நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
8.5.26
கண்ணை கண்ணை காட்டி என்னை வம்பு செய்யலாகுமோ - நீ வம்பு செய்யலாகுமோ.
வெந்தய தோசையும், நிலக்கடலை கார சட்னியும்.
"உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ்" என்றேன் பத்தாவது தோசையை என் தட்டில் போட்ட மருமகளிடம்.
"என்ன குட் நியூஸ்?" என்றார் அவர்.
"இதற்கு அடுத்த தோசையுடன் போதும்" என்றேன். உண்மையில் போடும் அந்த தோசையுடன் போதும் என்று சொல்லத்தான் நினைத்திருந்தேன். மனம் மாறிவிட்டது. அதை வெளியில் சொல்லவில்லை! நீங்களும் சொல்லிடாதீங்க...!!
சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் வார்ப்பவர்களுக்கும் பொறுமை வேண்டுமே...
சின்ன வயதில் என் அப்பா தோசை சாப்பிடும்போது அவர் எப்போது போதும் என்று சொல்வார், நமக்கும் கிடைக்கும் என்று காத்திருப்போம்! அம்மா கொண்டு போடச் சொல்லும்போது அவர் போதும் என்று சொல்கிறாரா என்று ஆவலுடன் கவனிப்போம். அம்மா திட்டுவார்.
ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்த ஒருவர் சொன்னார்... "உங்களுக்கு எப்போ போதும் என்று தோன்றுகிறதோ அப்போது நிறுத்திக்கொள்ளலாம்.."
மிரண்டு விட்டார் பாஸ்!
"வெந்தய தோசையைப் பொறுத்தவரை பத்து தோசை சாப்பிட்டால் ஐந்து அல்லது நான்கு சாதா தோசை சாப்பிட்டதற்கு சமம்" என்று ஆத்மார்த்தமாகவும், அன்புடனும் சொல்வார் பாஸ். நான் அதை உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம். ஓரளவு உண்மையும்தான்.
வெந்தய தோசை. ஹோட்டல்களில் சில சமயம், அல்லது சில ஹோட்டல்களில் கிடைக்கும்தான். ஆனால் அவர்கள் போடும் வெந்தயத்தின் அளவு கம்மியாகத்தான் இருக்கும். கசப்பு தெரியாது. கனமாக இருக்கும். ஒன்றுதான் சாப்பிட முடியும். அதுவே 120 ரூபாய் சொல்வார்கள்!
பாஸ் வெந்தய தோசை ஸ்பெஷலிஸ்ட்.
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது வெந்தய தோசை. என் அம்மா காலமானதுக்குப் பிறகு வெந்தயதோசை சரியான அளவில், ருசியில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் பாலசுப்ரமணியம் ஹேமலதா. அவருக்குப் பிடித்த வகையில் வார்த்துக் கொடுத்து பேர் வாங்கினார் மருமகளான பாஸ்.
ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் பு. அரிசிக்கு கால் பாகம் வெந்தயம், அதைவிட குறைவாக உளுந்து போட்டு அரைப்பார். இது மாதிரி தயாரிக்கப்படும் மாவில் தோசை வார்ப்பது மிகக் கடினம். முதல் தோசை எப்படியும் கிண்டி விடும். (ஏன், சைதாப்பேட்டை ஆகாதா என்று கேட்கக்கூடாது!) பிறகு பொன்போல வரத் தொடங்கும். மெலிசாகவும் இருக்கும். திருப்பிப்போட்டு வார்ப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும்.
வெந்தய வாசனை தூக்கலாக, லேசான கசப்பு தெரிய தோசை சாப்பிட சாப்பிட உள்ளே மென்மையாய் இறங்கும். அரைத்த அன்றே எந்த மாவில் தோசை வார்த்தாலும் 'சப்'பென்றுதான் இருக்கும். என் அம்மாவுக்கு பிடித்த சப்பென்ற தோசை.
இந்திய சரித்திரத்தின் மகோன்னதமான நுட்பங்களையெல்லாம் நமக்குத் திரட்டித் தந்த பேராசிரியர் வின்ஸண்ட் அவர்கள் எழுதிய Ancient History of India என்ற வரலாற்று நூலின் 1908ஆம் ஆண்டு பதிப்பை (நான் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது) புரட்டிக் கொண்டிருந்த போது, இந்தியாவின் பிரபல புராதன சர்வகலாசாலை இருந்த தக்ஷசீலத்தில் ஒரு திருமணச் சந்தையும் இருந்த குறிப்பைப் படித்தேன்.
