வரலாற்றுக் கதை எழுதத் தேவையானவை என்று சுஜாதா இடும் பட்டியல்!
....... கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வருணிக்க வேண்டும்..
அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்.
சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை.
தமிழ்ச் சாதியின் மேம்பாடு கடல் கடந்த நாகரீகம், இவைகளை சொல்வது உத்தமம்.
குதிரைகள் தங்கத் தேர்கள் முத்துக்கள் உறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் இன்ன பிறவும் வேண்டும்......
- சுஜாதா -
==============================================
சாண்டில்யன் பக்கங்கள் :
சாண்டில்யன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யவனராணிதான். அதையே சாண்டில்யனும் முன்னுரையில் சொல்லி இருக்கிறார்! படிக்காத புத்தகங்கள் எவ்வளவோ இருக்க, இதை ஒரு Fast Reading விடலாம் என்று எடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன். சில முக்கிய விவரங்களை FaceBook கிலும் பகிர்ந்து வருகிறேன்! சாண்டில்யன் முன்னுரை கீழே... இந்தக் கதை குமுதத்தில் வந்தபோதே எடுத்து பைண்ட் செய்யப்பட்டு எங்கள் வீட்டில் இரண்டு பாகங்களும் இருந்தன. லதா ஓவியங்களுக்காக அடஹி இப்போது தேடித்தேடி அலுத்துப்போனேன். என்ன ஆனதோ.. எங்கே போனதோ... வருத்தமாக இருந்தது.
முன்னுரை
'யவன ராணி' நான் இதுவரை எழுதிய சரித்திரக் கதைகளுக்குள் சிறந்தது என நினைக்கிறேன். அது சிறப்பாய் அமைந்ததற்குத் தமிழ்ப் பெருமக்களின் உற்சாகத்தான் மூல காரணம், கதையில் காணப்படும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களின் சுக துக்கங்களை அனுபவித்து அவ்வப் பொழுது 'குமுதம்' காரியாலயத்துக்கும், நேரிடையாக எனக்கும் கடிதங்களை எழுதிய ஏராளமான வாசகர்கள் இத்தக் கதையின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால், அது சம்பிரதாயத்துக்காகவோ, அவையடக்கத்தின் அவசியத்தை முன்னிட்டோ சொல்லும் வார்த்தையல்ல. முக்காலும் உண்மை.
யவன ராணி, பூவழகி-இவர்களின் அழகைப் பற்றியும் இளஞ்செழியன் வீரத்தைப்பற்றியும் இலி ஆஸுவின் பயங்கரத்தைப்பற்றியும், டைபீரியஸின் கடமை உணர்ச் சியைப் பற்றியும் மற்றும் பலப் பல அம்சங்களைப் பற்றியும் அவ்வப்பொழுது பாராட்டுக் கடிதங்களை எழுதினார்கள். கதையை இப்படித் திருப்பினால்தான் சரியாயிருக்கும் என்று குக்கிராமங்களிலிருந்து கடிதம் எழுதி யோசனை சொன்னவர்கள் உண்டு. யவன ராணி மாண்டுவிடுவாள் என்பதை முன்கூட்டியே அறிந்து, "எங்கள் ராணியைக் கொல்ல வேண்டாம்" என்று தடுத்தவர்கள் உண்டு முன் பின்னாக ஏதாவது கதையில் வந்திருப்பதாகத் தெரிந்தால், அந்த முரண்பாட்டை எடுத்துக் காட்டியவர்களும் உண்டு. வாசக அன்பர்கள் எழுதிய ஒவ்வொரு கடிதமும் எனக்கு எழுத உற்சாகமூட்டியது. அவர்கள் அன்பு என்னை ஆட் கொண்டது என் பேனாவுக்கு வலுவூட்டியது. சிந்தனையைத் துரிதப்படுத்தியது.
மிகுந்த எச்சரிக்கையுடன் கதையை எழுதினேன். இந்தக் கதை எழுதுங்காலத்தில் வந்த கடிதங்களிலிருந்து, ஒன்று 4
தெரிந்து கொண்டேன். தமிழ் மக்கள் விழித்துக் கொண்டிருக்க கிறார்கள், கண்டதை எழுதி அவர்கள் தலையில் திணிக்க முடியாது என்பதுதான் அது. பிரச்சாரமும் பத்திரிகை விளம்பரங்களும் மட்டும் மக்களிடம் செல்லாது என்பதையும் அறிந்து கொண்டேன். வருங்காலத்தில் எழுதும்போது கண்டிப்பாய் இதை நினைவில் வைத்துக் கொள்வேன்.
கதை எழுதுங்காலத்தில் வந்த கடிதங்களைவிடப் பன் மடங்கு அதிகப் பாராட்டுக் கடிதங்கள், கதை முடிந்த பின் 'குமுதம்' காரியாலயத்துக்கு வந்ததாகக் காரியாலயத்திலிருந்து செய்தி கிடைத்தது. அதைக் கேட்டதும் பெரும்பாரம் தலையி லிருந்து இறங்கியது போலிருந்தது எனக்கு. ஒரு பொறுப்பை மக்களுக்குத் திருப்தியாகச் செய்து முடித்த பெருமிதத்தையும் தந்தது. இப்படி என்னைப் பலவிதத்திலும் ஊக்கிய தமிழன்பர் களுக்கு என் மனமார்ந்த வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
யவன ராணியின் கதை சரித்திர ஆதாரமும், இலக்கிய ஆதாரமும் கலந்தது. சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப்பற்றிய கதை இது. தமிழர்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பொற்காலம் அது. வெள்ளைக்காரர்களான யவனர்கள் தமிழர்களிடம் சேவகம் செய்த காலம். தமிழர் திரை கடலோடி வாணிபம் செய்து, பொன்னைக் கொண்டு வந்து தமிழகத்தில் குவித்த காலம். தமிழர் நாகரிகம் மேல் திசை நாடுகளிலெல்லாம் பரவிக் கிடந்த காலம். அந்தக் காலத்தைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டுமென்ற ஆசையால், என் சொந்தக் கற்பனையில் கதாபாத்திரங்களை எழுப்பி, அந்தப் பாத்திரங்களுடன் சரித்திரப் பாத்திரங்களை இணைத்தும் மோத விட்டும் இந்தக் கதையை உருவாக்கினேன்.
இதில் கதையை மட்டும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பமல்ல. நமது வரலாற்றுப் பெருமைகளையும், இலக்கியச் சான்றுகளையும் பொது மக்கள் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டு மென்ற விருப்பத்தால், இலக்கியத்தையும் சரித்திரத்தையும் 5
பெரும்பாலும் இணைத்தே கதையை ஓட்டியிருக்கிறேன். அந்த ஆதாரப் புத்தகங்களை மாணவர்களும் படிக்க வேண்டு மென்ற நோக்கத்துடன், அந்தப் புத்தகங்களின் பட்டிய லொன்றையும் முன்னுரையை அடுத்துத் தந்திருக்கிறேன்.
இந்தக் கதையால் மற்றவர்களுக்கு லாபம் ஏதாவது உண்டோ, எனக்குத் தெரியாது. எனக்கு நல்ல லாபந்தான். இந்தக் கதை எழுதுவதற்காகவே பல தமிழ் இலக்கியப் புத்தகங் களையும், சரித்திரப் புத்தகங்களையும் துருவித் துருவிப் படித்தேன். ஆழ்ந்த தமிழ்ப் புலமையில்லாத எனக்கும், ஓரளவு தமிழ் இலக்கிய அறிவு ஏற்பட்டது. தவிர, நான் முன்பின் கண்டிராத வரலாற்றுப் புத்தகங்கள் பலவற்றையும் பார்வை யிடும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்தக் கதையைக் ‘குமுத'த்தில் வெளியிட்டு ஆதரித்தது மட்டுமன்றி, நான் சந்தேகப்பட்ட சமயங்களிலெல்லாம் "சந்தேகமே வேண்டாம். கதை பிரமாதமாயிருக்கிறது" என்று என்னை அடிக்கடி ஊக்குவித்த 'குமுதம்' ஆசிரியர் திரு. எஸ். ஏ. பி. அண்ணாமலை அவர்களுக்கும், பிரசுர கர்த்தர் திரு. பார்த்தசாரதி அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். கதை 'குமுத'த்தில் வந்து கொண்டிருந்தபோதே, 'இதை எப்பொழுது புத்தகமாகப் போடலாம்?' என்று துடித்தது மட்டுமல்லாமல்,கதை முடிய ஒரு மாதமிருக்கும் போது, அதைப் புத்தக வடிவில் தயாரிக்கவும் முற்பட்ட வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதை 'குமுத'த்தில் வந்தபோது ஆதரித்ததைப் போலவே, புத்தக வடிவில் வரும்போதும் ஆதரவளிக்க வேண்டுமென்று தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
சாண்டில்யன்
==========================================================================================================
யவனராணி முதன்முதலில் புத்தகமாக வந்தது 1963 ஆம் வருடம். இதுவரை 32 பதிப்புகள்.. எத்தனை பதிப்புகள் 2009 ஆம் வருடத்துக்கு அப்புறம் அச்சிட்டார்களோ...
