கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
விஜய்,சங்கீதா மண முறிவு த.வெ.க. வின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?
# வோட்டு வங்கி இருக்குமானால் பாதிக்காது. ( ம.மு தெரிந்த விஷயம்தானே)
Dejavu அனுபவங்கள் உண்டா?
# உண்டு. ஆனால் அற்பமான முக்கியத்துவம் இல்லாதவை.
பொதுவாக பெண்களுக்கு குயிலைப் பழிக்கும் குரல்தான் அழகு என்பார்கள். அதற்கு மாற்றாக கரகர வென்றிருக்கும் ராணி முகர்ஜியின் குரலை ரசிப்பதுண்டா? 'சர்வம் மாயா' பட ஹீரோயின் குரல் கூட சற்று கனம்தான் ஆனாலும் இனிமை என்றுதான் எனக்குத் தோன்றியது.
பி.கு.: சமீப காலங்களில் நடிகைகளின் படங்களை வெளியிடுவதில்லை என்னும் குறையைத் தீர்க்கலாம்.


நெல்லைத்தமிழன் :
1. பார்வைக் குறைவு, கேட்கும் தன்மைக் குறைவு, ருசி அறியாத தன்மை, பல் பிரச்சனை போன்று பலவும் மனிதனுக்கு வயது ஆக ஆக வரும் பிரச்சனைகள். இவற்றில் எது பெரிய பிரச்சனை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
# பெரியது, சிறியது என்று பாகுபாடு செய்து பார்க்க முடியாத அளவுக்கு, வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.எனினும் கண்-காது மந்தம் , மறதி இவற்றின் விளைவாக மிக அதிக சங்கடங்கள் வரும் என்று நான் நினைக்கிறேன்.
2. கத்தரிக்காயை பலரும் விரும்பாததன் காரணம் என்ன? ஏன் அலர்ஜிக்கு கத்திரிக்காய் காரணமாக அமைந்துவிடுகிறது?
# கத்தரிக்காயில் பலவகை உண்டு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பொய்யூர் கத்தரி, வேலூர் முள் கத்தரி இவை மிகவும் சுவை மிக்கவை.
கத்தரி சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பதுண்டு.
3. குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை சக கைதிகளே விரும்பாததன் காரணம் என்னவாயிருக்கும்?
# குழந்தை என்பது தெய்வாம்சம் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இதனால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவர்களால் கூட மன்னிக்க முடியாதவை ஆகிவிடுகின்றன.
4. வாக்களிக்காதவர்களுக்கு ரேஷன் போன்ற அரசு உதவிகள் கிடையாது, தேசத் துரோகக் குற்றம் செய்தால் குடும்பத்தின் சொத்து பறிக்கப்படும் என்றெல்லாம் அவசியமான சட்டங்களை ஏன் ஜனநாயக நாடு கொண்டுவருவதில்லை? யோகியின் புல்டோசர், சில நேரங்களில் நம்மூர் போலிஸின் மாவுக்கட்டு போன்றவை என்னைக் கவருவதால் இந்தக் கேள்வி
# நீங்கள் குறிப்பிடும் தண்டனைகள் வாக்களிக்காத குற்றத்திற்கு அளிக்கப்படுவதற்குத் தகுதியானவை அல்ல என்பது மட்டுமல்ல அதை சரி பார்த்து தண்டனை வழங்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட வழி இருக்கிறது. ஒரு தவறை இன்னொரு தவறு கொண்டு திருத்த இயலாது.
5. செரிமானக் கோளாறுகளுக்கு என்ன காரணம்? சுலபமாக அதனை எப்படிச் சரி செய்வது? பாட்டி வைத்தியம் அல்லது தாத்தா வைத்தியம்.
# சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான உணவு உட்கொண்டால் பிரச்சனைகள் வருவது அபூர்வம். அதையும் மீறி ஏதாவது ஜீரணக் கோளாறு ஏற்படுமானால் சுக்குப்பொடி வெல்லம் கலந்து எடுத்துக் கொள்ளலாம். அஷ்ட சூரணம் என்பது ஆயுர்வேத மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஜீரணத்திற்கான மருந்து. ஒன்று அல்லது இரண்டு வேளை பட்டினி கிடத்தலும், இரண்டொரு நாட்கள் தொடர்ந்து சாத்வீகமான உணவு ( மோர் சாதம்-சின்ன வெங்காயம் ) உட்கொள்ளுதலும் பெரும்பாலான ஜீரணக் கோளாறுகளை சரி செய்துவிடும்.
