சென்ற வாரப்பகுதியில் ராஜேந்திர சோழன் தன்னுடைய மூன்றாம் ஆட்சிக்காலத்துக்குள் வென்ற பகுதிகளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
ஈழத்தில் இதற்கு முன்பு, வடபகுதியை சோழர்கள் கைப்பற்றி, சோழப் படைத் தலைவன் பொறுப்பில் இருந்தது. தென் பகுதியில் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் ஆட்சி செய்துவந்தான். அவன், வடபகுதியைக் கைப்பற்றி முழு இலங்கையையும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயன்றபோது, ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்று, அவர்களை வென்று, முழு இலங்கையையும் சோழர்கள் ஆதிக்கத்தில் கொண்டுவந்தான். ஐந்தாம் மகிந்தன் தஞ்சாவூருக்குச் சிறையெடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்து மறைந்தான் என சோழர் வரலாறு சொல்கிறது (கிபி 1029ல்). ஈழ வரலாறான மஹாவம்சம், தோற்றோடிய ஐந்தாம் மகிந்தன் காட்டுக்குள் சென்றுவிட்டான் என்று சொல்கிறது. இந்தப் போர் 1017-1018ல் நடைபெற்றிருந்திருக்கவேண்டும். ஈழ அரசனுக்கு உரிய மணிமுடி, மனைவியர்க்கும் உள்ள மணிமுடி, அணிகலன்கள் போன்றவற்றையும், அதற்கு முன்னால் பாண்டிய மன்னன் கொடுத்து வைத்திருந்த ரத்னஹாரத்தையும் கைப்பற்றி சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்தான். (ஆமாம்.. இவையெல்லாம் எங்கே போயின?)
மஹிந்தனது மகன் இரகசியமாக ஈழத்தில் வளர்க்கப்பட்டான். தந்தை இறந்தது கேட்டு, 1029ல் அவன் முதலாம் விக்கிரமபாகு என்ற பெயரில் சுமார் 12 வருடங்கள் இலங்கையின் ருஹண பகுதியை (இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி) ஆண்டுவந்தான். இந்த ருஹண பகுதியைத்தான் ரோஹண என்று வரலாறு குறிப்பிடுகிறது.
இலங்கையின் சமீபத்தைய சரித்திரம் தெரிந்தவர்களுக்கு ரோஹண விஜயவீர என்ற பெயர் பரிச்சயமாக இருக்கும். இவர்தான் 1960களில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியை ஆரம்பித்து சிங்கள பேரினவாதத்திற்கான கட்சியாக அடையாளப்படுத்தியிருந்தார். ஜேவிபி, விடுதலைப் புலிகள் என்றெல்லாம் ஆராய ஆரம்பித்தால் நாம் எங்கோ பாதை மாறிப் போய்விடுவோம்.
இராஜேந்திரன், பாண்டிய நாட்டின் தொடர்ந்த சிறுசிறு கலகங்களால் (மணிமுடிக்குரியவர்கள் கலகம் விளைவித்தனர்), அதன் மீது மீண்டும் போர் தொடுத்து, தன் மகனான சுந்தரச் சோழனை அந்தப் பகுதிக்குத் தலைவனாக நியமித்தான். பிறகு சேர நாட்டின்மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இராஜராஜ சோழன் காலத்திலேயே பாண்டிய நாடும் சேர நாடும் சோழர்களுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஆங்காங்கு ஏற்பட்ட கலகம் காரணமாக, முழு அமைதியைக் கொண்டுவர இந்தப் படையெடுப்பு நடந்திருக்கலாம். ராஜேந்திரனது மூன்றாம் ஆட்சியாண்டிலேயே மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?)
பிறகு 1021ல் (அதாவது அரசனாகி 9ம் ஆண்டில்) இரட்டபாடி மற்றும் சாளுக்கியத்தின் மீது போரிட்டு வென்றான்.
