ஜோசியர் சொன்னபடி வேறு ஒரு கம்பெனிக்கு நான் ரிப்போர்ட் செய்ய ஆரம்பித்தேன் என்று சொன்னேன். அது ஒரு ஆயில் கம்பெனி. (கல்ஃப் தேசங்களில் ஆயில் கம்பெனி வேலை அல்லது அதற்கான மிஷினரி சப்ளை பண்ணும் கம்பெனி வேலை என்பது பெரிய விஷயம். அதெல்லாம் கிட்டத்தட்ட அரசு வேலை மாதிரி. சேர்ந்துவிட்டால் (அல்லது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து deploy பண்ணி அங்கு கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டால்) அந்த வேலை தொடரும். பெரும்பாலும் வேலையிலிருந்து அனுப்ப மாட்டார்கள். அந்தக் கம்பெனி துறைத்தலைவரின் நன்மதிப்பைப் பெறணும், வேலையில் கவனத்தையும் சின்சியாரிட்டியையும் காட்டணும். அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. அதாவது அங்கு பெரிய பொசிஷனில் இருப்பவர், இவன் நமக்குப் போட்டியா வர வாய்ப்பு இருப்பதுபோல நடந்துகொள்ளக் கூடாது. நான் பொதுவா இந்த குணங்கள் உள்ளவன். கூடுதல் வேலையும் செய்வேன், அப்படிச் செய்கிறான் என்று ரிப்போர்டிங் பாஸ் எண்ணும்படி நடந்துகொள்வேன். அவங்க என்ன ரூல் சொல்றாங்களோ அதை அப்படியே கடைபிடிப்பேன்.
முதலில் மூன்று மாதங்கள் என்றவர், என்னையே அந்தப் பணியில் தொடரச் சொன்னார். அந்தப் பணி கஷ்டமானது அல்ல. அதிலேயே பலப் பல வருடங்கள் பணி செய்தால், நம்முடைய competence போய்விடும். சுகமான வேலைக்கு நாம் பழகிவிடுவோம். காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை வேலை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. அவ்ளோதான். அதே நேரத்தில் ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் வேலை பார்த்தால், வேலை மிக அதிகமாக இருக்கும், பலவித கம்பெனிகளுக்கான ப்ராஜக்டுகளையும் பார்க்கணும், வெற்றிகரமாகவும் இருக்கணும்.
அந்த
ஆயில் கம்பெனியில் கன்சல்டண்டாக வேலைக்குச் சேர்ந்த ஐந்தாவது மாதத்தில் எனக்கு ரெஃபெரன்ஸ்
மூலம் இரண்டு வாய்ப்புகள் வந்தன. ஒன்று கல்ஃப் ஏர் கம்பெனியில் கணிணித் துறை வேலை.
அப்போது கல்ஃப் ஏர் கணிணித் துறையை ஒரு அமெரிக்க சார்பு கம்பெனி பார்த்துக்கொண்டிருந்தது.
என்னுடைய Y2K project மற்றும் வேறு பல கணிணி அறிவினால், அவங்க எனக்கு ஒரு ஆஃபர் கொடுத்தாங்க.
நான் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தைவிட 60 சதம் அதிகம். அதுதவிர, நிறைய பெனெஃபிட்ஸ்.
உதாரணமா, வருடத்துக்கு 20 (அல்லது அதைவிட அதிகமா என்பதை ஆஃபர் லெட்டரைப் பார்த்தால்
தெரியும்) ஒன் வே டிக்கெட் எந்த டெஸ்டினேஷனுக்கும். அதே சமயத்தில், நான் Y2K project செய்த ரீடெயில்
க்ரூப்பிலும் எனக்கு ஒரு ஆஃபர் லெட்டர் கொடுத்தாங்க. அது 50 சதம் அதிகம். நானும் புது வேலையில் சேரும்
நேரம் வந்துவிட்டது என்று எண்ணினேன். என் பாஸிடம்
பேசுவதற்காகச் சென்றபோது, அவரோ, உனக்கு நீ இப்போது கன்சல்டண்ட் ஆக இருக்கும் கம்பெனியே
ஆஃபர் தர்றாங்க (அதுவும் 60 சதம் அதிகம்). நீ எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்.
