23.7.26

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே...

மூன்று நாட்கள்தானே ஊசி..  அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று ஆர்வமுடன் இருந்தேன்.

​டாக்டர் சோமு மூன்று நாளும் வந்து பார்த்துச் சென்றார்.  மூன்றாம் நாள் மாலைதான் வந்தார்.  "நாளை ரிசல்ட் பார்ப்போம்.  சளி குறைந்திருக்கிறதா என்று பார்ப்போம்.  குறைந்திருந்தால் ஓகே.  இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று பார்க்கலாம்" என்று சொல்லிச் சென்றார்.

அடுத்து என்ன செய்வது என்றால் மருந்து மாற்றுவார் என்றுதான் அப்பாவியாய் எண்ணி இருந்தேன்.  மறுநாள் நான்கு உதவி மருத்துவர்கள் புடைசூழ வந்தவர், நான் சென்றவாரம் வெளியிட்ட அந்த ரிசல்ட்டை கையில் பிடித்து ஆராய்ந்துவிட்டு "அங்கங்கே அப்படியே இருக்கிறது.  மருந்துக்கு கட்டுப்படவில்லை.  ஸோ ஒரு ஸர்ஜரி பண்ணிடலாம்" என்றார்.

மகன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

"என்ன டாக்டர்?  ஸர்ஜரியா?"  உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது.

"ஆமாம்.  ஆனால் செய்து கொள்வதும் செய்யாமல் விடுவதும் உங்கள் விருப்பம்" என்றார்.

ஆப்ஷனலா..  என்னடா எனக்கு வந்த சோதனை..  

மகன் கேட்டான் "ஏன் டாக்டர்..  ஸர்ஜரி செய்தால் சளியெல்லாம் போயிடுமா?  திரும்ப வராதா?"

ஏனோ கேள்விகளே டாக்டர்களுக்கு பிடிப்பதில்லை.  அதிலும் இவர் "நான் சொல்வதை மட்டும் நீ கேள்..  உன் கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன" டைப்பாக இருந்தார்.

​"See Lam not God!  மனித உடம்பில் எதுவும் அப்படியே சரி செய்துவிட முடியும் என்றெல்லாம் இல்லை.  இப்போ உள்ளே சுவர் முழுக்க சளி நீக்க முடியாத அளவுக்கு கெட்டியாய் இருக்கிறது.  அதை எடுத்து விடுவோம்.  அவ்வளவுதான்..."

"மறுபடியும் சளி வராது இல்லே டாக்டர்?" மகனின் ஆர்வம் அவர் பொறுமையை சோதித்தது.

"See மறுபடியும் சொல்றேன் I am not God.  வீட்டை சுத்தம் செய்யறோம்.  மறுபடி அழுக்கு படியாமல் இருக்குமா?  அது மாதிரிதான்.  இப்போ இருக்கற அழுக்கை எடுக்கறோம்..  அதற்கப்புறம் உங்கள் ஜாக்கிரதைதான் உங்கள் உடல் நலன்"

​"அப்போ சர்ஜரியால என்ன லாபம் டாக்டர்?" - மகன்.

டாக்டர் சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.  பின் சொன்னார்..  "See..  ஸர்ஜரி செய்து கொள்வது முழுக்க முழுக்க ஆப்ஷனல்.  வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க?  போவதற்கு திரும்பினார்.

"ஸர்ஜரி பண்ணாம இருந்தா என்ன ஆகும் டாக்டர்..   கோச்சுக்காதீங்க..   விவரம் தெரிஞ்சுக்கறதுக்குதான் கேட்கறோம்" என்றேன் நான்.

"மறுபடி கொஞ்ச நாட்கள் கழித்து இதே பிரச்னைகள் வரும்.  மறுபடி ட்ரீட்மெண்ட்டுக்கு வரவேண்டும்" என்றார்.

எனது மனதில் எழுந்த கேள்வியை அவரே படித்திருக்க வேண்டும்...  தொடர்ந்து " சர்ஜரி செய்து கொண்டார் வரவே வராது என்று சொல்லவில்லை.  நீங்கள் போதுமான ஜாக்கிரதையுடன் இருந்தால் தாக்கு பிடிக்கலாம்.  இல்லாவிட்டால் மறுபடி சேரும்.  ஆனால் இப்போது கெட்டியாக ஒட்டிக்கொண்டு தடுப்பது பலவருடங்களாய் நீங்கள் சேர்த்து வைத்தது" என்றார்.

சில வினாடிகள் யோசித்துவிட்டு நான் "சரி.  ஸர்ஜரிக்கு தயார்" என்றேன்.  மகன் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.   என் இயல்புக்கு அவன் என்னிடமிருந்து முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை என்று பின்னர் சொன்னான்.

கூடவே "FESS தானே?" என்றேன்.  பார்த்து வைத்திருந்தேன்.  "ஆமாம்" என்றார் அவர்.

"உங்களை டயபடிக் டாக்டர் வந்து பார்ப்பார்.  வேறு சில சோதனைகளும் செய்ய வேண்டும்.  அநேகமாக நாளை அல்லது புதன் கிழமை ஸர்ஜரி" என்று அறிவித்தார் டாக்டர்.

பாஸ் "டாக்டர்....    நாங்கள் நாள் பார்த்து சொல்லலாமா" என்று ஆரம்பித்ததை நான் இடைவெட்டி "நான் இன்றே தயார்" என்றேன் வீரத்துடன்.

பாஸ் அஷ்டமி, நவமி, மேற்கே வடக்கே சூலம், ஹோரை, நட்சத்திரம் என்று எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார்.

"முன் சோதனைகள் செய்யாமல் இன்றே எல்லாம் ஸர்ஜரி செய்ய முடியாது.  தியேட்டர் கிடைக்க வேண்டும்.  நான் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் டாக்டர்.  பாஸ் என்னை முறைத்தார்.

முதல் நாள் முதலே நடந்த இந்த ட்ரீட்மெண்ட் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்..................

=========================================================================================

எவ்வளவு எளிதாக இவருக்கு மூக்குப் பிரச்னை தீர்கிறது!
  


======================================================================================================= 

OTT யில் பார்த்த படம்.  -  NetFlix  - மூலம் ஹிந்தி - தமிழில் வசனம் கிடைக்கிறது.

இக்கா என்றால் துருப்புசீட்டு (Ace) என்று அர்த்தமாம்.  கோர்ட் குறுக்கு விசாரணைக்கு காட்சிகள் எனக்குப் பிடிக்கும் என்பதால் பானு அக்கா சிபாரிசு செய்தார்.

ஏழை எளிய அப்பாவி மக்களுக்காக, அவர்கள் குறைகளுக்காக நேர்மையாக வாதாடி வெற்றி பெற்று சிங்கம் போல வெற்றிகரமான சீனியர் வக்கீலாக திகழ்பவர் அர்ஜுன் மெஹ்ரா (சன்னி தியோல்).  அவர் நேர்மைக்கு அவர் மகளின் கேன்சர் மூலம் சோதனை வருகிறது.  மகளின் உயிரா, கொள்கையா என்பதில் அர்ஜுன் முதலாவதை டிக் செய்கிறார்.  செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்த ஒரு அரசியல்வாதியின் மகன் - ஒரு கொடூரனுக்காக வாதாடி விடுதலை வாங்கித் தருகிறார்.

