Saturday, January 21, 2017

சபாஷ் தமிழகம்...
1)  தனது இரண்டு சக்கர வாகனத்தையே உதவும் ஆம்புலன்ஸாக மாற்றி சேவை செய்யும் கரிமுல் ஹக்.  தனது சம்பாத்தியத்தில் பாதியை இதற்காகவே செலவு செய்கிறார்.

2)  செய்தித்தாள் விற்கும் நிலையிலிருந்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாங்குமளவு முன்னேறியவர்.  ஷஷிகாந்த் ஜெய்ஸ்வால்.

3)  தீயணைப்பு வண்டிகள் உதவிக்கு வரும்வரை காத்திருக்கவில்லை கான்ஸ்டபிள் பீம் ராவ்.  ஓடினார்.   காத்தார் இருபது உயிர்களைத் தனியாக.  அவர் முதலில் செய்த ஒரு காரியம் மிக புத்திசாலித்தனமானது.

4)  கார்பொரேட் வேலையை இதற்காக விட்டு விடுவாரோ ஒரு மனிதர்?  பாராட்டுகள் கெளதம் குமார்.5)  ஜல்லிக்கட்டு தேவையா இல்லையா என்கிற விவாதத்துக்குள் போகவேண்டாம்.  தலைமை என்று ஒருவர் கிடையாது.  அரசியல்வியாதிகளை அண்டவிடவில்லை.  விளம்பரம் தேடும் நடிகர்களை நெருங்க விடவில்லை.  ரயில் மறியல் போன்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்த (அதிலும் அயல் வன்முறை இல்லை) ஓரிரு காரியங்கள் தவிர அமைதியாகவும், கண்ணியத்துடனும், உறுதியுடனும்  நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம்.  


தமிழக இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல, வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் களத்தில்.  


இந்தப் பிரச்னையை விடுங்கள்...  காவிரி, முல்லை பெரியார் உள்ளிட்ட அனைத்து மற்றப் பிரச்னைகளுக்கும் போராட இது ஒரு முன்னுதாரணமாகட்டும்.  இப்போது நடக்கும் ஓரிரு குறைகளும் களையப்பட்டு இன்னும் சிறப்பாக அமையட்டும், வருங்காலப் போராட்டங்கள்.


இந்தியாவே பிரமித்துப் பார்க்கும் போராட்டம்.  சபாஷ் மக்களே..

13 comments:

geethasmbsvm6 said...

கடைசிலே சொல்லி இருப்பதை முழு மனதோடு ஆதரிக்கிறேன். எல்லாப் பிரச்னைகளுக்கும் இப்படி ஒன்று கூடிப் போராடணும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அறப்போராட்டம் என்றும் வெற்றியே தரும்... மேலும் பல விசயங்களிலும் தொடரட்டும் ...

Bagawanjee KA said...

இளைஞர்களின் எழுச்சி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது :)

visu. said...

Good.

Asokan Kuppusamy said...

அனைத்து உள்ளத்துக்கும்வாழ்த்து

G.M Balasubramaniam said...

எல்லாப் போராட்டத்துக்கும் இந்தமாதிரி இன உணர்வு கொண்டு வரமுடியுமா

ஞா. கலையரசி said...

ஆம் ஸ்ரீராம்! உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. நிச்சயம் மற்றப் பிரச்சினைகளுக்குப் போராட இது சரியான முன்னுதாரணமாக இருக்கும் என்பது மிகச்சரி. அடுப்பங்கரையிலிருந்து கேஸ் சிலிண்டர்களை நீக்கி 20 பேரைக் காப்பாற்றிய கான்ஸ்டபிள் பீம் ராவ் பாராட்டப்படக்கூடியவர். கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, அடுத்தவர் பசியைப் போக்கும் கெளதம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாசிட்டிவ் செய்திகளுக்கு நன்றி ஸ்ரீராம்!

Thulasidharan V Thillaiakathu said...

முதல் இரண்டும் பாராட்டிற்குரியவர்கள். கான்ஸ்டபிள் பீம்ராவிற்குப் பூங்கொத்து!!! காமன்சென்ஸ்!!சூப்பர்...

கௌதம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!

இறுதியாக தமிழக மக்கள்! ஷொட்டு! சபாஷ்! இது முன்னுதாரணம்!!. உங்கள் வரிகள் மிகவும் சரியே!! (கீதா: சல்லிக்கட்டை நான் ஒரு இன்சென்டிவாகப் பார்க்கிறேன் அப்படியேனும் நம் நாட்டுக் காளைகள் வளர்க்கப்படுமே என்று. இல்லை என்றால் காளைகளை எல்லோரும் வளர்ப்பதில்லை .அதுஎங்கு போகும்....சரி வேண்டாம். இதைப் பற்றி எங்கள் தளத்தில்/இங்கு எழுத நினைத்து எழுதவில்லை. உண்மைகள் கசக்கும்...சுருக்கமாக மொத்தத்தில் மனிதன் சுயநலவாதி...)

athira said...

அனைத்தும் மிகப் பிரமிப்பான விஷயங்களாக இருக்கின்றது.. ஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள் பார்க்க மெய் சிலிர்க்கிறது.. நல்ல முடிவு நிட்சயம் கிடைக்கும்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....

'நெல்லைத் தமிழன் said...

அனைத்தும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். More than adequate energy ஜல்லிக்கட்டில் செலவழிக்கப்படுவதுபோல் தோன்றுகிறது. போராட்டத்தை ஜவ்வாக இழுப்பது எதற்கும் நல்லதல்ல.

Bhanumathy Venkateswaran said...

சஷிகாந்த், கான்ஸ்டபில் பீமா ராவ்,கௌதம் குமார் மூவரையும் எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று விட்டது. இதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டால் சரி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!