நான் தலையிட மாட்டேன். எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் என்னுடைய ஆதரவு உனக்கு உண்டு.
நீ சொன்னபடி 3 ½ வருடங்களுக்கு மேல் இங்கே பணி புரிந்துவிட்டாய் என்றார்.
ரீடெயில் கம்பெனியில் ஏற்கனவே நான் பல மாதங்கள் சாஃப்ட்வேர் சப்போர்ட் செய்திருந்ததால், அங்கிருந்த முக்கியஸ்தர்கள் அனைவரையும் அறிவேன். அவர்களுக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது. அந்த கம்பெனியின் பாலிடிக்ஸில் அகப்பட்டுக்கொள்ளாமல், யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதும் புரிந்திருந்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்தக் கம்பெனிக்கு நான் வேலை செய்திருந்திருக்கிறேன். இருந்தாலும், கல்ஃப் ஏர் கம்பெனி வேலைக்குச் செல்லலாம் என்று நான் முடிவு எடுத்துவிட்டேன். இண்டர்வியூ எல்லாம் நல்லா பண்ணியிருந்தாலும், என்னுடைய புதிய பாஸ்கள் எனக்கு அதுவரை தெரியாதவர்கள். ஆனால் என்னைப் பரிந்துரைத்திருந்தவர், (என்னைவிடச் சிறியவர்), அந்தக் கம்பெனி நல்லா இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதனால் நான் ஆஃபர் லெட்டரை சைன் பண்ணிக் கொடுக்க நினைத்துவிட்டேன் (அல்லது கொடுத்துவிட்டேன் என்று நினைவு). அவர்கள் நான் வேலை பார்த்திருந்த கம்பெனியிலிருந்து ஒரு கடிதம் கேட்டிருந்தார்கள், அது தவிர சில டாகுமெண்டுகள் கேட்டிருந்தார்கள். என்னுடைய ரிலேஷன்ஷிப் காரணமாக அந்த ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளருக்கு, நான் அவருடைய கம்பெனியில் சேர முடியாததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.
ஒரு வியாழன் அன்று, அந்த ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளர் என்னைக் கூப்பிட்டார். அவருடைய அலுவலகத்துக்கு வரச்சொன்னார். அன்றைக்குத்தான் என் சகோதரன் சௌதியிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் என்னிடம் கல்ஃப் ஏரில் சேரும் என்னுடைய முடிவை சரி என்று சொல்லியிருந்தான். ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளரின் அலுவலகத்துக்குச் சென்றபோது, அவர் அதிகச் சம்பளத்திற்காக அப்படி முடிவெடுக்கிறாயா? இங்க வருடத்துக்கு 15 சதம்கூட நாங்கள் சம்பளத்தை அதிகமாக்குவோம், அதற்கெல்லாம் ஒரு லிமிட்டும் கிடையாது. நீ எங்கள் கம்பெனி கணிணி துறையில் சேர்வாய் என்று நான் ரொம்பவே எதிர்பார்த்தேன் என்றெல்லாம் ரொம்ப நேரம் பேசினார். நீ சரி என்று சொன்னால், நான் ஆஃபர் லெட்டரை கல்ஃப் ஏர் ஆஃபருக்கு மேட்ச் பண்ணுவேன், உன் கடிதம் இன்னும் எம்.டிக்குப் போகவில்லை. ஆனால் அந்த புது ஆஃபரை வைத்துக்கொண்டு நீ கல்ஃப் ஏரில் பேரம் பேசக்கூடாது என்றார். அவருக்கு என் மீது ரொம்பவே நம்பிக்கை. என் மனதிலும், நம்மை விரும்பிக் கேட்கும் கம்பெனியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றிவிட்டது. உடனே அவரிடம், ரீடெயில் கம்பெனியிலேயே சேர்ந்துவிடுகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். எதனால் சட் என்று மனது மாறினேன் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், நம்மை விரும்பும் கம்பெனி பெட்டர் என்று மனது சொல்லியது.