அர்ஜுனின் ஸ்பெஷல் கடைசி நொடியில் ஏதாவது ஒரு துருப்புச் சீட்டை எடுத்து வந்து வெற்றி பெற்று விடுவார் என்பதாம்.  அதைத் தெரிந்தும், அவரே அதை சொல்லிக் காட்டியும், அர்ஜுனோடு ஒப்பிடும்போது ரொம்ப ஜூனியரான அரசு வழக்கறிஞர் மதுரா அவரிடம் ஏமாறுகிறார்.  ரசிக்கும்படியான ட்விஸ்ட்.

வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு சேர்த்த  நல்ல பெயர் நொடியில், ஒரு செயலில் கெட்டு விடும் என்று கொலையான பெண்ணின் தாய்  எச்சரிக்கிறார். அப்படியே ஆகிறது.  அர்ஜுன் என்ன செய்தார் என்பது கதை.  நான் ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.

டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைக் காட்சிகள் கிடையாது.  வன்முறைக் காட்சிகள் கிடையாது.  "ஏய்...." என்று நரம்பு புடைக்கக் கத்தும் காட்சிகள் கிடையாது.

வினோத்கன்னா மகன் அக்ஷய்கன்னா வில்லனாக மிரட்டி இருக்கிறார்.  அவர் உடல்மொழி, மிரட்டும் பார்வை நன்றாக இருக்கிறது.

============================================================================================

1974 ல் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஹிந்திப் படம் அமானுஷ். ஷாமல் மிஷ்ரா இசையில் கிஷோர் குமார் குரல்..  ஹிந்தி தெரிந்தால் பாடலின் தத்துவ வரிகளை ரசிக்கலாம்."கடல் இவ்வளவு அருகில் இருக்கிறது இருந்தும் என் மனம் தாகத்தில் தவிக்கிறது" போல..


=========================================================================================




தி.ஜானகிராமன் பற்றி சுஜாதா :

ஜானகிராமனுடைய சிறுகதைகள் நான் என் பதினேழாம் வயதில் முதலில் படித்தேன். கல்கி, தேவன் போன்றவர்கள் எழுத்தால் மிகவும் வசீகரிக்கப் பட்டிருந்த எனக்கு ஜானகிராமனை முதலில் படித்த போது உடனே இது வேறு தினுசு என்று தோன்றி விட்டது. அப்போது அவர் கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். சில தீபாவளி மலர்களிலும் அவர் கதைகள் வரும். ஜானகிராமன் கதை இருந்தால் மட்டும் தீபாவளி மலர் வாங்குவேன் 'ணம்', 'சிலிர்ப்பு'

'கொட்டு மேளம்', 'சிவப்பு ரிக்ஷா' 'பரதேசி வந்தான்', 'தவம்', 'கடன் தீர்ந்தது' போன்ற கதைகள் இன்றைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. மற்றவர்கள் எழுத்தை மறந்து அவரையே தேடத் தூண்டியது அவரது சிறு கதைகள். அவருடைய முதல் நாவலை-அமிர்தம் தேடிப் படித்தேன். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நான் எலெக்ட்ரானிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது நாவலான 'மோகமுள்' சுதேசமித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது. சுமார் ஒரு வருஷம் வந்திருக்கும் என ஞாபகம். ஒவ்வொரு வாரமும் பாபுவும், யமுனாவும் என்னை ஆக்ரமித்தார்கள். பக்கத்து வீட்டுப் பெண் சூட்டியிருந்த மல்லிகை மணம் இன்னும் என்னிடம் வீசுகிறது. அவள் தற்கொலை பண்ணிக் கொண்டு இறந்தது இப்பவும் எனக்கு ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கிறது. மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன் பின் தமிழில் படிக்கவில்லை!

இருந்தும் ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதை களால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்பு களில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லி விடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.

"வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டுவண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது. என ஒரு வாக்கியத்தில் கதையின் மூடை ஏற்படுத்தி விடுவார் மெலிதான நகைச்சுவை எப்போதும் அவர் கதைகளில் இருக்கும்.

பழைய பேப்பர்காரன் தராசு, தெய்விகக் கொல்லன் கைவேலை, ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும். ஆறு மாச தினசரிக் காகிதம் எந்த மூலை? கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."

உரையாடலிலும் அவர் ஒரு உண்மையான கலைஞர்.

''சாமி, இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல் றீங்களே! எழுதின கார்டுக்கும் எளுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க.எதுக்குப் பொல்லாப்பு."

அவர் சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்த அந்த அம்பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்கள் ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறார். இன்று எழுதுபவர்கள் பலரின் நடையிலும் கருத்தமைப்பிலும் அவர் வெளிப்படை யாகவோ பொதிந்தோ இருக்கிறார். ஜானகிராமன் டில்லிக்குப் போனாலும் ஜப்பானில் சுற்றினாலும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் தஞ்சாவூர்க்காரரின் காவிரிநதி ஏக்கமும் குறும்பும் அவரை விட்டுப் போக வில்லை. சில அபாரமான பயணக்கட்டுரைகளை அவர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியுமோ இல்லையோ (உதய சூரியன்).

ஜானகிராமனை என் இளமைக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் முதன் முறை சந்தித்தேன். அதாவது அவரைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன், ஒருமுறை என் பக்கம் திரும்பி அவர் புன்னகைத்தபோது

அதை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டு திருப்தியுடன் திரும்பினேன்.

அப்புறம் டில்லியில் அவரை ஆகாஷ்வாணி பவனில், அவருடைய கர்ஸான்ரோடு பலமாடி வீட்டில், கணையாழி இலக்கியக் கூட்டங்களில் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன், பேச்சில் முதன்மையாக நகைச்சுவை இருக்கும், மற்ற பேர் எழுத்தைப்பற்றி குறை சொல்லவே மாட்டார். பதிலாக சற்று மிகையாகவே புகழ்வார்: கர்னாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சில வேளை சன்னமான குரலில் பாடிக்காட்டுவார். தஞ்சாவூர் திட்டுவார்த்தைகளை அவர் உபயோகிக்கும்போது அவைகளின் மதிப்பு உயரும்.

ஜானகிராமன் கதைகளில் சோரம்-அடல்ட்டரி-அதிகம் என்று ஒரு சமீப காலத்து குற்றச்சாட்டு உண்டு. அவர் சிறுகதைகளை முழுமையாகப் படித்தவர்கள் அவர் மற்ற எவ்வளவோ விஷயங்களைத் தொட்டிருக்கிறார் என்பதை சுலபமாக உணர முடியும். அவர் எழுத்தைப் பொதுப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல. ஏழ்மையில் உள்ள கவிதை கலந்த அவலங்களைப் பற்றி அவர் எழுதினார். நம்பிக்கைத் துரோகம் பற்றி, வயசாவதில் அழிவில் உள்ள சோகம் பற்றி, சங்கீதம் போன்ற கலையம் சங்களை உபாசிக்க வேண்டியது பற்றி.

