15.10.26

வொய்ஜா போர்ட் மூலம் ஆவிகளை தொடர்பு கொள்ள முடியும் என்பது நிஜமா? சாத்தியமா?

 

நடு இரவு நெருங்கும் நேரம்..ஒரு வினோதமான சப்தம்.  கொஞ்ச நேரம் கழித்து ஏதோ தரையில் உருளும் சத்தம். கண்திறந்து பார்த்தாலும் எதுவும் தெரியாத அமாவாசை இருட்டு.  எல்லோரும் விழித்துக் கொண்டார்கள்.

ஆனால்... 

என்று முடித்திருந்தேன். முதலில் எல்லோருக்கும் வொய்ஜா ஞாபகம்தான் வந்தது.  அடுத்தடுத்த சப்தங்கள் அந்த எண்ணத்தை மாற்றின.

ஏதோ ஒரு இரும்பு தரையில் விழுந்த சத்தம் நன்றாய் கேட்டது.    யாருமே கண்ணைத் திறக்கவில்லை.  கண்ணைத் திறந்தால் தலை மாட்டில் நிற்கும் திருடன் ஒரே போடாய் போட்டு விடுவான் என்று பயம்.  மூச்சு விடக்கூட பயந்து அசைவில்லாமல் சத்தமில்லாமல் படுத்திருந்தார்கள்.  

அடுத்து கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லை.  திருடர்கள் போய்விட்டார்களா என்றும் தெரியவில்லை. சுவிட்ச் போர்ட் அருகே படுத்திருந்தவர் மெல்ல முடிவு செய்து திடீரென கழுத்தை வளைத்து எழுந்து ( அரிவாளிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறாராம்!) ஓடி ஸ்விட்ச்சைப் போட்டார்.  விளக்கு பளீரென்று எரிந்தது. 

அறையில் இவர்களைத்தவிர யாரும் இல்லை.  வினோத சத்தம் ஒரு குறட்டையாளரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  இவர்கள் முன்னதாக 'ஆவி'க்காக நிறுத்தி வைத்து இரும்பு ராட் கீழே சரிந்து விழுந்திருந்தது.

எல்லோருமே கண்ணைத் திறந்து பார்த்து, நிம்மதிப் பெருமூச்சுடன் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

மேலே சொன்ன சம்பவம் உண்மையில் நடந்தது.  கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறேன்!

வொய்ஜா போர்ட்  மூலம் ஆவிகளை தொடர்பு கொள்ள முடியும் என்பது நிஜமா?  சாத்தியமா?

ஒய்ஜா போர்ட் (Ouija Board) மூலம் ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. அறிவியல் மற்றும் உளவியல் ரீதியாக, ஒய்ஜா போர்ட் இயங்குவதற்கு ஆவிகள் காரணமல்ல; மாறாக, மனிதர்களின் ஆழ்மனதின் செயல்பாடே (Ideomotor Effect) காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள பின்வரும் உண்மைகளைக் காண்போம்:

1. ஐடியோமோட்டர் விளைவு (Ideomotor Effect)இது ஒரு தன்னிச்சையான தசை இயக்கம் ஆகும். ஒரு நபர் தனக்கே தெரியாமல், தனது ஆழ்மனதில் உள்ள எண்ணங்களுக்கு ஏற்ப கைகளை நகர்த்துவார்.ஆழ்மனதின் இயக்கம்: நாம் ஒரு கேள்விக்கு என்ன பதில் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அல்லது எதற்கு பயப்படுகிறோமோ, அதை நோக்கி நம் கைகள் நம்மையறியாமலேயே அந்தப் பலகையை (Planchette) நகர்த்தும்.கூட்டுச் செயல்பாடு: பல பேர் சேர்ந்து கைகளை வைக்கும்போது, ஒருவர் நகர்த்துவது மற்றவருக்கு ஆவி நகர்த்துவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது.

2. அறிவியல் சோதனைகள்ஒய்ஜா போர்ட் விளையாடுபவர்களின் கண்கள் துணியால் கட்டப்பட்டு (Blindfolded) இந்த சோதனை நடத்தப்பட்டபோது, அந்த பலகை எந்தவொரு அர்த்தமுள்ள வார்த்தையையும் உருவாக்கவில்லை. எழுத்துக்கள் இருக்கும் திசை தெரியாததால், அது தவறான மற்றும் குழப்பமான இடங்களையே காட்டியது. இதன் மூலம் ஆவிகள் அதை இயக்கவில்லை என்பது தெளிவாகிறது.

3. ஒய்ஜா போர்ட்டின் வரலாறுநம்மில் பலர் இதை ஒரு மர்மமான விஷயமாகப் பார்த்தாலும், ஒய்ஜா போர்ட் என்பது உண்மையில் 1890-களில் ஒரு போர்டு கேமாக (விளையாட்டுப் பொருளாக) அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்னர் ஹஸ்ப்ரோ (Hasbro) என்ற பொம்மை நிறுவனம் இதன் காப்புரிமையை வாங்கி, ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகவே இன்றுவரை விற்று வருகிறது.சுருக்கமாக:ஒய்ஜா போர்ட் நகர்வது முற்றிலும் உளவியல் மற்றும் தசை இயக்கம் சார்ந்த ஒரு நிகழ்வே தவிர, இதில் ஆவிகளுக்கோ அல்லது மாந்த்ரீக சக்திகளுக்கோ எந்தப் பங்கும் இல்லை. பயம் மற்றும் ஆர்வம் காரணமாகவே மக்கள் இதை ஆவிகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.