அந்த வியாழனன்று நடந்த அந்தச் சந்திப்பு என்னுடைய தலையெழுத்தை மாற்றிவிட்டது. அங்கு என்னுடைய பொசிஷன், குழுமத்தின் டெபுடி I.T. மேனேஜர். அப்போது என்னுடைய முடிவு சரியா என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து, நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நம்முடைய முடிவு சரியா, தவறா என்பதும், நமக்கு நல்லதுதான் நடந்திருக்கிறதா என்பதும் பலப் பல வருடங்கள் கழித்து இப்போது சிந்திக்கும்போது, எல்லாமே நல்லதுக்குத்தான் என்று தோன்றுகிறது. ஆனால் ரீடெயில் க்ரூப்பில் சேர்ந்த அடுத்த மூன்று வருடங்கள் எனக்குக் கொஞ்சம் கஷ்டமான காலமாக அமைந்துவிட்டது.
ஜோசியர் கூறிய பிரகாரமே ஏப்ரல் 1999ல் டேட்டாமாஸிலிருந்து, புது கம்பெனியில் (ரீடெயில் குழுமம்) சேர்ந்தேன்.
இது என்னப்பா… எல்லாத்துக்கும் ஜோசியரிடம் கேட்பான் போலிருக்கு என்று நினைக்கவேண்டாம். 3 வருடங்களுக்குப் பிறகு வேறு கம்பெனியில் வேலைக்குச் சேரலாம் என்று நினைத்ததால், ஜோசியரிடம் அவருடைய எண்ணத்தைக் கேட்கச் சென்றேன். அதுபோல புது கம்பெனியில் சேர்ந்தபிறகு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டேன் என்று சொன்னேன் அல்லவா? கடைசி மூன்று மாதத்தின்போது, ஜோசியரை கன்சல்ட் செய்தேன், வேறு வேலைக்குச் செல்லலாமா, நல்ல குழுமத்தில் சேர்ந்தும், இந்தக் கஷ்டம் எதனால் வந்தது (கிரக நிலை போன்று) என்று கேட்டேன். அதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
இனி படங்கள் தொடர்கின்றன.



இயற்கைக்கு முன் மனிதன் எம்மாத்திரம்?

நான் வெறும்ன பொழுது போக்குவதற்காகப் பறக்கிறேனா? என்னைப் போய் படமெடுக்கிறாயே.. நான் பார்த்துக்கொண்டிருப்பது நீ எடுத்த அடுத்த படத்தில் உள்ளதை

நமக்கு அமைதியாகத் தெரியும் அணைக்கட்டின் நீர்ப்பெருக்கில் தன் உணவான மீனைத் தேடுகிறதோ அந்த கருடன்?

இந்த மாதிரி, நீரின் (பெரிய ஏரியின்) நடுவே இருக்கும் திட்டில் வீடு
கட்டிக்கொண்டு அமைதியாக காலத்தைக் கழிக்கத் தோன்றுகிறதா?



கேரளாவில் தென்னை மரங்களுக்குக் குறைவில்லை. ஆனாலும் ஒரு இளநீர் விலை மிக அதிகம். வர்கலாவில், இளநீர் விலையை டாலரில் போட்டிருந்தார்கள்.

குன்றுகள், மலைகள் மேகங்கள்… அவை உறவாடும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது..




தொங்குபாலத்தில் மக்கள் செல்வது தெரிகிறதா?



இரவில் ஒளியேற்றப்பட்ட நீரூற்றுக்களுடன் மிகவும் மிளிரும் என்று நினைக்கிறேன்.


அணையில் நீர் சிறிது குறைவாக இருந்த தால், நடுவே தீவுகளும் திட்டுக்களும் தோன்றுகின்றன. அணையில் சிறிய படகில் சென்றால் நன்றாக இருக்கும். ஆனால் கவிழ்ந்துவிட்டால்?



