Monday, January 23, 2017

"திங்க"க்கிழமை 170123 :: சங்கீதா ஹோட்டல் பாணி பருப்புசிலி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிஒரு விசேஷம்னா, பருப்புசிலி பண்ணுவது எங்கள் வீடுகளில் வழக்கம். காத்தாடி ராமமூர்த்தி ஒரு நாடகத்தில் சொல்வதுபோல், ‘பால்பாயாசம், பருப்புசிலி’ என்று விசேஷ தினங்களில் பிராமணர்கள் வீடுகளில் பண்ணுவது வழக்கம். இதுல நான் எங்கள் அகத்து வழக்கத்தைச் சொல்லப்போவதில்லை. நான் சங்கீதா ஹோட்டலில் வேலை பார்ப்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட அவர்கள் பாணி பருப்புசிலி. பருப்புசிலிக்கு கொத்தவரைதான் பெஸ்டான காய். பீன்சிலயும், வாழைப்பூவிலயும் பண்ணலாம். சிலர் புடலங்காயிலும் பண்ணுகிறார்கள் (இதுக்கு புடலங்காய் வதக்கினப்பறம் நீர் விட்டுக்காமப் பாத்துக்கணும்). ஹோட்டல்கள்ல, பெரும்பாலும் கொத்தவரைதான் உபயோகிக்கிறார்கள். கொத்தவரைக்கும், பீன்ஸுக்கும் அதில் உள்ள நார் போன்ற நரம்பை எடுத்துவிடவேண்டும்.கடலைப் பருப்பு (1/3 கப்), துவரம்பருப்பு (2/3 கப்) இரண்டு மணிநேரத்துக்கு முன் ஊறவைக்கணும். (பிடிக்கிறவங்க, கொஞ்சம் சோம்பு போடலாம். ஆனால் நான் போடவில்லை). ஊறினபின், தண்ணீரை வடிகட்டி, அதோட 3 சிவப்பு மிளகாயையும் சேர்த்து, கரகரப்பாக (மசால்வடையைவிடக் கரகரப்பாக) அரைக்கணும். அத்துடன், உப்பு, நல்ல எண்ணெய் சேர்த்து, இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். பின்பு ஆறினபின், எடுத்து பொடிப்பொடியாக உதிர்க்கவும் (சரியான பதமில்லாமல் கெட்டியா வந்துடுத்துன்னா, கத்தியால சின்ன சின்ன பீஸா கட் பண்ணிப் பின்பு உதிர்க்கலாம்)அரைக்கும்போது, வாசனைக்கு, 2 ஆர்க் கருவேப்பிலையும் சேர்க்கலாம். உப்பு சேர்க்கணும். பருப்பை அரைக்கும்போது, தண்ணீர் கொஞ்சமாக விடணும் (நல்லா ஊறியிருந்தா ரொம்பத் துளி தண்ணீரே போதும்). தண்ணீர் கொஞ்சம் ஜாஸ்தியாயிடுத்துனா, இட்லி குக்கரில் வேகவைக்கும்போது கொஞ்சம் களிமாதிரி ஆகிடும். அப்போது ஆறவைத்து, சின்னச் சின்னதா கட் பண்ணிக்கலாம். தண்ணீர் கொஞ்சமாகச் சேர்த்திருந்தால், உதிர்த்தாலே உதிர்ந்துவிடும்.
என்ன காய் கொண்டு பருப்பு உசிலி பண்ணப்போகிறோமோ அதைச் சிறிதாக கட் பண்ணி, சிறிது உப்புப்போட்டு நீரில் வேகவைத்து, பின்பு தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். கடுகு, உ.பருப்பு, ஜீரகம், roundஆ பொடிசா நறுக்கின 2 பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவைகளைத் திருவமாறவும். அதோட சிறிது பெருங்காயப்பொடியையும் சேர்க்கவும். அப்புறம், 2-4 ஸ்பூன் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக்கொண்டு சிறிது வதக்கவும். பருப்புசிலி மஞ்சளாக இருக்கணும்னா, மஞ்சப் பொடியையும், சிவப்பா இருக்கணும்னா, காஷ்மீர் மிளகாய்த் தூளையும் உபயோகப்படுத்தவும். இதோட, உதிர்த்த பருப்புசிலிப் பொடியையும் சேர்த்து வதக்கவும். நல்லா வதங்கின உடனே, அடுப்பை அணைத்துவிட்டு, தனியாக வேகவைத்து தண்ணீர் வடிகட்டி எடுத்துவைத்துள்ள காயைப் போட்டு நன்கு கிளறவும்.

மோர்க்குழம்புக்கு, பருப்புசிலி ரொம்ப நல்லா இருக்கும். நான் அன்றைக்கு மைசூர் ரசம் செய்தேன்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

117 comments:

Geetha Sambasivam said...

இட்லித் தட்டிலோ வேட்டிலோ வேக வைத்துப்பண்ணுவதெல்லாம் பருப்புசிலியா? மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைச்சுட்டு எண்ணெயிலே கடுகு, உபருப்பு, கருகப்பிலை தாளித்து அப்படியே நன்றாக மொறு மொறுனு வதக்கணும். தானே உதிரும். அதுக்கப்புறமா வெந்த காயைச் சேர்க்கலாம். கொத்தவரை, பீன்ஸ், வாழைப்பூ மூன்று தான் எங்கள் விருப்பம். :)

Geetha Sambasivam said...

துவரம்பருப்பு அதிகமாயும் கடலைப்பருப்புக் கொஞ்சமாயும் சேர்த்தாலே ஆமவடை, பருப்புசிலி, அடை போன்றவைகளுக்கெல்லாம் நிறம் தானாகவே வரும். அதுக்காக மஞ்சள் பொடியோ, காஷ்மீரி மிளகாய்த் தூளோ போடணும்னு இல்லை. ஒரு பங்கு துவரம்பருப்பு என்றால் கால் கிண்ணம் கடலைப்பருப்புப் போட்டால் போதும். கடலைப்பருப்பு நிறையப் போட்டால் பருப்புசிலியோ, அடையோ, ஆமவடையோ மெத்துனு ஆயிடும். :)

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவ கீதா அம்மாவிற்கும் நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பு. நன்றி.

Bagawanjee KA said...

எதை சேர்த்தாலென்ன ?நாக்குக்கு ருசியாய் இருந்தால் சரி :)

KILLERGEE Devakottai said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Nagendra Bharathi said...

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களையும் பார்த்து, செய்முறைப் பக்குவங்களையும் படித்தவுடன், மஸக்கைக்காரி போல எனக்குள் ஒரு வித ஆசை.

பசியைக் கிளப்பி விட்டுள்ளீர்கள். இது மட்டும் இருந்தால் போதும். அப்படியே .... சாப்பிட்டு விடுவேன். இதற்குத் தொட்டுக்கொள்ள சாதமெல்லாம் எனக்கு ஏதும் வேண்டவே வேண்டாம்.

இந்தக் காரசாரமான பருப்பு உசிலி மட்டுமே ஒரு அரை கிலோ அளவு தனியே சாப்பிட்டால் போதும். வயிறு அக்கடான்னு இருக்கும். வேறு எதையும் தேடாது .... அடுத்த 3-4 மணி நேரங்களுக்கு. :)

கொத்தவரங்காய், பீன்ஸ் மற்றும் வாழைப்பூ ஆகிய மூன்றும் மட்டுமே பருப்பு உசிலிக்கு ஏற்றது.