இளம் வயதில் நீங்கள் சில கதைகளை ஒஹோ என்று ரசித்துப் படித்திருப்பீர்கள். அதையே கொஞ்சம் வருஷம் கழித்து திருப்பிப் படித்தால் 'சட் இதைப் போயா அப்படிப் புகழ்ந்தோம்' என்று தோன்றும். ஜானகி ராமனின் கதையை முப்பது வருஷம் கழித்துப் படித்த போது கூட அந்தச் சிலிர்ப்பு எனக்கு மறுபடி ஏற்படுகிறது. அவர் இறந்துவிட்டாரா என்ன!

===========================================================================================

முடிவதற்குள் ஒரு முத்தம்.


எப்ப வரும்னு தெரியாது 
பிரேக் அப்.  
வா 
அதற்குள் ஒரு 
முத்தமாவது இட்டுவிடுகிறேன்!

காதலிக்கும் காலம்.


கோபத்தை மறைக்க வேண்டும்.  
அதிருப்தியை அடக்கவேண்டும். 
நாற்றங்களை மறைக்க 
வாசனைகளைத் தெளிக்க வேண்டும்.
கொஞ்சகாலம்தான்.   
ஆயிடும் கல்யாணம்.   
அப்புறம் காமிக்கலாம் 
அதெல்லாத்தையும் மொத்தமா 

ஆபத்தில்லே....

===========================================================================


சிவாஜி - தலாய்லாமா 

திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்திக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். அல்லது அவர் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் அதே தலாய்லாமா, சிவாஜியை சந்திக்க விரும்பி படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்த நிகழ்வு ஒன்று உண்டு.

1957ம் ஆண்டு தலாய்லாமா ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று விட்டு கடைசியாக அப்போதைய முதல்வர் காமராஜரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் "நான் சிவாஜியை நேரில் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா" என்று கேட்கிறார். அப்போது சிவாஜி "உத்தம புத்திரன்" படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே காமராஜர் சிவாஜியை உடனே அழைத்து வரச் சொல்கிறார். அதற்கு தலாய்லாமா. "அப்படி செய்யக்கூடாது. நான்தான் அவரை சென்று பார்க்க வேண்டும், அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.

"உத்தம புத்திரன்" படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை சந்தித்து பேசினார் தலாய்லாமா. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வெறும் செய்தியாகவே கடந்து சென்று விட்டது.

தினமலரிலிருந்து....

========================================================================================
1974 ல் வெளிவந்த அமானுஷ் படத்தை தமிழில் 1978 ல் தியாகம் என்று எடுத்தார்கள்.  அதில் அதே காட்சி..  அந்தப் பாடல் 

காட்சியைத் தவிர ஏதாவது சாயல் தெரிகிறதா?

===================================================================================

சேர்த்து வைத்திருக்கும் ஜோக்ஸை காலி செய்யப்போகிறேன்...  வந்தது எது, வராதது எது என்று சொல்லுங்கள்.  வந்ததை மறுபடியும் படியுங்கள்.  வராததை புதிதாக படியுங்கள்.

!!!!!!!!!!!!!!!!!!!!










147 கருத்துகள்:

  1. அமானுஷ் -- தியாகம். இரண்டு படப்பாடல் காட்சிகளையும் ஒரே நேரத்தில் தட்டி கேட்டேன். புது அனுபவம் வேடிக்கையாய் இருந்தது.
    உங்களில் யாராவது இதே மாதிரி மொபைலில் செய்து பார்த்து நீங்கள் ரசித்ததைச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்.. நான் முன்னர் செய்ததுண்டு. குழப்பும்! இரண்டும் ஒழுங்காக கேட்க முடியாது!

      நீக்கு
  2. அந்த ஜோக்ஸ் முதல் படத்தில், கல்யாண வாத்தியாரா அவர்?..
    கருப்பு -- சிவப்பில் கரை போட்ட வேட்டி வேறே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியார் வீட்டு கல்யாணத்தில் வாத்தியார்!

      நீக்கு
    2. // கருப்பு -- சிவப்பில் கரை போட்ட வேட்டி வேறே! //

      நுண்ணிய அவதானிப்பு!

      நீக்கு
  3. இரண்டாவது ஜோக் : கொடுமை!

    பதிலளிநீக்கு
  4. மூன்றாவது ஜோக்: சும்மா குரைக்.. சீக்கிரம் சாப்பிடுங்க, மாமா' என்று சிறுவன் சொல்வதில் சேர்த்துக்கொண்ருந்தால்? இதுக்குத் தான் இன்னொரு வீட்டுக்குப் போனால் அவர்கள் புழங்கும் தட்டில் சாப்பிடக்கூடாது என்பது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு பேசாமல் வாழை இலை, அல்லது பாக்கு மட்டை தட்டு என்று வாங்கி வைத்திருக்கலாம்!

      நீக்கு
    2. இல்லேனா, நாய்க்கு வாழை இலைன்னு பழக்கப்படுத்திடலாம்! என்ன சொல்றீங்க? என்ன இருந்தாலும் அது PET -- இல்லையோ?..

      நீக்கு
    3. நாய்க்கு வாழை இலை வைத்தால் நம்மை வேலை வாங்கி விடும்.  சுத்தப்படுத்துவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம்!

      நீக்கு
    4. ஹூம், இதெல்லாம் ஒரு ஜோக், அதை ரசிக்கணுமா? எனக்கு இப்படியான ஜோக்குகள் பிடிப்பதே இல்லை. :(

      நீக்கு
    5. பத்திரிகையில் வந்தபோது அவற்றையெல்லாம் தானே ரசித்தீர்கள்!!

      நீக்கு
    6. அப்படி எல்லாம் ரசித்தது இல்லை. அதான் என்னோட பலவீனமே! அவ்வளவு சீக்கிரமாய்ச் சிரிப்பாய்ச் சிரிக்க மாட்டேன். அதே நம்ம ரங்க்ஸ், பையர், மாட்டுப்பெண் எல்லோருமே செந்தில்/கவுண்டமணி ஜோக்குக்குக் கூடச் சிரிப்பாங்க. விவேக் ஜோக்குகள் கூட சில/பல சமயங்களில் எனக்கு எரிச்சலை ஊட்டும். :(

      நீக்கு
    7. அதிலும் நாய் சாப்பிடும் தட்டில் விருந்தாளிக்கு உணவு படைப்பது! அதுக்குச் சிரிக்கணுமா என்ன? தரக்குறைவான நகைச்சுவை. :(((( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    10. என்னது..  பொசுக்கு பொசுக்குன்னு அழிச்சுட்டீங்க...   என்ன இருந்தது என்று ஞாபகமில்லையே...

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. மூணும் ஐந்தும் என் கணிப்பில் டாப்!
    அப்போ நாலு?.... தாய்மை பெருமை கொண்டது ஐயா!
    ஆரானும் அந்த யோகே?..
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஹா.. ஹா.. ஹா... என்னென்ன கணக்கீடுகள்! இல்லை?

      நீக்கு
    2. யோகேஷ். கார்ட்டூனிஸ்ட் ஒருத்தர் இருந்தார்.

      நீக்கு
    3. Especially in Kumudam. Once I thought he was Ra.Ki.Rangarajan in another name. Bud do'nt know it is right or wrong.