அழகிய தாமரை…கோயிலுக்கும் நாட்டுக்கும் மிகத் தேவையானது.
தொடரின்
இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் கடைசிப் பகுதியைக் காணலாம்.
(தொடரும்)
======================================================================================
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார். ஞாயிறு பகுதியை எழுதி அனுப்பியது பல மாதங்கள் முன்பு. அன்று என் பிறந்த நாளா என்று பார்த்தேனே தவிர, தீபாவளி போன்ற விசேஷ நாளா என்று பார்க்கவில்லை. இப்போது தோன்றுகிறது, இன்றைய பகுதிக்கு கோயில் சம்பந்தபானதை எழுதியிருக்கலாமே என்று.
நீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநட்புகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இதுவும் இன்னொரு நாளே என்ற அளவில்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது. பசங்க மகிழ்ச்சிக்காகவும், அவங்க பிற்காலத்துல நாம் செய்வதைப் பார்த்துத்தானே நடந்துகொள்வார்கள் என்பதாலும் எதையும் விடுவதில்லை. மனதளவில் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.
நீக்குஊருக்கெல்லாம் நியாயம் பேசினாலும் தமக்கென்று வரும்போது, பில் போடாவிட்டால் இத்தனை லாபம், பில்லை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் பொதுவா எல்லோருக்கும் இருப்பது உண்மைதான்.
பதிலளிநீக்குஅரசாங்கம் என்னதான் வரி வசூலிக்க சட்டங்கள் போட்டிருந்தாலும், அதனை ஏமாற்றும் வித்தையை பரவலாக வியாபாரிகளும், அவர்கள் மூலமாக மக்களும் கற்றுக் கடைபிடிக்கிறார்கள்.
நாம் நியாயமாக இருந்தால் பாஸும் நியாயமாக இருப்பார் என்று தெரிகிறது. உங்கள் அனுபவம் அருமை.
பதிலளிநீக்கு// வேறு வேலைக்குச் செல்லலாமா, நல்ல குழுமத்தில் சேர்ந்தும், இந்தக் கஷ்டம் எதனால் வந்தது (கிரக நிலை போன்று) என்று கேட்டேன். //
பதிலளிநீக்குவடிவேலு காட்சித்துணுக்கு நினைவுக்கு வந்தது.
அது என்ன துணுக்கு? நினைவுக்கு வரலையே ஶ்ரீராம்?
நீக்குஅதுவும் தவிர, வெளியிடப்போகும் கேஜிஜி அவர்களோ நீங்களோ, அன்று தீபாவளி, மாற்றுப் பதிவு தாருங்கள் எனச் சொல்லியிருக்கலாமே
அது வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம்பெறும் காட்சி. ஜோசியரிடம் இந்த ஊரிலேயே இருப்பதா பிசினஸ் ஆரம்பிப்பதா அல்லது துபாய் போய்விடுவதா இன்று ஆலோசனை கேட்பார்.
நீக்குஎனக்கும் தீபாவளி நினைவெல்லாம் இல்லை நெல்லை.
நான் பெரும்பாலும் முக்கிய முடிவுகள் எடுக்கத் துணையாக ஜோதிட ஆலோசனை செய்வேன். ஜோதிடர் கூறுவது சரியாக இருக்கும், நடக்கும் என்ற எண்ணத்தினால் அல்ல. உனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் மோசமான நேரம், கிரக நிலை என்று சொன்னால், வேலை மெனெக்குட்டு, வேறு வேலை தேடமாட்டேன், இல்லை இருக்கும் இடத்தில் அதிகாரம் காண்பிக்க மாட்டேன், எக்ஸ்ட்ரா ஜாக்கிரதை உணர்வோடு இருப்பேன்.அவ்ளோதான்.
நீக்குதீபாவளிக்காக சிறப்பு குறிப்பு
பதிலளிநீக்குவெளியிட்டிருக்கலாம்...