இராஜேந்திரனின் பதினொன்றாம் ஆட்சி காலத்தில் (1023), கங்கையை நோக்கி தன் படையை அனுப்பினான். அந்தப் படை, பல மன்னர்களை வென்று, கடைசியில் வங்க நாட்டு மஹிபாலனையும் தோற்கடித்து, பல்வேறு திறைகளையும், கங்கையிலிருந்து பொன் குடங்களில் நீரையும் சேகரித்து வந்ததாம். அதனை வைத்துத்தான் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இடத்தையே காட்டைச் சீர்படுத்தி உருவாக்கினான் என்று பார்த்தோம். கல்வெட்டுகள் கூறும் நாடுகளும், மன்னர்களும் வரலாற்றில் இடம் பெற்றவர்களே. அந்தப் படையெடுப்பின்போது கங்கைக்கரையிலிருந்த சிவபிராமணர்களை தஞ்சைப் பகுதிக்குக் கொண்டுவந்ததும், சேனையில் இருந்த தென்னாட்டவன் வங்காளப் பகுதியில் தங்கி, அவன் வழி வந்த சாமந்த சேனன் என்பான் வங்காளத்தில் சேன மரபின் முதல் அரசனானான் என்று வரலாறு தெரிவிக்கிறது. (இதைப்படித்துவிட்டு மம்தா பேகம் திராவிட பாரம்பர்யம்தான் என்று ஆரம்பித்துவிடப்போகிறார்கள்)
இவனது பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, இராஜேந்திரன் கடாரம் வென்றான் என்று சொல்கிறது. ஸ்ரீவிஜயம் (இது சுமத்ரா தீவுகள் அமைந்த இடம். கிழக்கு-மேற்கு வாணிப வழிக்கு நடுவில் இருந்தது), அதையடுத்து கடாரம் (இது மலேயா தீபகற்பத்தின் கெடா என்ற இடம் என்று சொல்கின்றனர். தற்போது அந்த இடம் கெடா என்றே அழைக்கப்படுகிறது), மாயிருடிங்கம், இலங்காசோகம், மலையூர் என பல மலேயாத் தீபகற்பத்தின் பகுதிகளை வென்றிருக்கிறான். நிக்கோபார் தீவுகளையும் வென்றிருக்கிறான். இவை எல்லாமே ஸ்ரீவிஜயத்திற்குச் சொந்தமான இடங்களாக இருந்திருக்கவேண்டும்.
இந்த மாதிரி போர்களையும், வென்ற இடங்களையும் படிக்கும்போது, எனக்கு அவற்றை எப்படி சோழப் பேரரசின் கீழ் கொண்டுவந்திருக்க முடியும் என்று தோன்றியது. எப்போதும் உள்ளூர் மக்களே பெரும்பான்மையாக இருக்கமுடியும். வெளியிலிருந்து சிறு படைகளைக் கொண்டு வென்றாலும், அந்த நாடுகளை முழுமையாகக் கைப்பற்றுவது என்பது நடக்கும் சாத்தியம் குறைவு. ராஜேந்திரனால் நியமிக்கப்பட்ட சேனைத் தலைவனோ இல்லை தக்க ஒருவனோ அந்த இடங்களை பல காலம் தங்களின் கீழ் வைத்திருந்திருக்க இயலாது. ஆனால் தாங்கள் ஆள ஆரம்பித்த சமயங்களில் தங்கள் கலைகளைப் பரவச் செய்திருக்க முடியும். அதுபோல புராணங்கள் இதிஹாசங்கள் போன்றவையும் பரவியிருக்கவேண்டும். அதற்கு ஏற்றபடி வென்ற இடங்களுக்கு அந்தணர்களையும் அழைத்துச் சென்றிருந்திருக்கவேண்டும் (அதனால்தான் இந்தோநேஷியாவில் கணபதி மற்றும் இந்து சமய வழிபாடுகளும், தாய்லாந்தின் மன்னர் பதவியேற்பின்போது திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதும் வழி வழியாகத் தொடர்ந்திருக்கின்றன)
இந்தச் செய்தியைப் பற்றி முன்னர் நான் படித்தபோது ரொம்பவே பெருமிதமாக இருந்தது. தாய்லாந்து நாட்டின் அரச முடிசூட்டு விழா மற்றும் முக்கியமான விழாக்களில் பாரம்பர்யமாக திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களைப் பாடுகிறார்கள் என்றால், அது சோழர் காலத்திலிருந்து இருக்கும் வழக்கம் என்பதில் சந்தேகம் ஏது? தற்காலத்தில் மொழித் திரிபுகளால், இதனை, ‘திரிம்பவாய்-திரிபவாய்’ என்ற சடங்காக நடத்துகிறார்கள். இந்த இந்து-தமிழ் கலாச்சார மரபு இன்றும் பாதுகாக்கப்படுகிறது. மன்னர் பதவியேற்பின்போது, நடராஜர் மற்றும் பெருமாள் சிலைகளுக்கு முன்பு ஹோமம் நடத்தப்பட்டு இந்தப் பாடல்களை தமிழ்-கிரந்த எழுத்துக்களில் ஓதப்படுகின்றனவாம்.