=================== ==================== ===================== ============ ===========
பொன்னியின் செல்வன் முதன் முதலில் தொடராக வெளிவந்தபோது மணியம் வரைந்த படங்கள்... இதே கதாபாத்திரங்கள் பின்னர் சற்றே ஜாடை மாறி இருந்தன.. என்ன சொல்கிறீர்கள்?
பொதுவான தொகுப்பு.. மணியம் படங்கள்.


=============================================================================================
"மணிக்கொடி பத்திரிகையை எப்படி நடத்தினார்கள் என்ற விஷயத்தை புதுமைப்பித்தன் என் னிடம் ஒருநாள் ரசமாகச் சொன்னார்.
பத்திரிகை எங்கள் ராஜ்ஜியத் துக்கு வந்தது. வரும்போது அச்சடிக் கிறவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாக்கி பதினெட்டே முக்கால் ரூபாய். வரவேண்டிய பணமும் அதிகம் ஒன்றுமில்லை. ஒழுங்காக வருவதுமில்லை. பசி, பட்டினி என்பவை பிரச்னைகள் அல்ல, பழகிப்போன விவகாரம். இந்தச் சமயத்தில் கி.ரா.வும் எங்களோடு வந்து சேர்ந்து இலக்கியச் சேவைக்குத் துணிந்துவிட்டார். பிரஸ்காரனோ பணத்துக்கு நெருக்குவான். ஆபீஸ் நாற்காலி, மேசை அத்தனையும் வாடகைக்கு. வாடகை என்பது பெயரளவில்.
நடைமுறையில் அனுபோக பாத் தியதை கொண்டாடுவதுதான் எங்களால் முடிந்த காரியம்.
நாங்களோ பத்திரிகை அச்சாகிப் போனால்தான் பணம் புரளும் என்று பிரஸ்காரனை மிரட்டுவோம். அச்சடித்துக் கொடுப்பான். என்றைக்கா வது எங்கிருந்தாவது ஒரு நாணயஸ் தனான ஏஜெண்டோ அல்லது அப் பாவிச் சந்தாதாரரோ மூன்று அல்லது நான்கு ரூபாய் மணியார்டர் அனுப்பி விடுவான். மணியார்டர் வந்துவிட் டால் உடனே நாங்கள் எல்லாம் குபேரப் பிரபுக்கள்தான். நேரே ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமுக்குப் போவோம். திரும்பி வந்து இலக்கியச் சேவையில் ஈடுபடுவோம்.
மணியார்டர் பியூன் வராத நாட்களில் இன்னொரு நண்பரை எதிர்பார்ப்போம். மணிக்கொடியில் எழுதி வந்தவர்களில் சிதம்பர சுப்பிரமணியன் வேறு இடத்தில் வேலை பார்த்து மாதாமாதம் சம்பளம் வாங்கும் ஆசாமி. அவர் வந்தால் ஏதாவது காசு புரளும். காபி உண்டு, சாப்பாடு உண்டு. ஒருசமயம் இந்தத் தொழிலை விட்டுவிட்டு பெப்பர் மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா என்று கூட யோசித்ததுண்டு.
(ரகுநாதன் எழுதி மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட புதுமைப்பித்தன் வரலாறு நூலிலிருந்து.)
=======================================================================================
ஒளிதல்
கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும்
அதனால் உன்னிடமிருந்து தப்ப
இருள்களுக்குள் ஓடினேன்
நீ புன்முறுவல் செய்தாய்
நான் உறக்கத்தில் ஒளிந்தேன்
நீ கனவாக வந்தாய்
நான் விதையில் ஒளிந்தேன்
நீ நீராக வந்தாய்
நான் வீணையில் ஒளிந்தேன்
நீ விரலாக வந்தாய்
நான் மொட்டுக்குள் ஒளிந்தேன்
நீ சூரிய கிரணமாய் வந்தாய்
நான் பாவத்தில் ஒளிந்தேன்
நீ மன்னிப்பாய் வந்தாய்
நான் பொய்யில் ஒளிந்தேன்
அது என் முகத்திரை' என்றாய்
நான் சந்தேகத்தில் ஒளிந்தேன்
அது என் விளக்கடி நிழல்' என்றாய்
நான் 'இல்லை' என்ற பாலையில்
ஒளிந்தேன்
'சிலந்திப் பூச்சியே!
என் வீட்டு மூலையில்
வலை பின்னுகிறாய்' என்றாய்
என்னை விட்டு நீ
எங்கே ஓட முடியும்?
நான் இல்லாத இடம் ஏது
என்றாய்
நீ என்னை விட்டு ஓடவில்லை
உன்னை விட்டு ஓடுகிறாய்
உன் பயமும் நானே
உன் ஓட்டமும் நானே
நீ ஒளியும் இடமும் நானே
என்றாய்
பனித்துளி
வேறெங்கே ஒளிய முடியும்?
வெயிலைத் தவிர.
எனக்கும்
வேறு வழி இல்லை
உன்னிடம் ஒளிவதைத் தவிர
- பறவையின் பாதை - கவிக்கோ அப்துல் ரகுமான் -
=================================================================================
காளிதாசனின் காலம் |
காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார் காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே. ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான். காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்! காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது . அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர். ;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது; சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது. தமிழ்வேதா டாட்காம் |
==============================================================================================
இவர் யாரென்று தெரிகிறதா?
படத்துக்குக் கீழே சிலபல வரிகள் பின்னர் தோன்றலாம்!

டி.கே.சி. என்றும், ‘ரசிகமணி’ என்றும் பரவலாக அறியப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியாா், 18.8.1881 அன்று பிறந்தாா். பிறந்த நட்சத்திரம் ரோகிணி - ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி தினத்தில்; மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் பிறந்தது, இதே ரோகிணி நட்சத்திரம் ஸ்ரீஜெயந்தி நாளில்தான்; கண்ணபிரான் பிறந்ததும் இதே ரோகிணி நட்சத்திரம், ஸ்ரீஜெயந்தி நாளில் தான்.
ஆரம்பக் கல்வி தென்காசி திண்ணைப் பள்ளிக்கூடத்தில். அத்துடன் ஆங்கிலப் பயிற்சியும் உண்டு. உயா்நிலைக் கல்வி திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய உயா்நிலைப் பள்ளியில்; கல்லூரிப் படிப்பு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், பின்பு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் தொடா்ந்தது. திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றாா்.
தனது 27-ஆவது வயதில் 11.06.1908 அன்று டி.கே. சிதம்பரநாதனுக்கும், செல்வி பிச்சம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இவா்களுக்குப் பிறந்த ஒரே மகன் தீத்தாரப்பன். டி.கே.சி., சிலகாலம் திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணிபுரிகிறாா். தொடா்ந்து தாக்கிய மலேரியா காய்ச்சலால், வழக்குரைஞா் தொழிலைத் தொடரவில்லை. 1927 முதல் 1930 வரை சட்ட மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) பதவி வகிக்கிறாா். 1930 முதல் 1935 வரை இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகப் பணிபுரிகிறாா். ‘கம்பா் தரும் ராமாயணம்’, ‘இதய ஒலி’, ‘அற்புத ரசம்’ - போன்ற பல அரிய நூல்களை எழுதுகிறாா். தமிழ் படிப்பது, ஆராய்வது, அனுபவிப்பது, ரசிப்பது, இன்புறுவது, தான் பெற்ற இன்பத்தை பிறரும் பெறுவதற்கு உதவுவது இவற்றையே உயிா்மூச்சாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்தவா் அவா்.
சராசரி மனிதா்கள் டி.கே.சி.யை எப்படிப் பூஜித்தாா்கள் என்பதை விட, சக்கரவா்த்தி ராஜகோபாலச்சாரியாா், டி.கே.சி.யின் தமிழ் அறிவை எப்படிக் கணித்தாா் என்பது சுவையானது.
மூதறிஞா் ராஜாஜி உணா்ச்சிவசப்பட மாட்டாா்; உணா்ச்சி வசப்பட்டாலும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாா். அண்ணல் காந்தியடிகளைக் கூட ‘ஆகா, ஓகோ’ என்று புகழ்ந்துவிட மாட்டாா் அவா். வாா்த்தைகளை அளந்தே பேசுவாா்; தேவைக்கு அதிகமாக ஒரு வாா்த்தை கூட பேச மாட்டாா். ‘என்னைப் போன்ற ஒருவனையும் கூடத் தமிழில் ஆசை கொள்ளச் செய்தவா் டி.கே.சி.தான். இதை இப்போது பலா் அறியச் சொல்லுகிறேன். இது உபசாரம் அல்ல; உண்மை. என்னைத் தள்ளுங்கள், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணிக்கு நல்ல வீரசேனை சேருமாறு ஊக்கம் உண்டாக்கியவா் டி.கே.சி. என்றே சொல்வேன். ஸ்ரீராமன் எப்படிக் கம்பா் உள்ளத்தில் மற்றும் ஒருமுறை அவதரித்தானோ, அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடி அவதரித்தாா்’ என்கிறாா் ராஜாஜி.