[புடலங்காயாம் ...... புடலங்காய். சொன்னது தப்பு .... தப்பு .... ன்னு இப்போது கன்னத்தில் போட்டுக்கொள்ளவும்]

//(பிடிக்கிறவங்க, கொஞ்சம் சோம்பு போடலாம். ஆனால் நான் போடவில்லை).//

சோம்பு எதிலுமே போடக்கூடாது. வீட்டுக்குள்ளேயே வரகூடாத ஐட்டம் அது. :)

ருசிமிக்க பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

நானும் இட்லி தட்டில் இல்லை என்றால் ஒரு தட்டில் பரப்பி வைத்து ஆவியில் வேக வைப்பதுண்டு. ஒரு வேளை கையால் உதிர்க்க வரவில்லையென்றால் ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக உதிர்ந்துவிடும். சோம்பு போடுவதில்லை. ஜீரகம் சில சமயம் சேர்க்காமலும் செய்வதுண்டு. தேங்காய் கொஞ்சம் சேர்ப்பதுண்டு அதுவும் சில சமயம் இப்படி அப்படி என்று ...பருப்பு அளவு மட்டும் நான் இரண்டுமே ஈக்வலாக எடுத்துக் கொண்டும் செய்வேன்..அல்லது கடலைப்பருப்பு சற்றுத் தூக்கலாக என் மாமியாருக்காக ஸாஃப்டாக வர வேண்டும் என்பதற்காக...இல்லை என்றால் து பருப்பு தூக்கலாக..மஞ்சள் பொடி சேர்ப்பதுண்டு....இந்த அளவையும் செய்து பார்த்துவிடுகிறேன். நெல்லைத் தமிழன் ரெசிப்பிக்கு மிக்க நன்றி.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இட்லிதட்டில் வேகவைக்காமல், நாம் வீட்டில் செய்வோமே அரைத்து உசிலித்து அப்படியும் செய்வதுண்டு...அது விருந்தினர் வந்தால்...இட்லி தட்டில் செய்வது எண்ணெய் அதிகம் இல்லாமல் எங்களுக்கு..

கீதா

athira said...

நானும் வந்திட்டேன்ன்ன்... இம்முறையும் வாயில் நுழையக் கஸ்டப்படும் தலைப்பு ஆனா மிக சுவைமிக்க ரெசிப்பி.... “சங்கீதா ஹோட்டல்.. பருப்புசிலி” மிக அருமையாக இருக்கு.

ஊசிக்குறிப்பு:
இம்முறை குறிப்புக்கு இடையே “நீல நிற” எழுத்துக்களைக் காணம்:) ஹா..ஹா..ஹா...

athira said...

போன வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு , கணவரின் இரு நண்பர்கள் எங்கோ போகிறோம் போகும் வழியில் உங்களையும் பார்த்திட்டுப் போக இருக்கிறோம் என்றார்கள், இதைக் கேட்டதும் வெள்ளிக்கிழமையாச்சே என்ன கொடுக்கலாம்.. சைவத்தில் ஏதும் ஸ்பெஷலா செய்தால் நல்லம் என எண்ணியதும், நெல்லைத்தமிழ்... தவளைவடை ரெசிப்பி.. நினைவுக்கு வந்துதா... ஓடியாந்து திறந்து நோட் எடுத்துக்கொண்டு போய் ஊறப்போடுமுன், அன்று ஏதோ தடை வரமுடியாது என திரும்ப சொன்னார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நானும் தவலடையை நிறுத்திட்டேன்ன்.. இன்னொருநாள் ட்ரை பண்ணுவோம் என... :)

athira said...

///சோம்பு எதிலுமே போடக்கூடாது. வீட்டுக்குள்ளேயே வரகூடாத ஐட்டம் அது. :)/// என்ன கோபு அண்ணன் சொல்றீங்க? சோம்பை சுடுநீரில் போட்டு ஊறவைத்துக் குடித்தால் மிக நல்லது என்கிறார்கள், வயிற்றில் ஏற்படும் வாயுப்பிரச்சனைகளை நீக்கும் என்கிறார்கள்... நாங்கள் சைவக் கறிகள், சுண்டல் அனைத்துக்கும் பெரும்பாலும் சோம்பு சேர்ப்போம்.. இதை பெருஞ்சீரகம் என்போம் நம் நாட்டில்.. நீங்க உண்மையாவா சொல்றீங்க?.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

Avargal Unmaigal said...


எங்காத்து மாமியும் பருப்பு உசிலியும் பண்ணுவார்கள் மாமியிடம் இருந்து கற்றுக் கொண்ட உணவுகளில் இதுவும் ஒன்று நான் செய்யும் போது அவசர நேரத்தில் எங்கவீட்டு மாமி செய்வது போல செய்யாமல் பருப்ப்புகளுக்கு பதிலாக கடலை மாவை வறுத்து பீன்ஸை வதக்கி இறக்கும் சிறிது நேரத்திற்குள் முன் வருத்த கடலை மாவை போட்டு மிக்ஸ் செய்து இறக்கிவிடுவேன்


எனக்கு பிடித்த பருப்பு உசுலி பீன்ஸ் வாழைப்பூவல்ல எங்க மாமி வாழைப்பூவை வாங்கி ஒருவாராமக நேரம் இல்லாமல் வைத்திருக்கிறார்கள் நான் அதை தொடாததினால் அது இன்னும் குளிர்சாதனப் பெட்டியிலே இருக்கிறது

Avargal Unmaigal said...

@athira
ஒரு வேளை நீங்க சமிக்கிறீங்க என்று உங்கள் கணவர் தகவல் கொடுத்ததினால் அவர்கள் வராமல் போய்விட்டார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Avargal Unmaigal said...

athira என்ன உங்க பூனைக்குட்டியை( ஏஞ்சல்)இங்கே காணும் பூனைகுட்டிக்கு பருப்பு உசிலி பிடிக்காதா என்ன?

athira said...

///Avargal Unmaigal said...//// ஆஹா நீங்க காலை இங்கே வச்சதுமே என் டவுட்டு கிளியர் ஆச்சு.... அதாவது கொமெண்ட்ஸ் போட்டபின் போய்விட்டேன், போய் நினைச்சேன்.. இது தலைப்பு “பருப்புசிலி” என இருக்கே.. நான் முன்பு கேள்விப்பட்டது பருப்பு உசிலி ஆச்சே அப்போ இது புதுவிதமாக்கும் எனக்கெதுக்கு புது வம்ஸ் என விட்டிட்டேன்ன்ன்..:) இப்போ உங்கள் எழுத்துப் பார்த்ததும் எல்லாமே பிரிஞ்சுபோச்செனக்கூஉ:)...

தலைப்புப் போட்ட சகோதரர் ஸ்ரீராம் அவர்களையும்:) ரெசிப்பி ஓனர் நெல்லைத் தமிழரையும் மேடைக்கு உடனடியாக வரும்படி அழைக்கிறேன்ன்ன்ன்....:)

athira said...

///Avargal Unmaigal said...
athira என்ன உங்க பூனைக்குட்டியை( ஏஞ்சல்)இங்கே காணும் பூனைகுட்டிக்கு பருப்பு உசிலி பிடிக்காதா என்ன?///
ஹா ஹா ஹா அவோஓஓஓஓ பூனைக்குட்டியல்ல:) மீன் குஞ்சாக்கும்..க்கும்..க்கும்..:) வோக் போறேன் பேர்வழி எண்டு இப்போ ரோட்டோரப் பூனைக்குட்டி நாய்க்குட்டியெல்லாம் தடவிட்டுத்தான் வந்து சேருவா ஒரு அஞ்சு: மணியளவில்:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

athira said...

//Avargal Unmaigal said...
@athira
ஒரு வேளை நீங்க சமிக்கிறீங்க என்று உங்கள் கணவர் தகவல் கொடுத்ததினால் அவர்கள் வராமல் போய்விட்டார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன////

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

Avargal Unmaigal said...

athira ஹலோ அவர்களை(தலைப்புப் போட்ட சகோதரர் ஸ்ரீராம் அவர்களையும்:) ரெசிப்பி ஓனர் நெல்லைத் தமிழரையும் ) ஏன் கூப்பிடுறீங்க அவங்க வந்தால் நம்மை ரெண்டு பேரையும் வடை சட்டியில் போட்டு வறுத்திடப் போறாங்க ஒரு வேளை உங்களை பாவம் என்று விட்டுவிடலாம் ஆனால் அவர்கள் என் மனைவியுடன் கூட்டணி வைத்து எனக்கு எதிராக செயல்படப் போகிறார்கள்

ஸ்ரீராம். said...

