டெல்லி குழுவிற்காகவா, இல்லை தினமும் நடக்கும் நிகழ்வுதானா தெரியாது. தினசரி ஒரு அழகிய பெண்மணி டீக்கான உடையுடன் தோன்றுவார். கையில் ஒரு File.
"இன்று ஏதும் குறைகள் உண்டா?" என்று கேட்பார்.
நேரத்துக்கு ஊசி போட்டார்களா, நன்றாக கவனித்துக் கொண்டார்களா, விளக்கம் கேட்டால் பொறுமையாக பதில் சொன்னார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு குறித்துக் கொள்வார். இது மாதிரி இரண்டாம் நாள் அவர் வந்து பேசியதை கொஞ்சம் மானே தேனே சேர்த்து எழுதி, அன்றே வாட்ஸாப்பில் என் உறவுகளுக்கு அனுப்பினேன்!
அது...
******************************
Knock... Knock..
"Yes.. Come in"
"Good evening Sir .. நான் இங்கே அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசர் உங்களுக்கு இங்கே ஏதாவது இஷ்யூஸ் இருந்தால் சொல்லுங்கள்"
"ஒன்றுமில்லை மேடம்"
"நன்றி. அப்படியே ஏதாவது இருந்தால் இதோ இந்த கார்டில் உள்ள எண்ணுக்கு போன் பேசி சொல்லுங்கள்"
"நன்றி மேடம் ஒரு விஷயம்... ஒரு சின்ன இஷ்யூ... "
"என்ன?"
"ஊசி போட்டால் வலிக்கிறது மேடம்"
புன்னகைத்தார்.
"அதற்கு ரெமடி கிடையாதா?"
மறுபடியும் ஒரு அழகிய புன்னகை = கையிலுள்ள கோப்பைப் பார்த்தபடியே...
"இந்த நோட்டில் கையெழுத்து போடுகிறீர்களா? நான் வந்து கேட்டேன் என்பதற்கான ஆதாரம்"
நான் பாஸைக் காட்டி, "அவர் போடலாமா?" என்றேன்.
"ஓ... வேண்டியவர் என்றால் போடலாம்"
"வேண்டியவர்தான்..."
"தாராளமா போடலாம். அவர் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார்.
"கொஞ்சம் நெருங்கிய சொந்தம் "
"ஸிஸ்டரா?".
"இல்லை வொய்ஃப்""
"என்னது? என்ன வேண்டும்?" என்றார் சற்றே குழப்பத்துடன்.
"அவர் எனக்கு வொய்ஃப் வேண்டும்"
அவர் என் பார்வையைத் தவிர்த்து விட்டு பாஸிடம் கையெழுத்து வாங்க நோட்டை நீட்டினார்.
பாஸ் அவர் முகத்தை சங்கடத்துடனும், என் முகத்தை சற்றே எரிச்சல் கலந்த கோபத்துடனும் பார்த்தவாறே File ஐ வாங்கினார்.
அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசர் கையெழுத்து வாங்கிக் கொண்டு கிளம்பினார். "ஏதாவது கம்ப்ளெயின்ட் இருந்தா சொல்லுங்க"
புன்னகையை ரத்து செய்திருந்தார்.
=============================================================================================
இன்ஸ்ட்டாவிலிருந்து பகிர்வதால் அனைவராலும் பார்க்க முடிகிறதா என்று தெரியவில்லை. பிரிவியூவில் எனக்கு ஒழுங்காக காட்டுகிறது.
TMS பின்பற்றிய சில பாணிகள் பற்றி சொல்கிறார் வீரமணி ராஜு.
View this post on Instagram
=======================================================================================
தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட் திண்டாடித் தெருவில் நின்றது.
‘இரண்டு நாள்கள் ஷூட்டிங் முடிந்திருந்தது. ‘எப்படி நம்மப் புதுமுகம்...? ’ என்று கேட்டார் ஸ்ரீதர்.
’எல்லாம் சரி. லேங்வேஜ்தான் ப்ராப்ளம். ’ என்றார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
‘கொஞ்சம் கொஞ்சமாக வ(மொ)ழிக்குக் கொண்டு வர வேண்டும். ’ என்றார் உதவி டைரக்டர் பி. மாதவன்.
ஒரு ரூபா என்கிற வார்த்தையை ‘வரு ரூபா’ என்பதாக சரோ உச்சரித்தார். ரிகர்சல் பார்த்த ஸ்ரீதர், என்னிடம் சாமியாடினார்.
‘என்னடா நீ முன்னாடியே படிச்சுக் காமிச்ச லட்சணம் இதுதானா...? ’
என்னை முறைத்தவாறே ஸ்ரீதரும், கடைசி வரையில் சரோவின் ‘கொஞ்சும் கிளி’ தமிழைத் திருத்த முயற்சித்துத் தோற்றார்.
ஒத்திகையில் மட்டுமல்லாமல் டேக்கிலும் ‘வரு ரூபா’ என்றே சொல்லி, ஃபிலிமைத் தின்று நாள் முழுவதும் ஏப்பமிட்டார் சரோ.
ஸ்ரீதராலும் சரோவின் சந்தனத் தமிழைத் திருத்த முடியவில்லை என்கிற சந்தோஷத்தில் எனக்குத் தனி குஷி பிறந்தது.
ப்ளைமூத்தில் தாயார் ருத்ரம்மா, சகோதரிகள் சகிதம் கல்யாணப் பரிசு செட்டுக்கு வரும் சரோ, கம்பெனி தரும் ஹோட்டல் டிபனை ஒரு பிடி பிடிப்பார்.
ஸ்டில்ஸ் அருணாச்சலம்- ‘என்ன குழந்தே... தெம்பா இல்ல? ’
ருத்ரம்மா - ‘அது தூங்கப் போனது ரொம்ப லேட்டு. டயலாக் படிச்சது. ’
ஸ்டில்ஸ் ஆனாரூனா - ‘நீங்களும் வாங்கி அப்பப்பப் படிங்க. தமிழ் பொழைக்கும்! ’ ‘சித்ராலயா’ கோபு.
சினிமா உரையாடலை மட்டுமல்ல. கோபுவின் முழுப்பெயர் சடகோபன். அதை ‘ஜடைகோபால்’ என்றே சரோ தவறுதலாக அழைத்தார்.
பி. மாதவன், ஸ்ரீதரிடம் அது பற்றி முறையிட்டார்.
ஸ்ரீதர் - ‘அது அவனுக்குப் பொருந்தும். அவன் ஒன்பதாம் வகுப்பு வரை குடுமி வைத்திருந்தான். ’
சரோ - ‘குடுமின்னா என்னா...? ’
கோபு- ‘ரொம்பப் புத்திசாலி என்று அர்த்தம். ’
தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை யாராவது கலாய்த்தால் சரோ உஷாராகி விடுவார். அவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை.
பின்னர் ஒரு காலத்தில் அந்த கோபால் என்ற உச்சரிப்பில் அந்த கன்னட பைங்கிளியை தமிழ் நாடு அன்றும் இன்றும் மறக்க வில்லை என்பது உண்மையே.
- சித்ராலயா கோபு
முகநூல் பதிவு- பிரசாந்த்!
இன்று பிறந்தநாள் காணும் சித்ராலயா கோபு அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!
Prashantha Kumar FaceBook
============================================================================================
1979 ல் 22 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் புதிய வார்ப்புகள். ரத்தி அக்னிஹோத்ரிக்கு முதல் படம். பாக்யராஜுக்கும் ஹீரோவாக முதல் படம். பாரதிராஜா முதன்முதலாக சொந்தமாக தயாரித்த படம், 'முதன் முதலா சொந்தமா படம் எடுக்கறீங்க.. என்னை ஹீரோவா போட்டு ஏன் ரிஸ்க் எடுக்கறீங்க' ன்னு பாக்யராஜ் கூட கேட்டாராம், படம் பாரதிராஜாவுக்கு வெற்றியைக் கொடுத்தது, இரண்டு விருதுகளையும் கொடுத்தது,.. படம் இதுவரை நான் பார்க்கவில்லை என்பது பெரிய தகவல் அல்ல என்பதால் அதை இங்கு சொல்லாமல் விடுகிறேன். சிறிய ஒரு வேடத்தில் நடித்த மனோபாலாவுக்கும் முதல் படம்.