============================================================================================



மனசாட்சியம் - 15
KGY Raman

சுதந்திரம் வருவதற்கு முன்பாகவே அதாவது 1944ஆம் ஆண்டிலேயே பள்ளிக்குப் போக ஆரம்பித்தவன் நான். 
அந்தக் கால பள்ளி வகுப்புகளில் M.I அதாவது Moral Instruction என்று வாரம் ஒன்று இரண்டு வகுப்புகள் இருக்கும். யாராவது ஆசிரியர் வராத நாட்களில் டிராயிங் மாஸ்டர் அல்லது ட்ரில் மாஸ்டர் வந்து வகுப்பு எடுப்பார். அப்போதும் இந்த நீதிநெறி விளக்க வகுப்புகள் அவதரிப்பது உண்டு. 

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் , நீதிநெறி விளக்கம்,  நன்னெறி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,  விவேக சிந்தாமணி இப்படியாக பல பல நூல்களில் இருந்து செய்யுள்கள் தமிழ் செய்யுள் பகுதியில் காணப்படும். அவை யாவும் நினைவில் இல்லை என்றாலும் ஒன்று இரண்டு என் நினைவில் இருந்து அகலவே இல்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் விவேக சிந்தாமணியில் இருந்து
எடுக்கப் பட்டது.  என் மூன்றாம் வகுப்புப் பாடம்.

"ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே. " 

இதில் கடைசி வரி " பயனிலை இவ்வேழும் தானே " என்று படித்த நினைவு.‌ தற்போது நுண்ணறிவு அதை சற்றே மாற்றிக் கொடுத்திருக்கிறது. 

ஆபத்துக் குதவாப் பிள்ளை என்னும் போது " பிள்ளை என்று வந்ததெல்லாம் பிள்ளையும் இல்லை " என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன அல்லவா ? 

அதேபோல் அரும்பசிக்கு உதவா அன்னம் - என்னும்போது " முப்பழ மொடு பால்  அன்னம் முகம் கடுத்து இடுவார் ஆகில் " என்னும் வரிகள் என் நினைவுக்கு வரும். 

தாபத்தைத் தீராத் தண்ணீர்  " Water, water, water everywhere..."

" தரித்திரம் அறியாப் பெண்டிர் " இது தற்காலச் சமுதாயச் சூழ்நிலைக்கு சற்று நெருடலான வரி. வருவாய்க்கு மீறிச் செலவு செய்ய கணவனைத் தூண்டுவது அக்காலப் பெண்கள் சிலருக்கு வழக்கமாக இருந்திருக்கும் போல் இருக்கிறது.  தற்காலத்திலும் அதுபோன்ற உதாரணங்கள் இருக்கக்கூடும். 

கோபத்தை அடக்கா வேந்தன் கோவலன் மறைவுக்குக் காரணமாக இருந்தான். 

நாம் எல்லோருமே ஒரு மொழிக் கொள்ளாச் சீடர்கள் தான். நமது பாரத புண்ணிய பூமியில் ஆயிரம் ஆயிரம் குருமார்கள் வந்து எவ்வளவோ கரடியாய்க் கத்திப் பார்த்தார்கள். கத்திப் பார்ரா (!) என்று சும்மா இருக்கும் பெருமை நம்மது.

பாடலில் கடைசியாக வருவது பாவத்தைத் தீராத் தீர்த்தம்.  இது ஏதோ இட்டு ரொப்பியதாகவும் இயல்பாக இல்லாததாகவும் எனக்குத் தோன்றும்.  நமது தல புராணங்கள் தீர்த்தங்களுக்கு விசேஷ குணங்களை கற்பித்து எழுதப்பட்டுள்ளன. அதில் எது வேலை செய்யும் எது செய்யாது என்று சரிபார்க்க நம்மிடம் வசதி இல்லை. நம்மில் பலரும் காசிu ரிஷிகேஷ் என்றெல்லாம் போய் கங்கையில் நீராடி வந்திருக்கிறோம். அதுவரை செய்த பாவங்கள் கழிந்து விட்டனவே என்று மேலும் சில பாவங்கள் செய்து சேர்த்து வைத்திருக்கிறோம். இப்படி நாம் நாம் என்று உங்களையும் சேர்த்துச் சொல்லுகிறேனே என்று சண்டைக்கு வராதீர்கள். வேண்டுமானால் அதை யாம் யாம் என்று படியுங்கள்.


====================================================================================================


செல்ல அழுகை 
சிணுங்கல். 
விடாத அழுகை 
பிடிவாத அழுகை...
பசி அழுகை 
வலி அழுகை 
உன் அழுகைகளுக்கு 
அர்த்தம் 
சொல்லிக்கொடுத்துவிட்டு 
அப்புறம் அழேன்.
வார்த்தைகள் வரும்வரை 
அதுதானே உன் மொழி!


கவனித்தார்களா தெரியாது 
யாருக்கு கிடைத்ததோ 
உன் 
முதல் சிரிப்பு 
எனக்கு என்றுதான் 
நான் 
எடுத்துக் கொள்கிறேன் 
எனக்கான 
முதல் சிரிப்பாகவும்
 இருக்கலாம் அது 

=======================================================================================================


1990 ல் வந்த மருதுபாண்டி படம் பெருவெற்றி பெற்றது.  இளையராஜா இசையில் எனக்கு இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் பிடிக்கும்.  முதல் பாடல் நா காமராசன் பாடல். இளையராஜா சொந்தக் குரலில் பாடிய டைட்டில் பாடல்!


=========================================================================================

படித்தது, நெகிழ்ந்தது...


நிகழ்ந்த இடம் மற்றும் ஆண்டு: மே 12, 2008 அன்று சீனாவின் சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள வென்சுவான் சீனாவின் சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள வென்சுவான் பகுதியில் ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது

பூகம்பம் தணிந்த பிறகு, மீட்புப் பணியாளர்கள் ஒரு இளம் பெண்ணின் வீட்டின் இடிபாடுகளை அடைந்தபோது, விரிசல்களின் வழியாக அவரது இறந்த உடலைக் கண்டனர். ஆனால், ஒரு நபர் வணங்குவது போல அவள் முழங்காலில் மண்டியிட்டது அவளுடைய தோரணை எப்படியோ விசித்திரமாக இருந்தது; அவளுடைய உடல் முன்னோக்கி சாய்ந்து, அவளுடைய இரண்டு கைகளும் ஒரு பொருளால் தாங்கி நின்றிருந்தன. இடிந்து விழுந்த வீடு அவளுடைய முதுகு மற்றும் தலையை உடைத்துவிட்டது.

இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், மீட்புக் குழுவின் தலைவர் சுவரில் ஒரு குறுகிய இடைவெளி வழியாக கையை நீட்டி அந்தப் பெண்ணின் உடலை அடைந்தார். அந்தப் பெண் இன்னும் உயிருடன் இருப்பார் என்று அவர் நம்பினார். இருப்பினும், குளிர்ச்சியான மற்றும் கடினமான உடல் அவள் நிச்சயமாக இறந்துவிட்டாள் என்று அவருக்குத் தெரிவித்தது.

அவரும் மற்ற குழுவினரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி, அடுத்த இடிந்து விழுந்த கட்டிடத்தைத் தேடப் போகிறார்கள். சில காரணங்களால், குழுத் தலைவர் இறந்த பெண்ணின் இடிந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ஒரு கட்டாய சக்தியால் தூண்டப்பட்டார். மீண்டும், அவர் மண்டியிட்டு, குறுகிய விரிசல்கள் வழியாக தனது கைப்பிடியைப் பயன்படுத்தி இறந்த உடலின் கீழ் உள்ள சிறிய இடத்தைத் தேடினார். திடீரென்று, அவர் உற்சாகத்துடன், "ஒரு குழந்தை! ஒரு குழந்தை இருக்கிறது!" என்று கத்தினார்.

பெண்ணைச் சுற்றி இருந்த சிதைந்த பொருட்களின் குவியல்களை கவனமாக அகற்றினர். தனது தாயின் இறந்த உடலுக்கு அடியில் ஒரு மலர் போர்வையால் சுற்றப்பட்ட 3 மாத சிறுவன் இருந்தான். வெளிப்படையாக, அந்தப் பெண் தன் மகனைக் காப்பாற்றுவதற்காக ஒரு இறுதி தியாகத்தைச் செய்தாள்.

​குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்; அந்தப் பெண்ணின் உடலைச் சுற்றியிருந்த சிதைந்த பொருட்களின் குவியல்களை அவர்கள் கவனமாக அகற்றினர். அந்தப் பெண்ணின் உடலுக்கு அடியில், பூக்கள் வரையப்பட்ட போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மாதக் குழந்தை ஒன்று இருந்தது. தன் மகனைக் காப்பாற்ற அந்தப் பெண் தன் உயிரையே தியாகம் செய்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வீடு இடிந்து விழுந்தபோது, ​​தன் மகனைப் பாதுகாப்பதற்காக அவர் தன் உடலையே ஒரு கவசமாகப் பயன்படுத்தியிருந்தார். குழுவின் தலைவர் அந்தக் குழந்தையைத் தூக்கியபோதும், அது அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. மருத்துவர் விரைந்து வந்து குழந்தையைப் பரிசோதித்தார். போர்வையை விலக்கியபோது, ​​அதற்குள் ஒரு செல்போன் இருப்பதைக் கண்டார். அதன் திரையில் ஒரு குறுஞ்செய்தி இருந்தது. அதில், "நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்," என்று எழுதப்பட்டிருந்தது. அந்தச் செல்போன் அங்கிருந்தவர்களின் கைகளுக்கு மாறிக்கொண்டே சென்றது. அந்தச் செய்தியைப் படித்த அனைவரும் கண்ணீர் விட்டனர். "நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்." தன் குழந்தையின் மீது ஒரு தாய் கொண்ட அன்பு இத்தகையது!!

===========================================================================

தலைவரும் தொண்டரும்...


.......​ஒருவகையில் கோவிந்த வல்லப பந்த்  அவர்கள் திரு லால்பகதூர் சாஸ்திரியாரின் இரண்டாவது தலைவராவார்.  அதனால் பந்த் அவர்களுடைய சில விசித்திரப் பழக்க வழக்கங்களையும், சாஸ்திரி அவர்கள் தமது வாழ்க்கையில் பின்பற்றுபவராக இருந்தார் :

உதாரணம் :  பந்த் அவர்கள் உத்தரப்பிரதேசத்தில் 1946 தேர்தலுக்குப் பிறகு மந்திரி சபையை அமைத்தார்.  அக் காலங்களில் அவர் இரண்டு 'குறிப்புப் புத்தகங்களை' (டைரிகள்) வைத்துக். கொள்வது வழக்கம்.  ஒன்று உண்மையானது..  இரண்டாவது போலி.  யாரேனும் அவரிடம் விசேட சலுகைகள் பெற விரும்பினால், உடனே, தனது செயலாளரை அழைத்து, வந்திருப்பவரின் வேண்டுகோளை இரண்டாவது 'டைரி' யில் குறித்துக் கொள்ளுமாறு சொல்லுவார்.  ஏனென்றால் அந்த 'டைரி' யை அவர் பிறகு பார்க்கும் வழக்கமே இல்லை.

திரு லால்பகதூர் அவர்களோ, தமது தலைவரின் இந்த முறையைச் சற்று மாற்றிக் கையாண்டார்.  'சலுகையாளர்'களைத் தமது கோரிக்கையைப் பற்றிச் சிறு குறிப்பு ஒன்று எழுதிக் கொடுக்குமாறு கேட்பார்.  பிறகு அதைப் பத்திரமாக, வந்தவர் பார்க்கும்படியாக தமது சட்டைப் பையில் வைத்துக் கொள்வார்.  அவர் விடை பெற்று வெளி வந்த மறு வினாடியே , எழுதிப் பெற்ற குறிப்பைச் சுக்கு நூறாக்கி விடுவார்.