அதிரா.... நீல நிற எழுத்துகளைத் தேடியதற்கு முதற்கண் என் நன்றி!!! எனக்கு பருப்பு உசிலி பிடிக்காது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் கொ'ல்'கிறேன்.

Avargal Unmaigal said...

@athiraச்சே உங்களை பார்த்தா ஊர்வம்பு பேசுற ஆள் மாதிரி இல்லைதான் ஆனால் வூட்டுவம்பை அதுவும் பல வீட்டு வம்பை பேசுற நல்ல ஆள் மாதிரிதானே தெரிகிறது

ஸ்ரீராம். said...

தவளை வடை செய்ய எவ்வளவு தளைகள் பிடித்து வைத்திருந்தீர்கள் அதிரா? செய்யவில்லை என்றதும் அவற்றை மறுபடியும் குளத்தில் விட்டு விட்டீர்களா?!! :P

ஸ்ரீராம். said...

மதுரைத்தமிழன்... எனக்குப் பிடித்த ஒரே பருப்பு உசிலி வாழைப்பூதான்.

ஸ்ரீராம். said...

அதிரா.. மேடைக்கு வந்து பதிலும் சொல்லியாச்சு..

Avargal Unmaigal said...

athiraநல்லவேளை கீதாம்மா பதிவு வெளிவந்தவுடன் திண்டுக்கல் தனபாலன் மாதிரில் முதலில் கருத்து போட்டுட்டு போயிருறாங்க இல்லைன்னை நாம் இங்கே பேசுற வம்புக்கு பிளைட் ஏறி வந்து நறுக்கென்று கொடிவிட்டு போய்விடுவார்கள்

ஸ்ரீராம். said...

தலைப்பில் தவறில்லை மதுரைத்தமிழன்... பருப்புசிலி = பருப்பு உசிலி!

Avargal Unmaigal said...

ஸ்ரீராம்.

//மதுரைத்தமிழன்... எனக்குப் பிடித்த ஒரே பருப்பு உசிலி வாழைப்பூதான்.///

ஆஹா எங்க வூட்டும்மா கூட சேர்ந்து கூட்டணி வைக்க அறிக்கைவிட்ட மாதிரியல்லவா இருக்கு... ஹலோ அதிரா பூனைக்குட்டி நெல்லைதமிழன் நீங்கள் அனைவரும் என் கூட்டணிக்கு வர கண்கள் பனிக்க காத்து இருக்கிறேன்

Avargal Unmaigal said...

ஸ்ரீராம். .

///தலைப்பில் தவறில்லை மதுரைத்தமிழன்... பருப்புசிலி = பருப்பு உசிலி!///

நான் தவறு என்று சொல்லவில்லை அதிரா அவர்கள்தான் வம்புக்கு இழுத்துவிட்டு இப்ப தலை மறைவாக இருக்கிறார்கள்

ஜீவி said...

தலைப்பு ஸ்ரீராம் வைத்ததோ?.. சங்கீதா வந்து விட்டதால் அந்த சந்தேகம். அதுக்கேத்த மாதிரி அந்த நாலாவது வரி. கேட்டுத் தெரிந்து கொண்டதாக.

எதை எழுதினாலும் அதை எழுதற அழகு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

2 ஆர்க் கருவேப்பிலை...

அதே மாதிரி மஞ்சளாய் இருக்கணும்னா, சிவப்பாய் இருக்கணும்னா.. சாய்ஸ்கள்..

என்னமாய் எழுதறாங்கய்யா...

ஸ்ரீராம். said...

ஹா.....ஹா...ஹா.... மியாவ் தூங்கிட்டாங்க போல மதுரைத்தமிழன்!

ஸ்ரீராம். said...

தலைப்பு நான் வைத்ததில்லை ஜீவி ஸார். நெல்லைத் தமிழன் அனுப்பியதுதான். அநேகமாக அடுத்தடுத்து சரவணபவன் பருப்புசிலி, வசந்தபவன் பருப்புசிலி, உடுப்பி பருப்புசிலி என்று கன்டின்யூ பண்ணுவார்னு நினைக்கிறேன்!

:))

Avargal Unmaigal said...

ஸ்ரீராம் மியாவ் மியாவ் அதுகுள்ள தூங்கி இருக்கமாட்டாங்க. அவங்கிட்ட யாரோ மதுரைத்தமிழன் ரொம்ப ஸ்லிம்மாக இருப்பதாக சொல்லி இருக்கிறாங்க அதை கேட்டு அவங்களுக்கும் போட்டிக்கு ஸ்லீம் ஆக வாக்கிங்க் போயிருப்பார்கள் போல

Avargal Unmaigal said...

ஸ்ரீராம்.

// தலைப்பு நான் வைத்ததில்லை ஜீவி ஸார். நெல்லைத் தமிழன் அனுப்பியதுதான். அநேகமாக அடுத்தடுத்து சரவணபவன் பருப்புசிலி, வசந்தபவன் பருப்புசிலி, உடுப்பி பருப்புசிலி என்று கன்டின்யூ பண்ணுவார்னு நினைக்கிறேன்!///

என்னங்க இப்படி பயமுறுத்திறீங்க சிங்கம் 1 சிங்கம் 2 என்று வருவது போல பல பருப்புசிலி வரும் போல இருக்கிறதே? சரி ஸ்ரீ சரி சங்கீதா சரவண்பவன் வசந்தபவன் பாணி பருப்புசிலி என்று போடப்போகும் நெல்லைத்தமிழன் அவர்கள் வீட்டு பாணியிலும் பருப்புசிலி போடுவாங்களா?

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் நான் நினைச்சேன்ன் அவர்கள் உண்மைகள் என்கிற அவர்கள்:) இப்போ கொமெண்ட் போட்டிட்டு வேர்க்க்குப் போயிருப்பார் இனி நைட்தான் பதில் வரும் என... இண்டைக்குப் பார்த்து இப்பூடிப் பண்ணிட்டீங்களே... அஞ்சுவை வேறு காணம்ம்ம்

athira said...

///Avargal Unmaigal said...
@athiraச்சே உங்களை பார்த்தா ஊர்வம்பு பேசுற ஆள் மாதிரி இல்லைதான் ஆனால் வூட்டுவம்பை அதுவும் பல வீட்டு வம்பை பேசுற நல்ல ஆள் மாதிரிதானே தெரிகிறது////
அவர்கள் உண்மைகள் என்கின்ற அவர்கள்:) ஐ, இப்போ உடனடியாக பிரித்தானிய காண்ட் கோர்ட்டுக்கு வரும்படி:) பேரறிவுமிக்க, அன்பான, பண்பான, தெம்பான தெளிவான நீதிபதி அவர்கள்(அது நாந்தேன்:)) ஆணையிடுகிறார்ர்ர்:))

athira said...

///ஸ்ரீராம். said...
அதிரா.... நீல நிற எழுத்துகளைத் தேடியதற்கு முதற்கண் என் நன்றி!!! எனக்கு பருப்பு உசிலி பிடிக்காது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் கொ'ல்'கிறேன்.///

ஹா ஹா ஹா போன தடவை போட்டதும் நீங்க சாப்பிட்டதில்ல, இம்முறை போட்டதும் உங்களுக்குப் பிடிக்காது.. அப்போ எப்போதான் புடிச்சதா, சாப்பிட்டுப் பார்த்ததா போடப்போறீங்க எண்டெல்லாம் நான் கேட்க மாட்டேன்ன் ஏனெனில் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)...

athira said...

/////Avargal Unmaigal said...
ஸ்ரீராம். .