= = = = = = = = =
படமும், பதமும்:
நெல்லைத்தமிழன் :
அட... கல்லாலான குளியல் தொட்டியா? பார்க்க அழகா இருக்கேன்னு நினைப்பவர்களுக்கு. இது மம்மியை வைக்கும் பெட்டி. இறந்தவரை செழுமைப்படுத்தி பதனப்படுத்தி வைத்தால் அது 'மம்மி'.
இதோ...மூடி வைத்தாகிவிட்டது. அட என்னப்பா... அவனவன் தங்கத்துல பெட்டி செஞ்சு வைப்பாங்க, தங்க கிரீடம் முகமூடிலாம் இருக்கும்னு சொல்றாங்க. நீ என்னடான்னா கல்லுல உள்ளதைக் காண்பித்து மம்மியை வைக்கும் பெட்டின்றயே என நினைக்கிறீர்களா? எல்லோரும் பணக்காரங்க இல்லையே. ஆளுக்கேத்த ஜாடி. அவ்ளோதான். அது சரி மம்மியைப் பார்க்கணுமா?
அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. உடலை லினன் துணிகொண்டு மூடியிருப்பதைப் பார்த்தீர்களா? அது சரி... "மம்மிகளை பக்கத்திலிருந்து பார்த்திருக்க. வீட்டுக்கு வந்து குளிச்சயா" என்று கேட்டீர்களானால் நீங்க பூமர் அங்கிள்/பூமர் ஆண்டி. இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!
பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். உடலுக்கு (உருவத்துக்கு) அல்ல என்று நினைக்கிறேன். அதனால்தான் கோயிலில் உள்ள சிற்பங்களிலோ இல்லை சிலைகளிலோ, இதுதான் இந்த அரசர் என்று சொல்ல இயலாது. அதாவது அந்த அரசர் போல நாம் உருவத்தைச் செதுக்குவதில்லை. எந்த அரசரை எடுத்துக்கொண்டாலும், தெய்வச் சிலைகளைச் செதுக்கும் பாணியில் சிற்பிகள் செய்துவிடுவார்கள். நீங்க இராஜராஜன், உலோகமாதேவி (உலோகம் னா மெட்டல் இல்லை. உலக மகா தேவி) சிலைகள்ல கூட இதனைப் பார்க்கலாம். ஆனால் கிரேக்க எகிப்திய ரோமப் பேரரசுகளின் சிற்பிகள் ஆள் எப்படி இருக்கானோ அதேபோலத்தான் சிலையையும் செதுக்குவார்கள். நீங்கள் மேலே பார்ப்பது, உடலை உள்ளே வைத்துப் புதைக்கும் பெட்டிதான். ஆனால் அதன் மேலே அவர் எப்படி இருந்திருப்பாரோ அதேபோலச் செதுக்கியுள்ளார்கள். உங்களுக்கு பாரதீயச் சிந்தனை பிடித்திருக்கிறதா இல்லை மேற்கத்தைய சிந்தனை பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
பொட்டிக்குள்ள ஒண்ணும் இருக்காதுன்னு நம்பி பக்கத்துல நின்னு போட்டோ பிடித்துக்கொண்டேன்!
= = = = = = = = = =
சென்னை திநகர் பரபரப்பான வியாபார தெரு ஒன்றில் காலை முதல் மதியம் வரையும், மறுபடியும் அதே நாள் இரவு பத்து மணி போலவும் இருக்க நேரிட்டது. அப்போது எடுத்த படங்கள்.. காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும்!
KGG பக்கம் : அடுத்த வாரம் பார்ப்போம். இந்த வாரம் கே ஜி ஜி ரொம்ப பிசி !!
= = = = = = = = = = == = = = = == = = = = = = = = = = = = = = = = = = =
மாம்லா லீகல் ஹை - தமிழ் வசனங்களில் பார்த்தேன்!