-  அப்போதைய ஆங்கில காரவன் இதழில் வந்ததை திரு சி. மகாலிங்கன் என்பவர் 1965 ல் விகடனில் பகிர்ந்திருக்கிறார்!  -

=========================================================================================

மருதுபாண்டி படத்தின் இன்னொரு பாடல் பிறைசூடன் எழுதியது.  அருண்மொழியும் ஜானகியும் பாடியது.  இனிமையான அருண்மொழியின் குரல்.  "ஆதாமும் ஏவாளும் போல பூவாடை மேலாடை ஆக"


========================================================================================


பிரபல நடிகர் நானா படேகர் இன்று கோவாவில் மாரடைப்பால் காலமானார். ஹிந்தி, மராட்டிய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நானா படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா என 2 படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். பொம்மலாட்டம் படத்தை இயக்கியவர் பாரதிராஜா. தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு கிரைம் திரில்லர் களத்தில் பாரதிராஜா இயக்கிய படம் அது.

இதில் சினிமா இயக்குனராக நானா படேகர் வருவார். அவர் படப்பிடிப்பில் சில கொலைகள் நடக்கும். அதை கண்டுபிடிக்கும் வேடத்தில் அர்ஜூன் இருப்பார். கடைசியில் அந்த பட ஹீரோயின் ருக்மினியும் ஒரு கார் விபத்தில் இறப்பார். நானா படேகர் மீது அர்ஜூனுக்கு மேலும் சந்தேகம் வரும், கடைசியில் அந்த ஹீரோயினாக வரும் ருக்மணி பெண்ணே அல்ல. அவர் ஒர ஆண். அவரின் நடன திறமை பார்த்து தனது படத்தில் அவரை ஹீரோயின் ஆக்குவார் நானா படேகர். படப்பிடிப்பு தளத்தில் இந்த உண்மை தெரியபவர்களை, அந்த ஹீரோயினிடம் தவறாக நடப்பவர்களை நானா படேகர் கொல்வார் என்ற ரீதியில் கதை செல்லும்.

ஹிந்தி தெரியாத பாரதிராஜா, தமிழ் தெரியாத நானா படேகரை வைத்து இந்த படத்தை இயக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர், பாரதிராஜா இடையே நிறைய கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வந்தன. படப்பிடிப்பும் தாமதம் ஆனது. அந்த சமயத்தில் அவர்களை சமாதானப்படுத்தியவர் நடிகர் அர்ஜூன். ஆனாலும், நானா படேகரை பற்றி ஒரு இடத்திலும் பாரதிராஜா தவறாக பேசியது இல்லை. எந்த பேட்டியிலும் குறைத்து மதிப்பிட்டது இல்லை. அவன் சிறந்த கலைஞன், நல்ல நடிகன்யா என்று தான் பாரதிராஜா பாராட்டினார்.

அந்த படத்தில் நானா படேகருக்கு தமிழில் டப்பிங் பேசியவர் நிழல்கள் ரவி. ஒரு கன்னட படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த பழக்கத்தில் இருவர் வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததால் பொம்மலாட்டம் படத்தில் நிழல்கள் ரவிக்கு டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்தது. தன் கேரக்டருக்கு சரியாக டப்பிங் பேசிய நிழல்கள் ரவியை பாராட்டியிருக்கிறார் நானா படேகர்.

பொம்மலாட்டம் படப்பிடிப்பில் நடித்த நானா படேகர் காமெடியன் விவேக் திறமையையும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். தமிழில் அவருக்கு பிடித்த நடிகர்களின் விவேக் ஒருவர். ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஹரி என்ற அரசியல்வாதியாக, வில்லனாக நடித்தார் நானா படேகர். அந்த படத்தில் அவரே மும்பையில் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் காலா படத்தில் வில்லனாக நடிக்க நானா படேகர் தயங்கி உள்ளார். ரஜினி இருக்கும்போது தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குமா என யோசித்து இருக்கிறார். ரஜினிகாந்த் நேரில் சென்று கதை கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நானா படேகர் தயங்கியபோது, ரஜினிகாந்த் அவரிடம் மிகவும் அடக்கமாக, "நீங்கள் திரையில் நடிக்கும் போது உங்களது நடிப்புத் திறமையால் மக்கள் உங்களைத்தான் பார்ப்பார்கள், யாரும் என்னை கவனிக்க மாட்டார்கள்" என்று கூறி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார்.

இரண்டே படங்களில் நடித்தாலும் நானா படேகரை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துபோனது. சமீபகாலமாக ஒரு குபீர் சிரிப்பு மீம் மெட்டிரியலில் நானா படேகர் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. வெல்கம் என்ற ஹிந்தி படத்தில் உதய் ஷெட்டி என்ற கேரக்டரில் நானா படேகர் டான் ஆக நடித்தார். அந்த படத்தில் அவர் காபி குடித்தபடி சிரிக்கும் அந்த போட்டோவை கிண்டல் அடிக்கும் மீம்சில் அதிகம் பயன்படுத்தினார்கள்.

=========================================================================================

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர் சாவித்ரிபாய் புலே, 1848 ஆம் ஆண்டு தனது கணவர் ஜோதிராவ் புலேவுடன் இணைந்து புனேவில் நாட்டின் முதல் பெண்களுக்கான பள்ளியை நிறுவினார். ஒரு சமூக சீர்திருத்தவாதி, கவிஞர் மற்றும் கல்வியாளர், அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும், கல்வி மூலம் விளிம்புநிலை சமூகங்களின் அதிகாரமளிப்புக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை அமைக்க உதவிய பெண்மணி. சாவித்ரிபாய் புலே, பெண்களுக்கும் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் கல்வி வழங்குவதில் ஒரு முன்னோடியாக இருந்தார். அவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார் (1848) மற்றும் அவரது கணவர் ஜோதிராவ் புலேவுடன் சேர்ந்து பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார்.