      நீக்கு
    4. ​ரா கி ர கார்ட்டூன் போடமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

      நீக்கு
    5. பாவம். எத்தனை தான் தூக்கிச் சுமப்பார் அவர்? கடைசியில் ஏதோ அரசாங்க ஆபிஸிலிருந்து ரிடையர் ஆனவர் கணக்கா, கதையாய் கற்பனையாய் எல்லாம் போச்சு! ஹூம்.. எந்தக் காலத்தில் அவர் எழுத ஆரம்பித்தார் என்று நினைத்துப் பார்த்தால் ''அம்மாடி.. அப்போதிலிருந்தா
      என்று இன்றைக்கும் வியப்பாய் இருக்கும்.

      நீக்கு
    6. மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதுகிறார் இல்லை?

      நீக்கு
    7. Ra.ki.RA.???? from manikkodi kalam? mhum!

      நீக்கு
    8. அவர் வை.கோவிந்தன் காலத்திலேயே பத்திரிகையில் எழுத ஆரம்பித்து விட்டார். குமுதத்தில் சேருவதற்கு ஆறு - ஏழு ஆண்டுகளுக்கு முன்பேயே என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட
      1500-க்கு மேற்பட்ட சிறுகதைகள், 5 டஜன் நாவல்கள், மொழிபெயர்ப்பு சாகசங்கள், புனைப்பெயர்களில் எழுதிக்குவித்தது என்று.. நினைத்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது.
      இவரும் கும்பகோணத்துக்காரர் தான் என்பதில் எனக்கு ஸ்பெஷல் ஒட்டுதல் உண்டு.
      ரா.கி.ரங்கராஜனின் அப்பா பெயர் கிருஷ்ணமாச்சாரி. தமையன் பெயர் பார்த்தசாரதி. ரா,கி,ர.-வை நினைத்தாலே அவர் நெற்றியில் பளிச்சென்று துலங்கிய வீபூதி கீற்று தான் முதலில் என் நினைவில் படியும். அதற்குப் பிறகு தான் மற்றதெல்லாம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. //ஏனோ கேள்விகளே டாக்டர்களுக்கு பிடிப்பதில்லை. அதிலும் இவர் "நான் சொல்வதை மட்டும் நீ கேள்.. உன் கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன" டைப்பாக இருந்தார்.//

    மருத்துவரிடம் கேள்வி கேட்டு தானே ஆப்ரேஷனுக்கு ஒத்துக் கொள்ள முடியும் . கேள்விக்கு எரிச்சல் அடைந்தால் எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'எனக்குத் தெரியும், நான் சொல்வதைக் கேள்' என்கிற மனோபாவம் தான். இப்பொழுதும் நிறைய மருத்துவர்களுக்கு கேள்வி கேட்டால் பிடிப்பதில்லை.

      நீக்கு
    2. நாங்க எல்லாக் கேள்விகளையும் கேட்டிருக்கோம். எங்கள் கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கோம். மருத்துவர்கள் கோவிச்சதில்லை. நல்லா யோசிங்கனு சொல்லிட்டுப் போயிடுவாங்க. மற்றபடி பிரச்னை எல்லாம் வந்ததில்லை.

      அதிலும் இங்கே திருச்சியில் இருக்கும் பாதுகா ஸ்பெஷாலிடி மருத்துவர்கள் திரு தேவநாதன், அவர் மகன் சுரேஷ் இருவரும் பொறுமையாக விளக்குவார்கள். மாமாவுக்குக் கதீடர் ஏன் அவசியம் என்பதை தேவநாதன் தெளிவாக எடுத்துச் சொன்னார். இத்தனைக்கும் நான் அவரிடம் இவரையும் பெரியார் மாதிரி கதீடரைப் போட்டுக் கொண்டு கையில் வாளியோடு போகச் சொல்றீங்களா என்று கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருவருமே கோபம் கொள்ளாமல் எடுத்துச் சொன்னார்கள்.

      நீக்கு
    3. ம்ம்ம்..  கொடுத்து வைத்தவர்கள்...  இங்கே ராமச்சந்திரா வந்து பாருங்கள்...  சிலர் அப்படி..  பலர் இப்படி!

      நீக்கு
  9. தலைப்பைப் பார்த்ததும் துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே பாடல் நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
  10. //எவ்வளவு எளிதாக இவருக்கு மூக்குப் பிரச்னை தீர்கிறது!//

    பார்த்தாலே பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைவிட பயங்கரங்களை நான் அனுபவித்தேன்!!

      நீக்கு
  11. எனக்கு என்ன சந்தேகம்னா பாஸ் சூலம்லாம் பார்த்துட்டு ஆப்பரேஷன் டேபிள் வடக்கு பார்த்தமாதிரி இருந்தால் என்ன சொல்லுவார்? தெக்கு பாத்த பெட் ரெடியாரவரைக்கும் எங்க ஆளு இன் பேஷன்டாவே இருக்கட்டும்பாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தானே அவரை சும்மா இருக்கச் சொல்லி அடக்கி விட்டேன்!!

      நீக்கு
    2. எப்படியோ என்னோட அனுபவம் எப்படின்னா எந்தக் காரியமாக இருந்தாலும் அஷ்டமி, நவமி எனக்குச் சரிப்பட்டு வரதில்லை. அதே ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்க்காமல் இருந்தால் கூட ஒண்ணும் நடப்பதில்லை.

      நீக்கு
    3. ம்ம்ம்... உங்களை மாதிரி சிலர் ; பாஸ் மாதிரி சிலர்! நாங்கள் சிறிது கருப்பு கூட இருக்கக் கூடாது என்று பார்த்துப் பார்த்து வாங்குவார்.

      நீக்கு
  12. வழக்கம் போல மருத்துவ வைபவம் கலகலப்பு...

    பதிலளிநீக்கு
  13. தி ஜா பற்றிய சுஜாதா எழுத்து வசீகரம். இரண்டு மூன்று செவ்வாய்க்கு பகிருங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் பகிர்ந்து விட்டேனே! ஆனால் வேறு ஒன்று வைத்திருக்கிறேன் நீண்ட நாட்களாக.... இதோ பகிரலாம் அதோ பகிரலாம் என்று!!

      நீக்கு
  14. இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் ?...
    என்ற கேள்வி மட்டுமே பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைக் கேட்டால் அவர்கள் இன்ஷூரன்ஸ் மற்றும் நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளச் சொல்வார்கள்.

      நீக்கு
  15. தி ஜா ரா அவர்களைப் பற்றி சுஜாதா...
    அருமை..

    பதிலளிநீக்கு
  16. தலாய்லாமா பகுதி சுவாரசியம். இப்போ நடந்தாலும் அப்படியே கடந்து போகும். நிறைய சேனல்ல நிறைய நேரம் வரணும்னா கருணாநிதி குடும்பத்தின் கட்டிலைச் சந்தித்தாலும் போதும். எல்லா சேனல்கள் ஊடகங்களுக்கு அவங்க தானே ஓனர் அல்லது அவங்க அடிமைகள்தானே ஓனர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைக்கு எம் ஜி ஆர் க்கு தான் வெளிச்சம் அதிகம். இவர் செய்வது, இவருக்கு நடப்பது எல்லாம் வெளியில் வராது.