பதிவு வழக்கம் போல...
தவறவிட்டுவிட்டேன் துரை செல்வராஜு சார். நினைவிலிருந்தால் பதிவை மாற்றியிருப்பேன்.
நீக்குநான் இருக்கும் இடத்துக்கு அருகே மிகப் பெரிய மார்க்கெட் பகுதி இருக்கிறது. வித விதமான பொருட்களுக்கு தனித்தனி ஏரியா (பிளாஸ்டிக் பொருள், எலெக்டிரானிக்ஸ், துணி வகைகள், ஸ்டேஷனரி, மின் உதிரி பாகங்கள், ஹார்ட்வேர், சேனடரி, விளக்குகள், என வகைகளுக்கு அளவே இல்லை. ஹோல்சேல் மார்க்கட், பல சதுர கிமீ.
பதிலளிநீக்குபெரும்பாலும் கேஷ் டீலிங். எங்கள் வளாகத்திலேயே பெரும்பாலும் ஜெயின்ஸ், மார்வாரிகள். பக்திமான்கள். ஆனால் கேஷ் டீலிங். போன் பே போன்ற எதையும் உபயோகிக்க மாட்டார்கள். கேஷ்தான்.
ஆனால் தேசபக்தி, இந்து நாடு என்ற பேச்சுகளுக்குக் குறைவுல்லை. மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகள் (மாற்று மதம்) பலரும் மனைவி பெயரில் வங்கிக் கணக்கில் போன் பே பெற்றுக்கொள்வார்கள்.
சரி.. இவர்களைக் குறை சொல்ல ஒரு அரசியல்வாதிக்காவது உரிமை இருக்கா? எல்லாப் பயலும் டிரஷ்ட் வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கறாங்க.
இனி மக்களும் இதனைக் கற்றுக்கொண்டு, அவனவன் டிரஸ்ட் ஆரம்பித்து, சம்பளத்தை அதில் வரவு வைத்து, டிரஸ்ட்லேர்ந்மு வருடா வருடம் அவனவன் உறவினர்களுக்கு உதவி செய்து (அண்ணன் பையனுக்கு என் டிரஸட்லேர்ந்து பணம், என் பையனுக்கு அவன் டிரஸ்ட்லேர்ந்மு) அரசாங்கத்துக்கு பைசா வரி கூட கட்டாமல் இருந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு டிரஸ்ட் என்ற பெரிய குகையை அடைக்கத் தோன்றும். இப்போது தெரிகிறதா எதற்கு, எதிலிருந்து நடிகர்கள், மாறன்கள் உதவி செய்கிறார்கள் என்று?
பாரதத்தில் ஒரு ஊரில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை..
பதிலளிநீக்குஏனென்று தெரிந்து கொண்டு ஆன்ம சாந்திக்கு வேண்டிக் கொள்ளலாம்....
ஹெப்பார் ஐயங்கார்கள் எனப்படும், மேல்கோட்டையைச் சேர்ந்த ஐயங்கார்கள். தீபாவளி அன்று திப்புவின் படைகளால் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதின் நினைவாக.
நீக்குதங்களுடைய புரிதலுக்காகவும்
நீக்குதகவலுக்காகவும் நன்றி...
மாண்டயம் ஐயங்கார்கள். உங்களுக்கு வாட்சப்பில் விவரம் அனுப்பியிருக்கிறேன்
நீக்குசொல்ல நினைச்சேன். சொல்லிட்டீங்க. அப்பாவின் பள்ளி நண்பர் ஒருத்தர் செல்லப்பானு பெயர், அந்த ஊரில் இருந்து தான் பெண் எடுத்தார். பின்னால் அங்கேயே போய் நிரந்தரமாகத் தங்கி விட்டார். நாங்க போனப்போ எல்லாம் அவங்க நினைவே வரலை. அப்பா வருஷா வருஷம் போவார். அவங்க வீட்டிலே தான் தங்கி வைரமுடி சேவை பார்த்துட்டு வருவார்.
நீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். வைரமுடி சமயம், வெறும்ன படுத்துக்கொள்வதற்கும், ரெஸ்ட் ரூமிற்கும் வசதி கிடைத்தாலே மிக அதிகம் அந்தச் சிறு ஊரில். வைரமுடி சேவைக்கு நான் இருமுறையும் அது தவிர பல முறைகளும் அந்த ஊர் சென்றிருக்கிறேன்.
நீக்குஎல்லோரும் தீபாவளிக்கொண்டாட்டத்தில் மும்முரமாய் இருப்பாங்க போல. நான் இன்னிக்குக் காலையில் இங்கே வர முடியலையேனு நினைச்சேன். பார்த்தால் நெல்லை, ஸ்ரீராம், துரை செல்வராஜ் தவிர்த்து யாருமே வரலை.
பதிலளிநீக்குஎங்கெளுக்கெல்லாம் சாப்பிடுவதுதான் வேலை. மத்தவங்களுக்கு சமையல் வேலைகளும் இருக்கின்றனவே கீசா மேடம்...
நீக்குபடங்கள் பத்தித் தனியாகச் சொல்ல எதும் இல்லை. நீங்க ஒரு அருமையான ஃபோட்டோகிராஃபர். மிக அழகாயும் நுணுக்கமாயும் கவனிச்சுப் படம் எடுக்கறீங்க. மைசூர் பிருந்தாவனத்தை ஓரிரு முறைகள் விளக்கு அலங்காரங்களுடன் பார்த்திருக்கோம். கடைசிப்படம் தாமரை ரொம்பவே மனதைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குவரி விதிப்பதைப் பற்றி திரு ராமன் அருமையாகவும் சுருக்கமாகவும் சொல்லி விளங்க வைத்திருக்கார். ஆனாலும் வரி கட்டுவது என்பது நம் மக்களுக்கு ஒரு சுமையாய்த் தான் தெரிகிறது. அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் எங்க பையர் வீட்டுக்கு ஆரம்பத்தில் ஆறாயிரம் டாலர்கள் வரி கட்டிக் கொண்டு இருந்தார். இப்போ 2021இல் இருந்து வாடகைக்கு விட்டிருப்பதால் வரி கூடி இருக்கலாம். என்னனு தெரியலை. பெண்ணும் கிட்டத்தட்டப் பத்தாயிரம் டாலர் வரை வரி இருக்கும்னு நினைக்கிறேன். மாடியும், கீழுமாய் வீடு. எனக்கென்னமோ அங்கெல்லாம் வீடு வாங்குவதை விட அபார்ட்மென்டில் இருந்துடலாம்னு தோணும். அதிலும் சில பிரச்னைகள் இருக்கும்னு நினைக்கிறேன்.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.
நீக்குமேற்கத்தைய நாடுகளை ஒப்பிடாதீங்க. அங்க செலுத்தும் வரி, மக்களுக்கு எந்த வகையிலாவது வசதிகளாகத் திரும்ப வருகிறது. அங்குள்ள பள்ளிக் கல்வியில் 5 சதம்கூட நம்மிடம் கிடையாது (வசதி மற்றும் தொழில் நுட்பம்). இங்க செலுத்தும் வரி, ஊழலில் திளைக்கத்தான் போகிறது. திமுக, நூலகங்களுக்கு வாங்கிய நூல்களில் பெரிய ஊழல் செய்து கோடிகளைக் குவித்து இப்போ சந்தி சிரிக்குதே
ஏனைய நாடுகளில் லைப்ரரிகள் என அழைக்கப்படும் கட்டிடங்கள், அதற்குள் சென்று வாசிக்க வசதியாக வித வித நூல்கள்தான் உண்டு.
நீக்குஇங்கு இவர்கள் கொண்டுவந்திருப்பது என்ன.. ஒரு தனி உலகம்! அறிவுலகம்! ஆஹா! பெயரைக் கேட்டவுடனேயே அறிவு வெகுவாக வளர்ந்து, ஜொலிப்பதுபோல் நமக்குள்ளே ஒரு பிரமை.