உலகின் முதல் ஆசிரியராக கன்பூசியஸ் பரவலாகக் கருதப்படுகிறார். கிமு 551 இல் சீனாவில் பிறந்த இந்த சிறந்த தத்துவஞானி ஒரு தனியார் ஆசிரியராகப் பணியாற்றி பல்வேறு பாடங்களைக் கற்பித்தார். இருப்பினும், கிமு 384 இல் பிறந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், முதல் ஆசிரியராகவும் கருதப்படலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் வாதிடுகின்றனர்

=========================================================================================

Nana Pategar  - The Real Hero - Retired  Lt  Cl Of Indian Army - கார்கில் போரில் அங்கு சென்று வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர்.




              



=========================================================================================






53 கருத்துகள்:

  1. இறைவன் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... ;நலமே எங்கும் விளையாட்டும்.

      நீக்கு
  2. வாங்கி, ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகவே இன்றுவரை விற்று வருகிறது.சுருக்கமாக:ஒய்ஜா போர்ட் நகர்வது முற்றிலும் உளவியல் மற்றும் தசை இயக்கம் சார்ந்த ஒரு நிகழ்வே தவிர, இதில் ஆவிகளுக்கோ அல்லது மாந்த்ரீக சக்திகளுக்கோ எந்தப் பங்கும் இல்லை. பயம் மற்றும் ஆர்வம் காரணமாகவே மக்கள் இதை ஆவிகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள்''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''அடடா. இப்படி அனியாயமாக என் கற்பனை ஆவிகளைத் தொலைத்து விட்டீர்களே ஶ்ரீராம்:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  3. நானா படேகர் வியாழக்கிழமை. ஆஹா! எத்தனை விவரங்கள் அவரைப் பற்றி.. உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர். அசால்டாக ஊதித்தள்ளுவார் தன் பாத்திரங்களை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம். சந்தோஷமாக இருந்தாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் அறியாத அவர் மறுபக்கங்கள்... சிறந்த மனிதர்.

      நீக்கு
  4. நானா அமிதாப் சந்தித்துப் பேசிய கௌன் பனேகா சூப்பர். என்ன ஒரு வினயம் என்ன ஒரு நட்பு!!என்ன ஒரு Bஆவம்!!! அருமையான நடிகர். அசத்தல் வாக் விலாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இருக்கிறதா என்று தெரியவில்லை.  அமிதாப் நானாவை ஒரு பழைய ஹிந்திப் பாடலைப் பாட சொல்கிறார்.  நானா அமிதாப்பையும் பாட சொல்கிறார். அமிதாப் மறுக்க, நானா இறங்கி வந்து அமிதாப் கையைப் பிடித்துக் கொள்கிறார்.  இருவரும் சேர்ந்து அந்த பாடலைப் பாடுகிறார்கள்.

      நீக்கு
  5. இத்தனை அதிசய மனிதரா நானா. மிலிடரியில் சேவை செய்திருக்கிறார்.!!! விவசாயியாக இருந்திருக்கிறார். எளிய வாழ்க்கையில் பெருமிதம் கொள்கிறார். சலிக்காமல் தான தர்மம் செய்கிறார். இந்தியாவின் ஆகச் சிறந்த மனிதராக அவரை உணர்கிறேன். மனம் நிறை நன்றி மா ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..   அவர் இருந்தபோது தெரியவில்லை.  இப்போது தெரிகிறது.  நான் தெரிந்துகொண்ட விவரங்களை உங்களுக்கும் சொல்ல ஆசைப்பட்டேன்.

      நீக்கு
  6. நானா படேகர் இறந்த நாளன்று, தகவல் அறிந்தபின் சற்றே உணர்ச்சிவசப்பட்டு, இரண்டு வாட்ஸப் க்ரூப்களில் ’Nana Patekar is no more’ என்று மட்டும் எழுதி அனுப்பினேன். என்ன ஆச்சு? அவ்வப்போது கவனித்தேன்.. சத்தமே இல்லை. கிணற்றுக்குள் விழுந்த கல் போலே..

    யார் இந்த நானா .. என நானே விளக்கணுமோ? இந்த மனிதனைத் தெரிந்தவன் நான் மட்டும்தானோ என்னவோ.. சரி விடு.. எனவும் தோன்றியது.. விட்டுவிட்டேன் பிறகு.

    Nana has surfaced here today.. Good!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... நானா படேகரின் இறப்புச் செய்தி எந்தவித சலனத்தையும் என்னுள் உரிவாக்கவில்லை. அவர் யார் என்று தெரிந்தால்தானே.

      நான் பஹ்ரைன் சென்ற புதிதில் கம்பெனி என்னைப் போன்றவர்களுக்கு தனித் தனி ஸ்டூடியோ ஃப்ளாட் கொடுத்திருந்தார்கள். எனக்கு அடுத்த உயர் நிலையில் இருந்த பூனேவைச் சேர்ந்த (மகாராஷ்டிரியன்) அறைக்குச் சென்ற போது, டியூப் லைட் கீழே ஒரு படம் மாட்டியிருந்தான். உங்க மனைவியா? அழகா இருக்காங்க என்றேன். அதற்கு அவன் I wish. என்றான். பிறகு அது ரங்கீலால நடித்த ஊர்மிளா மடோன்கர். தெரியாதா என்றான்.

      நமக்கு அந்நியப்பட்டவர்கள் நமக்கு என்ன தாக்கத்தை உருவாக்க இயலும்? கவிமணி அவர்கள், சிவாஜிகணேசனா? யாரது? என்ன தொழில் பண்ணறீங்கன்னு கேட்ட மாதிரித்தான்.

