செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

ANSWER FOR THE 5 MARK QUESTION

ஹிப்னாடிசம் என்பது பெரிய ஜித்தர்கள் செய்யும் வேலை. ஒரு காலத்தில் மாபெரும் குற்றமாகக் கருதப் பட்ட இந்தக் கலை மருத்துவத்திலும் Crime department டிலும் மிக உதவிகரமான ஒரு கருவி.
ஹிப்னாடிசம் செய்பவருக்கு நல்ல காத்திரமான குரலும், பேச்சில் ஒரு வசீகர நடையும் இருக்க வேண்டும்.பின்னணியில் rythmic ஆக ஒரு Music கும் இருக்க வேண்டும். Constant ஆக ஒரு பந்து விளையாடும் ஓசையோ, தொடர்ந்த ஒரே மாதிரியான பறவைகள் சத்தமோ, இருந்தால் effective ஆக இருக்கும். (சுஜாதாவின் விபரீதக் கோட்பாடு படித்ததில்லை?)
மிகவும் எச்சரிக்கையாக செய்ய வேண்டிய இந்தவேலை சற்றுக் கடினமானது. அடுத்தவர் மனதை ஆளும் இந்த சமயத்தில் ஒரு சிறு தவறும் அடுத்தவர் மனதில், மனதின் எண்ணங்களில் விளையாடி விடும்.(உடல், பொருள், ஆனந்தி படித்ததில்லை?)
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. தவறான காரணங்களுக்கு பயன் படுத்தாமல் மருத்துவ காரணங்களுக்கும் குற்றங்களைக் கண்டு பிடிக்கவும் உபயோகப் பட்டால் நல்லதுதான்.மற்றபடி பலமான மனசு பலவீனமான மனசு எல்லாம் தெரியாதுங்க....

2 கருத்துகள்:

  1. இதை வைத்து அரசியல்வாதிகளை மாற்ற முடியுமா? இல்லைன்னா ரெண்டு மார்க்குதான் தரலாம்...

    பதிலளிநீக்கு
  2. ஐயா - படித்ததில்லை? படித்ததில்லை?
    என்று கேட்டிருக்கிறீர்களே,
    நான் U P A படித்துள்ளேன்;
    V K படித்தேனா இல்லையா - மறந்து விட்டேன். ஆனால் - அந்த பந்தோசை - எங்கோ (சுஜாதா) கதையில் படித்த ஞாபகம் உள்ளது.
    எனவே, நான் படித்தவன்தான்;
    ஆனால் மறந்துவிட்டவன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!