ஹிந்துப் பெண்களை விலை கூறும் ஒரு சந்தை இருந்ததைப் பற்றிய குறிப்பு வியப்பாயிருக்கவே, அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். தக்ஷசீலத்தைப் பற்றி எழுதிய பல ஆசிரியர்களின் புதையல்களைக் கிளறினேன். அதன் விளைவுதான் விலைராணி. அலெக்ஸாண்டருக்குப் பிறகு அடிமைத்தனத் திலிருந்து வட பாரதத்தை மீட்ட சந்திரகுப்த மௌரியனின் வரலாறும், அர்த்தசாஸ்திரியான சாணக்கியரைப் பற்றிய வரலாறும் இணைந்த கதை 'விலைராணி'. இந்த நூல் நூற்றுக்கு நூறு சரித்திர அஸ்திவாரத்தைக் கொண்டது.
இந்த நூலில் குறிப்பிட்டுள்ள தக்ஷசீலம், அசுவாயனர் நாடு, சிலர் நிஸா என்று அழைக்கும் ஆதி கிரேக்கர் குடியிருப்பான நியாஸா, மஸாகா, முதலிய பல குறுநிலங்களும் சரித்திரத்தில் இருந்தவை. குறிப்புகள், திசைக்குறிப்புகள், அரசியல் நிலவரங்கள் இவற்றுடன் அந்த நாடுகள் இக்கதையில் இணைக்கப்பட்டுள்ளன.
பல பிரபல சரித்திர ஆசிரியர்களின் நூல்களில் கண்ட வரலாற்றுக் குறிப்புகளுடன் இலக்கிய ஆதாரமும் இந்நூலில் இடம் பெறுகிறது. விசாகதத்தன் எழுதிய முத்ரா ராக்ஷசம் என்ற நூலின் இரு பாத்திரங்களான ராட்சஸன், சந்தனதாஸன் இருவரும் இந்த நூலில் இடம் பெறுகிறார்கள். முதன்முதலில் சாணக்கியரைப் பற்றிப் பிரசுரிக்கப் பட்ட 'சாணக்கிய தந்திரம்' என்ற கிரந்த நூலின் குறிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
உயிருள்ள அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வேகம் ஊட்ட வீரகுப்தன், விலைராணி பிரபாவதி தேவி, கிரேக்கச் சிலை ஆண்ட்ரி ஆகிய கற்பனைப் பாத்திரங்ளும் இதில் வலம் வருகிறார்கள். இன்பச்சுவை அந்தக்கால நியதிகளுக்கும், பழைய இலக்கிய நியாயத்துக்கும் ஏற்றபடி கையாளப் பட்டிருக்கிறது.
விலைராணியின் கதை மௌரிய சாம்ராஜ்யத்தின் மகோன்னத சரித்திரம். அதை அபரிமித ஆவலுடன் “குங்குமம்” பத்திரிகையில் படித்த நீங்கள் இந்தப் புத்தக வடிவத்திலும் படிப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
இந்தக் கதையைப் பிரசுரித்த "குங்குமம்" பத்திரிகை உரிமையாளர்களுக்கும், எனது மற்ற நூல்களைப் போலவே இதையும் சிறப்பாகப் பதிப்பித்துள்ள எனது பதிப்பாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
தமிழ் மக்களைப்பற்றி என்ன சொல்ல? அவர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுதான் எனது பேனாவைத் தொடர்ந்து இயக்குகிறது. என் உயிர்நாடியே தமிழ்ப் பெருமக்கள்தான். அவர்களால் தான் நான் வாழ முடிகிறது என்று சொன்னால் அது வெற்றுப் புகழ்ச்சியல்ல, சத்தியம்.
அந்தக் காலத்தில் அதிகாரிகளும் ஆட்சியரும் இப்படி இருந்தார்கள்... பெருமூச்சுதான் வருகிறது.
எழுத்தாளர், கலெக்டர் முப்பதாண்டு சர்க்கார் சேவகம்
முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் திருநெல்வேலி ஜில்லாவில் ரிவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை ஏற்றிருந்தேன். அந்த உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் அதன் மூலம் உத்தியோக உயர்வு பெறுவதும் மேலதிகாரிகள் முகாம் வருகிறபோது அவர்களுக்கு சப்ளை செய்வதைப் பொறுத்ததுதான் என்பதையும் அறிந்திருந்தேன். தாசில்தார் முகாம் வந்தால் அவரது உணவு விஷயமாக காரியங்களை எல்லாம் கிராம முனிசீப்களே கவனித்துக் கொள்வர். டிப்டி கலெக்டர் முகாம் வந்தால் அவருக்கும் அவருடைய பட்டாளத்திற்கும் உணவருத்துவது முதலிய செலவுகளை ரிவின்யூ இன்ஸ்பெக்டர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.
