பஜியா
கீதா சாம்பசிவம்
சென்ற வார காராவடையே
இன்னமும் போணி ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மிச்ச மாவை எத்தனை
நாட்கள் வைப்பது? அதான் அதில் பஜியா போடலாம்னு தீர்மானிச்சுட்டேன்! இந்த
பஜியா என்பது வேறே ஒண்ணும் இல்லை. நம்ம தூள் பஜ்ஜி தான். வட மாநிலங்களில் உருளைக்கிழங்கு,
வெங்காயம், குடமிளகாய், வெந்தயக்கீரை, பாலக் போன்றவற்றை நறுக்கி பஜ்ஜிக்கு மாவு கரைப்பது
போல் காரம், உப்பு, பெருங்காயம் போட்டுக் கடலைமாவைக் கரைத்து அதில் நறுக்கிய இந்தக்
காய்களைச் சேர்த்துப் போடுவார்கள். சில சமயங்களில் வெறும் கீரையில் மட்டுமே போடுவதும்
உண்டு. ஆனாலும் இந்த உ.கி., வெங்காயம் போட்டுப் பண்ணும் பஜியா நம்மவருக்கு ரொம்பப்
பிடிக்கும். இதைக் காலை ஆகாரத்துக்கே அதிகம் பண்ணுவார்கள். சில கடைகளில் நாள் முழுவதுமே
கிடைக்கும். காரட்டைத் துருவி அதைக் கடுகு தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி, காரப்பொடி,
உப்புப் போட்டு லேசாக வதக்கி வைத்துக்கொள்வார்கள். அதில் கொத்துமல்லியை நறுக்கி தாராளமாகத்
தூவுவார்கள். வெங்காயமும் பொடியாக நறுக்கித் தனியாக வைத்துக் கொள்வார்கள். இந்த பஜியா
குறைந்த பக்ஷம் நூறு கிராமில் இருந்து வாங்கிக்கலாம். பஜியா மேல் காரட், வெங்காயம்
தூவித் தருவார்கள்.

காரட், வெங்காயம்
எல்லாம் துருவாமல் வெறும் பஜியாவாகவே போடலாம்னு நினைச்சேன். மாவில் முதலில் கருகப்பிலை,
கொஞ்சம் போல் உப்பு, (நேற்றைய மாவு இல்லையா) பெருங்காயம், அரைத் தேக்கரண்டி காரப் பொடி
போட்டுக் கொத்துமல்லி நறுக்கிப் போட்டு ஒரு சின்ன பச்சை மிளகாயும் போட்டேன். குடமிளகாய்
இல்லை என்பதோடு அவருக்குப் பிடிக்காது. பின்னர் உருளைக்கிழங்கு ஒன்றும் வெங்காயம் ஒன்றும்
நடுத்தரமானது. சீவல் கட்டையில் சீவி வைத்துக்கொண்டு உருளைக்கிழங்கை மட்டும் நன்கு அலசிப்
போட்டு, வெங்காயத்தையும் போட்டேன்.
உ.கி.யை
நன்கு அலசிப் போட வேண்டும்.
கலந்த மாவு
மாவை நன்கு
கலந்து கொண்டேன். பின்னர் அடுப்பில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு இதை அப்படியே பரவலாகக்
காய்ந்த எண்ணெயில் தூவினேன். பின்னர் நன்கு சிவக்க வேக விட்டு எடுத்தேன். என்னிடம்
காரட் இருந்தாலும் காரட் எல்லாம் துருவிச் சேர்க்கவில்லை. ரொம்பவே அதிகம் ஆகிவிடும்.
இது கொஞ்சம் கொஞ்சம் வந்தாலும் போதும்! ஆகவே கலந்த மாவைப் போட்டு முடித்துச் சாப்பிட்டாயிற்று.
இனி நாளைக்கெல்லாம் எண்ணெய் வைத்துப் பண்ணப் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். ஏதேனும்
சுண்டல் தான்.
======================================================================================
பழசிலிருந்து....
இப்படி எல்லாம் ஒரு வழக்கம் இருந்தது என்பது எனக்குத் தெரிந்தது!
கொள்ளை விடுவது என்றால் என்ன என்று தெரியுமா?