இதனை எழுதும்போது தாய்லாந்திலும் இந்தோநேஷியாவிலும் பார்த்த கோயில்கள், சிற்பங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அங்கு சந்தித்த சில பெண்கள் (ஒரு இடத்தில் எங்கள் குழுவிற்காக அவர்களுடைய நடனத்தை ஏற்பாடு செய்திருந்தனர், இயற்கையான கடற்கரைப் பகுதியில்….அதுபோல அவங்க, இராமாயணம் பற்றி அதன் கதை மாந்தர்கள் பற்றி ஆச்சர்யத்துடன் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லியதும், அந்த நாட்டிலிருந்து வருகிறேன் என்றது அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியதும் என் நினைவில் இருக்கிறது. படம் போடாட்டி நம்ப மாட்டீங்க போலிருக்கே.)
இராமாயணக் காட்சி – நான்கு
சாலைகளின் நடுவே
பாலித் தீவில் கோயில்களின் நுழைவாயில்கள் (நந்தி தெரிகின்றாரா?)
இந்திய இதிஹாச பாத்திரங்கள், எங்கெங்கும் பிள்ளையார் சிலை.
ஆடல் கலையே தேவன் தந்தது. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
இதற்கு
மேல் எழுத ஆரம்பித்தால் கதை எங்கோ கிளை பிரியும். நமக்குத் தெரியவேண்டியது, சோழர் காலத்தில்தான்
தமிழக மற்றும் பாரதீயக் கலைகள் இந்தோநேஷியா மற்றும் தாய்லாந்திற்குச் சென்றது. அந்த கலாச்சாரம் இன்னமும்
தொடர்கிறது என்பதுதான். இனி கங்கைகொண்ட சோழீச்வரம் படங்களைப்
பார்ப்போம்.
எல்லோரும் தஞ்சை பெரியகோயில் வாயிற்காப்போன் சிலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலே உள்ளது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வாயிற்காப்போன் சிலை. பாம்பின் வாயில் யானை. கால்கள் இடையில் சிங்கம். ஆனால் வாயிற்காப்போன் எவ்வளவு பெரியவன், பிரம்மாண்டவன் என்று காட்ட இப்படிச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனாலும் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்பத்தின் அழகு கம்பீரம் நுணுக்கம் இதில் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
இன்றைக்குப் பகிர்ந்துள்ள படங்களை
ரசித்தீர்களா?
அடுத்த
வாரம் தொடர்வோமா?
அதற்கு முன்னால் பாண்டிய மன்ன ன் கொடுத்து வைத்திருந்த ரத்னஹாரத்தையும் கைப்பற்றி சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவந்தான். (ஆமாம்.. இவையெல்லாம் எங்கே போயின?)//
பதிலளிநீக்குஹாஹாஹா நெல்லை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே!!!! பல யூகங்களுக்கு உள்ளாகும் ஒன்று.
இப்ப உள்ளபடி காலம்னா என்னென்ன நடந்திருக்கும்னு பாருங்க. இல்ல?
கீதா
வாங்க கீதா ரங்கன். பல தங்க விக்ரஹங்கள், கோபுரத்தில் வேயப்பட்டிருந்த தங்கத் தகடு போன்ற பலவும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியும்.
நீக்குஇந்தக் காலத்தில் சமீபத்தில் சபரிமலை தங்கத் தகடு திருட்டு நாம் அறிந்ததுதானே
கடைசிப் பாண்டியர்கள் காலத்தில் தாயாதிச் சண்டையில் அவை எல்லாம் திருநெல்வேலியைத் தாண்டி செங்கோட்டை வழியே கேரளத்துக்குச் சென்றதாகவும் அங்கே பத்மநாபர் கோயிலில் ஒளித்து/மறைத்து வைக்கப்பட்டதாகவும் சொல்லுவார்கள். ரத்தினஹாரம் மட்டுமின்றி இந்திரன் கொடுத்த கிரீடம், வாள் ஆகியவையும் சேர்ந்தே பாண்டியமன்னர்களின் பரம்பரைச் சொத்து. இதைத் தவிர்த்தும் பாண்டிய நாட்டுப் பொக்கிஷங்கள் அனைத்தும் பத்மநாபர் கோயிலிலேயே இருக்கின்றன என ஒரு கர்ணப்பரம்பரைக் கதையும் சொல்லுவார்கள். அதை நிரூபிப்பது போலவே சமீப காலத்தில் பத்மநாப ஸ்வாமி கோயிலின் சில சுரங்கங்கள் திறக்கப்பட்டன் என்பதையும் அறிந்திருப்பீர்கள். அப்போவும் சில பத்திரிகைச் செய்திகள் இவற்றைக் குறிப்பிட்டன.