கவிஞா் சுப்பிரமணிய பாரதியாா் சென்னையில் தங்கியிருந்த காலம். டி.கே.சி. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாா். அவா் டி.கே.சி.யின் தமிழ் அறிவையும், ஆழத்தையும், ஞானத்தையும் கேள்விப்பட்டிருக்கிறாா். பின்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி டி.கே.சி.யின் அறைக்கு பாரதி வருவாராம். தான் பாடிய பாடல்களை, பாரதி டி.கே.சி.க்கு பாடிக் காட்டுவாராம். பாரதியை டி.கே.சி. மனம் திறந்து பாராட்டுவாராம்.
1900-ஆம் ஆண்டில் டி.கே.சி. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சோ்ந்து படித்தாா். மாணவா்கள் டி.கே.சி.யைக் கல்லூரித் தமிழ்ப் பேரவைக்கு தலைவராகத் தோ்ந்தெடுத்தாா்கள். மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனா் வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்கு கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவையின் சாா்பில் வரவேற்புக் கொடுத்தாா்கள். டாக்டா் உ.வே. சாமிநாத ஐயா், வெள்ளக்கால் வி.பி. சுப்பிரமணிய முதலியாா் போன்ற அறிஞா்கள் அந்த விழாவுக்கு வந்திருந்தாா்கள். டி.கே.சி. வரவேற்புரை நிகழ்த்துகிறாா். பாண்டித்துரைத் தேவரும், டாக்டா் உ.வே.சா.வும் மாணவன் சிதம்பரநாதனை பலபடப் புகழ்ந்து பாராட்டினாா்கள்.
டி.கே.சி.க்கு சஷ்டியப்த பூா்த்தி (அறுபதாம் ஆண்டு நிறைவு விழா) தென்காசிக்கு அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோயிலில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்க பெரியாா் ஈ.வெ.ரா. புறப்படுகிறாா். அப்போது தொண்டா் குழாம் தடுக்கிறது. கோயிலில் நடைபெறும் விழாவுக்கு ஈ.வெ.ரா. போகக் கூடாது என்பது தொண்டா்கள் எதிா்ப்பு. ‘அறுபதாம் கல்யாணம் முதலியாருக்குத்தானப்பா நடக்கிறது. முருகனுக்கா நடக்கிறது’ என்று சமாதானம் சொல்லி, இலஞ்சியில் உள்ள முருகப் பெருமானின் சந்நிதானத்திற்கே வந்துவிட்டாா் பெரியாா் ஈ.வெ.ரா. அவருக்கு ரசிகமணியின் மீது இருந்த அன்புக்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் இதுவே சான்று.
காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த நேரம். அப்பொழுது ரசிகமணியை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாா் ராஜாஜி. அறிமுகத்திற்குப் பின் பரம்பொருளின் பேராற்றல்”பற்றி ஆங்கிலத்தில் ஓா் அற்புதமான விளக்கம் கொடுக்கிறாா் டி.கே.சி. அது தொடா்பான கம்பரின் பாடல் ஒன்றையும் பாடிக்காட்டுகிறாா். அண்ணல் காந்தியடிகள் சிறிது சிந்தனைக்குப் பின், டி.கே.சி.யைப் பாா்த்து, ‘நான் கம்பரின் பாடல்களை மூலத்தில் அனுபவிக்க வேண்டும். அதற்கு வழி என்ன’ என்று கேட்கிறாா். டி.கே.சி.யிடமிருந்து பளிச்சென்று வந்த பதில், ‘கம்பராமாயணம் மட்டுமல்ல. தமிழ்ப்பாடல் எதுவாக இருந்தாலும், அதை அனுபவிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு; அது நீங்கள் தமிழனாகப் பிறப்பதுதான்’.
கவா்னா் ஜெனரலாக ராஜாஜி தில்லியில் இருந்த காலம். ராஜாஜியின் விருந்தினராக, ரசிகமணியும் சிறிது காலம் தில்லியில் தங்கியிருக்கிறாா். அப்பொழுது பாரத பிரதமா் பண்டித ஜவாஹா்லாலுக்கு பைந்தமிழ் அறிஞா் டி.கே.சி.யை அறிமுகம் செய்து வைக்கிறாா் ராஜாஜி. சுமாா் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பின், பண்டித நேரு சொல்கிறாா் ‘எவ்வளவு பெரிய ஞானவானாக இருக்கிறாா் டி.கே.சி.; அனைத்தையும் தெள்ளத்தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாா்’. டி.கே.சி.யிடம் கொண்ட மரியாதை காரணமாக, அவரை விருந்துக்கு அழைத்தாா் நேரு. சக அமைச்சா்களுக்கும், உயா் அதிகாரிகளுக்கும் டி.கே.சி.யை அறிமுகம் செய்து வைத்தாா் நேரு.
டி.கே.சி. பிறந்த காலத்தில், தமிழகம் இருண்டு கிடந்த காலம் என்றே சொல்லலாம். தமிழில் பேசுவது. தமிழில் எழுதுவது எல்லாம் கேவலம் என்று நினைத்த காலம். ‘தமிழில் எனக்குப் பேச வராது; எழுதவும் தெரியாது’ என்று படித்தவா்கள் சொல்லித் திரிந்த காலம். ‘தமிழில் என்ன இருக்கிறது. எதுவுமே இல்லையே’ என்று தமிழன் தன்னையே ஏமாற்றிக் கொண்ட காலம். அப்படிப்பட்ட இருண்ட காலத்தில் தான் டி.கே.சிதம்பரநாதன் பிறக்கிறாா். ‘பண்டிதா்கள் பிடியில் சிக்கியிருந்த தமிழை டி.கே.சி. உதறி எடுத்தாா். மக்கள் பேசுகிற பேச்சில், அவா்கள் பாா்க்கிற பாா்வையில், பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் எடுத்து விளக்கினாா். மக்களோடு மக்களாய் தமிழ் உருண்டு, புரண்டு விளையாட ஆரம்பித்தது. தமிழையும், தமிழ்ப் பண்பையும் மக்கள் கண்ணாரக் காண ஆரம்பித்தாா்கள்’”என்கிறாா் வித்வான் ல. சண்முகசுந்தரம்.
தன்னுடைய வீட்டில் டி.கே.சி. ‘வட்டத் தொட்டி’”என்கிற இலக்கிய அமைப்பை நடத்தினாா். வட்டத் தொட்டிக்கு வந்து தமிழை அனுபவித்தவா்களில் அறிஞா்கள் - வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப் பிள்ளை, ஆசிரியா் கல்கி, பேராசிரியா் அ. சீனிவாச ராகவன், ஆ. முத்துசிவன், தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், எஸ். மகாராஜன், மீ.ப. சோமு, பி.ஸ்ரீ. ஆச்சாா்யா ஆகியோா் அடங்குவா். வட்டத் தொட்டிக்கு வந்தவா்களெல்லாம் டி.கே.சி.யின் தமிழ் அருவியில் நனைந்து திளைத்தாா்கள்.
கல்கி வார இதழில் ‘கம்பா் தரும் காட்சி’ என்ற கட்டுரைத் தொடா் எழுதினாா் டி.கே.சி. அக்கட்டுரைகள் சுமாா் 12 ஆண்டுகள் தொடா்ந்து வெளிவந்தன. அத்தொடா் கட்டுரைகள் ‘கம்பா் தரும் ராமாயணம்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. ‘செருகு கவி’ என்று, டி.கே.சி. அளந்து, அறிந்து, புரிந்து கொண்டதை நீக்கி, கம்பனின் உண்மைக் கவிகளைக் கொண்ட பாடல்களையும், விளக்கத்தையும், உள்ளடக்கியதுதான் ‘கம்பா் தரும் ராமாயணம்’. தமிழ்ப் பாடல்களைத் தமிழ் இசையில் பாடவேண்டும். அப்பொழுதுதான் பாடலையும், இசையையும் தமிழா்கள் அனுபவிக்க முடியும் என்ற உண்மையை தமிழ் உலகுக்கு எடுத்துச் சொன்னாா், டி.கே.சி. அப்பொழுதுதான் தமிழிசை இயக்கம் உயிா் பெற்று எழுந்தது. தமிழிசை மாநாடு நடத்தினாா்.
தமிழிசை மன்றத்தை ராஜாசா் அண்ணாமலைச் செட்டியாா் உதவியோடு சென்னையில் தொடங்கினாா். அருணாசலக் கவிராயா், கோபாலகிருஷ்ண பாரதி போன்றவா்களின் பாடல்களைத் தோ்ந்தெடுத்து, கீா்த்தனை என்றும், பதம் என்றும் பிரித்து தமிழிசைப் பாடல்களை டி.கே.சி. வெளியிட்டாா். தமிழ் இசையை, உண்மை இசையை, உணா்ச்சி பாவத்தோடு கூடிய இசையை நாம் இன்று கேட்டு இன்புறுகிறோம் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அமரா் டி.கே.சி. தான். ரசிகமணி டி.கே.சி. 16.2.1954-இல் இவ்வுலகை விட்டு மறைந்தாா். ஆனாலும், அவா் இறந்தும் வாழ்கிறாா்; வாழ்ந்து கொண்டே இருக்கிறாா்.
