நாங்க சென்னைல இருந்தபோது ஒருநாள் காஞ்சீபுரம் யாத்திரைக்குச் சென்றிருந்தோம். ஒரு நாளில் 12 வைணவ திவ்யதேசக் கோவில்களை தரிசனம் செய்யலாம். காலையில் பொங்கல், கொத்ஸு (7 மணிக்கு), மதியம் கலந்த சாதம், பிறகு இரவு திரும்பும் சமயத்தில் தையல் இலையில் காஞ்சீபுரம் இட்லியும் மிளகாய்ப்பொடியும் தந்தார்கள். பலப் பல வருடங்களுக்குப் பிறகு (40 வருடங்கள்) காஞ்சீபுரம் இட்லி சாப்பிட்டேன். அதை அவர்கள் ரொம்பவும் டிரெடிஷனல் முறையில் செய்திருந்தார்கள். (குடலைக்குள் மாவை வைத்து பல மணி நேரங்கள் வேக வைத்து, வட்டமாக 1 இஞ்ச் தடிமனில் கட் பண்ணி அதனை இரண்டாக வெட்டித் தந்திருந்தார்கள், ஆளுக்கு 3)