நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
15.8.10
14.8.10
13.8.10
பேர் மயக்கம்.
ராமச்சந்திரனின் பொறுமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது. மணி 11.30. இன்னும் அந்த பாழாய்ப் போன குடிகார ஜன்மத்துக்கு வீடு நினைவே வரவில்லை போலும். இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பது? இன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கண்டித்துப் பேசிவிட வேண்டியதுதான்.
ரமேஷ் வீடு திரும்பி தயக்கத்துடன் கதவைத் தட்டும்போது மணி 12.15. தள்ளாடியபடி உள்ளே வந்த பின்பு சுற்று முற்றும் கலக்கமாகப் பார்த்து " சுமதி தூங்கிட்டாளா?" என்று ஈன ஸ்வரத்தில் ஒரு கேள்வி!
"ஊரே தூங்கியாச்சு. நாந்தான் ஒரு ஈனப்பிறவி முழிச்சுக் கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது ஒரு வெட்கம் ரோசம் இருக்க வேண்டாமா? அக்கம்பக்கத்தில் மட்டுமில்லை ஆபீசில் கூட என் மானம் கப்பலேறுது."
"விட்டுடணும்னுதான் பாக்கறேன். முடியல்லியேப்பா!"
"முடியலியேப்பாவா! முடியணும்ப்பா! வயசு ஆகுது இந்த அளவு கூட செல்ஃப் கண்ட்ரோல் இல்லீன்னா.."
"அம்பது வருஷப் பழக்கம். திடீர்னு விட்டுடமுடியுமா, பாக்கறேன். " என்று 30 வயசு மகனிடம் சொல்லிவிட்டு மாடி ஏறினார் அப்பா ரமேஷ். ராமச்சந்திரன் தன் விதியை நொந்துகொண்டு அம்மா சுமதி பாக்கி டோஸை விடுவாள் என்று எண்ணியவாறு உறங்கப் போனான்.
சுபம்.
?!
மேலே இருப்பது மேலும் ஒரு ஃபார்முலா கதை. இதற்கு முன் வெளியான வயசுக் கோளாறு பால் மயக்கம். இது பேர் மயக்கம். ரமேஷ் என்றால் இளைஞன் என்றும் ராமச்சந்திரன் பெரியவர் என்றும் ஒரு பிரமை தட்டுவதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்பின்.
தற்போது வரும் கதைகள் பலவற்றிலும் ஒரு பலவீனமான முடிச்சு மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் குமுதம் இதழில் வெளியாகும் ஒரு பக்கக் கதைகள். இவற்றை நம்மில் ரசிப்போர்கள் எத்தனை பேர்? நான் பெரும்பாலும் இப்படிக் கூட ஒரு கதையா என்ற ஃபீலிங்குடன் படிப்பது வழக்கம்.
"ஒரு சூப்பர் ஜோக் சொல்லட்டுமா?" என்று கேட்டு விட்டு "சொல்லு" என்றதும் "ஒரு சூப்பர் ஜோக் " என்று சொல்வதைப் போல புஸ்வாணக் கதைகள் ஒரு மாதிரியான பொழுது போக்கு. அவ்வப்போது மூளையை அதிகம் கசக்காமல் இப்படியும் ஒரு கதையை எழுதுவது தவறில்லையல்லவா?
12.8.10
இது என்ன என்று கூற முடியுமா?
படத்தைப் பாருங்கள். இது என்ன என்று சரியாக சொல்பவர்களுக்கு எண்காலி ஒரு சிறப்பு இலவச ஜோதிடம் கூறுவதாக வாக்கு அளித்திருக்கின்றது.
சரியான பதிலுக்கு / சுவையான கற்பனைகளுக்கு நிச்சயம் பால் பாராட்டுரை வழங்கும்.
ஞாபகம் இருக்கின்றதுதானே? சுதந்திர தினத்தன்று, எண்காலி 'பால்' அவர்களுக்கு(!) நடிகை சொப்பனசுந்தரி விருது வழங்கும் பொழுது, இந்தப் படத்தின் சரியான அல்லது சுவையான கண்டுபிடிப்பை செய்த வாசகர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.
11.8.10
வயசுக் கோளாறு.
ஆச்சரியப் படும் வகையில் பஸ்ஸில் நிறைய காலி சீட்டுகள்! புது பஸ் வேறு. ஏதோ நல்ல சினிமா தியேட்டரில் ஆற அமர உட்கார்ந்திருப்பதுபோல் நான் ரசித்து சுற்று முற்றும் நோட்டம் விட்டபடி இருந்தேன். அப்போதுதான் அந்தப் பெண் ஒரு குளிர் மென் காற்று வீசியது போல உள்ளே நுழைந்தாள். பளிச் என்ற ஆடை அலங்காரம் - புத்திசாலிக் களை சொட்டும் தோற்றம். அதற்கும் மேலாக என் பிரியமான "டார்லிங்" புனிதா (அப்படிச் சொன்னால் தான் அவளுக்குப் பிடிக்கும்) போலவே ஒரு ஆளுமை. அவள் என் பக்கத்தில் உட்கார மாட்டாளா என்று என் மனதில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு.
அங்கும் இங்கும் பார்த்தவள் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் யோசித்தது போல் இருந்தது. விறு விறுவென்று என் அருகில் வந்து நின்றாள். ஒரு சுகந்தம் வீசியதில் நான் சொக்கிப் போனேன்.
"எக்ஸ்கியூஸ் மி, நான் இங்கே உட்காரலாமா?"
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. " தாராளமா. . " என்று குழைவாகச் சொன்னேன்.
"அப்பா" என்று முனகியபடி திடும் என்று என்மேல் கொஞ்சம் இடித்தபடி உட்கார்ந்தாள். அது மட்டும் இல்லை. கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து வெடுக் வெடுக் என்று என் மேல் விழுந்தாள். சுகமான சுமை. வாகாக உட்கார்ந்து அவளுக்கு வசதி செய்து கொடுத்தேன்.
"சாரி லஸ் வந்ததும் எனக்குச் சொல்றீங்களா?" இனிய குரலில் மரியாதை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
"நிச்சயமா சொல்றேன். டேக் ரெஸ்ட்!" அவளது சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது. குறட்டை விடாத குறையாக தூங்க ஆரம்பித்தாள்! மேலே சாய்ந்து சரியப் போகும் போதெல்லாம் அட்ஜஸ்ட் செய்து அவளை விழாமல கவனமாகப் பார்த்துக் கொண்டேன்.
லஸ்ஸும் வந்தது.
அவளை மெல்லத் தட்டி எழுப்பினேன். "லஸ்" என்று சுருக்கமாகச் சொன்னேன்.
"ரொம்ப தாங்க்ஸ். உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேன் பாட்டி " என்று சிரித்தாள்.
"சே அதெல்லாம் இல்லை. என் பேத்தி புனிதாவும் இப்பிடித்தான் செய்வா! " என்றபடி புடவையை சரிசெய்துகொண்டேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










