நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
9.11.15
8.11.15
ஞாயிறு 331 :: சிங்கம் 2
சுட்டி: பிலிகுலா மிருகக் காட்சிசாலையில் என்னைக் கண்டு பயந்த சிங்கங்கள், கண்ணை மூடி, படுத்துக்கொண்டு தூங்குவதுபோல நடிக்கின்றன!
7.11.15
பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
2) டாக்டர் டி.வி.தேவராஜன் எனும் மகத்தான ஒரு மருத்துவர்..
4) நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
8) இப்படியும் ஒரு மனிதரா... அசோக்.
9) எஸ்தர் அம்மா. இவரைப் பற்றிச் சுருக்கமாக முன்பே பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் பகிர்ந்திருந்தாலும், தில்லை யகத்து கீதா இப்போது விளக்கமாகப் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவும் அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.
10) இளைய தலைமுறை.. இனிய தலைமுறை.
6.11.15
4.11.15
வங்கி அனுபவம் - திகில் நிமிடங்கள்
ஒரு அவசிய வேலையாக பண்ருட்டி செல்ல வேண்டி இருந்தது.
விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்த சாலை.
நண்பர் பணம் கொண்டுவர மறந்து விட்டதால், அவர் தேவை இல்லை என்று சொன்னாலும், நீண்ட பயணத்தில் இருக்கிறோமே, எமர்ஜென்சிக்குக் கையில் இருக்கட்டும் என்று முடிவு செய்து, ATM ல் பணம் எடுக்கலாம் என்று அங்கிருந்த KVB ATM சென்றேன்.
முதல் முறை போட்டேன். சத்தம் மட்டும் வந்தது. ரிஸல்ட் எதுவும் வரவில்லை. இரண்டாம் முறை போட்டு 10,000 என்று தொகையையும் குறிப்பிட்டேன். உருளை உருளும் சத்தமும் processing என்று செய்தியும் வந்தது.
பல நொடிகளுக்குப் பின் Sorry, unable to proceed என்ற செய்தியுடன் ஸ்லிப் கையில் வந்து விழுந்தது. என்னவென்று பார்த்தால் மெஷினில் பணம் இல்லையாம்.
வெறுப்புடன் கிளம்பினோம்.
ஒன்றரை மணிநேரம் பயணம் செய்தபின் என்னுடைய அலைபேசியில் பத்தாயிரம் கிரெடிட் செய்யப் பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. கொஞ்சம் கவலைப் பட்டாலும் சரி என்று விட்டு விட்டேன்.
தொடர்ந்த வேகமான பயணத்தின் இன்னொரு முக்கால் மணி நேரம் சென்றபின், என் அலைபேசிக்கு என் வங்கியிலிருந்து வந்த "உங்கள் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் கழிக்கப் பட்டது" என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் திகில் வந்தது.
குறுஞ்செய்தி முன் பின்னாக மாறியிருக்கலாமா, என்ன ஆகி இருக்கும், மெஷினில் வங்கி அலுவலர்கள் வந்து பணம் வைத்ததும் நம்முடைய பணம் வெளியில் வந்து கொட்டி இருக்குமோ போன்ற சந்தேகங்கள் அரித்தன.
வங்கி வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் Sorry, unable to proceed என்ற செய்தி வந்த சீட்டையும், வங்கியிலிருந்து பணம் கழிக்கப்பட்டதாக வந்த செய்தியையும் 'வாட்ஸப்' மூலம் சென்னையில் எனது வீட்டுக்கு அனுப்பி, என் அண்ணன் மகனிடம் விவரம் சொல்லி, வங்கிக்குச் சென்று பார்க்குமாறு கூறினேன்.
அவர்கள் நேரம் ஆகிவிட்டது என்று கூறுவார்கள் என்றும் சொல்லி இந்தச் செய்தியைக் காண்பிக்கச் சொன்னேன்.
வங்கியில் அதே போலச் சொன்னாலும் கவலையை உணர்ந்து கணினியில் பார்த்து, வயிற்றில் பாலை வார்த்தார்கள்.
என்ன குறுஞ்செய்திச் சேவையோ, என்ன பணம் வழங்கும் சேவையோ...
என்னவோ போங்க..
===================================================
சமீபத்தில் ராணுவத்தில் பெண்கள் சேர்ந்திருக்கும் நிலையில் முன்பு கரியப்பா இது பற்றி முன்பு சொன்ன ஒரு கருத்தைப் பார்ப்போமா?