முதல் பாடல் கண்ணதாசன் எழுதி இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவனும், ஜானகியம்மாவும் பாடி மோகனமாய் ஒலிக்கிறது.
==================================================================================================
ஜெயகாந்தன் :
ஒன்பதாம் பிராயத்தன் என் விழிக் கோது காதை சகுந்தலை ஒத்தனள்' என்று, பாரதியார் எழுதியிருப்பது போல், எனக்கும் பன்னிரண்டு வயதில், ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது.
'வயது முற்றிய பின்னறு காதலே மாசுடைத்து...' என்கிறார் பாரதியார். அதில் மாசு இருந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவள், மேல் எனக்கு காதல். அவளுக்கு உண்டா என்றும் தெரியாது. அவள், என்னைச் சுற்றிச் சுற்றி வருவாள்; என்னோடு விளையாடுவாள்.
நானும், அவளும் தனிமையில் பேசி, சிரித்து, தோட்டமெல்லாம் திரிவோம். நான், என்ன சொன்னாலும், விழுந்து விழுந்து சிரிப்பாள். நான் பேசுவதெல்லாம், அவளுக்கு, 'ஜோக்' தான். அவளை, ஒரு நாள் காணாவிட்டால், நான் தவித்து போவேன். கண்டதும், அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
நான் வேலை செய்து கொண்டிருந்தேன். அவளோ கான்வென்ட்டில் படித்தாள். மதிய நேரம் வருவாள். மாலை வரை வேலைக்கு டிமிக்கி கொடுத்து, அவளோடு நான் விளையாடுவேன்.
ஒருநாள் அவள் வரும் போது, நான் உடல்நலம் இல்லாததால், தூங்கி விட்டேன். அவள் வந்து பார்த்து விட்டு போய் விட்டாள். தூங்கி எழுந்த போது, அவள் நினைவுடனே எழுந்தேன். அவள் வந்து போய் விட்டதாக கூறினர். எனக்கு அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை.
தனிமையில் போய், மொட்டை மாடியில் கவிழ்ந்து படுத்து, எதையோ இழந்தவனாக சோகம் தாளாமல், கதறிக் கதறி அழுதேன்.
அடுத்த நாள் அவள் வருவாள் தான். ஆனால், அன்று அவளைப் பார்க்காத வருத்தத்தில், அவ்வளவு அழுகை, சோகம்.
அதன்பின், அவள் எங்கோ, நான் எங்கோ பிரிந்த பின், இடையில், ஆறு ஆண்டுகள் கழித்து, எனக்கு பதினெட்டு வயதில், அவளைப் பதினாறு வயதுப் பெண்ணாக, மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவரையில், அவளது பெயரையும், நட்பையும் மறவாமல், நினைவில் பாதுகாத்து, வைத்திருந்தேன்.
அவள் வரப் போகிறாள் என்று, முன்னாலேயே எனக்கு தெரியும். எனவே, அவள் வருகைக்காக, நான் காத்திருந்தேன். அவளும், வீட்டில் நுழைந்ததும், என் பெயரை கூறி, 'எங்கே?' என்று கேட்டு, ஆவலாய் வந்து, கதவைத் திறந்து, நின்றாள்.
அந்த வினாடி, என் காதல், அவள் காலடியில் வீழ்ந்து செத்தது. காரணம், அவள், 'நெடு நெடு'வென, என்னை விட, உயரமானவளாக வளர்ந்திருந்தது தான். அதனால், என் மனம் ஏன் மாற வேண்டும்... இது என்ன, 'சைக்காலஜி' என்று, எனக்கு புரியவில்லை.
அவள் என்னோடு மிகவும் ஆர்வத்தோடும், நட்புணர்வோடும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய நாட்களை நினைவுறுத்தி, அவள் பேசும் போது, எனக்கு வருத்தமாகவும், ஏன் கோபமாக கூட இருந்தது. 'இவள் யார் அந்த அழகான நினைவுச் சித்திரங்களை கலைப்பதற்கு...' என்று, தோன்றியது. அதன் பின், அவளை நான் சந்திக்கவே இல்லை.
— 'நினைத்துப் பார்க்கிறேன்' என்ற கட்டுரையில், ஜெயகாந்தன்.
வாரமலர் - திண்ணை 2017 ஜூலை
=================================================================
பெர்முடா முக்கோணம் மர்மம். ஜீவி ஸார் அனுப்பி வைத்தது. இந்த பெர்முடா முக்கோண மர்மம் எப்போதுமே எல்லோருக்குமே பிடித்த புதிர்களில் ஒன்று. இப்போது இது சம்பந்தமாய் இந்தப் பெண் சொல்வதையும் கேளுங்களேன்...
=============================================================================================
நகுலன் பாணியில் ஒரு கவிதை முயற்சிக்கிறேன்... ஜீவி ஸார் மன்னிப்பாராக...
'அது என்ன' என்று அவள்
என்னைக் கேட்டாள்.
'தெரியாது' என்றேன்.
எதைப்பற்றிக் கேட்டாள் என்று
நானும் கேட்கவில்லை.
அவளும் சொல்லவில்லை.

உவ்வே
இடுப்பில் சொருக நினைத்த
கர்சீப்
விழுந்தது தெரியாமல்
முன்னால் நடந்து சென்ற
இடையழகியிடம்
அதை எடுத்து நீட்டினேன்
வேறொரு கர்சீப்பால்
'கர்கர்ரெ'ன்று
மூக்கை
சீந்திக் கொண்டிருந்தவள்
திரும்பி,
'வேண்டாம்' என்று சைகை
செய்தாள்.
'ரொம்ப ஈரமாகி விட்டது.
அதுதான்
வேறு எடுத்திருக்கிறேன்'.
அப்போ அந்த ஈரம்
வியர்வை இல்லையா?
==========================================================================================
இந்தப் படத்தின் பாடல்கள் சென்னை பிரசிடெண்ட் ஹோட்டலில் வைத்து பதிவு செய்யப்பட்டதாம். இப்போது வரும் பாடல் ஜென்ஸி மற்றும் B. வசந்தா பாடிய பாடல். பாடல் பேஸ் ஷண்முகப்பிரியா ராகம் என்று சொன்னதோடு அடிக்கடி சமீப காலங்களில் கங்கை அமரன் இந்தப் பாடல் பற்றி சிலாகித்து பேசுகிறார் என்பதோடு அந்தப் பாடலின் வரிகளை இப்போதும் மனனமாக ஒப்பிக்கிறார்.. உண்மையிலேயே மனத்தைக் கொள்ளை கொள்ளும் சந்தநயம்.
ஒரு ஜாங்கிரியை எடுத்துக் கொள்ளுங்கள். ஓரிடத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட வளைவு நெளிகளுடன் சுற்றிச்சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இல்லையா.. இப்போது ஆரம்பம் எது முடிவு எது என்று தெரியாது. முடிவே இருக்காது! அது போலதான் இந்தப் பாடல். அப்போது இந்தப் பாடலின் அருமை தெரியவில்லை. இப்போல்லாம் தவறவிடுவதில்லை!
இளையராஜா வேண்டுமென்றே இந்த கஷ்டமான சந்தத்தை அமரனிடம் கொடுத்து பாடல் எழுதி வா என்றதும் ஹோட்டலின் மொட்டை மாடி சென்று அமர்ந்து வாகன சத்தங்கள் இடையே பத்து நிமிடத்தில் எழுதிய பாடலாம்.