நீக்குபத்மனாபர் கோயிலின் அறைகளில் என்ன என்ன கிடைத்தது என்பதைப் பற்றி வெளிப்படையாக படங்களுடன் தகவல் வந்தால்தான் தெரியும். (படங்கள் போட்டாங்கன்னா, போலியாக ஒன்றைச் செய்து லவட்டிவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இருக்கும்)
நீக்குஇவர்தான் 1960களில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியை ஆரம்பித்து சிங்கள பேரினவாத த்திற்கான கட்சியாக அடையாளப்படுத்தியிருந்தார். ஜேவிபி, விடுதலைப் புலிகள் என்றெல்லாம் ஆராய ஆரம்பித்தால் நாம் எங்கோ பாதை மாறிப் போய்விடுவோம்.//
பதிலளிநீக்குஅப்பா மற்றும் தாத்தா என்னென்னவோ இது பத்தி பேசியிருக்காங்க ஆனா பேர் மட்டும்தான் ஏதோ காதுல விழுந்தாப்ல ....மத்தபடி ம்ஹூம்.
ராஜேந்திரனது மூன்றாம் ஆட்சியாண்டிலேயே மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?)//
ஓ! புதிய தகவல். அதானே எங்க போச்சு? எப்படி இப்படி மாறுகின்றன? எப்படிக் கை மாறும்?
கீதா
நூறு வருடங்களுக்கு உள்ளாகவே மதுரையில் சிதைந்த மதிள்கள் இருந்தன. நகரைச் சுற்றி பாதுகாப்பாகச் செயல்பட்டவை. அவற்றை இடித்துத் தள்ளிவிட்டோம்.
நீக்குபாரிசில் ரோமன் காலத்தைய மதிளை, தற்போது கடையாக அமைந்திருந்தாலும் கடைக்குள் பாதுகாத்து வருவதை படமாகப் பெஇர்கிறேன்.
ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கையை வென்று அவன் ஒளித்து வைத்திருந்த இடத்தில் இருந்து ரத்னக்கிரீடம், ரத்னமாலை, வாள் போன்றவற்றை வந்தியத் தேவன் தலைமையில் செல்லும் கொடும்பாளூர் இளவரசன் எடுத்து வருவதாக அகிலன் வேங்கையில் மைந்தனில் எழுதி இருப்பார். அதிலேயே முதலில் ஒரு கிரீடம், மாலை, வாள் கிடைத்ததாகவும் அதுதான் பாண்டியனுடையதோ என சம்சயிக்கையில் அவற்றில் மீன் சின்னம் இல்லாததாலும் அவற்றை மீட்க வருபவர்களைக் குழப்புவதற்காகவும் இலங்கை அரசன் செய்த ஏற்பாடு இது எனத் தெரியவரப் பின்னரே பாண்டியர்களின் உரிமைச் சொத்தான இவை எல்லாம் கிடைக்கும். அவற்றை மீட்டுப் பாண்டிய நாட்டுக்கு எடுத்து வந்த சோழ வீரர்கள் அரசன் கட்டிய பெரிய அரண்மனையும் விழாவுக்கான ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டு ராஜேந்திரன் தான் அவற்றை அணியப் போகிறான் என எண்ணிக் குதூகலித்ததாகவும் அவனை "மும்முடிச் சோஅழன்" என்னும் பட்டப் பெயரால் அழைத்ததும் வரும். ஆனால் ராஜேந்திரனோ தன் இளைய மகனை அந்தப் பாண்டிய வம்சத்து அரியணையில் அமர்த்தி அவன் தலைக்கு மேல் பாண்டியர்களின் கிரீடம், வாள், ரத்தினமாலை ஆகியவை தொங்கும்படி ஏற்பாடு செய்து கட்டி வைத்ததாகவும் கூடி இருந்த மதுரை மக்கள், அமைச்சர் பெருமக்கள், மற்றப் பெருந்தனக்காரர்களிடமெல்லாம் என்றைக்கு இதன் ரத்த சம்பந்தமான உரிமைக்காரன் வருகிறானோ அப்போது அவனிடம் இவை ஒப்படைக்கப்படும் எனவும் அதுவரை என் குமாரன் காப்ந்து ஆட்சி தான் தருவான் எனவும் சபதம் செய்ததாகவும் வரும். பாண்டிய ரத்தம் இன்றி வேறொருவருக்கு அவை உரிமை உடையது அல்ல எனவும் ராஜெந்திரன் சொல்லுவான். நினைவில் இருந்தவரை சொல்லிட்டேன். பின்னர் பார்க்கலாம்.