      நீக்கு
  17. உங்களை நம்பி இக்கா பார்க்கிறேன். டப்பிங் வாய்ஸ்கள் பயமுறுத்தாது இல்லையா? அதுக்கு மாத்திரம் கேரண்டி கொடுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டப்பிங் வாய்ஸ் பொருத்தமாகவே இருக்கு. சொல்லப்போனால் அர்ஜுனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது யார் என்று தேட வேண்டும் என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. //அர்ஜுனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது யார் ..// அர்விந்த் சுவாமியோ என்று தோன்றியது.

      நீக்கு
    3. கீதா ரங்கன் பாஷையில் "எக்ஸா...க்ட்லி". எனக்கும் அதே தான் தோன்றியது.

      நீக்கு
  18. படவிமர்சனம் நன்று.

    அமானுஷ் பட பாடல் காட்சியை பார்த்ததும் தியாகம் பட பாடல் மாதிரி இருக்கே என்று நினைத்தேன், அப்புறம் உங்கள் பதிவின் தலைப்பு நினைவுக்கு வந்தது. கீழே தியாகம் பட பாடலும் கொடுத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா. கொஞ்சம் உற்று கவனித்தால் அந்தப் பாடலின் சாயலிலேயே இந்தப் பாடலும் அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.

      நீக்கு
    2. அதே கதைதானே ! அதனால் தான் அதே சாயல்.

      நீக்கு
    3. படங்களிலும் காட்சிகளிலும் இருக்கலாம். இசையில் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். நாளை நமதே பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
  19. ஒரு சிலரைத் தவிர பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அன்றைய அல்லது அந்த மாதத்தின் எக்ஸ்ரே சிடி ஸ்கேன் என்று எல்லாம் முடிந்திருக்கணுமே ஆண்டவான்னு பிரார்த்திக்கணும். இல்லைனா மூட்டு வலிக்கும் தலைக்கு சிடி ஸ்கேன் எடுக்கச் சொன்னால் ஆச்சர்யம் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் வாங்கி வைத்திருக்கும் அந்த உபகரணங்களை எல்லாம் என்னதான் செய்வது? அந்த செலவுகளை எப்படி தான் ஈடு கட்டுவது??!!

      நீக்கு
  20. தி.ஜானகிராமன் பற்றி சுஜாதா பகிர்வு, உங்கள் கவிதை, சிவாஜி பகிர்வு , நகைச்சுவைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. மூன்றாவது ஜோக் ரசனைக் குறைவான ஜோக். விகடன் ஃபேமிலில அப்படித்தான் வழக்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியலையே நெல்லை... எனக்கு தெரியலை

      நீக்கு
    2. @Nellai, yesso yessu. I got irritated. :(

      நீக்கு
    3. அப்போ விகடனுக்கு லெட்டர் எழுதினீங்களா?!

      நீக்கு
    4. அது விகடனில் வந்ததா என்ன? இல்லைனு நினைக்கிறேன். மறுபடி மேலே போய்ப் பார்க்கணும்.

      நீக்கு
    5. அட? ஆமாம், ஆனந்த விகடன் அட்டைப்படம். :(

      நீக்கு
  22. இன்னைக்கென்ன இரண்டு கவிதைகளும் எனக்குப் பிடிக்கவில்லை? சப்ஜெக்ட் சரியில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நீங்கள் ஆன்மீக மனிதர். அதனால் பிடிக்கவில்லை. இந்த மாதிரி அல்ப சமாச்சாரங்களில் எல்லாம் மனதை செலுத்த மாட்டீர்கள்.

      நீக்கு
  23. சாமி இந்தத் தராசைப் பார்த்துவிட்டு....... என்ன மாதிரியான சூப்பர் வசனம். கற்பனை செய்யமுடியாது இப்படீல்லாம் இயல்பா வசனம் எழுத முடியும்னு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன, எதைப் பற்றி கமெண்ட் என்று புரிந்து கொள்ள நான் மறுபடியும் பதிவு பக்கம் சென்று பார்க்க வேண்டும்!

      நீக்கு
    2. //பழைய பேப்பர்காரன் தராசு, தெய்விகக் கொல்லன் கைவேலை, ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும். ஆறு மாச தினசரிக் காகிதம் எந்த மூலை? கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."

      உரையாடலிலும் அவர் ஒரு உண்மையான கலைஞர்.

      ''சாமி, இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல் றீங்களே! எழுதின கார்டுக்கும் எளுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க.எதுக்குப் பொல்லாப்பு."//
      தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரையில். இதைத் தான் நெல்லை சொல்லி இருக்கார். :)

      நீக்கு
    3. ஆமாம்.  நீங்கள் ஞாபகப்படுத்தியதும் புரிகிறது!

      நீக்கு
  24. அங்க தொட்டு, இங்க தொட்டு ஆபரேஷனில் முடித்து விட்டாரா? என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவல் மீறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறேன்... வருகிறேன்.. ஒண்ணொண்ணா வருகிறேன்!

      நீக்கு
    2. நீங்களோ மருத்துவம் சம்பந்தப்பட்ட இலாகாவில் பணியாற்றியவர்.
      நீங்களே இப்படி ஒண்ணும் தெரியாதவர் மாதிரி எழுதுவது ஆச்சரியமாக இருக்கிறது.

      நீக்கு
  25. மூக்கடைப்பை நீக்க இப்படி ஒரு பயங்கர ட்ரீட்மெண்டா? எந்த ஊர்? என்ன விதமான சிகிச்சை? ஹைதராபாத்திலோ எங்கேயோ ஆஸ்துமாவை குணமாக்க வாய்க்குள் உயிரோடு மீனைப் போடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இதுவும் அப்படிப்பட்ட சிகிச்சை மாதிரி இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த மீன் வைத்தியம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்

      நீக்கு
  26. அமானுஷ் கதாநாயகன் கொஞ்சம் இயல்பாக வாயசைக்க, நம்மாள் வழக்கம்போல் சற்று மிகையாக தோளை குலுக்கி இருக்கிறார். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் பார்த்ததில்லை. லட்சுமியிடம் கொஞ்சம் ஜெயப்ரதா சாயல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ போங்க.. இப்படி ஏதாவது சொல்லாட்டி மனசு ஆறுவதில்லை போல..

      நீக்கு
  27. ஜோக்குகள் இதுவரை வந்ததில்லை. தி.ஜானகிராமனைப் பற்றி சுஜாதா எழுதியிருப்பதை நிறைய முறை படித்தாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி ஜா - சுஜாதா ஏற்கனவே குரூப்பிலும் ,பேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன். அதனால் படித்து இருப்பீர்கள். அது சரி, அங்கே எல்லாம் அதை ஒருமுறை படித்தால் போதாதோ?? ஏன் பலமுறை படித்தீர்கள்?!

      நீக்கு
    2. தி.ஜா.- சுஜாதா சுஜாதா இதை எழுதிய காலத்திலேயே படித்திருக்கிறேன், தவிர நீங்கள் மட்டுமா பகிர்ந்தீர்கள்?

      நீக்கு
    3. உண்மையில் இணையத்தில் இதை வேறு யாரும் பகிர்ந்து அட்லீஸ்ட் என் கண்ணில் படவில்லை!