புதிய வார்ப்புகள் படத்தில் முதலில் கங்கை அமரன்தான் பாக்யராஜ் நடித்த பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.
=========================================================================================
OTT யில் பார்த்த படம்.
ஒரு நிறுவனத்தில் கடுப்பேத்தும் ஒரு மானேஜர் திடீரென மரணமடைகிறார். அது கொலை என்று அறியப்படுகிறது. போலீஸ் எல்லாம் வரவில்லை. அந்தக் கொலைக்கு நான்கு பேர்கள் மேல் சந்தேகம். துப்பறிவாளர் யாரும் வரமாட்டார்கள். நான்கு பேர்களுக்குமான சம்பவங்கள் ஒன்று இரண்டு என்று விவரிக்கப்படுகின்றன. கொலையாளி யார் என்று படம் பார்க்கும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்! விதார்த், கலையரசன், சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மானேஜராக ஜான் விஜய். SunNext தளத்தில் பார்த்தேன். பார்க்கலாம்.
=============================================================================================
ஜோக்ஸ்....









காலை வணக்கம்.
பதிலளிநீக்குயார் யாருக்கு அதில் சுவாரஸ்யம் இருக்கிறதோ...
நீக்குபெர்முடா முக்கோண மர்மம் பற்றி சக வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வாசிக்க ஆசை.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குபெர்முடா ரகசியம் மாதிரி இங்கே பதிவிலும் அது ரகசியமாகவே முடங்கிப் போயிருக்கே? யாருக்குத் தெரிஞ்சது? அதுவும் ரகசியமா?
நீக்குபெரமுடா = பரம ரகசியம் ! Sorry something went wrong - "facebook"
நீக்குஇதை நான் பார்க்கவில்லை. ஆனால் சமீபத்தில் பெர்முடா முக்கோணம் பற்றி முழுமையாகப் படித்தேன். இங்குள்ளவர்களில் நான் மட்டுமே அதைத் தாண்டிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.
நீக்குநேற்று ஒரு சீனரின் கயிலாய மலை பற்றிய காணொளி பார்த்தேன். நான்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத (அவரைப் பொறுத்து) சமயங்களுக்கு திருக்கயிலாயம் மிக முக்கியமான புனித இடம், அதன் பத்து கிமீ சுற்றியே மர்மம். சீன அரசு ஸ்பெயின் ப்ரொஃபஷனல்களுக்கு அனுமதி கொடுத்து அவர்களாலும் மலை ஏற இயலவில்லை, ஒவ்வொருவர் அனுபவமும் அமானுஷ்யம் என்றெல்லாம் விவரித்திருந்தார்.
நலுலன் பாணி உங்கள் கவிதையில் அந்த கடைசி வரிகள் இரண்டையும் நீக்கி விட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குசேர்க்கும்போதே எனக்கும் தோன்றியதுதான் . இப்போது நீக்கி விட்டேன்!
நீக்குமுதல் இரண்டு பின்னூட்டங்களுக்கு பதில் மாறி விழுந்திருப்பதற்கு மன்னிக்கவும்!
பாக்யராஜின் முயற்சியில் எனக்கு மிகவும் பிடித்த் படம் 'சுவரில்லாத சித்திரங்கள்'. அனுபவித்து எடுத்திருப்பார் போலிருக்கு. கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த அந்த படத்தில் நடிகர்களையும் பாராட்ட வேண்டும்.
பதிலளிநீக்குஅவர்களில்லாமல் அந்தப் படமுமில்லை.
இயக்குனர் அவதாரத்தில் அது அவர் முதல் படம். இன்று நான் பகிர்ந்திருக்கும் படம் கதாநாயகனாக அவர் முதல் படம். எனக்கு அவர் நிறைய படங்கள் பிடிக்கும்.
நீக்குஎந்தத் துறையிலும் யாருக்கும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள் பெருமைக்குரியதாக அமைந்து விடும். போகப்போக நமுத்த பட்டாசுவதை தவிர்க்க முடியாமலேயே போய்விடும்.
நீக்குமுருக்கைக்காயை அவர் அதீதமாக உபபோகப்படுத்திக் கொண்டது போல. விரசம் போர்த்திய சொல்லாடல்களை சகஜமாக்கிய விஷயத்தில் கரை கண்டவர்.
நீக்கு'முந்தானை முடிச்சு' -- கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.
குமுதம் வாசிக்கக் கூடாது என்று சிறார்களைக் கண்டித்த அந்த நாளைய பெரியவர்களைக் கூட சப்புக்கொட்டி ரசிக்க வைத்தவர்.
பாரதிராஜா -- பாலசந்தர் -- பாக்யராஜ் இந்த மூவரணியில் இவருக்கான அடையாளம் இது.
ஆபாசமாக இல்லாமல் அதை நகைச்சுவை கலந்து அழகாகக் கொடுத்தார். நிஜமாகவே திரைக்கதை மன்னன் அவர்.
நீக்குநகுலன் பாணிக் கவிதை நல்லா இருந்தது.
பதிலளிநீக்குநீக்கிய இரண்டு வரிகள் எவை என்று நானும் கேட்கப் போவதில்லை. நீங்களும் சொல்லப்போவதில்லை.
ஹா... ஹா.. ஹா.. வாங்க நெல்லை. ஸூப்பர்.
நீக்குஇரண்டு வரிகளை நீக்கினாராம்
நீக்குசொல்லித் தான் தெரிந்தது
சொல்லாமல் இருந்திருந்தால்
அதுவும் தெரிந்திருக்காது
எதற்காக நீக்கிநாரென்று
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை.
ஹா.. ஹா.. ஹா... கீதா வந்து ஒன்று முயற்சி செய்வார்!
நீக்குஉவ்வே கவிதை, வெண்ணிறாடை மூர்த்தி பாணி நகைச்சுவை. எடுத்துக்கொள்பவர் மனதைப் பொறுத்தது
பதிலளிநீக்கு
நீக்குஇதில் என்ன இருக்கிறது!!!
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குநலமே வளர்க..
பதிலளிநீக்குவளரட்டும்.
நீக்குசரோஜாதேவியைப் பற்றிய சித்ராலயா கோபு எழுத்து புன்னகைக்க வைத்தது.
பதிலளிநீக்குசிலருக்கு அதிர்ஷ்டம் வந்து மேலே ஏற்றிவிடுகிறது.
நல்லா கிண்டல் பண்ணுவாங்க.. ஆனால் அவரை கனவுக் கன்னியா கொண்டாடுங்க...
நீக்குகன்னடத்துப் பைங்கிளி
நீக்கு:-))
நீக்குஜீவி சார்........ சிரிப்பும் புளிப்பும் சல காலம் தானே... உணவிர் ஆர்வம் இல்லை. ஆனால் இது மறக்கவில்லையே
நீக்குபுதியவார்ப்புகள் படத்தில் தம்தன தம்தன பாடலா? ஐபேடில் வரவில்லை.
பதிலளிநீக்குபடமும் அப்போதே ஹாஸ்டல் சமயத்தில் பார்த்துவிட்டேன். இந்தப் பாடல் நெடுநாள் மனதில் இருந்து முணுமுணுப்பேன். அப்போ இரண்டு பேர்கள் பாடினர் என்று தெரியாது
இரண்டு பாடல்கள் இணைத்திருந்தேன். நெல்லையில் கமெண்ட் பார்த்து சென்று பார்த்து ஒன்று இணையவில்லை என்று அறிந்து இப்போது இணைத்து விட்டேன்.
நீக்குதந்தன தந்தன
பதிலளிநீக்குதாளம் வரும்..
அப்போதிருந்தே மனம் கவர்ந்த பாடல்...
இரண்டு பாடல்கள் இன்று.. இன்னொன்றும் உண்டு!
நீக்குபாரதிராஜாவுக்கு வீம்பு (அல்லது மனோஜ் மாதிரியா இருந்திருப்பாரு) ரத்தி அக்னிஹோத்ரியை அந்தப் படத்தில் போட.