கலெக்டர் முகாம் வந்தால் தான் கஷ்டம். ஒரு சிறு தவறு கூட ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவேணும். தப்பித்தவறி ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், தொலைந்தார் ரிவின்யூ இன்ஸ்பெக்டர்.
இந்த நிலையில் அப்போதைய ஜில்லா கலெக்டர் என்னுடைய பிர்க்காவிற்கு முகாம் வருவதாகத் தகவல் வந்தது. கலெக்டர் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அவரது குதிரை வந்தது. குதிரைக்காரனும் வந்தான். குதிரையை, குதிரைக்காரனைப் பராமரிப்பதில் அக்கறை செலுத்தி சரியாகக் கவனித்துக் கொண்டேன். கடைசியில் கலெக்டர் வந்தார். அவரோடு ஒரு பரிவாரமும் வந்தது. எல்லோருக்கும் வேண்டுவன எல்லாம் தேடிக் கொடுத்து அவர்கள் மனம் கோணாதபடி நடந்துகொண்டேன். மூன்று நாள் முகாம் முடிந்து கலெக்டர் மற்றொரு முகாமிற்குப் புறப்பட்டார். மூன்று நாள் வாங்கிக் கொடுத்த பால், முட்டை முதலிய சாமான்களுக்கு பில் கேட்டார் கலெக்டர். கிராம முனிசீப்பும் செலவு ரூபாய் ஒன்றரை என்று விவரமாகப் பில் எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். கலெக்டர் முன்னிலையிலேயே கலெக்டரின் காம்ப் கிளார்க் அந்தப் பணத்தைக் கிராம முனிசீப்பிடம் கொடுத்துவிட்டார்.
புறப்படும் கலெக்டரை அனுப்பி வைக்க நான் அவர் முன் வந்து நின்றேன்
“கிராம முனிசீப் கொடுத்த பில்லில் குதிரைக்கு என்று செய்த செலவு காட்டப்படவில்லையே" என்றார் கலெக்டர் என்னிடம். நான் கொஞ்சம் ஜாக்கிரதையாய் அப்படிச் செலவு ஒன்றும். ஆகிவிடவில்லை என்றேன். அவ்வளவுதான் கலெக்டர், "அப்போது என் குதிரையை மூன்று நாள் பட்டினி போட்டு விட்டீர்" என்று என் மேல் பாய்ந்தார்.
நடுநடுங்கிவிட்டேன். புல்லுக்கும் கொள்ளுக்கும் அதிகம் செலவாகவில்லை என்று குறிப்பிட்டே பதில் சொன்னேன். "என்ன செலவு ஆயிற்றோ அதையும் வாங்கிக் கொள்ளும்" என்று கூறிவிட்டு குதிரை மீது ஏறி புறப்பட்டுவிட்டார் கலெக்டர். மற்றவர்களும் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நானும் வீட்டிற்குத் திரும்பினேன், கொஞ்சம் மனத் தாங்கலோடேயே.
என்னுடைய கவலையை அறிந்த கிராம முனிசீப் "இதற்கென்ன சார் இவ்வளவு வருத்தப்படுகிறீர்கள். இதற்கு முன் என்ன என்ன நடந்திருக்கிறது என்று தெரியுமா? சொல்கிறேன், கேட்கிறீர்களா" என்று ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.
கலெக்டர் முகாம் வந்தால் அவருக்கு வேண்டிய சப்ளை எல்லாம் செய்யவேண்டியது ரிவினியூ இன்ஸ்பெக்டர் பொறுப்புத்தான். கலெக்டரை விட கலெக்டருடன் வரும் பட்லரைத் திருப்திச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் முதலில்,
ஒரு அப்பாவி ரிவினியூ இன்ஸ்பெக்டர் சப்ளை விஷயத்தில் எல்லாம் கண்ணும் கருத்துமாகவே இருந்தார்.
ஆனால் அவர் கலெக்டரது பட்லரைக் கவனிக்கத் தவறிவிட்டார். மூன்று நாள் கலெக்டர் முகாம் செய்து இருந்தார். எல்லாம் ஒழுங்காய் நடந்தது.