      நீக்கு
  28. 'இக்கா' படம் பார்க்கச் சொன்னோமே, ஸ்ரீராம் பார்த்தாரா இல்லையா என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  29. நாய் கண்காட்சி பற்றி ஜோக்குகள் படித்திருக்கிறோம். நாய் கண்காட்சி பார்த்தவர்கள் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததில்லை. என் தங்கை, அவள் பெண்ணுடன் இரண்டு மூன்று முறை சென்று இருக்கிறாள்.

      நீக்கு
  30. காதலிக்கும் காலம் கவிதை தற்காலத்தில் செல்லுபடி ஆகாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலுக்கு வயது உண்டா என்ன? ஐம்பதிலும் ஆசை வரும்.

      நீக்கு
    2. நான் உங்களைச் சொல்லவில்லை, தற்காலத்தில் கணவன் தினசரி குளிப்பதில்லை என்று விவாகரத்து கோரும் மனைவிகள். எனவே நாற்றத்தையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

      நீக்கு
    3. கொஞ்சம் இருங்கள்... நானும் கவிதையில் மறைமுகமாக அதை தானே சொல்லி இருக்கிறேன்...

      நீக்கு
    4. ஆசையுடன் (பாஸிடமிருந்து) பூசை வரும்!

      நீக்கு
    5. சட்னியுடன் தோசை வரும்...

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    ஒரு வாரமாகவே உடல்நிலை சரியில்லை. (டாக்டரிடம் செல்லும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வருகிறேன்.) நேற்றெல்லாம் ரொம்ப முடியாமல் படுத்தே இருந்தேன். இன்று காலை உங்கள் சளிக்கான மருத்துவமனை பரிசோதனைகள், அதில் நீங்கள் பட்ட சிரமங்கள், இன்று இறுதியாக சளிக்காக சர்ஜரி என்று படித்தவுடன் அதிர்ச்சியில் மயங்கி (மீண்டும் தூக்கம் வந்து) படுத்து விட்டேன். இப்போதுதான் மீண்டும் எழுந்துள்ளேன் . சளிக்காக ஒரு சர்ஜரியா? நீங்கள் எப்படி சம்மதித்திர்கள்.? (அதுவும் உடனடியாக) நீங்கள் தைரியசாலிதான். என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்புறம் அதற்கு சர்ஜரி நடந்ததா?

    /நான் சொல்வதைக் கேள்' என்கிற மனோபாவம் தான். இப்பொழுதும் நிறைய மருத்துவர்களுக்கு கேள்வி கேட்டால் பிடிப்பதில்லை/

    இதுதான் எனக்கும் டாக்டர்களிடம் செல்லவே பயமுறுத்துகிறது. நிறைய உபாதைகளை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே, உற்சாகமாக இருப்பது போல் நடித்துக் கொண்டே உலாவி வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் கமலா அக்கா. அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஏன் ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளக் கூடாது? பாராட்டுகளுக்கு நன்றி. ஆமாம்... சர்ஜரி கையோடு செய்து விடுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. அதற்கு அவர் சொன்ன காரணங்களும் காரணம்.

      நீக்கு
    2. உடன் பதிலுக்கு நன்றி. எனக்கு குழந்தைகள் வறுப்புறுத்தலினால் முதன் முதலில் சுகர், இரத்த அழுத்தம் அதிகம் என்று நான்ககைந்து ஆண்டுகளுக்கு முன்பே பரிசோதனையில் தெரிந்தும் பரிசோதனை முடிந்த கையோடு தந்த மருந்துகளின் ஒவ்வாமையால், அதன் பின் மருந்துகள் இல்லாமலே, , அதுவும் அதன் பிறகு மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்லாமலேயே காலத்தை கடவுள் மீது பாரமாக போட்டு விட்டு வாழ்ந்து வருகிறேன். இதில் முழு உடல் செக்கப்பிற்கு நான் எங்கே செல்வது.? பார்க்கலாம்..! . எது வந்தாலும் விதி வழியே சென்று விட வேண்டியதுதான்.என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

      நீக்கு
    3. ரத்த அழுத்ததிர்கு தரும் மருந்துகள் நமக்கு செட்டாக சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட பிடிக்கும். என் சகோதரிகள் அனுபவித்தார்கள். ஒவ்வொரு மருந்தும், ஒவ்வொரு ரியாக்ஷன் தரும். டாக்டரை கன்சல்ட் செய்து, மருந்தை மாற்றி மாற்றி சரி செய்து கொண்டார்கள். தயவு செய்து மருத்துவரை சென்று பார்க்கவும்.

      நீக்கு
    4. மருந்து ஒவ்வாமை என்றால் வேறு மருந்துகள் கொடுப்பார்கள் அல்லது வேறு என்ன வழி என்று பார்க்க வேண்டும் எதுவும் எடுக்காமல் இருப்பது சரி என்று தோன்றவில்லை

      நீக்கு
    5. சரியான மருத்துவரிடம் செல்லுங்கள் கமலா ஹரிஹரன். மாத்திரைகளுக்குப் பயந்து கொண்டு உடல்நிலையில் கோட்டை விட்டு விடாதீர்கள். அதிலும் சர்க்கரை கொல்லும் நோய். அதிகம் ஆனாலும் பிரச்னை. குறைஞ்சாலும் பிரச்னை. நான் ரத்த அழுத்தத்துக்கு சுமார் 20 வருடமாக மாத்திரை எடுத்துக்கறேன். முதலில் லோசாகைன்ட் என்னும் மாத்திரை சாப்பிடும்போது ஒத்துக்கொள்ளாமல் இருமல் தொடர்ச்சியாக வரப் பின்னர் இரண்டு மாத்திரைகள் மாத்திப் பார்த்துட்டு இப்போப் பத்து வருஷங்களுக்கும் மேலாக டெல்மிகைன்ட் - 40 எடுத்துக்கறேன். இது ஒத்துக்கொண்டு விட்டதோடு தோஹாவிலும் கிடைக்கிறது.

      நீக்கு
    6. BPக்கு மருந்து செட் ஆவது ஒரு பிராசஸ். நான் எடுத்துக்கொள்ளும் மருந்து கேஸ்ட்ரிக் டிரபிள் தரும் அதற்கு வாரம் வேறு ஒரு டாப்ளட். எதுவுமே கவனிக்காமல் நமக்குரிய நேரம் வரும்போது சட்னு போனால் பிரச்சனையில்லை. அல்லது நமக்கு இந்தமாதிரி பிரச்சனை 85 வயதில் வந்தால் டாக்டரே ஒண்ணும் மருந்து வேண்டாம் எனச் சொல்லிடுவார். நமக்கு நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. மறந்தும் பெரிய மருத்துவமனை மற்றும் மருந்துகள் ஏஜென்ட் மருத்துவர் பக்கம் தலைவைக்கக்கூடாது

      நீக்கு
    7. BP மருந்து செட் ஆவது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை.  சாப்பிட்டுதானே ஆக்வஸ்ண்டும்?  என்வாஸ் மாத்திரை வகையாக இருந்தால் பக்க விளைவு இருமல்...  அமலோடிப்பின் வகையாக இருந்தால் மலச்சிக்கல் பக்க விளைவு.  அதற்குத் தகுந்தவாறு பார்த்து அதனுடன் மருந்து எழுதி விடுவார்கள்.  