///தலைப்பில் தவறில்லை மதுரைத்தமிழன்... பருப்புசிலி = பருப்பு உசிலி!///

நான் தவறு என்று சொல்லவில்லை அதிரா அவர்கள்தான் வம்புக்கு இழுத்துவிட்டு இப்ப தலை மறைவாக இருக்கிறார்கள்////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருந்தாலும் காட்டிக் கொடுத்திடுவார் போல இருக்கே .... அதுதான் பெயரில உண்மை இருக்கோ....:) இனிமேல் கொஞ்சம் ஜாக்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:))..

என்னதான் இருந்தாலும் ”பருப்பு உசிலி” எனச் சொல்லும்போதுதான் நல்லாயிருக்கு கனம் கோட்டார் அவர்களே!!!!..

athira said...

///ஸ்ரீராம். said...
தவளை வடை செய்ய எவ்வளவு தளைகள் பிடித்து வைத்திருந்தீர்கள் அதிரா? செய்யவில்லை என்றதும் அவற்றை மறுபடியும் குளத்தில் விட்டு விட்டீர்களா?!! :P///

ஹா ஹா ஹா அச்சச்சோ தவளை எண்டாலே எனக்குப் பயம்.. நல்லவேளை எங்கள் ஊரில்(இங்கு) இதுவரை காலத்தில் நான் கண்டதில்லை...:)

athira said...

///ஸ்ரீராம். said...
ஹா.....ஹா...ஹா.... மியாவ் தூங்கிட்டாங்க போல மதுரைத்தமிழன்!/// எவ்ளோ நேரம்தான் தனியே மேடையில் நின்று முழங்குறது:).. அஞ்சு லாண்ட் ஆகிறதுக்குள் ஓடிப்போய் இனித்தான் தூங்கோணும்:)

Avargal Unmaigal said...

athira ஒவ்வொரு திங்கள் கிழமையும் எனக்கு Off வேலையில் இருந்து மட்டுமல்ல மாமியின் தொந்தரவில் இருந்தும்தான் அதனாலதான் திங்கள் கிழமை அன்று மட்டும் ஜாலியான கருத்துக்கள் வரும் ஹீஹீ இதை என் மனைவிகிட்ட சொல்லிடாதீங்க மீ பாவம்

அப்புறம் நம்ம மியாவ் மியாவ் பேஸ்புக்கில் ஜல்லிகட்டு விஷயமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்

Avargal Unmaigal said...

athira பிரித்தானியா கோர்ட்டில் பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்தால் நான் வர ரெடி

Geetha Sambasivam said...

//கீதாம்மா பதிவு வெளிவந்தவுடன் திண்டுக்கல் தனபாலன் மாதிரில் முதலில் கருத்து போட்டுட்டு போயிருறாங்க இல்லைன்னை நாம் இங்கே பேசுற வம்புக்கு பிளைட் ஏறி வந்து நறுக்கென்று கொடிவிட்டு போய்விடுவார்கள்.//

ஹாஹாஹா, நான் நேற்று மாலை (எங்களுக்கு ஞாயிறு) பார்த்ததால் சீக்கிரம் கருத்துச் சொல்ல முடிஞ்சது. இல்லைனா இந்தியாவென்றால் காலை வேளையில் பல சமயங்களிலும் வேலை இருக்கும். :) தாமதமாகவே வர முடியும்.

உங்கள் வம்பை ரசித்துக் கொண்டு தான் இருக்கேனாக்கும்! கொட்டவெல்லாம் மாட்டேன். அதெல்லாம் ஸ்கூல் டீச்சர் வேலை! :)

Avargal Unmaigal said...

ஆகா நீங்கள்(கீதாம்மா) கண்டிப்பான ஆள் என்று அல்லவா நினைத்து பயந்துகிட்டு இருந்தேன்.... சரி சரி அதிரா நம்ம வலையில் ஒரு ஆடு தன்னால வந்து மாட்டி இருக்கு ஹீஹீ

வை.கோபாலகிருஷ்ணன் said...

athira said...
**சோம்பு எதிலுமே போடக்கூடாது. வீட்டுக்குள்ளேயே வரகூடாத ஐட்டம் அது. :)**

//என்ன கோபு அண்ணன் சொல்றீங்க? நீங்க உண்மையாவா சொல்றீங்க?.//

ஆம் அதிரா. மளிகை லிஸ்டில் போடப்படாததால் சோம்பு எங்கள் வீட்டுக்குள் வரவே வராது. வீட்டில் யாருக்குமே, உணவுப் பொருட்களில் அதனைப் போட்டால் பிடிக்கவே பிடிக்காது.

//சோம்பை சுடுநீரில் போட்டு ஊறவைத்துக் குடித்தால் மிக நல்லது என்கிறார்கள், வயிற்றில் ஏற்படும் வாயுப்பிரச்சனைகளை நீக்கும் என்கிறார்கள்...//

இது ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். நானும் அதுபோல சுடுநீரில் ஊறவைத்து யாராவது கொடுத்தால் குடிக்க ரெடியாகவே உள்ளேன். அதனைத் தனியாகவும் நான் சாப்பிட்டுள்ளேன். அதாவது சில பெரிய ஹோட்டல்களில் பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது, ஹோட்டல் முதலாளியின் மேஜை மேல் ஒரு தட்டில் சோம்பு + ஜீனி கலந்து வைத்திருப்பார்கள். சாப்பிட்ட வாயில் ஏதும் குமட்டல் ஏற்படாமல் இருக்கவும், எளிதில் ஜீர்ணமாகவும், கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளட்டும் என வைத்திருப்பார்கள். எனக்குத் தேவைப்பட்டால் அதனை நானும் கொஞ்சமாக எடுத்து வாயில் ஊற வைத்துக் கடித்து விட்டு, அதன் சக்கையைத் துப்பி விடுவதும் உண்டு.

ருசியான சமையல் பதார்த்தங்களில் மட்டும், எங்களுக்கு அதனைப் போடக் கூடாது. அதன் ஸ்மெல் உணவு பதார்த்தங்களில் வரக்கூடாது என்பதே எங்களின் விருப்பமாகும். சிலர் மஸால் வடையில் இதனைப்போட்டு, அதன் ருசியையே கெடுத்து விடுவார்கள்.

//நாங்கள் சைவக் கறிகள், சுண்டல் அனைத்துக்கும் பெரும்பாலும் சோம்பு சேர்ப்போம்.. இதை பெருஞ்சீரகம் என்போம் நம் நாட்டில்..//

அது தங்களின் விருப்பம். நாங்கள் வெண்பொங்கல் போன்ற பல பதார்த்தங்களில் இஞ்சி சேர்ப்பது உண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
athira said...

////Avargal UnmaigalJanuary 23, 2017 at 11:35 PM
... சரி சரி அதிரா நம்ம வலையில் ஒரு ஆடு தன்னால வந்து மாட்டி இருக்கு ஹீஹீ///
மாட்டினாப் பறவாயில்லை:) கத்தியைக் கொடுத்து என்னை வெட்டு வெட்டு என்றல்லோ சொல்லுது:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

athira said...

ஹா ஹா ஹா ஒரு பிஸ்கெட்டுக்கா? ஹையோ ஏதும் பொமேரியன் பிரீட்டா இருப்பாரோ... அஞ்சூஊ கெதியா வாங்கோ நேக்கு தனியே நிக்கப் பயம்ம்ம்மாக்கிடக்கூஉ

athira said...

அச்சச்சோ கோபு அண்ணன் நீங்க உங்க யொந்தக் கதை யோகக் கதை சொல்லியிருக்கிறீங்க..... பிடிக்காது என்பதை, நான் சோம்பு நல்லதல்ல என பொதுவாக சொல்லிட்டீங்க என நினைச்சேன்ன்ன் .... இப்போதான் கிளியர் ஆச்சு... காதைக் கொண்டுவாங்கோ சொல்றேன்... நாங்களும் உழுந்து வடைக்கு சோம்பு போடுவமே ஹா ஹா ஹா ...

athira said...