. கட்டுரையாளா்: காந்தியவாதி.




.jpg)









நான் தூய சவேரியார் மேநலைப்பள்ளி 75ம் ஆண்டு(?) விழாவில் மாவட்ட ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு இவர் கையால் பெற்றேன் 1979ல்
பதிலளிநீக்குஅடடே... கொடுத்து வைத்தவர். வாங்க நெல்லை.
நீக்குஅந்த இவர் எவர் நெல்லை? நிச்சயம் டிகேசியாக இருக்க முடியாது.
நீக்குமன்னிக்க்ணும். நான் தவறான புரிதலில் எழுதிவிட்டேன். நான் படத்தைப் பார்த்து இளைய ம.பொ.சி என்று நினைத்துவிட்டேன். கீசா மேடம் எதேச்சயாக இப்போ வந்ததனால் எழுத முடிந்தது.
நீக்குடி.கே.சியிடம் ஒரு குறை சொல்வார்கள். கம்பர் எழுதிய பாடல்களிலேயே இது அவரது இல்லை, இது இடைச்செருகல் என்று சொன்னது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்று பலர் சொல்லிப் படித்திருக்கிறேன்.
நீக்குஎனக்கு என்னமோ டிகேசியைப் பற்றிப் படிக்கையில் எல்லாம் அவர் ஒரே மகன் தீத்தாரப்பன் அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இரந்ததும் அதைக் குறித்து அவர் எழுதிய கவிதைகளும் நினைவில் வரும். கல்கி அவர்கல், ராஜாஜி அவர்கள் ஆகியோரின் நெருங்கிய நண்பர். ராஜாஜீ அவர்கள் டிகேசி அவர்கள் வீட்டு தோசை பற்றிச் சிலாகித்துச் சொல்லி இருப்பார். இவை எல்லாமும் ஏதோ ஒரு கட்டுரைத் தொகுப்பில் படிச்சது. எதிலேனு நினைவில் இல்லை. அநேகமாக மணிக்கொடி காலமாக இருக்கலாம்.
நீக்கு// அந்த இவர் எவர் நெல்லை? நிச்சயம் டிகேசியாக இருக்க முடியாது. //
நீக்குஹிஹிஹி.. ஆமாம் இல்ல?
// நான் படத்தைப் பார்த்து இளைய ம.பொ.சி என்று நினைத்துவிட்டேன் //
நீக்குஅதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். ஜீவி ஸாரிடமும் சொல்லி இருக்கிறேன்!
//நான் படத்தைப் பார்த்து இளைய ம.பொ.சி என்று நினைத்துவிட்டேன்.// அப்படியா? டி.கே.சி. என்று நன்றாகத் தெரிகிறதே.
நீக்கு//கம்பர் எழுதிய பாடல்களிலேயே இது அவரது இல்லை, இது இடைச்செருகல் என்று சொன்னது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்று பலர் சொல்லிப் படித்திருக்கிறேன்.// அதிகப் பிரசங்கித்தனம் என்பது கொஞ்சம் அதிகப்பட்சமான வாத்தையாகத் தெரிகிறதே. ஷேக்ஸ்பியரின் கவிதைகளிலும் இப்படிப்பட்ட இடைச் செருகல்கள் உண்டு என்பார்கள். ஒரு எழுத்தாளரின் எழுத்தை ஊன்றி படிப்பவர்களுக்கு எது அந்த எழுதாளரின் எழுத்து? எது இடைச் செருகல் என்று தெரியாதா? சுலபமாகத் தெரியும்.
நீக்குகம்பரை விடுங்கள் இப்போது சுஜாதா என்ற பெயரில் எத்தனையோ பேர் தங்கள் படைப்புகளை வெளியிடுவதில்லையா?
சில பிரபலமான கம்பன் பாடல்களையும் டி.கே.சி. இடைச்செருகல் என்றதால் கோபப்பட்டு அவரை அதிகப் பிரசங்கி என்றார்களோ? உண்மையைச் சொன்னால் ஆத்திரம்தான் வரும்.
அவரது நடை என்று கண்டுபிடித்து உண்மை எது பொய் எது என்று சொல்வது எளிது என்று நினைக்கிறீர்களா? எனக்கு சிரமம். எல்லோரையும் அப்படி கண்டுபிடிக்க முடியாது. அட்லீஸ்ட் எனக்கு சிரமம்!
நீக்குகாளிதாசன் பற்றிய செய்தி அருமை. வரலாற்றில் புகுந்தால் படிக்க ரசனை, குழப்பும், ஆச்சர்யமாக இருக்கும். என்ன ஒண்ணு, ஒவ்வொரு வரலாற்றாசிரியர்களும் காலத்தை எழுதும்போது வேறுபடுவர்.
பதிலளிநீக்குஆமாம். இதுபற்றி கூட எடுத்து வைத்திருக்கிறேன். சற்றே நீளமாக இருக்குமே என்று யோசிக்கிறேன்.
நீக்குஎதனால் வறுமையில் இருந்தும் இலக்கியத்தை வளர்த்திருப்பார்கள்? தங்கள் படைப்புகளை எழுதும் தீராத ஆசையாலா?
பதிலளிநீக்குஇயல்பான ஆர்வம். அப்போது OTT, வாட்ஸாப் எல்லாம் கிடையாது இல்லையா!!!!!
நீக்குயவன ராணி..... தமிழகம் ஒரு காலத்தில் வெளி நாட்டவர் பலரால் ஆளப்பட்டது. முஸ்லீம்கள் அல்ல. அதற்கும் முந்தைய காலத்தில்... கிபி 1ம் நூற்றாண்டுக்கு முன்பு.
பதிலளிநீக்குஆமாம். அந்த வரலாறு நினைவில் நிற்பதில்லை.
நீக்குசாண்டில்யன் எழுதிய ஆரம்ப கால வரலாற்று நாவல்களான மன்னன் மகள், கன்னி மாடம் இரண்டிலும் சம்பாஷணைகளை ஒட்டியே கதை செல்லும். அவரது வர்ணனைகள் எல்லாம் பின்னாட்களில் வந்தவையே என நினைக்கிறேன். என்றாலும் யவன ராணி அவருடைய மாஸ்டர் பீஸ் என்றால் மிகை இல்லை. அடுத்தது கடல் புறாவையும், ராஜ முத்திரையையும் சொல்லலாம். இதில் கன்னிமாடம் பாண்டியர்கள் பற்றிய நாவல்களில் ஒன்று. இதில் வரும் மேலைமங்கலச் சிற்றரசு என் அப்பாவின் பூர்வீகம். அப்பாவின் முப்பாட்டனார் காலத்தில் இருந்தே அங்கே இருந்திருக்கின்றனர்.
நீக்குஎன் மதிப்பீட்டிலும் யவனராணி முதலிடம், அடுத்து கடல்புறா, அப்புறம் ராஜபேரிகை இன்ன பிற..
நீக்குசுஜாதாவின் பதில்கள் நறுக், சுருக். என்றாலும் புரிந்துகொள்ள ஒரு ட்யூப் எரிய துவங்கும் நேரம் பிடிக்கிறது.
பதிலளிநீக்குசமஸ்க்ரிதம் பழைய மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் சமஸ்க்ரிதம் மட்டுமே அனைத்து மொழிகளுக்கும் மூத்தது என்பதில் தான் தர்க்கம்.
Jayakumar
வாங்க JKC ஸார்.. ஆமாம் என்றோ, இல்லை என்றோ எப்படி நிரூபிப்பது?
நீக்குவரலாறு அதனை நிரூபிக்கிறது. இந்தியாவில் தமிழ்மொழி மூத்தது. வடபுலத்திலிருந்து ஆரியர்கள் தமிழகம் நோக்கி கிமு 7500 ல் வந்தனர். மெதுவாக மொழிக்கலப்படம் நடந்து தெலுங்கு மலையாள கன்னட மொழிகள் உருவாயின. கிமு 7000-6000 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் உருவாகி தமிழ் இலக்கணத்திலும் இடம் பெற்றன. தொல்காப்பியத்துக்கு முன்பிருந்த இலக்கண நூல்கள் மூலம் இது புலனாகின்றது என அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழும் தமிழ் மன்னர்களும் கிமு 30,000க்கு முன்பே விந்திய மலைக்குத் தெற்கே இருந்திருக்கின்றனர்.வரலாறு இருக்கிறது.
நீக்குஆரியர்கள் வருகை என்பதே மேக்ஸ் முல்லர், கால்டுவெல் உட்டாலக்கடி என்றும் சொல்லபப்டுகிறது. அதற்கான அவர்களின் கடிதங்களும் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நீக்குஇது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதி வெளியிடாமல் வைச்சிருக்கேன். பதிவாக வந்தால் சரியா இருக்குமானு ஒரு எண்ணம்.
நீக்குஅதேதான் எண்ணம் எனக்கும்!
நீக்கு/தமிழும் தமிழ் மன்னர்களும் கிமு 30,000க்கு முன்பே விந்திய மலைக்குத் தெற்கே இருந்திருக்கின்றனர்.வரலாறு இருக்கிறது./
நீக்குகிமு 30,000???