      நீக்கு
    2. நான் பார்த்த நானா படங்கள் மிகக் குறைந்த அளவு அதை வைத்துக் கொண்டே நான் நானாவின் ரசிகனாக இருந்தேன் அவரைப் பற்றி இப்போது இவ்வளவு அறிந்த பிறகு அவரை இழந்து விட்டோமே என்று தான் தோன்றுகிறது ஏகாந்தன் சார்

      நீக்கு
    3. நெல்லை சொல்லியிருப்பது சரிதான் என்றாலும் அவரைப்பற்றி அறிந்த பிறகு அந்த எண்ணம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இல்லையா

      நீக்கு
    4. எல்லோருக்கும் எல்லோர்பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இறந்துபோவதென்பதும் இந்த உலகில் அபூர்வமான விஷயமில்லைதான்.

      நிற்க, ஹிந்தி படம் பார்க்கும் வழக்கம் இல்லாதவர்களுக்கு, அந்த மொழி ஆளுமைகளைப்பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவுதான்.

      இருந்தும், இப்படி ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டது, க்ரூப்பில் யாராவது ஒருவராவது... அடடா.. என்ன ஒரு அருமையான நடிகர். அவர் நடித்த அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேனே.. என்று ஏதாவது சொல்லக்கூடும் என ஏனோ எதிர்பார்த்துவிட்டேன்..!

      நீக்கு
    5. உங்கள் ஏக்கமும் ஆதங்கமும் புரிகிறது.

      நீக்கு
    6. இப்போதைய தமிழ்ப்படங்கள், நடிக, நடிகையர், இசை, இயக்கம் ஆகியவை குறித்து எனக்கும் எந்தவிதமான தேடலோ கருத்தோ இல்லை. அவங்க எல்லாம் யாருனே தெரியாது. விஸ்வநாத் அன்ட் சன்ஸில் நடிச்ச கதாநாயகி நடிகை மலையாளம் எனவும், தமிழ்ப்படங்களிலும் நடிச்சிருக்கார் எனவும் கேள்விப் பட்டேன். இன்னொரு படம் இதே போல் வயசு வித்தியாசத்தில் காதலிப்பது குறித்த ஓர் படமும் இவர் நடிச்சு வந்திருப்பதாகச் சொன்னாங்க. அதில் கதாநாயகர், மமூட்டியோ, மோகன்லாலோனு நினைக்கிறேன். இந்த நடிகை கொஞ்சம் நதியாவின் மானரிசங்களைக் காப்பி அடிப்பதாக எனக்கு விஸ்வநாத் அன்ட் சன்ஸைப் பார்த்தப்போ தோன்றியது. இவரும் அழகுதான் எனினும் நதியாவின் எழிலே வேறே மாதிரி. ரொம்ப இயல்பாகப் பக்கத்து வீட்டுப் பெண் அடிக்கும் லூட்டியைப் பார்க்கிறாப்போல் இருக்கும். மாதுரி தீக்ஷித் பழம்பெரும் நடிகை மதுபாலாவைப் போல் காப்பி செய்து நடிப்பார்.

      நீக்கு
    7. ஆ..  மாதுரி தீக்ஷித்..  என் அபிமானள் 

      நீக்கு
  7. ஒய்ஜா போர்டு பற்றி ஶ்ரீராம் எழுதியிருப்பது உண்மைதானா என்று இன்று இரவு ஒய்ஜா போர்டை உபயோகித்து ஆவிகளிடம் கேட்டுவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள்

      நீக்கு
  8. லால் பகதூரிடம் வந்து சென்றவர் சிறிது நேரத்தில் திரும்ப வந்து கோரிக்கையில் மாற்றம் செய்யணும் ஒரு தவறு நேர்ந்துவிட்டது என்று சொன்னால் குப்பைக் கூடையில் பார் என்று சொல்வாரோ? தவறான தகவலாகத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு எளிதாக ஒரு பெரிய தலைவரை மீண்டும் மீண்டும் வந்து சந்திக்க முடிந்து விட முடியுமா இதையெல்லாம் யோசிக்காமல் இருந்திருப்பார்கள் அவர்கள்

      நீக்கு
  9. பூகம்பம்...... மனைவியாக இருக்கும் வரைதான் கணவனுக்கு முதல் மரியாதை. குழந்தைகள் வந்துவிட்டால் தாயின் உலகமே அவர்களாகிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம் என்று ஒரு பாடலில் வரும் ஒரு படத்தில் விசு சொல்வார் நீங்கள் எல்லாம் கட்டில் உறவை விட தொட்டில் உறவை தாண்டி பெரிதாக கருதுகிறீர்கள் என்பார்

      நீக்கு
    2. எல்லோருமே இப்படித் தான் சொல்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி இல்லை. இந்த விஷயத்தில் எங்க பெண்ணும், பிள்ளையும் என்னைக் குறை சொல்லுவாங்க. அப்பா இருந்தால் நீ எங்களைக் கவனிக்கவே மாட்டேங்கறே என்பார்கள். :( நான் என்னமோ மூணு பேரையும் தான் கவனிச்சுப்பேன்.

      நீக்கு
    3. ரொம்ப அபூர்வம். விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு!

      நீக்கு
  10. //செல்ல அழுகை
    சிணுங்கல்.
    விடாத அழுகை
    பிடிவாத அழுகை...
    பசி அழுகை
    வலி அழுகை
    உன் அழுகைகளுக்கு
    அர்த்தம்
    சொல்லிக்கொடுத்துவிட்டு
    அப்புறம் அழேன்.
    வார்த்தைகள் வரும்வரை
    அதுதானே உன் மொழி!//
    பேத்தி வந்ததும் ஸ்ரீராமின் கவிதைக் கருவும் மாறி விட்டதே? ஆனால் இந்தச் சிரிப்புக்களாலேயே தனக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிய வைச்சுடுமே குட்டிப்பாப்பாங்கல்லாம். அதனால் சிரிப்பே இப்போதைக்கு அதன் மொழினு ஏத்துப்போம். இன்னும் முகம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் விதம் விதமாகப்புகாரெல்லாம் கொடுக்கும் பாருங்க. அழுகையும், சிரிப்பும் சேர்ந்து வரும். திடீரென யாரோ அடிச்சுட்டாற்போல அழும். அடுத்த கணமே சிரிப்புப் பொங்கும். உலகிலேயே அழகான விஷயம் இது மட்டும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை மட்டுமா.. பார்த்துப் பார்த்து ரசிக்க இன்னும் எவ்ளோ இருக்கு!