அப்போ திங்கட்கிழமைகளில் மாமியின் பூரிக்கட்டைக்கும் ஓவ் எனச் சொல்லுங்கோ:)...
///// அஞ்சூஊஊஊ உடனடியாக மேடைக்கு வரவும்...... அவர்கள் உண்மை அவர்கள் ரோட்டலி புரூட்டலி:) குழம்பிப்போய் இருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

Avargal Unmaigal said...

athira
உளுந்து வடைக்கு பெரும் சீராகம் போடுற முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீங்க இதில் இருந்து தெரியவருபதென்றால் நீங்கள் கிச்சன் கில்லாடியாக இருப்ப்பிங்க என நினைக்கிறேன்...ஆமாம் நீங்க சமைக்கும் உணவி சாப்பிட்டு வீட்டில் உள்ளவங்க எல்லாம் நன்றாக இருக்கிறார்கள்தானே? பாவம் அவங்க நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு எத்தனை வருடங்கள் ஆச்சோ

athira said...

எங்கள் ஊரில் பல்லி மிட்டாய் என கலர் கலரா பக்கெட்டில் இனிப்பு விற்கும்.... அதாவது உள்ளே சோம்பை வைத்து இனிப்பால் கவர் பண்ணியிருப்பார்கள் அது பல்லியின் எச்சம் போல் சைசில் இருப்பதால் அதற்கு பல்லி மிட்டாய் எனப் பெயர் ஹா ஹா ஹா ...

Angelin said...

@athiraaaaav //நாங்களும் உழுந்து வடைக்கு சோம்பு போடுவமே ஹா ஹா ஹா ...//

ஸ்டாண்ட் அப் ஓன் தி டேபிள் ..கசடதபற யரல வழள ..1000 டைம்ஸ் மூச்சு விடாம சொல்லவும் அதிரா

athira said...

ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மாமீஈஈஈஈ போனாப்போகுது இண்டைக்கு லீவு போட்டிட்டு இங்க கொஞ்சம் வாங்கோ:)

Avargal Unmaigal said...

athira said...

///எங்கள் ஊரில் பல்லி மிட்டாய் என கலர் கலரா பக்கெட்டில் இனிப்பு விற்கும் அதாவது உள்ளே சோம்பை வைத்து இனிப்பால் கவர் பண்ணியிருப்பார்கள்//

அது உங்க ஊரில் என்ன எங்க வூரு அமெரிக்காவிலும் கிடைக்கிறது

Angelin said...

இங்கே யாராச்சும் என்னை தேடினாங்களா ..கூப்பிட்டா மாதிரி இருந்ததே :)

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ் முழங்குதே மழை வரப்போகுதாக்கும் என நினைச்சனே ஹையோ பிஸ்ஸூ லாண்டட்ட்ட்ட் ஹையோ என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்....

Avargal Unmaigal said...

athira

ஹலோ நாய்க்கு பிரிட்டானியா பிஸ்கட் எல்லாம் கொடுக்க கூடாதுங்க அதுக்கு நாய் பிஸ்கட் மட்டும் தரலாம் எனக்கு பிரிட்டானீயா பிஸ்கட் மட்டும் தாருங்க அதுக்கும் பதிலாக நாய் பிஸ்கட் தந்தால் நாயை போல கடித்து விடுவேன்

athira said...

இல்ல இல்ல உங்களை நாங்க தேடல்ல ... அவர்கள் உண்மைகள் தான் குழம்பிப்போய் இருக்கிறார்:) கொஞ்சம் தெளிய வச்சு அடிங்கோ....

Angelin said...

@அவர்கள் உண்மைகள் :) பருப்பு உசிலி ரொம்ப்ப பிடிக்கும் ..பேலியோவில் இருப்பதால் நான் தொடறதில்லை எனக்கு ரொம்ப பிடிச்சது வாழைப்பூ உசிலி தான் ..இப்பெல்லாம் எல்லா காய்களையும் கேரளா ஸ்டைலில் தேங்காய் போட்டு மட்டுமே சமைக்கிறேன்

athira said...

ஹா ஹா ஹா ஹையோ இதென்ன புது வம்பாக்கிடக்கூஉ நாய் கடிச்சால் 21 ஊசி போட வேணுமெல்லோ... அப்போ இந்தப் பக்கம் வாணாம்ம்ம் அங்கின அஞ்சுட பக்கம் லாண்ட் பண்ணிடுங்கோ:)

Angelin said...

@நெல்லைத்தமிழன் சகோ ...உங்க சமையல் குறிப்புகள் எல்லாம் இங்கே ரிலீஸ் ஆனதும் வீட்லே செய்யறேன் ..என் மகளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..அந்த மைசூர் ரசத்தை கப்பில் ஊத்தி குடிச்சா என் செல்லம்

athira said...

யேஸ்ச்ச் கனடா தமிழ்க் கடையில் பார்த்தேன்

Angelin said...

thanks for the yummy parupusili recipe இதை நாளைக்கு செஞ்சிடுவேன் ..

Avargal Unmaigal said...

///Angelin said...

.இப்பெல்லாம் எல்லா காய்களையும் கேரளா ஸ்டைலில் தேங்காய் போட்டு மட்டுமே சமைக்கிறேன் ////

கார்ப்ரேட் ஆட்கள் செய்யும் அதீய்த வீளம்பரங்களால் கவரப்பட்டு நீங்கள் தேங்காய உபயோக்கிக்கிறீர்கள் போல... சரி சரி காய்கறிகளில் தேங்காய பொட்டு சமைக்கிறீர்கள் என்று சொல்லி இருக்கீங்க ஆமாம் முழு தேங்காயாகவா போடுறீங்க? அப்புறம் கேரளா ஸ்டைல் என்றால் கைலி கட்டிக் கொண்டா சமைக்கிறீர்கள் விளக்கம் தேவை

athira said...

ரசம் எண்டாலே நாங்க கப் ல தான் குடிப்போம் அஞ்சு, ஒருநாளும் சாப்பாட்டில் விட்டதில்லை ஹா ஹா ஹா ...

Angelin said...

@ அவர்கள் உண்மைகள் .எ .மதுரை தமிழன் ..அவ்வ்வ் ..போராளியா ??!!!! நானா ..நோ ..யாரது புரளி கிளப்பி விட்டது ..:)
அது ஒரே ஒருபோஸ்ட் ஷேர் செய்தென் கனம் கோர்ட்டார் அவர்களே அவ்ளோதான் :)

Avargal Unmaigal said...

athira

//ஹா ஹா ஹா ஹையோ இதென்ன புது வம்பாக்கிடக்கூஉ நாய் கடிச்சால் 21 ஊசி போட வேணுமெல்லோ... அப்போ இந்தப் பக்கம் வாணாம்ம்ம் அங்கின அஞ்சுட பக்கம் லாண்ட் பண்ணிடுங்கோ:)//

அது மனுஷங்களை கடிச்சால் மட்டும் ஊசிப் போடனும் அதனால நீங்கள் பயப்பட தேவை இல்லை

athira said...

ஹையோ அஞ்சு இனியும் பொறுக்கேலாது .... பொயிங்கிடுவோம்ம்ம்ம்ம்... ஹா ஹா

Avargal Unmaigal said...

///athira said...

//ஹையோ அஞ்சு இனியும் பொறுக்கேலாது .... பொயிங்கிடுவோம்ம்ம்ம்ம்... ஹா ஹா//


என்னது வீட்டில் சமைக்காமல் இப்படியா வம்பு அளக்கிறது சீக்கிரம் போய் பொன்ங்குங்க

athira said...

அஞ்சுவிடம் றெயினிங் எடுத்திருப்பாரோ:)????

Angelin said...

@ @அதிராவ் மாமிக்கு அந்த ak 36 பார்சல் அனுப்பணும்னு சொன்னிங்களே அனுப்பியாச்சா :)

Angelin said...

@ avargal unmaikal :) //அது மனுஷங்களை கடிச்சால் மட்டும் ஊசிப் போடனும் அதனால நீங்கள் பயப்பட தேவை இல்லை//

haa haaa haiyo :) அதிரா பூனைன்னு கண்டுபுடிச்சிட்டீங்க

athira said...