அப்பாடி? பிரமிப்பாக இருக்கிறதே நெல்லை! விவரமாக எழுதுங்களேன்.
உண்மையான தென்பாண்டி நாடு. இது பற்றிய சில தகவல்கள் சேகரித்து வைச்சிருக்கேன். தமிழ் மன்னர்கள் எனில் அது பாண்டியர்கள் மட்டுமே. மற்றச் சோழன், சேரன், பல்லவன், சளுக்கன், ஆகியோர் எல்லாரும் கலப்படம்.
நீக்குமணியாடர் பணத்தைத் தரும் தபால்காரர், புதுமைப்பித்தனுக்கு ப்யூன் ஆகி விட்டாரா, என்ன?.. ஆனாலும். ..தை ஜாஸ்தி தான்!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... வாங்க ஜீவி ஸார்.. என்ன ஜாஸ்திதான் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
நீக்கு.. (இரண்டு புள்ளிகள்) அதற்காகத்தான் எண்ணிக் குறித்திருக்கிறேன்!
நீக்குஅகந்தையாக இருக்காது. அது மூன்றெழுத்து என்பதோடு புதுமைப்பித்தனுக்கு பொருந்தாது. வேறென்ன என்று யோசிக்கிறேன். சமயங்களில் மூளை ப்ளாங்க் ஆகி விடுகிறது!
நீக்குமமதை?
நீக்குஎஸ்ஸூ இல்லை. எஸ்.
நீக்கு__/\__
நீக்கு'சில பல' வரிகளில், டி.கே.சி என்று சொல்லாமல் இன்ஷியலுக்கான விளக்கம் கொடுக்கிற மாதிரி முழுப்பெயரையும் குறிக்க வேணுமாய் வேண்டுகோள்!
பதிலளிநீக்கும பொ சி என்னும் இன்னொரு மூன்றெழுத்துச் சுருக்கப் பெயருடன் யாராவது குழம்புகிறார்களா என்று பார்க்க கொஞ்ச நேரம் கொடுக்க நினைத்தேன். இப்போது சேர்த்து விட்டேன் ஜீவி ஸார்.
நீக்குஸாரி, ஸ்ரீராம்!
நீக்குஅந்த டி.கே--க்கு விரிவு?
யாராவது சொல்லத்தான் போகிறார்கள்!
தீத்தரப்ப கீழங்காடு சிதம்பரநாத முதலியார்?
நீக்குஎதற்கு ஸாரி? விரிவு மட்டும்தான் கேட்டீர்களா? இப்போது சேர்த்திருக்கும் இந்த விளக்கமெல்லாம் தேவை இல்லையா? இதோ சூர்யா சொல்லி விட்டாரே...
நீக்குஏதோ குத்துமதிப்பாகச் சொன்னது. TKC யின் ஊர் கீழங்காடா அல்லது கிளாங்காடா? தென்காசிக்குச் சமீபம். TKCயின் பிள்ளையின் பெயர் தீத்தரப்பன் (பாட்டன் பெயர்தானே பேரனுக்கு வைப்பது வழக்கம்?). ஆனால் முதல் இனிஷியல் ஊர் பெயர்தானே இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் KTC என்றல்லவா இருக்க வேண்டும்? ஆர்வக்கோளாறில் ஏதோ சொல்லி விட்டேன். தெரிந்தவர்கள் திருத்தவும்.
நீக்குதீத்தாரப்பன் என்ற பெயர். இது நெல்லையில் புழங்கும் பெயர்.
நீக்குபொன்னியின் செல்வன் பாத்திரங்களின் முக ஜாடை பிற்காலத்தில் (for better) மாறிவிட்டது என்ற தங்கள் கருத்துக்கு 100% ஒத்துப் போகிறேன். 1960/70 களில் கல்கியில் வந்த போது சித்திரங்கள் (மணியம் செல்வனா?) 50களில் வந்த சித்திரங்களை விட அழகாக இருந்தது என்பது என் கருத்து.
பதிலளிநீக்குஒருவர் போட்ட வழியில் இன்னொருவர் நடக்கும்போது கூடுதலாக சில வசதிகளை பெறலாம். ஆரம்பத்தில் வரைந்தவர் மணியம். ம செ வின் அப்பா.
நீக்குவாங்க சூர்யா ஸார்.
74-75ல் வினு
நீக்குசுஜாதாவுக்குக் கூட சரித்திரக்கதை என்றால் சாண்டில்யன் ஸார் தான் நினைவுக்கு வருவார் போலும்!
பதிலளிநீக்குஎனக்கோ சாண்டில்யன் அவர்களை நினைத்தாலே தி.நகர் மஹாலெஷ்மி தெருவும், விக்கெட் கேட்டுக்குப் பின்னால் நீண்ட பாதை தாண்டி இருக்கும் அம்சமான அவரது அந்தப் பெரிய வீடும் தான் நினைவுக்கு வரும்!
சாண்டில்யன் ஸாரின் முதல் சரித்திர நாவல் 'ஜீவபூமி'யை வாசித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வானதி பதிப்பகம் சில தமிழ் எழுத்தாளர்களை தன்னை விட்டுப் போய் விடாமல் தன் பிடிப்புலேயே வைத்திருந்தது.
அவர்களில் பாஷ்யம் அய்யங்கார் ஐயாவும் ஒருவர்!
// வானதி பதிப்பகம் சில தமிழ் எழுத்தாளர்களை தன்னை விட்டுப் போய் விடாமல் தன் பிடிப்புலேயே வைத்திருந்தது. //
நீக்குஇன்னமும் வைத்திருக்கிறது. எங்களுடன் வலைத்தளம் தொடங்கிய சி வெற்றிவேல் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய 'வானவல்லி' சரித்திரத் தொடர் வானதியின் புத்தகமான பின் இன்று வரை தொடர்ந்து சில சரித்திர நாவல்களை வானதி மூலமாக வெளியிட்டு வருகிறார் வெற்றிவேல். அதில் இளஞ்சேட்சென்னி வரலாறும் அடக்கம். இன்னும் நிறைய புதிய சரித்திரக்கதை எழுத்தாளர்களெல்லாம் வானதியில் பார்க்கலாம்.
நான் ஜீவபூமி படித்ததில்லை. கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். மறுவாசிப்பில் யவனராணி முதல் பாகம் முடித்திருக்கிறேன்.
டவுன்லோட் செய்து விட்டேன். விரும்புபவர்கள் இங்கு சென்று நீங்களும் டவுன்லோடலாம்.
நீக்குhttps://tinyurl.com/34aw3fzz
கவிக்கோவின் இந்தக் கவிதை எனக்கு அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்த "பெண்" ணின் பல ரூபங்களை ஒட்டி எழுதிய கவிதைத் தொடரை நினைவூட்டியது. சேகரித்து பைன்டிங் செய்ய வைத்திருந்தேன். முடியலை. அதில் அவர் பெண் என்பவள் தாய், மகள், மனைவி என மூவரையும் குறித்து எழுதி இருந்தது படிக்கையிலேயே கண்ணீரை வரவழைக்கும் எழுத்து. பிடித்த கவிஞர்.
நீக்குகவிக்கோ கவிதைகளை நீங்கள் விரும்பிப் படித்திருக்கிறீர்கள் என்னும் செய்தி வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
நீக்குஅட? எனக்கும் கவிதைக்கும் தூரம் அதிகம், எனக்குக் கவிதைனா பிடிக்காதுனு நினைச்சுட்டீங்க போல!:) முன்னெல்லாம் கணையாழியில் வந்து கொண்டிருந்த மு.மேத்தாவின் கவிதைகளெல்லாம் எனக்குப் பிடித்தவையாக்கும். இன்னும் சிலர் இருக்காங்க. ஆனால் என்னால் வைரமுத்துவை எல்லாம் ரசிக்க முடியலை. அதே பொன்மணியின் கவிதைகள் நன்றாக இருக்கும். சாய்பாபா பற்றியும் பொன்மணி எழுதி இருக்கார்.
நீக்குநிஜமாவே அப்படிதான் நினைச்சுட்டேன். அப்புறம் வைரமுத்துவை எனக்கும் பிடிக்காதுதான். ஆனால் அவர் எழுதிய பாடல் வரிகள் பல எனக்குப் பிடிக்கும்.
நீக்குசந்தடி சாக்கில் பொன்னியின் செல்வன் படங்களோடு வேறு படங்களையும் கலப்படம் செய்து விட்டீர்களே ஸ்ரீராம்! கடைசிப்படம் உள்ள கதையில் வரும் கதாபாத்திரம் உதயசந்திரன். அது போல் கடைசிப்படத்துக்கு முன் வரிசைக்கு முன் வரிசை வலது பக்கப் படமும் பொ.செ. அல்ல (பூபதி என்ற கதாபாத்திரம் வருகின்றது)
பதிலளிநீக்குஆமாம். உண்மையில் இவற்றை நான் மணியம் படங்கள் என்கிற தொகுப்பில்தான் வைத்திருந்தேன். பொ செ என்று குறிப்பிட்டு விட்டேன்! இப்போது கூடுதலாக ஒரு வரி சேர்த்து சமாளித்து விட்டேன்!!! நன்றி சூர்யா ஸார்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா.. வாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம். இன்றைய நாளின் பதிவு சிறப்பு. எத்தனை விஷயங்கள் இந்தப் பதிவில்....