நீக்குso many spelling mistakes. Can't tolerate it. :(
நீக்கு:))
நீக்குபாண்டியனின் மணிமுடி மாத்திரம் கிடைக்கவே இல்லை என்றுதான் நான் சரித்திரங்களில் படித்திருக்கிறேன். ரத்ன ஹாரம் போன்றவை கிடைத்தன.
நீக்குநாவலாசிரியர்கள் தங்கள் மனம் போன போக்கில் சித்தரிக்கலாம் இல்லையா? பாண்டிய அரசர்களின் வரிசையில் சோழ வம்சம் கலந்தது அப்போதுதான்.
வடக்கும் தெற்கும் கலந்திருக்கிறதே கங்கைகொண்டதனால்.
பதிலளிநீக்குகொஞ்சம் கொஞ்சம் வரலாறு பாடத்தில் படித்த நினைவு நிழலாக வருது. கடாரம் வென்றான் பகுதி.
எனக்கும் தோன்றியதுண்டு நெல்ல, கடல் கடந்து இப்படி வெல்வதை எப்படி ஆண்டிருப்பாங்கன்னு. இப்ப கூட நம்ம கீழ இருக்கும் சில தீவுகள் பத்தி எந்த செய்தியும் வருவதில்லையே என்று சில வருஷங்கள் முன்ன இணையத்தில் பார்த்தப்ப, 2024 ல அந்தமான்ல இப்போதைய இந்திய தேசிய கட்சி எம் பி இருக்காராம். திமுக வும் அங்கு உண்டாம் அதிமுகவும். எப்படி கையாள்வாங்கன்னு தோன்றியது.
லக்ஷதீப்ல தமிழ்நாடு கட்சிகள் இல்லை. அந்து தேசிய கட்சிகள் போல
கீதா
கடல் கடந்து வெல்வதை ஆள்வது கடினம். ரொம்ப வருடங்கள் தங்காது. உள்ளூரில் பிரச்சனைகள் வந்தால், கடல் கடந்த நாட்டப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இதுதான் இலங்கையிலும் மற்ற இடங்களிலும் நடந்தது.
நீக்கு(அதனால்தான் இந்தோநேஷியாவில் கணபதி மற்றும் இந்து சமய வழிபாடுகளும், தாய்லாந்தின் மன்னர் பதவியேற்பின்போது திருப்பாவை திருவெம்பாவை பாடப்படுவதும் வழி வழியாகத் தொடர்ந்திருக்கின்றன)//
பதிலளிநீக்குஉண்டென்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் தாய்லாந்து போய் வந்த உறவினர் சொன்னது அங்கு கிட்டத்தட்ட நம்மூர் போலவே நிறைய இருக்கின்றன என்று. ஒரு தனி தீவில் (படகில் போக வேண்டும்) பெயர் மறந்து போச்சு, அங்கு கேரள மாநில கோயில் போன்றேவாம். படம் கூட அனுப்பிருந்தாள். சேவ் பண்ணி வைச்சேனா என்று மறந்து போச்சு.
கீதா
கோவில் அமைப்பு நம்மூர் கோல இல்லை. கேரள தறவாடுகளில் உள்ளேயே இருக்கும் கோயிலைப் போன்று அங்கு உண்டு. படங்கள் பகிர்கிறேன்.
நீக்குபடங்கள் சூப்பர், நெல்லை. இந்த மாதிரி பிள்ளையார் சிலையும் என் உறவினர் அனுப்பிருந்தர்.
பதிலளிநீக்குதாய்லாந்திலிருந்து இங்கு வந்து ஹிஹிஹிஹி அந்தப் படங்கள் குறிப்பா அந்த மரம், வண்டியில் கம்புகள் படத்துக்குப் பிறகு இருக்கும் சிற்பங்கள் செம.