      நீக்கு
    8. வணக்கம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும்.

      உங்களின் அன்பான அக்கறையான பேச்சுக்கள் எனக்கு இதமாக உள்ளன. இரத்த அழுத்தத்திற்கு நீங்கள் அனைவரும் சொன்ன மருந்துகளில் எதை நான் உபயோகபடுத்தினேன் என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், ஒரு மாத காலத்திற்கு அதை எடுத்துக் கொண்டதும் நீங்கள் கூடியபடி வாயு தொந்தரவு, அதனால் வயிற்றில் பிரச்சனைகள், மலச்சிக்கல் என பலதும் வந்து தொந்தரவு தந்தது. அதனால் அந்த மருந்தை நிறுத்தி விட்டேன்.

      நான் பொதுவாக பக்க விளைவுகள் இல்லாத ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்வேன் (இப்போதும்) ஆனாலும், நீங்கள் அனைவரும் கூறியபடி ஒரு நல்ல மருத்துவரை சென்று பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டுள்ளேன். வீட்டிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு ஆஸ்பத்திரி என்றால் போக முடியாமல் போவதற்கு காரணம் 99% பயந்தான். என் மீது அன்புடன் நீங்கள் அனைவரும் தந்த கருத்துரைகள் எனக்கு இப்போது பலமாக உள்ளது. செல்ல வேண்டுமென தோன்றுகிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதர சகோதரிகளே. 🙏

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. ஆயுர்வேதத்தில் பக்க விளைவு இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள்.  நான் அதை உபயோகித்ததால்தான் அதில் இருந்த LED சமாச்சாரத்தால் என் பற்கள் பாதிக்கபப்ட்டன.

      நீக்கு
    10. ஆய்ர்வேத மருந்துகளை நான் 2000 ஆம் வருஷத்துக்கும் முன்னாலிருந்து பயன்படுத்தி வந்தேன். எந்தவிதமான தொல்லைகளும் இருந்ததில்லை. இப்போவும் அவற்றையே வாங்கிச் சாப்பிட்டு வந்தேன். மாமா பிரிந்த பின்னர் பையர், பெண் இருவருமாகச் சேர்ந்து ஆங்கில மருத்துவரிடம் கூட்டிப் போய் முழு உடல்நிலை செக் அப் செய்து பின் அந்த மருத்துவரிடமே இப்போதும் போகிறேன். தோஹாவிலும் ஆங்கில மருத்துவம் தான். மாறி கிட்டத்தட்ட 2 வருஷங்கள் ஆகப் போகிறது.

      நீக்கு
    11. எனக்கு மட்டும் ஏன் அந்தச் சோதனை!

      நீக்கு
  32. முதல்லே ஜோக்குகளை வடிகட்டிடறேனே! :) இந்த 66 ஆம் வருஷத்து முதல் ஜோக் (நான் 66 ஏப்ரலில் தான் எஸ்.எஸ்.எல்.சி. எழுதினேன். அதுக்காக வயசெல்லாம் ஆயிடுத்துனு நினைக்காதீங்க. சின்னப் பெண்ணாக்கும் நான். பலரும் நம்பினதில்லை.) 66 டிசம்பரில் வந்திருக்கு. வாத்தியார் அட்டென்டென்ஸ் எடுக்கிறார் என்பது வரை புரிஞ்சாலும் கீழே உள்ள வரியை முற்றிலும் மறைத்திருக்கு. படிக்க முடியலை. :( எனக்கு மட்டும் என்பீர்கள். என்னத்தைச் சொல்லுவது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

    கார் ஆர்டர் எல்லாம் அரதப் பழசு. பலமுறை படிச்சாச்சு.
    அடுத்தது ஜெயராஜால் வரையப்பட்டது. அந்தத் தரம் தான் ஜோக்கிலேயும் இருக்கும். :(
    அடுத்ததும் சில/பல முறை எ.பி.யிலேயே பார்த்துப் படிச்சது. :(

    நாஅய்க் கண்காட்சி (தாய்க்கண்காட்சி) படிச்சாச்சு எல்லாமும். ஆனால் எங்க மோதிக்கு நிஜமாவே வாயில் போட ஒரு கடிவாளம் போல வைச்சிருந்தோம். டாக்டர் வரச்சே அவர் வரப்போறேன்னு ஃபோன் பண்ணினதும் அதைப் போட்டு விட்டுடுவோம். மோதியும் எப்படியோ மோப்பம் பிடிச்சுடும். :)))

    மூக்குக் கண்ணாட்டிப் பாட்டி பல முறை வந்திருக்கார். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனால் எங்க மோதிக்கு நிஜமாவே வாயில் போட ஒரு கடிவாளம் போல வைச்சிருந்தோம்.//
      அப்படியா?

      நீக்கு
    2. நாங்கள் அதன் கழுத்துக்கு கயிற்றை வயிற்றைச் சுற்றி எடுத்து வந்து கம்பி கேட்டுடன் சேர்த்துப் பிடிப்போம்.  டாக்டர் மறுபக்கத்திலிருந்து ஊசி போடுவார்!

      நீக்கு
    3. அது வாயில் மாட்டவென்றே கன்னுக்குட்டிக்குப் போடும் கவசம் போன்றது வாங்கி வைச்சிருந்தோம். நீங்க சொன்னாப்போலயும் செய்திருக்கோம். ஆனால் அதைப் பிடிப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஏகப்பட்ட பலத்தைக் காட்டும். :(

      நீக்கு
  33. ஆஸ்பத்திரி அனுபவங்கள் நல்லா இருக்கு. ஆனால் நீங்க ஆபரேஷன் பண்ணிக் கொண்டதே தெரியாது. சொல்லவே இல்லை. எப்படியோ நல்லா ஆயிடுத்தா? அதான் முக்கியம்.

    இக்கா படம் பத்தி ஏற்கெனவே முகநூல் பதிவுகளில் படிச்சேன். பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கு. அக்ஷய் கன்னா துரந்தரில் கூட நல்லாவே நடிச்சிருந்தார்.
    அமானுஷ் படம் பார்த்த நினைவு. ஆனால் கதை நினைவில் இல்லை. இதுவே தமிழிலும் வந்திருக்கா? ஜிவாஜியா? தெரியாத விஷயம்.

    அதே போல் தலாய்லாமா ஜிவாஜியைச் சந்திக்க நினைச்சதும் புது விஷயம். திரைப்படம் பற்றி தலாய்லாமாவுக்கு அதுவும் தமிழ்ப்படங்கள் தமிழ்ப்பட நடிகர் பத்தி இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருந்தார் என்பதே ஆச்சரியம் தான்.

    சுஜாதா தி.ஜானகிராமன் பத்தி எழுதினது கிட்டத்தட்ட மனப்பாடமே ஆயிடுத்து. தி.ஜானகிராமன் சிட்டி இருவரும் சேர்ந்து தான் "நடந்தாய் வாழி காவேரி!" எழுதினாங்க. புத்தகம் பிரஸ்ஸில் இருந்து வந்ததும் சித்தப்பாவுக்குக் கிடைச்சதும் முதலில் படிச்சது நானாக்கும். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாநாயகனாக நடித்த வினோத்கன்னா மகன் வில்லனாக நடிப்பது துரந்தர் ச்சே... துரதிருஷ்டம் என்றாலும் ரசிக்க முடிகிறது!