முன்குறிப்பு : பதினாலாம் பக்கம் அந்த பைண்டிங் புத்தகத்தில் இல்லை!
******************************************************************
ஏரிக்குப் போனோம். தேளி மீன் கடித்தது!
மதுராந்தகம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கிய இருநூற்று சொச்சம் பெயர்களும் அலறிக்கொண்டு கரை ஏறினார்கள் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் ஏன்?
விஷ மீனிடம் கடிபட்டவர்களில் ஒருவரான திரு. சிவலிங்கம் சொல்கிறார்.
நான் பிறந்தது பவுஞ்சூர் கடலூர் கிராமத்தில். இ(அ)ப்போது என் வயது 49.
எங்க மதுராந்தகத்திலே அக்கா வீடு இருக்கு. தினம் லாரியிலே சரக்கு ஏற்றிச் சம்பாதிக்கிற கூலியை அங்கே கொடுத்திட்டுச் சாப்பிடறேன்.
இரண்டு வாரத்துக்கு முன்னே மதுராந்தகம் ஏரியிலே தண்ணி வத்திச்சி. உடனே பஞ்சாயத்திலே மீன்பிடிக்கிறதுக்கு ஏலம் விட்டாங்க. ஒரு நாயக்கர் ஏலம் எடுத்து, எண்பது பேர்களை வச்சு பெரிய வலையிலே மீன் பிடிச்சாரு. பத்து நாளைக்கு மேலே வேலை நடந்திச்சு.
நாயக்கர் அன்னிக்கு எங்களுக்குக் கொள்ளை விட்டுட்டார். (ஏலம் எடுக்கிறவங்க பத்து, பதினைஞ்சு நாளைக்கு மீன் பிடிச்சுட்டு, ஒருநாள் எல்லா ஜனங்களுக்கும் விட் டுக் கொடுத்துடுவாங்க. கொள்ளை விடறது.) அதுதான்
ஊரிலிருந்த ஜனங்களுக்குச் சந்தோஷம் தாங்கல்லே. தபதபன்னு தண்ணியில இறங்க ஆரம்பிச்சோம்.
நூற்றுக்கணக்கான பேர் தண்ணியிலே இறங்கினதும் ஏரி ஒரே சேறாப் போச்சு.
சிலபேர் திடீர்னு ஐயோ, அம்மான்னு கரையை நோக்கி ஓடினாங்க. திரும்பிப் பார்த்தேன். எனக்கு ஒண்ணும் புரியல்லே.
திடீர்னு என் காலிலேயும் தேளு கொட்டறமாதிரி இருந்தது. தேளி மீன் கடிச்சிட்டுதுன்னு புரிஞ்சுகிட்டேன். உள்ளங்கால்லே ரத்தம் வந்தது. இரண்டு இடத்திலே முள்ளு குத்தின மாதிரி ஒரே கடுப்பா வலிச்சுதுங்க. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு ஓடினாங்க. சிலருக்கு மயக்கம் கூட வந்திடுச்சு.
நான் டாக்டர் கிட்டே காண்பிச்சு ஊசி போட்டுக்கிட் டேன்.
தமிழக அரசு மீன் இலாகா உதவி டைரக்டர் திரு. சீனிவாசனும், செங்கல்பட்டு ஜில்லா மீன் இலாகா உதவி டைரக்டர் திரு. கா. முகமது சுல்தானும் கூறியவை:
செங்கற்பட்டு மாவட்டத்தில் மொத்தம் முப்பத்தேழு மீன் வளர்ப்பு நிலையங்களில் மதுராந்தகம் ஏரி ஒன்று. ஆண்டுக்கு ஒரு முறை ஏரியில் மீன் பிடிக்ககிறது. அனுமதிக்கப்படுகிறது
தேளி மீனை ஆங்கிலத்தில் சாக்கோபிரான்ஸ் ஃபாஸில்ஸ் கூறுவார்கள். கழுத்தி மீன் வகை சேர்ந்தது இது. மூன்றாண்டு உயிருடன் வாழ வல்ல இந்த மீன் பதினைந்து சென்டிமீட்டர் வரை வளரும்
இதன் கழுத்திலிருக்கும் முள் மனிதரின் தேகத்தில் படும்போது வலி உண்டாகும். ஆனால் இது விஷ மீனல்ல.சாப்பிடுவதற்கு இந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
சமைப்பதற்கு முன் இந்த மீனின் கழுத்துவரை (முள்ளை சேர்த்து) வெட்டி எடுத்துவிடுவார்கள்.