நான் கவனித்தது, இப்ப உள்ள திரைப்பட நடிகைகள், லைம் லைட்டில் இருப்பவங்க புகைப்படங்களுக்கு இப்படித்தான் போஸ் கொடுக்கிறார்கள். ஒரு காலை குறுக்காக முன் வைத்து கைகளை இப்படி வைத்து ஒரு கையை குறுக்காக வைத்திருக்கும் காலின் தொடை மீது வைத்துக் கொண்டு!!!! எனக்கு இந்தச் சிற்பங்களைப் பார்த்தப்ப ரொம்ப ஆச்சரியம் வந்தது.
கீதா
ஆஹா ஹா.. ரொம்பவே ரசித்திருக்கிறீர்கள்.
நீக்குஅதுவும் அப்படிக் கராஸாக காலை வைக்காமல் இருந்தால் தலையை சாய்த்து ஒயிலாக அந்தக் கடைசி சிற்பம் இருக்கே அப்படி. ஹையோ ரொம்பவே ஆச்சரியபப்ட்டுப் போகிறேன். அந்தக் காலத்துல எப்படி இவ்வளவு அழகா வடிவமைச்சிருக்காங்கன்னு!
பதிலளிநீக்குஅப்ப இவங்க எல்லாம் இப்படியான சிற்பங்களைப் பார்த்துதான் இப்படி போஸ் கொடுக்கறாங்களோ இல்லை இதற்குன்னே இப்படி பயிற்சி கொடுப்பாங்க போல....மாடெல்களுக்கும். இப்பதான் எலலத்துக்கும் இருக்கிறதே பயிற்சின்னு ஒரு துறை.
கீதா
எனக்கென்னவோ யாரேனும் போஸ் கொடுத்து அதனை கரியால் வரைந்துகொண்ட பிறகு செதுக்கியிருப்பாங்க. இருந்தாலும் ரொம்பவே எழிலாக அமைந்திருக்கிறது.
நீக்குஇதில் ஒரு சிற்பம் வித்தியாசமாக....!!!! அது இறை வடிவமா என்று தெரியவில்லை. ஆனால் என் அப்படி வடிவமைச்சாங்கன்னு யோசனை.
பதிலளிநீக்குமேலே உள்ளது கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வாயிற்காப்போன் சிலை. பாம்பின் வாயில் யானை. கால்கள் இடையில் சிங்கம்.//
மேலே என்றதும் எங்கன்னு தேடினேன் அப்புறம் கீழ இருப்பது தெரிந்தது.
எலலப் படங்களும் வழக்கம் போல் விவரங்களும் நல்லாருக்கு நெல்லை
கீதா
மிக்க நன்றி கீதா ரங்கன்
நீக்குசமீபத்தில் களவாடப்படும் நகைகளையும், சிலைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை! திருட்டு போய்விட்டது என்பதே கூட தெரியாது.. இதில் ராஜராஜசோழன் காலத்து ஹாரங்களை எங்கே தேட? என் எஸ் கிருஷ்ணன் குரலில் பாடவேண்டியதுதான்!
பதிலளிநீக்கு"எங்கே தேடுவேன்.. நான் எங்கே தேடுவேன்.."
வாங்க ஶ்ரீராம். கேபி சுந்தராம்பாளுக்கு சன்மானமாக நாலு பெரிய வைரக்கற்கள் கொடுத்திருந்தார்களாம். அவர் காலமான பிறகு பணத்தை சொத்தை, பங்குபோட உறவினர்கள் வந்தபோது, மதிப்பீட்டில் அந்த வைரங்கள் போலி எனத் தெரிந்ததாம்.
நீக்குகோயிலின் நகைகள் கவசங்களில் எவ்வளவு போலிகளோ.
// மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டியிருந்தானாம் (இதெல்லாம் இப்போ எங்கப்பா?) //
பதிலளிநீக்குஅது வேற மதுரையோ...?
இதே மதுரைதான். ஒருவேளை திருமலைநாயக்கர் மஹாலுக்கு முன்பு அங்கு அரண்மனை இருந்ததோ?