      நீக்கு
    2. நான் கொஞ்சம் போலக் கோடி காட்டி இருக்கேன். அம்புடுதேன். மூன்றாம் மாதம் பிறக்கும் முன்னர் கை, கால்களைத் தானே செக் செய்துக்கும் பாருங்க. கால்களைத் தூக்கிக்கொண்டு கால் விரல்களைக் கைகளால் பிடிச்சுண்டு பார்க்கும் கீழ்க்கண்ணால். கை விரல்களைப் பிரித்து வைச்சுண்டு ஒவ்வொரு விரலாய்ப் பார்க்கும். சந்தோஷத்தில் கத்தும். முகம் பார்த்துப் புரிந்து கொண்டாலோ அமர்க்களம் தான்!

      நீக்கு
    3. காத்திருக்கிறேன். கடவுளின் கருணை.

      நீக்கு
  11. சீன பூகம்பச் செய்தியிலும் சாவித்திரி புலே செய்தியிலும் இரண்டு முறைகள் ஒரு பத்தித் திரும்பவும் இரு முறை வந்திருக்கின்றன.
    லால்பஹதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் ஆகியோர் தங்கள் சொந்தக்குடும்பம் ஆனாலும் தங்கள் பதவியைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்போப் பிரதமரும் அப்படித் தான் என்றாலும் அதைக் கேலி செய்பவர்களே அதிகம். நேரம்! விருச்சிக ராசியே அதிகம் அடி வாங்கும் என்பது உண்மையாகிறது. :))))

    மருது பாண்டினு படம் வந்ததெல்லாம் தெரியாது. ஆனால் ராம்கியும் நிரோஷாவும் உயிருக்குயிராய்க் காதலித்ததும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதும் ராதிகாவுக்குப் பிடிக்கலை என்பதும் மீறித் திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது பரபரப்பாகப் பேசிப்பார்கள்.

    பாரதி ராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம்னு படம் வந்திருக்கா? அதுக்கு முன்னாடியே ஜெய்சங்கர், நாகேஷ் நடிச்சு பொம்மலாட்டம்னு ஒரு படம் காமெடினு நினைவு வந்திருக்கே? அது நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கேன். இது பத்தி இன்னிக்குத் தான் தெரியும். நானா படேகர் பிடித்த நடிகர். நன்றாகவும் நடிப்பார். நீங்க சொல்லும் அந்தக் காட்சி இன்னமும் ரீல்ஸ் என்று சொல்கிறார்களே அதில் பார்க்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு முறை வந்திருப்பது போல தோற்றம் காட்டிய ஒன்றை நீக்கி இருக்கிறேன்.

      ஆன், மருதுபாண்டி   .மதுரையில் ராம்கிக்கு விசிறிகள் அதிகம்.  அவர் மதுரைக்காரர்.

      நீக்கு
  12. ஒய்ஜா போர்டு பற்றிய தகவல்கள் சுவாரசியம். இப்போவும் இதில் விளையாடுபவர்கள் இருக்காங்களானு தெரியலை.

    இப்போல்லாம் திரு ராமன் அவர்கள் சொல்லி இருப்பதைப்போல மாரல் வகுப்புக்கள் பள்ளிகளில் இல்லை. மாரல் வகுப்புக்கள் என இல்லாமல் எங்களுக்கெல்லாம் பாடத்திலேயே ஒண்ணாவது முதல் ஔவையின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், போன்றவை இருந்தன. நன்னெறி விளக்கம், நாலடியார், இன்னா/இனியா நாற்பதுகள் போன்றவை எல்லாம் 3,4,5 வகுப்புக்களிலேயே வந்து விட்டன. ஐந்தாம் வகுப்பில் பாரதி பாடல்கள், திருக்குறள் போன்றவையும் ஆங்கில எழுத்துக்களும் ஆரம்பித்தன. இப்போல்லாம் ஆரம்பமே ஆங்கில எழுத்துக்களில் தான். ஆனாலும் மாணவ, மாணவிகளிடம் எதையும் தாங்கும் மனோபாவம் அறவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே இன்னமும் வொய்ஜா போர்ட் விளையாடுபவர்கள் இருக்கரியார்களா தெரியவில்லைதான்.

      மாரல் சைன்ஸ் வகுப்புகள் என் மகன்கள் பள்ளியில் படிக்கும்போதே தூக்கி விட்டார்கள்.

      நீக்கு
  13. உலகின் முதல் ஆசிரியர் தக்ஷிணாமூர்த்தி தான். மாணவர்கள் சனகாதி முனிவர்கள்.

    நானா படேகர் கார்கிலுக்குச் சென்றது அப்போவே படிச்சிருக்கேன். நானா படேகர் பற்றி அமிதாப் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை.

    முதல் ஜோக் பலமுறை படிச்சது. அந்தக் காலத்து விகடனிலேயே பார்த்திருக்கேன்.
    இரண்டாவதும். அப்போல்லாம் இந்த ரிக்ஷாக்களைப் பார்த்து அதை இழுக்கும் மனிதர்களையும் பார்த்துப் பாவமாய் இருக்கும். வருந்தி இருக்கேன். அறுபதுகளின் ஆரம்பத்தில் முதல் சென்னை விஜயத்தில் பார்த்தேன். மதுரையில் எனக்குத் தெரிஞ்சு சைகிள் ரிக்ஷ்தான். இந்த மாதிரி ரிக்ஷாக்கள் பார்த்ததே இல்லை. அதோடு மதுரை ரிக்ஷாக்களில் உட்காரவும் சௌகரியமாக இருக்கும். இதிலெல்லாம் உட்கார்ந்தால் அவங்க இழுப்பதற்காகத் தூக்கும்போது ரொம்பவே மேலே போயிடுவோம். பயம்மாவும் இருக்கும். ஒரே முறை ஏறிட்டுப் பாதியில் இறங்கிட்டேன்.