இப்படி அமர்க்களப்படுத்திய மீன் எப்படிமிருக்கும் ? பார்க்க 14 'ம் பக்கம்.
சுவாரஸ்யமான பஜியா. இந்தக் கடலைமாவு சாம்ராஜ்யம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு உண்டு. நல்ல நினைவுகளை மீட்டுக் கொடுத்தது. நன்றி கீதாமா.
பதிலளிநீக்குவாங்க அம்மா..
நீக்குரேவதியை மீண்டும் இங்கே சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. குழுமத்தில் பார்க்கிறேன். என்றாலும் இப்போதெல்லாம் பலரும் பதிவுகளுக்கு வருவதில்லை. என்னையும் பலர் இன்னுமுமா ப்ளாக் எல்லாம் எழுதிண்டு இருக்கே? என்று கேட்கின்றனர். எ.பி. மாதிரி தினம் இல்லாட்டியும் அவ்வப்போதாவது ஏதேனும் ஒரு பதிவு எழுதிண்டு தான் இருக்கேன். :))) என் இருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த ப்ளாகரில் எழுதுவது தானே.
நீக்குஅன்பின் கீதாமா. எழுதணும் என்கிற ஆர்வம் மிகக் குறைந்து விட்டது. பையன் புதிதாகத் தமிழ் படிக்கிறான். அவனுக்காக சுலபத்தில் படிக்க அப்டேட் செய்கொறேன்:))))))ஆமாம் நமக்கெல்லாம் வெளிச்சம் கொடுத்தது ப்ளாகர் தான்.
நீக்குஅந்தத் தேளி மீன் ஒருகாலத்தில் எங்க வீட்டில் இருந்த அரோவானா வை நினைவூட்டியது. படிக்கவே பயங்கரமான செய்தி:)
பதிலளிநீக்குநான் தேளியையும் அறியேன். அரோவானா வையும் அறியேன்மா...!!
நீக்குyessu.
நீக்கு:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குகொள்ளைவிடுவது பல ஊர்களில் ஏரிகளில் வழக்கம் ஆனால் வருடத்தில் ஒரு நாள் மாத்திரம்
பதிலளிநீக்குநான் கேள்விப்பட்டதில்லை;.. எனக்கு அது செய்தி!
நீக்குபஜியாவைப் பிறகுதான் பார்க்கணும்
பதிலளிநீக்குஉபவாசமா? கோவிலுக்கு போயிட்டு வந்துட்டு பாருங்க...!! :P
நீக்குதிருநாங்கூர் திவ்யதேசங்கள் தரிசனம் சீர்காழி தொடங்கி. இன்னும் இரண்டு திவ்யதேசங்கள் மதியம் 3 மணிக்குப் பிறகு தரிசனம்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் "பஜியா" செய்முறை, படங்களுடன் நன்றாக உள்ளது. நான் வாழைக்காய், உ. கி. யுடன், காய்கள் காணவில்லை என்பதற்காக இரண்டு காரட், ஒரு கு. மி, கொஞ்சம் கோஸ் இலைகள், ஒரு பெரிய வெங்காயம் இவைகளை சேர்த்து ஒரு தடவை இவ்வாறு செய்திருக்கிறேன். கலவையாக நன்றாக இருந்தது. ஆனால், சகோதரி சொல்வது போல கீரைகளை சேர்த்ததில்லை. இப்படியும் ஒருதடவை செய்து பார்க்கிறேன். கீரையை சேர்க்கும் போது அதன் ருசி மனதுக்குள் வருகிறது.
இப்படி மேலே சொன்ன ஒரு காய்களும் அமையாத நேரத்தில், வாழைக்காயும் குறைவாக இருக்கும் பட்சத்தில், அப்பளத்தை வைத்தும் பஜ்ஜி செய்து சமாளித்திருக்கிறேன் . இப்போது முன்பு போல அடிக்கடி எண்ணெய்யும் அதிகம் வைப்பதில்லை. சாஸ்திரத்திற்காக விஷேட தினங்களில் மட்டுந்தான். படங்களில் பார்த்து ருசியை மனதுக்குள் கொண்டு வந்து ரசிக்க வேண்டியதுதான். படங்கள் கவர்கின்றன. சகோதரிக்கு மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கு கூட ஒருநாள் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகிறது!