7 மணிக்கு மேல் கிச்சினுக்குள் போக மாட்டனே.... ஏன் மாலைக்கண்ணோ எனக் கேட்கப்புடா கர்ர்ர்ர்:)

Avargal Unmaigal said...

@Angelin

/// @. .மதுரை தமிழன் ..அவ்வ்வ் ..போராளியா ??!!!! நானா ..நோ ..யாரது புரளி கிளப்பி விட்டது ..:)
அது ஒரே ஒருபோஸ்ட் ஷேர் செய்தென் கனம் கோர்ட்டார் அவர்களே அவ்ளோதான் :)///

இப்படிதானுங்க ஒரு மதுரைப்பொண்னு சின்னம்மா சின்னம்மா ஒபிஸை எங்கம்மா என்று குரல் கொடுத்த்சுச்சு அது வைரல் வீடியோவாக வந்து போராளியாக ஆகிடுச்சு அது போல நீங்களும் ஒரு போஸ்ட் சேர் பண்னியாதால் அந்த பொண்ணை போல உங்களையும் ஒரு போராளியாக நினைத்து விட்டோம் ஹீஹீ

athira said...

மாமியைக் கூப்பிட்டு கையிலயே கொடுக்கப்போறேன் இல்லாட்டில் இவர் இடையில ஆட்டையைப் போட்டிடுவார் ... :)

Angelin said...

@ avargal unmaikal //அப்புறம் கேரளா ஸ்டைல் என்றால் கைலி கட்டிக் கொண்டா சமைக்கிறீர்கள் விளக்கம் தேவை//
ஆஹா !!கூப்பிட்டு வச்சு அடிக்கிறாரே :)
இருங்க அதிரா கிட்ட சொல்லி ஒரு கவிதை எழுதி வாங்கி உங்க பக்கம் போஸ்ட் செய்றேன் :)

athira said...

இல்ல அவர் ரொம்பக் குழம்பிப்போயிருக்கிறார்ர்ர் ஹாஅ ஹா ஹா

athira said...

ஹாஅ ஹா ஹாஅ உங்க சண்டைக்கு மீ பலியாடா அவ்வ்வ்வ்வ்:)

Geetha Sambasivam said...

அவர்கள் உண்மைகள், நான் கண்டிப்பானவள்னு யாரு சொன்னது உங்களுக்கு? போனால் போகட்டும், இந்த ஒரு வாட்டி விட்டுடறேன். :))))

அப்புறமா இந்தத் தேங்காய் விஷயம்! தேங்காய் சேர்ப்பது உடம்புக்கு ரொம்பவே நல்லதாக்கும். இந்த ஆங்கில மருத்துவர்களும், மருந்துக் கம்பெனிக் காரங்க தான் தேங்காயில் கொழுப்பு அது, இதுனு நம்ம பாரம்பரியச் செய்முறையையே மாத்திட்டாங்க! :)

Avargal Unmaigal said...

Angelin ..

///@ @அதிராவ் மாமிக்கு அந்த ak 36 பார்சல் அனுப்பணும்னு சொன்னிங்களே அனுப்பியாச்சா :)//

ak 36 என்று சொன்னாலே மாமிக்க்கு கையும் காலும் உதறும் இதிலே வேற அவங்களுக்கு வாங்கி அனுப்புறீய்ங்களா

Angelin said...

நம்ம கலாட்டா கும்மியை பார்த்து உங்க ரெண்டு போரையும் மொத்தப்போறாங்க

நான் அதிகபட்சம் உப்புமா செய்யும்போது இல்லைஎன்றால் ஏதாவது ஸ்வீட் செய்யும்போது மட்டுமே கிச்சனில் பாத்திரங்களுடன் போராடுவேன் என்று கூறிக்கொண்டு .....

Avargal Unmaigal said...

@athira .

//7 மணிக்கு மேல் கிச்சினுக்குள் போக மாட்டனே.///

காலை ஏழுமணிக்கும் இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்படி

Angelin said...

@கீதா சாம்பசிவம் மேடம் ..நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் ..தேங்காய் உடம்புக்கு நல்லது ..நான் பேலியோ வில் இருப்பதால் அவியல் இல்லாத நாளே இல்லை எங்க வீட்ல ..அப்படியே எல்லா பொரியலுக்கும் தேங்காய் சேர்க்கிறேன் .எனக்கு கொழுப்பு இல்லையே ..

Geetha Sambasivam said...

தேங்காயில் உடலுக்குத் தேவையான மங்கனீஸ், பாஸ்ஃபரஸ், இரும்புச் சத்து இருக்கிறது. தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பாலைப் பருகலாம். வயிற்றுப்புண், அல்சர், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் தேங்காய்ப் பால் சிறந்த மருந்து.

Geetha Sambasivam said...

http://geetha-sambasivam.blogspot.com/2016/05/blog-post_31.html// இங்கே போய்ப் பாருங்க. :)

athira said...

விடிய எழும்பி எங்கட கும்மியைப் பார்த்திட்டு சகோ ஸ்ரீராம் மயங்கிவிழப் போறார்... அதனால பெரிய மனசு பண்ணி மீயும்ம்ம்ம் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

Angelin said...

சரி :) எல்லாருக்கும் bye for now ..என் கணவர் வர நேரம் சுட சுட சமைச்சு தரணும் :) நாங்கல்லாம் காலநேரம் பார்க்காம கிச்சனில் இருப்போம்னு
அதிரா பூனைக்கு சொல்லிக்கொள்கிறேன் :)

Angelin said...

@geetha madam .இதோ வரேன் .

athira said...

////Geetha SambasivamJanuary 24, 2017 at 12:32 AM
தேங்காயில் உடலுக்குத் தேவையான மங்கனீஸ், பாஸ்ஃபரஸ், இரும்புச் சத்து இருக்கிறது. தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பாலைப் பருகலாம். வயிற்றுப்புண், அல்சர், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் தேங்காய்ப் பால் சிறந்த மருந்து.
/////
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நான் எங்கோ படித்தேன் தேங்காய் உடலுக்கு நல்லது ஆனா பிழிந்து பால் ஆக்கும்போது அது கொழுப்பாக மாறுகிறது என, நம் ஏசியன் ஆட்களுக்கு அதிகம் கார்ட் டிசீஸ் வருவதுக்கு இதுவும் ஒரு காரணம்... என்கிறார்கள்.

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

Avargal Unmaigal said...


Geetha Sambasivam

///அவர்கள் உண்மைகள், நான் கண்டிப்பானவள்னு யாரு சொன்னது உங்களுக்கு? போனால் போகட்டும், இந்த ஒரு வாட்டி விட்டுடறேன். :))))

அப்புறமா இந்தத் தேங்காய் விஷயம்! தேங்காய் சேர்ப்பது உடம்புக்கு ரொம்பவே நல்லதாக்கும். இந்த ஆங்கில மருத்துவர்களும், மருந்துக் கம்பெனிக் காரங்க தான் தேங்காயில் கொழுப்பு அது, இதுனு நம்ம பாரம்பரியச் செய்முறையையே மாத்திட்டாங்க! :)////


இந்த ஒரு வாட்டி விட்டுடறேன். :)))) இப்படி மிரட்டினால் கண்டிப்பாண ஆள் என்றுதானே நினைக்க தோன்றும்


தேங்காய் மற்றும் அதனைச்சார்ந்த உணவு பொருட்கள் நல்லது என்றுதான் நான் கருதி வந்தேன் நம்மவர்களும் கருதி வந்தார்கள் ஆனால் இந்த மேலைனாட்டு ஆட்கள் வந்து அது நல்லது இல்லை என்று சொல்லி பாமாயில் போன்ற ஆயில்களுக்கு நம்மை பழக்கபடுத்திவிட்டு இப்ப தேங்காய் எண்ண்னெய் நல்லது என்று பல நாடுகளில் இருந்து தேங்காயை இறக்குமதி பண்ணி அவன் நல்லா இருக்க வழி பண்ணிக் கிட்டு இருக்கிறான்.