பதிலளிநீக்குவாங்க வெங்கட். வணக்கம். வியப்பு வடிவில் கொடுத்திருக்கும் பாராட்டுக்கு நன்றி.
நீக்குஇன்றைய நாளின் கதம்பம் வெகு சிறப்பு.
பதிலளிநீக்குகவிக்கோவின் படைப்பு, காளிதாசனைப் பற்றிய
த்கவல்கள் அருமை....
நன்றி செல்வாண்ணா...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி சிதறல் அருமை. நிறைய விஷயங்களை அதுவும் பிரபல எழுத்தாளர்களைப்பற்றிய விஷயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். படிப்பதற்கு நன்றாக உள்ளது. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இன்னமும் அனைத்தையும் விரிவாக படித்து விட்டு வருகிறேன்.
நேற்று ஒரு பயணம் அதனால் வர இயலவில்லை. அதற்கும் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓகே கமலா அக்கா.. படித்து விட்டு சொல்லுங்கள்.
நீக்குமூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே
பதிலளிநீக்குதூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே
கவிச்சக்ரவர்த்தியின் ஐயம்
கவிக்கோவின் பதில்
பனித்துளி
வேறெங்கே ஒளிய முடியும்?
வெயிலைத் தவிர.
எனக்கும்
வேறு வழி இல்லை
உன்னிடம் ஒளிவதைத் தவிர
என்று மாற்றிவிட்டார்!
Jayakumar
அந்த கவிச்சக்கரவர்த்தி பாடல் பற்றியே ஏதோ கதை உண்டு.. ஒவ்வொரு வரியாக நிரப்பப்பட்டது என்பது போல ..
நீக்குஆனால் அருமையாக கனெக்ட் செய்திருக்கிறீர்கள்.
சுஜாதா அவர்களின் பதில்கள் பற்றிச் சொலல்ணுமா...யதார்த்தமான நறுக் பதில்கள்!
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா.. சுஜாதா வரலாற்றுக்கு கதை எழுதுவது ப்ரெய் சொல்லவே வந்தேன். அதற்கு இணைக்கும் படத்தில் எக்ஸ்ட்ராவாக போனஸாக கேள்வி பதில் கிடைக்கவும் அதை இணைத்தேனே தவிர, முக்கியத்துவம் அதற்கல்ல!
நீக்குநேற்று எனது கவிதை வெளியானது குறித்து மகிழ்ச்சி...
பதிலளிநீக்குவாசித்து மகிழ்ந்தோர் அனைவருக்கும் நன்றி...
நேற்று மூலிகைப் பண்ணைக்கு சென்றிருந்தேன்... அங்கே
இணையமும் சரியில்லை...
நன்றி செல்வாண்ணா
நீக்குயவனராணி குமுதத்தில் தொடராக வந்த போது, எந்தப் பத்திரிகைக்கும் வீட்டில் அனுமதி கிடையாது அதுவும் குமுதத்துக்குப் பெரிய 144. என்பதால் திருட்டுத்தனமாக வாசித்தது...திருட்டுத்தனமாக என்பதால் முழுவதும் வாசித்ததில்லை.
பதிலளிநீக்குஆனால் இப்பொது ஆன்லைனில் tinyurl il சாண்டில்யன் அவர்களின் கதைகள் இருக்கின்றன. அங்கிருந்து நான் அவ்வப்போது டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் அந்த லிங் https://tinyurl.com/34aw3fzz
யாழ் - இத்தளத்தில் வேறு சில புத்தகங்களையும் காணலாம்.
கீதா
// யாழ் - இத்தளத்தில் வேறு சில புத்தகங்களையும் காணலாம். //
நீக்குYes. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றுதான் சொல்லவில்லை.
சரித்திரக் கதைகள் என்றதும், நம் ப்ளாகர் நண்பர் வெற்றிவேல் (சிறிய பையன் 9/10 வருடங்களுக்கு முன் வானவில்லி என்ற சரித்திரத் தொடரை தன் வளைத்தளத்தில் எழுதத் தொடங்கி பின்னர் புத்தகமாகக் கொண்டு வந்தார். வானதி பதிப்பகம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅதன் பின்னான தொடர் சரித்திரக் கதைக்கு அவர் பல இடங்களுக்குப் பயணம் செய்து ஆய்வுகளைக் கண்டறிந்து எழுதுவதுண்டு.
நன்றாக எழுதுவார்.
சில வருடங்கள் முன் வரை சென்னையில் இருந்தவரை தொடர்பில் இருந்தேன்.
ஆனந்தவிகடனில் வேலையில் இருந்த நினைவு.
கீதா
தான் மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் பேசியதுண்டு அப்போது. கல்வெட்டுகள் எல்லாம் பார்க்கச் செல்வார்.
நீக்குகீதா
ஆரம்ப காலங்களில் கொஞ்சம் பரிச்சயம். பின்னர் விட்டுப் போயிற்று. தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டார்!
நீக்குஎனது கவிதை பகிர்வுக்கு தனித்தனியாக நன்றி சொல்ல
பதிலளிநீக்குஇயலவில்லை...
மன்னிக்கவும்...
அண்ணா அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கு எல்லோரும் புரிதல் உள்ளவர்கள்! குறைப்படுபவர்கள் கிடையாது!!!!
நீக்குகீதா
இதில் என்ன இருக்கிறது செல்வாண்ணா.. பரவாயில்லை.
நீக்குபொ செ படங்கள் முதலில் வரையப்பட்டவை மணியம் என்பது படங்களைப் பார்த்ததுமே தெரிந்துவிடுகிறது. ஆனால் நான் வாசித்த போது கீழே வரும் படங்கள் தான். என் மனதில் பதிந்த படங்கள் இவைதான்..முந்தைய படங்களை விட தீர்க்கமாக இருக்கும் இவை.
பதிலளிநீக்குகீதா
ஆம். உருவாக்கப்பட்ட சாலையில் வர்ணம் பூசி பழுது பார்த்திருப்பார்கள்!
நீக்குபசி, பட்டினி என்பவை பிரச்னைகள் அல்ல, பழகிப்போன விவகாரம்.//
பதிலளிநீக்குஅக்காலத்தில் எழுத்தாளர்கள் பலர் இலக்கியத்தின் மீதிருந ஆர்வத்தினாலும், எழுத்தார்வத்தினாலும் எழுதினார்கள் என்பது பலரைப் பற்றிய பின்புலம் சொல்லும். வறுமையில் ஓடிய வாழ்க்கை. அதன் பின் மெயினாக எழுத்திலேயே பிழைத்தவர்களும், நன்றாக வாழ்ந்தவர்களும் உண்டோ? ஸ்ரீராம்? எழுத்தாளர்களை விட பதிப்பகத்தார்!! அதைப் பற்றி பகிர்ந்திருந்தீங்களே.
கீதா
சிரமம்தான். ஆனாலும் இலக்கியம் வளர்த்தார்கள்.
நீக்குஎன்றைக்கா வது எங்கிருந்தாவது ஒரு நாணயஸ் தனான ஏஜெண்டோ அல்லது அப் பாவிச் சந்தாதாரரோ மூன்று அல்லது நான்கு ரூபாய் மணியார்டர் அனுப்பி விடுவான்.//
பதிலளிநீக்குபாருங்க அப்பலருந்தே இப்பிரச்சனைதான் போல.
கீதா
நிரந்தரம்!
நீக்குவேறு வேலையில் இருந்து கொண்டு எழுதியவர்களுக்கு (சுஜாதா அவர்கள் போன்று) பிரச்சனை அவ்வளவு இருந்திருக்காது. அதாவது நித்யப்படியானவற்றிற்கு..
பதிலளிநீக்குஅங்கும் சொல்லப்பட்டிருப்பது போல்.
பாவம் //ஒருசமயம் இந்தத் தொழிலை விட்டுவிட்டு பெப்பர் மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா என்று கூட யோசித்ததுண்டு.//
மனம் வருத்தமடைந்துவிட்டது.
கீதா
ஆம். கஷ்டம்தான்.
நீக்குகவிக்கோவின் கவிதை பறவையின் பாதை என்ற தலைப்பா?
பதிலளிநீக்குஎன்னக்கு அதனுள் மெய்ப்பொருள் தத்துவத்தால் ஊடப்பட்ட வரிகளாய்த் தெரிகிறது....அப்படித்தான் புரிகிறது.
கீதா
பயத்தில், குழப்பத்தில், நிச்சயமற்ற தன்மையில், உண்மை என்று நம்புவதா பொய் என்று, உண்டு என்பதை? இல்லை என்பதை நம்புவதா என்ற குழப்பத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தில் மனிதன் உழல்வதை
நீக்குகீதா
பயந்து குழம்பி, கடைசியில் தஞ்சமடைவது....
நீக்குபனித்துளி
வேறெங்கே ஒளிய முடியும்?
வெயிலைத் தவிர.
எனக்கும்
வேறு வழி இல்லை
உன்னிடம் ஒளிவதைத் தவிர...