பதிலளிநீக்குஇவரும் ஒரு காரணம், அரசியல்வாதிகள் சொல்லும், புளித்துப்கோன, தொழில் வேறு கொள்கை வேறு என்ற பதிலுக்கு
எப்படியோ படம் வந்து வெற்றியும் பெற்றுவிட்டது! படத்தில் குங்குமம், இதயம் பேசுகிறது பத்திரிகைகளை வைத்து வரும் வசனம் ரசனை.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இணைந்து பிரார்த்திப்;போம். வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குTMS அவர்களைப் பற்றிய தகவல் சிறப்பு..
பதிலளிநீக்குரசித்தேன். பகிர்ந்தேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
ஆஸ்பத்திரியில் ரவுண்டு வந்த அட்மினிஸ்ட்ரேடிவ் சூப்பர்வைசரின் இயல்பான புன்னகையை ரத்து செய்ய வைத்த உங்கள் பதில்களை ரசித்தேன்.:))
முதலில் சகோதரர் ஜீவி சாரின் கருத்துக்கு வந்த தங்களின் பதில்கள் மாறியிருக்கின்றன.
இன்றைய தலைப்பே ஒரு வித்தியாசந்தான். அதற்கான கவிதை படித்ததும் புரிந்தது. கவிதையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. ஒரு ஓட்டத்தில் பாதி பதிவை முடித்து விட்டீர்களே...
நீக்குஇன்று கவிதை மட்டும் நகுலன் அவர்களின் பாணியில் இல்லை. கருத்துக்களும், பதில்களும் சுஜாதா அவர்களின் பாணியில்
நீக்குஅப்படியா? சுஜாதா பாணியா? அட!
நீக்குஆஸ்பத்திரி அனுபவங்கள் - அந்த கடைசி வரி //புன்னகையை ரத்து செய்திருந்தார்.// நச்சென்று இருக்குது. பல்பு கொடுப்பதில் மன்னர் நீங்கள்.
பதிலளிநீக்குநகுலனுக்கு என்று தனி பாணியை உருவாக்கிவிட்டுருவாக்கி விட்டர்கள்.
நல்லாயிருக்கா என்று
கேட்டார் அவர்
நல்லாயிருக்கு
எது என்று அவரும்
கேட்கவியில்லை
நானும் சொல்லவில்லை.
பொக்கிஷ ஜோக்குகள் த்ராபை.
Jayakumar
நன்றி JKC ஸார்.. இனி நகுல கவிதைகள் கொட்டும்!
நீக்கு// பொக்கிஷ ஜோக்குகள் த்ராபை. //
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அதை எழுதியவர்களுக்கே...!
/ இனி நகுல கவிதைகள் கொட்டும்! /
நீக்குகொட்டட்டும். உடன் படித்து ரசிக்க சகா(சக)தேவன்கள் நாங்கள் உள்ளோமே..:))
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குபெர்முடா - Something went wrong என்று வருகிறது.
இன்றைக்கு கொடுத்திருக்கும் இரண்டு பாடல்களும் ரசித்த பாடல்கள்.
சரோ - கோபால் எனக்கு நினைவுக்கு வந்தது....
அனைத்தும் ரசித்தேன்.
நீக்குவாங்க வெங்கட்.. வணக்கம். பெர்முடா ரன் ஆகவில்லையா? மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய முதல் கவிதையையும் இரண்டாவதின் இறுதியுடன் சேர்க்கலாம்
/அப்போ அந்த
ஈரம் வியர்வை இல்லையா/
ஆனால்,
கண்டதும் காதல் என்ற
கருமத்தில் நான் அதை
என் கைகளுக்குள்
மறைத்தது அவளுக்கு
உறுத்தியது.
இப்போது முதல் கவிதை.
/அது என்ன' என்று அவள்
என்னைக் கேட்டாள்.
'தெரியாது' என்றேன்.
எதைபபற்றிக் கேட்டாள் என்று
நானும் கேட்கவில்லை.
அவளும் சொல்லவில்லை..
இதுவும் ஒரு பாணி.. :)) உண்மையான உவ்வே..:))
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா.. ஹா.. ஹா.. அப்படி சொல்கிறீர்களா?
நீக்கு"ஊசி போட்டால் வலிக்கிறது மேடம்"
பதிலளிநீக்குபுன்னகைத்தார்.
"அதற்கு ரெமடி கிடையாதா?"
மறுபடியும் ஒரு அழகிய புன்னகை //
தெய்வீகப் புன்னகையாக இருந்ததா! ஸ்ரீராம்...?!!
கீதா
வாங்க கீதா.. அந்தப் புன்னகை எப்படியிருந்தது என்றால்..
நீக்குவேண்டாம் விடுங்க!
ஓ! பிரச்சனை ஆகிடுமோ!! இல்லை அனுஷ் கோச்சுக்குவாங்களா!!!ஹாஹாஹா
நீக்குகீதா
மானே தேனே எங்க வந்து பாயுதுன்னு புரிஞ்சு போச்!!!!
பதிலளிநீக்குகீதா
ஹிஹிஹி... ஆனால் ஜெமினி நாம் கேட்பதைக் கொடுக்கக் கூடாது என்று விரதமே வைத்திருக்கிறது!
நீக்குஅப்பெண் செய்வது ஒரு சில மருத்துவமனைகளில் உண்டு என்றாலும் ஒரு வேளை அப்படிச் செய்வதும் கூட தில்லி குழுவோ வேறு ஏதேனும் குழுவுக்காக இருக்குமோ டவுட்டு....
பதிலளிநீக்குகீதா
இருக்கலாம். முன்னர் இதே ராமச்சந்திராவில் இப்படிப் பார்த்ததாக நினைவில்லை.
நீக்குடி எம் எஸ் பிரமாதம். அதான் அவர் குரலில் பாடலுக்கு ஏற்ற அப்படி ஒரு உணர்வு!!!! லயித்து அதிலேயே மூழ்கிப் பாடும் இந்த டெக்னிக்..!!
பதிலளிநீக்குகீதா
ரசித்தேன். எனவே பகிர்ந்தேன்.
நீக்குமீ டூ..ரசித்தேன்
நீக்குகீதா
not opening. :(
நீக்குகீதா அக்கா வாங்க... எனக்கு அல்லது எங்களுக்கு ஓபன் ஆகிறதே... பெர்முடாவும் எனக்கு ஓபன் ஆகிறது. அநேகமாக வெங்கட்டுக்கும் ஓபன் ஆகியிருக்க வேண்டும். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
நீக்குபெர்முடாவை பேஸ்புக் பெர்முடாவில் போட்டுவிட்டது, go back என்று சொல்கிறது.
பதிலளிநீக்குlink மட்டும் கொடுத்திருக்கலாம்.
athe, athe!
நீக்குபெர்முடா எனக்கு திறக்கிறது. இருந்தாலும் இரண்டாம் முறையும் ஒரு ஓட்டம் கொடுத்திருக்கிறேன். கூடவே எதற்கும் இருக்கட்டும் என்று Link ம் கொடுத்திருக்கிறேன்.
நீக்குகூடவே ஆதித்யா டிவி விளம்பரம் போல சிரித்தாலே இனிக்கும் பாருங்கன்னு சொல்றாங்களே
பதிலளிநீக்குகன்னட பைங்கிளி பகுதி சிரித்துவிட்டேன்...
கீதா
ஒருவேளை அது அந்தப் பகுதியில் வந்ததாக இருக்கும்.
நீக்குஉவ்வே படிக்கிறச்சேயே நினைச்சேன். இஃகி,இஃகி,இஃகி. நகுலன் பாணி கவிதை அபாரம்னு சொல்ல முடியாட்டியும் பரவாயில்லை ரகம்.