நீக்குஅப்பளத்தில் பஜ்ஜி மட்டும் இல்லை, சமோசா கூடப் பண்ணி இருக்கேன். ப்ரெட் வாங்கினால் அதை முக்கோண வட்டிவில் நான்காக வெட்டிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கி எடுத்துப் பொரிப்பதும் உண்டு. ப்ரெட்டில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து சான்ட்விச் செய்து கொண்டு அந்த ஸ்டஃப்ட் ப்ரெடை பஜ்ஜி மாவில் முக்கிப்பொரித்து ப்ரெட் பகோடா எனக் காலை ஆகாரத்துக்கு வட மாநிலங்களில் கொடுப்பார்கள். விருந்தினருக்கு உபசரிப்பதற்கான சிறப்பு உணவு இது. நானும் பண்ணினே என்றாலும் ப்ரெடில் இந்த மாதிரி ஸ்டஃப் செய்தூ பஜ்ஜி மாவில் முக்கிப் போடுவதில் பாதி சாப்பிட்டாலே பெரிது என்று ஆகி விட்டதால் அடிக்கடி எல்லாம் பண்ணுவதில்லை. பனீரிலும் இந்த மாதிரி பனீர் பகோடா போடுவோம். பனீரைக் கொஞ்சம் பெரிய ஸ்லைசாக வெட்டிக் கொண்டு போடணும்.
நீக்குகீசா மேடம், அவர் பெண்ணைப் பார்க்க வந்தவங்களுக்கு சொஜ்ஜி பஜ்ஜிக்குப் பதிலா ப்ரெட் பஜ்ஜி குலாப்ஜாமூன்னு பண்ணி அசத்தியிருப்பாரோ?
நீக்குஎங்க பெண்ணைப்பார்க்க வந்தப்போ மைசூர்ப்பாகும் உருளைக்கிழங்கு போண்டாவும் கொடுத்தோம். ஏனெனில் பெண்ணைப் பார்த்துவிட்டு உடனே எங்க வீட்டிலேயே நிச்சயதார்த்தம் பண்ணிடணும்னு முழு ஏற்பாட்டுடன் பிள்ளை வீட்டுக்காரங்க சுமார் 30 பேர் வந்தாங்க. ஆகவே நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் இரவு உணவுக்குப் பெரிய அளவில் ஏற்பாடு செய்து வைச்சிருந்தேன். அப்போ அம்பத்தூரில் தானே இருந்தோம். ஆகவே அக்கம்பக்கம் உள்ளூர் உறவுனு எங்களுக்கும் கூட்டம் வரும். வந்தது. இட்லி, சட்னி, சாம்பார், சேவை வகைகள், உளுந்து வடை, கொத்சு, மோர்க்குழம்பு, ஸ்வீட்டுக்கு பைனாப்பிள் கேசரி, அசோகா ஆகியவையும் சாப்பிட்டு முடிச்சதும் எல்லோருக்கும் கிண்ணங்களில் மாங்கோ ஐஸ்க்ரீம் வீட்டில் நானே முதல்நாள் தயாரிச்சுக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டேன். ஆகவே பெண் பார்க்கையில் ரொம்ப சிம்பிளான டிஃபன் தான். ஆனால் எங்க குழந்தைகளுக்கு அவங்க படிக்கும் காலத்தில் இதெல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கேன். ஹாட் டாக் எனப்படும் பன்னுக்குள்ளே காரமான உ.கி.கறி வைச்சது, காய்கறிகள் மட்டும் போட்டு (உள்ளே கட்லெட் மாதிரி வைப்பேன்.)பர்கர் மாதிரி எல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கேன். என்ன ஒரு விஷயம்னா இதெல்லாம் வெளிநாடுகளில் அசைவமாக இருக்கும். நான் முழுக்க முழுக்க சைவத்தில் பண்ணிக் கொடுத்திருக்கேன்.