      நீக்கு
    2. நான் ஆப்ரேஷன் செய்து கொண்டது உங்களிடம் சொன்னதாக நினைவு. ஆனால் சரியாக நினைவில்லை.

      நீக்கு
  34. காதலிக்கும் காலம் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு போகிறவர்கள் பின்னர் ஏன் மாறி விடுகின்றனர்?

    காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி தான் என்பதே இந்த முத்தக்கவிதையின் மூலம் சொல்லி இருக்கீங்களோ? என்னமோ போங்க. முன்னாடி எல்லாம் எப்படியோ இப்போல்லாம் இப்படித் தான் இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் என்பது கவர்ச்சி மாத்திரம் அல்ல. உதாரணம் துளசி டீச்சர் கோபால் சார்

      நீக்கு
    2. They two visited on Sunday 19th July. Nellai came on 21st July, with his wife.

      நீக்கு
    3. // உதாரணம் துளசி டீச்சர் கோபால் சார் //

      இளையவன் என்றாலும் இந்த வரிசையில் என்னையும் சேர்ப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.. ஹும்...

      நீக்கு
  35. மூக்குப் பிரச்னையை எளிதாக சரியாக்கிக் கொண்ட மனிதர் மஹாராஷ்ட்ரா? கன்னடம்? பொருத்தமாக நாசிக் என ஊர்ப் பெயர் போட்டிருக்கீங்க! அந்த ஊர் மருத்துவமனையா? அங்கே நாங்க ஒரு இரவு தங்கி இருக்கோம். "பாரத் தர்ஷன்" ரயிலில் போகும்போது. திராக்ஷைப் பழம் (கிஸ்மிஸ்) அங்கே வெகு மலிவு. அதுவே பச்சை திராக்ஷையாகக் கொட்டை இல்லாமல் திராக்ஷைப் பருவத்திலும் கிடைக்கும். சில சமயங்களில் கிலோ 50 ரூக்குக் கூடக் கிடைக்கும். காய்ந்த கிஸ்மிஸ் அதிகம் போனால் 75 ரூபாய்க்கு வாங்கினேன். அது ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எந்த மாநிலமோ...   நான் மூக்கை மட்டுமே பார்த்தேன்!  நம் பிரச்னை நமக்கு!

      நீக்கு
  36. ​மூக்கு என்ற
    ஒன்று இருப்பதால் தானே சளி பிடிக்கிறது, அதனால் மூக்கை ஆப்பரேசன் செய்து விட்டார்களா? பிரஸ்ட் கேன்சருக்கு செய்வது போல்.
    சிம்பிள் நீங்கள் வீட்டில் நெபுலைசர் வைத்திருப்பீர்கள். Inhalex ----Inhalex is a prescription respiratory medication that contains Ambroxol Hydrochloride and is used to thin and loosen thick mucus in the airways. It makes it easier to cough out phlegm and improves breathing in conditions like asthma, bronchitis, and Chronic Obstructive Pulmonary Disease (COPD). எடுத்திருக்கலாம். Inhalex respules.

    சரி இனியாவது மூக்கு பத்திரம். பாஸ் கோபத்தில் உடைக்க தேவையானது.

    ​No offence. excuse me if this comment hurts. Sorry.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெபுலைசர், இன்ஹேலர் எல்லாம் உபயோகித்துப் பார்த்து விட்டேன்.. பாஸ் அவ்வப்போது மூக்கை சேதப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்!  அதை விடுங்கள்..    சாதாரணமாக காலையில் 20 அல்லது 30 கமெண்டுகளுக்குள் வந்து விடுவீர்கள்.  காணோமே என்று பார்த்தேன்.

      நீக்கு
  37. உங்கள் இரண்டாவது கவிதை படித்தபின்... எனக்குத் தெரிந்த பெண் மூன்று நாலு மாதங்களாகியும் ஒரு பையனுக்கு ஓகே சொல்லலை (அவர் பெற்றோர் ஜாதகம் பார்த்து, அவங்க பேசிச் சொல்ல அனுப்பின கான்டாக்ட்). பொறுமை இழந்த அப்பா, அவனைப் பிடிக்கலையா வேற பையன் விவரம் கொடுக்கவா எனக் கேட்டபோது, அந்தப் பெண் சொன்னாளாம்... இவன் ரொம்ப நல்லவனா இருக்கான் கோபம் வரலை. அப்படி கோபம் வரும் நிகழ்வு நடந்தால் எப்படி ரியாக்ட் செய்வான் என்பதைத்தான் மல பேச்சுக்கள் மூலம் ஸ்டெடி பண்ணறேன் என்றாளாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவி.  தூண்டித் தூண்டி அவனை கொலைகாரனாக ஆக்காமல் விடமாட்டாள் போல...

      நீக்கு
  38. ஜானகிராமனைப்பற்றி சுஜாதா கூறியிருப்பது படிக்க நன்றாயிருந்தது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கப்படாதா என்று சிலர் மறைந்தபின் நமக்குத் தோன்றும். சுஜாதா மறைவுக்குப் பின் -2008-ல்- எனக்குத் தோன்றியது. இப்போது நினைத்துப் பார்க்கையில் தி.ஜா.வும் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. பாரதியும்...

    ஹ்ம்.. கடவுளிடம் இலக்கிய ரசனையை எதிர்பார்ப்பது நமது அசட்டுத்தனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...     சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தங்கள் பணியை நிறுத்தி விடுவார்கள்.  உடல், குரல் ஒத்துழைக்காது.  ஆனால் எழுத்தாளர்கள் அப்படியல்ல.  இறுதிவரை எழுதிக் கொண்டே இருக்கலாம். 

      ஆனால் ஜேகே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைவு.  அவர் அத்யந்த ரசிகர் ஜீவி ஸாருக்கு தெரிந்திருக்கும்.

      நீக்கு
  39. தலாய்லாமா நமது ‘உத்தமபுத்திரனை’ விரும்பிச் சந்தித்தாரா! சுவாரஸ்யமான செய்தி.

    இதைப் படிக்க நேர்ந்தால்.. நம்ம ’உலகநாயகன்’ என்ன நினைப்பாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சூப்பர் ஸ்டார் தான் என்ன நினைப்பார்!

      நீக்கு
  40. Ikka, seen by me. super picture. Liked it. No dubbing. original hindi. voice was clear.

    பதிலளிநீக்கு
  41. ஹாஸ்பிட்டல் அனுபவம் "நாள் பார்த்து சொல்லலாமா? ரசனையாக தந்துள்ளீர்கள்.

    ஜானகி ராமன் பற்றி சுஜாத்தா அவர்களின் கருத்து கண்டோம்

    பிரேக் அப் கவிதை இக்காலச் சிலரின் போக்கை காட்டுகிறது.

    ஜோக்ஸ் ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
  42. சர்ஜரிக்கு துணிந்து விட்டீர்களா?!

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நடந்து முடிந்து ஒரு வருடம் கழித்து தான் அதைப்பற்றி எழுதுகிறேன். நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!