Tuesday, May 18, 2010

ஆர்வத்துடன் கொஞ்சம் ஆர்ட்டும் ஃப்ளூட் நோட்டும்

விஜய்: என்னவளை நான் வரைந்த படம் 


எங்கள் கமெண்ட்: வந்தாச்சா அல்லது வரப்போறாங்களா?


வல்லி சிம்ஹன் வரைகிறார்:


:: rose for the lovely blog ::


என்னால் முடிந்த வாழ்த்துகள் ஒரு நல்ல வலைப்பூவுக்கு.
அன்புடன்,
வல்லிசிம்ஹன்
http://naachiyaar.blogspot.com
எங்கள் கமெண்ட்: எங்களுக்கும் ஐஸ் வரும், ஐஸ் வந்தால் ஜல்பு வரும், ஜல்பு வந்தால் அனைவருக்கும் தொத்திவிடுவோமே!

ஸ்ரீதர் வரைகிறார்:
MS Paint ல் நான் வரைந்த ஓவியம் இது: 
எங்கள் கமெண்ட்: எங்களுக்குத் தெரியும் - விஜயகாந்தும், சௌந்தரியாவும்தானே?  
அத்துடன் புல்லாங்குழலில் வாசித்த NOTES ம் அனுப்பியுள்ளேன் !!!  
கொஞ்சம் இசை...கொஞ்சம் DRAWING.. கொஞ்சம் இலக்கியம்....
எல்லாமே கொஞ்சம்..கொஞ்சம் ..தெரிந்த அமெச்சூர் நான் !!!! 
எங்கள் கமெண்ட்: கொஞ்சம் நல்லாவே இருக்கு சார்!

22 comments:

தமிழ் உதயம் said...

எங்கள் பிளாக் -உண்மையிலேயே எங்கள் பிளாக் தான்.

Chitra said...

புது புது ஐடியா.........
எல்லாம் நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!

ஹேமா said...

வர வர எங்கள் புளொக் பலதும் படிக்கும் பல்கலைக் கழகம்
ஆயிட்டே வருது.

வியஜ் க்கு வாழ்த்து.இன்னும் அழகாக்குங்க உங்களவளை.

முள்ளில்லா ரோஜா...ரொம்ப அழகாயிருக்கு.

கொஞ்சம் தெரிஞ்ச ஸ்ரீதருக்கும் பாராட்டுகள்.

k_rangan said...

விஜய்,
மனைவியிடம் prepublication approval வாங்கி விட்டீர்கள் தானே? "ஆமாம், இது யாரு .....? ன்னு வரிந்து கட்டிக் கொண்டு வரப் போகிறார்கள்.

புலவன் புலிகேசி said...

முள்ளில்லா ரோஜா நல்லாத்தான் இருக்கு...

padma said...

எங்களுக்கு பிடித்த பாட்டு அருமை .ராஜாவின் குரலும் இளமையான சுசிலாவும் அருமை .ஏறக்குறைய இதே ராகத்தில் வந்த ஆஹா இன்ப நிலாவினிலே கூட கேட்க்க இனிமையாய் இருக்கும்

விஜய் said...

@ எங்கள்

வந்து ஏழு வருடமாச்சு .

விஜய் said...

@ ரங்கன்

அப்ரூவல் வாங்கிட்டேன். ஆனா இது யாருன்னு கேட்கல

நன்றி

விஜய்

பாஸ்கரன் said...

முள்ளில்லா ரோஜா

இதை அசப்பில் பார்த்தால் ஹெர்குலிஸ் பூமியைத் தாங்கி நிற்பது போல் இல்லை?

அநன்யா மஹாதேவன் said...

:-))
இவ்ளோ திறமைகளை மேடையேற்றிய எங்கள் ப்ளாக் வாழ்க!
படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்.

அஹமது இர்ஷாத் said...

எல்லாமே ஒகே... பாட்டு அருமை ..

ரிஷபன் said...

நோட்ஸ் இனிமை.. படமோ அசத்தல்.. வாழ்க படைப்பாளிகள்..

வல்லிசிம்ஹன் said...

Hi !thanks every ome.
sorry for thanglish.

Baskaran, you are absolutely right. it is like the hercules,
lifting the MRF tyre opp to
Chola Hotel.:)

meenakshi said...

விஜய் உங்களவர் நல்லா இருக்காங்க!
வல்லி சிம்ஹன் சிகப்பு ரோஜா அழகா இருக்கு!
ஸ்ரீதர் ஓவியம் அருமை! குழலிசை அற்புதம்!

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

பாட்டும் ஃப்ளூட்டும் இனிமை.@விஜய் மறுபாதி என்ன சொன்னாங்க.
பாராட்டுகள்.

விஜய் said...

@ மீனாக்ஷி

நெஞ்சார்ந்த நன்றி தோழி

@ வல்லிசிம்ஹன்

சுமாரா இருக்குனு சொன்னங்க

வாழ்த்திய அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

விஜய்

ஜெகநாதன் said...

ரோஜா, கேப்டன், செளந்தர்யா மற்றும் புல்லாங்குழலிசை அனைத்தும் அருமை.
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

ராமலக்ஷ்மி said...

விஜய் நல்லா வரையும் செய்றீங்க. வாழ்த்துக்கள்:)!

வல்லிம்மா உங்கள் கையில் மலர்ந்த ரோஜா அழகு.

ஸ்ரீதர் படம் அருமை. இசை மிக இனிமை. புல்லாங்குழல் சிடிகள் வாங்கிய போது கூடவே குழல் ஒன்றும் வந்தது பெட்டியில். முயற்சித்தேன். வெறும் காத்து கூட வர மாட்டேங்குங்க:))!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வேய்ங்குழலில் வந்த வெற்றுக் காற்றுக்கு இத்தனைப் பாராட்டா...ஹே..ராம்..
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அத்தனை பேரின் பெருந்தன்மைக்கும் தலை வணங்குகிறேன்!!!

இப்படிக்கு,
ஸ்ரீதராகிய நான்...

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

படத்திற்கும் பாட்டிற்கும் வாழ்த்தியமைக்கு மிகுந்த நன்றி

@ ஜகன்னாதன்
என்ன நண்பா நம்ம படத்தை பற்றி கருத்தே சொல்லாமல் போயிட்டீங்க (தொடரலாமா? வேண்டாமா ?)

LK said...

arumai congrats for artists and engal blog

ராமலக்ஷ்மி said...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

ஸ்ரீதராக வேய்ங்குழலில் கானமழை பொழிந்தது சிறுகதை வேந்தர் நீங்கள்தானா? மீண்டும் வாழ்த்துக்கள்:)!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!