நீக்குஅதெல்லாம் இல்லை. மதுரைக்கு மேற்கே திண்டுக்கல் ரோடில் இருந்து பிரியும் ஒரு சந்து மேலப்பாண்டியன் அகழித் தெரு எனப் பெயர். என்னோட சின்ன வயசில் அங்கே இருந்திருக்கேன். அப்பா/அம்மா அந்த வீட்டில் தான் முதல் முதல் குடித்தனம் வைத்தார்கள். அப்பா கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் வேலை எல்லாம் இல்லாமல் ஊர் ஊராகச் சுத்திட்டிருந்தார். 3 குழந்தைகள் பிறந்தப்புறமாத் தான் எல்லோருமாச் சேர்ந்து பேசி அப்பாவுக்குத் தாத்தா மூலம் (அம்மாவின் அப்பா) சேத்பதி பள்ளி வேலையை வாங்கிக் கொடுத்துக் குடித்தனம் வைத்தார்கள். அப்போ மண்ணில் (செம்மண்?) அடுப்பு வாங்க அம்மா என்னை அழைத்துக் கொண்டு போனதும் நான் தூக்கச் சொல்லி அழுததும் அரைகுறை நினைவு. தம்பி பிறந்துட்டான். அம்மா தம்பியைத் தூக்கி வர, நான் என்னைத் தூக்கணும் என்று சொல்ல! :)
நீக்குஇதே போலக் கீழ வாசலிலும் ஒரு சில இடங்கள் பாண்டிய அரசர்கள் இருந்த இடம்போலச் சொல்லுவார்கள். கீழவாசலில் இருக்கும் எழுகடல் தெருதான் மீனாக்ஷி கல்யாணத்தில் காஞ்சனமாலைக்கு கடல் ஆட வேண்டி ஈசன் கடல்களைத் தருவித்த இடம் என்பார்கள். குண்டோதரனுக்கு அன்னம் அளித்த இடம் அன்னக்குழி மண்டபம். அங்கே ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் இருந்தது. .ஜீவி சார் அங்கே தான் தான் படிச்சதாகச் சொன்ன நினைவு. அல்லது வெள்ளியம்பலம் பள்ளியோ? தெரியலை.
உங்களுக்கு மாத்திரம் சின்ன வயதாக இருந்தால், அந்த இடங்களையெல்லாம் காண்பிக்கச் சொல்லி படங்கள் எடுத்திருக்கலாம். அல்லது நீங்களே படங்கள் எடுத்து பல பதிவுகள் தந்திருக்கலாம். இப்போ அந்த இடங்களெல்லாம் அடையாளம் தெரியாதபடி மாறியிருக்கும்.
நீக்குமம்தா பேகம் என்று வேண்டுமென்றேதான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் போல.. பானர்ஜி என்று மாற்ற வேண்டாமே....?
பதிலளிநீக்குநேற்றுத்தான் வடிவேல் ஜோக் பார்த்தேன். பேனர்லாம் கட்டிக்கிட்டிருந்தேனா.. என்னை மரியாதையாக பேனர்ஜின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு.
நீக்கும்ம்தா பேகம், சாதாரணமாகச் சொல்லுவதுதான்.உள்குத்து இல்லை.
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம் சண்முகா
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குபடங்கள் புதிய கோணங்களில் அற்புதம்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி.
நீக்குமுடியாதபோதும் இறிதாகவாவது பதிவை நீங்க உங்கள் தளத்தில் வெளியிடறீங்க. பாராட்டுகள். வெங்கடாசலபதிக்கு நாற்கரங்கள் கிடையாது என்பதை நேற்று எழுத மறந்துவிட்டேன்.
தஞ்சை பெரிய கோயில்
பதிலளிநீக்குதுவார பாலகர்களுக்கு
ஈடு இணை இல்லை...
அவர்கள் பக்கத்தினில்்நின்று நாம் புகைப்படம் எடுத்துக்கொண்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் எனப் புலப்படும்.
நீக்கு///வெங்கடாசலபதிக்கு நாற்கரங்கள்
பதிலளிநீக்குகிடையாது... ///
உண்மை தான்...
சங்கு சக்கரங்கள் பின்னாளில்
ஸ்ரீ உடையவரால் ஸ்தாபிக்கப்பட்டவை...
இல்லை துரை செல்வராஜு சார்... நான் சொல்லவந்தது, உங்கள் தளத்தில் (அல்லது பல கோயில்களில்) வெங்கடாசலபதிக்கு நான்கு கரத்தோடு ஸ்தாபிதம் பண்றாங்க என்பதை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்.
நீக்குவரலாறு அருமை.
பதிலளிநீக்கு(ஒரு இடத்தில் எங்கள் குழுவிற்காக அவர்களுடைய நடனத்தை ஏற்பாடு செய்திருந்தனர்,//
நடன குழுவோடு போட்டோ எடுத்தது இந்த பதிவுக்கு உதவியது.
ஆடல் கலையே தேவன் தந்தது. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது நல்ல பாடல் நினைவுக்கு வநது இருக்கிறது.
பாலித்தீவு படங்கள் எல்லாம் அருமை.