பதிலளிநீக்குபுதிய வார்ப்புகள் அம்பத்தூரில் இருந்தப்போக் கணுப்பொடி வைக்க ஆழ்வார்ப்பேட்டையில் இருந்த அப்பா/சகோதரர்கள் வீட்டுக்குப் போனப்போ தம்பி மிட்லன்ட் தியேட்டர்? அல்லது சாந்தி? அல்லது தேவி? எதுனு நினைவில் இல்லை. அங்கே மாட்னி காட்சிக்கு முன்பதிவு செய்து வைச்சுட்டுத் தம்பி குடும்பத்தோடு எல்லோரையும் அழைத்துப் போனார். கொஞ்சம் இந்தப்படத்துக்கும் வேதம் புதிது படத்துக்கும் நான் குழப்பிப்பேன். ஆனாலும் இதில் மேல் முகவாயில் மச்சம் உள்ள ரத்தியும் வேதம் புதிது படத்தில் அமலாவும் என்பது மட்டும் புரிஞ்சிருந்தது. அதோடு வேதம் புதிது அம்பத்தூரிலேயே ஸ்டேஷனுக்கு அந்தப்பக்கம் இருந்த முருகன் தியேட்டரில் பார்த்தோம். நான், குழந்தைகள், இரண்டாவது நாத்தனார், குழந்தைகள், அவங்க வீட்டுக்காரர், மைத்துனர், ஓர்ப்படினு எல்லோருமாப் போயிருந்தோம். படம் முடிவு/படம் இரண்டுமே எங்களுக்குப் பிடிக்கலை. ஆனாலும் வெளிக்காட்டிக்கலை.
வேதம் புதிது பரவாயில்லை ரகம். புதிய வார்ப்புகள் பார்க்கவில்லை.
நீக்குபுதிய வார்ப்புகள் பரவாயில்லை ரகம். ஆனால் வேதம் புதிது? எங்களால் ஒத்துக்க முடியலை. மாமா இந்தப் படங்களுக்கெல்லாம் தியேட்டருக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டார். அவர் தொலைக்காட்சியில் தான் பார்த்தார்னு நினைவு. நான் அப்போப் பார்க்கலை. ஒரு தரமே அதிகம் இந்தப் படங்களுக்கெல்லாம் என்னும் எண்ணம். :)))))
நீக்குபடம் இதுவரை நான் பார்க்கவில்லை என்பது பெரிய தகவல் அல்ல என்பதால் அதை இங்கு சொல்லாமல் விடுகிறேன். //
பதிலளிநீக்குஅதான் சொல்லிட்டீங்களே!!!! பெரியதகவல்!
ஆமா மோகனமாய்...அருமையான இசை!! மெட்டு. இப்பவும் கேட்டு ரசித்தேன்.
இதே படத்தில்தானே கோயில் மணி ஓசை தன்னை இப்படமோ? அதுவும் அழகான ராகம் சுத்த சாவேரி.
டிப்பிக்கல் பா ரா மேக்கிங் ஸ்டைல்.
ர அ கோ இப்ப என்ன செய்யறாங்களோ?
கீதா
Confuse ஆகிட்டீங்க கீதா.. கோவில் மணி ஓசைதன்னை பாடல் கிழக்கே போகும் ரயில். ரத்தி வடக்கத்தி ஆள் இல்லையா... அங்கே சும்மா இருப்பார், அல்லது நடித்துக் கொண்டிருப்பார்!
நீக்குரத்தி கமலஹாசனோடு ஏக் துஜே கே லியே படத்தில் வந்த சண்டைக்குப் பின்னர் அதிகம் நடிக்கலை. வேறே யாரும் அவரைக் கூப்பிடவும் இல்லை. கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டில் ஆகிட்டார்னு நினைக்கிறேன். பஞ்சாபி பிராமணப் பெண். அப்பா ராணுவ அதிகாரினு நினைவு. இவரும் ஹீரா ராஜகோபாலும் நண்பர்களோனு நினைவு. அஜித் கைவிட்டதும் ஹீரா காணாமலே போய்விட்டார். இவர் அப்பாவும் ராணுவ அதிகாரி தான். இவரும் பிராமணப் பெண்ணே. அஜித்தின் அப்பா பிராமணர் என்பதால் இவங்க கல்யாணத்தில் இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் அஜித் திடீரென ஷாலினியை மணந்து கொண்டார். கிட்டத்தட்ட ராஜேஷ் கன்னா, அஞ்சு மஹேந்துருவுக்கு நிச்சயம் ஆன நிலையில் டிம்பிள் கபாடியா ராஜேஷ் கன்னாவைத் திருமணம் செய்து கொண்டாற்போல்.
நீக்குஜெயகாந்தனை ஏற்கெனவே படிச்சிருக்கேன். இதைத் தவிர்த்தும் அவர் தினமணி கதிரில் கிட்டத்தட்ட தன் சுயசரிதையைக் கடலூர் வாழ்க்கையை எழுதி வந்தார். அது இன்னும் சுவாரசியம். அது சரி, ஜெயகாந்தன் நண்பர்களோடு இருந்த வீடு ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோயில் மாடி என்பது தெரியுமா? அங்கே தான் நண்பர்களைச் சந்திக்க, வாத, விவாதங்கள் செய்ய, எழுதனு வைச்சிருந்தார். சித்தப்பா ஓரிரு முறை அங்கே வந்திருக்கார். ஆனால் நாங்க போனதில்லை. அப்போல்லாம் ஜீன்ஸ், டீ ஷர்ட் என ரொம்பவும் நாகரிகமாக இருப்பார் ஜெயகாந்தன். கண்ணாடி, கூலிங்கா, சாதாரணமானதா, பவரானு தெரியாது. அணிந்திருப்பார். போய்ப் பேசினதில்லை. அங்கே இருந்து எதிர்சாரியில் சில வீடுகள் தள்ளித் தான் அண்ணா வீடு. எதிர் வீடு ஸ்ரீதேவியின் சொந்தச் சித்தி.
பதிலளிநீக்குஜெயகாந்தனின் அந்த சந்திப்பு மாடி பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அது கே கே நகர் என்று மனதில் எண்ணி இருந்தேன். புஷ்பா தங்கதுரைதான் கே கே நகரில் இருந்தாரோ... இளையராஜா கூட ஜெயகாந்தனின் இந்த இடத்துக்கு வந்துதான் வாய்ப்பு கேட்டார் என்று சொன்னதாக ஞாபகம்.
நீக்குசொல்லுவாங்க இளையராஜா வந்துட்டுப் போனதாகவும், கங்கை அமரன் வந்திருக்கார், பேசிட்டு இருக்கார்னும் சொல்லுவாங்க. ஆனால் நான் பார்த்தது இல்லை. இப்போச் சித்தப்பாவின் பெரிய பையர் ரவிசங்கர் வீடு இருக்கும் இடம் தி.நகரில் இளையராஜாவின் வீட்டுக்கு நேர் எதிரே தான். ரவிசங்கர் இருப்பது குடியிருப்பு வளாகம். இளையராஜா பெரிய தனி வீடு.
நீக்குஜெயகாந்தன் பகுதி சுவாரசியம்.
பதிலளிநீக்குகீதா
Yessu...!
நீக்குபெர்முடா முக்கோணம் இங்கும் மர்மமாக லிங்க இழுத்துருச்சு போல!!!!
பதிலளிநீக்குகீதா
எனக்கு ஓபன் ஆகிறது கீதா.. இப்போ மறுபடியும் ஒன்று கொடுத்து கூடவே வெங்கட் மாதிரி எக்ஸ்ட்ராவாக 'லிங்க்'கும் கொடுத்திருக்கிறேன்.