மூன்றாம் நாள் காலை கலெக்டருக்குக் காப்பி கொடுக்கவில்லை பட்லர். கலெக்டர் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ஏன் பெட் காபி வரவில்லை" என்று கேட்ட கலெக்டரிடம் "ரிவின்யூ, இன்ஸ்பெக்டர் திரிந்த பாலையே கொண்டு வந்திருக்கிறார்" என்று புகார் செய்துவிட்டார்.
கலெக்டர் கோபம் எல்லை கடந்துவிட்டது. ரிவினியூ இன்ஸ்பெக்டரை அழைத்தார். அவர் கொண்டு வந்ததாக பட்லர் காட்டிய திரிந்த பால் உள்ள செம்பை ரிவினியூ இன்ஸ்பெக்டர் தலையில் கவிழ்த்து 'போ, போ' என்று விரட்டிவிட்டார். இந்த ரிவின்யூ இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மானியாகவும் இருந்திருக்கிறார். பாலாபிஷேகம் பெற்ற கோபத்துடனே தாசில்தார் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொன்னார். அத்துடன் தன் வேலையையும் ராஜிநாமா செய்து கால் கடுதாசியையும் நீட்டிவிட்டார்.
இதற்குள் கலெக்டரின் கோபம் தணிந்துவிட்டது. தான் செய்த காரியம் தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். தாசில்தாருக்கு ஆள் அனுப்பி அழைத்து, தான் ரிவின்யூ இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆம், ஆங்கிலேய கலெக்டர், அவரின் இனத்திற்கே உரிய பெருந்தன்மையோடு நடந்து கொள்ள விரைந்திருக்கிறார். தாசில்தாரோ தயங்கித் தயங்கி ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தன் வேலையை ராஜினாமாச் செய்த விவரத்தைக் கூறி இருக்கிறார். கலெக்டரும் வருத்தப்பட்டு ரிவின்யூ இன்ஸ்பெக்டரை அழைத்துத் தான் செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கேட்டதுடன், அவர் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டால், அவரை ஹெட் அக்கவுண்டண்டாக உயர்த்துவதாகச் சொல்லியிருக்கிறார்.
ரிவின்யூ இன்பெக்டரும் உத்தியோக உயர்வு என்றவுடனே பல்லை இளித்துத் தன் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொண்டார். உத்தியோக உயர்வையுமே ஏற்றுக்கொண்டார். “இப்படியெல்லாம் நடந்திருக்கும் போது குதிரையைப் பட்டினியாய்ப் போட்டுவிட்டாயா என்று கலெக்டர் கேட்டது ஒன்றும் பிரமாதமில்லை" என்று கிராம முனிசீப் எனக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் சில வருஷங்கள் நான் ரிவின்யூ இன்ஸ் பெக்டராக இருந்தும் எனக்கு ஒரு கலெக்டரும் பாலாபிஷேகம் செய்யவும் இல்லை. அதனால் உத்தியோக உயர்வு கொடுக்கவும் இல்லை.
ரிவின்யூ டிபார்ட்மெண்டில் வேலை பார்த்த எனக்கு படிப்படியாக உத்தியோக உயர்வு கிடைத்தது. ரிவின்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து முப்பது வருஷங்கள் கழிந்த பின்னரே கலெக்டர் வேலையும் கிடைத்தது. இந்த முப்பது வருஷகாலத்தில் எத்தனை கலெக்டர்களை நான் பார்த்திருப்பேன். அவர்களது வேலைத் திறமை, குணங்கள், குறைகள் எல்லாவற்றையும் உணர்ந்திருப்பேன். அந்நியர் ஆட்சியில் சர்க்கார் சேவகனாக வேலையேற்ற நான் பதினைந்து வருஷ காலம் அநேகமாக வெள்ளைக்காரக் கலெக்டர்களிடமே வேலை பார்த்திருக்கிறேன். இன்னும் பதினைந்து வருஷம் சுதந்தர இந்தியாவில் டிப்டி கலெக்டராகவும் கலெக்டராகவும் பணியாற்றியிருக்கிறேன்.
இன்று அதிகாரிகள் முகாம் போவது குறைந்து விட்டது. என்றாலும் 'சப்ளை' வாங்குவது குறையவில்லைதான். இதற்குக் காரணம் கீழேயுள்ள உத்தியோகஸ்தர்கள் சப்ளை மூலமே மேலதிகாரிகளைத் திருப்தி செய்தல் கூடும் என்று எண்ணுகிறார்கள். அதிகாரிகளும் அதற்கேற்றாப்போலவே நடந்து கொள்கிறார்கள்.