கீதா
ஆமாம். ஆமாம்.. ரசிக்க வைத்தது.
நீக்குவரலாறு என்பதும் அதன் காலகட்டமும் ஒவ்வொருவர் எழுதும் போது மாறுபடுவதுண்டு இல்லையஆ?
பதிலளிநீக்குகாளிதாசன் மிகவும் புகழ்பெற்ற ஒப்பற்ற கவிஞர் என்பது தெரியும் என்றாலும் இத்தனை தகவகளை இப்போதுதான் அறிகிறேன்,...ஸ்ரீராம்.
கீதா
நன்றி கீதா. தமிழ் வேதா டாட்காமுக்கு நன்றி.
நீக்குடி கே சி - கொஞ்சம் மா பொ சி போல இருக்காரோ கொஞ்சம்?
பதிலளிநீக்குரசிகமணி என்றாலே டி கே சி என்பதுதான். அவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் புதியவை அதாவது பிறப்பு படிப்பு போன்றவை. தென்காசி, திருச்சி சென்னை, திருவனந்தபுரம் என்று பல இடங்களில் கல்வி!
தீத்தாரப்பன் ரசிகமணி அவர்களின் தந்தையின் பெயரும் அதையே மகனுக்கு வைத்திருக்கிறார் போல.
சென்னைல திருவல்லிக்கேணியில் இப்பெயரில் ஒரு தெரு உண்டு. நாமதான் சுத்தியிருக்கோமே!! ஒரு சாப்பாட்டுக் கடை கூட உண்டு.
கீதா
அந்த மீசை இருவருக்கும் பொது. அதனால்தான் யாராவது குழம்புவார்களோ என்று முதலில் படம் மட்டும் போட்டேன். பின்னர் ஜீவி ஸார் கேட்கவும் விவரமும் வெளியிட்டேன்!
நீக்குடி கேசி பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநாங்கள் எழுதத் தொடங்கிய போது நான் எழுதுவதற்காக நம்ம மாமனார் கலெக்ஷனில் இருந்து ஒன்று நான் வாசித்ததில் பிடித்தது ரசித்தது என்று பகிர ஒன்று எடுத்து வைத்திருந்த போது இணையத்தில் சில தேடினப்ப, டி கேசி பற்றி கீற்று தளத்தில் வாசித்த நினைவு வந்தது. சுட்டியும் எடுத்து வைத்திருந்தேன். எழுதினேனா என்று கேட்டால் இல்லை. இப்படி நிறைய இருக்கு. என்னவோ போங்க.
உள்ள வேலை, ப்ளாக் ரெண்டு படிச்சு கருத்து போடவே நேரம் எடுக்கிறது எனக்கு!!! முன்பை விட இப்ப என் இயக்கம் ஆமை போல் ஆகிவிட்டது போல.. மனம் வெவ்வேறு சிந்தனைகளில் இருப்பதால் இருக்கலாம்.
https://www.keetru.com/kathaisolli/feb07/natarajan.php
கீதா
சுட்டி குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீக்குபொன்னியின் செல்வன் படங்களில் எல்லாம் பொன்னியின் செல்வன் இல்லை போலத் தெரிகிறதே...மணியம் அவர்கள் வரைந்த படங்கள்
பதிலளிநீக்குகீதா
// பொன்னியின் செல்வன் இல்லை போலத் தெரிகிறதே... //
நீக்குமணியம் செல்வன் என்று சொல்ல வந்தீர்களோ?!
காளிதாசன் பற்றிய தொகுப்பு அருமை. விபரங்கள் முன்னரே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்கவும் நினைவு கூரவும் முடிஞ்சது. மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவரும் சேர்ந்து வெளியிட்ட "மணிக்கொடி காலம்" என்னும் நினைவுத் தொகுப்பு நூல் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் வாங்கிப் படிச்சேன். அதில் இந்தக் கட்டுரையும் படிச்ச நினைவு. பி.எஸ்.ராமையா அவர்கள் தொகுத்திருந்த நினைவு. மணிக்கொடிக்குப் பின்னர் பி.எஸ்.ராமையா அவர்கள் குமுதத்தில் தொடர்ந்து தொடர்கள் எழுதி வந்தார். என் அம்மாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருத்தர். வத்தலகுண்டு என்பதால் சித்தப்பாவுக்கும் தெரிஞ்சவர். சித்தப்பாவின் அம்மாவின் ஊர் வத்தலகுண்டு தான்.
பதிலளிநீக்குமணிக்கொடி காலம் புத்தகம் என்னிடம் இருக்கிறது. அப்பா வாங்கி வைத்திருக்கிறார்.
நீக்குபவபூதி என்னும் எட்டாம் நூற்றாண்டு (?) கவிஞரை காளிதாசனுக்கு நிகராகச் சொல்லுவதுண்டு. அவர் எழுதிய உத்தர ராம சரிதம் மிகவும் பிரபலமான ஒன்று. இது எனக்கு ஹிந்தி படிக்கையில் பாடமாக வந்திருந்தது, கொஞ்சம் போலத் தான். ஆனால் வேறொரு விஷயம் என்னவெனில் காளிதாசர், தண்டி, பவபூதி மூவருமே போஜன் அரசவைக் கவிஞர்களாக இருந்ததாகவும் மூவரில் யார் சிறந்தவர் என்றெல்லாம் போட்டி எழுந்ததாகவும் செவி வழிக் கதைகள்(?) உண்டு. ஆனால் இங்கே காளிதாசர் கி.மு எனச் சொல்லப்படுகிறது. இதை இப்போத் தான் தெரிஞ்சு கொண்டேன் என்றால் அது பொய்யல்ல
பதிலளிநீக்குஎனக்கும் அதிகம் தெரியாது. படித்ததையிப் பகிர்ந்தேன். நீங்கள் சொல்லி இருக்கும் மற்ற இரண்டு பெயர்கள் கேள்விப்பட்டதே இல்லை.
நீக்குதண்டியும் சரி, பவபூதியும் சரி மிகவும் பிரபலமான கவிஞர்கள். கேள்விப்படலை என்பது ஆச்சரியம்.
நீக்குதண்டி கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குஒரு முறை சரஸ்வதி தேவியே விக்கிரமாதித்தன் சபையில் எழுந்தருளி புலவர்கள் மற்றும் மன்னன் கேள்விகளுக்கு விடையளித்தாளாம். அப்போது மன்னன் "தண்டி, காளிதாசன் இந்த இருவருள் யார் சிறந்த கவி?" என்று கேட்க, சரஸ்வதி தேவி, " தண்டி, தண்டி தண்டி.." என்று மூன்று முறை சொன்னாளாம். இதனால் கோபமுற்ற காளிதாசன் அம்பாளை ஒரு தகாத வார்த்தை சொல்லி திட்டி விடுகிறான். சரஸ்வதி தேவி, " நான் வேறு நீ வேறு இல்லை" என்று கூறி, இதை நான் சொல்வதற்குள் அவசரப்பட்டு என்னை தகாத வார்த்தையால் திட்டிய நீ அடுத்த பிறவியில் ஊமையாகப் பிறப்பாய்" என்று சபித்து விடுகிறாள்.
நீக்குஅதன்படி அடுத்த பிறவியில் ஊமையாக காஞ்சீபுரத்தில் பிறந்த அந்தக் குழந்தை காமாட்சியின் அருளால் வாக்கு பெற்று, மூகர் என்னும் கவியாக பரிணமித்தார் என்று ஒரு கதை உண்டு. அவர்தான் மூக பஞ்ச சதீ யைப் பாடுகிறார்.
@ Banumathi! ஆமாம், நீங்க சொல்வது சரிதான். இந்த நிகழ்ச்சியை நாங்க பத்தாம் வகுப்புப் படிக்கையில் நாடகமாக் கூடப் போட்டிருக்கோம். ஆனால் இங்கே அதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் விபரமாகச் சொன்னதுக்கு நன்றி. உங்கள் வாட்சப் செய்தியும் வந்தது. :)
நீக்குபடித்த மாதிரியும் இருக்கிறது இல்லை மாதிரியும் இருக்கிறது. அரைகுறை!
நீக்குஇன்னொருத்தர் பாரவி. இவர் பல்லவர்கள் காலத்திய சம்ஸ்கிருதக் கவிஞர். இவரின் கிரதார்ஜுனியம் புகழ் பெற்றது. அதோடு இல்லாமல் இவர் காஞ்சி நகரைப் பற்றி எழுதிய வர்ணனைகளைப் படித்துவிட்டுத் தான் புலிகேசி காஞ்சியின் மேல் படை எடுக்கக்காரணமாக அமைந்தது எனவும் சொல்லுவார்கள். இதைப் பற்றிப் புலிகேசி படையெடுப்பின் போது மகேந்திர பல்லவர் சபையில் கூறுவதாக ஓர் அத்தியாயம் வரும் ?பாரவி இட்ட தீ" என்பதே அந்த அத்தியாயத்தின் பெயர். "பாரவி இட்ட தீ" என்பதாகும். புலிகேசியின் நண்பனாக இருந்த பாரவி கங்க நாட்டுக்கு வந்தபோது அவர் புகழை அறிந்து கொண்ட பல்லவ மன்னர்கள் அவரைக் காஞ்சிக்கு வரவழைத்தார்கள். இங்கே வந்த பாரவிக்குத் திரும்பப் புலிகேசியிடம் போக மனமே வரவில்லை. அழைப்பின் மேல் அழைப்பாகப்புலிகேசி அழைத்தும் அவர் போகவில்லையாம். புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு நாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி
நீக்குஎன அவர் எழுதிக் காஞ்சியின் புகழ்பாட புலிகேசிக்கு அந்த நகரைத் தன் வசமாக்க வேண்டும் என்றே படை எடுத்தான் என்பதாகச் சொல்லுவார்கள். இதை "சிவகாமியின் சபதம்" நாவலில் கூடப்படிக்கலாம். கல்கி விவரித்திருப்பார்.
