Friday, August 25, 2017

வெள்ளி வீடியோ 170825 : லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு மயக்கம்தான் பேசியதோ..


          லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு 78 வயது!  


       1939 ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் தேதி பிறந்தவர்.  அவர் பாடல் வெளியான முதல் படம் நல்ல இடத்து சம்பந்தம்.  அதில் அவர் பெயர் D L ராஜேஸ்வரி என்று இருக்கும்.  M S ராஜேஸ்வரியுடன் பெயர்க்குழப்பம் வரக்கூடாது என்பதனால் L R ஈஸ்வரி ஆனார்!


      எல் ஆர் ஈஸ்வரியின் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். கேபரே டான்ஸ் பாடல்களும் பாடுவார்.  அம்மன் பாடல்களும் பாடுவார்.   ஆடி மாதத்தில் இவர் குரல் ஒலிக்காத திருவிழா ஏது?!  கல்யாண வீடுகளில் இவர் குரலில் 'வாராய் என் தோழி வாராயோ' பாடல் தவறாது இடம்பெறும்.

     அவர் பாடல்களில் சுவாரஸ்யமான பாடல் ஒன்றை முதலில்,  அப்புறம் பகிர நினைத்த மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றை கீழேயும் பகிர்கிறேன்.

     லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூஸி ரோஸி ராணி...  


     மௌனம்தான் பேசியதோ மயக்கம்தான் பேசியதோ..  கண்வழியே என் மனது கவிதைபோல் ஓடியதோ...


     இரண்டு நாட்களுக்குமுன் கேட்ட இந்தப் பாடலின் சரணங்களில் வரும் ட்யூன் மனதில் ஓடிக்கொண்டே இருந்ததால்  இந்த  வாரம் இந்தப் பாடல்...  வழக்கம்போல காட்சியை விட பாடல் மட்டும்!    பாடலும் குரலும்!


17 comments:

நெல்லைத் தமிழன் said...

எல் ஆர் ஈஸ்வரியின் இரண்டாவது பாடலின் சரணம் நீங்கள் குறிப்பிட்டதுபோல் மனதில் ஒலிப்பது. முதல் பாடல் உங்களுக்குப் பிடித்த நாலு கால்களுக்காகப் போட்டுவிட்டீர்களா? எல் ஆர் ஈஸ்வரியின் பெஸ்ட் இன்னொரு பாடல், நான் கேட்பது, சட் என்று நினைவுக்கு வரவில்லை இந்த அதிகாலையில். த ம

திண்டுக்கல் தனபாலன் said...

L R ஈஸ்வரி அவர்களின் பெயர்க்காரண குறிப்பு புதிது...

KILLERGEE Devakottai said...

பெயர்க் காரணம் அறிந்தேன்
அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை அதையும் தெரியப்படுத்தி இருக்கலாம்.

காணொளி காண்பேன் ஸ்ரீராம் ஜி.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் எனக்கு எல் ஆரின் குரல் மிகவும் பிடிக்கும். வித்தியாசமான குரல்! பலருக்கும் எல் ஆரின் குரல் அவ்வளவாகப் பிடிக்காது! ரொம்ப டெசிபல், பே பே என்று கத்துகிறார் என்பார்கள். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல்களைக் கேட்கிறேன். என் செல்ல நண்பரைக் கவனித்துவிட்டு வந்து கேட்கிறேன்.

கீதா

பி.பிரசாத் said...

எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது...காதோடுதான் நான் பாடுவேன்...பிடித்த பாடல் !

Geetha Sambasivam said...

அம்மன் பாடல்களால் பிரபலம் ஆனார்! நேரிலேயே பலமுறை அவர் கச்சேரிகள் கேட்டிருக்கேன்.

asha bhosle athira said...

///மௌனம்தான் பேசியதோ மயக்கம்தான் பேசியதோ.. கண்வழியே என் மனது கவிதைபோல் ஓடியதோ...//

சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைபோலவே இருக்கு... இதுவரை கேட்டதாக நினைவில்லை இப்பாடல்..

asha bhosle athira said...

///லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு 78 வயது!//
ஓ இதைத்தான் சுருக்கமாக எல் ஆர்.. ஈஸ்வரி என்பார்களோ.. ஹா ஹா ஹா இன்றுதான் தெரியும்:).. அவவுக்கு இப்போ 78 ஆகிட்டுதோ சொல்லவே முடியாது.. இப்பவும் சுவீட் 16 போலத்தானே குரல் இருக்கு:)..

இமா க்றிஸ் said...

L R ஈஸ்வரின் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டும் பிடிக்கும்.

சின்ன வயதில் அந்த 'லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி' பாடலை மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

Asokan Kuppusamy said...

ஆடிமாதங்களில் அற்புத குரலுக்கு சொந்தக்காரர் பாராட்டுகள்

கோமதி அரசு said...

முதல் பாடல் முன்பு ஒரு தரம் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
எல்.ஆர் .ஈஸ்வரியின் நிறைய பாடல்கள் நல்ல பாடல்கள்தான்.
ஹம்மிங் மட்டும் பாடிய பாடல்களும் அருமையாக இருக்கும்.
ஜெயலலிதா அவர்களுக்கு நிறைய பாடல்கள் பாடி இருக்கிறார்.
ஆடி மாதம் முழுவதும் அவரின் அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது.
விருதுநகரிலும், மதுரையிலும் நேரில் அவர் திரைப்பாடல்களை கேட்டு இருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

சில மாதிரிப் பாடல்களால் புகழ் அடைந்தவர்

வெங்கட் நாகராஜ் said...

பெயர்க்காரணம் புதிய தகவல்.

இந்த இரண்டு பாடலும் கேட்ட நினைவில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஏகாந்தன் Aekaanthan ! said...

என்னதான் பி.சுசீலாவின் குரலில் காலமெலாம் மயங்கிக்கிடந்தாலும், எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு ஸ்பெஷல் என்பதில் சந்தேகமில்லை. அப்படி ஒரு ஹஸ்கி வாய்ஸ். ஹிந்தியில் ஆஷா போஸ்லே (Asha Bhosle), அதற்குமுன்னே கீதா தத் (Geeta Dutt) போல.

ஈஸ்வரியின் 'பட்டத்து ராணி... பார்க்கும் பார்வை..' -யைக் கேட்ட ஆஷா போஸ்லே அசந்துவிட்டாராம். ஈஸ்வரியைப்போல் இந்தப்பாட்டை யாரும் பாடியிருக்கமுடியாது என்று கூறியிருக்கிறார். 'வாராயென் தோழி வாராயோ..' போன்று அவருக்கென சில மாஸ்டர்பீஸ்கள் உண்டு. 'முத்துக்குளிக்க வாரீயளா’, ’எலந்தப்பயம்..’ போன்றபாடல்களை வேறு யாரேனும் பாடியிருந்தால் அவை காணாமற்போயிருக்கும்! 'பளிங்கினால் ஒரு மாளிகை..பவளத்தால் மணிமண்டபம்..’ எனக்குப்பிடிக்கும்.

என்னைப்பொருத்தவரை ஈஸ்வரி ஒரு special talent. அந்த genre-ல் அவரை வெல்ல யாராலும் முடியாது.

Bagawanjee KA said...

பிறப்பினால் கிறிஸ்டியன் என்றாலும் இவரும் சரி ,யேசுதாசும் சரி ,அம்மன் ,ஐயப்பன் பாடல்களால் புகழின் உச்சியை அடைந்தார்கள் என்பது முரண்பாடான உண்மை :)

அப்பாதுரை said...

மௌனம் தான் -- ஈஸ்வரியின் சிறந்த பாடல்களில் ஒன்று. இது பாட்டு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்படியும் ஒரு ராஜேஸ்வரியா? இப்போதுதான் அறிந்தேன். நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!