கங்கை கொண்ட சோழபுரத்தில் எடுத்த படங்களும், செய்திகளும் அருமை.
பல கோணங்களில் படங்களை எடுத்து அழகாய் பதிவு செய்து விட்டீர்கள்.
/நடன குழுவோடு போட்டோ எடுத்தது // நான் பல இடங்களிலும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன் (நான் அங்கு இருந்தேன் என்பதற்காக). அல்லது ஏதேனும் புதிதாக அல்லது ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இருந்தால் உடனே படம் எடுத்துவிடுவேன்.
நீக்குமிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.
புரிகின்றது ..
பதிலளிநீக்குநன்றி..
வேறு படமை உடனடியாகக் கிடைக்காததால்
பதிலளிநீக்குவைக்கப்பட்டது அது
அதனாலென்ன துரை செல்வராஜு சார்... நான் பதிவைப் படித்தேன் என்பதற்காகச் சொன்னேன்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. எனக்கு இவற்றில் விஷ்ணு துர்கை (அஷ்டபுஜ துர்கை?)யும், அரத்தநாரீஸ்வரரும் கவர்ந்தனர். துவாரபாலகர்கள் சிற்பம் நன்றாக இருந்தாலும் பொதுவாகவே சிற்பங்களில் தென்படும் உயிரோட்டம் இவற்றில் காணமுடியவில்லை. சிற்பிகள் செதுக்கி இருப்பதென்னவோ கவனமாகத் தான். ஆனாலும் ஏதோ ஒண்ணு குறை.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். பொதுவாக இறைவன் சன்னிதிக்கு முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் சிற்பம்தான் உயிரோட்டம் உள்ளவையாக்த் தோன்றும் என்று என் எண்ணம்.
நீக்குஅந்த கோபுரம், நந்தி இவற்றுக்கு இடப்பக்கம்(நமக்கு இடப்பக்கம்) காணப்படும் படிகளில் எல்லாம் ஏறுவதை நினைச்சால் எனக்குக் கதி கலங்குகிறது. இப்போல்லாம் இதை நினைச்சே பார்க்க முடியாது. இதே போல் ஒரிசாவில் சூரியனார் கோயில் சென்றபோது நான்கு பக்கங்களிலும் அந்த அந்த நேரத்தைக் குறிப்பிடும் சூரிய உருவின் சிற்பத்தைப் பார்க்க மேலே ஏறணும். மேலே ஏறிப் பார்க்கலாமானு பேசிட்டு இருந்தப்போ மொபைலில் என் மைத்துனர் கூப்பிட்டார். குறிப்பாகக் கீழேயும் சரி, மேலேயும் சரி நடந்து போயோ அல்லது மேலே முயற்சி செய்து ஏறியோ பார்க்க வேண்டாம் எனவும் அவங்க இருவரும் மேலே ஏறிட்டு இறங்கக் கஷ்டப்பட்டதையும் சொன்னாங்க. கீழே கூடச் சுத்திப் பார்க்க வீல் சேர் அமர்த்திக் கொண்டு நின்னு நிதானமாக ஒவ்வொரு திசையாகப் பார்க்கவும் சொன்னாங்க. அதனால் மேலேயே ஏறவில்லை.
பதிலளிநீக்குசில இடங்களில் படிகளில் ஏறுவது கடினம்தான். ஷோளிங்கரில் சின்ன மலையில் (அனுமான்) ஏறுவது கஷ்டம்.
நீக்குகொனார்க் வாசல் வரை சென்றிருக்கிறேன். இன்னும் உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.
பாலித்தீவுப் பிளையார், நடனக்குழுக் கலைஞர்கள் அனைவரும் அழகு. கூட இருக்கும் ஆண்கள் உங்களுடன் வந்தார்களா? அல்லது குழுவினரா? படங்கள் எடுப்பது உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது. சிறப்பாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஎன்னைப்போல கான்ஃபரன்ஸுக்கு வந்தவர்கள். எனக்கு இயல்பாகவே தனியாகத்தான் படங்கள் எடுத்துக்கொள்ள விருப்பம். அன்று அப்படிக் கேட்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. (யாரும் தவறா நினைத்துவிடக்கூடாது என்று எப்போதும் நான் எண்ணுவேன். அதனால்தான் பல சந்தர்ப்பங்களைத் தவற விட்டிருக்கிறேன். அவற்றை சந்தர்ப்பம் என்று என் மனது மாத்திரம் சொல்லும்)
நீக்கு