நீக்குகாளிதாசனைப் போற்றிய அரசன் போஜன் என்றி, சொல்லுகிறார்கள். விக்கிரமாதித்தன் அரசவையில் இருந்தான் எனவும் சொல்லுவது உண்டு. இந்த விக்கிரமாதித்தனே 3 பேர் இருந்ததாகத் தெரிய வருகிறது. இவர்களில் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் தான் விக்கிரமாதித்யன் கதைகளாக இருப்பனவற்றின் நாயகன் என்பார்கள். பட்டி என்னும் இவன் மந்திரியும் வேதாளமும் பங்கு பெறும் கதைகள் பிரபலம் உஜ்ஜயின் காளியைத் தென்னாட்டுக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தவன் இந்த விக்கிரமாதித்தன் தான் என்பவர்கள் உண்டு. இப்போவும் திருச்சியில் சமயபுரத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு காளி கோயிலில் விக்கிரமாதித்தன் காடாறு மாதம் இருந்தப்போ பூஜித்த காளி சிலை என்பதாக ஓர் சொர்ண விக்கிரஹம் உள்ளது. அதைப் பற்றி விரிவாக என்னோட ஆன்மிகப் பயணம் வலைப்பக்கம் எழுதி இருக்கேன். காளிதாசன் பெயரைப் பார்த்ததும் நினைவுகள் எங்கெங்கோ போகின்றன. மன்னிக்கவும். :(
பதிலளிநீக்குமன்னிக்கவுமா? சுவாரஸ்யமான தகவல்கள். அவ்வையார், வள்ளுவர் போல விக்கிரமாதித்தனும் இரண்டு மூன்று பேர் உண்டு என்று நானும் படித்திருக்கிறேன்! விவரமாகத் தெரியாது.
நீக்குசுஜாத்தா, காளிதாசன், டிகே ஜசி , பொன்னியின் செல்வன் மணியன் படங்கள் பற்றிய தகவல்கள் கண்டோம்.
பதிலளிநீக்குமணிக்கொடி பத்திரிகை நடத்துவதில் ஏற்பட்ட சிரமம் அறிந்தோம்.
சாண்டில்யனின் யவனராணி, கடல்புறா, இரண்டும் படித்திருக்கிறேன்.
வாங்க மாதேவி. சாண்டில்யன் கதைகள் படித்திருக்கிறீர்களா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇன்றைய பதிவு நிறைய செய்திகளை சொல்கிறது.
பதிலளிநீக்குஅனைத்தும் படித்தேன்.சுஜாதா, சாண்டில்யன் சொன்னது எல்லாம் அருமை
.யவன ராணி நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் படங்கள், மற்ரும் வேறு கதைகளுக்கு மணியம் வரைந்த படங்கள் பகிர்வு அருமை.
மீண்டும் பொன்னியின் செல்வனை எடுத்து படிக்க ஆவலை தூண்டுகிறது உங்கள் பகிர்வு.
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை நன்றாக இருக்கிறது.
காளிதாசனின் காலம் பற்றிய பகிர்வு ரசிகமணி பற்றிய பகிர்வு எல்லாம்
படித்தேன். பகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்குநேற்று மாலை வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப நேரமாகி விட்டதால், பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவு வரலாற்று இலக்கிய சிறப்பிதழா?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ கைக்கு கிடைத்தது...!
நீக்குஒரு வாரம் நிறைய இலக்கியம், ஒரு வாரம் நிறைய சரித்திரம், ஒரு வாரம் நிறைய சினிமா என்று போடாமல் எல்லாவற்றையும் கலந்து கொடுத்தால் நன்றாக இருக்குமே. இது என்னுடைய கருத்து. இதுவும் ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கிறது.
நீக்குகொஞ்சம் சிரமம். ரொம்ப மெனக்கெடனும். மற்ற வேலைகளை ஏற்கனவே பார்க்க முடியவில்லை!
நீக்குகவிதையைப் படித்தக் கொண்டே வரும் பொழுது அடட ஸ்ரீராமா இது? எங்கோ சென்று விட்டாரே? என்று நினைத்தேன். கவிக்கோ என்பது கடைசியில்தான் தெரிந்தது.
பதிலளிநீக்குபானு அக்கா... இது கொஞ்சம் ஓவராக இல்லை? இது நிச்சயம் ஸ்ரீராமாக இருக்காது என்றல்லவா எண்ணம் வந்திருக்க வேண்டும்!!!
நீக்குசரித்திர கதை எழுத சுஜாதா கொடுத்திருக்கும் டிப்ஸ் புன்னகைக்க வைக்கிறது. சாண்டில்யனைத்தான் குத்தியிருக்கிறாரோ? அவருடைய புகைப்படம் நிஜமா?ஆல்லது ஏஐ உபயமா? ஏனென்றால் இந்த மாதிரி பூச்சாண்டி சட்டையெல்லாம் அவர் போட்டுக் கொண்டதாக நினைவில்லை.
பதிலளிநீக்குசுஜாதா படம் ரொம்ப நாளாக இணையத்தில் சுற்றுவதுதான், ஒரிஜினல்தான். சுஜாதா சாண்டில்யனை நிச்சயம் சீண்டவில்லை. அது பொதுவான கருத்து.
நீக்கு@ ஸ்ரீராம்: நீங்களும் என்னிடம் இரண்டு,மூன்று முறை 'யவன ராணி' படிக்கச் சொல்லி கூறியிருக்கிறீர்கள். எனக்கு சாண்டில்யன் படிக்க பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை. வேறொரு நண்பர் சொன்னது போல கதையைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் முதல் பாராவையும், கடைசி பாராவையும் மட்டும் படிக்க்லாம்.
பதிலளிநீக்குநண்பர் சொல்லி இருக்கும் கருத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது! யவனராணி கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
நீக்குயவன ராணி குமுதத்தில் வெளி வந்த ஆண்டு 1960 களிலோ என்னமோ என நினைக்கிறேன். அப்போல்லாம் எனக்குக் குமுதத்தைத் தொடக் கூட அனுமதி இல்லை. வயசும் பத்துக்குள் தான். ஆனால் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவெல்லாம் படிச்சுட்டேன். அப்பா ஸ்கூல் லைப்ரரியிலிருந்து எடுத்துட்டு வருவார். அப்படித் தான் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணமும் முழுக்க முழுக்க உரைகளோடு படிச்சிருக்கேன். படிச்சேன். ஆனால் குமுதம் மட்டும் தொடக் கூட முடியாது. யவன ராணி வந்தப்போ அப்பா, அம்மாவெல்லாம் படிச்சுட்டு அதைப் பத்தி வீட்டில் குடியிருக்கும் மற்ற குடித்தனக்காரங்களோடு பேசும்போது ஆவல் அதிகரிக்கும். பெரியப்பா வீட்டில் குமுதமும் வாங்கினதோடு இல்லாமல் அங்கே இந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. அதே போல் தாத்தா வீட்டிலும். ஆகவே முடிஞ்சப்போ தாத்தா வீட்டிற்கோ அல்லது பெரியப்பா வீட்டிற்கோ (அதே மேலாவணி மூலவீதி, எதிர்சாரியில் வீடு) போய் ரகசியமாப் படிச்சுட்டு வருவேன். சமயத்தில் 2,3 குமுதங்களைச் சேர்த்து வைச்சுப் படிப்பேன். ஒரு திகிலான மனநிலையுடன் படிப்பேன்.
நீக்குஆமாம். அவரே ரெபரன்சில் தருகிறார் அதையும்.
நீக்குவர்ணனைகள் உண்டு என்றாலும் யவன ராணி, கடல் புறா வரையில் கதையும் அதைத் தொடர்ந்த உரையாடல்களும் கூடவே உண்டு. ஆகவே பானுமதி படிக்கலாம். முதல் பத்தியும் , கடைசிப் பத்தியும் மட்டும் போதாது.
பதிலளிநீக்குசாண்டில்யனின் வர்ணனைகள் முழுக்க முழுக்கக் காளிதாசனின் பாதிப்புக்களில் உள்ளவை. காளிதாச்னைக் கரைச்சுக் குடிச்சிருப்பார் போல! :)
ஆமாம். சொல்லி இருக்கிறார். சாண்டில்யன் மகன் காலச்சக்கரம் நரசிம்மாவின் எழுத்துகளுக்கு ரசிகர் தெரியுமோ?
நீக்குyessu, I know.
நீக்கு