7.8.19

புதன் 190807 :: பரமசிவனை உலகின் முதல் லெஃப்டிஸ்ட் எனலாமா?


சென்ற வாரம் பல கருத்துரைகளை மனமுவந்து பதிந்த எல்லோருக்கும் நன்றி. 


புதன் கிழமைப் பதிவு என்பதை கிட்டத்தட்ட ஒரு KSS (Knowledge sharing session ) ஆக நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  அதற்கு சென்ற வாரப் பின்னூட்டங்களில், நண்பர் DD அதிக அளவில் நம் எல்லோருக்கும் உதவி செய்துள்ளார். 

பின்னூட்டங்கள் அளிப்பதில் பல புதிய வழிவகைகளை அவர் எல்லோருக்கும் புரிகின்ற வகையில் விளக்கியுள்ளார். 

அவருக்கு 'எங்கள்' சிறப்பு நன்றி.


6.8.19

கேட்டு வாங்கிப்போடும் கதை : கேட்ட வரம் - பானுமதி வெங்கடேஸ்வரன்

கேட்ட வரம்
- பானுமதி வெங்கடேஸ்வரன் - 

உப்பரிகையில் நின்று கொண்டிருந்த தசரத சக்கரவர்த்தியின் கண்களில், கீழே நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்த ராமனும், சீதையும் பட்டார்கள். சீண்டலும்,சிணுங்கலும், சிரிப்புமாக நடந்து கொண்டிருந்த அவர்களை பார்க்க பார்க்க அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது. 

2.8.19

வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா

​ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன்.  அதாவது அவர் நடித்த காட்சி.   அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!