NetFlix ல் நான் பார்த்த தொடர். ஒரு மாதிரி சுவாரஸ்யமாகவே இருந்தது. ரவி கிஷன் முக்கிய பாத்திரத்தில். நிதி பிஷ்ட், யஷ்பால் ஷர்மா என்று நடிகர்கள். ஒரு கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்வையாக சொல்லி இருக்கிறார்கள். உண்மை சம்பவங்கள். சின்னச் சின்ன செய்தித் துணுக்குகளை சம்பவங்களாக்கி கதை புனைந்திருக்கிறார்கள். உதாரணமாக சிறைக் கைதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஸெக்ஸ் அனுமதிக்கபபடவேண்டும் என்று ஒரு தீர்ப்பு. அதை வைத்து ஒரு கதை. 2024ல் வந்த பழைய கதைதான்.
ரவி கிஷன் தியாகி என்கிற கதாபாத்திரத்தில் முக்கிய வக்கீல். அவர் தன் தந்தை ஒரு நீதிபதி என்பதை ஏன் மறைக்கிறார் என்பது ஒரு செண்டிமெண்ட் கதை. கடைசியில் அது விடுபடும். நெகிழ்வாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.
மேல்நாட்டில் பி எல் - LLB படித்து வரும் ஒரு பெண் கோர்ட்டில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் கதை. நிறைய வக்கீல்கள் இருப்பதால் சீனியர் வக்கீல்களுக்கு ஆள் பிடித்துக் கொடுத்து கமிஷனிலேயே சம்பாதிக்க நினைக்கிறார்கள், அங்கிருக்கும் ஜூனியர் வக்கீல்கள்.
தியாகியின் அடிப்பொடிகளில் இவருக்கும் ஒரு சீனியர் வக்கீல் ஒரு பிரச்னையில் தியாகி தடுமாறிக் கொண்டிருக்கும்போது நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு சொல்வது போல ஒரு கதை சொல்கிறார். உள்ளிருந்து தானும் அதைக் கேட்கும் தியாகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கிறார். அந்தக் கதை...













அக்கா நீங்க எந்த Dejavu பத்தி கேக்கறீங்கன்னு தெரியலையே!!!! ஹாஹா ஏனென்றால் மார்க்கெட் analysis chart ஒன்றும் உண்டு!!!!
பதிலளிநீக்குஇருந்தாலும் நீங்க கேட்பது என்னன்னு புரியுது!! சிறிய வயதில் நாங்கள் தம்பி தங்கைகள் சேர்ந்து இரவு படிக்கிறோம் என்று இருக்கும் நேரத்தில் பரீட்சித்துப் பார்த்து, அதில் நான் தான் கண்ணை மூடிக் கொண்டு வரவழைக்கும் கதாபாத்திரம்! ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்துக் கொண்டு கையை அதன் மேல் வைத்துக் கொண்டு நாம் கேட்கும் கேள்விக்கு ஆம் இல்லை பதிலை அது நகர்ந்து சொல்லும் என்று. அதன் பின் காயினை வைத்தும் பரீட்சித்தோம். நகர்ந்தது என்று மத்தவங்க சொன்னாங்க. முகம் எல்லாம் அவர்களுக்கு வியர்த்து ....நான் கண்ணைத் திறந்து பார்த்தப்ப எனக்கு ஒன்றும் தெரியலை. மத்தவங்க ரொம்பவே பயந்து போய் போது போதும் என்று சொன்னார்கள். ஆனால் கொஞ்ச நேரம் ஒருவித அமைதி நிலைக்குப் போயிருந்தேன் என்று மட்டும் தெரிந்தது எனக்கு....எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதிற்கு நெருங்கிய என்னிடம் அத்தனை பாசமாக இருந்த என் அத்தையின் மரணம் என்னை பாதித்திருந்ததால் அவர்களை மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்...
கீதா
பெண்களுக்குக் கர கர குரல் கூட அழகுதான். சிலரின் குரலில் கம்பீரமும் தெரியும்.
பதிலளிநீக்குகீதா
அதை யாராவது ஆண் சொன்னாத் தேவலை. சரோஜ் நாராயணசாமி மாதிரி
நீக்குஹாஹாஹா நெல்லை சரோஜ் நாராயணசாமி குரல் என்ன ஒரு ரீச் தெரியுமில்லையா...எனக்கு ரொம்பப் பிடிக்கும்
நீக்குகீதா
என்னென்னவோ படங்கள் போட்டிருக்கீங்க கௌ அண்ணா. இவங்கலாம் யாருங்க?