அப்பேர்ப்பட்ட அறிவுலகத்தில் ஆயிரம் நடந்திருக்கும்தான். கோடிகள் கும்மாளம்போடும்தான்! அதற்காக உலகிலேயே முதன்முறையாக, அதுவும் நம்ம தமிழ்நாட்டிலே, ‘அறிவுலக’த்தை அறிமுகப்படுத்திய அதிமேதாவிகளைக் குறைசொல்லலாமா? வெளியே வெள்ளை, உள்ளெ.. கொள்ளை என்பது அவர்களின் குலதர்மமில்லையா !
பின்னே.. 1967 லிருந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கும் இவ்வளவு பகுத்தறிவை வைத்துக்கொண்டு அவர்களும் என்னதான் செய்வார்கள்?
யு.எஸ்ஸிலோ அல்லது ஐரோப்பிய நாடு ஏதேனும் ஒன்றிலோ நினைவில் இல்லை. பெற்றோருக்கு 3 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வரி குறையும் என்பார்கள். எதுனு நினைவில் வரலை. பொதுவாக வரி கட்ட மூக்கால் அழுபவர்களே அதிகம். உதாரணத்துக்கு இந்த டோல் கேட் வரியை எடுத்துக்கோங்க. எத்தனை பேர் மனம் சுளிக்காமல் வரி கட்டுகிறார்கள்? சாலையும் நல்லா இருக்கணும், அதே சமயம் வரியும் போடக் கூடாது. எல்லா இடங்களிலும் சுத்தமான கழிவறைகள் வேண்டும். ஆனால் நாங்க சுத்தமாப் பயன்படுத்த மாட்டோம் என்பார்கள். :( என்ன செய்யலாம். திருச்சி---கும்பகோணம் கல்லணை வழி காரில் சென்றால் கும்பகோணம் வரும் முன்னர் ஷெல் கம்பெனியின் பெட்ரோல் பங்க் ஒண்ணு இருக்கும். அங்கே கழிவறைகள் மேல் நாட்டினைப் போல் பராமரித்திருப்பார்கள். சுத்தமாய் இருக்கும். காஃபி, தேநீர், ஜூஸ்வகைகள், சான்ட்விச் வகைகளும் கிடைக்கும். அதை விட்டால் கும்பகோணம் பூராவும் சுத்தினாலும் எங்கேயும் நல்லா இருக்காது. முன்னாடி எல்லாம் மகாமகக் குளத்துக்கு எதிரே ராயாஸ் ஓட்டலில் நல்லா இருக்கும். இப்போ அங்கேயும் கூட்டம் சமாளிக்க முடிவதில்லை. ரூம் போட்டுக் கொண்டு அரை நாளாவது தங்கினோம் என்றால் பரவாயில்லை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் ஜோதிட நம்பிக்கை,எல்லாமே நல்லதுக்குத்தான் என்ற எண்ணம் எல்லாம் அருமை. நடப்பது எல்லாம் இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டது என்று தான் நான் நினைப்பேன்.
பதிலளிநீக்குமற்றும் அணைகட்டு படங்கள் அருமை. அழகிய தாமரைதான்.
உண்மைதான். எல்லாமே முன்பே முடிவு செய்யப்பட்டவைகள்தாம். இருந்தாலும் நம் வாழ்க்கையை நாம் செம்மைப்படுத்தும் வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன
நீக்குகடைகளில் பில் போட்டால் அதியக் காசு, பில் வேண்டாம் என்றால் காசு குறைக்கப்படும் என்று நகை கடைகளில் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குகடைகளில் இரண்டு கணக்குகள் இருக்கிறது.
உணமையாக வரி கட்டுபவர்கள்.கட்டாதவர்கள் என்று எல்லாம் காலத்திலும் உண்டு என தெரிகிறது.
படங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளன.
பதிலளிநீக்குவாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்கு