப்பை வரவழைத்தது.

    ஃபிடில் ஜோக் புன்சிரிப்பை வர வழைத்தது நல்ல கற்பனை. மூணு வாங்கிடுச்சுங்க வாண்டுகள்!

    ஞாயிற்றுக் கிழமை - ஹாஹாஹா....

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!