பதிலளிநீக்குகீதா
எனக்கும் தெரியாது. ஸ்ரீ யைக் கேட்போம்!
நீக்குவாங்க கீதா... தேஜாவு என்றால் அப்போது நீங்கள் பார்க்கும் பொருள் ஏற்கனவே பார்த்தது போலவோ, அப்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே எப்போதோ நடந்தது போலவோ உணரும் நேரம் . அதற்கு தேஜாவு என்று பெயர்.
நீக்குஅந்தப் பெண்.... கீழே உள்ள பெரிய படத்தில் கீழ் அவர் பெயர் இருக்கிறது பாருங்கள். சர்வம் மாயா கதாநாயகி
ஓ! தேஜாவு னா அதுவா....
நீக்குஏதோ ஒரு படம் கூட வந்திருக்கு போல அது இப்படியானதா...ஓகே ஒகே....
அப்படினாக்க இந்த அனுபவம் உண்டு பொருளும் சரி, சம்பவமும் சரி. அது ஏன் அப்படி வருதுன்றதுக்கு சில காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. அறிவியல் ரீதியாக, மன ரீதியாக.
நான் தேஜாவுன்னதும் ஒரு சார்ட் போட்டு சின்ன வயசுல செய்வோமே அதை நினைத்துவிட்டேன், ஸ்ரீராம்
சாத்யா! பார்க்க கொஞ்சம் த்ரிஷா போல இருக்காங்களோ? சர்வம் மாய (மலையாளத்தில்) நு புரிந்து கொண்டேன் ஸ்ரீராம்
கீதா
நீங்கள் சொல்வது ஓஜோ போர்ட்.
நீக்குநெல்லை நீங்க கேட்டிருப்பதில் எல்லாமே வயதானால்தான் வரும் என்றில்லை பிறவியிலிருந்து அல்லது சின்ன வயசிலேயே கூட வருமே.
பதிலளிநீக்குருசி அறியாத தன்மை//
இது வருவதற்குக் காரணம் மணம் அறியும் தன்மை போவதால். இது சில சமயம் தலையில் அடிபட்டால் கூடப் போகும் வாய்ப்பு உண்டு
கீதா
இந்தப் பிரச்சனைகளில் ருசி அறியும் தன்மையை விட மற்றவை எல்லாம்...சங்கடங்கள்....ஆனா நீங்க முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க நெல்லை. மறதி. அது இன்னும் மோசம்.
பதிலளிநீக்குகீதா
நெல்லை, செரிமானக் கோளாறுக்குக் காரணம் நம் உணவுப் பழக்கம்தான். வயதாகும் போது ஒரு சில உணவுகளைத் தவிர்த்தல் நலம் நம்மை நாமே அறிந்து கொண்டால் இதைத் தவிர்க்கலாமே.
பதிலளிநீக்குவேறு காரணங்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.
கீதா
ஆசிரியரின் பதில்கள் நன்று!
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குநெல்லை, அந்தக் கல்லாலான தொட்டி போன்ற வடிவத்தைப் பார்த்ததும் தோன்றியது நீங்க சொல்லியிருபப்துதான் கல்லறை போன்றுதான் தோன்றியது. அதான் மம்மி!!!! குளியல் தொட்டி போல படலை!!!! காரணம் நெட்டில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட நம்மூர் தாழி போன்ற ஒன்று என்று சொல்லலாமோ?
பதிலளிநீக்கு//இந்தக் கேள்வி உங்க மனசுல எழவில்லை என்றால் நீங்களும் GenZதான்!//
ம்ஹூம் இந்தக் கேள்வியே இங்க வாசிச்சப்புறம்தான் ஓ இப்படி ஒன்னு கேப்பாங்கல்ல? என்று தோன்றியது. ஸோ நான் இப்போதைய குழந்தை!
கீதா
பாரதச் சிந்தனையில் நாம் எப்போதும் ஆன்மாவிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். //
பதிலளிநீக்குநெல்லை பிற தத்துவங்களிலும் கூட soul, spirit என்று சொல்லப்படுவதுண்டே. மேலை நாட்டு உளவியலில் soul என்று நிறைய சொல்லப்படுவதுண்டு.