நீக்குஜோக்குகளில் கடைசியில் வரும் போலீஸ்காரர் ஜோக் படிக்க முடியலை. பெரிசு பண்ணியும் பார்க்க முடியலை. ஆஸ்பத்திரிகளில் தினம்னு இல்லாட்டியும் வாரம் ஒரு முறையானும் இப்படி நிர்வாகப் பணியாளர்கள் வந்து கேட்டுக் குறித்துக் கொண்டு போவது நான் எப்போவோ என் அம்மா இசபெல் மருத்துவமனையில் 1981 இல் கான்சர் ஆபரேஷனுக்காக இருந்தப்போவே பார்த்தேன். அதே போல் அண்ணா நகரிலும் சில மருத்துவமனைகளில் உண்டு. அப்போலோவிலும் உண்டு. அதே போல் நான் பைல்ஸ் ஆபரேஷனுக்குச் சேர்ந்திருந்த ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையிலும் உண்டு. அங்கே அப்போவே ந்யூடிரிஷியன் வந்து தினசரி எனக்கு உணவுக்குச் சொல்லிட்டுப் போவாங்க. கான்டீனில் வேண்டாம் என்று சொன்னதால் என் அம்மா வீட்டில் சமைச்சு எடுத்துட்டு வருவார்.
பதிலளிநீக்குபோலீஸ்காரர் தீபாவளி சமயம் என்பதால் பட்டாசுக்கு பயப்படுகிறார். இங்கு உணவு நம் இஷ்டம். அவர்களின் வாங்கினால் வாங்கலாம். அல்லது வீட்டிலிருந்தும் எடுத்து வரலாம்.
நீக்குஅப்படியா? மாமாவைச் சேர்த்திருந்த மருத்துவமனையில் தினமும் ந்யூட்ரிஷியனின் ஆலோசனையின் பேரில் தான் காலை உணவில் இருந்தே அவருக்கு வரும். முட்டையின் மஞ்சள் கரு(?) தினமும் கொடுப்பார்கள். மாமா தொடவே மாட்டார். நான் அவங்க வைச்சிருக்கும் நான்கு இட்லிகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தட்டில் எண்ணெய், மிளகாய்ப் பொடி போட்டுக் கொடுத்துடுவேன். அந்தத் தட்டை அப்படியே மாமாவைப் பார்த்துக்க நியமிச்சிருக்கும் அட்டென்டரிடம் கொடுத்துடுவேன். மத்தியானம் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடுவேன். ஒரே பூண்டு மயம். காய்களில், கூட்டில், ரசம் ஆகிய எல்லாத்திலும் இருக்கும். நான் வீட்டிலிருந்து ரசம் சாதம் கரைச்சுக் கொண்டு போயிடுவேன். மோர் சாதமும் கொண்டு போவேன். அதை மத்தியானம் 3 மணிக்குப் பசி வேளைக்குக் கொடுப்பேன். அதோடு அங்கே கான்டீன் சாப்பாடு ஒன்றரை மணிக்குத் தான் வரும். அதுவரை மாமாவுக்குப் பசி தாங்காது.
நீக்குமுதல் கவிதை சூப்பர்!! யூகங்களுக்கு வழிவகுக்கும் விஷயங்கள்! இல்லைனா ஆஹா என்னா புரிதலப்பான்னு சொல்லலாம்!!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குஎதைப்பற்றி
கேட்கவில்லை உங்களை
நீங்களும் சொல்லப் போவதில்லை
உங்களுக்கும் தெரியாதே!
தெரிந்திருந்தால்
கவிதையாய் கொட்டியிருக்கும்!
கேட்கவும் வேண்டாம்
சொல்லவும் வேண்டாம்
கண்களின் மொழிக்கு!
உவ்வே - ஹாஹாஹா....
கண்ணீரின் சோகம்
மூக்கிலும் வழிந்ததென
நினைத்து மருகினால்...
சே! மூக்குச் சளியாம்!
கீதா
சூப்பர்... நான்தான் சொன்னேனே... நிறைய கவிதைகள் மாடல் பிறக்கும்!
நீக்குஆஹா! தம் தன தம் தன.....செம செம பாட்டு ஷண்முகப் பிரியா.....அப்பவும் இப்பவும் எப்பவும் ரசிக்கும் பாடல் ஸ்ரீரம். அசாத்திய மெட்டு, இசை....சான்ஸே இல்லை ராஜாவின் ராஜாங்கம்...இப்படம் வந்து இப்பாடல் கேட்ட பிறகு கல்லூரியில் படித்த போது அப்ப ரொம்ப பிராபல்யம் எனவே நான் இதை அடிக்கடி பாடியதுண்டு.
பதிலளிநீக்குஎப்ப கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல். இடையில் வரும் இன்டெர்லூட் கோரஸ் எல்லாமே செம செம...
நீங்க சொல்லியிருக்கும் வர்ணனை...ஜாங்கிரி ஹாஹா அதேதான்..
இந்தப் பாட்டு அப்புறம் ஆயரம் தாமரை மொட்டுக்களே பாட்டும் கல்லூரிக்காலத்தில் நான் அடிக்கடி பாடிய பாடல்கள் அத்தனை ரசித்த பாடல்கள். இரு படமுமே பா ரா, இ ரா க்களுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்!
கீதா
ஆஹா..ஆயிரம் தாமரை மொட்டுகளே... கறுப்பியை வெளுக்க வைத்து உடலில் சில இடங்களைமட்டும் ரோஜாவால் மூடி........... 81ல் பார்த்த படம்.
நீக்குஆயிரம் தாமரை மொட்டுகள் பாடல் இளையராஜாவின் அம்மா வயல்வெளியில் நெல்லை கதிர் அடிக்கும் பாட பாடிய பாடலின் மெட்டாம்.. கங்கை சொன்னார்.
நீக்குதம்தனனம் பாடல் பற்றி எங்கள் பள்ளிக்கு காலத்தில் ஒரு வதந்தி உண்டு. 13 ன் பிளாக்கில் நாங்கள் குருவி என்று அழைக்கும் ரவிக்குமார் இருந்தான். அவன் அம்மா வெள்ளிக்கிழமை தோறும் குளித்துவிட்டு வந்து இந்தப் பாடலை பாடி டான்ஸ் ஆடிவிட்டுதான் அடுத்த வேலை என்று அவனுக்குப் பக்கத்து வீட்டு நண்பன் கிசுகிசுத்திருந்தான்.
பதில் கருத்துகல் பார்த்துவிட்டென் ஸ்ரீராம் ஆனா ரொம்ப அடிக்க முடியலை
நீக்குகீதா
மூன்றாம் கண் ஈர்க்குதே...
பதிலளிநீக்குகீதா
பாருங்களேன்...!!! பானு அக்கா பார்த்து விட்டார்களாம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஏணி இங்கு பார்த்த நினைவிருக்கு
பதிலளிநீக்குபைனாகுலர்- ஹிஹிஹி
கடிதாசும் ஏற்கனவே வாசிச்ச நினைவு!
கீதா
__/\__
நீக்கு//இது மாதிரி இரண்டாம் நாள் அவர் வந்து பேசியதை கொஞ்சம் மானே தேனே சேர்த்து எழுதி, அன்றே வாட்ஸாப்பில் என் உறவுகளுக்கு அனுப்பினேன்!//
பதிலளிநீக்குஅப்போ நீங்கள் அவரின் பொன்னான நேரத்தை அரட்டை அடித்து வீணாக்கவில்லை என்று சொல்லுங்கள்.
//பாஸ் அவர் முகத்தை சங்கடத்துடனும், என் முகத்தை சற்றே எரிச்சல் கலந்த கோபத்துடனும் பார்த்தவாறே File ஐ வாங்கினார்.//
பாஸ் எரிச்சல்கலந்த பார்வை பார்க்கவில்லை தானே!
நல்லதுதான்.
' சற்றே எரிச்சல் கலந்த கோபத்துடனும் பார்த்தவாறே ' என்று சொல்லி இருக்கிறேனே... "மொக்கை போடாதீங்க" என்பார்.
நீக்குசர்வர்சுந்தரம் படத்தில் சரோஜா தேவியாக அவர் தமிழ்பேசுவது போல மனோரமா நடித்து இருப்பார். அவரை போலவே உடை அணிந்து இருப்பார்.