என் கீழ் வேலை செய்த டிப்டி கலெக்டர் ஒருவர் வேலை செய்வதில் திறமை மிக்கவர். அவர் வேலையில் குறையே காண முடியாது. இவரிடம் இருந்த குறை எல்லாம், இவர் அரசியல்வாதிகளின் தயவை நாடி அவர்களுக்கு வால் பிடிப்பதுதான். இவர் சப்ளையும் அதிகம் வாங்குகிறார் என்று புகார். அவரைப் பற்றி ஒரு மொட்டை மனு சர்க்காருக்குப் போய், அது என்னிடம் விசாரணைக்கு வந்தது. நான் அந்த டிப்டி கலெக்ரை அழைத்து இப்படி உம்பேரில் புகார் ஒன்று வந்திருக்கிறது கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளும் என்று எச்சரித்தேன்.
மூன்று வருஷ காலமாக டிப்டி கலெக்டர் வேலை பார்த்தவர் அவர். அந்த மூன்று வருஷ காலத்திலும் முகாம்களில் எல்லாம் என்ன என்ன சப்ளை வாங்கினார், அந்த சப்ளைகளுக்கு எல்லாம் அவர் வாங்கிய பில்கள், அந்த பில்களுக்குப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டதாக கிராம முனிசீப் சர்டிபிக்கெட்டுடன் வாங்கிய சீட்டுகள் அத்தனையையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி ஒழுங்காக வைத்திருந்தார். இப்படி அதி அக்கறையோடு அவர் செய்திருப்பதிலிருந்தே அவர் பேரில் இருந்த சந்தேகம் வலுப்பெற்றது. அவருக்கு எழுதினேன், "சமீபகாலத்தில பெரிய அதிகாரிகள் முகாம்களில் தங்கள் சப்ளைகளைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். தன் கீழ் வேலை செய்பவர்களிடம் சப்ளை எதிர்பார்க்கக்கூடாது" என்று சர்க்கார் உத்திரவிட்டிருப்பது உமக்குத் தெரியாதா? இனி சப்ளை பெறுவதையும் அதற்காக பில்கள் வாங்கி அவற்றை அதிக கவனத்துடன் ஓட்டி வைப்பதையும் நிறுத்திவிடும் என்று எழுதினேன். அவ்வளவுதான், அந்த டிப்டி கலெக்டர் இடிந்தே போய்விட்டார். சப்ளை பெறுவதையும் நிறத்திவிட்டார் என்றே கேள்வி.
இத்தகைய அனுபவங்கள் எல்லாம் பெற்ற நான் எனக்கு வேண்டியவைகளை என் காம்ப் கிளார்க்கு மூலமே பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தடவையும் ரூபாய் நூறுக்கு அவர் பெயருக்கு செக் கொடுத்து அதற்குக் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்வேன். அத்தொகை செலவானதும் மேலும் ஒரு நூறு ரூபாய்க்கு செக் கொடுக்கும் வழக்கம் வைத்திருந்தேன். பில் வாங்குவது என்ற பழக்கமே வைத்துக் கொள்ளாதவனாக வாழ்ந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.
கதாநாயகர்கள் திடீரென்று ஆங்கிலம் பேசும் காட்சி எப்போதுமே ரசிகர்களின் "விசிலை"ப் பெறும்! சிவாஜி, உட்பட தமிழ் நடிகர்கள் போல ஹிந்தியில் அமிதாப். 'ஒரு கைதியின் டைரி' ஹிந்திப் பதிப்பில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது. தமிழிலும் இது போல ஒரு காட்சியை வைக்க பாக்யராஜ் சொன்னபோது பாரதிராஜா வைக்கவில்லை என்பதோடு கிளைமேக்சையும் பாக்யராஜ் சொன்ன கிளைமேக்ஸாக இல்லாமல் அவர் ஒரு மாதிரி வைத்தார்.
படம் பார்த்தால்தான் இந்தக் காட்சியின் வீர்யம் மனதில் ஏறும். ஆங்கிலம் தெரியாத அப்பா அமிதாப் தன் மனைவி ஜெயப்ரதாவிடம் மகனிடம் இங்கிலிஷ் பேசுவேன் என்று சொன்னது நினைவுக்கு வர, இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தந்தையென்று அறியாத மகனிடம் ஆங்கிலம் பேசுவதாக காட்சி.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத....! யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் சலிக்காமல், மனம் தளராமல் மறுபடி ஒரு குறுக்கெழுத்துப் போட்டி தயார் செய்து அனுப்பி இருக்கிறார் பானுமதி வெங்கடேஸ்வரன்.
நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன் - கண்ணா என் கையை தொடாதே….மோஹன கண்ணா என் கையை தொடாதே….
தன்னந் தனியான என்னை துன்புறுத்தல் ஆகுமோ…நான் உனக்கு சொந்தமோ ராதை என்ற எண்ணமோ….கண்ணை கண்ணை காட்டி என்னை வம்பு செய்யலாகுமோ - நீ வம்பு செய்யலாகுமோ..இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால் ஏளனம் செய்வேன் - வண்ண கண்ணா ….
வல்லி என் கரத்தை விட்டு வந்த வழி செல்லுவாய்……நல்லதல்ல உன் செயலை நாடறிய சொல்லுவேன்….கள்ளனே உன்னை எல்லோரும் பொல்லா பிள்ளை என்று சொல்லி கண்டபடி பேசுவார்….இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை துன்புற செய்யாதே....கண்ணா என் கையை தொடாதே…
பாடலாசிரியர் - ஏ.மருதகாசி
நடிகை - பத்மினி
இசை - டி.ஆர்.பாப்பா
இயக்கம் - ஜோசப் தளாயத் ஜூனியர்
படவெளியீடு - 19. ஜூலை.1957
வெந்தய தோசை பதினொண்ணா என்று யோசித்தேன். படம் மனதைக் கவர்ந்தது. பன்னிரண்டு கூட சாப்பிடலாம். நிலக்கடலைச் சட்னி சிறிது தித்திப்குடன் இருக்கும். அருமையான காம்பினேஷன்.
குண்டாக மெத் மெத் என்று வார்த்தால் புளிமிளகாய் நல்ல காம்பினேஷன்.
வெந்தய தோசை பதினொண்ணா என்று யோசித்தேன். படம் மனதைக் கவர்ந்தது. பன்னிரண்டு கூட சாப்பிடலாம். நிலக்கடலைச் சட்னி சிறிது தித்திப்குடன் இருக்கும். அருமையான காம்பினேஷன்.
பதிலளிநீக்குகுண்டாக மெத் மெத் என்று வார்த்தால் புளிமிளகாய் நல்ல காம்பினேஷன்.
வாங்க நெல்லை. ஆமாம். சட்னி கொஞ்சம் தித்திப்புடன்தான் இருக்கும். ஆனால் காரம் தூக்கலாகப் போடலாம். நீங்கள் சொல்லி இருக்கும் புளிமிளகாய் அருமையான துணை!
நீக்குநாம் ஒருவர் கவிதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது. கவிதைத் தொகுப்பு புத்தகமாக வரத் தகுந்தது. நல்ல வார்த்தை ஜாலம்.
பதிலளிநீக்குஅதற்குதான் எடுத்து சேர்த்துக் கொண்டிருந்தார்.
நீக்குவெந்தய தோசை விவரங்கள் அனைத்தும் நன்று. சாப்பிடத் துண்டும் ரகம்.
பதிலளிநீக்குகவிதைகள் சிறப்பு.
வாங்க வெங்கட். வெந்தய தோசையையும் கவிதையையும் ரசித்ததற்கு நன்றி.
நீக்குரீல்ஸ் ராணி - காணொளி இங்கே வரவில்லை. இணைப்பு தரலாம்.
பதிலளிநீக்குமீண்டும் முயற்சித்துப் பார்த்தேன். வரவில்லை. எடுத்து விட்டேன்!
நீக்குசாண்டில்யன் அவர்கள் எழுதிய விவரம் ரசித்தேன். நூல் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகிடைக்கிறது.
நீக்குநீல வண்ண கண்ணனே பாடல், அதன் துள்ளலான இசை எனக்கும் பிடிக்கும். மீண்டும் கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குஆமாம். அப்போதே ரசித்த பாடல்களில் ஒன்று. சரணங்களில் இன்னும் விசேஷம்!
நீக்குகுறுக்கெழுத்து - அப்படியே கடந்து விட்டதால் அதை பிறகு பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅச்சச்சோ.... இப்படி அதை தனியேயே விடலாமா? லாமா? மா?!!
நீக்கு