//அது பக்கத்துல நின்னுக்கிட்டு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சேன்.. என்னவோ வேண்டாம்னு தோன்றிவிட்டது. //
என்னாது? அப்ப அடுத்தாப்ல உள்ள ஃபோட்டோ என்னவாம்!!??? அதான் ஒரு ஃபோட்டோ புடிச்சிட்டீங்களே!!!!! ஹாஹாஹாஹா
கீதா
ஸ்ரீராம் கவிதைகளை மீண்டும் ரசித்தேன். வாசித்த நினைவு இருக்கே! பொ எ வை - ஆல்!
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம், படங்கள் நல்லாருக்கு. இரண்டிற்கும் கவிதை பிறந்திருக்குமே!
பதிலளிநீக்குகாலையில் களையுடன்
ஆரவாரத்தில் நான்!
இரவில் அமைதியால்
பொலிவுடன்.
இது கவிதை இல்லை.
கீதா
நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஶ்ரீராம்... இரண்டு கவிதைகளும் நல்லா இருந்தது.
பதிலளிநீக்குஎன் அப்பாவின் சடலத்தைச் சுற்றிவிட்டு பானையை உடைக்கும் சமயத்தில் இவ்வளவு சப்தம் அப்பாவுக்கு ஆகாதே எனத் திடுக்கிட்டேன்.
நெல்லை, மனம் நெகிழ்ந்துவிட்டது! இப்படி நாம் உணர்வு பூர்வமாக ஒன்றி இருப்பதே நாம் நம் உறவுகளுடன் எவ்வளவு நெருக்கமாக பிணைப்புடன் அதாவது மன ஆழத்தில் இருந்திருக்கிறோம் என்று தெரிந்துவிடும்.
நீக்குகீதா
திகில் கவிதைகள் என்று ஏழெட்டு கவிதைகள் முன்பு எழுதி இருந்தேன். அவற்றிலிருந்து இரண்டு நீங்கள் பகிர்ந்திருந்த படங்கள் பார்த்ததும் எடுத்துக் பகிர்ந்தேன். இதை தளத்தில் பகிர்ந்தபோது கீதா அக்கா இந்த வரிகளுக்குத் தக்கவாறு ஜோக் அடித்தார்
நீக்குநீங்கள் சொல்லி இருப்பதால் நானும் சொல்கிறேன். அவ்வளவு பெரிய ஃபர்னேசுக்குள் அப்பாவை அனுப்பியபோது மனம் நின்று விட்டது. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன், 'ஸ்ரீராம் வெளியே இழுத்து விடுடா' என்று சொல்வாரோ என்று.. அங்கிருந்தவர் என்னை நெட்டித்தள்ளி வெளியே அனுப்பினார்.
ஸ்ரீராம்......உங்கள் வரிகளும் மனதை நெகிழச் செய்துவிட்டன.
நீக்குநான் சின்ன வயசில் என்ன இப்பவுமே என் அத்தைகளையும் பாட்டியையும் அம்மாவையும் மேகங்களில் தேடுவதுண்டு.
கீதா
நானும் பழைய வீட்டின் மொட்டை மாடியின் அருகே உள்ள மரத்தில் அம்மாவோ அப்பாவோ இருந்து பார்ப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு. அவர்களை ஏன் மரத்தில் எதிர்பார்த்தேன் என்று தெரியாது. ஆனால் மனத்திலும் இருந்தார்கள். வீட்டுக்குள் நானே சேர்க்கவில்லை போல..
நீக்குமூன்று பெண்களில் இரண்டாவது படம் யாருடையது? ஏன் ஶ்ரீராமின் ரசனை இவ்வளவு மோசமாகி விட்டது? இதுக்கு மூணு படத்துக்குப் பதில் அனுஷ்காவின் அந்தக் காலப் படங்களையே பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குபானு அக்காவின் கேள்வியைப் பார்த்தால் உண்மை விளங்கும். மேலும் ஸாத்யா நன்றாகத்தானே இருக்கிறார்... நல்லவேளை உங்களுக்குத் பிடிக்கவில்லை. போட்டி இல்லை!!! மணல்கயிறு எஸ் வி சேகர் ஜோக் நினைவுக்கு வருகிறது.
நீக்குஅழகிய பெண்ணை நல்லா முறைச்சுப் பார்த்மு, சண்டைக்கு வந்தால், தேஜாவு மா.. எங்கேயோ எப்போவோ உன்னைப் பார்த்திருப்பது போலத் தோன்றியது.. முன் ஜென்மமாக்க்கூட இருக்கலாம்னு சொன்னால் அடிக்காமல் போவாளா?