பதிலளிநீக்குநாகேஷ் , மனோரமா உரையாடல் அருமையாக இருக்கும்.
அப்படியா என்ன! நான் இதுவரை அப்படி நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அவர் பெருக்குவது போல நடிப்பதும் ரங்காராவ் தலையில் அடித்துக் கொண்டு "நோ நோ" என்று அழுகுரலில் சொல்வதும், நாகேஷின் டயலாக்கும் நினைவுக்கு வருகிறது!
நீக்குஆமாம், மத்யமரில் கூட வினோ மோகன் இந்தக் காட்சியைப் படமாக்கியது பற்றியும் ரங்கராவ் பற்றி எழுதியபோதும் இதைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் காட்சியில் தான் நடிக்கவேண்டும் என்று நாகேஷிடம் சொல்லிக் கிருஷ்ணன், பஞ்சு இயக்குநர்களில் பஞ்சு அவர்கள் சம்மதத்தின் பேரில் ரங்கராவ் நடிச்சாராம். மனோரமாவை சரோஜாதேவி பேசுவது போலவே நடிக்க வைச்சதையும் சொல்லி இருந்தாங்க.
நீக்குவீரமணி அவர்களின் பேட்டியை ஒரு வாரத்திற்கு முன்பே பார்த்திருந்தேன். நேற்று அவரின் வேறொரு பேட்டியையும் பார்த்தேன். டி எம் எஸ் மிகுந்த திறமைசாலி. கடந்த சில நாட்களாக வீரமணி மற்றும் சமயக்குரவர் பாடல்களும் என்னைப் பிடித்து ஆட்டுகின்றன. வேறு எதெவும் கேட்கத் தோன்றவில்லை. சனி பாசுரத்தில் இதனைப் புகுத்த எண்ணியிருக்கிறளன், பொருத்தமான இடம் வரணும்.
பதிலளிநீக்குஅடடே.. ஆஹா...
நீக்குஎங்க உறவினர் வீட்டுக் கல்யாணங்களில் வீரமணி அவர்களின் கச்சேரி அல்லது பஜனை, பஜனை பத்ததி கோபாலகிருஷ்ண பாகவதரின் குடும்ப பஜனை, வீரமணி ராஜூவின் கச்சேரி அல்லது பஜனை எனக் கல்யாணத்தின் முதல் நாள் வைப்பாங்க. இப்போல்லாம் முழுக்க முழுக்கப் புகை போட்டு மணமக்களை வரவழைப்பதும், குத்துப்பாட்டு(?) ஆடிப்படுவதும் தானே. இப்போ எந்தக் கச்சேரியும் முகநூல் மூலமாகவே கேட்கிறேன். சிவஸ்ரீயின் கச்சேரி, சந்தீப் நாராயணன், சித்து ஸ்ரீராம், லாவண்யா சுந்தரராமன் (நித்யஸ்ரீயின் அக்கா பெண்) கிரண், நிவி ஆகியோரின் கச்சேரிகள் இப்போதைய பாடகர்களில். மற்றும் பழைய பாடகர்களின் பாடல்களும் கேட்கிறேன். ராகுல் வெள்ளால் நல்ல பெரிய பையராக ஆகி விட்டார். அவரோடு இணைந்து பாடிய சூரியா காயத்ரியும்.
நீக்குவீரமணி - வீரமணி ராஜு இருவரின் குரலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும் இல்லையா?
நீக்குநினைத்துப்பார்க்கிறேன் ஜெயகாந்தன் கட்டுரையில் அவர் சின்ன வயது விளையாட்டு தோழியை தேடி ஏமாந்து போய் கோபமாகி விட்டார்.
பதிலளிநீக்குYessu...!
நீக்குபாடல் பகிர்வு, பட விமர்சனம், நகைச்சுவை எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபெர்முடா தீவு பற்றிய செய்தி இதுவரை எனக்கும் வரவில்லை. இப்போது கருத்துக்களில் பார்த்து சரி செய்ய பட்டுள்ளதை அறிந்த பின் கேட்டுப் பார்த்தேன். நன்றாக விளக்கமான செய்திகள். அறிவியலை நம்புவோம். நன்றி.
சரோஜா தேவி பற்றிய செய்திகள்.அறிந்தேன். அவரவர் மொழி அவரவர்களுக்கு தெளிவாகத்தானே படிக்கவோ , பேசவோ முடியும். இது இயற்கையானது. அப்போதெல்லாம் டப்பிங் பேசுகிறவர்கள் அதிகம் கிடையாது போலும்.!
இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. புதிய வார்ப்புகள் வழக்கம் போல தொ. காட்சியில் பார்த்துள்ளதாக நினைவு. கதை நினைவுக்கு வரவில்லை. பாடல்கள் அடிக்கடி கேட்டதினால் அருமையான பாடல்கள்.
இன்றைய நகைச்சுவைகள் அனைத்தும் அருமை . இந்த மாதிரி கடிதம் அடுக்கி வைக்கும் கம்பி முன்பு அனைவரின் வீட்டிலும் தவறாது இருந்தது. தினசரி காலண்டரைக் கூட எளிதில் கிழித்து விடுவோம். அதை கிழிக்க மனம் வராது போலும்...! ஜோக்கில் கூட எல்லாமே அந்தப்பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வந்தோடு சரி.! . ரசித்தேன். இப்போது அந்த பிரச்சனையே எவருக்குமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பெர்முடா தீவு மறுபடி ஒன்றும் அது தவிர அதன் லிங்க்கும் கொடுத்திருக்கிறேன் பார்த்தீர்களா?
நீக்குBermudas ok.
நீக்குகாலையில் பகிர்ந்ததோடு மறுபடி பகிர்ந்ததும் இப்போது வந்துள்ளது. இரண்டிலும் கேட்டு அந்தப் பெண் கூறிய விளக்கங்களை அறிந்து கொண்டேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி. .
நீக்கு__/\__
நீக்குவீரமணி அவர்களின் பேட்டி தொடர்ந்து வரலை. விட்டு விட்டு வருது. நடு நடுவில் போய் விடுகிறது.
பதிலளிநீக்குஅப்படியா... எனக்கு சரியாய் வந்ததே...
நீக்குதாமதமாக வருகிறேன். பதிவு சூப்பரோ சூப்பர். பெர்முடா அதிசயம் கொஞ்சம் பயப்படுத்துகிறது. சரோ காப்பி மனோரமா :)))))))))) ''ஏம்மா தமிழைக் கொலை செய்றீங்க? போங்க சார். நான் இப்படிப் பேசினால் தான் எல்லோருக்கும் பிடிக்கும்.:0)
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. வர்றதுதான் முக்கியம். எப்போ வர்றீங்கங்கறது பெரிசில்லை. மனோரமாவின் அந்த வசனம் கேட்டிருக்கிறேன்.
நீக்குசரோஜாதேவி மழலைக்கு நிறைய ரசிகர்கள் உண்டு!!!!!!
பதிலளிநீக்குஆமாம். ஆண் ரசிகர்கள் அதிகமா? பெண் ரசிகர்கள் அதிகமா?
நீக்குடி எம் எஸ் ..வீரமணி வீடியோ வெகு சுவாரஸ்யம். டெமெஸ் ரசிகைகள் நாங்கள்.
பதிலளிநீக்குஏன், எனக்கும் டி எம் எஸ் பிடிக்கும்தான்!
நீக்குஆழ்வார்பேட்டை பற்றி எவ்வளவு செய்திகள். ஹப்பாடி!!!
பதிலளிநீக்குபுன்னகை!
நீக்குபாவம் பாக்யராஜ். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆமாம். நான் பெரிதும் ரசிக்கும் ஆள்.
நீக்குஉங்கள் ஹாஸ்பிடல் அனுபவங்கள் சிரிக்க வைத்தன.பாஸ் பாவம்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... இரண்டு வார பொழுதுபோக்கு - சற்று சிரமத்துடன்!