    அடுத்தது இஃகி,இஃகி,இஃகி, இஃகி.

    மனிவியைக் குறித்துப் பெரும்பாஅலான இந்தக் கருத்து இன்றளவும் பொருந்துகிறது என்பதே உண்மை. அதிலும் சிலர் மனைவி கோவித்தால் சப்பாடே கிடைக்காது என்னும் ரீதியில் எழுதுகிறார்கள். எந்த அளவுக்கு உண்மைனு தெரியலை. :(

    ம்ம்ம்ம். இப்படியும் ஒரு அசமஞ்சம். :(

    ஏதோ விட்டுட்டாற்போல் இருக்கு. மனதில் கொஞ்சம் நெருடலாக இருக்கு. என்னனு புரியலை. ஒரு வேளை மருமகள் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஆஸ்பத்திரி அனுபவங்களோ? ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உலகின் முதல் ஆசிரியர் தக்ஷிணாமூர்த்தி தான். மாணவர்கள் சனகாதி முனிவர்கள். //

      ஆஹா....

      அந்த ரிக்ஷவாலா ஜோக் முன்னரே எவந்திருக்கிறது என்று எனக்கும் தோன்றியது.  சரி, இருக்கட்டும், முதலில் ஸ்டாக்கை காலி செய்வோம் என்று போட்டு விட்டேன்.  இங்கு போட்டானதும் அவற்றை முகநூலில் போடுவேன்.


      '' ஏதோ விட்டுட்டாற்போல் இருக்கு. மனதில் கொஞ்சம் நெருடலாக இருக்கு. என்னனு புரியலை. ஒரு வேளை மருமகள் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஆஸ்பத்திரி அனுபவங்களோ? ம்ம்ம்ம்ம்ம்? //

      அனுபவங்களை எழுதலைங்கறீங்களா?  அப்படிப் பார்த்தா எழுத நிறைய இருக்கு...

      நீக்கு
  14. நானா படேகரின் படமொன்றை முதன்முதலில் சோமாலியாவில் (வீடியோ கேசட்டில்) பார்த்தேன். இவனுக்கு முன்னால் நம்ம கமலஹாசன்லாம் ஒன்னுமேயில்லே என நினைக்க நேர்ந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப கேஷுவலா நடிப்பார்.  நான் முதன் முதலில் நானாவைப் பார்த்தது ராஜு பன்கயா ஜென்டில்மேன். 

      "கியாஹுவா..  யே இஸே கியாஹுவா..."

      நீக்கு
    2. நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நானாவின் படங்கள் வெகுசிலவற்றைத்தான் பார்த்திருக்கிறேன். அதுவே போதும், அவர் நடிப்பு எத்தகையது எனச் சொல்ல.

      நீக்கு
  15. ..அவரைப் பற்றி இப்போது இவ்வளவு அறிந்த பிறகு அவரை இழந்து விட்டோமே என்று தான் தோன்றுகிறது..//

    அவரது நடிப்புத் திறன் ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில் நானா என்றொரு மனிதன்! ஆஹா! அதைப்பற்றியும் அறிய நேர்கையில், அது நம்மைக் கவரத் தவறியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஒவ்வொரு விவசாயிக்கும் தன் சொந்தப பணத்திலிருந்து 15000 ரூபாய் தந்த மனித நேயம். 

      நீக்கு
  16. பூகம்பம் செய்தி மனதை உலுக்கியது. அந்த வாசகம் . "நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள். " நெஞ்சை தொட்டு நிற்கிறது.

    ஜோக்ஸ் ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. செல்லச் சிணுங்கல் கவிதை மிக மிக அற்புதம். அதற்குக் கீதா சொல்லி இருக்கும் பதிலும் மிக மிக மிக சுவாரஸ்யம். நம் மெல்லுணர்வுகளை மேம்படுத்தும் குழந்தைகள் என்னாளும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. வொய்ஜா போர்ட் விவரங்கள் அருமை.

    மனிதர்களின் ஆழ்மனதின் செயல்பாடே (Ideomotor Effect) காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

    ஆய்வு சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
  20. மனசாட்சியம் பதிவும் , படமும் அருமை,
    உங்கள் கவிதைக்கு யார் காரணம் என அறிந்து கொண்டேன்.
    குழந்தையின் சிரிப்பு அடிக்கடி தூக்கத்திலும் நிகழும் கண்மூடி சிருக்கும் போது பார்க்க மிக அழகாய் இருக்கும். அப்போது அம்மாசொல்வது இறைவன் குழந்தையுடன் விளையாடுகிறார் என்று.
    முதல்சிரிப்பு உங்களுக்கு தான் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  21. //"நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்,"//
    தாயின் தியாகம் அன்பின் மறு உரு. செய்தியை படிக்கும் போது கண்ணில் நீர் வந்தது இன்று படிக்கும் போதும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  22. நடிகர் நானா படேகரின்நடிப்பு பிடிக்கும் எனக்கு .
    பாரதிராஜா வரை வைத்து எடுத்த படம் பார்த்து இருக்கிறேன். ரஜினியுடன் நடித்த படமும் பார்த்து இருக்கிறேன்.சில இந்திபடங்களும் பார்த்து இருக்கிறேன். அவர் சிரிப்பை வைத்து நிறைய ரீல்கள் வந்தது. நல்ல நடிகர் . அவருக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  23. //இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர் சாவித்ரிபாய் புலே//
    அறிந்து கொண்டேன்.
    மற்றவைகளை நெரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!