பதிலளிநீக்குஊஹூம்.. "எனக்கும் அப்போது உங்களை உதைத்தது போலதான் இருக்கிறது" என்று சொல்லி விட்டு உதைப்பாள்.
நீக்குவரலாற்றையும் புனைவு போன்று கொடுத்தால் அதுவும் ஆதாரங்கள் விலகாமல் கொடுத்தால் படிக்க சுவாரசியமாகவே இருக்கும் என்பது மிகவும் சரியே,.
பதிலளிநீக்கு//"அதிகார வெறியில் சுருக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டுக் காத்திருந்த வெள்ளைக் கழுகுகளின் காதுகள் மட்டுமல்ல... ஐம்புலன்களும் மரத்துப் போயிருந்தன. வெட்டப்பட்ட பனை மரங்களில் இருந்த ஈரம்கூட, அங்கிருந்த மனிதர்களின் மனங்களில் இல்லை”//
அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் வரிகள். வரிகளே ஈர்க்கின்றன. வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றன ஸ்ரீராம். இல்லையா?
கீதா
முன்னர் "இழுக்க இழுக்க இன்பம்" என்று ஒரு சிகரெட் விளம்பரம் வரும். அது நினைவுக்கு வருகிறது. "படிக்கப் படிக்க இன்பம்"
நீக்குஅத்தனைக் கதைகளும் ஒரு தொடரிலா...
பதிலளிநீக்குகுழந்தை - அந்த வரிகள் சூப்பர். உண்மைதானே
குழந்தைகளைப் பறக்க விட வேண்டும் நல்ல வழியில் அவங்க கனவைப் பூர்த்தி செய்து கொள்ளத் தடையாக இல்லாமல்...
//"சிக்னல்ல மாட்னவன் எங்க அப்பா போலீஸ்டா அப்படின்னு சொல்லுவான் எங்க அப்பா கலெக்டர் டா அப்படின்னு சொல்லுவான் எவனாவது எங்க அப்பா ஜட்ஜ்ன்னு சொல்வானா"//
அதானே!!!! சூப்பர்ல நல்லா யோசிச்சிருக்காங்கப்பா.
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஎன்னை மாதிரி ஒரு பாவியால நல்ல நீதிபதியாக இருக்க முடியுமா என்று கேட்கிறார் தியாகி.
பதிலளிநீக்கு"ஒரு வக்கீலாக நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன். என்னால் நீதிபதியாக நியாயமாக நடக்க முடியுமா?"//
நல்ல கேள்விகள் ஸ்ரீராம்.
ஒரே ஒரு சந்தேகம். யதார்த்தத்தில் வக்கீலாக இருந்துதானே நீதிபதி பதவிக்கு வருவாங்க? ஸோ நீதிபதியாகப் பதவி ஏற்பவர் வக்கீலாக இருந்தப்பச் சில வாதங்கள் குற்றவாளி தரப்பிலும் வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார் இல்லையா?
கீதா
// ஒரே ஒரு சந்தேகம். யதார்த்தத்தில் வக்கீலாக இருந்துதானே நீதிபதி பதவிக்கு வருவாங்க? ஸோ நீதிபதியாகப் பதவி ஏற்பவர் வக்கீலாக இருந்தப்பச் சில வாதங்கள் குற்றவாளி தரப்பிலும் வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார் இல்லையா?//
நீக்குஅதைதான் எம் ஆர் ராதா சொல்வார். ரொம்ப பிரபலமான வசனம். தனியாக பொதுக்கூட்டத்தில் பேசியது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்டிருக்கும் சந்தேகம் எல்லோருக்கும் வரும் என்றுதான் அந்த கடைசி முத்தாய்ப்பு கான்ஸ்டிடியூஷன் புத்தக சத்தியம். ஆனால் அதெல்லாம் வி இ நீ என்பது இப்போது நடைமுறையில் உ நெ க ஆகபார்க்கிறோம்.
ஆனால் அதெல்லாம் வி இ நீ என்பது இப்போது நடைமுறையில் உ நெ க ஆகபார்க்கிறோம். //
நீக்குயெஸ்ஸூ
கீதா
கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//வயது அதிகமாவதால் ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுமே மிகுந்த சிரமங்களை அளிக்கத்தான் செய்கின்றன.//
நல்ல பதில்.