சிறுவயதில் இருந்து எங்கள் வீட்டில் தேங்காய் மற்றும் என்னைய் முக்கியமாக இருந்து வந்தது என் வீட்டிற்கு மாமி வந்தவுடன் அது தலைகிழாக மாறிவிட்டது இப்பதான் கார்ப்ரேட் கம்பெணிகள் செய்யும் அதீத விளம்பரங்களை பார்த்து மாமி அதை அதிகம் உபயோகப்படுத்த சொல்லுகிறார்கள்

Avargal Unmaigal said...

எனக்கு லஞ் டைம் 2;15ஆச்சு பசிக்கிற்து நானும் போய் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு தேவையாணதை வாங்கி போட்டுட்டு மாமிக்கு தேவையான் டின்னரை ரெடிபண்ணிட்டு அப்புறம் அப்பாவியாக் வேஷம் போடணும் அதனால நானும் கிளம்புறேன்

'நெல்லைத் தமிழன் said...

வெளியிட்ட எங்கள் பிளாக் ஶ்ரீராமன் -நன்றி. உங்கள் கமெண்ட்ஸ் இல்லையே என்று நினைத்தேன். அது பதிவுக்கு அழகு சேர்க்கும். விரைவில் பின்னூட்டங்களுக்கு பதிலிறுக்கிறேன்

'நெல்லைத் தமிழன் said...

ஶ்ரீராம் என்பது ஶ்ரீராமன் என்று பதிவாகிவிட்டது

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கீதா மேடம். நீங்கள் சொல்லியுள்ளதுதான் பாரம்பரிய உசிலி செய்முறை. என் ஹஸ்பண்டும் அப்படித்தான் செய்வார். ஆனால், எனக்கு மொறு மொறுப்பா இருப்பது பிடிக்காது என்பதால், அவளிடம் கொஞ்சம் சாஃப்ட்டா பண்ணச்சொல்வேன். ஆனால், அந்த செஃப், அவர்களது முறையைச் சொன்னதால், ஒரு முறை செய்து அதனைப் பகிர்ந்துகொண்டேன்.

'நெல்லைத் தமிழன் said...

மீள்வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.. நானும் சமயத்துல ஆமவடை, கடைகள்ல இருப்பதுபோல் ஏன் மொறு மொறுவென்று வருவதில்லை என்று யோசித்திருக்கிறேன். சமீபத்தில் கொடைக்கானலில், மோயர் பாய்ன்ட் அருகில் இருந்த (பல கடைகளில்) ஒரு சைவக் கடையில் ஆமவடை ரொம்ப நல்லா இருந்தது. செய்முறை கேட்க விட்டுப்போய்விட்டது.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்

நன்றி வெங்கட்

நன்றி பகவான்ஜி - நாக்குக்கு ருசி வேண்டும்னா, வயிற்றில் பசி இருக்கவேண்டும். அது இல்லாமல், ரொம்ப நல்லா இருப்பவைகளையும் சாப்பிட அவ்வளவு ஆர்வம் இருக்காது.

நன்றி கில்லர்ஜி.

நன்றி நாகேந்திர பாரதி.

'நெல்லைத் தமிழன் said...

கோபு சார்.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. பருப்புசிலி என்றாலே எனக்கு ரொம்பப் பிடித்துவிடும் (லஞ்ச் சாப்பிட). நீங்கள் சொல்லியபடி அந்த மூன்று பருப்புசிலிக்களே நான் சாப்பிட்டிருக்கிறேன். புடலை நன்றாக இருக்கும் என்று ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். செய்துபார்த்ததில்லை. உங்களை மாதிரித்தான்.. எனக்குன்னு பிடித்தவைகளைத் தவிர வேறு புதிய ஐட்டம் டேஸ்ட் பார்க்கக்கூட கறாறாக சம்மதிப்பதில்லை. இதனால்தான் பேல்பூரியை ஏற்றுக்கொள்ள 15 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதும் தாகிபூரி, பானிபூரி எனக்கு மட்டும் சாப்பிடவே (பார்க்கவே) பிடிக்காது. ஆனால் என் ஹஸ்பண்டுக்கும் ரெண்டு பசங்களுக்கும் ரொம்ப விருப்பம். இதே மனநிலையில்தான் அவள் வடாபாவ் பண்ணும்போதும், பாவ் பாஜி பண்ணும்போதும் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்துவிட்டேன் (இப்போ வருத்தப்பட்டு என்ன புண்ணியம்)

எனக்கு சோம்பு போடக்கூடாது (பெருஞ்சீராம், வீட்டிற்குள் அதற்கு இடமில்லை). நிறையபேர் மசால்வடையில் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் (சமயத்தில் பூண்டு கூட), நான் ஒன்று வாங்கி சாப்பிட்டு இந்த இரண்டும் இல்லைனா மட்டும்தான் வாங்குவேன்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நீங்கள் சொல்லியபடி, எண்ணெய் குறைவாக இருக்கணும்னா வேகவைத்தும் இல்லைனா எப்போதும் செய்யும் முறையில் செய்வதுதான் சரி.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஆதிரா. உங்கள் நிறைந்த பின்னூட்டங்களுக்கு.

தவலடையை 'இன்னொரு நாள் டிரை பண்ண' - விருந்தினர்கள் மேல் டிரை பண்றீங்களா? நல்லதுதான். நல்லா வரலைனாலும் அவங்களால அப்போ ஒண்ணும் சொல்லமுடியாது. நல்லா இருக்குன்னுதான் சொல்வாங்க (நாகரிகத்துக்காக). நல்லா இல்லாமல் போய்விட்டால், விருந்தினர்கள் திரும்பியும் எட்டிப் பார்க்கமாட்டார்கள். இரண்டு வகையிலும் உங்களுக்கு நல்லதுதான்.

சோம்பு, பூண்டு சிலர் உபயோகப்படுத்துவதில்லை. எங்கள் பூர்வ வீட்டில் (9 படிக்கும்போது), ஆங்கிலக் கறிகாய்களையும் உபயோகப்படுத்துவதில்லை - உருளை, தக்காளி உள்பட. முருங்கை, சுரை இவைகளுக்கும் தடா. இதெல்லாம் அவரவர் பழக்கத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

பருப்பு + உசிலி - இந்த உசிலிப்பது என்ற வார்த்தை வேற்று மொழியிலிருந்து வந்திருக்கலாம். தெரியவில்லை.

பல்லி மிட்டாய் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. நிறைய ஹோட்டல்களில், அது கொஞ்சம் விலை அதிகம் என்பதால், பெருஞ்சீரகம்+ஜீனி சேர்ந்ததைத் தருகிறார்கள்.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

'நெல்லைத் தமிழன் said...

நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை. உங்கள் பின்னூட்டங்கள் ரசிக்கும்படி இருந்தது.

நீங்கள் அப்போ அப்போ சமையல் கட்டுக்குள் புகுந்து உணவு தயார் செய்வது உங்கள் மனைவியைப் பழி வாங்கத்தான் என்ற உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், சமயத்தில் அவர்கள் தப்பித்துக்கொண்டு, அதே உணவை இரவுக்கும் மறுநாளுக்கும் வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டிய நிர்ப்பந்தங்களும் உங்களுக்கு ஏற்படுகின்றன என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். Jokes apart, கடலை மாவு - செய்துபார்க்கிறேன்.

'நெல்லைத் தமிழன் said...

'நாங்கள், 'சொந்தக் கதை சோகக் கதை' என்று குறிப்பிடுவதை நீங்கள் 'யொந்தக் கதை யோகக் கதை' என்று குறிபிடுகிறீர்களா? அந்தத் தமிழும் நன்றாகத்தான் இருக்கிறது ஆதிரா.