நீக்குகீசா மேடம்சொல்றதைப் பார்த்தால், பெண் பார்க்க வருகிறோம், பிடிச்சிருந்தால் அன்றே நிச்சயதார்த்தம், சௌகரியப்பட்டால் மறுநாளே கல்யாணம் நடத்திடலாம்னு சொல்லியிருந்தா, எல்லாத்துக்கும் தயாராக இருந்திருப்பார் போலிருக்கே. வித வித மெனுலாம் எழுதியிருப்பார்
நீக்குஎங்களின் நிச்சயதார்த்தமும், பெண் பார்க்கும் படலத்தன்றே மாலையில் நடந்ததென்று என்னுடைய ஒரு பதிவில் பதிவாக எழுதியிருந்தேன். அது போல் சகோதரியின் மகளுக்கும் பெண் பார்த்த அன்றே நிச்சயம் நடந்ததென இங்குள்ள விபரங்களை அன்று என் பதிவிலும் தன் கருத்தாக கூறியிருந்தார். அது இப்போதும் என் நினைவுக்கு வந்தது.
நீக்குமுன்கூட்டியே மறுநாளைய (மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க வரும் முதல்நாள்) ஏற்பாடுகளை செய்து வைப்பதற்கும், ஒரு பொறுப்பான திறமைகள் வேண்டும். எங்கள் அம்மாவை போல் செயலாற்றிய அவ்விதத்திற்காக சகோதரிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
என் அண்ணனுக்கும் பெண் பார்க்கச் சென்று, பெண் பார்த்து அன்று மாலையே கும்பகோணத்தில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திரும்பினோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த மீன் பற்றிய செய்தியை முன்பு படித்திருக்கிறேன் கொள்ளை விடுவது என்ற செய்தியையும் படித்துள்ளேன். மீன்களில்தான் எத்தனை வகைகள் இறைவன் படைத்துள்ளான். (அதற்கு பாதுகாப்பாக எண்ணி) ஆனால், அது மனிதர்களுக்கு சிரமமாக உள்ளது.
/சாப்பிடுவதற்கு இந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
சமைப்பதற்கு முன் இந்த மீனின் கழுத்துவரை (முள்ளை சேர்த்து) வெட்டி எடுத்துவிடுவார்கள்./
இன்றைய திங்களில் சைவத்துடன் இப்படி "அ"வையும் சேர்த்திருக்க வேண்டாம். :))) வேறு ஒருநாள் பகிர்ந்திருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா.. ஹா.. ஹா... அதுவும் புரட்டாசி மாதம்... மாளயபட்சம் நெருங்கும் சமயம்!
நீக்கு:)) ஆம். ஆனால், பாக்கி எந்த மாதங்களானாலும், இந்த மாதிரி பழைய அசைவ விஷயங்களை, நம்மால் அசை போடுவது கடினதான். :))
நீக்குகல்கத்தா வாழைக்காயை கஹ மேடம் அசைவத்தில் சேர்த்துவிட்டாரே. கல்கத்தா காரங்க அவர்கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க
நீக்குஅச்சச்சோ..! கல்கத்தாவில்லா இருக்கிறது.. இந்த மதுராந்தகம் ஏரி.?:))))
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபஜியா படங்களும், விவரங்களும் அருமை.
பதிலளிநீக்குபஜ்ஜி மாவுமிஞ்சி போனால் அதில் பெரிய வெங்காயத்தை வெட்டி போட்டு தூள் பஜ்ஜியாக மொறுமொறு என்று செய்வேன் அது வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் .
//இதன் கழுத்திலிருக்கும் முள் மனிதரின் தேகத்தில் படும்போது வலி உண்டாகும். ஆனால் இது விஷ மீனல்ல.சாப்பிடுவதற்கு இந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.
பதிலளிநீக்குசமைப்பதற்கு முன் இந்த மீனின் கழுத்துவரை (முள்ளை சேர்த்து) வெட்டி எடுத்துவிடுவார்கள்.
பேட்டி: எம்.எஸ்.ஆர்
இப்படி அமர்க்களப்படுத்திய மீன் எப்படிமிருக்கும் ? பார்க்க 14 'ம் பக்கம். //
14 ஆம் பக்கம் கிடைக்கவில்லையா?