நெல்லையின் 3 வது கேள்விக்கும் பதில் நன்று.
கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.
5 வது கேள்விக்கு பதிலும் பயனுள்ளது சில நேரங்களில் "பட்டினியே சிறந்த மருந்து"
முருகா சரணம்
பதிலளிநீக்கு"யாராயிருந்தாலும் கான்ஸ்டிடியூஷன் மேல கைவைத்து உறுதிமொழி எடுத்த பிறகு தானாக ஒரு மாற்றம் வரும் அவர்களால் தப்பு பண்ண முடியாது"//
பதிலளிநீக்குஇது வக்கீல் உட்படத்தானே இல்லையா?
//"நீதிக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு பெரிய தூரம் வித்தியாசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை"//
உண்மை. ரொம்பவே உண்மை. இல்லைனா இத்தனகி குற்றவாளிகள் அதுவும் உலகின் கண்களுக்கே பட்டவர்த்தனமாகத் தெரியும் குற்றவாளிகள் ரொம்ப ஜாலியாக உலாவுவாங்களா சமூகத்தில்? என் வழக்குல சொல்றேன் 'லாந்துவாங்களா" ஹாஹாஹா....
நான் அடிக்கடி சொல்வதும், படைப்பில் பயன்படுத்தியிருப்பதும்...
சட்டத்தில் உணர்வுகளுக்கு அதுவும் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கிடையாது. வெறும் வாதங்கள்தான் அது எப்படிப்பட்ட வல்லுனரால் வாதிடப்படுகிறது இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி...என்பதைப் பொருத்துதான். நீதிபதியும் வாதங்களின் அடிப்படையில்தானே நீதி வழங்குவார் இல்லையா? அலல்து அவராகவே வாதங்களின் உள்ளில் இருக்கும் உண்மைத்தன்மையை அவதானித்திருந்தால் ஒழிய...
கீதா
கேள்வி பதில் பகுதி சிறப்பு...
பதிலளிநீக்குபடமும், பதமும் நெல்லைத்தமிழன் பகிர்ந்த படங்களுக்கு ஸ்ரீராமின் கவிதைகள் முன்பு படித்த நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் தன் அப்பாவை பற்றி பகிர்ந்து கொண்ட பகிர்வு , ஸ்ரீராம்அப்பாவை பற்றி பகிர்ந்து கொண்ட பகிர்வு மனதை நெகிழ வைத்து விட்டது.
தன் அப்பாவின் இறுதி காரியம் முடித்து வந்து மகன் இரண்டு மூன்று நாள் திக்பிரமை பிடித்தது போல இருந்தான், மருத்துவரிடம் போய் காட்டினார்கள். நன்கு தூங்கி எழுந்தால் சரியாகி விடும் என்று தூக்க மாத்திரை கொடுத்தார். அவன் பெரியப்பா ஆதரவாக பக்கத்தில் படுத்து பார்த்து கொண்டார்கள்.
காலை பரபரப்பாகவும், இரவு அமைதியாக, காலியாகவும் உள்ள சாலை படம் அருமை.
பதிலளிநீக்குதூக்கில் போடுவதும் வெட்டிக் கொல்வதும் அன்றைய
பதிலளிநீக்குஐரோப்பிய ஆப்கானிய
ஆட்சியாளர்களின் பிறவித் தொழிலாக மாறிப்போனது.
இந்த வரலாறுகள் அறியாமல் தான் இன்னும் அவர்களுக்கு அடிவருடல் நடக்கின்றது..
குழந்தைகளைக் கடத்துவது அல்லது அவர்களை இச்சைக்கு உபயோகிப்பது போன்ற குற்றங்களைச் செய்பவர்களை//
பதிலளிநீக்குகுழந்தைகள் என்றில்லை, எந்தக் குற்றமானாலும், சில வளைகுடா நாடுகளைப் போன்று சட்டங்கள் இங்கும் வலிமையாக இருக்க வேண்டும்.
எனக்கு இன்னொன்றும் தோன்றும், இங்க நம்ம ஊர்ல சும்மா கொஞ்சம் மீடியா புகழ் பெற்றதும் ரொம்பக் கேவலமாகக் கன்னாபின்னான்னு உடை அணிபவர்களை எல்லாம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றும்.
கீதா