சென்ற வாரம் பிறந்த நாள் கொண்டாடிய எங்கள் பிளாக் தளத்துக்கு ஆடியோவிலோ, விடீயோவிலோ வாழ்த்துச் சொல்லலாமே என்று பானு அக்கா நண்பர்களை அழைத்திருந்தார். அதன்பேரில் நம் தளத்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கும் நண்பர்களின் காணொளி முதலில்...
இங்கும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. யோசனை சொன்ன பானு அக்காவுக்கும் நன்றி.
பானுமதி வெங்கடேஸ்வரன்: மஞ்சள் பத்திரிகை, கருப்புப் பணம், நீலப்படம், சிவப்பு விளக்கு என்று மோசமான விஷயங்களை நிறங்களோடு சம்பந்தப் படுத்துகிறோமே, அந்த நிறங்கள் என்ன பாவம் செய்தன?