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் கருத்துக்களைப் பதிவிலேயே எழுதவில்லையே. பருப்புசிலி பிடிக்காத ஆட்களும் இருக்கிறார்களா?

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஜீவி சார். நான் பாரம்பரியச் சமையலைத்தான் (எங்கள் அகத்தில் வழக்கமாகச் செய்வது) எழுதணும்னு நினைத்தேன். அப்புறம், சங்கீதா செஃப் சொன்ன செய்முறையை எழுதலாமே என்று எழுதினேன். என் ஹஸ்பண்ட், பாரம்பரிய முறைகளைத் தவிர வேறு முறைகளை வீட்டில் பழக்கப்படுத்திவிடக்கூடாது என்று சொல்வாள். அந்தச் செய்முறைதான் வழிவழியான தலைமுறைகளுக்குக் கடத்தவேண்டும் என்பது அவள் எண்ணம்.

'நெல்லைத் தமிழன் said...

@ஸ்ரீராம் - இங்க சங்கீதா ஹோட்டல்ல பருப்புசிலி முன்பு ரெகுலராக வியாழக்கிழமை போட்டுக்கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹோட்டல்களில் நான் பருப்பு உசிலி போட்டுப் பார்த்ததில்லை. நான் சரவண பவன் ரெகுலர் கஸ்டமர் (முன்பொருகாலத்தில். இப்போதும் எந்த ஊர்/நாடு சென்றாலும் அங்குள்ள சரவண பவன் கிளைக்குப்போய் சாப்பாடு சாப்பிட்டு, 'எப்படியிருந்த..... இப்படியாயிடுத்தே' என்று வருத்தப்படவும் தவறுவதில்லை). அங்கு பருப்புசிலி போட்டு நான் பார்த்ததில்லை.(கட்டுப்படியாகாது. அவர்களோட டார்கட் கஸ்டமர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை). அதனால்.. ரிலாக்ஸ் ப்ளீஸ்... பல லேபிள்களில் பருப்புசிலி வராது. (ஒரு வேளை சரக்கு தீர்ந்தால் வருமோ என்னவோ....)

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஏஞ்சலீன். நான் ஜி.எம். டயட் பல சமயங்களில் இருந்துள்ளேன். பேலியோ டயட்டைப் பற்றிப் படித்துள்ளேன். எனக்குத் தெரிந்தவரை, தேங்காய் நல்லது. அதை எவ்வளவு சேர்த்தாலும் (புதுத் தேங்காய். கொப்பரை இல்லை) உடலுக்கு நல்லது. என்ன, எல்லா நாளும் 30-40 நிமிடங்களாவது நடைப் பயிற்சி வேண்டும்.

மகளிடம் ரெசிப்பிக்களை முயற்சி செய்கிறீர்களா. பாராட்டுக்கள். ரொம்பச் சின்னப் பெண் போலிருக்கு. அதான் ஒன்றும் சொல்லாமல் சமத்தா சாப்பிடுறாள்.

athira said...

///நெல்லைத் தமிழன் said...
'நாங்கள், 'சொந்தக் கதை சோகக் கதை' என்று குறிப்பிடுவதை நீங்கள் 'யொந்தக் கதை யோகக் கதை' என்று குறிபிடுகிறீர்களா? அந்தத் தமிழும் நன்றாகத்தான் இருக்கிறது ஆதிரா.///

உங்கள் பின்னூட்டங்கள் எப்பவும் பொறுமையாக வந்து படித்து விடுவேன், ஆனா தலைப்பு உள்ளே போய் விடுவதால் பதில் போடாமல் விட்டு விடுவேன்.. பதில்களுக்கு நன்றி..

athira said...


///நெல்லைத் தமிழன் said...
'நாங்கள், 'சொந்தக் கதை சோகக் கதை' என்று குறிப்பிடுவதை நீங்கள் 'யொந்தக் கதை யோகக் கதை' என்று குறிபிடுகிறீர்களா? அந்தத் தமிழும் நன்றாகத்தான் இருக்கிறது ஆதிரா.///

உங்கள் பின்னூட்டங்கள் எப்பவும் பொறுமையாக வந்து படித்து விடுவேன், ஆனா தலைப்பு உள்ளே போய் விடுவதால் பதில் போடாமல் விட்டு விடுவேன்.. பதில்களுக்கு நன்றி..

இல்லை இல்லை நம்மவரும் “சொ” தான் பாவிப்பார்கள் நான் தான் எப்பவும் மாத்தி மாத்திப் பாவிப்பேன்ன்.. சோகம் எனச் சொல்லாமல் யோகம் ஆக்கிச்சிச் சொல்லிடுவேன்ன்ன்.. நான் அதிரா.. ஆ அல்ல:))

Avargal Unmaigal said...

@நெல்லைத் தமிழன்

ந /// தவலடையை 'இன்னொரு நாள் டிரை பண்ண' - விருந்தினர்கள் மேல் டிரை பண்றீங்களா? நல்லதுதான். நல்லா வரலைனாலும் அவங்களால அப்போ ஒண்ணும் சொல்லமுடியாது. நல்லா இருக்குன்னுதான் சொல்வாங்க (நாகரிகத்துக்காக). நல்லா இல்லாமல் போய்விட்டால், விருந்தினர்கள் திரும்பியும் எட்டிப் பார்க்கமாட்டார்கள். இரண்டு வகையிலும் உங்களுக்கு நல்லதுதான்.//

அதிரா பாருங்களேன் இவரை அமைதியாக இர்ருந்து கொண்டு நாசுக்காக உங்களை நன்றாக நக்கல் பண்ணுறாங்க... ஆமாம் உங்க சமையைல் பெருமை எல்லாம் அவங்களுக்கு கூட தெரிஞ்ச்சு இருக்கிறது

//சோம்பு, பூண்டு சிலர் உபயோகப்படுத்துவதில்லை. எங்கள் பூர்வ வீட்டில் (9 படிக்கும்போது), ஆங்கிலக் கறிகாய்களையும் உபயோகப்படுத்துவதில்லை - உருளை, தக்காளி உள்பட. முருங்கை, சுரை இவைகளுக்கும் தடா. .//

என்னங்க வாழ்க்கையில் நல்ல உணவுகளை அனுபவிக்காமல் விட்டுவிட்டிங்களே?

//நீங்கள் அப்போ அப்போ சமையல் கட்டுக்குள் புகுந்து உணவு தயார் செய்வது ///

ஹலோ தினசரி சமைப்பததை அப்பபோ அப்போ சமைக்கிறது என்று சொல்லுறீங்களே

athira said...

அஞ்சூஊஊ கொஞ்சம் அந்தக் கிரெயினை எடுத்திட்டு இந்தப் பக்கம் வாங்கோ.... தேம்ஸ்ல மீனுக்கு பசிக்குதாம்ம் :) ... இனியும் இப்பூடியே விட்டால் சரிவராது:)

கோவை எம் தங்கவேல் said...

மனையாள் குஷியாக இருந்தால் நெல்லைதமிழனின் சமையல் அயிட்டங்கள் சாப்பிடக் கிடைக்கின்றன. வீட்டிற்கு வரும் நண்பர்கள் வாயைப் பிளந்து கொள்கின்றார்கள். கொடுத்து வைத்த ஆளய்யா நீரு என்று பாராட்டுகின்றார்கள். இந்த ரகசியம் தெரிந்தால்....

'நெல்லைத் தமிழன் said...

நன்றி கோவை தங்கவேல். நாம தலையாட்டிப் பொம்மைகளாக வீட்டில் ஆகிவிட்டால் எப்போதும் நமக்கு 'கொடுத்துவைத்த ஆளையா' என்ற பட்டம் கிடைக்குமே. எப்போதாவது தேனிப் பக்கம் போறதாயிருந்தால் உங்களிடம் சொல்கிறேன்.. எனக்கு திராட்சைத் தோட்டங்களைக் காணவேண்டும் (குழந்தைகளோடு) என்று எண்ணம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!