"சேனையில்
சேர்ந்து உழைக்க நம் நாட்டில் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். அதற்குப்
பெண்கள் முன்வர வேண்டியதில்லை. ராணுவ மருத்துவத்துறையில் மட்டுமே
அவர்களுக்கு இடம் உண்டு. அவர்கள் சிறந்த மனைவிமாராகவும், தாய்மாராகவும்
விளங்கட்டும்"
அவரின் வேறு சில கருத்துகள் :
"ராணுவத்தில்
அரசியலைக் கலப்பது விஷத்தைக் கலப்பது போன்றது.. அதை விலக்கி
வையுங்கள்.ஆனால் இந்தியப் ப்ரஜைகள் என்ற முறையில் அரசியலை அறிந்து
கொள்ளுங்கள். அதுபோதும்"
"மாணவர்கள் அரசியலில்
ஈடுபடக் கூடாது. சில அரசியல் கட்சிகளின் கோஷங்களில் மயங்கி,அவர்களது
பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றே மாணவர்களுக்கு நான் சொல்வேன்"
============================= =======
2.11.15
திங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை
ஏனென்றால் இதற்கு மாவு கொஞ்சம் வீண் ஆகும்.
தோசையை
மிக மிக மிக மெலிதாக அவர் சுருட்டிக் கொண்டுவந்து தட்டில் போடும் அழகே தனி. அவர்
அந்தப் பொன்னிற சுருட்டலை - தோசையைத் தட்டில் போடு முன்பே கை பரபரக்கும்!
கடை சின்ன கடைதான். கை கழுவும் இடத்திலிருந்து பார்த்தால் சமையலறை தெரியும்.
ஒரு
குட்டி டபராவில் தோசை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றி, டபராவின் அடி
பாகத்தால் பரத்தி விடுவார். கைத் திறமை. பரபரவென வட்டமாக மெலிதாக
உருவாகும் அந்தத் தோசை.
எவ்வளவுக்கெவ்வளவு மெலிதாக தோசையை வார்க்கிறோமோ, அந்த அளவு மாவு வீணாவது குறையும்!
தோசை
வேகத் தொடங்கு முன்பே ஒரு ஸ்பூன், அல்லது கரண்டி, அல்லது தோசை திருப்பியை
நெட்டுக் குத்தாக வைத்தோ, தோசை மேலே உள்ள மாவை மேலாக சுரண்டி எடுக்க
வேண்டும். நடுவில் ஓட்டை எதுவும் விழாமல் மாவை எடுப்பார்கள்.
மாவை ஊற்றியவுடன்
கல்லில் ஒட்டிக் கொண்டது பாருங்கள், அந்த லேயர் மட்டும்தான் கல்லில்
இருக்கும். பொன்னிறம் வந்தவுடன் தோசையின் நாலு ஓரமும் மெல்ல எடுத்து விட்டு, அதை அப்படியே சுருட்டி
எடுத்துத் தட்டில் போட வேண்டியதுதான்.
மெலிதான தோசை என்பதால் நிறைய சாப்பிடுவது வயிறு ரொம்பாது. ஆனால் பர்ஸ் காலியாகும்.
இதற்கு சட்னி, சாம்பார் எல்லாம் வைப்பார்கள்தான். ஆனால் அதை எல்லாம் தொட்டுக் கொண்டால் சீவல் தோசையின் ஸ்பெஷாலிட்டி போய்விடும் என்று எனக்குத் தோன்றும்.
வேறு எந்த ஹோட்டலிலும் இந்தச் சீவல் தோசை போடுவது போலத் தெரியவில்லை.
சில ஹோட்டல்களில் "பேப்பர் ரோஸ்ட் சொல்றீங்களா...? இதோ கொண்டு வரேன்" என்று சென்று, நான் சொல்லும் தோசையை விட கனமாக ஒரு ரோஸ்ட் கொண்டு வருவார். சமயங்களில் நடுவில் கருப்பாய் தீய்ந்து கூட இருக்கும்!
"இது
இல்லீங்க... அது வேற..." என்று சோகத்துடன் கிளம்புவேன்.. அப்புறம் கேட்பதே
இல்லை. ஓரிரு முறை வீட்டில் செய்திருக்கிறேன். பாஸ் திட்டுவார்.
"பாதி மாவ வழிச்சு கீழ போட்டா, நான் எதுக்கு மாவரைக்கணும்?"
வழித்து எடுத்த மாவை ஏதாவது உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பச்சை மிளகாய், கரி, கொத்துமல்லி போட்டு 'குணுக்கு' போலப் போடலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