நீக்கு''தம்தனனம் பாடல் பற்றி எங்கள் பள்ளிக்கு காலத்தில் ஒரு வதந்தி உண்டு. 13 ன் பிளாக்கில் நாங்கள் குருவி என்று அழைக்கும் ரவிக்குமார் இருந்தான். அவன் அம்மா வெள்ளிக்கிழமை தோறும் குளித்துவிட்டு வந்து இந்தப் பாடலை பாடி டான்ஸ் ஆடிவிட்டுதான் அடுத்த வேலை என்று அவனுக்குப் பக்கத்து வீட்டு நண்பன் கிசுகிசுத்திருந்தான்.'' ஹைய்யோ!!!
பதிலளிநீக்குஎங்களுக்கு அப்போது எப்படியிருந்திருக்கும் பாருங்கள்... அவர்கள் கடை போகும்போதும் வெளியே வரும்போதெல்லாம் நாங்கள் அவரை குறுகுறுவென்று பார்ப்போம்... 'எப்படி ஆடியிருப்பார்?'
நீக்குவேதம் புதிது படம் பிடித்துப் பார்த்த படம். அமலா அழகாக இருப்பார்.
பதிலளிநீக்குஆமாம். ஆமாம். ஆமாம்.. நான் அப்போது அமலாவின் ரசிகன்! பாடல்கள் எல்லாமும் நன்றாய் இருக்கும்.
நீக்குசத்யராஜும் அந்தக் குழந்தையும் நடிப்பில் மிக சோபிதம்.
பதிலளிநீக்குYessu.. Yessu...
நீக்குஜெயகாந்தன் இளம் வயது தோழி/காதலி.... ஹா ஹா ஹா.. எனக்கும் ஐந்தாவது படிக்கும்போது, ஏழாவது எட்டாவது படிக்கும்போது இருந்தது (ஒன்று ஐயங்கார், இரண்டாவது ஐயர்). எனக்கு 24 வயது இருக்கும்போது மாம்பலம் இரயில் நிலையத்தில் அப்பாவோடு நடந்து சென்றபோது முதல் பெண்ணின் பெயரைச் சொல்லி, இப்போ எங்க இருக்கான்னு கேட்டேன். அதற்கு என் அப்பாவின் பதில், உன்னைவிட அவள் பெரியவள். (:-(( ). இரண்டாவது பெண்ணை எனக்கு சந்திக்கணும் எங்க இருப்பா, எப்படி இருப்பா? தெரியாது, சந்திக்க ஆசை கடந்த இரு வருடங்களாக. எப்படிக் கண்டுபிடிப்பது, ஏமாற்றமாஇருக்குமோ எனப் பல யோசனைகள். என் பெண், "வேற வேலையில்லையா உங்களுக்கு?"
பதிலளிநீக்குஅடடே... உங்கள் அப்பா உங்களை அறிந்திருக்கிறார். மனம் படித்திருந்திருக்கிறார்! அந்த இன்னொரு பெண்ணைக் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்...
நீக்குஜெயகாந்தனின் காதல் அனுபவம், அந்தப் பெண்ணின் காலடியிலேயே அது விழுந்து உயிர்விட்ட அனுபவம் .. மனதை என்னவோ செய்கிறது. சின்ன வயதுக் கதைகள் அலாதியானவை. வயசு அப்படி..
பதிலளிநீக்குகாதல் இருக்கட்டும் ஒருபுறம். ஆண் மனதை அறிந்துகொண்டோர் இலர் !
ஆமாம். அழகான ஆழமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
நீக்குபுதிய வார்ப்புகள் பார்த்திருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அதே போல, கிழக்கே போகும் ரயில், பதினாறு வயதினிலே, வேதம் புதிது, முதல் மரியாதை.. இப்படி சில பாரதிராஜா படங்கள்.
பதிலளிநீக்குஆமாம். அப்போது தமிழ்த்திரைப்பட உலகின் புதிய சகாப்தங்கள் தொடங்கிய நேரம் அல்லவா...
நீக்குபெர்முடா முக்கோணம் மர்மம். ஜீவி ஸார் அனுப்பி வைத்தது//
பதிலளிநீக்குஇப்போது தெரிந்தது படித்தேன், மலைத்தேன்.
இயற்கையின் படைப்பை அறிந்து கொண்டேன்.
நன்றி ஜீவி சார், ஸ்ரீராம்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குவீரமணி அவர்கள் டி,எம்.எஸ் பற்றி சொன்னது அருமை.
பதிலளிநீக்குநான் டி.எம,எஸ் பாடி கேட்டு இருக்கிறேன். விருதுநகரில், அப்புறம் சிவகாசியில் நேரே கேட்டு இருக்கிறேன்.
அவரே நடிகர் என்பதால் அவரே நடித்து காட்டி பாடுவார்.
நான் அவரை நேரில் பார்த்தது இல்லை. நான் நேரில் பார்த்த பாடகர்கள் வெகு குறைவு. சினிமா பாடகர்கள் யாரையுமே நேரில் பார்த்ததில்லை.
நீக்குநாங்க டிஎம் எஸ்ஸின் கச்சேரிகளை நேரில் கேட்டிருக்கோம். அம்பத்தூர் வாசத்தில் நாங்க சபாவில் இருந்தப்போ அங்கே நிகழ்ச்சிகளில் வரும். போனோம். அந்த சபாவில் நாடக விழாக்களும் நடக்கும். எஸ்வி.சஹஸ்ரநாமம் குழு, சோவின் குழு, மெரினாவின் குழு எனப் பல குழுக்களின் நாடகங்கள் நிறையப் பார்த்திருக்கோம். பெரிய நடிகர்களின் படங்கள், இயக்குநர்களின் படங்கள் வந்தால் அவையும் சிறப்புக் காட்சியாகப் போடுவாங்க. மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்குக்கான சபா. பின்னர் வந்தப்போ அதே சபாவின் நீடித்து இருக்க முடியாமல் வீட்டிலும் சபாவிலும் ஏகப்பட்டப் பிரச்னைகள். இத்தனைக்கும் மாமியார், மைத்துனர் ஆகியவர்களை நல்ல நாடகங்கள் வந்தால் போகச் சொல்லுவோம். நாங்க முடிஞ்சால் போவோம். இல்லைனா இல்லை. அப்படியும் ஏகப்பட்ட மனத்தாங்கல்கள், சபாவிலும் சரியான செக்ரடரி இல்லை. எங்கள் நண்பர் மன வேற்றுமையால் விலகிவிட்டார். ஆகவே நாங்களும் வெளியே வந்துட்டோம். என்றாலும் தனியாக டிக்கெட் வாங்கி ஆதிசங்கரர் போன்ற சில அபூர்வமான பிரபல நாடகங்கள் போனோம். ஆதிசங்கரர் மாஸ்டர் ஸ்ரீதர், அந்தக் காலத்தில் பிரபலமான குழந்தை நடிகர்.
நீக்குஎதையோ சொல்ல நினைச்சு ஊர்க்கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் போல! :)
நீக்குஒரு தரம் ரமணன் குழுவினரின் கச்சேரி. உமா ரமணனின் குரல் அப்பப்பா! இப்போதும் காதில் ரீங்காரமிடும் குரல்.
நீக்குஉமா ரமணன் குரலுக்கு சொல்லவா வேண்டும்! சுவாரஸ்யமான விவரங்கள்.
நீக்குKnock Knock.. ரசித்தேன், புன்னகைக்க வைத்தது சூப்பர்வைசர் புன்னகையை ரத்து செய்த போதிலும்.
பதிலளிநீக்குபாடல்களைக் கேட்டிருக்கிறேன் ஆயினும் புதிய வார்ப்புகள் நானும் பார்த்ததில்லை. 'வான் மேகங்களே..’ ஜானகி அம்மாவுக்கு அஞ்சலிகள்.
தொகுப்பு அருமை.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு